-
Posts
6942 -
Joined
-
Days Won
45
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by ராசவன்னியன்
-
முகத்தை சவரம் செய்ய சலூன் அல்லது பிளேடு கிடைக்காமல் குஷ்டம் வந்தது போல 'ட்ரிம்' செய்த தாடியுடன் அல்லது பரட்டை தலையில் 'கோடு போட்டு' திரிப்பவர்களை கண்டால் காத தூரம் விலகி நடப்பதுண்டு. அதில் இக்கால புள்ளீங்களும் அடக்கம்..! இவ்வகை 'புள்ளீங்களுக்கு' செமத்தியாக 'வச்சு செய்த' சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!
-
இன்றைய செய்தியில் இக்காணொளியை காண நேர்ந்தது. உயிரை பணையம் வைத்து 6000கி.மீ செல்வது எவ்வளவு ஆபத்தானது? அதற்கு தமிழகம் வந்து சிலகாலம் தங்கிவிட்டு நிலைமை சரியானதும் நாடு திரும்பலாமே? இங்கே வளம் இல்லைதான், ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லைதானே?
-
முடிவு தெரிந்து விட்டதால், 'இனி என்ன செய்ய..?' என சிந்தனையே மேலோங்குகிறது..! 'இது எனக்கு மட்டும் தோன்றுகிறதா..? இல்லை, எல்லோருக்குமா..?' என தெரியவில்லை.
-
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஈழப்பிரியன்.
-
அட போங்கப்பா, நான் 'பிட்டு அல்வா' என்றதும் வேறென்னமோ என நினைத்துவிட்டேன்.
-
யாழில்... 8 ஆவது சர்வதேச, யோகா தின நிகழ்வுகள்!
ராசவன்னியன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
-
காலங்காலமாய் ஆண்களிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களுக்கான கொடுமைகளை ஒப்பிட்டால் பெண்களின் வீட்டு வன்முறை மிகக் மிகக்குறைவு. ஆப்கானில் இப்போதிருக்கும் தலீபான்களின் மனநிலையிலேயே இன்னமும் ஆண்கள் பல நாடுகளில் இருப்பது கண்கூடு. பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகவே உருவகபடுத்தியிருக்கும் நமது பழங்கால சமூக கட்டமைப்பின் தூண்டுதலாக ஆண்களின் வக்கிர குணமும் அப்படி அமைந்துள்ளது வெட்கக்கேடு..!
-
நேற்று நண்பர்களின் சிபாரிசால் இப்படத்தை அகண்ட திரையில்(i-MAX) பார்த்தேன். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்புடன் இருக்குமென தோன்றியது. பிடித்த விடயம்: கதாபாத்திரங்களின் செயல்கள்/குணங்கள் நாம் எதிர்பார்க்காத வகையில் திடீர் மாறுதல்கள், குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. முதல் பாதிவரை புதிரான ஊகிக்க முடியாத முடிச்சுகள்.. ரசிக்காதவை: சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. பாடல்களை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம், ரசிக்கும்படி இல்லை. முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
- 9 replies
-
- 1
-
-
- கமல் ஹாசன்
- விஜய் சேதுபதி
-
(and 3 more)
Tagged with:
-
இலங்கையின் இரண்டு விமான நிலையங்கள் மூடப்படுகிறதா?
ராசவன்னியன் replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
அது டாக்ஸிவே இல்லை, பிரதான ஓடுபாதையின் அகலமே அவ்வளவுதான். -
இலங்கையின் இரண்டு விமான நிலையங்கள் மூடப்படுகிறதா?
ராசவன்னியன் replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
சிறி, 'ஏர்பஸ் 380 மூலமா யாழ்ப்பாணத்தில் தரையிறங்க வேணும்'ன்னு கனவு காணுங்கள்..! காசா.. பணமா? -
கல்லுக்குள்ளும் ஈரமிருக்கிறது..!
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
காவல் அதிகாரியிடம் பேட்டியின் விரிவான காணொளி.. -
இரு நாட்களுக்கு முன் தாம்பரத்தை அண்மித்த பொழிச்சலூரில், ஐடி ஊழியர் ஒருவர் தன் இரு குழந்தைகள் (13 மற்றும் 8 வயது), மனைவி ஆகியோரை தங்கள் திருமண நாளன்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர்கள் மயங்கிய நிலையில் மின்ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தன்னையும் ரம்பத்தால் கழுதறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இது கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அறியப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்துவரும் காவல் அதிகாரி, இந்த சுருக்கமான பேட்டியில் நடந்தவற்றை கண்கலங்கி சொன்னவிதம், நம்மையும் ஒருகணம் சோகத்தில் ஆழ்த்துகிறது..!
- 1 reply
-
- 1
-
-
விமானம் பழைய ATR வகையை சேர்ந்ததாக இருக்கும். உயரத்தில் காற்றழுத்த வேறுபாடு இருந்தால் குலுங்கி வயிற்றை கலக்கிவிடும். சமீபத்தில் அவரசர வேலையாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இவ்வகை விமானத்தில் சென்றபோது சில நேரம் குலுக்கல் இருந்தது, பத்திரமாக இறங்க வேண்டிக்கொண்டேன். ஆனால் யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் போக்குவரத்து அதிகம் இருந்தால்தானே எதிர்காலத்தில் விமான நிலையம் விரிவடையும்? அதுதான் சாக்கென அரசு வேண்டுமென்றே கொழும்பிற்கு வரும் வருமானத்தை ஏன் வடக்கிற்கு கொடுக்கவேண்டுமென முட்டுக்கட்டை போட்டால் மூடிவிடவேண்டிவரும்.
-
இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிமர் செய்தி
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
ராசவன்னியன் replied to பகிடி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
ஹிஹி..நானும் மதுரைவாசிதான். அப்படியே பொடிநடையா சங்குப்பிட்டி, பூநகரி, வெள்ளாங்குளம், மன்னார் வழியா மதுரை வந்தால், மீனாட்சி தரிசனத்துடன் கோனார் கறிக்கடையில் உண்டு, ஜிகிர்தண்டா அருந்தி, தூங்கா நகரத்தை பார்க்கலாம். -
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ராசவன்னியன் replied to ஏராளன்'s topic in தமிழகச் செய்திகள்
மிகவும் மகிழ்ச்சியான செய்தி.. -
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,சுவி.
-
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.. வாழிய பல்லாண்டு..!
-
ஆழ்ந்த இரங்கல்கள்.. சிறிது காலம் நம்மோடு களத்தில் உறவாடியவர்.