Jump to content

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2290
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Elugnajiru last won the day on June 4 2015

Elugnajiru had the most liked content!

1 Follower

Profile Information

 • Gender
  Male
 • Location
  காலப்பொதுவெளி
 • Interests
  நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.

Recent Profile Visitors

3929 profile views

Elugnajiru's Achievements

Rising Star

Rising Star (9/14)

 • Reacting Well Rare
 • Very Popular Rare
 • Dedicated Rare
 • First Post
 • Posting Machine Rare

Recent Badges

599

Reputation

 1. உருவாக்கலாம் அதற்கு முன்முயற்சியாக google mapபை பவிக்காமல் நாமே ஒரு GPS map உருவாக்கி மாவீரர் துயிலுமில்லாம் போல் வடிவமைத்து உலகில் உள்ள அனைத்துச் சொந்தங்களையும் இணைத்து மிகப்பெரிய மாவீரர் நினைவெழிர்ச்சி நாளைக்கொண்டாடினால் ஆரம்பப்புள்ளியாக இருக்கும். தவிர நாமே ஒரு மெற்றாவேஸஸ் கிரிப்டோ நாணயத்தை இறக்கினால் பலமடங்கு பலம் பெறலாம். பல நிறுவனங்கள் தனிப்பட்டவர்களது நாணயங்களை உருவாக்க ஆயத்தமாகி இருக்கின்றன ஆனால் சிக்கல் நம்பிக்கைத்தன்மையே. ஸ்பெயினில் சில கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாடசாலை நீவீழ்ச்சி பண்ணைகள் தெருக்கள் தேவாலயங்கள் உள்ளடங்கலாக விற்பனைக்குள்ளதாக ஓரிரு வருடங்களுக்குமுன்பு செய்தியில் அறிந்தேன் அவைகளை வாங்கினால் எமக்கான தற்காலிகமான ஐரோப்பிய சட்டதுட்டங்களுக்கு அமைவாகச் செயற்படும்விதமான தமிழ் கிராமங்களை உருவாக்கலாம். இதற்கான முதற்படியாக கிரிப்டோ நாணயங்களை உருவாக்கி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் எதுவும் செய்யலாம். ஆனால் என்ன புலிகளது சொத்துக்களை ஆட்டையைப்போட்டு தலைவர் சொல்லட்டும் அதை நான் உங்களிட்டைத் தாறன் எனும் போக்கிலிகள் வாழும் எமது தமிழ் சமூகத்தில் நடக்கக்கூடிய விடையங்கள் இவை அல்ல.
 2. இனிமேல் இவைகள் எதுவும் புதுமையானதாக இருக்காது. கூடிய விரைவில் நாம் உடைகள் வாங்க காட்சி அறைகளுக்குப்போய் அங்கிருக்கும் அறைகளில் அளவு சரியா எனப் போட்டுப்பார்க்கத் தேவையில்லை வீட்டிலிருந்தவாறே அதே கடையிளுல்ல ஆடைகளை போட்டுப்பார்த்து காசைக்கட்டினால் வீட்டுக்குப் பொருள் வந்துவிடும் அளவுகளில் ஏதாவது திருத்தம் வேண்டுமானாலும் பிரச்சனை இல்லை அளவு எடுத்துத் திருத்தித்தரவார்கள். இதைவிட இன்னுமொறு விடையம் திரைப்படம் பார்க்க சினிமாவுக்கோ ஓ டி டி பிளட்போமுக்கோ போகத்தேவையில்லை தமிழ் மெகாத்தொடர் உட்பட அனைத்திலும் நடிகர்கள் உங்கள் முன்னாலேயே வந்து நடிப்பார்கள் பக்கத்திலிருந்தே என்ன நடக்குது எனப்பார்க்குமாப்போல் இருக்கும் இப்போது ஆடை விடையத்தில் HM நிறுவனம் முதல் முயற்சி எடுத்திருக்கிறது. நிறைய நிறுவனங்கள் இதற்காகக் காணி வாங்கிவிட்டார்கள்.
 3. உலகில் எண்ணெய் வளம் அதிகமான நாடு வெனிசுலா ஆனால் ஒரு புரொய்லர் கோழி வாங்க பத்துக்கட்டுக் காசை தோழில் சுமந்து வரவேண்டும் காரணம் எண்ணெயை உறிஞ்சி எடுக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவும் இங்கிலாந்தும் தமது உரிமையாக்கி வைத்திருக்கிறார்கள் இணங்கிப்போனால் சரி இல்லையெனில் சவூதிக்கும் இதே நிலைதான் மற்றப்படி மன்னார் வளைகுடாவில் அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியான வளம் இல்லை. மற்றப்படி இவர்கள் எண்ணெயை உறிஞ்ச வெளிக்கிடும்போது மின்சாரக்காரின் பயன்பாடு பட்டிதொட்டி எல்லாம் வந்துவிடும் அந்த அளவுக்கு மந்தகதியில் எல்லாம் நடக்கும் நாடு. ஏதாவது தகிடுதித்தம் பண்ணி தற்காலிகமாக ஏதாவதொரு தீர்வைக் கண்டுபிடிப்பாங்கள்.
 4. எத்தனை வாகனசாரிகளும் பாதசாரிகளும் இந்தக்கம்பத்தில் மோதிப் பரலோகம் போகப்போகிறார்களோ எண்ட கண்டிக்கதிர்காமக் கந்தா!
 5. சரத் பொன்ட்சேகாவுக்கு இறுதி யுத்ததில் இந்தியா கொடுத்த அசைன்ட்மென் கிளிநொச்சிவரை பிடி அப்புறம் பாக்கலாம் என்பதே ஆனால் இதை மணந்து பிடித்த சீனா கொத்தாவுக்குச் சொல்ல சரத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி சவேந்திர டி சில்வாவை முன்னிறுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவந்து இன அழிப்பில் முடித்தது. அப்போதே சவேந்திர சில்வாவுக்கு மிதப்புக்கூடிவிட்டது ஆட்சிக்கனவு கனியும் நேரமிது. சரத் பொன்சேகாவுக்கு வராத கனா அதுபோல சவேந்திராவுக்கும் வரும் அப்போது கொத்தாவுக்குப் பக்கத்தில் சவேந்திர டி சில்வா இருந்தான் இப்போது அவனே குறிபார்த்துச் சுட எத்தனிக்கும்போது கொத்தாவுக்குப் பக்கத்தில் யாரும் இல்லை என்றாகிவிட்டது. இந்த நாடகத்தில் அடுத்த காட்சிக்குப் படுதா விலகப்போகிறது.
 6. இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்தபோது வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியே உள்ள தெருவில் அதாவது மண்டபத்துக்கும் இப்போது நினைவுத்தூபி இருக்கும் கோட்டை அகழிக்கு இடையிலிருக்கும் வெளிக்கும் இடையேயான தெருவில் நானும் எனது தம்பியும் தார் ரோட்டில் சுமார் எட்டு மணியளவில் அரைக்கால்சட்டையுடன் சப்பணக்கலிட்டு இருந்தோம் எங்களுடன் எங்களது அயல் வளவில் வீடுகட்ட வல்வெட்டித்துறையிலிருந்து வந்த மேசன் இருவரும் அவர்களது உதவியாளரும் வந்திருந்தனர் அவர்கள் எங்குபோனாலும் ஒரு ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோவை எடுத்துசெல்வார்கள் அதும் அவர்கள்கூடவே இருந்தது. நைனா மரைக்காயர் எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சிறப்புரையாற்றிக்கொண்டிருந்தார் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சி ஆனால் மிகப்பெரிய மக்கள் கூட்டம் வெளியே காவல் நின்றதால் வெளியே வந்து பேசும்படி விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தனர் வீரசிங்கம் மண்டபத்தின் மாடியில் அப்போது வருமானவரித்துறையினரது அலுவலகமும் இருந்தது அங்கிருந்த பெரிய மேசைகளை வெளியில் எடுத்து வந்து அதை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அதில் பேராசிரியரை ஏற்றி சற்று உயரமாகத்தென்படும்படி ஒழுங்குசெய்யப்பட்டு அவர் பேசிக்கொண்டிருந்தார். இன்றைய தினத்திலிருந்து எதிர்வரும் வாரத்தில் வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைப்பற்றி அவர் மிகவும் சுவைபடப்பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மேற்குத்திசயிலிருந்து ஒரு போட்டார் சைக்கிள் சத்தம் அண்மித்ததாகக் கேட்டது யார் அதில் வந்தது என என்னால் அவதானிக்க முடியவில்லை ஆனால் ஒரு சிறு சலசலப்பு அந்த இடத்தில் நடந்ததை உணர முடிந்தது பின்னர் அடங்கிவிட்டது சிறிது நேரத்தில் பெரிய வாகனச்சத்தம் ஒன்று அதே திசையிலிருந்து கேட்டது சலசல்ப்பு பெரிதாகிபோது எல்லோரும் எழும்பி ஓடத்தொடங்கியிருந்தார்கள் மக்கள் ஓடத்தொடங்கும்போதே கண்ணீர்ப்புகைக் குண்டு வானத்தை நோக்கி வீசப்பட்டதை அவதானித்தேன் தெய்வாதீனமாக நானும் தம்பியும் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கி ஓடிணோம் உருவத்தில் சிறியவர்களாக இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை மண்டபத்தின் முகப்பின் ஒரு சுவரோடு நாம் இருவரும் தள்ளப்பட்டு அங்கேயே நின்றுவிட்டோம் நல்லவேளை இருவரும் நிலத்தில் விழவில்லை விழுந்திருந்தால் நான் இப்போது இச்சம்பவத்தையிட்டு எழுதியிருக்க முடியுமோ தெரியாது மீண்டும் கண்ணீர்ப்புகைக்குண்டு அப்போது அது கண்ணீர்ப்புகைகுண்டு என்பதே எமக்குத்தெரியாது ஆனால் மீண்டும் மீண்டும் வீசப்பட்டதால் கண் எல்லாம் ஒரே எர்ச்சம் கண்திறக்க முடியவில்லை ஒரு அம்மாதான் தம்பி இங் நிக்காதையும்கோ ஓடுங்கடா எனச் சென்னது நினைவிருக்கு அப்படியே மண்டபத்தின் உள்ளே சென்று பக்கதிலுள்ள வாசலால ரீகல் தியேட்டருக்கும் மண்டபத்துக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியால பின்பக்கம் சென்று மண்டபக்காணிக்குப் பின்புறமுள்ள கள்ளுக்கோப்பிரேசன் வளவுக்குள்ள ஒரு சேறு அடங்கிய மதவைத்தாண்டி வந்து கரன் தியேட்டருகுள்ளால மிதந்து ஆஸ்பத்திரி வீதிவது ஆனைப்பந்தியை நோக்கி ஓட்டமும் நடையுமாக வீடு வந்தடைந்தேன் இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் சிங்கப்பூர் டிஸ்பென்சரி உரிமையாளரது மகம் நவரத்திரம் ராஜன் எனும் எங்களது வீட்டுக்கு அண்மையிலிருக்கும் ஒரு இளஞர் சிங்களப் போலீசாரின் ரக் வண்டியால் அடித்துக்கொல்லப்பட்டார் ஒரு லைட் போஸ்டுக்குப் பின்னால் தப்பிக்க ஒளித்தவரை வாகனத்தால் அடித்துக்கொன்றார்கள் இதற்கு முழு உடந்தையாக இருந்தது அப்போதைய நாழ்ப்பாணம் நகரசபை மேயர் அல்பிரட் துரையப்பா
 7. தமிழர்க்கான தனியான மரபணு என்பது இருக்கிறதா என்பதற்கு ஏன் கட்டுரைகள் ஆராச்சிகள் வேண்டும் எங்களைப்பார்த்தால் தெரியவில்லையா? ஆளையாள் அடிச்சுப்புரளுகிறம் அதுவே ஒரு சரியான உதாரணம்தானே!
 8. தமிழர் அரசியலுக்கு ராஜபக்ஸக்களே சரியானவர்கள் ரணில் மற்றும் ரணிலதும் அமெரிக்காவினதும் கைத்தடியான "சுமந்திரனது" கூட்டு அரசாங்கம் தமிழர்களைப் படிகுழியில் கொண்டுபோய்விடும்.
 9. கிருபன் அவர்களுக்கு, நான் இப்போது எந்தவிதமான இந்தியச்சினிமாக்களையும் பார்ப்பதில்லை எனக்கு நேரமும் இல்லை. மன்னிக்கவும். என்னைச்சுற்றி நடப்பவற்றைத்தான் கூறியிருக்கிறேன். அவ்வளவே. நிறையப்புத்தகங்கள் இன்னமும் இருக்குப் படிக்க, அனைவர்க்கும் எனதும் எனது குடும்பத்தினது புதுவருட வாழ்த்துக்கள்.
 10. இக்கட்டுரையைஇங்கு இணைத்த உறவுக்குகடந்தகாலங்களில் இலங்கைத்தமிழ்ப் பெண்களை இழிவாகச் சித்தரித்ததையும். புலம்பெயர் தேசங்களில் வாழும் உலங்கைத்தமிழர்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்ததையும் இச்செய்தியை இணைக்கும்போது சிந்தனையில் வரவில்லைப்போல, உலகளாவிய கலை சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு கதாபாத்திரத்தை எதிர்மறைக்கதாபாத்திரமாகச் சித்தரித்துக்காடவேண்டுமாகில் அக்கதாபாத்திரத்தை உள்ளது உள்ளபடியேதான் காட்டவேண்டும் அதற்காக அக்கலாச்சாரத்துக்கு எந்தவித சம்பந்தமுமில்லாத முக அமைப்பு நிறம் ஆகியவற்றுடன் கூடிய நடிகர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு அடையாளம் மாற்றி அரிதாரம் பூசிக் காட்டுவது சர்வதேச அளவில் நியாயமாகத் தவிர்க்கப்படுகிறது எனும் எழுதப்படாத விதியைக்கூட மதியாது மாவெண்மை நிறப்பெண்ணுக்கு இரட்டை அடுக்குக் கறுப்புமைபூசி நடிக்கவைத்ததும்போதாது. தமிழீழ விடுதலைப்புலிகளில் வீரச்சாவடைந்த முதல் பெண் போராளி மாலதியை ஒத்த ஒப்பனையுடன் அக்கதாபாத்திரத்தை கண்டமேனிக்கு காரக்ரர் அசாசினேசன் செய்து ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ்ப்பெண்களையும் கேவலப்படுத்தும். புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கைத்தமிழர்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்துக் கேவலப்படுத்தும் தென் இந்திய தமிழ் சினிமா இடம் போனாலோ வெலம் போனாலோ நாம் ஏன் கவலைப்படவேண்டும். பாமிலி மான் தொலைக்காட்சித்தொடரில் கேவலப்படுத்தியது யாரோ ஒரு இலங்கைத்தமிழச்சியை அல்ல எனது தாய் வயிற்றில் என்னுடன் கூடப்பிறந்த எனது அக்களையும் தங்கையையும் எனை ஈன்றெடுத தாயையும் எனது பெண் மகளையும் தன் என எனக்குப்புரிகிறது. ஆனால் இவைகள் எதைப்பற்றியும் கவலைகொள்ளாது இவைகள் எல்லாம் நடந்துமுடிந்த பின்னர் எந்தவித விவஸ்தையும் இல்லாது ரஜனி நடித்த "அண்ணாத்தை" படத்தை விழுந்த்கட்டிப்போய் பார்த்து விசிலடித்துதுகளே அதுகளை என்ன கணக்கில் சேர்த்துக்கொள்வது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்தேசியம் பேசும் செயல்பாட்டாளர்களும் அப்படம் பார்க்கக் குடும்பம் குட்டு புடைசூழ போய்ப்பார்த்துப் புழகாங்கிதம் அடைந்துவிட்டு அடுத்த ஒரிரு கிழமையில் வந்த மாவீரர் நாளில் தேசியக்கொடியேற்றியதுதான் விசித்திரமாக இருக்கு.
 11. ஊரில ஆவாக்குழு சன்னா குழு தாராகுழு இப்படியான வன்முறைக்கும்பல்களும் வன்முறையில் அழகியலைக்காண்கிறார்கள் என இந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் பீ பீ சி எதிர்காலத்தில் கூறினாலும் கூறும். கதையோட கதையாக யாழ் ஏழாலை வடக்கில் இப்போது குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மதுவுக்கான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்களது குறை தீர்க்கவும் இலகுவழியில் பணம் சம்பாதிக்கவும் அனைவரும் கசிப்புக்காச்சுவதைக் குடிசைத்தொழிலாகத் தொடங்கியிருக்கிறார்கள் என அறியவருகிறது.
 12. ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன், அன்னாரில் ஆத்மா வீடுபேறடய எல்லாம்வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.
 13. இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம்.
 14. சவூதியில் ஒரு பெண் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டபோது அதைத் தடுக்க இலங்கையிலிருந்துபோன முஸ்லீம் தலைவர்கள் குழு சவூதி அரசு கொடுத்த பரிசுப்பொருளை அள்ளிக்கொண்டு வந்ததை நான் நினைவுபடுத்துகிறேன். பாகிஸ்தான் எண்ணை வள நாடாக இருந்தால் இப்ப வெறுபெட்டியுடன் போயிருப்பினம் நிரப்பிக்கொண்டு வர.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.