Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. யாழ் கள உறவுகளுக்கு, இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 2023..!
  2. டேய் கு.சா, எப்படியடா இருக்குறாய்..? நீ ஊரைவிட்டு ஓடிப்போய் ஒரு மாசமாச்சி..! பொட்டுக்காலை துளை போட்டு கடலை போட்டது போதாதென கரணவாய் குளத்துப் பக்கம் தள்ளிக்கொண்டு போனாய்.. இப்போ ஒன் ஆளு 'ஒன்னை நெனச்சு நெனச்சு உருகிப்போறா மெழுகா..!' நீ என்னடாயென்டால் கூட்டுவளோட சேர்ந்து தம்மடிச்சி, கள்ளடிச்சி மணியண்ணையின்ட கடையில கடன் வச்சுப்போட்டு நாட்டைவிட்டு ஓடிப்போயிட்டே.. நான்தானப்பு அவருக்கு காசை கொடுத்தனான். மருவாதையா காசை அனுப்பி வை..! மங்களம் ச்சே.. பரிமளம் உண்டாகட்டும்..! அப்புறம் இருக்கு சேதி..!!😜
  3. அட ஆமாம், கந்தையா என்னை மாதிரியே அப்பாவி. 🤩சூது, வாது தெரியாதவர்தான். 😌
  4. இப்பொழுது அமெரிக்கா எங்கும் பனி கொட்டுவதால், நீங்கள் அக்கறையாக சொல்கிறீர்கள் என் எண்ணினேன். அதனால் ஜொக்கா என்றால் குளிருக்கு அணியும் ‘ஸ்வெட்டர்’ என்றே நினைத்தேன். 🫣 கந்தையா என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. 😎
  5. பணி செய்யலாம், உடம்பில் உழைக்க தெம்பிருக்கிறதா என்பதும் முக்கியமில்லையா..? 🤔
  6. நல்ல கருத்து..! 😜 நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன். 🤩 நான் சேர்ந்திருக்கும் புதிய ஐரோப்பிய நிறுவனத்தில், திட்டப்பணிகளும், அதற்கான நிபுணத்துவமும் இருந்தால் 70 வயது வரையிலும் பணி செய்யலாம்..! 😉
  7. கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி..! நான்கு நாட்கள் சுவிஸ்ஸில் இருந்தபோது இயற்கை கொஞ்சும் மலைப்பகுதிகள் அபாரம், ஆனால் மலையேறி ஜங்ஃபரூச்(Jungfraujoch) சென்றபோது 'எப்போடா கீழே இறங்குவோம்..?' என்றாகிவிட்டது. முதுகெலும்பை ஊடுருவும் பனிக் குளிர்..! 🙄 ஆனால் மலை அலையடிவாரத்திலுள்ள "லாட்டர்புரூனன்" கிராமம் சொல்லவே வேணாம், பனி இல்லாத நாட்களில் கொள்ளை அழகு, நடக்கவே களைப்பு தெரியாத அவ்வளவு ரசிக்கத்தக்க இடம். அடுத்த வருடம் நிச்சயம் குடும்பத்தோடு அங்கே செல்ல வேண்டும்..! இங்கே அமீரகத்தில் இரண்டே காலம்தான். வெப்ப காலம் தோராயமாக 50 பாகையை எட்டும் அதுவும் எண்ணை வளப் பகுதியான "ருவைஸ்" பக்கம் சொல்லவே வேணாம். சூடு தாங்க இயலாது, ஆனால் எங்கு போனாலும் குளிரூட்டப்பட்டிருக்கும், பேருந்து தரிப்பிடம் முதற்கொண்டு. மற்றது, குளிர் காலம்..இனிவரும் சனவரி முதல் மார்ச் வரை அதிக குளிர், இக்காலத்தைத்தான் தாங்க இயலாது. இன்றும் அலுவலகம் முடிந்து வெளியே வந்தால் முகத்தில் அடித்த சில்லென்ற குளிர், தாங்க இயலாமல் பறந்துவிட்டேன் வீட்டினுள்..! 😉 ஏறக்குறைய சென்னையை ஒத்த தட்பவெப்ப நிலை, அதுவே நமக்கு பழகியது..ஏற்றது..!
  8. என்னப்பா, இந்த திரியில ஒரே பென்சன் கேஸ்களாக இருக்கு..?🤣
  9. அந்த மாதிரி உருண்டாங்களா என்ன? நான் பார்த்ததில்லையே கு.சா..! 🤓😎 இந்த அரைகுறை பாலின கவர்ச்சியை ரசிச்ச காலம் இளவயசுக் கோளாறு இருந்தப்போதான்..!😜
  10. இம்மாதிரி தேவையா? இதையா ரசிக்கிறீர்கள் அன்பர்களே?🤔
  11. இன்று இரவில் இங்கே 20 பாகை வெப்பம் தான். ஆனால் இந்த குளிரையே தாங்க முடியவில்லை, இரவில் தூக்கமும் வரவில்லை. சாதாரணமாக திரியும் மொட்ட பசங்க, "டவுசர் பாண்டி"களாக இங்கே தெருவில் உல்லாசமாக திரிவதும் வெப்பம் கொடுக்கும் தயவில்தான். 🤣 வெப்பத்தில் வாழ்ந்த எமக்கு, 20 பாகை மிதமான குளிரும் சுமைதான்..! எப்போடா ஜூன் மாதம் வருமென உள்ளது.
  12. சாமிகளே, கொஞ்சம் தெளிவா எழுத வேண்டியதுதானே? 🤭 சகஜமா பேசும் மொழியில் எழுதினால், எப்படி பொருள் கொள்வதாம்? 😜
  13. நல்லவேளை, இந்த பதிவை பார்த்து வேறை மாதிரி நினைத்துவிட்டேன்.🤭🤗🤣
  14. இந்த 'மகா..ஆ...ஆ..வம்சம்' மாதிரி ராமாயணமும் தடயங்களை வைத்து ஒரு அளந்துவிட்ட கதை என எல்லோரும் அறிந்ததுதான். இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து கல்கி, சாண்டில்யன் ஆகியோர் அளந்த கதைகளும் வரலாறாக மாற வாய்ப்புண்டு..!
  15. யார் இந்த தேவதை..? யார் இந்த தேவதை..?? 🧐 ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு..! இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா..? 😜 😂
  16. ஆரம்பித்த சில போட்டிகளில் ஆர்வமில்லாமல்தான் இருந்தேன், ஆனால் கால் இறுதிப் போட்டிகளை பார்த்தவுடன் பள்ளியிலிருந்த அந்த பழைய விளையாட்டு உற்சாகமும், காய்ச்சலும் என்னயும் தொற்றிக்கொண்டது. '80 களில் 'மொரடோனா' விளையாடியபோதும் இதே உற்சாகம்தான். கால்பந்து விளையாட்டில் பிடித்ததே எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கும் சுறுசுறுப்பும், எதிராளியை கெலித்து பந்தை நேர்த்தியாக நழுவிக் கடத்திச் செல்லும் லாவகமும்தான். 🤩 மீண்டும் அடுத்த கால்பந்து விளையாட்டில் சந்திக்கலாம்..! 😎 (ஏனெனில், மற்ற விளையாட்டுகளைப் பற்றி எதுவும் தெரியாது.) 😜
  17. ரொம்ப வருசங்களுக்குப் பின் ரசித்து பார்த்த கால்பந்து விளையாட்டு..! 🤩 வெற்றி பெற்ற அர்ஜென்டைனாவிற்கும், சளைக்காமல் போராடிய ஃபிரான்சு அணிக்கும் வாழ்த்துக்களோடு அருமையான விளையாட்டு விருந்தை படைத்த இரு அணிகளுக்கும் பாராட்டுகள். 💐 யாழில் திறம்பட போட்டிகளை தொகுத்து வழங்கிய கிருபனுக்கும் நன்றி. 💐 உறவுகளின் அலப்பறையால் நானும் யாழ் போட்டியில் கலந்துகொண்டிருக்கலாமென ஒருகணம் தோன்றியது. 😍
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.