Jump to content

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2357
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Everything posted by Elugnajiru

 1. நேற்று நான் தம்ம்பியாருடன் கதைத்தனான் மண்கும்பானுக்கு அருகில் பென்னாம் பெரிய ஒரு தண்ணீர் தொட்டி மிக உயரமாகக் கட்டியிருக்கினமாம் யாழ்ப்பாணத்தில நிண்டு பாத்தாலே தெரியுமாம் நான் நினைக்கிறன் சாட்டியிலிருந்து நயினாதீவுக்குக் கொண்டுபோகினம் போல இருக்கு. gravity water supply system என நினைக்கிறன்
 2. நானும் ஒரு அமைப்புத் தொடங்கப்போகிறேன் யாரவது நல்ல ஒரு பெயர் சொல்லுங்கோ, ஆரம்பத்தில் நான் வாழும் நாட்டின் பெயர் இருக்க வேண்டும் அல்லது ஐரோப்பிய இல்லாவிடில் உலக எனப்பெயர் வரவேண்டும். உதவிசெய்யுங்கோ. ஐந்து நட்சத்திர விடுதியில் சட்டை போட்ட கதிரையிலிருந்து எந்த வெக்கையாக இருந்தாலும் ஒரு தடிப்பமான துணியில தைத்த கோட்டுச்சூட்டுப் போட்டுக்கொண்டு அவங்கள் பேசுற மொழி விளங்குதோ இல்லையோ ஆனால் புரிந்ததுபோல நடிச்சு மற்றவையளது முகபாவனையை வைத்து எங்கட முகத்தைச் சிந்திப்பதுபோல வைப்பதா அல்லது கடவாயுக்குள்ள நமட்டிச்சிரிப்புச் சிரிப்பது போல் இருப்பதா அல்லது கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதா அதைவிட எல்லோரும் சீரியசா கதைக்கும்ப்போது கிடக்கிற பலகாரங்களை எடுத்து லவட்டுறதா என ஒரே காமடிதான் போங்கோ. ஊருக்குப்போனால் உடும்புக்கறியுடன் விருந்தும், "அம்பல் தியாவுடன்" சிங்களச்சாப்பாடும் சோக்கா இருக்கும்.
 3. சா... வடபோச்சே நானும் கொஞ்சநாள் இந்தியாவில இருந்தனால் அப்ப எல்லாம் இந்த ரவுடியள எஙவுண்டரிர போடாம விட்டுட்டாங்கள்
 4. முதலில் சுரேன் சுரேந்திரன் ரூட் ரவியருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதையும், இமானுவல் அடிகளாரது சரணாகதிக்குக்காரணம் என்ன என்பதையும் விளக்கவும், அண்மையில் யாழ் களத்தில் ஒரு உறவு இவர்களது தகிடுத்தித்தங்களையிட்டு ஒரு ஆக்கத்தை இணைத்திருந்தார். அதை யாராவது முடிந்தால் மூழவும் இணைக்கவும் அது இனியொரு இணையத்தளத்தில் வந்ததாக நினைவு.
 5. இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம் எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும். வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்
 6. சிங்களம் தனக்கான அரசியல் தலைமையில், எந்தச்சூழ்நிலையில் யார் இருக்கவேண்டும் என சரியாகவே சிந்தித்துச் செயல்பட்டு அதை நிறைவேற்றிக்கொள்ளும். மேற்குலக ஆதரவுடனான மேன்போக்குடனான அதேவேளை தமிழர்களது விடையத்தை இழுத்தடித்துக் காலதாமதப்படுத்தும் ரணில் குழு வேண்டுமா. இல்லையேல் மறுபடியும் முதலிருந்து என ஆரம்பித்து பின்பு முழுமையான இனவாதம் பேசி தமிழருக்கு ஒன்றும் இல்லை எனக்கூறும் மகிந்த தரப்பு வேண்டுமா என்பதை அவர்கள் சரியாகவே முடிவெடுப்பர். கடந்த நல்லாட்சி அரசு தீர்வுத்திட்டத்தை வரைவு செய்வதிலேயே தனது காலத்தை இழுத்தடித்தது இதில் விசேசமாக சுமந்திரன் வகையறா "ஏக்க ராஜ்ய" எனும் சொல்லுக்கு ஏகப்பட்ட வரைவிலக்கணம் கொடுத்து தனது பங்குக்கு அந்தப் பாராளுமன்றப் பதிவிக்காலத்தை சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்ததாக நிறைவுசெய்துவிட்டார். பின்பு தீர்வுத்திட்டம் தீட்டப்பட்ட கடதாசிகள் அம்பாந்தோட்டைக் கடலில் கடாசி எறியப்பட்டுவிட்டது. சிங்களம் இனிமேல் ரணிலைக் கொண்டுவரும் அவர் இன்னிமொரு "ஸ்குயர் பேப்பர்" கட்டைக் கமக்கட்டுக்குள் தூக்கிக்கொண்டு தீர்வுத்திட்டம் தயாரிப்பார். அதே வேளை அனைத்துச் சிங்களப்பேரினவாதிகளது (ரணில் உட்பட்) நிலையான நிகழ்சி நிரலுக்கு ஏதுவாக, தமிழரது இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் கைங்கரியம் வடக்குக்கிழக்கில் தங்குதடையின்றித் தொடரும் இன்னுமொரு பத்துவருடம் போதும் எல்லாம் நடந்து முடிய. அதன்பின்பு தமிழ் இனமா! அவர்களுக்கான பிரச்சனையா! அப்படி என்றால்" அப்படி எதுவும் இல்லையே! அதுதானே சுமந்திரன் முதலில் சொல்லிப்போட்டாரே கொழும்பில் சிங்கள மக்களுடன் ஒன்றாக எனது இளம் வயதைக் கழித்ததையிட்டுப் பெருமைப்படுகிறேன் என. அதேபோல் வடக்குக்கிழக்கில் சிங்களமக்களுடன் நாம் வாழ்வதில் பெருமைப்படுகிறோம் எனச்சொல்லி அடங்குங்கள் என்பார்கள். "தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்"
 7. இந்தக்கனவான், மேற்குலக நெறிமுறைகள் மற்றும் அபிலாசைகள், தவிர சிங்களவர்களை நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் விடையங்களிலேயே கவனம் செலுத்துகிறார். நாட்டை மீளமைக்க இப்போது மேற்குலக ஆதரவுக்கொள்கையுடைய ரணில் தேவைப்படுகுது ஆகவே தமிழர் உரிமை மற்றும் நீதி எனும் முழக்கத்தின்மூலம் சிங்கள மேலாண்மைக்கு இப்போது வந்திருக்கும் நெருக்கடிக்கு மாற்றீடு தேடுகிறார் ஆகவே சிங்களத்துடன் சேர்ந்து எதிர்காலத்தில் அவர்களுக்கு முண்டுகொடுக்கும் வேலையிலீடுபடும்போது, தமிழ்த்தரப்பிலிருந்து முணுமுணுப்பு வராமல் இருக்க ஒரு அறிக்கையை இழுத்துவிடுகிறார்.
 8. இருநூற்று அறுபது இலட்சம் என்பது வெறும் இரண்டுகோடியே அறுபது இலட்சம் மட்டுமே எண்களை அதிகமாகச் சொன்னால் செய்தி வாசிக்கும்போது மயக்கமாகத்தான் இருக்கும் யாழில் இப்போது கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு கலியான மண்டபங்களது பெறுமதியும் ஐந்து கோடிக்கு மேல் வரும் அப்போ யோசிச்சும்பாருங்கோ இலங்கையின் பணப் பெறுமதியில் இது எவ்வளவு சிறிய தொகை என.
 9. கிட்டத்தட்ட பிட் காய்னின் ஆரம்பகாலத்தில் யாழில் யாரோ ஒருவர் இணைத்திருந்த ஒரு கட்டுரைய அல்லது அவரே எழுதியதாக இருக்கலாம் நான் வாசித்திருந்தேன். முற்றிலும் நம்பமுடியாததாக இருந்ததால் அப்படியே மறந்துபோனேன். பின்பு ஒருநாள் நான் வாழும் நாட்டின் பிரதான தொடரூந்து நிலையத்தில் இருக்கும் ஒரு சீனாக்காரனின் கோப்பிக்கடையில் பிட் காய்னிலும் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என ஒரு அறிவித்தல் இருந்த்ததைக் கவனித்து அப்பாலே சென்றுவிட்டேன், சரி விடையத்துக்கு வருகிறேன் அதேகாலத்தின் என்னிடம் சேமிப்பிலிருந்த காசில் நூறு கிராம் இருபத்துநாலு காரட் தங்கத்தை வாங்கினேன் அதன் அப்போதைய விலை கிட்டத்தட்ட 760 யூரோக்கள் இந்த நாட்டில் இருபத்து நாலு காரட் தங்கத்தை பிஸ்கட்டாக வாங்கினால் விற்பனை வரி கிடையாது காரணம் அப்படியான முதலீட்டுத் தங்கம் ஆபரணமில்லாதவிடத்தில் பணத்துக்கு ஈடாகவே கணிக்கப்படும். பின்பு நான் பிட் காயினப்பற்றி பிரபலமாக அறிந்தபோது நான் வாங்கிய தங்கத்தின் விலைக்கு பதினாறு சென்ருக்கு ஒரு ஒஇட் காயினை வாங்கியிருக்கலாம். நீங்களே கூட்டிக்கழித்துப்பாருங்கள் அப்போ நான் எவ்வளவு காயினை வாங்கியிருக்கலாம் என. அதன்பின்பு பிட் காயின் பதினாறாயிரம் டாலருக்குமேல் எகிறும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர் விகடன் வார இதழில் நான் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுகிறேன் ஆனால் பிதாயின் இப்போ விலை அதிகம் ஆகையால் இரிடியம் போன்ற விலை குறைந்த கிரிப்டோ முதலீட்டில் ஈடுபடுகிறேன் அதனால் ஒரு சிறிது இலாபமும் பெறுகிறேன் எனக் கூறியிருந்தார். அதையும் கவனிக்காது விட்டுட்டன். இப்பொ அதன் விலை 3374 டாலர். அதே நேரம் ஒரு எஸ்தோனியன் சபையர் கரன்சி என ஒன்று வந்திருக்கு அதை வாங்கு என்றான் நான் கிட்டத்தட்ட நூறு யூரோக்கள் செலவுசெய்து ஒரு சில ஆயிரம் காயிஙளை வாங்கி மறந்தே விட்டேன். இப்பொ அதன் விலை கிட்டத்தட்ட ஆயிரம் டாலர்களுக்கு மேலாகிவிட்டது. கண்டபடி முதலீடு செய்யாதீர்கள் முயன்று பாருங்கள்.
 10. புலம்பெயர் தமிழ் அமைப்புகளது அழுத்தம் எந்தவகையிலும் எடுபடாது காரணம் அவ்வமைப்புகளிடம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை தாயகத்தில் மக்கள் பிரதிநிதிகள் இரண்டுபட்டல்ல நாலுபட்டு நிற்கையில் எம்மால் எதுவுமே செய்ய முடியாது. கடந்த காலங்களில் நான் நேரடியாக நான் வாழும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடும்போது அவர்கள் எம்மிடம் கேட்ட ஒரு கேள்வி "அதுசரி நீங்கள் போர்க்குற்றம் அது சர்வதேச விசாரணை என வேண்டுகோள் விடுக்கிறேர்கள் ஆனால் இலங்கைத்தீவில் தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகள் அப்படி எந்தவித வேண்டுகோளையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அதிகாரிகளைச் சந்திக்கும்போது விடுப்பதில்லையே" ஏன் நீங்கள் அவர்களது எண்ணத்துக்கு முரண்படுகிறேர்கள் " எஙிறார்கள் ஏதாவது பதில் எதுவும் எம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அவர்கள் எதிர்பார்ப்பது மக்கள் பிரதிநிதிகளது கருத்துக்களைத்தான்
 11. இனிமேல் புலம்பெயர் நாடுகளிலிருந்து எவரும் பெருவாரியாகக் கவனயீர்ப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கமுடியாது. ஏன் ஒரு பத்து இருபதுபேராவது கலந்துகொள்வார்களென்பதே சந்தேகமே. காரணம் ஒரு சிறிய இனக்குழுமம் தங்களுக்குள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து ஆழுக்கு ஒரு லெட்டர்பாட் வைத்துக்கொண்டு கடிதமெழுதுவதை சக தமிழனே காமடியாகத்தான் பார்க்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களில் அனைவருக்கும் சொல்லியாச்சு. தேர்தல் அரசியலை நீங்கள் எப்படியாவது நடத்திக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு பொதுவான முக்கிய கொள்கைத்திட்டங்களை முதன்மையாக வைத்து உள்ளூரிலும் சர்வதேசத்திலும் ஒன்றுபட்டுக்குரல் கொடுங்கள் என ஆனால் யாரும் அதைப்பத்திச் சிந்திப்பதே இல்லை. புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் அப்படியே போட்டது போட்டபடி எல்லாத்தையும் விட்டெறிஞ்சு தங்கள் வேலையைப் பார்ப்போம் என ஒதுங்கும் மணோநிலைக்கு வந்துவிட்டார்கள். அடுத்ததாக மறைந்த போராளிகளது நினைவுநாள் வணக்கநிகழ்வுகளுடன் ஒரு மட்டுப்படுத்தல்களுக்குள் வரவேண்டியதுதான். அதைவிட இன்னுமொரு விடையம் உசிதமானது. புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து சர்வதேசத்திடம்நீங்கள் புடுங்கிய ஆணியெல்லாம் போதும் ஒதுங்குங்கள் நாம் இனிமேல் உங்களிடம் வந்து மன்றாட மாட்டோம் எதிர் காலத்தில் நாம் வாழும் தேசங்கள் எங்கும் எமது தமிழ்ச் சாதியின் கல்வி மற்றும் பொருளாதார மேம்படுகளுக்கான வழிவகைகளை நாம் வாழும் நாடுகளில் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படப்போகிறோம் உங்கள் உலகமயமாக்கல் அரசியலைச் செய்வதற்கு வேறு யாரையும் தேடவும் எனக்கூறலாம்.
 12. கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது என்பது அண்மைக்காலமாக உண்மையில்லை ஆரம்பகாலத்தில் இப்படியான கூற்றினை கூட்டமைப்பின் அனைவருமே கூறிவந்தனர் ஆயினும் இப்போது சம்பந்தன் உட்பட நிறயப்பேர் இதனை நிராகருத்துக் கருத்துச் சொல்லியே வந்துள்ளனர். சுமந்திரன் ஒருபடி மேலே போய் அந்த நேரம் நான் கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்கவில்லை ஆதலால் இதுபற்றி எனக்குத் தெரியாது என பல இடங்கிளில் கூறியுள்ளார். ஆகவே கூட்டமைப்பு தேசியத்தலைவரால் உருவாக்கப்படவில்லை எனும் கோட்பாட்டின்படியே இனிமேல் தமிழர்கள் அனைவரும் தங்கள் அரசியல் எதிர்காலம் தொடர்பாகச் சிந்திக்கவேண்டும். அதுசரி கருத்துக்களப் பார்வையாளர்கள் என்பதற்கும் கருத்துக்கள உறவுகள் என்பதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன.
 13. ஆப்கான் நாட்டில் இஸ்லாம் எனும் பெயரில் அடிப்படைவாதச் சட்டங்களே அச்சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறது, இதில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அடக்கம். கடந்த தொண்ணூறுகளிலிருந்தே ஆப்கான் பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகினும் அவர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப்பெற்று அவர்களை வளர்க்கும் பொறுப்பிலிருந்து விலகவில்லை. அதாவது கிட்டத்தட்ட முப்பதுவருடங்களுக்கு மேலான இந்த இக்கட்டு நிலையிலிருந்து தப்பிக்கொள்ள அப்பெண்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு கருவியாகப் பாவிக்கவில்லை மாறாக அவர்கள சரி எது தப்பு எது எனக்கூறு வளர்க்காமல் இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளை அவர்களும் பின்பற்றும்விதமாகவே வளர்த்துவிட்டுள்ளார்கள் இன்று தெருவில் ஆயுதங்களுடன் தலிபான் எனக்கூறுக்கொண்டு திரியும் ஆண்கள் இவர்களே அனைவரும் இருஒஅதிலிருந்து முப்பது வயதுக்குள் உள்ளடக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களே. ஆகவே உலகம் இவர்களை அப்படியே கைவிடுவதே சரி. அதைவிடுத்து அங்கு போய் லித்தியம் கிண்டுகிறன் என வெளிக்கிடுபவர்கள் வெளிக்கிடட்டும்.
 14. இக்காலத்துத் தமிழ் இளைஞர்கள் அதற்குச்சரிவரமாட்டார்கள் என அனுபவரீதியாக அறிந்ததால் யாழ் தமிழ் பெண்கள் மனநிலை அப்படிப்போகுதோ தெரியவில்லை. எதற்கும் யாழ் இளைஞர்கள் உள்ளூர் மாத்துருபூதத்திடம் அலோசனையும் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றால் நல்லது.
 15. டக்ளஸ் அண்ணருக்கு வாழ்த்துக்கள் . உங்களது சேவை தமிழ் மக்களுக்குத் தேவை.
 16. நன்றி நன்றி நன்றி எனது கருத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். இலங்கையில் நடப்பது கொத்தபாய ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களது அவர்களது ஜால்ராக்களதும் ஆட்சியாகும்.
 17. அண்ணாத்தை ரஜனிகாந் அவர்களை வைத்து ஒரு காட்டுக்காட்டலாம் என் எதிர்பார்த்தார் ஆனால் அவர் இதுக்குச்சரிவரமாட்டென் என ஒதுங்கிவிட்டார் இனி என்ன செய்கிறது விஜயகாந் அண்ணர்மாதிரி மக்களுடனேயே கூட்டுப் பொரியல் அடைபாயாசம் எனக் கூறவேண்டியதுதான். சொன்னாப்போல சிஸ்டம் சரியில்லை என ரஜனிகாந் அவர்கள் சொன்னபோது அவரது ரசிகர்கள் ஆரவாரமாக தேர்தல் அரசியலுக்கு ஆயத்தமானார்கள் ஆனால் இப்போதைக்கு எதுவும் ஆகாது எனத்தெரிந்தவுடன் அதே சிஸ்டத்துடன் கடந்தகாலங்களில் ஊழலில் ஊறிப்போன தி மு கவுடன் கூட்டமாகத் திருச்சியில் சங்கமித்துவிட்டார்கள் இது நேற்றைய செய்தி. ரஜனிகாந் அவர்களது விழுதுகள் எப்படியோ கல்ல கட்டுவம் எனத்தான் இவ்வளவுகாலம் காவல் காத்ததுபோலிருக்கு இல்லாதுவிட்டால் ஊழல் கட்சியுடன் சங்கமமாவார்களா? ஏன் சரிகாவுக்குத் தாலி கட்டினியள் எனக் கேட்டபோது கோட்டலில் ரூம் போடும்போது சங்கடப்படாமலிருக்க எனக்கூறியவர்தான் இந்த மிஸ்டர் பிக்பாஸ்
 18. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் வாய்க்கால் வரப்புத் தகராறு ரெம்பநாளாகத் தொடர்கிறது. கேரளாவில் நெடுநாளாகக் கம்யூனிஸ்டுகள் பலமாக இருக்கிறார்கள் ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அரசியல் தலமையில் வெற்றிடம் இருக்கு காலப்போகில் கேரளாவுக்கும் இதே நிலை வரலாம். இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் ஆயிரக்கானக்கான மோசடிப் பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது எதற்கும் இருக்கட்டுமே என எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட இந்தமாதிரி அமைப்புகளைக்கொண்டு அறிக்கையைத் தயாரிப்பது பெரிய விடையம் இல்லை. அப்படி அவர்கள் மறுத்தால் இருக்கவே இருக்கு வருமானவரிச் சோதனை இதை நான் கூறவில்லை நடிகர் சத்தியராJ அவர்கள் எதையோ கூற தமிழிசை சவுந்தரராஜன் அவரது வீட்டுக்கு ஒரு ரைட் நடத்திவிட்டால் எல்லாம் சரி எனக்கூறியதை நினைவுபடுத்தவும். கூவத்தூரில் புறியாணிப்பொட்டலத்துடன் விருந்து படைத்து ஆட்டுமந்தைகளாக அடைத்துவைத்து முதல்வரைத் தேர்வுசெய்த கேவலம் நடந்தபின்பும் அந்த ஆட்சியைக் கலைக்காது அதை அடிமைப்படுத்தி தனது கட்சியின் நலனுக்காக அதைபாவிக்கும் மத்திய பாஜக அரசும், பத்திரிகைகளி வேலை செய்யும் பெண்கள் தங்களது மேலதிகாரிகளைப் பாலியல்ரீதியில் திருப்திப்படுத்தெயே பணியைத் தொடர்கிறார்கள் எனக்கூறிய நடிகர் எஸ் வீ சேகருக்கு அரஸ்ட் வாரண்ட் நீதிமன்றால் கொடுக்கப்பட்டும் கைதுசெய்யவேண்டிய காவல்துறை கான்ஸ்டபிளே அவருக்குக் காவல் காத்ததும் கள உறவுகளுக்கு நினைவில்லைப்போல. நான் வண்டிலைக் குதிரைக்குமுன்பூட்டிப் பயணம் செய்யலாம் ஆனால் எனது கண்களுக்கு லாடம் கட்டிவிட்டு, கடந்தவைகளை மறந்து கனவுலகில் ஆகா இந்தியா வல்லரசாகிவிடும் கனவுகாண்போம் என அப்துல் கலாம் சொன்னவுடன் மல்லாக்காப் படுத்துக்கொண்டு கனவு காணவில்லை. இந்தியாவுடணோ அல்லது தமிழ் நாட்டுடணோ எனக்கு ஒரு கொண்டான் கொடுத்தான் விடையத்தில் பிரச்சனை இருக்கு அதுதான் நான் இப்படிக்கூவுகிறேன். சும்மா போங்கசார்.
 19. ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சுயமாக ஓய்வுபெற்று சேவையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டின் நிர்வாகக் மையமாகத்திகழும் தலைமைச்செயலகத்துக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விகடன் இணையச்செய்தி கூறுகிறது. இந்த கருத்துக்கணிப்பு சுத்த கம்பேக் தற்போது தமிழ்நாட்டை ஆழ்வது ஓபிஎஸ் தலைமியிலான அ தி மு க என்றால் யாராவது மாங்காய் மடையன் நம்புவான். மத்தியில் ஆளும் ப ஜ கவே தமிழ் நாட்டை ஆழ்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு வானதி சீனிவாசன் கூறியதை நினைவுபடுத்துகிறேன். யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் என. திமுக்காவுக்குச் சளைத்ததாக அதிமுக ஊழலில் ஊறியிருப்பது எல்லோருக்கும் தெரியும் விஜயபாஸ்கரின் குதா ஊழல் கோப்புகள் தொடங்கி ஓபிஎஸ்சின் ஊழல் வரைக்குமான அனைத்தும் இப்போது பாஜாக கைவசம் இருக்கு. அதாவது பாஜக தமிழகத்தில் வலுவாகும்வரைக்கும் தொடர்ந்தும் இந்த நிலையைத் தக்கவைக்க ஒரு லெட்டர்பாட் அமைப்புக்குச் சொல்லி ஒரு அறிக்கையைத் தட்டி விட்டிருக்கு அதெளக்காக நாம் யாழ் களத்தில் குத்தி முறிகிறோம்.
 20. மோதட்டுமே நல்லா மோதட்டுமே இதனால் எங்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகுது.
 21. இன்று காலையில் பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியின் அருகாமையிலான நகர்புறத்திலுள்ள உயர் தொழில்நுட்பக்கல்லூரியின் தாக்குதலாளி எனச்சந்தேகப்படுபவர் ஒருவர் காவல்துறையால் கைதுசய்யப்பட்டுள்ளார் அத்துடன் அக்கல்லூரி வளாகம் மூடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தனது ருவீற்றர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலதிக விபரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அனேகமாக இங்கிருந்து வெளிவரும் இலங்கையின் மித்திரன் பத்திரிகைபோன்ற மாலைப்பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேயும் என நினைக்கிறேன்.
 22. சிறீ லஙா எனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பங்கம் விளைந்தால் பயங்கர அதிபயங்கர விளைவுகள் வந்துவிட்டுப்போகட்டும் அதுக்கு ஏன் இவர் குத்தி முறியுறார். தமிழர்களைப் பொறுத்தமட்டில் அது அவர்களது நாடு. அப்படி ஏதாவது நடந்தால் அதில் குளிர்காய்வதை விட்டு நாம் ஏன் கவலைப்படவேண்டும். சம்பந்தர் மேதின ஊர்வலத்தில ஏந்திய சிங்கக்கொடியை இன்னமும் கீழிறக்கி விடவில்லை. அவருக்குத் தெரியும் தான் கட்டையில போறமட்டும் தமிழர்கள் தன்னைத் தரையில் இறக்கிவிடமாட்டினம் என.
 23. சீனாவின் குறுநில அரசாக இலங்கைத்தீவு இருப்பது நாம் விரும்பத்தக்கதே காரணம் இப்போது உலக அரங்கில் பொருளாதார அரசியல் புவியியல் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடையங்களில் தவிர்க்கமுடியாத சக்தியாக சீனாவே உருவெடுத்துவருகிறது. கடந்த காலத்தில் நடந்த தேர்தல்களில் வடக்குக் கிழக்கு வாக்காளர்கள் வாக்களித்தது பெரும்பான்மையாக அபிவிருத்து எனும் எதிர்பார்பிலேயே. ஐஇனா இந்துசமுத்திரப் பிராந்தியத்திலும் அதுவும் இலங்கைத்தீவில் பலமாகக் கால் ஊன்றும்போது தமது உற்பத்துத் துறைகளை இலங்கைத்தீவுவரை விஸ்தரிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் ஆகவே இலங்கைத்தீவில் பொருளாதாரம் அதிகரிக்கும் அத்துடன் வடக்குக் கிழக்குக்கும் அது விஸ்தரிக்கப்படலாம் ஆகவே சும்ம கிடக்கின்ற ஒன்றுக்கும் உதவாத இந்தியாவைத் தவிர்த்து நாம் சீனாவை வரவேற்பது நியாயமானதாகும். நாடுகடந்த அர்சாங்கம் இவ்விடையத்தில் மெளனம் காப்பதே மேலாது. நாடுகடந்த தமிழீழ அரசு ஆரம்பத்தில் ஜனநாயகம் அது இது எனக்கதைத்து தேர்தலும் நடாத்தி அத்தேர்தலுடம் உருத்தொரகுமார் முடிசூட்டியதுடன் ஜனநாஜகமா அப்படியெண்டால் எனத் தலை சொறிய வெளிக்கிட்டினம். இவர்களுக்கு நிறையப்பேர் கூறியவை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களை இணத்து வெளிப்படையான கணக்கு ஆய்வாளர்களுடஙூடிய எவ்வித்ததிலும் தவறுகளோ குளறுபடிகளோ நடக்காதவாறான நிர்வாகத்திறனுடைய ஒரு இதி அமைப்பை உருவாக்கும்படி ஆனால்...............
 24. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் அனைத்தும் சீனா நினைக்கும்மாதிரியே நடைபெற ஆரம்பித்துவிட்டது இந்தியாவின் ஊதுகுழலாக மாறிவிட்ட பீ பீ சி இப்பொதுதான் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கிறது. தமிழர்களுடனான யுத்தத்தின்போது சிங்களம் இந்தியாவையும் சீனாவையும் மேற்குலகத்தையும் மிகச் சாதுர்யமாகக் கையாண்டதுபோல் இப்போதும் கையாள ஆரம்பித்துவிட்டது இதில் தோற்கப்போவது இந்தியாவும் மேற்குலகும்தான். இவர்களுக்கு சேதாரம் மட்டுமே புள்ளை வளர்த்தி இல்லை. அப்படியிருந்தாலும் இலங்கைத் தீவின் தமிழர்களைவைத்து இவர்கள் சடுகுடு ஆடலாமே தவிர எமக்கான உரிமைய அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் காரணம், "இந்திய தேசம் தமிழர் விரோததேசம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.