Jump to content

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2357
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Posts posted by Elugnajiru

 1. இளவாலையில் தனித்திருந்த பெண்ணை போதை வஸ்து பாவித்துவிட்டு களவெடுக்கப்போன இடத்தில் அவளைக் கண்டதும் உணர்ச்சி பொங்கிவிட்டது அதுதான் கெடுத்துட்டன் என்று சொன்ன ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒருத்தன் இப்பவும் வெளியில திரிகிறான் அவன் இன்னமும் துருந்தியபாடில்லை கஞ்சா கடத்தல் கசிப்புக்காய்ச்சுதல் வீடு புகுந்து கொள்ளை அடித்தல் என அவனது கதை தொடருகுது அவனையும் இப்படி குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகளையும் மல்லாகத்தில இருக்கிற ஒரு பெண் வக்கீல் அவரது பெயர் கீர்த்தனா என்பவர்தான் பிணை எடுத்துவிடுகிறா இப்போ அவருக்கு ஜூனியராக ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒரு பெட்ட சேர்ந்திருக்கிறா ****

  ******

  • Like 1
  • Sad 1
 2. தனது பதவியையும் அதிகாரத்தையும் அதனால் ஏற்பட்ட திமிரையும் பாவித்துக் கொஞ்சப்பேருக்குப் பிச்சை போட்டுட்டுப் போகிறார். 

  இது எல்லாம் தேவையில்ல்லை எங்களைப் பிரித்துவிட ஏதாவது செய்யுங்கோ நாங்கள் ஆரம்பத்தில அடிபட்டுக் குத்துபட்டு பிறகு திருந்தி எங்கடபாட்டை நாங்கள் பாக்கிறம் எண்டால் தங்களுக்கான இலாப நட்டக்கணக்கைப் பாத்திட்டு மோட்டு வளையைப் பார்க்கினம்.

 3. புலவர் அப்படியாகில் தமிழ்தேசிய முண்ணணியுடன் நேரடியாக யாராவது கதைத்து செய்தியை வெளிவிடுங்கோவன்.

  32 minutes ago, புலவர் said:

  இம்முறை நடந்த தியாகி திலிபனின் நினைவுநாளன்று  நடந்த சில விரும்பத்தக்கதகாத நிகழ்வுகளை தமிழ்த்தேசிய முன்னனி என்னும் அரசியல்கட்சியின்  மீது குற்றஞ்சுமத்தி நாளேடுகளிலும் ஏனைய ஊடாகங்களிலும் செய்திகள் வந்தவண்ணமிருக்கிக்கின்றன.அனைத்து ஊடகங்களிலும் ஒரேமாதிரியான ஒருவரால் எழுதப்பட்ட செய்தயையே அசு;சுப்பிசகாமல்  பிரசுரித்திருப்பதைப்பார்த்தால் இதன் பின்னனியில் இந்தியாவின் அரூபக்கரற்கள் இரப்பது புலனாகிறது. கடந்த பாலங்களில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திலிபனின் நினைவஞ்சலியை தமிழ்த்தேசிய முன்னணி ஏனயை கட்சிகளின் ஒத்துழைப்புடன் நல்லபடியாகவே  செய்திருந்தது.இம்முறை அதற்காகான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பில் இது வரை நினைவேந்தல்களில் பங்கெடுக்காத வேலன் சுவாமிகள் ,மற்றும் இந்தியாவின்  ஆர்எஸ்எஸசின் கைப் பொம்மையான சிவசேனாவின் உறுப்பினர்கள். மற்றும் இந்தியாவின் நலனகளைப் பேணுகின்ற  அதன் தமிழர் விரோதப் போக்கினைக் கண்டும் காணாமல் விடுகின்ற இந்ரிய சார்பு நிலையெடுப்பவர்களை மையமாகக் கொண்டு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தலிபன் நினைவேந்தல் அரசியல் மயப்படுத்தக்கூடாது என்ற கருத்துருவாக்கமும் தோற்றுவிக்கப்பட்டது. திலிபனே ஒரு அரசில் போராளி  தமிழ்களின் அரசியல் விடுதலைக்காக தன் உயிரையே ஆகுதியாக்கியவன். திலிபனின் சாவுக்கு இந்தியாவே பொறுப்பு. அதன் துரோகத்தனத்தை மக்கள் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் திலிபனின் நினைவஞ்சலி ஞாபகப்படுத்தும். சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மீண்டும் தமிழர்களைக் கருவியாக்க இந்தியா மீண்டும் முனைகிறது. அதற்கு இடையுறாக இருக்கும் திலிபனின் நினைவஞ்சலிகளில் குழபங்களை ஏற்படுத்த பல்வேறு குழுக்களை களத்தில் இறக்கி விட்டு தனது ஆதரவு ஊடகங்கள மூலம் தனது  பக்கம் இழுக்க முடியாமல் இருக்கின்ற தமிழத்தேசிய மக்கள் முன்னணி மீது சேறடிக்கும் விசமப்பிரசாரத்தை முன்கெடுத்து வருகிறது. முன்னாள் போராளிகள் சிலரையும் இதற்குள்  சேரத்து  குழப்பியடித்து வருகிறது. நாளை கருணா பிள்ளையான் போன்றவர்களும் முன்னாள் போராளிகள் எங்களுக்கே திலிபனை நினைவு நாள் நடத்தும் உரிமை இருக்கிறது என்று கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.திலிபன் அனைவருக்கும் பொதுவானவன்  அவனை எல்லோரும் நினைவு கூரலாம். ஆனால்  எந்த இந்தியா திலிபனை முதுகில் குத்திக் கொன்றதோ அந்த இந்தியாவின் அடிவருடிகள் திலிபனை நினைவு கூருவதை தமிழ்மக்கள் ஏற்க மாட்டார்கள் .எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.

   

  • Thanks 1
 4. இப்போது காவாலிக்கூட்டங்கள்தான் குடா நாட்டில் மிஞ்சி நிக்குதுகள்போல

  கஜேந்திரகுமார் மற்றும் மணிவண்ணண் ஆகியோர் கூட்டமைப்பு தங்களைவிட எவ்வளவோ பறுவாயில்லை எனச் சனம் கதைக்கிறமாதிரி நடக்குதுகள்

 5. இங்கு சிவில் சமூகம் எனக் குறிப்பிடப்படுபவர்கள் வெறும் லெட்டர்பாட்டுக்கள்தான் மற்றப்படி இவர்கள் சிவில் சமூகத்துக்குள் வருவதே தங்களது சுயநல நோக்கங்களை நிறைவேற்றவே. 

  மற்றப்படி இவர்களைத் தேர்வு செய்யும் மக்கள் கண்டமிச்சம் இப்போது வெள்ளிடை மலையாக யாழ்ப்பாணத்தில் தெரிகிறது சுண்ணாகம் பகுதியில் மல்வம் எனும் கிராமத்தில் அண்ணஙாரன் போதை வஸ்து பாவித்துவிட்டு தங்கையை வன்புணர்வு செய்திருக்கிறான் அதுவும் மிகவும் அதிக அளவிலான வன்முறையைப் பாவித்து அப்பெண்ணின் கால்களை இயங்காமல் செய்துவிட்டு தனது வன்முறைக்கு கூடப்பிறந்த சகோதரியையே இரையாக்கியுள்ளான்.

  இதில் வேடிக்கை என்னவென்றால் இக்குடும்பம்மேல் நடுத்தர படித்த குடும்பம் தாயார் கல்வி இலாகாவில் அதிகாரி தந்தையார் தபாலக அதிபராக இருந்து ஓய்வுபெற்றவர் குறித்த பெண் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வானவராக செய்தி இருக்கு.

  கடந்த காலங்களிலும் இந்தத் தறுதலை போதை வஸ்துக்கு அடிமையானது கண்டுபிடிக்கப்பட்டு கவுன்சிலிங்குக்கு தாயாரல் அழைத்துச் செல்லப்பட்ட பேர்வளி.

  தற்கொலை செய்ய முன்பு தனது நண்பிகள் மற்றும் தாயாருக்கு குரல் பதிவு செய்து செய்தி அனுப்பியிருக்கிறாள் அந்தப்பாவிப்பெண் ஆனால் தாயார் அதை மறைத்துவிட்டார் விடையம் வெளிவ்ந்தது அவரதி நண்பிகள் மூலமாகும்.

  காவல்துறை அவனைப் பிடித்து எந்தவித விசாரணையும் இல்லாது கந்தகாட்டுக்கு அனுப்பிவிட்டது காரணம் விசாரணை செய்தால் போதைவஸ்து எங்கு வாங்கப்பட்டது யார் இந்தக்குற்றச்செயல்களின் வலைப்பின்னனை இயக்குவது என பலவிடையங்கள் வெளியே வரும்.

  அங்கே அனுப்பிவிட்டால் யாழ்குடாவில் போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தாது தொடரலாம். 

  மேற்குறிப்பிட்ட அனைத்துக்கும் காரணம் அங்கே வாக்குப்போட்ட மக்களே.

  சில வருடங்களுக்கு முன்பு

  சுமந்திரனது கார்ச் சாரதியின் மைத்துணர் கஞ்சாப்பொதியுடன் பிடிபட்டு சுமந்திரன் தொலைபேசிமூலம் பொலீஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு விடையம் ரணிலுக்குப்போய் ரணிலது உத்தரவில் சம்பந்தப்பட்டவர் விடுதலை செய்யப்பட்ட்டகு உலகப்பிரசித்தம்.

  தான் வாழும் சமூகம் பாதுகாப்பானதா இல்லையா என அறியும் சுய சிந்தனை அற்ற ஒரு கூட்டமாக யாழ் சமூகம் திரிகிறது.

  அண்மையில் நான் யாழ்ப்பாணம் போனபோது ஒரு திறன் மிகு அரச அதிகாரி கூறுகிறார் முப்பது வருட போராட்ட வாழ்வில் நாம் பெற்றது எதுவுமில்லை இழந்ததுதான் மிச்சம் என அதே அதிகாரி நாளைக்கு தனது ஆண் பிள்ளையை வீட்டுக்கு வெளியே அனுப்பிவிட்டு திரும்பி வரும்போது சந்தேகக்கண்ணுடனேயே பார்ப்பார் என்பதை மறந்து கதைக்கிறார். தனது பெற்ற மகனை தனது பொம்பிளைப் பிள்ளையுடன் தனியே விடத் துணியமாட்டார் என்பதையும் மறந்துவிட்டார்.  யுத்தம் நின்றுபோய் பதின் மூன்று வருடங்களில் நாம் பெற்றுக்கொண்டது வன்முறை நிறைந்த சமூகத்தையும் அதனை ஆதரிக்கும் மனித மனங்களையும் வன்முறையாளர்களைக் காப்பாற்றும் நீதித்துறையையுமே.

  எனது சட்டைப்பையில் உள்ள ஒரு ரூபாய் ஆகினும் அதில் உழைத்த வியர்வை நாற்றம் இருக்கும் ஆனால் யாழ் நகரில் உள்ள பிரக்கிராசிமாரது பெட்டிகளில் உள்ள கோடானு கோடிப் பணத்தில் போதை வஸ்து கசிப்பு கஞ்சா இரத்தம் இவைகளது வாடியே இருக்கும் 

  என்னை நல்லவனாக முன்னிறுத்த மேற்குறிப்பிட்ட அனைவரும் எனக்கு உதவுகிறார்கள்.

 6. மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழர் தலைவர்களில் ஒருவராக இருப்பதில் எந்தவிதத் தகுதியும் அற்றவர் என அண்மையில் நான் யாழ் சென்றபோது நிறையப்பேர் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்


  அவர்கள் சொல்லும்  காரணம் வாழ்நாளில் வேலைக்கெ போகாதவர் இவரது குடும்பம் தமிழ்நாட்டில் அகதியாக இந்திய அரசாங்கத்தில் விசேட கவனிப்பில் வாழ்ந்தது ஆனால் இப்போது யாழ்ப்பாணத்தில் மிக நவீனமாகக் கட்டியமைக்கப்பட்ட சொகுசு வீடுகளில் முதன்மையாக இருப்பது இவரது வீடே ஆகும் என.

  இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்  கட்டியமைக்கபட்ட கலாச்சார மண்டபத்தை வடிவமைத்த கட்டிடக் கலைஞர் ஒரு சிங்களவரவரது பெயர் மதுர .....  அவருக்குத் துணயாக இருந்த ஒரு பொறியாளர் தமிழர் மாவையரின் வீட்டில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு எனப் போய்ப்பார்ததுவிட்டு அந்தாள் தலை சுத்தி விழாத குறையாக இப்படியான ஒரு வீட்டை இலங்கையில் நான் பார்க்கவில்லை எண்டு குளறுது எந்தவித வேலை வெட்டியுமில்லாது இருக்கும் மாவையெளக்கு இப்படி ஒரு வீடு கட்ட முடியுமாகில் எங்க இருந்து வந்தது இந்தப்பணாம் தமிழர் விரோத தேசம் இந்தியா இவரை தனது கைக்குள் வைத்திருக்கக் கொடுத்த பணத்தில் கட்டிய வீடாக இருக்குமோ என அவருக்கு வாக்களித்த பொதுமகன் வினவுகிறார்

  • Like 1
 7. இந்துவின் மைந்தர்களே பெருமைப்படுங்கோ.

  இனிமேல் புலம்பெயர் தேசத்தில் இந்துவின் பழைய மாணவர்கள் என ஒரு கூட்டம் கிந்தியில் கதைச்சுக்கொண்டு திரியப்போகுதுகள் 

  என்னை எல்லோரும் விளக்குமாறால டிக்க வெளிக்கிடுவினம் எனத்தெரியும் 

  இந்த இந்துக்கல்லூரி இப்போது இந்தியக்கல்லூரி ஆகிவிட்டுது இது இனி இருந்தென்ன இல்லாதுவிட்டால் என்ன பெருமாள் கோவிலடி சேணியதெருப்பள்ளிக்கூடம் பரவாயில்லை.

  • Like 1
 8. 1 hour ago, vanangaamudi said:

  இங்கே சாணக்கியன் எங்கே வருகிறார், அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் புரியவில்லை !!!

  அவர் எங்கேயும் போகவில்லை ராஜபக்ஸக்களுடந்தான் நிற்கிறார் என அவரது சகா சுமந்திரனே கூறிவிட்டார் முள்ளிவாய்க்கலில் கொலைவெறியாடிய ராஜபக்சளின் இரத்தம் தோய்த கைகளை தொட்டு முத்தமிட்டவர் சாணாக்கியன் எனும் ................ கோடரிகாம்பு. இப்போது வியாளேந்திரன் மகிந்தவின் கால்களை நக்கப்போனவுடன் அந்த இடத்தை நிரப்பி அதனால் நாடாளுமன்ற உறுப்பினராகிய சாணாக்கியன் எனும் தமிழினப் புல்லுரியும் சுமந்தியனும் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான தமிழின அழிப்பு எனும் சிங்களத்தின் நிகழ்சி நிரலுக்குள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள் இதில் பிரேனானந்த புகழ் விக்கியர் வலது பக்கம் சினல் போட்டு இடதுபக்கம் கையைக்காட்டி அதே நேர்கோட்டில் வளைவு சுளிவு எதுவுமில்லாது பயணிக்கிறார் இவர்கள் அனைவரையும் தொடுக்கும் பாசக்காரக்கயிறு சிங்களச் சம்பந்தி அல்லது சிங்களவருக்குப் பிறந்தது இவைகள் ஆகும்.

 9. அப்படி ஒரு விடையமும் இல்லை

  வெளிநாட்டு வாழ்கயை வாழ்ந்தவர்கள் ஒரு விடையத்தைப் பழகியிருப்பார்கள் அதாவது தங்களுக்குத் தேவையான அர்ச அலுவலகத்திலோ அன்றேன் உள்ளூராட்சி அலுவலகத்திலோ ஒரு விடையத்தை அல்லது அனுமதி தொடர்பாகவோ செய்து முடிக்கவேண்டுமாகில் அவர்கள் வதியும் நாடுகளில் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றை நாங்களே செய்து முடிக்கலாம் மேலதிகாரிகளுக்கு முன்னால் கூழைக்கும்பிடுபோட்டுக் கைகட்டி வாய்பொத்தி அல்லது தரகர்களிடம் போய் நிற்கவேண்டியதில்லை (அதாவது சட்டவிரோதமான) வெளிநாடுகளில் அனைத்து நடைமுறைகளும் இலகுபடுத்தப்பட்டுள்ளது 

  ஆனால் இந்தியாவில் ஒருத்தரைத் தூகூகி உள்ள போடவேண்டுமாகில் ஏதாவது ஒரு கஞ்சா கேசையோ அல்லது பூட்டு ஆட்டல் சட்டத்தையோ பயன்படுத்தி அல்லது போலியான சாட்சியங்களைப் பயன்படுத்தி உள்ளே போட முடியும் 

  ஒரு வீடு கட்ட வேண்டுமெனில் மணலோ ஜல்லியோ காணியில் கொண்டாந்து கொட்டினால் வட்டச்செயலாளர் வந்து வீட்டின் முன்னால் நிற்பார் கவுன்சிலர் வேறு வந்து நிற்பார் அனுமதி எடுத்தீர்களா அப்படியென்றால் மாநகரக் கமிசனரைக் கவனிக்க வேண்டும் கவுன்சிலரைக் கவனிக்கவேண்டும் இஞினியரை கவனிக்கவேண்டும் ஒரு பிரச்சனையும் இல்லை எல்லாத்துக்கும் சேர்த்து எனக்கு ஒரு தொகையை வெட்டுங்கோ நான் பார்த்துக்கொள்கிறேன் என்பேர் அதுக்குப்பிறகு இன்னுமொரு கட்சிக்காரர் வருவார். 

  ஏன் சென்னை வெள்ளத்தின்போது கருத்துச்சொன்ன கமல்காசனின் வீட்டுத்தெருவின் சாக்கடையை அடைக்கப்பண்ணி தெருவையே நாறடித்தவர்கள்தானே எங்கள் ரத்தத்தின் ரத்தங்கள்

  இப்படியான தொந்தரவுகள் இல்லாது பழகிப்போனால் திரும்பவும் இந்தியாவுக்கு வர எவருக்கும் மனம் வராது. தவிர பாடசாலைகளில் பிள்ளைகளின்மேல் கொடுக்கப்படும் சுமை சொல்லிமாளாது. இவைகளைத் தவிர்க்கவே ஒரு சாதாரண இந்தியன் முயல்கிறான்.

  உதாரணத்துக்கு

  உடுவில் பிரதேச செயலகத்தில் எனது வீட்டுக்கு மின் இணைப்பு தொடர்பாக பிரதேச செயலரிடம் ஒரு கையெழுத்து வாங்கப்போயிருந்தேன் அப்போது பிரதேச செயலர் அலுவலகத்தில் இல்லை இங்கு உள்ளவர்கள் சொன்னார்கள் பிரதம எழுத்தாளர் இருக்கிறார் அவரிடம் போய் கதையுங்கோ விசயத்தைச் சொல்லி விண்ணப்பத்தைக் கொடுத்தால் அவர் கையெளுத்து வாங்கி வைப்பர் என. அங்கு போனால் ஒரு நடுத்தர வயது கடந்த அம்மையார் இருந்த்தார் நான் விசையத்தை விளக்கமாகச் சொன்னேன் 

  அதாவது எனது வீட்டுக்கு மின்சாரம் வர இரண்டு போஸ்ற் நடவேண்டும் அனால் ஒரு போஸ்ருடன் விசையத்தை முடிக்கிறதெண்டால் பக்கத்துவீட்டுக்காரரின் கணிக்குள்ளால வயர் வருகுது நான் அவர்களிடம் ஒப்புதல் கடிதம் வாங்கிப்போட்டன் நீங்கள் ஒருக்கால் கையெளுத்தை வாங்கித்தாங்கோ என 

  அவர் சொன்னார் இது சரிவராது ஏன் என்றால் தற்காலிகமாக அனுமதிக்கிறேன் எனப் போட்டிருக்கு  நிரந்தரமாக அனுமதி எனக்கடிதம் தாங்கோ என நான் சொன்னேன் மின்சார சபையிடம் இப்ப ஒரு போஸ் போடக்கூடைய வளம்தான் இருக்கு இரண்டு போஸ்ருக்கு நீண்ட நாள் காவல் இருக்கவேண்டும் நான் வெளிநாட்டிலை இருந்து ஒருமாத லீவில வந்திருக்கிறன் பக்கத்துவீட்டுக்காரன் வயரைக் களட்டச்சொன்னால் நான் களட்டுறன் அதுவரைக்கும் அனுமதி தாங்கோ என

  அதுக்கு அந்த அம்மா சொன்னா நீங்கள் கனக்கக் கதைக்கிறியள் உங்களுக்கு அனுமதி தரமுடியாது என. இப்ப தெரியுதா வளர்ச்சி அடைந்த நாடுகளது நிர்வாகத்துக்கும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளது நிர்வாகத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் இலகுவான நடைமுறையையும்.

  • Thanks 1
 10. 8 hours ago, தமிழ் சிறி said:

  சுமந்திரனை  விட... சாணக்கியன்  பல மடங்கு திறம்.

  என்ன சொல்லுறியள்

  முள்ளிவாய்க்காலில் கொலைசெய்துபோட்டு ரத்தம் தோய்த கைகளை கழுவியும் கழுவாமலும் இருக்கும்போது மகிந்தவினதும் கொத்தாவினதும் கைகளை இறுக்கப் பற்றிப்பிடித்து தமிழர்க்கு எதிரான சிங்களத்தேசிய அரசியல் செய்த சாணாக்கியன் திறம்  எனச்சொல்லுறியளா?

  இப்ப சம்பந்தர் புறப்பட்டிருக்கிறார் சிறி லங்காவுக்கு ஏற்பட்டிருக்கும் தேசிய பிரச்சனையைத் தீர்க்க ரணில் விடுத்த அழைப்பையொட்டி நாம் பேச்சுவார்த்தை செய்யத் தயார் என.

  திரும்பவும் நாட்டைத் துண்டாடக் கடந்தகாலத்தில் யுத்தம் செய்தவர்களே இப்போது வெளிநாடுகளிலிருந்து போராட்டத்துக்கு உதவுகினம் என மீண்டும் புலிக்காச்சலைத் தொடங்க சாணாக்கியன் மகிந்தவுடன் தொடர்பில இருக்க சம்பந்த சிங்களத் தேசியத்தைக் காப்பாற்றப்புறப்பட சுமந்திரன் தனது நிகழ்சிநிரலைக் கைவிடாது தொடர .... இப்போது தெரிகிறதா இவங்கள் எல்லாரும் சிங்களத்தேசியத்துக்குத்தான் அரசியல் செய்கிறாஙள் என.

 11. போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களைப்பிடித்து உள்ள போட்டுட்டு ஒரு சிலருக்கு நியமன நாடாளுமன்ற உருப்பினர் பதைவைத்து அடக்கி  ராஜபக்ஸக்களை காப்பத்தப் புறப்படுட்டார்.

  இஅரது மாமனார் தலைமையிலான அரசாங்கத்தில் யாழ் நூல் நிலையத்தை எரித்ததுக்கு எதுவும் சொல்லாத ரணில் தன்னுடைய வீட்டிலிருந்த ஆயிரக்கணக்கான புத்த குடுத்து எல்லாத்தையும் ஒழுங்கு செய்தபின்பு வரவும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மந்தி புரியாணி போட்டுத்தின்னுவம் இப்ப அவசரப்படவேண்டாம் எனச்சொல்லுறார் ரணில். போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் போராட்டத்தை  ஆரம்பித்த்தபோது திண்ணை எப்ப காலியாகும் என சத்தம்போடாமல் இருந்துபோட்டு அதிகாரம் தனது கைக்கு வந்தபின்னர் ஆமிக்காரனைகங்களை வன்முறையாளர்கள் எரித்தவுடன் 

  "எனது வீட்டையும் அங்கு சேர்த்துவைத்த நீல்களையும் எரித்தவர்கள் கிட்லரின் மன்நிலையில் உள்ளவர்கள்" எனக்கூறுகிறார்.

  அப்போ யாழ் நூலகத்தை எரித்த தனது ச்ங்களப் பேரினவாதிகள் கிட்லரது மனநிலையில் உள்ளவர்கள் எனச்சொல்லாமல் சொல்கிறாரா.

  கரயான் புத்தெடுக்கக் கருநாகம் குடிகொண்ட கதையாக ரணில் வந்து இப்போ அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார். 

  இப்போது சுமந்திரன் சொல்லுகிறார் சாணாக்கியன் இப்போது ராஜபக்சவுடன் தொடர்பில் இருக்கிறார் ஆனால் அது நல்லதுக்குத்தான் என.

  • Thanks 1
 12. டாக்குத்தருக்கு விசையம் விளங்கவில்லைப் போல யாழ் நகர்ப்பகுதியில் ஒருவீட்டின் கக்கூஸ் குழி அடுத்த வீட்டின் கிணத்துக்குப் பக்கத்தில இருக்குது எண்டு.

  மற்றது இது யார் நகர்ப்பகுதியின்  சுகாதாரம் சம்பந்தமானது யாழ் குடாநாட்டின் கிராமங்களைப்பற்றி இவர் எதையும் கதைக்கவில்லை, நான் யாழ் நகர்ப்பகுதியில் பிறந்து வளர்தாலும் இப்போது நான் வாழ்வது குடாநாட்டின் கிராமப்பகுதியில் ஆகவே இந்த விடையம் என்னைச் சேராது.

 13. உள்ளாடைகளைக் களட்டச் சொன்ன அதிகாரிகள் எதிர்காலத்தில் அவர்களது வீட்டுப் பெண்டுகளதும் உள்ளாடைகளை இன்னுமொருவன் களட்டச்சொல்லுவான் என்பதை மறந்துவிட்டார்கள்.

  பொறுக்கி பொறுக்கி அக்கா தங்கச்சிகளுடன் புறக்கல போல கிடக்கு.

  இதில் ஒரு சில அதிகாரிகள் பெண்களின் உள்ளாடைகளை லவட்டிக்கொண்டு போயிருப்பார்கள் என்பது நிச்சயம். இது ஒரு வித மனநோய்.

  இவங்களை எல்லாம் பயித்தியக்காரர்களுக்கு வைத்தியம் பாக்கிற பைத்தியக்கார டாக்டரிடம் கொண்டாந்து விடனும்.

 14. யாழ் களத்தில் யாருக்காவது வழக்குரைஞருக்கான சான்றிதழ் தேவைஎனில் யாழ்ப்பாணத்தில ஒருவர் இருக்கிறார் 10 லட்சம் கொடுத்தால் ஒறிஜினல் சேட்டிபிக்கற் வரும். ஆனால் என்ன கோர்ட்டில வாய்தா வாங்கத்தான் முடியும் மற்றப்படி எதுவும் ச்ய்ய முடியாது. விரும்பினால் கூட்டமைப்பில சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம்.

  வசதி எப்படி!

   

  தவிர பின்லாந்தில் ஒரு அரசியல் கட்சி இருக்கு அதன் பெயர் அடிப்படைவாத பின்லாந்தியர்கள் என்பதாகும் அதில் முக்கிய் அபதவிகளில் உள்ளவர்கள் எல்லாம் கிரிமினல்கள் குடிவருவோருக்கு எதிர்ப்பானவர்கள் களவு கொள்ளை வேலை வெட்டி இல்லாதிருப்பது இவர்களது வேலை ஆனால் என்ன கேவலம் என்றால் இந்த நாட்டில் இதுதான் மூன்றாவது பெரிய கட்சி. கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்திருக்கு. 

  உலகின் வயது குறைந்த பெண் பிரதமர் சன்ன மரின் அவரது தாயார் ஓருபால் ஈர்ப்பாளர் அவரே இதைப் பொது வெளியில் கூறியிருக்கிறார்.
  சரி அதை விடுங்கோ 
  வெளிநாட்டு அலுவல்கள் மந்திரி  ஒரு பால் ஈர்ப்பாளர் 

  அதையும் விடுங்கோ 

  இந்த நாட்டின் அதிபர் 69 வயதில ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தார் 

  ஆனாலும் இந்த நாடு உலகின் மகிழ்சியானவர்கள் வாழும் நாட்டின் வரிசையில் முதலாவதாக மூன்றுதடவை தொடர்ச்சியாஅக வருகுது.

  ஆனால் நான் இங்கு மகிழ்சியாக இல்லை

  ஆழ்பவர்களும் சட்டத்தை அமூல் படுத்துபவர்களும் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

  மலிவு விலைக்கடையில் பத்துப் பைசாவுக்கு இனிப்பு வாங்கினால் 14 விகிதன் விற்பனை வரியைக்க்ட்டிவிட்டுத்தான் நான் இனிப்பை வாயில போடவேண்டும் அதாவது 1.4 சென்ற் அரசுக்குக் கொடுக்க வேண்டும் நீங்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் இதுதான் விடையம்.

  இலங்கையில் போராட்டம் ஆரம்பிக்க முதலேயே இந்தியாவில் ஒரு லீற்றர் பெற்றோல் விலை இலங்கைக் காசுக்கு நாநூறு ரூபாக்கு மேல் ஆனால் அப்போது இலங்கையில் பெற்றோல் விலை அரைவாசியாகும் அப்போ எல்லாருடைய ............யும் மோட்டார் சைக்கிளிலதானே இருக்கும்  சோம்பேறிகள் வாழும் நாடு இலங்கை.

  யாழில் விசேட பாடசாலைகள் வரிசையில் காட்லிக் கல்லூரியும் யாழ் இந்துவும் முதலிடம் ஆனால் அங்கு படிக்கும் மாணவர்கள் ரியூசனுக்குப் போகாமல் விடுகிறார்களா இல்லையே.

  நான் அறிய ஒரு பாடசாலை வாத்தியா கொடில்களில்ரியூசன் கொடுக்கிறார் கபொத சாதாரண உயர்தர்ப் பெறுபேறுகள் வந்தால் அவரது படமும் தேர்ச்சிபெற்ற மாணவர்களது படமும் கட் அவுட்டில கட்டித்தொங்கப்போடப்படும் ஆனால் அவர் படிப்பித்த பாடசாலையில் அவரிடம் அதே பாடம் எடுத்த மாணவர்கள் எத்தனைபேர் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் பதில் இல்லை.

  இன்னுமொரு ஆசிரியர் 
  பிந்தங்கிய பகுதியில் ஐந்து வருடம் வேலை செய்ய வேண்டும் மல்லாவிக்கு மாத்திவிட்டாங்கள் ஆனால் யாரையோ பிடித்து வேலைனைக்கு மாறிவிட்டார் ஏனெண்டால் அதுவும் பிந்தங்கிய பகுதியாம் அவரது தந்தையும் ஓய்வுபெற்ற ஆசிரியர் அதுவும் யாழில் பிரபலமான ஒரு பாடசாலையில் படிப்பித்து ஓய்வுபெற்றவர் அவரிடம் நான் கேட்டேன் ஏன் மல்லாவிக்கும் போகலாம்தானே என அவர் அதற்குச் சொன்ன பதில் "அங்க அவனுக்கு ஒரு பம்பலும் இல்லை" என ஆக அரசாங்கத்தில காசை வாங்கிக்கொண்டு பிந்தங்கிய பகுதியில இருக்கும் மாணவர்களது கல்வி உரிமையை குறிப்பிட்ட ஆசிரியர் அறுக்கிறார்.

  இந்த ஆசிரியர் அண்மையில் இலங்கையின் அரச தொலைக்காட்சியில் நான் அடுத்த பிறவியிலும் ஆசிரியராகப் பிறக்கவே விரும்புகிறேன் எனப்பேட்டி கொடுக்கிறார்,

  இப்படியான மக்கள் இருந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடையுமா இல்லையா.

  கொசுறாக மண் எண்ணை மகேஸ்வரனது தம்பி துவாரகீஸ்வரன் வருடா வருடம் கட்டும் வரி ஆகக்குறைந்த அளவே ஆகும் என ஒரு அரச வரி மதிப்பாளர் புலம்புகிறார்.

  புலம்பெயர் தமிழ் லூசுப்பயல்கள் இவற்றுக்கெல்லாம்தான் காசு அனுப்புகினம்.

  எனது கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்

 15. இந்த விடையம்பற்றி யாழில் ஒரு கட்டுரையை கொத்தா கோ போராட்டம் உக்கிரமடையும்போது வெளிவந்திருந்தது நான் நினைக்கிறேன் அனைவரும் மறந்துவிட்டீர்கள் என.

  ஆனால் திருப்பவும் லங்க சிறீ கூறி நாம் இதைத் தெரியவேண்டியுள்ளது.

 16.  தமிழர்க்கு ரணில் இதனால் கூறிக்கொள்வது என்னவெனில் சிங்களம் தமிழர் இனப்பிரச்சனை விடையத்திலான எமது அணுகுமுறை எப்போதும்போலவே  இருக்கும் என்பதாகும்.

  அதாவது டேவிட் கமரோன் இலங்கை வந்தபோது தமிழர் தரப்பை அதுவும் வடமாகாண முதலமைச்சரை யாழ் நூலகத்தில் சந்தித்தார் அதன் குறியீடு என்னவெனில் தமிழர் தரப்பது அரசியல் இருப்பு வடக்கில் இருக்கு அதனால் அந்த அரசியல் இருப்பை இங்கிலாந்து அங்கீகரிக்கிறது அல்லது மதிப்பளிக்கிறது என்பதாகும்.

  தவிர நரேந்திர மோடி இலங்கை வந்தபோது யாழ்ப்பாணத்துக்கும் வந்தார் ஆனால் தமிழர் தரப்பை யாழில் வைத்துச் சந்திக்கவில்லை இறுதி நேரத்தில் அதுவும் போகும்போது கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் வெறும் பதினைந்து நிமிடங்கள் சந்த்தித்தார் அதன் பொருள் நாம் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைல் உள்ளவர்களை விட உங்களை முக்கியமானவர்களாகவோ அல்லது நட்பானவர்களாகவோ அல்லது உங்கள் பிரச்சனையில் கரிசனை உள்ளவர்களாகவோ இலங்கையின் ஆட்சியாளர்களுக்குப் புரிந்து கொள்ளக்கூடயதாக நடக்க விரும்பவில்லை என்பதாகும்.

  அதுபோலவே டக்ள்சைச் சந்திப்பது சிங்களத்துடன் ஒத்திசைவாக இருப்பவர்களையே நாம் எதிகாலத்தில் நட்புடன் இருப்போம் என்பதாகும்.

  இனிமேல் தமிழர் தரப்பு தங்களது கோரிக்கைகளை இப்போதைய எவரிடமும் வைக்கத் தேவையில்லை என்பதே இதன் பொருள்.

  ஆனால் வெதம் ரோசம் மானம் கெட்ட சம் சும் விக்கி மாவை சுரேஸ் வகையறாக்கள் வரிசைகட்டி நிக்குங்கள் 

  • Like 1
 17. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கைத்தீவு இன்றிலிருந்து வந்துவிட்டது. தற்போது ஒருபகுதி காவல்துறையும் இராணுவமும் போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக டுவீட்டர் வலைத்தளத்தில் வந்துள்ளது.

 18. குர்திஸ்தான் போராளிகள் இப்போதும் தங்களது போராட்டத்தை சொந்த மண்ணில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிதாக ஒரு பாதிப்பும் பின்லாந்து நாடு துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்த்தால் பிரச்சனை வராது சிறிய பின்வாங்கலே. 

  ஆனால் இதன்மூலம் புலம்பெயர் தமிழர் ஒருவிடையத்தை புரிந்துகொள்ளலாம் 

  என்னதான் இருந்தாலும் தங்களுக்கு ஒன்றென்றால் எவருக்கும் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பரவாயில்லை எனும் நாடுகள் தான் மேற்குலக நாடுகளாகும் என்பதே

  • Thanks 1
  • Haha 1
 19. 44 minutes ago, Kapithan said:

  அட.......... 

  வெளிநாடுகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நாணய மாற்றுத்தா...பிரச்சனை. 

  இதை க் கேட்கேட்டு  EPDP காறரே நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாங்கள்.

  வெளிநாடுகளில இருந்து பணம் அனுப்பி இலங்கைக்குப் பொருதளை அனுப்பமுடியும் ஆனால் அந்தப்பணம் திரும்பவும் வெளிநாட்டு நாணயமாக கைகளுக்கு வராது என்ன கத்தை கத்கையா மகிந்தவினதும் கொத்தாவினதும் படம்போட்ட கடதாசிகளைக் கட்டித்தருவார்கள் அதைச் சுண்டல் சுத்தப் பயன்படுத்தலாம் அதைவிட இன்னுமொரு விடையம் அங்கு எல்லாரும் காணி பூமிகளை வித்துப்போட்டு கனடாவுக்கு வர நிற்கினம் அவர்கள் விற்கும் காணிகளை உந்தக்காசிலை சல்லிசு விலைக்கு வாங்கலாம்.  

 20.  "காலம்" ஆகிய காவல்துறையின் தனது வீரருக்கு இறுதிவணக்க நிகழ்வில் மிகவும் சிறப்புடன் கலந்துகொண்டு பங்காற்றியமைக்கும் இறுதி வணக்கம் செய்தமைக்கும் அனைத்துத் தமிழனத்தினதும் சார்பில் எமது நன்றியையும் வணக்கத்தையும் உரித்துடையதாக்குகிறோம்.

  கனடா தேசம் தனது நாட்டின் மக்களுக்குப் பல்வேறு தருணங்களில் எப்படி மதிப்பளிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

  நன்றி. 
  அந்தக் கனடாவின் காவல்துறை வீரனுக்கு எனது இறுதி வணக்கம்.

 21. 4 hours ago, Kapithan said:

  உங்கள் கருத்தை மறுதலிப்பதற்கில்லை. 

  ஆனால் , இந்தப் பிரச்சனை தொடர்பான உங்கள் முன்மொழிவென்ன? 

  தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு  மண்டையில் எதுவுமில்லை எனும் கோதாவில் நீங்கள் காசு அனுப்புங்கோ நாங்கள் தமிழர்களை வாழவைக்கிறம் எனக்கூறிக்கொண்டு வாக்குவங்கி அரசியலுக்கு அத்திவாரம் போடுகினம்.

  சாணாக்கியன் சுமந்திரன் ஆகியோர் ராஜபக்ச தரப்பையும் ரணில் தரப்பையும் இந்தியத்தரப்பையும் அடிக்கடி சந்திக்கினம்தானே அவர்களிடம் கோரிக்கையாக புலம்பெயர் தமிழர்கள் தங்களது பணத்தில் தாயகத்து உறவுகளுக்கு தற்போதைய உணவுத்தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிப்பதற்காகவேனும் அவர்களாகவே இறக்குமதியில் ஈடுபட அனுமதிக்குமாறு.

  கடந்தகாலங்களில் நாலாம் குறுக்குத் தெருவில் வர்த்தகம் செய்த தமிழர்கள்தானே இறக்குமதியில் ஈடுபட்டார்கள்.

  மத்திய வங்கியில் வெளிநாட்டுப்பணம் கையிருப்பில் இல்லை ஆகவே அவர்களால் எந்தவொரு கொடுப்பனவுக்கும் அனுமதியளிக்க முடியாது.

  ஆகவே புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்தவாறே சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புகொன்டு இலங்கைத் துறைமுகத்தில் பொருதளைக் கையளிக்கும்வண்ணம் ஏற்பாடு செய்ய அனுமது கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தலாமே.

  உலகமயமாக்கல் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் இப்போதைய போக்கிவரத்து மற்றும் வெளிநாட்டு வியாபார வலைப்பின்னலில் இவை சாத்தியமானதே.

  முதலில் பொருதளை இறக்குவதாகவிருந்தால் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும் அப்படி முயற்சிக்கும்போது வணங்காமுடி கப்பலுக்கு நடந்த கதி நடக்கக்கூடாது.

  ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிறிது சிறிதாக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு எமது உறவுகள் இப்போதும் பெட்டிகளில் அடைத்துப் பொருதள் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள் ஆனால் அதன் கையடக்க விலை ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சில்லறை வியாபாரிகளது விற்பனை விலையாக ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளது அதே பொருள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கப்பலில் வந்த கட்டணம், சுங்கம் உள்ளூர் ஏற்றி இறகல் செலவு அந்நிய நாணியப் பரிவர்த்தனைக் கட்டணம் ஒவ்வொரு பொருளையும் உள்ளூரில் விற்பதற்குத் தகுதியுடையதா? வழக்கத்துக்கு மாறான இராசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா எனச்சோதனை செய்ய ஏற்படும் செலவு  இவைகளுட சில்லறை விற்பனையாளரது இலாபம் ஆகியவற்றை உள்ளடக்கியே இவை அனைத்தும் தாயகத்து உறவுகளுக்குப் போகிறது.

  சரி அதை விடுங்கள்

  தமிழ் நாட்டிலிருந்து மொத்த விற்பனையாளர்களிடம் புலம்பெயர் தேசத்தவர்கள் கொள்முதல் செய்து அதை தங்களது உறவுகளுக்கு நேரடியாக அனுப்புவதற்கான ஒரு வலைப்பின்னலை இந்தயாவும் இலங்கையும் சேர்ந்து செய்தாலே ஓரளவு எமது தாயகத்து உறவுகள் பயனடைவார்கள்.

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.