யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  10,736
 • Joined

 • Last visited

 • Days Won

  15

Everything posted by வாத்தியார்

 1. பயணிகளுக்கு ஒரு வயதுப்படி ஒன்பது பேருக்கும் ஒன்பது வயது வழிகாட்டிக்கு ஒன்பது * நாலு சோ முப்பத்தியாறு வயது முப்பத்தியாறும் ஒன்பதும் சேர்ந்தால் நாற்பத்தைந்து நூறு வர இன்னும் ஐம்பத்தைந்து தேவை ஓட்டுனருக்கு 55 வயது! ஒன்பதும் முப்பத்தியாறும் ஐம்பத்தைந்தும் கூட்டினால் நூறு இதுதான் ஐயா பதில் இது சரி ஆகா சுவியரும் வந்திட்டார்....
 2. தமிழருக்கும் அவர்களின் பிரச்னைக்குமே சம்பந்தம் இல்லாத ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களின் அழிவிற்கு இவரால் என்ன காரணம் என வினவுவது இங்கே வேடிக்கையான வாடிக்கை.
 3. சம்பந்தர் பதவிக்கும்.... சுமந்திரன் அரசிற்காகவும்..... போராடும்போது ரணிலுக்கு என்ன குறை. அவர்கள் வரும்போது ஆட்களை லாரியில் ஏற்றி வர அவர்களுக்கு சேவைசெய்ப்பவர்கள் தயாராகத்தான் இருக்கின்றனர்.
 4. சரி இன்னொரு கடி விவாகரத்திற்கு முக்கியமான காரணம் என்ன ?
 5. கூட்டமைப்பினர் விக்கி அய்யாவைத் தங்கள் விருப்பிற்கு தலையாட்ட வைக்க முயன்று தோற்றதன் விளைவும் மாகாண சபை உறுப்பினர்களின் பதவிமோகம் என்ற நிலைப்பாடும் தான் மாகாண சபை சரியான முறையில் இயங்காததன் காரணம் ஆனாலும் விக்கி ஐயா அடிக்கடி எல்லோர் முன்னிலையிலும் கூறும் ஒரு வார்த்தை அபிவிருத்திக்கு முன்னர் தீர்வு எமக்கு முக்கியம் இதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
 6. சரி எல்லோரும் கடியை எதிர்பார்ப்பதால் சொல்கின்றேன் வாசி அவர்கள் சரியான பதிலைக் கூறியுள்ளார். 9 *1 = 9 *4 =36 36 +9 =45 100 -45 = 55 இந்த 55 வயது பேரூந்து ஓட்டுனருடையது.
 7. 2 .22 * 9 = 19 .98 அல்லவா எங்கேயோ உதைக்கின்றதே மூளையைக் கசக்கிச் சமன்பாடாக பிசையாமல் கடி என்ற கோணத்தில் தேடவும்
 8. அனைவருக்கும் வாழ்த்துக்கள் இவர்களது இசைப்பயணம் உலகெங்கும் தொடர்ந்திட வாழ்த்துகின்றோம்
 9. ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக வந்த பேரூந்தில்10 பிரயாணிகள் ஏறிப்பயணிக்கின்றனர். அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை . வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும் வயதைக் கூட்டி நாலால் பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது. ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும் போது 100 என்று வருகின்றது. எப்படி?
 10. கேள்விக்குறி போட்டதால் அரைவாசிப் புள்ளிகள் வெட்டப்படுகின்றன.
 11. மூன்று கடவுள்களுக்கும் ஒரேயளவிலான பூக்கள் போடப்பட்டிருக்கின்றன என்பதை எப்போதும் தமிழன் எழுத மறந்துவிட்டார்.
 12. முதலில் கொண்டு சென்றது 7 ஒவ்வொரு சாமிக்கும் போட்டது 7*2=14 14-8 = 6 6*6 =12 12- 8 =4 4* 4 =8 8-0 =0
 13. அடுத்த கடி .... 30 ஐ 4 ஆல் பெருக்கி வரும் விடையை அரைவாசியால் பிரித்து வரும் விடையுடன் 10 ஐக் கூட்டும்போது வரும் விடை என்ன ?
 14. யாரும் யாரையும் அல்லது எந்தக்கட்சியையும் ஆதரிக்கலாம். ஒரு கட்சியையோ அல்லது ஒரு தனிநபரையோ ஆதரிப்பவர்கள் துரோகிகள் என்றால் எல்லோரும் துரோகிகள் தான். உங்களின் கட்சி நிலைப்பாட்டினை முன்னிறுத்து உங்களைத் துரோகி என்று எழுதியவர்கள் மாற்றுக்கருத்தாக அதனை முன்வைக்கவில்லை என்று நினைக்கின்றேன். ஒருவர மீது வன்முறையில் ஈடுபடுபவர் , அவரை வன்முறைக்குத் தூண்டுபவர், அந்த வன்முறையை ஆதரிப்பவர்கள், அந்த வன்முறைக்கு எந்த விதத்திலும் காரணமாக இருப்பவர்கள் என எல்லோருமே அந்த வன்முறை சார்ந்து இருப்பவர்கள் அதுபோலத்தான் அரசியலில் யார் எந்த நோக்குடன் எவருக்காக யாருடன் சேர்ந்து இருக்கின்றார், யாருக்கு எதிராகச் செயற்படுகின்றார், அவருடைய இலக்கு என்ன , அவரால் ஏதாவது ஒரு குழுவிற்கு நன்மையையும் இன்னொரு குழுவிற்குத் தீமையும் ஏற்படுகின்றதா இப்படிப் பல பல விடயங்கள் ஆராயப்பட்டால் நீங்கள் ஆதரவு கொடுக்கும் கட்சியும் இந்தப்பட்டியலில் வந்தால் அதே போன்ற பார்வையில் நீங்களும் என்னை நோக்கினால் நாம் மட்டும் அல்ல எல்லோருமே எல்லோருக்கும் துரோகிகள் தான் இதற்கு மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை.
 15. நான் கூறியதுபோல வேகமாக மனத்தால் கூட்டும்போது வரும் விடை 5000 ஆனாலும் சரியான விடை 4100 தான். நாலாயிரத்துத் தொண்ணூறும் பத்தும் ஐயாயிரம் என்றுதான் பலரும் கூட்டியிருப்பார்கள்
 16. சுதந்தரம் சுய நிர்ணயம் உரிமை இவற்றுக்கு மாற்று தமிழ் ஈழம் தமிழ் ஈழத்திற்கு மாற்றுக்கருத்து... சமஷ்டி சமஷ்டிக்கு மாற்றுக்கருத்து..... ஒரு நாட்டுக்குள் தீர்வு ஒரு நாட்டுக்குள் தீர்வு மாற்றுக்கருத்து.... அதிகாரப்பரவலாக்கல் அதிகாரப்பரவலாக்கல் என்றால் மாற்றுக்கருத்து...... அபிவிருத்தி அபிவிருத்தி என்றால் மாற்றுக்கருத்து...... கிடைப்பதை பெற்றுக்கொள்ளல் கிடைப்பதை பெற்றுக்கொள்வது என்றால் மாற்றுக்கருத்து....... சலுகை சலுகை என்றால் மாற்றுக்கருத்து........ கையூட்டு கையூட்டுப் பெறுவது என்பது தண்டனைக்குரியது ஆரம்பத்தில் எல்லோருமே மனிதர்கள் தான் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கச் சென்றவர்கள் மாற்றுக்கருத்து....... தியாகிகள் கையூட்டல்களைப் பெற்று மக்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் மாற்றுக்கருத்து........ துரோகிகள் தியாகிகளும் ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் தான். துரோகிகளும் ஆரம்பத்தில் தியாகிகளாகத் தெரிந்தவர்கள்தான்
 17. இந்த பகிரங்க ஒளிப்பதிவை அவரது மனைவி மக்கள் உறவினர்கள் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள்? இந்த காணொளியில் யாரும் அவருக்குத் தண்டனை கொடுத்த மாதிரித் தெரியவில்லை. அநாகரிகமான விதத்தில் அவரை மிரட்டுகின்றார்கள் பேசக்கூடாத வார்த்தைகளை பேசுகின்றனர். ஆனாலும் அவரை மிரட்டி அவர் திருடிய பணத்தின் அளவை அவரின் வாயினாலேயே வரவைக்க முயல்கின்றனர். அது தான் நடக்கின்றது.இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது அவர் திருடியது என்பதை அவரே ஏற்றுக்கொள்கின்றார் என்பது அவரது பார்வையிலேயே தெரிகின்றது. ஜனநாயகம் மிக்க இந்த யாழ் களத்திலேயே இந்த வீடியோவை வைத்த்து அலசி ஆராயும் பொழுது யு டியூபில் வெளிவந்தது ஆச்சரியப்படத்தக்கதல்ல.