Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7324
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. Update: சென்னை 'மெட்ரோ ரயில்' திட்டம் - இரண்டு (Phase-II) அடுத்து வரவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில்(Phase II), மொத்தம் 76 கி.மீ. தூரத்திற்கு அனைத்து வழித்தடங்களும் பூமிக்கு அடியில் சுரங்க வழிப்பாதையாகவே அமையுமெனெ தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுவரும் திட்டத்தில் (Phase I), அனைத்து பிரதான சாலைகளான அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலைகளின் வழியில் ரயிலுக்கான தடங்கள் அமைக்கப்பட்டுவிட்டதால் மேம்பாலம்(viaduct) வழியாக சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களை இனி நகரினுள் அமைய இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேம்பால முறையில் வழித்தடங்கள் அமைக்க ஒரு கி.மீ. க்கு ரு.150 கோடியும், சுரங்க வழிப்பாதை மூலம் வழித்தடம் அமைக்க ஒரு கி.மீ க்கு ரு.500 கோடியும் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு சென்ற சனவரி மாதம் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டிற்கான(Phase II) விரிவான திட்ட வரைவு (Detailed Project Report - DPR) தயாரிக்க முடிவெடுத்தது. தற்பொழுது மூன்று வழிதடங்கள் பரிசீலனையில் உள்ளன. அவை, மாதவரம் - லைட்ஹவுஸ் (சாந்தோம்) - 17 கி.மீ கோயம்பேடு - ஈஞ்சம்பாக்கம் (கிழக்கு கடற்கரை சாலை) - 27 கி.மீ மாதவரம் - பெரும்பாக்கம் - 32 கி.மீ. இவற்றிற்கு அரசு ஒப்புதலளித்தால் மேற்கொண்டு விரிவான திட்ட வரைவுப்பணிக்கான (DPR) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்றும், அத்திட்டத்தை செயல்படுத்த 10 வருடங்கள் ஆகுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரு.36,000 கோடிகளாக இருக்கும். - 'செய்தி மூலம் 'இந்து' http://www.thehindu.com/news/cities/chennai/no-elevated-corridor-in-metro-phaseii/article5761680.ece .
  2. Update: 07/03/2014. சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு டெல்லி: சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு மனு மீது வரும் மார்ச் 11ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=82459 நல்ல முடிவு...! .
  3. தில்லி "உச்சநீதிமன்றம்"தான் இறுதியான இடம். இதிலும் இரண்டுவகைகள் உள்ளன. ஃபுல் பெஞ்ச் (ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு) ஆஃப் பெஞ்ச் (மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு) குவார்டர் கிடையாது...! இதில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இல்லையெனில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு விதிகளுட்பட்டு மேல்முறையீடு செய்யலாம். வழக்கின் தன்மையை பொறுத்து அவை விசாரணக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் வேறுபடும். ஆகையால் இம்மாதிரி அரசாங்கம் சார்ந்த பொதுநலன் வழக்குகளை ஜவ்வாக வாய்தா கேட்டே இழுக்கலாம். முதலில் ஆஃப் பெஞ்ச் மூலம் விசாரிக்க சில வருடங்கள், சாதகமாக இல்லையெனில் ஃபுல் பெஞ்சிற்கு மேல் முறையீடு செய்து மறுபடியும் வழக்கை இழுக்கலாம். உண்மைதான். அரசாங்கம் ஒன்று நினைத்துவிட்டால் ஜவ்வோ ஜவ்வாக பல பொறிமுறைகளில் நடைமுறைப்படுத்தாமல் இழுக்க முடியும்.
  4. ஒப்பந்தகாரர் நேற்றுதான் இரண்டு வருடமாக நின்று போன வேலையை தூசி தட்டி மறுபடியும் தொடங்கியுள்ளார். இன்று மாண்புமிகு அம்மா அவர்களின் அதிகாரிகள், தில்லி உச்ச நீதிமன்றத்தில் மறுபடியும் இத்திட்டத்தை முடக்கும் விதமாக தடை கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். Work on elevated corridor resumes... Chennai: Work to construct the 19-km-long Chennai Port-Maduravoyal elevated expressway resumed on Monday. The concessionaire, Soma Enterprises Ltd., began clearing the work site at Spurtank Road in Chetpet. This followed a Madras High Court order giving the go-ahead for the project, which had been put on hold by an order of the Public Works Department. National Highways Authority of India (NHAI) chief general manager (technical) and regional officer V. Chinna Reddy said the Rs. 1,815-crore project would take another two years to be completed. “The concessionaire has been instructed to mobilize men and materials and speed up the work. Till the work was stopped in 2012, we were able to complete only 15 per cent of the civil works. The third party consultant to oversee the works has also been asked to ensure that works progress on time,” he said. NHAI sources said it was waiting for the State to hand over the remaining land required for the project and to clear encroachments along the Cooum river. “As per the assurance given to the High Court, we will ensure that there is no hindrance to the water flow in the Cooum during and after construction.” On completion, the expressway will take off from gate 10 of the Chennai Port and end on Chennai-Bangalore Highway (NH 4). It will have two entry ramps on Sivananda Salai and College Road, and two exit ramps on Kamarajar Salai and Spurtank Road. R. Sivanandam, a resident of Nerkundram, expressed a hope that the work would indeed be speeded up. “Even though it might take just four hours for someone to drive down from Bangalore, it takes over an hour and half to reach Parry’s Corner due to traffic. This highway will help reduce congestion on Poonamallee High Road,” he said. http://www.thehindu.com/news/cities/chennai/work-on-elevated-corridor-resumes/article5747376.ece .
  5. Update: மதுரவாயல் பறக்கும் சாலை : தடை கோரி தமிழக அரசு மேல்முறையீடு..! சென்னையை அடுத்த மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி, அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. http://www.dinamani.com/latest_news/2014/03/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-/article2089952.ece
  6. Good Arch dam design. (The arch dam is designed so that the force of the water against it, known as hydrostatic pressure, presses against the arch, compressing and strengthening the structure as it pushes into its foundation or abutments. An arch dam is most suitable for narrow gorges or canyons with steep walls of stable rock to support the structure and stresses.[2] Since they are thinner than any other dam type, they require much less construction material, making them economical and practical in remote areas.- Wickypedia)
  7. Service Temporarily Unavailable The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later. Web Server at yarl.com இன்னும் இதே பிழை செய்தி வருகிறது. அதனால் யாழ் களத்தை சில நாட்களாக பார்வையிட முடியவில்லை. 'Cookies' அனைத்தையும் அழித்தும், 'CCleaner' சோப்பு போட்டும் இதே நிலைதான்.
  8. கொள்ளைக்காரனும் வேண்டாம், அடங்காப்பிடாரிகளும் வேண்டாம் விவேகமான தமிழுணர்வுள்ள தலைவரே வேண்டுமென விரும்பினால், மக்கள் மாக்களாவே இருக்க விரும்புகின்றனர். வே(தே)சியம் என்ற பெயரில் உரிமைகளும், தமிழர் நிலங்களும் பறிபோய்கொண்டிருக்கின்றன.
  9. மிக்க நன்றி நெடுக்ஸ். இப்பொழுது அலுவலகத்தில் யாழ் இணையம் சரியாக வருகிறது. மாலை வீட்டில் சென்று சரிபார்க்க வேண்டும். உடனடி பதிலுக்கும், நடவடிக்கைகளுக்கும், நன்றி நிழலி.
  10. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், ஆனால் தற்போதைய தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மறுபடியும் முட்டுக்கட்டை போடும்விதமாக உச்சநீதிமன்றத்தில் மறுபடியும் இடைக்காலத் தடை வாங்க ஒரு குழுவை அனுப்பியுள்ளதாம். தமிழ்நாடு உருப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு? சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்தில் திருப்பம்! 'சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை தொடர்பான வழக்கில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI), சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' (Caveat) மனுத் தாக்கல் செய்துள்ளது. ரூ.1,816 கோடியில்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 1,816 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைப்பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது. கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், பணிகள் மேற்கொள்வதாக, தமிழக அரசு தடை விதித்தால், இரண்டு ஆண்டுகளாக பணிகள் முடங்கின. தமிழக அரசு விதித்த தடையை, கடந்த சில தினங்களுக்கு முன் நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், 'பணிகளைத் தொடரலாம்; மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 'இந்த விஷயத்தில், மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யக்கூடாது' என, பல்வேறு வர்த்தக அமைப்புகள், பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தின. முடங்கிய பணிகள் மீண்டும் தொடங்கும் என, மக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை கூடுதல் செயலர் விஜயகுமார் தலைமையிலான குழு, டில்லியில் முகாமிட்டுள்ளது. இதை அறிந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில அரசு மேல்முறையீடு செய்யும் முன், சுப்ரீம் கோர்ட்டில், 'கேவியட்' மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தடை விதிக்க வாய்ப்புள்ளது: சென்னை உயர் நீதிமன்றம், பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முயற்சித்து வருகிறது. மேல் முறையீட்டை ஏற்று, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, மேல் முறையீடு செய்தால், எதிர் தரப்பான எங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளோம். சாலைப்பணியை எந்த சிக்கலும் இன்றி மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார். http://www.dinamalar.com/news_detail.asp?id=923211
  11. Service Temporarily Unavailable The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later. Web Server at yarl.com தற்பொழுது மேலே குறிப்பிட்ட மாதிரி பிழை செய்தி வருகிறது. நானும் பொஸ்தகத்தை பொரட்டிப் பார்த்து என்ன காரணமென தேடியும் ஒன்னும் கிடைக்கேல்ல!
  12. இன்னும் யாழ் களம் சரியாகவில்லை. அதே பிழை செய்தியே தொடர்கிறது... ஏதோ டேட்டாபேஸ் கனெக்ஸன் பிரச்சனை போல கிடக்கு... எப்போ தீருமோ?
  13. யாழ்களம் இங்கே வேலை செய்யவில்லை.. களத்தை திறந்தால் இந்த மாதிரி பிழை செய்திதான் வருகிறது! www.yarl.com Driver Error There appears to be an error with the database. இது எனக்கு மட்டுமா? இல்லை மற்ற உறவுகளுக்கும் இந்த மாதிரி பிரச்சனை உள்ளதா?
  14. துபை, அல் ரசீதியாவில் உள்ள அதிநவீன துபை 'மெட்ரோ பணிமனை'யில் ரயில் பெட்டிகள் தீவிர சோதனைக்கும், பராமரிப்பு பணிக்கும் உட்படுத்தப்பட்டபொழுது எடுத்த படம்.
  15. அவனே நல்ல மேய்ப்பன் என்கிறீர்களா? தொழிலில் உண்மையும், சிரத்தையும், ஒரே இனத்திற்குள் ஒற்றுமையும் இல்லாவிடில், நாம் மந்தைகள்தான், அவர்கள் மேய்ப்பர்கள்தான்.
  16. இது துபையிலுள்ள மெட்ரோ நிலையதின் படம். அனைத்து ரயில் நிலையங்களும் அச்சடித்தாற்போல் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை.
  17. இந்த மாதிரிதான் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும். ஒரே மாதியாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒருவித வடிவமைப்பில் இருக்குமாம். Alandur Station Model St.Thomas Mount Integrated Station. மேற்கொண்டு படங்களை தேடி, பின்னர் இணைக்கிறேன்.
  18. பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு நிறுவனங்களே (JV). அனைத்து ரயில் நிலையங்களும் கண்ணாடி தட்டுகளால் மூடப்பட்ட நவீன தோற்றம் கொண்டவைதான். இந்த விடயத்தில் தமிழ்நாட்டு கரு சார்ந்த வடிவமைப்பை செய்யவில்லை. வேலையிடத்தில் தொழிளாலர்களின் பாதுகாப்பு விடயத்தில் மேலைநாடுகளின் அளவிற்கு கவனம் செலுத்தினாலும், தொழிளாலர்கள் அதை சிரத்தையாக பின்பற்ற வேண்டுமே? சமீபத்தில் சைதாப்பேட்டையில் ராட்சத கிரேன் பளு தூக்கும்பொழுது நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஒரு தொழிலாளி இறந்தும், மற்றொருவருக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டும் விட்டது. கிரேன் ஆப்பரேட்டரின் கவனக்குறைவால் இது நிகழ்ந்ததாக செய்தி வந்துள்ளது. வத வதவென சனத்தொகை இருந்தால் மனிதனுக்கு மதிப்பிருக்காது தானே?
  19. பல்வேறு ஒப்பத்தங்களின்(Contracts) விபரம்: இந்த திட்டத்தின் பல்வேறு பகுதிகள்(Modules) தனித்தனி பொதிகளாக(Pakages) வகைப்படுத்தப்பட்டு ஒப்பந்தங்கள் பலவேறு நிறுவனகளுடன் போடப்பட்டுள்ளது. இதில் முக்கிய விடயம் என்னவெனில் எந்தவொரு நிறுவனமும் திட்டவேலைகளை செயல்படுத்தலில் குறிப்பிட்ட காலதிற்குள் போதிய முன்னேற்றம் காண்பிக்கவில்லையெனில், அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு வேறு புதிய நிறுவனத்திற்கு வழக்கப்படும். அவ்வாறு சிலமுறை இத்திட்டத்திலும் நடந்துள்ளது. இத்திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தேயாகவேண்டும். சில இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு நிறுவனமாக( Joint Venture - JV) பதிவு செய்து ஒப்பந்தகளும் பெற்றுள்ளன. இனி ஒப்பந்தகாரர்களை பார்ப்போமா? 1. M/s. Soma Enterprise Limited - Design and construction of elevated viaduct from Koyambedu to Ashok Nagar.(Contract: Rs. 199.20 Crores) 2. M/s. Larsen & Toubro Limited (L&T) - Design and construction of elevated viaduct including viaduct at stations from Ashok Nagar to St. Thomas Mount (Contract:Rs. 145.03 Crores) 3. M/s. Larsen & Toubro Limited (L&T) - Design and construction of elevated viaduct including viaduct at stations from Saidapet to Officers Training Academy (OTA) (Contract:s. 173.31 Cr.) 4. M/s Tantia Construction Limited - Prefilling of Koyambedu Depot (Contract:Rs. 20.52 Crores) 5. M/s Consolidated Construction Consortium Limited (CCCL) - Design and construction of five elevated stations - Koyambedu, CMBT, Arumbakkam, Vadapalani and Ashok Nagar/K.K.Nagar (Contract:Rs. 139.54 Crores) 6. M/s Consolidated Construction Consortium Limited (CCCL) - Design and construction of five elevated stations - Little Mount, Guindy, Alandur, OTA and SIDCO (Contract: Rs. 94.99 Crores) 7. M/s Alstom Transport S.A & Alstom Projects India Ltd Consortium - Design, Manufacture, Supply, Testing and Commissioning of Electric Multiple Units (EMUs) and Training of Personnel (Contract: Rs. 1471.39 Crores) 8. M/s. Larsen & Toubro Limited (L&T) - Design and construction of Koyambedu Depot and Supply of Depot Minor Machines (Contract: Rs. 198.10 Crores) 9. M/S Transtonnelstroy-Afcons JV - Design and construction of underground stations at Washermanpet, Mannadi, High Court, Chennai Central and Egmore and Associated Tunnels (Contract: Rs. 1566.81 Crores) 10. M/S Metro Tunnelling Chennai (L&T - SUCG - JV) - Design and construction of underground stations at Nehru Park, Kilpauk Medical College and Pachaiappa's College and Associated Tunnels (Contract : Rs. 930.80 Crores) 11. M/S Transtonnelstroy-Afcons JV (Design and construction of underground stations at Shenoy Nagar, Anna Nagar East, Anna Nagar Tower and Thirumangalam and Associated Tunnels. (Contract: Rs. 1031.00 Crores) 12. M/S Consolidated Construction Consortium Limited (CCCL) - Design and construction of an elevated station at St.Thomas Mount.(Contract: Rs. 78.61 Crores) 13. M/S. Larsen & Toubro Limited, Alstom Transport, SA and Alstom Projects India Ltd.- JV - Design and construction of Track Work in Viaduct, Tunnel, Underground and depot in Corridor I & II (Contract:Rs. 449.23 Crores) 14. M/S Johnson Lifts Pvt. Limited and SJEC Corporation - JV - Lifts and Escalators (Design and Build (Contract:Rs. 197.60 Crores) 15. M/S Siemens, AG and Siemens India Limited Consortium - Traction/Substations (Power Supply and Overhead Equipment, Design and Build (Contract:Rs. 304.43 Crores) 16. M/S Gammon-OJSC Mosmetrostroy JV - Design and construction of Underground Stations at Government Estate, LIC Building and Thousand Lights and Associated Tunnels (Contract: Rs. 932.88 Crores) 17. M/S Gammon-OJSC Mosmetrostroy JV - Design and construction of Underground Stations at Gemini, Teynampet, Chamiers Road and Saidapet and Associated Tunnels (Contract: Rs. 1014.42 Crores) 18. M/S Siemens Aktiengesellschaft, Germany and Siemens Limited India Consortium - Signalling, Platform Screen doors and Tele-communications(Design and Build (Contract: Rs. 627.13 Crores) 19. M/S The Nippon Signal Co Ltd - Automatic Fare Collection (AFC) System - Design and Build (Contract:Rs. 109.88 Crores) 20. M/S Emirates Trading Agency LLC, Dubai and ETA Engineering Private Limited, India Consortium - Tunnel Ventilation System - Design and Build (Contract:Rs. 241.83 Crores) 21. M/S Voltas Ltd - Underground Stations Air Conditioning System (Design and Build) (Contract: Rs. 196.20 Crores) 22. M/S. Lanco Infratech Limited - Design and Construction of Elevated Station at Meenambakkam, Architectural Builders Works and Finishes(ABWF) and Building Services Works(BS) for Chennai Airport Station, Viaducts, Ramps and Cut - Cover Tunnel between OTA Station and Chennai Airport Station. (Contract: Rs. 178.94 Crores) 23. M/S Arthur D Little Limited - Independent Safety Assesment of Signalling & Train Control System & Platfform Screen Doors Systems (Contract: s. 3.33 Crores) 24. M/S SGS India Pvt Ltd - Inspection And Testing Of Rails at Tata Steels ( UK & FRANCE ) (Contract: Rs. 0.12 Crores) 25. The New India Assurance Company Limited, Chennai - Commercial General Liability Insurance - Sum Assured Rs.100 Crores (Contract: Rs. 0.41 Crores) 26. M/s Allied Digital Services Limited, Chennai. - AMC for Computers in CMRL. (Contract: Rs. 3.83 Lakhs) 27. M/s Simplex Infrastructure Limited, Chennai. - Piling and Associated works for construction of Metro Head Quarters Building and Other Metro Amenities at Anna Salai, Nandanam, Chennai.(Contract: Rs.24.59 Crores) 28. M/s ITD Cementation India Limited, Mumbai - Construction of Balance Works of Ramps, Cut & Cover Tunnels U Sections, Box Sections, through the air funnel area between OTA station and Meenambakkam Station including surface water drain alongside ramps and Cut & Cover Tunnels of Chennai Metro Rail Project, Phase I (Contract: Rs. 64.86 Crores) 29. M/s Thiruchitambalam Projects Limited, Chennai - Construction of 26 shops including civil, water supply & sanitary and Electrical works in Vegetable Market at Koyambedu (Contract: Rs. 3.2 Crores) 30. M/s URC Construction (P) Limited, Bangalore - Construction of Balance Works and services necessary for the complete Meenambakkam Station, Architectural finishes and Building Services Works for Chennai Airport Station MEP Works for Viaduct, Cut and Cover Tunnels and Stations of Chennai Metro Rail Project Phase I (Contract: Rs. 82.19 Crores) 31. M/s MV Power Consultants and Engineers (P) Limited, Chennai - Arrangement of Power supply to the Advertisement Boards on Piers and Portals from Koyambedu to Ashok Nagar (Package - 1) (Contract: Rs. 60.47 Lakhs) Source: http://chennaimetrorail.gov.in/tenderaward.php
  20. அண்மையில் பச்சைப்புள்ளைகள் மற்றும் பச்சைப்புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  21. உங்கள் ஆசையை கெடுப்பானேன்? இதோ திட்டப்பணியிடத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்... Thanks: Indian Express.
  22. 100 ஆண்டுகளை நிறைவு செய்த பாம்பன் ரயில் பாலம்! ராமேஸ்வரம்-பாம்பன் பகுதியை இணைக்கும் வகையில் கடலில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாலம் திங்கள் கிழமையுடன் (பிப். 24) 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாவை இணைக்கும் பகுதி பாம்பன் கடலாகும். மண்டபம் நிலப்பரப்பு பகுதியையும், பாம்பன் கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ள ரயில் பால கட்டுமானப் பணிகள் 1902 ஆம் ஆண்டு துவங்கின. கடலில் ரசாயன கலவைகளோடு 144 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 மீட்டர் நீளத்தில் 1000 டன் இரும்பால் அமைந்துள்ள தூக்குப் பாலத்தை தாங்கும் அளவுக்கு கடலில் 124 அடி ஆழத்திலிருந்து இரண்டு பில்லர் தூண்கள் கட்டப்பட்டு, அதன் மேல் இரண்டு இரும்பு கிரில் லீப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாலம் கட்டும் பணி 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது. ஏறத்தாழ 10 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடைபெற்றது. அனைத்து பணிகளும் முடிந்து 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மண்டபம் மற்றும் பாம்பன் பகுதி வழியாக தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த பாலம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே ஊழியர்களாகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 100 ஆண்டுகளை நிறைவு செய்த பாலத்தை சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். http://www.dinamani.com/tamilnadu/2014/02/24/100-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article2074477.ece இன்று (24-02-2014) பாம்பன் பாலம் நூற்றாண்டு விழா! ராமேஸ்வரம்: பாம்பன் பால நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று பாம்பனில் தொடங்கிவைக்கிறார். நாட்டின் மிகப்பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் 1902ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்படும் என ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று 1913ம் ஆண்டு டிசம்பரில் முழுமையாக பணிகள் முடிந்தன. 1914ம் ஆண்டு ஜனவரியில் பாம்பன் பாலத்தில் ரயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அதே ஆண்டில் பிப்ரவரி 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு, முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு பிப். 24ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இந்திய ரயில்வே துறையால் வரலாற்றுச்சிறப்பு மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதன் தொடக்க விழா ஜனவரி28ல் பாம்பனில் தொடங்கியது. நிறைவு விழா இன்று பிப்ரவரி 24ல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பாம்பன் ரயில் நிலையத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு அமைச்சர் சுந்தரராஜ் தலைமையில் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார். விழாவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். Thanks:Thinakaran.
  23. இல்லை,துபை. பொறியாளர்களுக்கு சவாலான உலக விடயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டு. அந்தவகையில் இந்த சென்னை மெட்ரோ செய்திகளையும் படிப்பேன் (தமிழ்நாட்டின் தலைநகரில் வருவதாயிற்றே..!) யாழ்கள 'டங்குவாரு'க்கும் இச்செய்திகள், தொழில் சார்ந்திருப்பதால் சுவாரசியமாக இருக்கும். ஆனால் மற்ற வெகுஜனங்களுக்கு இவை சலித்துவிடும். ஆகையால் முக்கிய புள்ளிவிவரங்களை மட்டும் அடிக்கடி 'அப்டேட்(update)' செய்கிறேன். மேலும் அதிக படங்கள் இணைத்தால், யாழ் இணைய பக்கங்கள் கணணியில் மிக மெதுவாக தோன்றுமாதலால் தயங்குகிறேன். 'நாந்தான்', நீங்கள் பொறியியல் சம்பந்தப்பட்ட துறையிலா இருக்கிறீர்கள்? ஆர்வமாக இருக்கிறீர்களே..?
  24. Update: நாட்டிலேயே சென்னை சுரங்கப் பாதை தான் சவாலானது... சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 30% சுரங்கப் பணி முடிந்தது! சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் 30% முடிவடைந்துள்ளன. முழு பணியும் முடிவடைந்து சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயங்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். கடினப் பாறைகள், கடல் ஓர நகரம் என்பதால் பிற நகரங்களை விட சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் சுரங்கப் பாதை சவால் நிறைந்ததாக உள்ளது. சுரங்கப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் தடம் புரண்டலோ அல்லது தீ விபத்து நிகழ்ந்தலோ உடனடியாக ரயில் நிறுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு 250 மீட்டருக்கும் 2 நடைபாதைகளை இணைக்கும் வகையில் இணைப்பு பாதைகளும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு 100மீட்டருக்கும் ஒரு தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பணிகளை விட சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் பணிகள் சவால் நிறைந்ததாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80737 அடுத்த ஆண்டு இறுதியில் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்க திட்டம்! சென்னை அண்ணா நகர் டவர் வரை தோண்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப் பணி அடுத்த ஆண்டு (2015) இறுதியில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெறுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டம்) ராமநாதன் தெரிவித்தார். சென்னை ஷெனாய் நகரில் இருந்து அண்ணா நகர் வரை மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெறுகின்ற இடத்துக்கு செய்தியாளர்கள் சனிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிவடைந்துள்ளன. மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்போது நேரு பூங்கா - எழும்பூர், ஷெனாய் நகர் - அண்ணாநகர் டவர் இடையிலான சுரங்கப் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டன. சுரங்கப் பணிகள் முடிந்ததும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கத்தில் மெட்ரோ ரயில் அடுத்த ஆண்டு (2015) டிசம்பர் மாதத்தில் இருந்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக பயணிகள் பயன்பாட்டுக்கு வரும். இதனை திட்டமிட்டே வேலைகள் நடந்து வருகின்றன. உயர்மட்டப் பாதை பணிகளை திட்டமிட்டப்படியே குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவிடலாம். ஆனால், சுரங்கப் பாதை பணிகளை அவ்வாறு திட்டமிட்டப்படி முடிப்பது சிரமம். சுரங்கப் பணியின்போது ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றார் ராமநாதன். சென்னை மெட்ரோ ரயில், முதன்மை பொது மேலாளர் (கட்டுமானம்) வி.சோமசுந்தரம்: நேரு பூங்கா - எழும்பூர் இடையே சுரங்கப் பணிகளை 6 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஏராளமான பாறைகள் பூமிக்கடியில் இருந்ததால், இந்தப் பணியை முடிக்க ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சென்னை பழமையான நகரம் என்பதாலும் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலான பகுதியில் பாரம்பரிய கட்டடங்கள் இருந்ததால், சுரங்கம் வாயிலாக மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டது. மக்கள் நெரிசல் அதிகமிருக்கும் வட சென்னை பகுதி என்பதால் மிகவும் எச்சரிக்கையாகவே சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் கட்டட விரிசலால் பிரச்னைகள் ஏற்பட்டன. அவற்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் சீரமைத்து கொடுத்துவிட்டது. இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் வரை சுரங்கப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் பணிக்காக 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிகையுடன் பணிகள் நடந்து வருகின்றன என்றார் சோமசுந்தரம். ரசாயனம் இல்லை: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும்போது சில நேரங்களில் வெளியேறும் நுரையுடன் கூடிய நீர் ரசாயனம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் எளிதாக சுரங்கம் தோண்ட டனல் போரிங் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அப்போது நில மணலின் அழுத்தத்தை குறைக்கவும், மணலை மிருதுவாக்கவும், அறிவியில் முறையில் கலவை ஒன்று நீருடன் செலுத்தப்படுகிறது. பூமிக்கடியில் டனல் போரிங் இயந்திரம் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக, நுரையுடன் கூடிய நீர் சில நேரங்களில் கண்ணுக்கு தெரியாத துளைகள் மூலமாக வெளியேறிவிடுகிறது. அந்த நீர் ரசாயனக் கலவை இல்லை. இதனால் பொது மக்கள் அச்சமைடையத் தேவையில்லை என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியில் நடக்கும் பணிகள்: 1. சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. 2. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ளன. 3. பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டருக்கு கீழ் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. 4. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டர் கீழே தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக பாதை அமைகிறது. 5. தோண்டிய மண், பாறை போன்றவை கன்வேயர் பெல்ட் மூலமாக வெளியேற்றப்பட்டு விடும். 6. 6.2 மீட்டர் விட்டத்தில் பள்ளம் தோண்டத் தோண்ட, அதையொட்டி, 0.4 மீட்டர் தடிமனில், கான்கிரீட் லேயர்களை உடனுக்குடன் போடும் வசதி உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 7. 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப்பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால் குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. 8. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படும். 9. மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே சுரங்கப் பணிகள் நடைபெறும். மீதமுள்ள நாள்கள் டனல் போரிங் இயந்திரம் பராமரிக்கப்படும். 10.உலக சாதனையாக மண்ணடியில் ஒரே நாளில் 54 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. சுரங்கத்தில் முழுமையான பாதுகாப்பு: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் முழுமையான பாதுகாப்பு வசதிகள் பயணிகளுக்கு செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 1. மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் 100 அடிக்கு ஒரு தொலைபேசி 2. 100 அடிக்கு ஒரு தீயணைப்பு கருவி 3. தீ அல்லது எவ்விதமான விபத்து ஏற்பட்டாலும் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் நிறுத்தப்படும். 4. சுரங்கத்தின் ஒவ்வொரு 250 மீட்டர் தொலைவிலும் அவசர வழி அமைக்கப்படும். 5. பயணிகள் ஆபத்துக் காலத்தில் ரயிலில் இருந்து இறங்கி 250 மீட்டர் தூரத்தில் உள்ள அவசர வழி மூலம் பக்கத்து சுரங்கத்துக்கு சென்று விடலாம். 6. பின்பு, பக்கத்து சுரங்கத்தில் இருந்து அருகில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு செல்லலாம். 7. நில அதிர்வு, இயற்கை சீற்றங்களால் சுரங்கப் பாதையும் ரயில் பயணமும் மக்களை பாதிக்காது 8. சுரங்கப் பாதை முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படும். சுரங்க ரயில் நிலையங்கள்: சென்னை மெட்ரோ ரயிலுக்காக 19 சுரங்க ரயில் நிலையங்கள் இரண்டு வழித்தடங்களில் அமைக்கப்படுகின்றன. வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே.... 1. வண்ணாரப்பேட்டை 2 மண்ணடி 3. உயர்நீதிமன்றம் 4. சென்ட்ரல் 5. அரசினர் தோட்டம் 6. எல்.ஐ.சி. 7. ஜெமினி 8. தேனாம்பேட்டை 9. சேமியர்ஸ் சாலை 10. சைதாப்பேட்டை சென்ட்ரல் - பரங்கிமலை (வழி: திருமங்கலம்) இடையே.... 1. சென்னை சென்ட்ரல் 2. எழும்பூர் 3. நேரு பூங்கா 4. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி 5. பச்சையப்பன் கல்லூரி 6. ஷெனாய் நகர் 7. அண்ணா நகர் கிழக்கு 8. அண்ணா நகர் டவர் 9. திருமங்கலம் உயர்மட்டப் பாதையில்... சென்னை மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதையில் 13 ரயில் நிலையங்கள் அமைகின்றன. வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே.... 1. சின்னமலை 2. கிண்டி 3. ஆலந்தூர் 4. ஓ.டி.ஏ. 5. மீனம்பாக்கம் 6. விமான நிலையம் சென்ட்ரல் - பரங்கிமலை இடையே.... 1. கோயம்பேடு 2. கோயம்பேடு பேருந்து நிலையம் 3. அரும்பாக்கம் 4. வடபழனி 5. அசோக்நகர் - கேகே நகர் 6. சிட்கோ 7. பரங்கிமலை Thanks:Dinamani
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.