Jump to content

Nitharsan

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    732
  • Joined

  • Last visited

Posts posted by Nitharsan

  1.  

    எழுத்துக்களும் இசையும் நன்றாக உள்ளது ,

    மறக்க முடியாத ஈழத்தின் தியாகங்களில் ஒன்றான திலீபன் அண்ணாவின் அகிம்சை பேராட்டக்காரணங்கள் இன்றும் எம் மத்தியில் மறையாமை வருத்தம்..!

  2. எல்லோரும் பரபரப்பாய் தான் கருத்து எழுதுகின்றீர்கள். மின்னல் முதல் பண்டிதர் , என்று தொடர்கின்றது. பண்டிதர் அவர்களே, உங்கள் ஊடகத்துக்கான வரை விலக்கணம் என்ன என்பதை கொஞ்சம் எழுதினால் அதை கருத்தில் எடுத்து பத்திரிகை உலகம் செயற்ப்பட வாய்பாயிருக்கும். அதே போல ஊடகங்கள் எல்லாவற்றையும் வழமர்சிப்பதாய் எடுத்துக்கொண்டாலும், விமர்சனம் என்பது இலகுவாய் வைக்கப்படக்கூடியது. உங்களில் எத்தனை பேர் ஊடகத்துக்குள் செயற்ப்பட தயாராய் இருக்கின்றீர்கள்? அப்படியிருக்கையில் எப்படி அச் செயற்ப்பாடுகளில் இருப்பவர்கள் நீங்கள் விமர்சிக்க முடியும்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

    அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.

    களத்தில் விடுதலைப்புலிகள் பின்னகர்வில் ஏற்ப்பட்ட போது அதைப்பற்றிய ஆய்வுகளை செய்யாது, அன்று வென்றார்கள், நேற்று வென்றார்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருந்த ஊடகங்களுக்கு மத்தியில் பரபரப்பு வித்தியாசமே, நான் பரபரப்பின் அபிமானியாக இதைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் அந்த ஊடகம் தொடர்பாக எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருப்பதால் சொல்கின்றேன்.

  3. மின்னல் அவர்களே உங்களுக்கு எதிhவாதம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கல்ல. ஆனால் வீணான ஊடகங்கள் பழி போடும் உங்களை போன்றவர்களது கருத்துக்கு எதிரானதே எனது வாதம். நீங்கள் நினைப்பது தான் சரி என்பதுவும், நினைப்பது தான் நடந்திருக்கலாம் என்பதுவும் வெறும் விவாதத்துக்கு சரியே தவிர யதார்த்தத்துக்கு புறம்பானவை. நீங்கள் கனடாவில் இருப்பினும் சில விசயங்களை அறியாதவர்களா, அல்லது தெரிந்தும் தெரியாதவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அதற்காக பரபரப்பு சொன்னால் 100 வீதம் உண்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் சொல்வது போல விடுதலையை விற்று பிழைப்பு நடாத்த வேண்டிய அவசியம், ரிஷிக்கோ பரபரப்பு நிர்வாகத்துக்கோ இல்லை. ஏனெனில், எனக்கு தெரிந்தவரை ரிஷி அவர்களுக்கு பரபரப்பைபில் வரும் வருமானத்தை விட அதிக வருமானம் அவரது தொழில் கிடைக்கிறது.

    பண்டிதர், (பெயரில மட்டும்) சொல்வது போல பணம் சேர்க்க, போய் பிச்சை எடுக்கலாம். ஏன் விரும்பினால் விபச்சாரமும் செய்யலாம். (அந்தளவுக்கு தமிழர் இன்னும் கீழ்த்தரமாகவில்லை என்று நினைக்கின்றேன்) ஆனால் குறிப்பிட்ட ஊடகங்களை தாக்குதை தொழிலாக கொண்டு கருத்து வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. இணையத்தில் இலவசமாய், பரபரப்பு வராததால சிலருக்கு கோபம் தான் என்ன செய்வது. இலவசமாய் கொடுத்த குப்பையில எல்லா போடுகின்றீர்கள். அதனால் தான் காசுக்கு விற்பனை செய்கின்றார்கள் போல!

    அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

  4. நீங்கள் சொல்வது போல பரபரப்புக்கு வக்காளத்து வாங்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. ஆனாலும், ஊடகங்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் விமர்சன எல்லைகள் கடந்து, பிரதிகளை அதிகம் விற்க வேண்டும் என்பத்காக பரபரப்பு அப்படி செய்திகளை வெளியிடுகின்றது என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    அ, ஆ. தெரியாமல் இணையம் நடத்துவது போலவோ, இல்லை பத்திரிகையில், 3/4 பங்கு விளம்பரத்தை அள்ளி வரும் கனடிய பத்திரிகைக்குள பரபரப்புக்கு வித்தியாசப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் முன்னேறும் போது விசமத்தனமான விமர்சனங்களை, குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டது போன்று " ஊடக விபச்சாரிகள்" என்று விமர்சிப்பதன் மூலம் விமர்சனம் செய்யும் உங்களையும், செய்யும் விதத்தையும் என்னால் உணர முடிகின்றது.

    இப்படி விமர்சனங்களை முன் வைக்கும் நீங்கள் அது தொடர்பான அல்லது ஊடகம் தொடர்பாக விமர்சனத்தை எழுதும் மனநிலையை உடையவரா? என்பது கேள்விக்குறியே!

    பரபரப்பை நீங்கள் எத்தனை தடவை வாசித்தீர்களே தெரியாது. ஆனால், தமிழில், அல்லது நாட்டு நடப்பு தெரியாத கிணற்று தவளைகள் அதை வெளியிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    பத்திரிகைகள், இணையம் போல அல்ல, விரும்பியதை எழுதி விட்டுப்போக, அல்லது ம்றவனதை பிரதி செய்து எழுத,

    நீங்கள் செய்திகளை, முதலில் பார்ப்பவராக, இருந்தால், முதலில் விமானம் சுடப்பட்டவுடன் வந்த தமிழ் நெற் செய்தியை பார்த்திருக்க வேண்டும். கிபிர் விமானம் இரனைமடுவில் சுடப்பட்டது. அது புகைந்து கொண்டு, சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். தமது தானியங்கி விமான எதிர்ப்பு கருவி இயங்கியே கிபிரை சுட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர் என்றே செய்தி வந்தது. அவ்வேளை இளந்திரையன் அண்ணா எந்த அறிவித்தலையும் ஊடகங்களுக்கு வழங்க வில்லை.

    வக்காளத்து பக்கச்சார்வு. இவை எனக்கு ஒவ்வாதவை...!

  5. புளுகு என்று சொல்ல வெளிக்கிட்டால் எல்லாவற்றையும் புளுகு என்று சொல்ல முடியும். பரபப்பில் சில எதிர்வுகூறல்கள் உண்மையனா போது அதைப்புரளி என்று சொல்ல நீங்கள் யாரும் வரவில்லை. குறிப்பிட்டு சொன்னால், புலனாய்வாளர் முத்தாலிப் தொடக்கம் தானியங்கி விமான எதிர்பு கருவிகள் வரை அவர்கள் ஏற்கனவே ஊகித்து எழுதியவையே, அதில் இன்னோன்றை குறிபிடலாம், தமிழீழ விடுதலைப்புலிகள் முதலில் கிபிர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்து பின்னர் மிக் ரக விமானம் என்று அறிவித்தமை. அதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சல விசயங்களில் அவசரப்பட்டு, கருத்து வைப்பதே சிலருக்கு தொழிலாகி விட்டது. தங்களால் முடியாதவற்றை மற்றவர்கள் செய்யும் போது தன்னிச்சையாக வரும் ஈகோவாக கூட இருக்கலாம்.

    தினமுரசுடன், பரபரப்பை ஒப்பீடு செய்வது பொருந்துமா? தெரியாது ஆனால், ஒன்று மட்டும் சொல்ல முடியும் பரபரப்பு மேல் பலருக்கு ரொம்ப தான் எரிச்சல். பரப்பு ஜேர்னலை வாங்கி போருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒருவர் கேட்டார் என்ன "இந்தியன்ஸ் சிட புத்தகம் எல்லாம் படிக்கிறீங்க என்று" அவர் பெயரைப்பார்க்கல புத்தக வடிவை பாத்திட்டார் போல, மொத்தத்தில், இந்தியாவுக்கு வெளியே தரமான ஈழத்தமிழர்களது சஞ்சிகையாக வெளிவருது பரபரப்பு ஜேர்னல். அதை விட பரபரப்பின் விற்பனையை அதிகரிக்க, இப்பிடி செய்திகளை போட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். காரணம் அவர்களது வாசகர்கள், எப்போது வாசகர்களாகவே இருப்பார்கள்...

    இச் செய்தி உண்மையா பொய்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புலிகள் சுடப்பட்டது என்று அறிவித்தமைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். என்னும் பரபரப்பின் வாதம் சரியாக கூட இருக்கலாம்.

    இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய....

    பொது வாக மிக் ரக விமானங்கள் தாங்குதலுக்கு உள்ளாகும் போது விமானி பாது காப்பாக தப்பித்துக்கொள்ள வழியிருக்கின்றது. எனவே குறிப்பிட்ட விமானத்தில் இருந்த விமானி எங்கே வந்திறங்கினார்? தாக்கப்பட்டது இரணைமடுவில் எனில் அவர் எந்த இடத்தில் இறங்க கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை பொதுவா யோசித்து பாருங்கள்..

  6. நடுவர் மற்றும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்!

    மேடையில் நாங்கள் நீண்ட நேரம் காத்திருக்கிறோம் எதிர்தரப்பினர் எங்கே நித்திரை கொள்கிறார்களோ தெரியவில்லை 48 மணிநேரங்களுக்கு மேலாக பட்டி மன்றத்தில் இது வரை எதிர் தரப்பினர் பதிலளிக்க வில்லை எனவே அவர்கள் தங்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டர்கள் போல... இனி தீர்ப்பை வழங்குங்கள் அல்லது எமது அணியில் அடுத்த உறுப்பினர்க்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.... எனவேண்டுகின்றேன்

  7. நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்போறியாக்கிறதா? உற்சாகப்படுத்துகிறதா? நல்லதொரு தலைப்பு ஆ ஊ என்பதற்கிடையில் இணையத்துக்கு சென்று பார்த்து செய்தி சொல்லும் காலமிது...சிறிலங்காவில் இருக்கும் பெரும்பாலனா வானொலிகளுக்கு பிரதேச ரீதியான செய்தியாளர்கள் உள்ளனர். அனால் எங்கள் நாட்டு (கனடா) தமிழ் வானொலிகளுக்கு தனியான செய்தியாளர்கள் இல்லை காரணம் தொழிநுட்ப வசதி. அவர்கள் இணையத்தில் வரும் செய்திகளை அப்படி பிரதி செய்து போடுகின்றனர். இதற்க்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லாம் என்று நினைக்கின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர். புதினம் இல்லை என்பதால் அவர்களால் செய்தியை சுயாதீன மாக வெளியிட முடியவில்லை இது தொழிநுட்ப்பத்தால் வந்த சோம்பொறித்தனமாகும். அடுத்து தொலை பேசியை எடுத்துக் கொண்டால்... இப்போது மக்களால் தொலைபேசிகள் தொல்லை பேசிகள் என்று அழைக்கப்படுகின்றது. காரணம் குடும்பச்சண்டைமுதல் குழுச்சண்டைகள் வரை தொலைபேசியால் தான் வருகின்றது. அதை விட காதலர்களைக் கூட இது சோம்பொறிகளாக்குகிறது. பொதுவாக எமது நாட்டில் காதலர்கள் பூங்கா மற்றும் வேறு இடங்களில் அடிக்கடிச்சந்திப்பார்கள் ஆனால் இங்கு இரவு பத்து பதினொரு மணிக்கு பிறகு நித்திரை கூட கொள்ளாமல் தொலைபேசியில் கதைப்பாங்கள்.. இது எதனால்.. தொலை பேசி இல்லை எனில் அவர்கள் நேரடியாக சென்று தமது அன்பு வார்த்தைகளை பகிர்ந்து கொள்வார்களே! அடுத்து இணைய அங்காடி மனிதனைசொம்பொறியாக்ககும் மிகப்பெரும் சக்தி எனலாம். முன்பு நேரடியாக வார்த்தக நிலையத்தக்கு சென்று தமக்கு பிடித்த பொருட்களை வாங்கு வார்கள் இப்போது இணையத்தில் சென்று விண்ணப்பித்து விட்டு கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தி விட்டு வீட்டிலே காத்திருக்கின்றனர்.. இது எதனால் தொழிநுட்பத்தால் தானே!

    அதை விட் வீட்டுக்குரிய பாதுகாப்பு ஓலி பெருத்துவது என்பது மனிதன் தனது பொருட்கள் மீது அக்கறைப்படாமலிக்க வைக்கும் ஒரு பொருள் எனலாம்... அது பொருத்தா விட்டால் வீட்டில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் போன வேலைகளை விரைவாக முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள் ஆனால் அது பொருத்திய பின் வீதியில் நிற்போர் வருவோர் ஏன் அங்கால நாலு வீட்டுக்கு போய் 1 மணி நேரத்தில் செய்யும் வேலையை 5 மணிநேரத்தில் செய்கின்றனர்.. இது அவர்கள் சோம்பொறித்தனத்தை காட்டுகின்றது... இதெல்லாத்தையும் தெரிந்து கொண்டு எதிர்தரப்பில் இருக்கும் வாதிகள் "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" என்ற மாதிரி பேச வெளிக்கிட்டாச்சு எதையாவது பேசுவோம் என்று பேசிக் கொண்டீக்கின்றார்கள்.... அடுத்து நம் வாழும் நாடுகளில் ஒரு 100 மீற்றர் எவராவது நடக்கின்றீர்களா? எதற்கெடுத்தாலும் மகிழுந்து அல்லது பேரூந்து என்று நாங்கள் போய் கொண்டே இருக்கின்றோம் வளந்து வரும் விஞ்ஞானத்தால் மனிதன் வேலையின்றி சோம்பொறியாய் இருக்கபோகிறான்....அதன் காராணத்தால் உலகில் சனத்தொகை அதிகரிக்கப்போகிறது.. முதல் ஒரு நண்பர் எதிர்வு கூறியிருந்தார் தொழிநுட்ப வளர்ச்சியால் வேலையில்லாப்பிரச்சினை ஏற்ப்படாது என்று... அனால் அது கனவுலகில் தான் நடக்குமே தவிர நிஜத்தில் அப்படியல்ல தொழிநுட்ப வளர்ச்சியால் தொழிவாய்பு அருகி வருகிறது குறிப்பிட்டு சொல்லப்போனால்..ஒரு 10 பேர் செய்யும் வேலையை ஒரு இயந்திரம் செய்கிறது அப்படி செய்யும் போது 10 பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர்... இதனால் என்ன ஏறப்படும்?...ஆளில்லா விமானங்கள் (விமானியற்ற) மற்றும் மின்னியல் தொடரூந்த என்பவற்றால் எத்தனை பேர் தொழில் வாய்ப்பை இழக்கின்றனர் எனபது எதிர்தரப்பில் இருக்கும் சோம்பொறிகளுக்கு தெரியவில்லை போலும்....அது தெரியமல் போவதற்க்கும் அவர்களுக்கு தொழிநுட்பம் தந்த சோம்பொறித்தனமே காரணம் ஏனெனில் எதையும் தமது பாட்டில் ஆராயும் திறன் அற்றவர்கள் தான் தொழிநுட்பத்தை நம்பி சோம்பொறிகளாய் உள்ளனர்...

    ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு நீங்கள் உங்கள் தொழிநுட்பத்தையே புதியன எனக் கொண்டால் அது முத்தோரின் பிழையல்ல.. அதே நேரம் இந்த வார்த்தையை நான் எதிர்ப்பவன் காரணம் இந்த வார்ததை எதற்காக சொல்லப்படுகின்றது? பழையன கழிதல் என்றால் கட்டிய பழைய மனைவியையோ! அல்லது பெற்றவர்கள் வயதான பின் அவர்கள் பழையவர்கள் என்று ஒதுக்குவதற்காய் சொல்லப்பட்டதா? அல்லது ஏகபத்தினி விரதன் என்று பழைய காலத்தில் இருந்து வஇப்போது வரை வரும் அந்த தத்துவத்தை புதியதாக்கி உங்கள் விஞ்ஞானயுகத்தில் இன்றொன்று நாளை ஒன்று என்று வாழ்வதா?

    இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது. சுனாமி வந்ததை தொழிநுட்பம் கண்டு பிடித்ததாம்.. ஆமாம் கண்டு பிடித்ததால் தான் இத்தனையாயிரம் பேர் இறந்தனரோ? நான் இங்கு நன்மை தீமைகளை பற்றி பேச வராததால் சிலவற்றைபற்றி விரிவாக பேசமுடியாமல் உள்ளது. நாங்கள் நுனி மரத்தில் இரந்து மரத்தை வெட்டுவதற்க்கு என்று ஆராயமல் உங்களை போல் தொழிநுட்பத்தை நம்பி இருப்பவர்கள் அல்ல ஆனால் நுனி மரத்தில் இருந்துதான் வெட்ட வேண்டும் என்ற கட்டாயம்் அதனால் தான் வெட்டுகின்றோம்...தொழிநுட்ப

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.