Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. இதை 'சவ்வு மிட்டாய்' என எம் கிராமத்தில் சொல்லுவோம். இதை தாங்கி வரும் தடியில் மேலே ஒரு பொம்மை கைதட்டுவது போல இருக்கும். அதன் கைகளின் இயக்கம் அந்த தடியின் நடுவே வரும் கொச்சைக் கயிறு மூலம் இணைக்கப்பட்டு இந்த சவ்வு மிட்டாய் விற்பவர் அந்த பொம்மையை இயக்கிக்கொண்டே " சவ்வு மிட்டாய்...." என கூவி விற்று எம் போன்ற சிறுவர்களை அலைக்கழித்தது இன்றும் நினைவில், நாவில் அந்த இனிமை பசுமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணங்களில் சவ்வு மிட்டய் விற்பவர், அந்த சவ்வு மிட்டாய்யால் கைகளில் கடிகாரம், மீசை என எம்மேல் ஒட்டியது நினைவிற்கு வருகிறது. பிட்சா, பர்கர் என மாறிவிட்ட காலத்தில் இவர்களின் பிரசன்னம் இன்றும் கிராமங்களில் இருக்கிறதா என தெரியவில்லை. வெளிநாட்டிற்கு, நகரத்திற்கு புலம்பெயர்ந்த பின் இழக்கும் அன்றாட வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களின் இழப்புகளை கூட்டினால், இனியும் திரும்பாத அவ்வாழ்க்கையை எண்ணி மனம் சற்றே வருத்தமுடன் ஏங்கும். பல வருடங்களாக மூளையின் ஒரு பகுதியில் தூங்கியிருந்த சவ்வு மிட்டாய் சுவையை மீண்டும் நினைவிற்கு கொணர்ந்த இப்பதிப்பாளருக்கு நன்றி. "சவ்வு மிட்டாய்......!"
  2. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  3. செய்யும் தொழிலே தெய்வம்..! அதில் திறமைதான் நமது செல்வம்..!!
  4. பகலவனுக்கும் புலவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  5. சிலர் இலங்கை சிங்களவனுக்கு கொடுப்பது மாதிரி இங்கே 'பல்பு' கொடுக்க முனைந்தால் சிக்கல்தானே? ரோமாபுரி சென்றால் ரோமன் மாதிரிதான் நடக்கோணும் கண்டியளோ? கன்னியாகுமரியென்றால் திற்பரப்பு, மார்த்தாண்டம் பக்கம் குடியேறுங்கள். மிக அருமையான இயற்கை சூழல்.. என்ன, கொஞ்ச நாளில் நீங்களும் பாதி 'மல்லு'வாகிவிடுவீர்கள்..! கடைசியாக இணைத்த படத்திலுள்ள இடத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. ('ஆண்பாவம்' படத்தில் பாண்டியனும், சீதாவும் அடிக்கடி சந்திக்கும் படித்துறை..? - "யப்பா...சூப்பரு..! "ன்னு கூப்பிடுவாரே பாண்டியன்! ) திரி தலைப்பிலிருந்து விலகுவதால் இத்தால் நிறுத்துகிறேன்.
  6. இன்னும் 5 வருடமா? சுற்றுலாவா..செட்டிலாகவா? அதற்குள் அரசியல்வாதிகள் என்னென்ன கூத்துகளை நிகழ்த்தப் போகிறார்களோ? இருவருக்கும் வாழ்த்துக்களும் தமிழ் நாட்டின் இனிய வரவேற்பும்... கூடவே முறுக்கித் திரியும் சில ஈழத்தமிழர்களுக்கும் சொல்லி வையுங்கள்..
  7. மயக்கமா...? குழப்பமா...? "பீச்சா... வேளச்சேரியா...? எந்தப் பக்கம் போவது...? ம்ம்..ம்மா...?" - சென்னை பறக்கும் ரயில் நிலையத்தில் ' திருவாளர். காமதேனு ' அவர்கள்
  8. இணைய காத்திருக்கும் 'சென்னை பறக்கும் ரயில் பாலம்' ( @ ஆதம்பாக்கம்) காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி.. நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி.. மெட்ரோ ரயிலுடன் சேர்ந்திருந்தால் நிம்மதி ஆகுமடி..!
  9. கருத்தெழுதிய தமிழ்சிறி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி! Update: சென்னை பறக்கும் ரயில் திட்டப் பணியில், வேளச்சேரி - பரங்கிமலை இறுதி இணைப்பிலிருந்த தடங்கல் நீங்க வழி பிறந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையிலிருந்த நில ஆர்ஜித வழக்கில் நேற்று(11-04-2014) அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் தில்லி உச்சநீதி மன்றத்தில் இடைக்கால தடை வாங்கும் வரை காத்திருக்குமா? என்பது இனி வரும் காலங்களில் தெரியும். நன்றி: தினமலர்
  10. புதிதாக கட்டப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலம், படுவன்கரை பாலம், கல்லடி பாலம் பற்றி எழுதலாம் தானே சிறி?
  11. கரிசனனையோடு கருத்து தெரிவித்து ஊக்கமூட்டிய டங்கு, தூயவன், சுவி மற்றும் நாந்தான் ஆகியோருக்கு நன்றி. இதே போல் ஈழத்திலும் ஏதேனும் திட்டங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தால் பதியவும்.
  12. மேலேயுள்ள வரைபடத்தில் வெள்ளை நிற வழித்தடத்தை(MRTS) பார்த்தால் புரியும். முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையம், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின்(MRTS) வழித்தடத்தில் வரும் புதிய ரயில் நிலையமாகும். இது திருமயிலை (மயிலாப்பூர்) ரயில் நிலையத்திற்கும், லைட் ஹவுஸ் ரயில் நிலையத்திற்கும் இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையம். இது மின்சார ரயில் பாதையாகும். சென்னை சென்ரலிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கோவளம் வரை அக்காலத்தில் ஆங்கிலேயர்களால் படகுப் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? அக்கால்வாயில் படகு சவாரி மூலம் மக்களும்,, காய்கறி சணல் போன்றவைகளும் எடுத்துச்செல்லப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா? சுதந்திரம் பெற்ற பின் படிப்படியாக வந்த அரசுகள் எவையும் தொலை நோக்கில் நகரின் வளர்ச்சிக்கேற்றவாறு இருக்கும் இயற்கை சூழலை பாதுகாக்கவில்லை. விளைவு? இன்று பக்கிங்காம் கால்வாய் கழிவு நீருக்கான சாக்கடையாக சிதைந்து உருமாறிவிட்டது.. அக்கால்வாய் தான் நீங்கள் குறிப்பிடும் முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையத்தை ஒட்டிச் செல்கிறது. இப்பொழுது கூவத்தின் நடுவே தூண்கள் என காரணம் கூறி சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால திட்டத்தை தடுக்கும் அரசு, அப்பொழுது சென்னை பறக்கும் சாலை ரயில் திட்டத்தில் பல இடங்களில் பக்கிங்காம் கால்வாய் நடுவே தூண்கள் எழுப்பியபோது கள்ள மெளனம் சாதித்தன என்பது வேடிக்கை. சென்னை பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை கடற்கரையிலிருந்து வேளைச்சேரி வரை முதல் இரண்டு திட்டங்களாக நிறைவேற்றப்பட்டது. அதன் விரிவாக்கமாக (Phase III) வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை மூன்றாம் கட்ட திட்டம் நிறைவேற்றுகையில் வழக்கம் போலவே நில ஆர்ஜித வழக்குகளால் இத்திட்டம் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே 500 மீட்டர் தூரத்தில் நிறைவேறாமல் தொங்கி நிற்கிறது. டிஸ்கி: பரவாயில்லையே.., யாழ் களத்திலும் சில சீவன்கள் அக்கறையாக தமிழ் நாட்டின் வளர்ச்சி பற்றியும், திட்டங்கள் பற்றியும் கேட்கிறார்கள். நன்றி! இத்திரியை வாசிக்கும் அனைவருக்கும் நன்றி.
  13. Update: 'கோயம்பேடு - எழும்பூர்' இடையேயான சுரங்கப் பாதையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் இருவழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, வரும் அக்டோபர் மாத இறுதியில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது. அதுபோல கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் அடுத்த ஆண்டு இறுதியில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார். கோயம்பேடு - எழும்பூர் இடையே நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய 7 மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. சுரங்கப் பாதையைப் பொருத்தவரை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக தனித்தனியாக இரண்டு டன்னல்கள் (Tunnels) அமைக்கப்படுகின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில், எழும்பூர் நேரு பூங்கா இடையேயும், ஷெனாய் நகர் அண்ணாநகர் டவர் இடையேயும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது. இங்கு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராட்சத டன்னல் போரிங் மிஷின்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இப்போது இரண்டு டன்னல் போரிங் மிஷின்கள் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஷெனாய் நகரை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது. வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மற்றொரு டன்னல் போரிங் மிஷின் நேரு பார்க்கை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது.அதுபோல அண்ணாநகர் டவரில் இருந்து திருமங்கலத்தை நோக்கி இரண்டு டன்னல் போரிங் மிஷின்கள் மே முதல்வாரத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்படும். அதையடுத்து 4 மாதங்களில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு டிசம்பரில் கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தின் மற்றொரு பகுதியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் தரையில் இருந்து 100 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் என்பதாலும், இரண்டு அடுக்கு சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்படுவதாலும், மொத்தம் 100 அடி ஆழத்தில் 25 அடிக்கு பாறைகள் இருப்பதாலும் இந்த ரயில் நிலையம் அமைப்பது சவாலான பணியாக இருக்கிறது. இருப்பினும், 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5893475.ece
  14. ஆலந்தூர் - கத்திப்பாரா சந்திப்பு தாண்டியவுடன் பிரியும் கிண்டி நோக்கிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ வழித் தடத்தில், கிண்டி குதிரைப் பந்தய மைதானமருகே குறுக்கே வரும் மின்சார இருப்புப் பாதைக்கு மேலாக சுமார் 100 மீட்டர் (Span) அகல மேம்பாலம், கடின இரும்புத்தகடுகளால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப் படுகிறது. இந்த இரும்பு மேம்பாலம் அமைந்தவுடன் அதன் மீதி சீமந்து பலகைகள் (Concrete slabs) மேவப்பட்டு தண்டவாளம் அமைக்கப்படும். அதன் படங்களை கீழே இணைக்கிறேன். படங்கள் உதவி: தினகரன்.
  15. பெருச்சாலி ஒன்று சக உறவைத்தேடி கோபலபுரம் நோக்கி ஓடுகிறது!
  16. கருத்துக்களுக்கு நன்றி சுவி, தூயவன் மற்றும் நான்தான். மேலதிக திட்ட முன்னேற்ற படங்கள்: சென்னை நுழைவாயிலுள்ள முக்கியமான "கத்திப்பாரா" சந்திப்பு மேம்பாலத்தின் மீது இடையூறு இல்லா போக்குவரத்திற்காக சாலையின் இருபுறமும் சமநிலை தொங்குபால தூண்கள் (Balanced Cantilever) அமைக்கப்பட்டு அவைகளை இணைக்கும் பணியும் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளது. இரு தூண்களுக்கும் இடையான தூரம் 75 மீட்டர்களாகும். சாதாரணமாக இத்தகைய வடிவமைப்பு பாலங்கள் ஆழமான குறுகிய நதியோடும் பள்ளத்தாக்குகளின் இரு கரைகளை இணைக்கும் இடங்களில் வடிமைப்பு பொறியாளர்கள் திட்டமிட்டு கட்டுவார்கள். இப்பாலத்தின் பலவேறு திட்ட நிலைகளின் முன்னேற்ற படங்களை கீழே காணலாம். (ஆங்கிலத்தில் ஃப்ரன்ச் கிஸ் - French Kiss என்று சொல்வார்களே அந்த மாதிரியான சந்திப்பு இந்த இரு தூண்களின் சங்கமம்) Source: CMRL FB.
  17. ஆதம்பாக்கம் அருகே தொங்கி நிற்கும் பறக்கும் ரயில் திட்ட வழித்தடம் சென்னை பீச் - ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் திட்ட வழித்தடம். பரங்கிமலை ரயில் நிலையத்தோடு இணைக்கப்டவேண்டிய சென்னை பீச் - ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் சாலைத் திட்டம் வேளச்சேரி வரை முடிந்துள்ளது. அதன் விரிவாக்கமாக வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு மேம்பாலம் வழியாக ரயில் பாதை அமைக்கும் பணி பல வருடங்களாக நிலம் கையகப்படுத்தும் பொழுது ஏற்பட்ட நில ஆர்ஜித வழக்குகளால், திட்டம் பரங்கிமலை ரயில் நிலையத்தருகே 500 மிட்டர் தூரத்தில் தொங்கி முடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பரங்கிமலையோடு இணைந்தவுடன் பறக்கும் ரயில் பாதையும் அதோடு இணைந்து ஒருங்கிணைந்த ரயில் நிலையமாக பரங்கிமலை மாறும்.
  18. மோனோ ரயில் திட்டம், இன்னமும் திட்ட வரைவிற்கான ஒப்பந்தப்புள்ளி (RFP) கோரப்படும் நிலையிலேயே இருகின்றது. இத்திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (Madras Transport Corporation) செயல்படுத்தும் பொறுப்பை கொண்டுள்ளது. தற்பொழுது தேர்தல் நேரமாதலால் தேர்தல் ஆணைய விதிப்படி புதிய திட்டங்கள் தேர்தல் முடியும் வரை கிடப்பில் போடப்பட வேண்டும். கீழ்க்கண்ட தோராய வழித்தடங்கள் மோனோ ரயில் திட்டத்தால் செயல்படுத்தப்படும். இதுவரை மோனோ ரயில் திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்குமான வெளிப்படியான தொடர்புகள், சந்திக்கும் ரயில் நிலையங்கள் பற்றி தெளிவான அறிக்கை இல்லை. அனைத்தும் வரைவு நிலையிலேயே (Drafting stage) இருக்கின்றன. சென்னை மோனோ ரயில் திட்ட வரைவு வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் அங்கீகரிப்பட்ட செயல் வழித்தடம். சென்னையின் மின்சார ரயில்களின் வழித்தடங்களும்(EMU), மெட்ரோ ரயில்(Metro) வழித்தடங்களும் இரு புள்ளிகளில் சந்திக்கின்றன. ஒன்று - சென்னை சென்ட்ரல் மற்றொன்று - பரங்கிமலை (St.Thomas Mount) சென்னை சென்ட்ரலுக்கு எதிர்புறமுள்ள பல கடைகள் பலகட்ட வழக்கிற்குப்பின் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி இதற்காக இடிக்கப்பட்டு, அங்கே இரு முனைகளுக்கும் இணைப்பு பாலம் அமையப்போகிறது. (UG and skywalk platforms between existing Chennai Central station and Central Metro station) பரங்கிமலை ரயில் நிலையம் மிக முக்கியமான ஒருங்கிணைந்த நிலையமாகப் போகிறது. இங்கே மூன்று அடுக்கு மாடி (Three levels) நடைபாதை மேடைகள் அமைகின்றன.. தரை தளத்தில் சென்னை மின்சார மற்றும் சாதாரண ரயில் போகுவரத்து இருப்பு பாதைகள். முதல் தளத்தில் சென்னை பறக்கும் ரயில் பாதை (Madras Rapid Transit System - MRTS) நடைமேடை. இது சென்னை பீச் ரயில் நிலையம் தொடங்கி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலையில் இணையும் வழித்தடம். இரண்டாம் தளத்தில் சென்னை மெட்ரோ ரயில் (Metro Rail) நடைமேடை அமைகிறது. Reason for edit: எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.