Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Posts posted by ராசவன்னியன்

  1. 4 hours ago, kandiah Thillaivinayagalingam said:

    நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன் 

    கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை

    இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்

    நன்றி.

    நான் மிக சமீபத்தில் சந்தித்த யாழ் உறவு பெரியவர் பாஞ் ஐயா மாதிரி ரொம்ப சீனியராக இருப்பீர்களென எண்ணுகிறேன்.🙏💐

  2. இதே பொலுசன் பிரச்சனை தமிழ் 
    நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

    தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏

  3. On 31/3/2024 at 06:54, kandiah Thillaivinayagalingam said:

    எனது அறிமுகம் 


    நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் 

    அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன்.

    ....

    கந்தையா தில்லைவிநாயகலிங்கம் 

    நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏

    கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன்.

    அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍

    தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன்.

    BTW,

    இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி?

    பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂

  4. 9 hours ago, குமாரசாமி said:

    என்னது 15 வருசமா?😍
    வாழ்த்துகள் வன்னியரே! 💪🏽
    தாங்கள் இப்போது வேறு எங்கேயோ புகுந்து விளையடுற மாதிரி தெரியுது..😂

    மிக்க நன்றி, கு.சா🙏 

    பரிமளம் அம்மணி நலமா? 😋

    கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍

    ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎

    9 hours ago, குமாரசாமி said:

    தாங்கள் இப்போது வேறு எங்கேயோ புகுந்து விளையடுற மாதிரி தெரியுது..😂

    அப்படியா? 😮

    9 hours ago, nunavilan said:

    நல்வாழ்த்துக்கள் ,ராஜவன்னியன்.

    மிக்க நன்றி, நுணா 🙏

    6 hours ago, ஈழப்பிரியன் said:

    வாழ்த்துக்கள் வன்னியரே.

    மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    யாழ் உறவுகள் அனைவருக்கும் ...

    image.png

  5. முழுவதையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.
    படிக்கும்போது பல்வேறு உணர்வலைகள்..

    அதுவும் முல்லைத்தீவு நோக்கிய பயண விவரிப்பு மனசை மிகவும் அலைக்கழித்து கவலை கொள்ளச் செய்தது. மீண்டும் சுயநினைவிற்கு வர நேரமெடுத்தது. காலம் நல்ல தீர்வை வழங்கட்டும்.

    வலிகளை சொல்லிய அருமையான பயணக் கட்டுரைக்கு மிக்க நன்றி, திரு.ரஞ்சித் 😌🙏

    • Thanks 1
  6. மிக்க நன்றி.

    நானும் யோசித்து பதிகிறேன்.🙏

    ஒருவேளை, அது இனிய யாழ் உறவின் சந்திப்பாகவும் இருக்கலாம்.😍

    • Like 4
  7. நான் கடந்த இரண்டு வருடங்களாக ஐபோன் 13 ஐ உபயோகிக்றேன். இன்னமும் பாவிக்கும்போது தடுமாற்றம்தான்.வேறு கைப்பேசிக்கும் மாற இயலாது, ஏனெனில் இந்த ஐபோன் என் பிள்ளைகள், எனக்கு பரிசளித்தது.

    அவர்களிடம் பாவிப்பதில் சிரமத்தை சொன்னால் 'இவ்வளவு கணணி மென்பொருள்களை கையாள்கிறீர்கள், இது கூட புரிந்து பாவிக்க இயலாதா?' என சிரிக்கிறார்கள்.

    ஒன்னும் சொல்ல இயலாது.😟

  8. On 25/10/2023 at 21:41, suvy said:

    இது ஒரு நல்ல கருத்து.......பொதுவாக முன்பு 5 புள்ளிகள் ஒரு நாளைக்கு கொடுத்திருந்தார்கள்.......பின் அதை 8 ஆக்கினார்கள் ....அவற்றின் ஆயுள் ஒருநாள் மட்டுமே......நானும் அவற்றை வீணாக்க விரும்புவதில்லை......அதனால் நானும் பெரும்பாலும் அரசியல் திரிகள் தவிர்ந்த ஏனைய என்னை ஈர்க்கும்  திரிகளில் அவற்றை போட்டு விடுவேன்....... (இப்பவும் உங்களின் இந்தக் கருத்தைப் பார்ப்பதற்கு முன் உங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கான கருத்தில் ஒரு புள்ளி இட்டிருக்கிறேன் ......உங்களின் அதிஷ்டம் அப்போது என்னிடம் புள்ளியும் இருந்திருக்கிறது) அவ்வளவுதான்.........!  😂

    ஆனால் எல்லாவற்றையும் முழுமையாக  வாசித்தோ, பார்த்தோதான் நான் போடுவதுண்டு.......சும்மா எழுந்தமானத்துக்கு போடுவதில்லை......!  😁

    பெரிய மனுசர், பெரிய மனுசர்தாய்யா. அதுதான் அழகு.  😃

    ஆனாலும் அரசியல் கருத்துக்களை ஈயம் பூசினால் போல வைப்பதில் தவறில்லை.

    நீங்கள் கருத்து வைக்காமல், வெளியாட்களாகிய நாங்கள் கருத்து வைப்பதால் என்ன பயன்? 😌

    • Like 1
  9. 17 hours ago, nunavilan said:

    வணக்கம் ராஜவன்னியன். புதுவருட வாழ்த்துகள். மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

    மிக்க நன்றி நுணா.🙏
    தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂

    16 hours ago, பெருமாள் said:

    நீண்ட நாட்களின் பின் @ராசவன்னியன்அண்ணாவை  காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

    மிக்க நன்றி பெருமாள்.🙏
    யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂

    16 hours ago, ஈழப்பிரியன் said:

    வணக்கம் வன்னியர்.

    நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

    அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.

    மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏
    நலமா.? குடும்பத்தார் நலமா?🙂

    14 hours ago, குமாரசாமி said:

    maxresdefault.jpg

    என்ன வன்னியரே! கண்டு கனகாலம். சௌக்கியமா?  :cool:

    மிக்க நன்றி, கு.சா.🙏
    நலமா.?
    பரிமளம் அம்மணி நலமா?🙂

    • Like 1
  10. 32 minutes ago, நிலாமதி said:

    நீண்ட நாட்களின் பின் ராஜவன்னியரைக் காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

    மிக்க நன்றி, நிலாமதி அக்கா(?)..🙏 நீங்கள் நலமா? 🙂

    இங்கு எல்லோரும் நலமே.

    3 minutes ago, suvy said:

    உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி வன்னியர் நலந்தானே...........!  😁

    வணக்கம் சுவி..நலமா?  🙏

    பேசி ரொம்ப நாளாச்சி ஐயா..😌

    எத்தனை பேரப் பிள்ளைகள்? எல்லோரும் சுகமா?🙂

  11. 1 hour ago, விசுகு said:

    வணக்கம் மதுரையார். புது வருட வாழ்த்துகள். குடும்பத்தில் அனைவரும் நலமா?

    வணக்கம் விசு.. 🙏

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🙂
    இங்கு அனைவரும் நலம்..

    புதுவருடத்தில் யாழ் எப்படி இருக்கிறது என எட்டிப் பார்த்தேன் ஐயா.

    ஏன் திண்ணைக் கிணற்றை காணேல்ல..?🙂

    பெரியவர் பாஞ் அவர்களிடம் அலைப்பேசியில் பேசினேன். 'ஏன் யாழ் வருவதில்லை..?' என ஆதங்கப்பட்டார்.

    குதிச்சிட்டேன்.😌

    • Thanks 1
  12. Picture1.png

    வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்..

    பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯

     

    இறுதியாக இந்த பாடல் வரிகள்..

    "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே..
    காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில்
    பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை?
    மாமா மாமா மாமா..!"

    ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்..

    ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍

     

     

     

  13. Untitled.jpg

    ஒரு ஆலயம் ஆகும்..

     

    41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க..

    கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார்.

    முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..!

    “என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு.

    “எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க..

    அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு..

    அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்..

    அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க..

    ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை..

    இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க..

    “என்ன கண்டக்டர் தம்பி, செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையே..?”ன்னு கேட்டாங்க..

    அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே “உங்க செயின் 1 நிமிஷத்துல கிடைக்க போகுது..”ன்னு புதிர் போட்டார்..

    அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல..

    அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் ‘டபுள் விசில்’ கொடுத்தார்..

    பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு...

    அந்த சமயம் பார்த்து ஒரு குரல்..!

    “யோவ் கண்டக்டர்..! பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுதுய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்..! பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யா..”ன்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல்..!

    கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு..

    “அம்மா உங்க செயின் கிடைச்சாச்சி..”ன்னு சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு.

    அவன்கிட்ட தான் செயின் இருந்தது..!

    அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு, அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர்.

    இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட..!

    “அதெப்படி அவன் திருடன்னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்க..?”ன்னு கேட்டாங்க..

    அதுக்கு அந்த கண்டக்டர் “அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்தது..!”ன்னு சொன்னாரு.

    “அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேரு..?”ன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க.

    கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு.

    " ****** "

    (அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலக பேருந்து நிறுத்தம் 😷😎)

    படத்திலிருந்து நீங்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்..!

     

    - டிவிட்டரில் ரசித்தது

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.