Jump to content

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2546
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by Elugnajiru

  1. வெளிநாடுகளில இருந்து பணம் அனுப்பி இலங்கைக்குப் பொருதளை அனுப்பமுடியும் ஆனால் அந்தப்பணம் திரும்பவும் வெளிநாட்டு நாணயமாக கைகளுக்கு வராது என்ன கத்தை கத்கையா மகிந்தவினதும் கொத்தாவினதும் படம்போட்ட கடதாசிகளைக் கட்டித்தருவார்கள் அதைச் சுண்டல் சுத்தப் பயன்படுத்தலாம் அதைவிட இன்னுமொரு விடையம் அங்கு எல்லாரும் காணி பூமிகளை வித்துப்போட்டு கனடாவுக்கு வர நிற்கினம் அவர்கள் விற்கும் காணிகளை உந்தக்காசிலை சல்லிசு விலைக்கு வாங்கலாம்.
  2. "காலம்" ஆகிய காவல்துறையின் தனது வீரருக்கு இறுதிவணக்க நிகழ்வில் மிகவும் சிறப்புடன் கலந்துகொண்டு பங்காற்றியமைக்கும் இறுதி வணக்கம் செய்தமைக்கும் அனைத்துத் தமிழனத்தினதும் சார்பில் எமது நன்றியையும் வணக்கத்தையும் உரித்துடையதாக்குகிறோம். கனடா தேசம் தனது நாட்டின் மக்களுக்குப் பல்வேறு தருணங்களில் எப்படி மதிப்பளிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நன்றி. அந்தக் கனடாவின் காவல்துறை வீரனுக்கு எனது இறுதி வணக்கம்.
  3. தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு மண்டையில் எதுவுமில்லை எனும் கோதாவில் நீங்கள் காசு அனுப்புங்கோ நாங்கள் தமிழர்களை வாழவைக்கிறம் எனக்கூறிக்கொண்டு வாக்குவங்கி அரசியலுக்கு அத்திவாரம் போடுகினம். சாணாக்கியன் சுமந்திரன் ஆகியோர் ராஜபக்ச தரப்பையும் ரணில் தரப்பையும் இந்தியத்தரப்பையும் அடிக்கடி சந்திக்கினம்தானே அவர்களிடம் கோரிக்கையாக புலம்பெயர் தமிழர்கள் தங்களது பணத்தில் தாயகத்து உறவுகளுக்கு தற்போதைய உணவுத்தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிப்பதற்காகவேனும் அவர்களாகவே இறக்குமதியில் ஈடுபட அனுமதிக்குமாறு. கடந்தகாலங்களில் நாலாம் குறுக்குத் தெருவில் வர்த்தகம் செய்த தமிழர்கள்தானே இறக்குமதியில் ஈடுபட்டார்கள். மத்திய வங்கியில் வெளிநாட்டுப்பணம் கையிருப்பில் இல்லை ஆகவே அவர்களால் எந்தவொரு கொடுப்பனவுக்கும் அனுமதியளிக்க முடியாது. ஆகவே புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்தவாறே சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புகொன்டு இலங்கைத் துறைமுகத்தில் பொருதளைக் கையளிக்கும்வண்ணம் ஏற்பாடு செய்ய அனுமது கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தலாமே. உலகமயமாக்கல் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் இப்போதைய போக்கிவரத்து மற்றும் வெளிநாட்டு வியாபார வலைப்பின்னலில் இவை சாத்தியமானதே. முதலில் பொருதளை இறக்குவதாகவிருந்தால் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும் அப்படி முயற்சிக்கும்போது வணங்காமுடி கப்பலுக்கு நடந்த கதி நடக்கக்கூடாது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிறிது சிறிதாக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு எமது உறவுகள் இப்போதும் பெட்டிகளில் அடைத்துப் பொருதள் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள் ஆனால் அதன் கையடக்க விலை ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சில்லறை வியாபாரிகளது விற்பனை விலையாக ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளது அதே பொருள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கப்பலில் வந்த கட்டணம், சுங்கம் உள்ளூர் ஏற்றி இறகல் செலவு அந்நிய நாணியப் பரிவர்த்தனைக் கட்டணம் ஒவ்வொரு பொருளையும் உள்ளூரில் விற்பதற்குத் தகுதியுடையதா? வழக்கத்துக்கு மாறான இராசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா எனச்சோதனை செய்ய ஏற்படும் செலவு இவைகளுட சில்லறை விற்பனையாளரது இலாபம் ஆகியவற்றை உள்ளடக்கியே இவை அனைத்தும் தாயகத்து உறவுகளுக்குப் போகிறது. சரி அதை விடுங்கள் தமிழ் நாட்டிலிருந்து மொத்த விற்பனையாளர்களிடம் புலம்பெயர் தேசத்தவர்கள் கொள்முதல் செய்து அதை தங்களது உறவுகளுக்கு நேரடியாக அனுப்புவதற்கான ஒரு வலைப்பின்னலை இந்தயாவும் இலங்கையும் சேர்ந்து செய்தாலே ஓரளவு எமது தாயகத்து உறவுகள் பயனடைவார்கள்.
  4. முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின்போது தலைவரை தப்ப விடுவதற்காக பசில் ராஜபக்சவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இணைப்பாளராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. தவிர இந்தியா மேற்குலகம் அனைத்தும் சம்பந்தனுக்கும் ஏனைய கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கும் புலிகளை அழித்ததன்பின்பாக தமிழர்களுக்கான தீர்வை மிக விரைவில் நடைமுறப்படுத்த அனைத்தும் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததாக யாழ் இணையத்தில் ஒரு கட்டுரை வந்திருந்து அதில் சம்பந்தனையும் போர்குற்ற, இன அழிப்பு விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என கூறப்பட்டிருந்தது. தவிர புலிகளுக்கும் ரணிலுக்கு இடையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சமாதான காலத்தில் சம்பந்தனும் அவரது பரிவாரங்களும் மேற்குலக நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தார்கள் அப்போது நான் வாழும் நாட்டுக்கும் பயணம் செய்திருந்தார்கள் அதன்போது சம்பந்தன் மூச்சுக்கு முன்னூறு தடவை சுமந்திரனுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு சில அறிவுறுத்தல்களை மேற்கொண்டிருந்தார் அப்போது சபை நாணயம் கருதி நாம் இவைகளைச் செவிமடுக்கவில்லை தவிர சுமந்திரன் அவர்களை எதிர்காலத்தில் தமிழர் அரசியலுக்குக் சம்பந்தன் கொண்டுவருவார் என புலம்பெயர் தேசத்தில் புலிகளின் வால்களாகிய நாங்கள் கணித்திருக்கவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் அப்போதே சுமந்திரன் தமிழர் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார் என்பது காலப்போக்கில் அறியக்கூடியதாக இருந்தது அப்போது சம்பந்தன் அவர்கள் சுமந்திரனை "சுமன்" என தொலைபேசி உரையாடல்களில் விழித்ததை நான் அவதானித்தேன். ஆக இன அழிப்புத் தொடர்பான போர்குற்ற விசாரணை என வரும்போது தமிழர் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்பதே எனது கருத்து. இதில் எவரையும் விட்டு வைக்கக்கூடாது. தவிர ஒரு செய்தியாளர் சந்திப்பில் புலிகளதான் தமிழ்தேசிய முண்ணணியை உருருவாக்கினார்களா எனச் சுமந்திரனிடம் கேட்டபோது தனக்கு அதுபற்றித்தெரியாது அப்போது நான் தமிழர் அரசியலிலோ அல்லது கட்சி உறுப்பினராகவோ இருக்கவில்லை என நழுவலான கருத்தை வெளியிட்டதை இங்கி நினைவுகொள்ளவும்
  5. பிறகென்ன இன்னுமொரு 1958 டையும் 1983 டையும் தொடங்கி விடுங்கோவன. மகிந்தவை சீனாக்காரன் சவேந்திர சில்வாவை வைத்து சீனன் குடாவில் சிறப்பிடித்து வைத்து இராணுவ ஆட்சியைக்கொண்டுவர எத்தனிக்கையில் மேற்குலகமும் இந்தியாவும் ரணிலை இறக்கி ராஜபக்சக்களைக் காப்பாற்றி அமெரிக்க தூதரகத்துக்கு சவேந்திர சில்வாவை வரவைத்து மிரட்டி அடக்கிவாசிக்கச் சொல்லி, பின்பு கொத்தா உட்பட்ட அனைவரது பாதுகாப்பையும் இராணுவத்திலிருந்து விலக்கி போலீஸ்காரர்களுக்கு மாத்தி ஒரு வழியாக இராணுவ ஆட்சி வரவிருந்ததை நிப்பாட்டி அதே நேரம் இந்திய தூதர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து குடாநாட்டில் உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்வதற்காக ஒழுங்குநடவடிக்கப் பயமுறுத்தல்களை எவரும் அறியாதமாதிரி காதோடு காதாகச் செய்து.
  6. சாணாக்கியன் அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கும் பின்பாக நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர்களைக் கொண்றொழித்த கையோடு மகிந்தவின் கைகளிலிருந்த இரத்த வாடைகூடப் போகாமல் இருக்கும்போது அவருடன் கைகுலுக்கி அரசியல் செய்தவர் இப்போ சுமந்திரனுக்குச் செம்புதூக்கி கூட்டமைப்பில போட்டியிட்டு நாடாளுமன்றம் போனவுடன் நிறையக் கதைக்கிறார். இப்போதெல்லாம் சிங்களத்தின் இரத்த உறவுகள்தான் தமிழர் அரசியலைக் கொண்டுசெல்ல தமிழர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறையிலும் உளவுத்துறையிலும் எப்படி மலையாளிகளது ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அதேபோல் இப்போது சிங்களத்தின் இரத்த உறவுகள் மற்றும் கொண்டான் கொடுத்தான் உறவுகளது ஆதிக்கம் அதிகரித்திருப்பது விரும்பத்தக்கதல்ல. சாணாக்கியன் மறுபடியும் தனது தந்தையரது மொழியை மறந்து தாயாரது மொழியைப்பேசிக்கொண்டு எப்போது சிங்களத்துக்குக் காவடி எடுக்கிறாரோ தெரியாது ஆனால் எப்போதோ ஒரு நாள் இது நடக்கும். எங்கட இளையோர் பலர் இவர் அடுத்த தேசியத் தலைவர் எணு சொல்லிக்கொண்டு திரிகினம் கருணா எனும் முரளிதரன் புலிகளது த்லைவரது இடது வலதாக இருந்தே துரோகியாகின வரலாறு எம்மிடம் இருக்கு. கனடாவிலிருந்து கூட்டமைப்பு தேர்தல் நிதியாக மில்லியன் கணக்கில் சேர்தத பணத்துக்கு என்ன நடந்தது எனக்கேட்ட மகளிர் அணியைச்சேர்ந்தவரை மான நஸ்ட வழக்குப்போடுகிறன் எனப் பயம்காட்டி சுமந்திரன் அடக்கியதுபோல எதிர்காலத்தில் சிங்களத்துடன் சேர்ந்து இவரும் எங்களுக்கு வாலை ஆட்டுவார். பிரேமானந்தாவுக்காக இந்தியா சென்று சாட்சி சொன்ன விக்கியர் (இவரும் சிங்களச் சம்பந்திதான்) அடுத்த சிங்களச் சம்பந்தி சுமந்திரன், இப்போ சாணாக்கியன் இவர்கள் எல்லாம் எமது அரசியலைத் தீர்மானிப்பது காலக்கேடாகும். முதலில் விருååஅம் எண்டால் உங்கட சொத்து சுகத்தை வித்து தாயகத் தமிழருக்குச் சாப்பாடு போடுங்கோ அப்புறம் பாக்கலாம்.
  7. நல்ல விசயகாரங்களைப் பிடித்து ஒரு புதிய கிருப்டோ கரன்சியை உருவாக்கி நல்லா ஏத்திப்போட்டு "ரெரா லூணா" போல தொப்புகடீர் என போட்டு உடைத்துவிட்டு தட்டி மாறினால் எல்லாம் சரியாகி விடும். இப்போது உலகமெங்கும் ஓர்கானிக் உணவுக்கு நல்ல மவுசு தவிர வேகன் உணவுக்கும் நல்ல மவுசு இது மேட்டுக்குடியினரிடையே ஒரு பாஸ்ன் ஆகிவிட்டுது ஆகவே இப்படியான உற்பத்திகளை மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கினால் ஏற்றுமதியில் காசு சம்பாதிக்கலாம் தவிர எல்லாத்தையும்விட வடக்கையும் கிழக்கையும் பிரிச்சு தமிழரிட்ட கொடுத்தால் ஆரம்பத்தில ஏல்லாரு வெளிநாடுகளில இருந்து ஓடிவந்து டாலர்களைக் கொட்டுவினம் பிறகு அவர்களே நடுரோட்டில நிண்டு ஆளுக்காள் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு அடிபட்டுப் பிரண்டு எல்லாத்தையும் விட்டுட்டு பழையபடி வெளிநாட்டுக்கு வந்திடுவினம் பிறகென்ன மறுபடியிம் சிங்களவன் அதையெல்லாம் ஆட்டையைப் போடலாம் டாலர் ஊருக்குள்ள வந்தபிறகு சிங்களவன் தன்னுடைய ஆட்டத்தை திரும்பவும் தொடங்கலாம்.
  8. அனேகமாக அனைத்தும் நடந்து முடியவில்லை இதுவே ஆரம்பமாகும் என நினைக்கிறேன். எங்களால் இனவாதம்பேசி நாட்டுமக்களைச் சமாதானப்படுத்தலாம் என்றால் புலியையும் இல்லாதொழிச்சாச்சு, மடவேலை செய்துபோட்டம், இல்லாட்டில் சர்வடேசங்களிட்டையும் புலியின் பெயரைச் சொல்லி சர்வதேசத்திடமும் சமாதானத்துக்கான போர் எனச்சொல்லி காசு பார்த்திருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள்தான் இனிமேல் வந்து நாட்டை முன்னேற்றப்போகினம் என யாழ்குடாவில கதை அடிபடுகுதாம் ஒருதர் கேட்டைடத்தில நான் கூறினேன் புலிகளது காசை அடிச்சவனெல்லாம் ஒதுக்கியதுபோக ஒதுங்கிட்டினம், இனிமேல் ஒருத்தரும் வரபோவதில்லை ஆர்வக்கோளாறில ஒன்றிரண்டுபேர் வெளிக்கிட்டவர்கள் அவர்களிடம் நீங்கள் யாரு யார் உங்களுக்கு அனுமதி தந்தவையள் அப்பிடி எண்டால் அவையள ஒரு அறிக்கை விடச்சொல்லுங்கோ பாக்கலாம் என கேட்டது ஒரு புறமிருக்க மறுபடியும் காசடிக்க வந்திட்டாங்கள் எனப் புறுபுறுக்க வந்த நாலுபேரும் எப்போதோ ஒதுங்கிட்டாங்கள். எனக்கூறினேன். ஆனால் ஒரு விடையம் எனக்கு மனதில பட்டுது சொன்னால் கோவிக்கமாடியள் என நினைக்கிறன் நான் ஊருக்குப் போகும்போது அவசரத்துக்கு ஏதாவது வாகனம் பிடிச்சால் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடியாது நாலு ஆட்டோவை மறித்தால் ஐந்தாவதுதான் நிக்கும் மற்றப்படி எதுக்கு ஆட்டோ ஓடுறம் எனத்தெரியாமலேயே சும்ம துருவில சவாரி இல்லாமல் திரிவினம். இரவு ஏழு மணிக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில இருந்து பத்துக்கிலோ மீறர் தூரம் உள்ள எனது ஊருக்குப் போக இரண்டாயிரம் ரூபாய் கேட்பார்கள் ஏன் எண்டு கேட்டால் பெற்றோல் விலை கூடிப்போட்டுது இரவில வருகிறது பயம் மற்றப்படி திருபிவரும்போது வெறுமனதான் வரவேண்டும் எனக்கன நியாயம் கதைப்பார்கள். ஒருவித மனச்சாட்சியும்மில்லாது செயற்படுவார்கள். இந்தவேளையில இதைச் சுட்டிக்காட்டுவது சரியில்லைத்தான் ஆனால் இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை. ஏதாவது அலுவலாய் வங்கி வாசலுக்குப் போனால் கழுவிவிட்டு அந்தக்காசை அடிச்சுவிட வந்திட்டினம் எனுமாப்போல் ஒரு பார்வை பார்ப்பினம் பாருங்கோ ச்சா எண்டிருக்கும். ஆனால் நாய் உழைச்சகாசு குரைக்காது என்பதுபோல் நாம் புலம்பெயர் தேசத்தில் நாம் உழைச்சகாசு மணக்காதுதானே. வந்திட்டார் சரம் கட்டிக்கொண்டு தெருவில திரியுறதுக்கு எங்கட ஊரில ஒருவர் வெளிநாட்டிலிருந்து என முதுகூக்குப் பின்னால கதைக்கிறதை நான் நிறையவே கேட்டிருக்கிறன் தவிர முக்கால் காச்சட்டை போட்டாலும் வேட்டி கட்டினாலும் பிறத்தாலை நக்கல் நையாண்டி செய்தவையளையும் யாழ்ப்பாணத்தில நிறையவே கண்டிருக்கிறன். அவர்களில் யாராவது இந்தக்கருத்தப் பார்த்தால் அவை அனைத்தும் அவர்களுக்கே அர்ப்பணிக்கிறன். அதுசரி விடிய விடிய பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்களே இவர்கள் வேலைவெட்டிகளுக்குப் போவதில்லையா யாழ்ப்பாணத்தில்.
  9. ஒரு இறைமை உள்ள நாடு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா வித உரிமைகளும் இருக்கு அது சிறீ லங்காவாக இருந்தாலும் என்ன தமிழர் நிலம் ஆகவிருந்தாலும் என்ன இன்று மன்னார்பகுதி நாளை கச்சதீவு இப்படி எதிர்காலத்தில் தமிழர் நிலம் எல்லாம் இந்தியனுக்குத் தாரை வார்த்துக்கொடுப்பதை யாழ் களத்தில் எவரும் விரும்பமாட்டார்கள் என அறிகிறேன். மோடி கொத்தாவை அழைத்து சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாரை அதானிக்குக் கொடு இல்லையேல் நாம் போர்க்குற்றம் இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உங்களுக்கு ஆதரவு தரமாட்டேன் எனக்கூறியது இப்போது சிங்களவர்களாலேயே வெளியில் வந்துவிட்டது. நாளை வடபகுதிக்கடலில் பல இந்திய மீனவர்களை இந்தியாவே கொன்றொழித்துவிட்ட சிங்களம் செய்தது எனக்கூறி கச்சதீவை ஆக்கிரமிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
  10. ஒரு பெண் பல்வேறு பிரச்சனைகள் தோல்விகள் மனக்கசப்புகள் அனைத்தையும் தாண்டி அவரவர் வாழ்கையில் நடக்கக்கூடிய சுப நிகழ்சிகளைச் சந்தித்து வாழ்வது இயற்கையே. இதில் விமர்சிக்க எதுவுமில்லை. ஆனால் என்ன ஒரு விடையம் நெருடலாக இருக்கின்றது , தமது திருமண வைபவத்தை "நெட்பிளிக்ஸ்சில்" விலைபேசி வித்துக் காசு பார்த்ததும், திருமணத்துக்கு வந்திருந்தவர்களது தொலைபேசிகளை புடுங்கி வைத்திருந்ததும். ஆனால் இதில் கடந்த காலத்தில் ஒரு திருமண வைபவத்தில் இயக்குணர் பாலாவினது மனைவியை சுத்திச் சுத்திப் படமெடுத்து என்னைப்போன்ற நடுத்தர வயது தாண்டிய இளசுகளும் இல்லாது கிழடுமில்லாதவர்களை வாயில் வீணி வடிக்கப்பண்ணியதை நினைத்தால் இது பரவாயில்லை.
  11. ஒரு அரசியல்வாதி தான் சார்ந்த சமூகத்தின் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தானே அறிந்தவராக இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் இலங்கைத் தீவில் போராட்டங்கள் நடக்குது எதற்காக எனப் புரிந்துகொள்ளாது குழு அமைச்சு ஆராய்கிறாராம் இவர் எல்லாம் ஒரு அரசியல் தலைவர். 1 நாட்டில் அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட வைக்கவேண்டும் அரச ஊழியர்கள் சும்மா போய் வாங்கு மேசையத் தேக்கிறதை விட்டுட்டு ஐந்து நாள் வேலை யில் ஒருநாள் கலத்தில் இறங்கி பராமரிப்புப் பணிகளிலும் உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்யவேண்டும் 2 ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டில் சுமார் ஒருமாதம்கூட வேலைக்குப் போகவில்லை. தவணை விடுமுறை நாதளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடவேண்டும். 3 அரச பாடசாலை ஆசிரியர்கள் தனியாக தனியார் கல்விச்சேவைகளில் ரியூசன் எடுத்தால் வேலை காலி. தவிர அவரது சேவைக்காலத்தில் படிப்பித்த மாணவர்களது தேர்ச்சிக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும். சிள்ளரை வாணிபத்திலிருந்து அனைத்து வியாபார நிறுவனங்களும் உணவுப்பொருளுக்கு குறிப்பிட்ட நுகர்வு வரியும் ஏனையவற்றுக்கு குறுப்பிட்ட விற்பனை வரியும் வாடிக்கையாளரிடமிருந்து அறவிட்டு அரசுக்குக் கொடுக்கவேண்டும். அனைத்து விற்பனைகளும் ஆவணப்படுத்தப்பட்டு ரசீதுகள் கொடுக்கப்படல்வேண்டும். அதற்கான பாவனை இயந்திரங்கள் கட்டாயமாக்கப்படல்வேண்டும். பராயமடையாத திருமணங்களையோ லிவிங் டூ கெதரையோ அனுமதிக்கமுடியாது பெற்றாருக்கு இதில் தொடர்பில்லை என பெற்றார் மறுத்தால் பராமரிப்பு இடங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களை மாற்றவேண்டும். குடிச்சுபோட்டு வாகனமோட்டுவோருக்கு, அனுமதிப்பத்திரத்துக்கான வாழ்நாள் தடைவிதிக்கவேண்டும். அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனமோடுவோர் வாழ்நாளில் எந்தக்கலத்திலும் வாகன ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரம் பெறமுடியாது. என்னுடைய ஆட்சியில் நாடு இப்படித்தான் இருக்கும். போடுங்கோ புள்ளடி பூனைக்கு நேரே
  12. முன்னம் இட்டதீ முப்புறத்திலே, அறம் நின்று கொல்லும். ஐ நா உட்பட இந்தியா ஈறாக மேற்குலக நாடுகளுடன் தமிழர்களைக் கொன்றொழித்த பாவம் இப்போது அனைவரதும் அடிமடியிலும் கைவைக்கிறது உக்ரைன் ரஸ்யா ஐரோப்பியா என எல்லாஇடங்களிலும் இருப்பில் நெருப்புப் பற்றிவிட்டது. நிச்சயம் சிறிய ரக அணுகுண்டுகள் இந்த நாடுகளைப் பதம்பார்க்கும். அதன் பின்பு இந்தியாவுக்கும் இதே நிலை வரும்.
  13. இவரது அப்பா ஒரு மொடாக்குடியர் தொண்டைமானது மகனும் ஒரு குடிகாரர் ஆறுமுகம் தொண்டைமான் நல்லா தண்ணியைப் போட்டுட்டு படியால விழுந்துதான் செத்துப்போனவர் இரவு செத்தாலும் விடியக்காத்தால செத்ததா கதை விட்டவங்கள். செந்தில் தொண்டைமான் தேர்தலில நிக்கும்போது என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ மலையகத்தை சிங்கப்பூராக மாத்திறன் எண்டார். காலா காலமாக இவரது பூட்டனையும் அப்பஙாரணையும் பாராளுமன்றம் அனுப்பினமே அவர்கள் எமக்கு எதுவுமே செய்யவில்லையே நீ வந்து செய்யப்போறிய எனக் யாரும் யோசிக்கேல்லை.
  14. இவர்களைப் பார்த்தால் கைதடி வயோதிபர் மடத்தில சாப்பாட்டுக்குக் காத்திருக்கிறமாதிரிக் கிடக்குது என்ன, சுமந்திரந்தான் சாப்பாடு வரும் கொஞ்சம் பொருங்கோ எனச்சொல்லுறார்போல
  15. இந்த அண்ணாமலை யாருமல்ல திரு ரஜனிகாந் அவர்களை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அவர் வராமல் போக அதன்பின்பு கர்நாடகாவைச்சேர்ந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக வேலை செய்து அரசியலுக்காக தனது வேலையை விட்டுட்டு இப்போ தமிழ்நாட்டில் பா ஜா கா வின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒரு கர்நாடகாக்காரன் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில் நான் முதலில் ஒரு கன்னடன் அதன்பின்பே மற்றவை எல்லாம் எனக்கூறியவர், இப்போ இரண்டு நாளைக்கு முன்பு தயா மோகன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் விடுதலைப்புலிகளது அரசியல்துறை எனக்கூறி அவருக்கு இந்தியாவால் கொடுக்கப்பட்டிருக்கும் அசைண்மென்ட் என்னவெனில் இப்போ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் புலம்பெயர் தேசங்களில் யாரும் அரசியல் நடத்துவதில்லை காரணம் அதைத் தடை செய்துவிட்டார்கள் ஆகவே எங்களுக்கு ஒத்துவராத புலம்பெயர் அமைப்புகளை ஓரங்கட்ட வேண்டுமெனில் நீ போய் விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை விடு அதன் பின்பு எல்லாரையும் புலம்பெயர் தேசங்களில் லாடஙட்டுவாங்கள் அதுக்குப்பின்பு நாங்கள் இந்திய நலனுக்கான காய் நகர்த்தல்களை தமிழர்கள் நடுவில் செய்வம் என்பது ஒரு புறம் இருக்க இந்தக்கன்னடத்துக்காரனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருக்கு இந்தியா அண்ணாமலை வெறுமனே பா ஜ கா காரன் மட்டுமல்ல தமிழக ஆளுநர் ரவிபோல ஒடு இந்திய உளவுத்துறையின் வேலைகளைச் செய்துமுடிக்கும் உளவாளியுமாகும். நாகலாந்தில் ஆளுநர் ரவி செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சமில்லை இப்போ தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் அதுபோல் எல் முருகன் எனும் தலித்தை பா ஜா க தன்னுடன் வைத்திருந்தாலும் காஞ்சி மடத்தில் உள்ள பிராமணியை இருநூறு மீற்றர் தொலைவிலவைத்துப்பார்க்கவே அனுமதி கிடைத்தது
  16. சுமந்திரன் அவர்கள் சிறீலங்கா அரசியலில் கவனம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதே காரணம் அவர் கொழும்பில் மிக வசதியாக சிங்கள மக்களுடன் உறவாடி வளந்து இப்போ சிங்களத்தின் சம்பந்தியாக வந்திருப்பதால் அவரது மருமகள்காறி கேட்டதற்கிணங்க இவற்றைச் செய்கிறார் ஆனால் இதற்குள் ஒட்டுமொத்த தமிழர்களையும் இழுத்துவிடுவது அப்படி ஒன்றும் சிறப்பானதல்ல.
  17. இல்லை அவர்களது செயல் தங்களைப் பாதுகாக்கவே மற்றது வாழ்க்கைத் தரம் என்று எடுத்துகோண்டால் இப்போது தமிழ்நாட்டில் எங்கேயாவது ஒரு மூலையில் வாழ்வதே சிறந்தது மேட்டுக்குடியினர்போலும் வாழலாம் அதே நேரம் அளவு சாப்பாடு சாப்பிட்டும் வாழலாம் தவிர இப்போது அகதியாக வந்தவர்களுக்கு மேற்குலக நாடு ஏதாவது ஒன்றில் யாராவது உறவுகள் இருப்பார்கள் அவர்களது உதவியும் அவர்களுக்குக் கிடைத்தால் தவிர அவர் தச்சுவேலை செய்பவராக இருந்தால் கெட்டித்தனமாகச் சம்பாதிக்கலாம். இப்போதெல்லாம் அகதி முகாம்களில் வாழும் வேலைசெய்யத் தகுதியுடையோர் எல்லாரும் ஏதாவது வேலைக்குச் செல்கிறார்கள் நான் இந்தியாவில் உயர்கல்விகற்க நீண்ட நாள் வாழ்ந்தனான் எனது கருத்தின்படி பணம் இருந்தால் உலகததில் சொர்க்கம் எதுவெனில் இந்தியாவில் தமிழ்நாடுதான்.
  18. யாழ் கள உறவான கோமகன் அவர்களது சாவுச்செய்தி அனைவருக்கும்போல்போல் எனக்கும் மிக அதிர்ச்சியாகவுள்ளது. மிகவும் நாணயமான கருத்தாடல்களை முன்வைக்கும் உறவொருவரை யாழ்களம் இழந்துவிட்டதில் துயரே மிகுதியாகிறது, அன்னாரில் ஆத்மா வீடுபேறடைய எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன். அவரது துயரால் வாடும் அனைவர்க்கும் எனதும் யாழ்கள உறவுகளதும் ஆழ்ந்த இரங்கள்கள். நான் நினைப்பதுண்டு இங்கு களமாடும் உறவுகள் ஏதோ மிக இளமையானவர்கள் என ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதை யதார்த்த நிகழ்வுகளிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் நான் யாழ் கள உறவுகளுடன் மனம்புண்படும்படி தர்க்கித்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
  19. இவர் ஒரு கைதேர்ந்த தரகர் அதிலும் அரசியல் தரகர் அவர் அப்படித்தான் சொல்லுவார் என்ன வைசையம் எண்டால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வரப்போகுது எனும் பயமும் வந்திட்டுதுபோல ஆனால் இனிமேல் யாராவது கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டால் ரவிராஜ் அவர்களது மனைவியைப்போல வெள்ளைப்பேப்பரில கையெளுத்து வைக்கமாட்டினம். தவிர இவருக்குச் சாதகத்தில சுக்கிரனை மாறுகண்ணோட செவ்வாய் பாக்குது அதனால போகிற இடமெல்லாம் வசை பாடல்கள்தான் அண்மையில புலம்பெயர் தேசத் தமிழரிட்டை காசு வாங்கித்தாறன் எனக்கூறி நாறியவர் அதைச் சிங்களவரே கணக்கில சேர்க்கேல்ல, மன்னார் குடியில விசாரிக்குறாங்கள் மதுரையில கதைக்கிறாங்கள் என்பதுபோல சந்திரிகா இப்பதான் கதைச்சவ ரணில் தொடர்பெடுக்கிறார் என சொல்லி தமிழர்களில் இந்தநேரத்தில் நான் பிசியான அரசியல்வாதி எனச் சொல்லித்திரிகிறார்.
  20. கடந்தகாலங்களில், புலம்பெயர் தேசங்களில் போதை வஸ்துக்கடத்தலில் ஈடுபட்ட பலர் தங்களை விடுதலைப்புலிகளே போதைவஸ்துக்கடத்தலில் ஈடுபட வற்புறுத்தியதாக விசாரணையில் சொன்ன வரலாறும் இருக்கு, இல்லாதுவிட்டால் ஊரில் உள்ள எமது உறவுகளுக்கு ஆபத்து என நாங்களும் இதற்கு ஒப்புக்கொண்டோம் எனக் கூறிய கதையும் இருக்கு. பின்லாந்தில் ஒருவர் ஏஜன்சிக்காரணுக்குக் காசு கொடுக்காமல் ஏமாத்த அவரை ஏஜன்சிக்காரனது உறவு மிரட்ட அவர்போய் உவர் இயக்கத்துக்குக் காசு கேட்டுத் தொந்தரவு செய்கிறார் என போலீசுக்குப்போய் அவர்கள் மாதக்கணக்கில உள்ளுக்க இருந்ததும் எனக்குத் தெரியும் அச்செய்தி அப்போதைய மாலை நேரப்பத்திரிகைகளில் கருணா அப்போது அடிபாட்டில நிக்குறமாதிரி இருக்கும் படத்துடன் தலைப்புச்செய்தியாக வந்ததும் உண்மை. அவர்கள் பிறகு புலிக்கு நாங்கள் காசு சேர்க்கிறது இல்லை உண்மையாகச் சேர்க்கிறது இவர்கள்தான் என ஒரு பட்டியலை வெளியிட்டு அவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் இப்பவும் இருக்கிறார்கள். புலிகளை ஆயுதம் ஏந்திப்போராடு என கொத்தாவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் துண்டைக் கடந்து சத்தியம் செய்து கேட்டாலும் இனிமேல் அவர்கள் ஆயுதத்தைக் கையில எடுக்கமாட்டார்கள். காரணம் அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது என அவர்கள் நினைத்து, மக்களது கைகளில் தமது போராட்டத்தை வழிநடத்தச் சொல்லி ஒப்படைத்துவிட்டார்கள் ஆனால் புலிகள் நினைத்த மக்கள் நாங்கள் இல்லை அவர்கள் வேறு யாரோ நீங்கள் அப்படி நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என, தேசியத்தலைவர் பிறந்த ஊரை உள்ளடக்கிய உடுப்பிட்டித்தொகுதியில் அதி கூடிய பெரும்பான்மை வாக்குகளைப் போட்டு மகிந்தவின் அடியை உண்ணும் அங்கஜன் இராமநாதனை தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்ததன்மூலம் கூறிவிட்டார்கள். இதுக்குமேல் எழுத எனக்கு நேரமில்லை காரணம் கனபேரிடம் சொல்லிவைத்திருந்தனான் இளைய தளபது விஜையின் பீஸ்ட் படத்துக்கு கலரியிலயாவது எந்தவிலை கொடுத்தாவது ஒரு ரிக்கற்றாவது எடுத்துத் தாங்கோடா என இவ்வளவு தட்டுப்பாட்டிலும் ஒரு ரிக்கற்கூட எடுக்க முடியவில்லை எனக்கூறிவிட்டாங்கள் படம் தொடங்கிற நாளைக்குமுதல் எப்படியாவது ஒரி ரிக்கற் எடுத்திடவேண்டும் சாப்பாட்டுச் சாமன் டொலர் பால் மா தட்டுப்பாடாவத் மசி...........வது. பக்கத்து வீட்டில தனியனானக் கட்டி நிக்கிற அரிக்கன் ஆட்டிலயாவது ஒரு நூறுமில்லை பாலைக்கறந்து இளையதளபதியின் கட்டவுட்டுக்கு ஊத்திப்பிறவிப் பயனடையாமல் இருக்க நான் என்ன அஜித் ரசிகன் என நினைச்சியளோ.
  21. அனேகமாக இந்தக்காணொளிக்கு இது நல்ல பதிலாக இருக்கும் என நினைக்கிறேன் சிங்கள பேரினவாதத்தின் மனோநிலை என்ன? தராகி டி சிவராம் அவர்களின் கட்டுரையிலிருந்து....... அண்மையில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கருத்தியலாளர்கள் போன்றோர் கலந்துகொண்ட இரு நாள் கருத்தரங்கொன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு என்னை தமிழ் மக்களின் அரசியல் அவாவுதல்களைப்பற்றி விளக்குமாறு அதை ஒழுங்கு செய்தவர்கள் கேட்டனர். தமிழ் மக்களும் அவர்களுடைய ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசத் தெரிந்த தலைவர்களும், செய்தியாளர்களும், அறிஞர்களும் 56 வருடங்களுக்கு மேலாக இடையறாது எமது அரசியல் கோரிக்கைகள் என்ன என்பதைப்பற்றி எல்லாவகையிலும் பேசியும் எழுதியும் வந்துள்ளார்கள். அதுமட்டுமன்றி இந்த அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் சிங்கள அரசுகளுக்கெதிராக 28 ஆண்டுகளாக (1948-1976) அமைதி வழியிலும் அதன் பின் 28 ஆண்டுகளாக (1976-2004) பெரும் ஆயுதக் கிளர்ச்சி மூலமாகவும் போராடி வந்துள்ளனர். அவர்களது கோரிக்கைகள் நிறை வேறாமையாலேயே சிங்கள மக்கள் மத்தியில் குண்டுகள் வெடித்தன என்பது அப்பட்டமான விடயம். எந்த மந்த புத்தியுள்ள பேர்வழியும் தன்னைச்சுற்றி ஏன் குண்டுகள் வெடிக்கின்றன, தனது நாட்டின் பன்னாட்டு வான்தளத்தை ஏன் சிலர் தகர்த்துச் செல்கிறார்கள் என கேள்வியெழுப்புவது நிச்சயம். ஆனால், இவ்வளவுக்குப் பின்னரும் தமிழரின் அரசியல் அவாவுதல்கள், கோரிக்கைகள் என்ன என்று கேட்கும் போக்குத்தான் சிங்கள தேசத்தில் இன்னும் காணப்படுகின்றது. 'அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளைப் பற்றி வடக்கு கிழக்கிலும் சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பன்னாட்டு அரங்கு களிலும் வாய்கிழிய விளக்கிய பின்னரும் நீங்கள் அவை என்ன என்று கேட்பது மகா அபத்தம். ஆகவே நான் இந்த விடயம் பற்றிப் பேசமுடியாது" என அவர்களிடம் கூறிவிட்டேன். இதில் சுவையான விடயம் என்னவென்றால் தமிழருடைய அரசியல் கோரிக்கைகள் என்ன வென்பதுபற்றி அங்கு வந்திருந்த பெரும்பான்மையானவர்களுக்கு உண்மையிலேயே தெரிந்திருக்கவில்லை என்பதாகும். 56 வருடங்களாக இவ்வளவு நடந்தும் எமது கோரிக்கைகளை புரிந்து கொள்ளாதவர்கள் இனி எப்படிப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள் என எனக்குத் தெரியவில்லை. எம்முடைய கோரிக்கைகளைப் பொறுத்த வரையில் விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின்னர் இராமர் சீதைக்கு என்னமுறை என்ற பாணியில்தான் சிங்கள தேசம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. சிங்கள மக்களுக்கு எங்களுடைய அரசியல் கோரிக்கைகளை புரியவைக்க வேண்டும் என்று கூறிவருபவர்கள் ஒன்றை ஆராய வேண்டும். அதாவது 56 வருடங்களாக எமது கோரிக்கைகளை முன்வைத்து எத்தனையோ தடவைகள் பேசிய பின்னரும் போராடிய பின்னரும் சிங்கள தேசம் இன்னும் ஏன் எங்களைப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றது என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு மேலாக புரிந்துகொள்ள மறுத்தவர்களை அல்லது புரிந்துகொள்வதில் அக்கறையில்லாமல் இருந்தவர்களை இனி நாம் எப்படி மாற்ற முடியும்? #இதில் இன்னொன்றையும் நாம் முக்கியமாக நோக்க வேண்டும். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தமிழ் மக்களுடைய சிக்கலையும் நியாமான அரசியல் கோரிக்கைகளையும் புரிந்துகொண்ட சிங்கள அரசியலாளர்கள், கருத்தியலாளர்கள்கூட காலவோட்டத்தில் தலைகீழாக மாறியிருக்கின்றார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். • இங்கிலாந்தில் கல்விகற்றுத் திரும்பியவுடன் ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சியாக மாற்றப்பட வேண்டும், அதில் கண்டி, கரையோரச் சிங்களப் பகுதிகள், தமிழர் தாயகம் என மூன்று மாநிலங்கள் அமையவேண்டும் எனவும் கூறிவந்ததை நீங்கள் அறிவீர்கள். அவர் பின்னர் என்ன செய்தார்? • இதேபோல இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1944இல் நடைபெற்ற தன்னுடைய தேசிய மாநாட்டில் தமிழருக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. இதே கம்யூனிஸ்ட் கட்சியே 1972ஆம் ஆண்டில் இலங்கையை ஒரு சிங்கள பௌத்த நாடென சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து பிரகடனப்படுத்தியது. • 'ஒரு மொழியெனில் இரு நாடுகள். இரு மொழிகளெனில் ஒருநாடு" என தனிச்சிங்களச் சட்டத்தைப் பற்றி தீர்க்கதரிசனத்தோடு கூறிய இலங்கையின் மூத்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரும் சமசமாஜக் கட்சியின் தூணுமாயிருந்த கொல்வின் ஆர்.டி.சில்வா என்ன செய்தார்? 1972ஆம் ஆண்டிலே சிறிலங்காவின் சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பை முன்னின்று வடிவமைத்தவர்களுள் இவரே முதன்மையானவராயினார். • இவையெல்லாம் நீங்கள் அறிந்த பழைய கதைகள். எமது உரிமைப் போராட்டம் ஆயுதமேந்திய காலகட்டத்தை எடுத்துக்கொள்வோம். 1970களின் பிற்பகுதியிலிருந்து தமிழருடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டு மென்ற கோரிக்கைகளை ஜே.வி.பி. வலியுறுத்தி வந்தது. இந்த அடிப்படையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் எத்தனையோ தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து செயலாற்றினார்கள். பின்னர் என்ன நடந்தது? 1986ஆம் ஆண்டில் ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீர, அதன் மத்திய குழுவுக்காற்றிய மிக நீண்ட உரையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் முறியடிக்கப்பட வேண்டிய ஓர் ஏகாதிபத்திய சதி என நிறுவி அறுதியிட்டு உரைத்தார். அந்தப் பேச்சு நூல் வடிவில் பின்னர் வெளிவந்து இன்றுவரை ஜே.வி.பியின் அரசியல் வேதமாக திகழ்கிறது. • 1973ஆம் ஆண்டளவில் ஜே.வி.பி. அல்லாத சில படித்த சிங்கள இடதுசாரி இளைஞர்கள் இணைந்து 'ஸ்டாலினிஸ கல்வி வட்டம்" என்றொரு அமைப்பை உருவாக்கினார்கள். இவ்வமைப்பு தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை முன்னிலைப்படுத்தி எழுதியும் பேசியும் வந்தது. • தமிழ் போராட்டக் குழுக்களோடும் இந்த அமைப்பு அந்த நேரத்தில் சில தொடர்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. (வீரகேசரி வார வெளியீட்டில் இப்போது எழுதிவரும் பெ.முத்துலிங்கம் அப்போது இந்த அமைப்போடு சம்பந்தப்பட்டிருந்தார்.) ஸ்டாலினிஸ கல்வி வட்டத்தில் தமிழரின் சுயநிர்ணய உரிமை பற்றியும் எமது ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தைப் பற்றியும் அப்போது முன்னின்று பேசி வந்தவர் தயான் ஜயதிலக்க. அதுமட்டுமன்றி, 1982இலே அவரும் அவரது சகாக்களும் 'விகல்ப கண்டாயம" என்ற ஆயுதப் போராட்ட அமைப்பை நிறுவினர். இடதுசாரிக் கோட்பாட்டின் அடிப்படையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த சில இயக்கங்களோடு இணைந்து தமிழரின் சுய நிர்ணய உரிமைக்காக அவர்கள் செயற்பட்டனர். கண்டியிலும் கொழும்பிலும் இவர்களை சந்தித்து அக்காலத்தில் நான் உரையாடித் திரிந்ததுண்டு. (மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்றுவந்த விடுதலைப் போராட்டங்களைப் பற்றியும் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அடக்குமுறைகளைப் பற்றியும் தயான் ஜயதிலக அன்று முன்வைத்த கூர்மையான விளக்கங்களும் ஆய்வுகளும் ஏற்படுத்திய தாக்கத்தை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.) விகல்ப கண்டாயம அமைப்பு அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 1986ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. தயான் ஜயதிலக்க தலைமறைவாகினார். அவரை சிறிலங்கா காவல்துறையினரும் படையினரும் சல்லடைபோட்டுத் தேடின. 1987இல் அவர் பிடிபட இருந்த வேளையில் என்னுடன் தொடர்புகொண்டார். கொழும்பில் தயான் ஜயதிலக்க இருந்த மறைவிடத்திலிருந்து அவரை பாதுகாப்பான வேறு இடத்திற்கு கொண்டுசெல்ல அப்போது அவருக்குத் தெரிந்த பல சிங்கள நண்பர்கள் கூட எனக்கு உதவ மறுத்தனர். இறுதியில் நடுநிசியில் அவரை இரகசியமாக அழைத்துச் சென்று மறைந்த நடிகரும் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவருமான விஜயகுமாரதுங்கவிடம் பேசி அவருடைய உதவியுடன் கொழும்பிற்கு வெளியில் ஒரு மறைவிடத்தில் தங்கவைத்தோம். (இது விடயத்தில் தனது மனைவி உட்பட யாரிடமும் ஆலோசனை கேட்காது எனக்கு உடனடியாகவே உதவிய விஜய குமாரதுங்க ஒரு வித்தியாசமான மனிதர்) தயான் ஜயதிலக்க பின்னர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார். பின்னர் பொதுமன்னிப்புப் பெற்று திரும்ப வந்து மாகாணசபையில் அமைச்சரானார். இந்தளவிற்கு தமிழர் விடுதலை இயக்கங்களோடு நெருங்கிப் பழகிய தயான் ஜயதிலக இன்று என்ன செய்கிறார்? தமிழருடைய போராட்டம் எப்படியெல்லாம் முறியடிக்கப்பட வேண்டும் என இடையறாது எழுதி வருகிறார். ஒரு காலத்தில் கடும் அமெரிக்க ஏகாபத்திய எதிர்ப்பாளராக இருந்த அவர் இன்று தமிழரின் படைபலத்தை இல்லாதொழிப்பதற்கு அமெரிக்காவுடன் சிறிலங்கா கூட்டுச்சேர வேண்டுமென வலியுறுத்தி கிழமைக்குக் கிழமை எழுதி வருகிறார். ஒரு காலத்தில் தமிழர், சிங்களவர் என்ற பேதத்திற்கப்பால் ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராகவும் வர்க்க விடுதலைக்காகவும் எழுதியும் பேசியும் வந்த எனது இனிய நண்பன் தயான் ஜயதிலக்க இன்று 'நாம்" அதாவது சிங்களவர்களாகிய நாம் தமிழ் மக்களின் படைபலத்தை முறியடிக்க அமெரிக்காவின் உதவியை சிங்கள தேசம் கட்டாயம் நாட வேண்டும் என 'ஐலன்ட்" செய்தித் தாளில் எழுதுகிறார். இவருக்கு என்ன நடந்தது? • இது மட்டுமா? 1984-86 காலப்பகுதியில் தென்னிலங்கையில் எமது போராட்டத்திற்குச் சார்பான சிங்கள இயங்கங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஐக்கிய இலங்கையில் பரந்துபட்ட புரட்சியொன்றை உருவாக்கும் வேலையில் நான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஈடுபட்டிருந்தேன். • அப்போது கொழும்பில் எனக்கு ஒரு முக்கிய தொடர்பாக இருந்தவர் கணிதத்துறைக் கலாநிதி நளின் டி சில்வா. கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்த அவருடைய அலுவலகத்தில் எமது போராட்டத்திற்கு நேரடியாக உதவி வந்த அவருடைய இரு சிங்கள இடதுசாரி இளைஞர்களை சந்திக்கச் செல்வேன். அவ்வேளைகளில் கலாநிதி சில்வா என்னோடு மிக அன்பாக நடந்துகொள்வார். ஒருநாள் கூட அவர் என்னிடம் பழகப் பயந்தது கிடையாது. எனது கைத்துப்பாக்கியைக் கண்டுகூட அவர் திடுக்கிடவில்லை. இன்று அவர் என்ன செய்கிறார்? சிங்கள பௌத்த மேலாண்மை அடிப்படைக் கருத்தியலான ஜாதிக சிந்தனய என்பதின் தலைமைக் கருத்தியலாளராக அவர் இன்று திகழ்கிறார். அவருக்கு என்ன நடந்தது? என்னை இப்போது கண்டாலும் அன்பாக நடந்துகொள்கிறார். ஆனால் இலங்கை சிங்கள பௌத்தத்தின் உறைவிடம் என்பதை அவர் இடையறாது வலியுறுத்தியே வருகின்றார். • தென்னிலங்கையில் இடதுசாரிக் குழுக்களோடு மட்டும் நாம் தொடர்புபட்டுப்பயனில்லை. பரந்துபட்ட சிங்கள மக்களிடம் எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளைக் கொண்டு செல்வதானால் நாம் அவர்களிடையே பரந்து கிளைபரப்பியுள்ள சிறிலங்கா சுந்திரக்கட்சியிடமும் பேசவேண்டும் என நான் முன்வைத்த கருத்தை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் அப்போது அக்கட்சியின் ஒரு முக்கிய கருத்தியலாளராக இருந்த மங்கள முனசிங்க அவர்களை தொடர்புகொண்டேன். அவர் எனக்கு ஏற்கெனவே தெரிந்தவர். ஆனால் அவர் என்னை தனது கட்சியின் எதிர்கால தலைமை வட்டத்தைச் சேர்ந்தவர் என ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்தான் திலக் கருணாரட்ன. அவருக்கும் எமது இயக்கத்துக்குமான உறவு மிகக் குறுகிய காலத்தில் இறுக்கமடைந்தது. எமது போராளிகள் கொழும்பில் அவருடைய வீட்டிலும் அவருடைய தொகுதியான பண்டாரகமையிலும் தங்கலாயினர். அவருக்காக பல வேலைகளைச் செய்தனர். (எமது துப்பாக்கி ரவைகள் சில அவருடைய காரில் பிடிபட்டு அவருக்கெதிரான வழக்கு நீண்டகாலம் தொடர்ந்தது) சிறிலங்கா அரசை ஆயுதப் புரட்சியூடாக ஒரேயடியாக கவிழ்ப்பதற்கான வெளிநாட்டு உதவியொன்றைப் பெறுவதற்கு அவர் நெருக்கடியான காலகட்டத்தில் செய்த முயற்சி சிங்கள தமிழ் அரசியல் உறவு வரலாற்றில் முக்கியமானது. அவரும் அவரது குடும்பத்தினரும் என்னோடும் எனது தோழர்களோடும் எப்போதும் மறக்க முடியாத மிக அன்புடனே பழகினர். இப்படியான திலக் கருணாரட்னவுக்கு என்ன நடந்தது? சிஹல உறுமய என்ற சிங்கள பௌத்த கடும் போக்குக் கட்சியை அவர் ஏன் உருவாக்கினார்? • இது மட்டுமா? தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வழங்குவதன் மூலம் மட்டுமே இலங்கையின் இனச்சிக்கலைத் தீர்க்கலாம் என ஆணித்தரமாகக் கூறிவந்தவர் ஜனாதிபதி சந்திரிகா. கொழும்பில் என்னையும் எனது சில தோழர்களையும் தன்னுடைய வீட்டில் தங்கி, தென்னிலங்கையில் வேலை செய்வதற்கு அவரும் அவரது கணவரும் எமக்கு உதவி செய்தனர். அக்காலக்கட்டத்தில் 'தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்காதவர்களிடம் பேச்சு வைத்துக்கொள்ளாதே" என அவர் என்னிடம் கூறியதுண்டு. (அவரது கணவர் நடிகர் விஜய குமாரதுங்க எமது மக்கள் மீதும் எமது போராட்டத்தின் மீதும் அன்பும் ஆதரவுமுள்ளவராக இருந்தவர். ஆனால் ஜே.வி.பி.யால் கொலைசெய்யப்பட்டு விட்டார்). இப்படியாகவிருந்த ஜனாதிபதி சந்திரிகாவுக்கு என்ன நடந்தது? 'சமாதானத்துக்கான போர்" என்ற கொடூரத்தை தமிழ் மக்கள் மீது அவர் ஏன் ஏவி விட்டார்? இவற்றுக்கெல்லாம் விளக்கம் அறிய வேண்டும் என்றால் நாம் சிங்கள தேசத்தின் உளவியலை மிக ஆழமாக ஆராயவேண்டும். இதனடிப்படையில்தான் சிங்கள தேசத்தை நோக்கிய எமது அணுகுமுறை அமைய வேண்டும். - தராகி சிவராம் (10.10.2004 அன்று வீரகேசரி பத்திரிகையில் எழுதிய கட்டுரை)
  22. 2009 ல் உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்தமிழர்கள் எல்லோரும் இதே நேரம் அதாவது சித்திரை மாதத்தில் அவரவர் வாழும் நாடுகளில் தெருக்களில் தொடர் போராட்டங்கள் நடத்தித் தொண்டைத்தண்ணீர் வத்தக் கத்தியதை எவருமே கண்டுகொள்ளவில்லை நேற்று நான் வாழும் நாட்டில் நாங்கள் எந்த இடத்தில் நின்று கவவீர்ப்புச் செய்தமோ அதே இடத்தில் இங்கு வாழும் சிங்களவர் நின்று கவனயீர்ப்புச் செய்தவையள் காலம் எப்படி மாறியிருக்கு என்பதற்குச் சரியான உதாரணம் 2009 ல் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு ப் பின்பு சிங்களவர் வாழும் நாடுகள் எங்கும் தமிழர்களது போராட்டத்தை அடக்கிவிட்டோம் எனக் கூறிக்கொண்டு வெற்றிவிழா எல்லாம் நடாத்தினவயள் அதில் பின்லாந்திலும் நடாத்தி அப்போது அதிபராக இருந்த மகிந்தவின் செய்திய சிங்களத்திலும் தமிழிலும் வாசிச்சு மகிழ்ந்தவையள் கொத்தாவை கெமுணுவின் மறு அவகாரமாகவே உவமைப்படுத்தி அங்கு வந்திருந்த முஸ்லீம்களுடன் சேர்ந்து பால்சோறில் தொடங்கி அம்பில் தெவ வரைக்கும் ஒண்டாக்குந்திச் சாப்பிட்டவையள். இன்று அதே கொத்தபாஜவை கழுவி ஊத்துகிறார்கள். ஆனால் இதே கொத்தாவயும் ராஜபக்ஸ கூட்டத்தையும் இன்னும் செலகாலத்தில் அவர்களே அரியணையில் ஏத்தி அழகுபார்ப்பார்கள். இதில் கூட்டமைப்பின் பங்கு என்னவெனில் சிங்களவருடன் ஒன்றைக்கதைத்துவிட்டு தமிழர்களிடம் வந்து வேறமாதிரிக்கதைக்கிறது அதில் சுமந்திரன் கைதேர்ந்த தரகராகவே மாறிவிட்டார் ("டார்" எல்லாம் போடுவது சபை நாகரீகம் கருதியே மற்றப்படி "டான்" தான்) சிங்களவர்களின் சம்பந்திகளும் இந்திய நடுவண் அரசில் அதிகாரிகளது சம்பந்திகளும் சேர்ந்து தமிழர்க்கு ஏதாவது செய்வினம் என நினைத்தால் அது கிழவி சாமத்தியப்பட்டதுபோலத்தான். இதில் தற்செயலாக நடந்ததோ இல்லைக் காலத்தின் பதிலோ தெரியாது என்னவென்றால் அப்போது எமது சாவை வேடிக்கை பார்த்த ஐ நா சபையை இப்போ உக்ரெனின் அதிபர் ஒண்டுக்கும் உதவாத நிறுவனம் என சொல்லுகிறார். குணா கவியளகன் அவர்கள் மானத்தமிழன் மறத்தமிழன் அது இது என இழெளத்துவிடுகிறார். இவரது காணொளியின் தலைப்பைப்பார்த்தால் லங்கசிறி செய்தித்தலைப்புப்போட்டமாதிரி இருக்கு. இவர் ஒரு காணொளியில் தனது முப்பது வருடத்துக்கு மேலான அரசியல் வாழ்வில் என இழுத்துவிட்டார் நானும் இலங்கைத்தீவின் அரசியலை துரையப்பா காலத்திலிருந்து கவனிக்கிறன் ஆனால் இவர் எனது கண்ணுக்கோ காதுக்கோ எட்டுப்படவில்லை.
  23. இந்தக்காணொளியில் நாகலாந்தின் போராட்ட வரலாற்றில் சிலவற்றை அறியலாம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.