யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,741
 • Joined

 • Days Won

  38

ராசவன்னியன் last won the day on June 8

ராசவன்னியன் had the most liked content!

Community Reputation

2,175 நட்சத்திரம்

4 Followers

About ராசவன்னியன்

 • Rank
  Advanced Member
 • Birthday January 8

Profile Information

 • Location
  மதுரை
 1. துபாயிலிருந்து ஊருக்கு வரவேண்டிய நேரமாதலால் பல கடைகளுக்கு சென்று உறவுகள் அனைவருக்கும் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. சென்னை வந்தவுடன் இரு நாளில் திருக்கடையூர் பயண ஏற்பாடுகள் என மும்மரம், இந்த மேட்ச் பற்றிய நினைவும் இல்லை..! மேட்ச் பற்றிய தெளிவு இல்லாவிட்டாலும், கலகலப்பிற்காக கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. திறம்பட கொண்டுசென்ற ஈழப்பிரியன், என்னை ஊக்குவித்து தாங்கி நின்ற சுவி மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.
 2. வாழ்த்துக்களை வழங்கிய, கிருபன், சாமானியன், சுவைப்பிரியன், அபராஜிதன் ஆகியோருக்கும் நன்றி..! ஏற்கனவே பின் தலையில் சொட்டை விழ ஆரம்பித்துவிட்டது. இதில் நீங்கள் வேறையா..?
 3. அமீரகத்தில் பணிபுரிய 60 வயது உச்ச வரம்பு இருந்தாலும், பெரும்பாலும் துபாயில் 65 வயது வரை வேலை செய்யலாம். சில தனியார் நிறுவனங்களில் 70 வயதுவரை வேலை செய்பவர்களும் உண்டு. எல்லாம் அந்த நிறுவனத்தின் தொழில்முறை தேவையை பொறுத்தது. ஒரு வித்தியாசம் மட்டுமுண்டு. 60 வயது வரை மூன்று வருடத்திற்கு ஒருமுறை வேலைக்கான ஒப்பந்தமும், விசாவும் புதுப்பிக்கப்படும். 60 வயதை தாண்டிவிட்டால் வேலை கொடுப்பவர், எமக்கு இவரின் தனிதிறமைகள் வேலைக்கு அவசியம் என சிபாரிசு செய்யவேண்டும், வேலை விசாவிற்கான வைப்புத்தொகை அதிகரிக்கும், வருடம் ஒருமுறை மருத்துவ சோதனைக்கு சென்று தகுதி சான்றிதழ்(Medical Fitness Certificate) பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் வேலைக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். அரசாங்க வேலையெனில் மூன்று வருடத்திற்கு விசாவும், தனியார் நிறுவன வேலையென்றால் இரு வருட விசாவும் கிட்டும். நான் பணிபுரிவது அரசாங்க வேலை என்பதால் 60 வயதிற்கு மேற்பட்டும் சில வருடமாக அது பாட்டுக்கு ஓடுது..!
 4. வாழ்த்துக்கள் அருளிய, சசிவர்ணம், வல்வை சகாரா, தமிழினி, வாசி, ரதி, எப்போதும் தமிழன், நிலாமதி, அகஸ்தியன், வாத்தியார், சண்டமாருதன், நந்தி மற்றும் தமிழ்சிறி ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்..! இம்மாதிரி அறுபதாம், எண்பதாம் கல்யாணங்கள் தமிழ் நாட்டில் திருக்கடையூர் கோவிலில் மட்டுமே பெரும்பாலும் நடைபெறுவதாக ஐதீகம். சென்ற வருடமே நடைபெற வேண்டியது இவ்வருடம் சிறப்பாக நடந்தேறியதில் என் மகளுக்கும், மகனுக்கும் பங்குண்டு. தாத்தாவின் திருமண மணிவிழாவை என் பேரன் புன்னகையோடு மாலையணிந்து ரசித்தார். இதுதான் திருக்கடையூர் கோவில்..
 5. இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்கு 60-ம் கல்யாணம் நடாத்தி வைக்கும் பண்பாடு நிலவுகின்றது. இருந்தும் பலருக்கும் 60-ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன்? அ‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60-‌ம் க‌ல்யாண‌ம் நடாத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை. கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள். சஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக் கடமைகள் நிறைவேறுகின்றன. அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும். இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அவன்தனது இந்திரியங்களின் இச்சைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறான்.ஆனால் அறுபதாவது வயது அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பமாக அமைய வேண்டும். அதற்குப் பிறகு அவன் உலக பந்தங்களை விட்டுவிட முயல வேண்டும். இதை நினைவு படுத்தவே அவனுக்கு அறுபதாவது வயதில் மனைவியைப் பக்கத்தில் உட்காரவைத்துப் பக்குவமாக ஒரு கல்யாணத்தையும் நடத்துகிறார்கள். எழுபது வயதில் அவன் மனமுதிர்ச்சி பெற்று,சப்தரிஷிகளைப் போன்ற பக்குவ நிலையைஅடைகிறான். என்பதாவது வயதில் எட்டுத் திசைகளையும் பாதுகாக்கும் காவலர்களான தெய்வங்கள் அவனுக்கு வழிகாட்டுகிறார்கள்.அப்போது அந்த தம்பதியர் நல்லகதி பெற மீண்டும் ஒரு கல்யாணமே செய்து கொள்கிறார்கள். தொண்ணூறாவது வயதில் நவக்கிரங்களின் முழு ஆசியும் அவனுக்கு கிடைக்கிறது. நூறாவது வயதைஅடைவது மிகவும் சிரமம். அப்படி அடைந்தவர்களுக்கு ஐம்புலன்கள் - உண்பது (ருசி), நடப்பது, மறுப்பது (கழிவு), காண்பது, உணர்வது ஆகிய ஐந்து செயல்களுமே - கட்டுப்பட்டு அடங்கி விடுகின்றன. இது உன்னதமான நிலை. இதை அடக்குவது சிரமம். இதை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத்தான் "நீ நூறு வயது வாழவேண்டும்"என்று கூறி பெரியோர்கள் வாழ்த்துகின்றனர். முக்கியமாக 60ம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம். -படித்தது.
 6. வாழ்த்துக்களை அருளிய, பாஞ், புங்கை, தமிழ்தேசியன், ஜெகதா துரை, சுவி, ஏராளன், நந்தன், நுணாவிலன், பெருமாள், குமாரசாமி, மோகன், பகலவன், வாதவூரான், கொழும்பான், ஈழப்பிரியன் மற்றும் ராஜா1982 அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அறுபதாம் கல்யாணம் மிக இனிமையானதுதான்.. எனது பிள்ளைகள், பேரப்பிள்ளை மற்றும் உறவுகளுடன் நடந்தது. மயிலாடுதுறை அருகேயுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சிறப்பாக நேற்று காலை நடைபெற்றது. பல முதியவர்களின் திருமணமும் மண்டபத்தில் அருகருகே நடந்தது. கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் இதற்காகவே தொடர்ந்தன. கோவிலின் வாசலில் பல மணமக்கள் மாலையும் கழுத்துமாக திரிவதை பார்க்க இனம் புரியாத சந்தோசம். பல இளவயதினர் மணிவிழா கண்ட முதிய மணமக்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதையும் கண்டேன். நம் யாழ்க்கள 'பாஞ்' பெரியவரிடம் ஆசி வாங்க செய்தி அனுப்பினேன், அவர் இங்கே பகிர்ந்துவிட்டார். அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மீண்டும் நன்றிகள்..!
 7. கொஞ்ச நாளில் 'லாக்-அப்பில் இருக்கும்போது வயரைக் கடித்தார்' என செய்தி வராமல் இருந்தால் புண்ணியம்.
 8. என்னுடன் 70களில் படித்த கல்லூரி அறைத்தோழன் |(ஐயர்மார்தான்) எப்பொழுதாவது மாமிசமும் சாப்பிடுவான். இப்பொழுது பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக உள்ளான். இப்பொழுதும் சாப்பிடுகிறானா..? என தெரியவில்லை. காலத்திற்கேற்ப நகரங்களில் அவர்கள் மாறுகிறார்கள், கிராமங்களில் இன்னமும் பழமை அடிப்படைவாதிகளாக இருப்பதைக் காணலாம்.
 9. "அள்ளு புல்லு"க்கும் காலம் வந்திருக்கு, இறுதியில் சுவியோட கடைசி வீட்டில்தான் குடியேறப் போறன். சாமிகளே, நான் பாட்டுக்கு 'சிவனே'ன்னு மற்ற திரி பக்கம் போய்க்கினு இருந்தேன், தாங்கிப் பிடிப்பேன்னு சொல்லிட்டு இப்படி மேலே அனுப்பிவிட்டீர்களே..? இதில் ஆச்சரியப்பட ஒன்னுமே இல்லை. சுவி சொன்ன தைரியத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் மாற்றி மாற்றி எழுதிப் போட்டேன். இப்படி வந்து நிக்குது..!
 10. ஆ..ஆ..ஆ...! என்ன சோதனை இது..? குருட்டாம்போக்கில் எழுதினால் இப்படியா..? ஆனாலும் தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி சுவி..!
 11. கட்டிடத்தின் வெளிப்புற வடிமைப்பு நன்றாக உள்ளது. உட்புறம் சவுண்ட் இன்சுலேசன் முழுமையாக இருப்பது மாதிரி தெரியவில்லை. (இந்தப் பதிவு, இதற்குமுன் அண்மித்த பகுதிகளில் நடந்த நிகழ்வுகளை பற்றியதல்ல.)