Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. இல்லை,துபை. பொறியாளர்களுக்கு சவாலான உலக விடயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டு. அந்தவகையில் இந்த சென்னை மெட்ரோ செய்திகளையும் படிப்பேன் (தமிழ்நாட்டின் தலைநகரில் வருவதாயிற்றே..!) யாழ்கள 'டங்குவாரு'க்கும் இச்செய்திகள், தொழில் சார்ந்திருப்பதால் சுவாரசியமாக இருக்கும். ஆனால் மற்ற வெகுஜனங்களுக்கு இவை சலித்துவிடும். ஆகையால் முக்கிய புள்ளிவிவரங்களை மட்டும் அடிக்கடி 'அப்டேட்(update)' செய்கிறேன். மேலும் அதிக படங்கள் இணைத்தால், யாழ் இணைய பக்கங்கள் கணணியில் மிக மெதுவாக தோன்றுமாதலால் தயங்குகிறேன். 'நாந்தான்', நீங்கள் பொறியியல் சம்பந்தப்பட்ட துறையிலா இருக்கிறீர்கள்? ஆர்வமாக இருக்கிறீர்களே..?
  2. Update: நாட்டிலேயே சென்னை சுரங்கப் பாதை தான் சவாலானது... சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 30% சுரங்கப் பணி முடிந்தது! சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் 30% முடிவடைந்துள்ளன. முழு பணியும் முடிவடைந்து சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயங்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். கடினப் பாறைகள், கடல் ஓர நகரம் என்பதால் பிற நகரங்களை விட சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் சுரங்கப் பாதை சவால் நிறைந்ததாக உள்ளது. சுரங்கப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் தடம் புரண்டலோ அல்லது தீ விபத்து நிகழ்ந்தலோ உடனடியாக ரயில் நிறுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு 250 மீட்டருக்கும் 2 நடைபாதைகளை இணைக்கும் வகையில் இணைப்பு பாதைகளும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு 100மீட்டருக்கும் ஒரு தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பணிகளை விட சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் பணிகள் சவால் நிறைந்ததாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=80737 அடுத்த ஆண்டு இறுதியில் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்க திட்டம்! சென்னை அண்ணா நகர் டவர் வரை தோண்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப் பணி அடுத்த ஆண்டு (2015) இறுதியில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெறுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (திட்டம்) ராமநாதன் தெரிவித்தார். சென்னை ஷெனாய் நகரில் இருந்து அண்ணா நகர் வரை மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடைபெறுகின்ற இடத்துக்கு செய்தியாளர்கள் சனிக்கிழமை அழைத்து செல்லப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிவடைந்துள்ளன. மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்போது நேரு பூங்கா - எழும்பூர், ஷெனாய் நகர் - அண்ணாநகர் டவர் இடையிலான சுரங்கப் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டன. சுரங்கப் பணிகள் முடிந்ததும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கத்தில் மெட்ரோ ரயில் அடுத்த ஆண்டு (2015) டிசம்பர் மாதத்தில் இருந்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக பயணிகள் பயன்பாட்டுக்கு வரும். இதனை திட்டமிட்டே வேலைகள் நடந்து வருகின்றன. உயர்மட்டப் பாதை பணிகளை திட்டமிட்டப்படியே குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவிடலாம். ஆனால், சுரங்கப் பாதை பணிகளை அவ்வாறு திட்டமிட்டப்படி முடிப்பது சிரமம். சுரங்கப் பணியின்போது ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்றார் ராமநாதன். சென்னை மெட்ரோ ரயில், முதன்மை பொது மேலாளர் (கட்டுமானம்) வி.சோமசுந்தரம்: நேரு பூங்கா - எழும்பூர் இடையே சுரங்கப் பணிகளை 6 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஏராளமான பாறைகள் பூமிக்கடியில் இருந்ததால், இந்தப் பணியை முடிக்க ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சென்னை பழமையான நகரம் என்பதாலும் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலான பகுதியில் பாரம்பரிய கட்டடங்கள் இருந்ததால், சுரங்கம் வாயிலாக மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டது. மக்கள் நெரிசல் அதிகமிருக்கும் வட சென்னை பகுதி என்பதால் மிகவும் எச்சரிக்கையாகவே சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் கட்டட விரிசலால் பிரச்னைகள் ஏற்பட்டன. அவற்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் சீரமைத்து கொடுத்துவிட்டது. இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் வரை சுரங்கப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் பணிக்காக 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிகையுடன் பணிகள் நடந்து வருகின்றன என்றார் சோமசுந்தரம். ரசாயனம் இல்லை: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும்போது சில நேரங்களில் வெளியேறும் நுரையுடன் கூடிய நீர் ரசாயனம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் எளிதாக சுரங்கம் தோண்ட டனல் போரிங் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அப்போது நில மணலின் அழுத்தத்தை குறைக்கவும், மணலை மிருதுவாக்கவும், அறிவியில் முறையில் கலவை ஒன்று நீருடன் செலுத்தப்படுகிறது. பூமிக்கடியில் டனல் போரிங் இயந்திரம் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக, நுரையுடன் கூடிய நீர் சில நேரங்களில் கண்ணுக்கு தெரியாத துளைகள் மூலமாக வெளியேறிவிடுகிறது. அந்த நீர் ரசாயனக் கலவை இல்லை. இதனால் பொது மக்கள் அச்சமைடையத் தேவையில்லை என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியில் நடக்கும் பணிகள்: 1. சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. 2. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ளன. 3. பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டருக்கு கீழ் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. 4. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டர் கீழே தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக பாதை அமைகிறது. 5. தோண்டிய மண், பாறை போன்றவை கன்வேயர் பெல்ட் மூலமாக வெளியேற்றப்பட்டு விடும். 6. 6.2 மீட்டர் விட்டத்தில் பள்ளம் தோண்டத் தோண்ட, அதையொட்டி, 0.4 மீட்டர் தடிமனில், கான்கிரீட் லேயர்களை உடனுக்குடன் போடும் வசதி உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 7. 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப்பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால் குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. 8. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படும். 9. மாதத்தில் 15 நாள்கள் மட்டுமே சுரங்கப் பணிகள் நடைபெறும். மீதமுள்ள நாள்கள் டனல் போரிங் இயந்திரம் பராமரிக்கப்படும். 10.உலக சாதனையாக மண்ணடியில் ஒரே நாளில் 54 மீட்டர் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. சுரங்கத்தில் முழுமையான பாதுகாப்பு: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் முழுமையான பாதுகாப்பு வசதிகள் பயணிகளுக்கு செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 1. மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் 100 அடிக்கு ஒரு தொலைபேசி 2. 100 அடிக்கு ஒரு தீயணைப்பு கருவி 3. தீ அல்லது எவ்விதமான விபத்து ஏற்பட்டாலும் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் நிறுத்தப்படும். 4. சுரங்கத்தின் ஒவ்வொரு 250 மீட்டர் தொலைவிலும் அவசர வழி அமைக்கப்படும். 5. பயணிகள் ஆபத்துக் காலத்தில் ரயிலில் இருந்து இறங்கி 250 மீட்டர் தூரத்தில் உள்ள அவசர வழி மூலம் பக்கத்து சுரங்கத்துக்கு சென்று விடலாம். 6. பின்பு, பக்கத்து சுரங்கத்தில் இருந்து அருகில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு செல்லலாம். 7. நில அதிர்வு, இயற்கை சீற்றங்களால் சுரங்கப் பாதையும் ரயில் பயணமும் மக்களை பாதிக்காது 8. சுரங்கப் பாதை முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படும். சுரங்க ரயில் நிலையங்கள்: சென்னை மெட்ரோ ரயிலுக்காக 19 சுரங்க ரயில் நிலையங்கள் இரண்டு வழித்தடங்களில் அமைக்கப்படுகின்றன. வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே.... 1. வண்ணாரப்பேட்டை 2 மண்ணடி 3. உயர்நீதிமன்றம் 4. சென்ட்ரல் 5. அரசினர் தோட்டம் 6. எல்.ஐ.சி. 7. ஜெமினி 8. தேனாம்பேட்டை 9. சேமியர்ஸ் சாலை 10. சைதாப்பேட்டை சென்ட்ரல் - பரங்கிமலை (வழி: திருமங்கலம்) இடையே.... 1. சென்னை சென்ட்ரல் 2. எழும்பூர் 3. நேரு பூங்கா 4. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி 5. பச்சையப்பன் கல்லூரி 6. ஷெனாய் நகர் 7. அண்ணா நகர் கிழக்கு 8. அண்ணா நகர் டவர் 9. திருமங்கலம் உயர்மட்டப் பாதையில்... சென்னை மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதையில் 13 ரயில் நிலையங்கள் அமைகின்றன. வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே.... 1. சின்னமலை 2. கிண்டி 3. ஆலந்தூர் 4. ஓ.டி.ஏ. 5. மீனம்பாக்கம் 6. விமான நிலையம் சென்ட்ரல் - பரங்கிமலை இடையே.... 1. கோயம்பேடு 2. கோயம்பேடு பேருந்து நிலையம் 3. அரும்பாக்கம் 4. வடபழனி 5. அசோக்நகர் - கேகே நகர் 6. சிட்கோ 7. பரங்கிமலை Thanks:Dinamani
  3. Exactly! There you are!! இத்திட்டத்தின் வழித்தடம், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியின் பின்புறமாக வந்து "செல்வந்தர்கள் வாழும் பகுதிகள்" வழியாக எழும்பூர் அடைந்து, சிந்தாதிரிப்பேட்டை வழியாக வந்து துறைமுகம் அடைகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் சில செல்வாக்கு மிக்க அரசியல் புள்ளிகளின் பகுதியும் அடங்குகிறது.
  4. Update: 'சென்னைத் துறைமுகம் - மதுரவாயல்' மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு(NHAI) சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னைத் துறைமுகத்தை சுற்றி முழுவதும் நகர்மயமாகிவிட்டதால் இங்கு வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை ரூ.1,800 கோடி மதிப்பில், செயல்படுத்த முடிவு செய்தது. இந்தப் பாலம் கூவம் நதிக்கரை வழியாக அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. கூவம் நதியின் எல்லைப் பகுதியில் குடிசை வாழ் மக்கள் வசிக்கின்றனர். இதன் வழியே பாலம் அமைத்தால் அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக அரசு கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி விரைவு சாலை திட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.500 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. கூவம் நதியின் வழியாக மேம்பாலம் செல்வதால் நதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, திட்டத்தை நிறுத்த உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு மீது நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, சிறப்பு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் உண்மையப் பார்க்கும் போது, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலை திட்டம் உடனடி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், கன்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்கு செல்வதற்கும் இந்த மேம்பால விரைவு சாலைத் திட்டம் தேவைப்படுகிறது. எனவே மேம்பால விரைவு சாலைத் திட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியமான திட்டம்தான். ஆழ்ந்து யோசித்த பிறகுதான் கூவம் வழியாக இந்தத் திட்டத்தை தொடர தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. திட்ட சாத்தியக் கூறு அறிக்கையை ஆய்வு செய்த பிறகே, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக அரசுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. பருவ மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது திட்டத்தின் சிக்கல்களாக கருதப்படுகிறது. அதே நேரம், இதற்காக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த மனுவின் கோரிக்கையை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறோம். இதைத் தொடர்ந்து கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்கிறோம். மேலும், இந்தத் திட்டத்தை தொடர்வதற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த உறுதிமொழியின் படி, 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தவிர, கூவம் நீர் தடையில்லாமல் செல்வதற்கு, கட்டுமானப் பணியின் போது அதில் விழும் கட்டடக் கழிவுகளை, தண்ணீர் செல்வதற்கு தடையில்லாத வகையில் அகற்ற வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thanks: Dinamani.
  5. அதனால் தான் மாற்று வழியாக மதுரவாயலை ஒட்டிச் செல்லும் கூவம் நதியின் கரையோரமாகவே சென்னை துறைமுகம் வரை இத்திட்டத்தின் வழித்தடம் வடிமைக்கப்பட்டு, அப்போதைய சம்மந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளிடமும் (இப்போது தடுக்கும் பொதுப்பணித் துறையிடமும் சேர்த்து) தடையில்லாச் சான்றிதழ் (No objection Certificate) வாங்கியே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்மையார்தான் "இது மு.க. காலத்தில் ஆரம்பித்த திட்டமாச்சே..!" என வன்மம் கொண்டு ஒப்புக்காக சப்பை காரணம் காட்டி, முதலில் 'ஓ.கே' சொன்ன அதே பொதுப்பணித் துறை மூலம் முட்டுக்கட்டை போடுகிறார்.
  6. டங்கு, 19 கி.மீ தூரத்திற்கு முதலில் சாலை அமைக்க அகலமான இடம் வேண்டுமே? பூந்தமல்லி - சென்னை சாலையில், சென்னை சென்ட்ரல் முதல் அமிஞ்சிக்கரை வரை ஏறத்தாழ 12 கி.மீ தூரத்திற்கு சாலையின் நடுவே, அடியில் 15மீ - 20 மீ ஆழத்தில் சென்னை மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மேலேயே கனரக வாகனங்கள் செல்லும் இன்னொரு மேம்பாலம் அமைக்க முடியுமா..? பல நாடுகளில் நகரத்தினுள்ளே செல்லும் நதியின் கரையோரமாகவே பாலங்கள் செல்வதை கவனித்துள்ளேன். ஓட்டுநர்கள், கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டியதுதான்!
  7. மதுரவாயல் 'பறக்கும் சாலை' திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி! மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை பறக்கும் சாலை திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால், கூவம் ஆற்றின் வழியாக திட்டத்தை செயல்படுத்த தமிழக பொதுப்பணித் துறை எதிர்ப்புத் தெரிவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்தும், இதுகுறித்து பொதுப்பணித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் இன்று தீர்ப்பளித்துள்ளது. http://www.dinamani.com/latest_news/2014/02/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/article2067621.ece இரண்டு ஆண்டுகள் நீதிமன்ற வழக்கால் இழுத்தடிக்கப்பட்ட இத்திட்டம் இனியாவது சுமுகமாய் நிறைவேறினால் நன்று. மூளியாய் நிற்கும் இத்தூண்களுக்கு விடிவு கிட்டும்!
  8. நாளை(21-02-2014) 'பிறந்தநாள் விழா' காணவிருக்கும் கலகலப்பு நாயகன் 'தமிழ்சிறி'க்கு வாழ்த்துக்கள்!
  9. நன்றி சுவி. நீங்கள் ஜோடியாக வந்தால் (ஓ..ரொம்பவும் கற்பனை செய்து விடாதீர்கள், உங்கள் இல்லத்தரசியுடன் தான்...!) நிச்சயம் முன்னுரிமை அளிக்கபடும் சுவி. ரொம்ப நல்ல மனசு. நன்றி. நன்றி. யாரும் மெட்ரோ ரயிலில் தொங்கியவாறு பயணிக்க முடியாது, ஏனெனில் இதில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூடினால் தான் ரயில் கிளம்பும், ரயில் நிலையங்களில் மட்டுமே இது திறக்கும்.
  10. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய மத்திய அரசும், தமிழ் நாடு அரசும் இணைந்த கூட்டு நிறுவனமாகும். இருவருக்கும் இதில் சம பங்குண்டு. நடத்தப் போவது மத்திய அரசின் வழிகாட்டலில் தமிழக அரசு திறம்பட நடத்தும். (ஒரு நம்பிக்கைதான் ) இத்திட்டப் பணி நடக்குமிடத்தில் சில விபத்துக்கள் நடந்துள்ளன. ஆனால் இறந்த/காயம்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் அனுசரனையில் வேலை பார்த்தவர்கள். அவர்களின் ஆயுள் இழப்பீட்டுத் தொகைக்கு அந்நிறுவனமே பொறுப்பு. அரசாங்கமும் கருணைத் தொகை அளித்தது போக, இழப்பீட்டுத் தொகையை சீக்கிரம் வழங்க உரிய அழுத்தமும் , நடவடிக்கையும் அவ்வப்பொழுது எடுத்தே வருகிறது.
  11. சோதனை ஓட்டத்திற்கு முன் பூஜை வழிபாடு.. கோயம்பேடு நிலையத்தில் புறப்பட தயாரான நிலையில்.. ரயிலின் டிரைவர் அறையில்.. சோதனை ஓட்டத்தில் நகர்வலம்.. உற்சாகமாக கையசைத்து வரவேற்கும் மக்கள்..
  12. ஆமாம் டங்கு. இது மொத்த திட்டத்தில் தோராயமாக் கால் சதவீதம் மட்டுமே இருக்கும். ஏனெனில் மற்ற பகுதிகளெல்லாம் நிலதிற்கு கீழே 20 மீ ஆழத்தில் குடைந்து சுரங்கம் மூலம் இயக்கப்படுமாதலால், பணிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கும், சவால்களுக்குமிடையே மிக தாமதமாகவே நிறைவேறி வருகிறது.
  13. ஆஹா...! சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்துவிட்டதப்பு... http://youtu.be/tOH8BY-Oj0I கோயம்பேடு- அசோக்நகர் இடையே 'மெட்ரோ ரயில்' சோதனை ஓட்டம் சென்னை: கோயம்பேடு - அசோக்நகர் இடையே இன்று 2-வது நாளாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதையடுத்து கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இன்று 2-வது நாளாக சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. சோதனை ஓட்டத்தின் போது வழிநெடுக வீடுகளில் உள்ள மக்கள் மாடியில் நின்று கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறும். சென்னையில் இயக்கப்பட இருக்கும் மெட்ரோ ரயில் மற்ற மாநிலங்களில் ஓடக்கூடிய மெட்ரோ ரெயில்களை விட பல்வேறு சிறப்புகளை பெற்றது. சென்ட்ரல்- எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இது விடப்படுகிறது. மொத்தம் 42 மெட்ரோ ரெயில்கள் சென்னையில் உலா வர இருக்கின்றன. இதில் 9 ரெயில்கள் பிரேசில் இருந்தும், மற்ற ரயில்கள் ஆந்திராவில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும். இந்த ரயில்கள் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். ஒரு மெட்ரோ ரயிலில் (4 பெட்டி) மொத்தம் 1276 பேர் பயணம் செய்ய முடியும் 176 இருக்கைகள் உள்ளன. 1100 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம். இந்த ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக 16 இடங்களில் கண்காணிப்பு கேமிரா இருக்கும். அவசர வசதிகளும், ஊனமுற்றோர், மற்றும் வயதானவர்கள் பயணம் செய்ய வீல் சேர்களும் இடம்பெற்று உள்ளன. கடந்து சென்ற ரயில் நிலையம், வர இருக்கும் நிலையங்கள் உள்பட பல்வேறு விவரங்களை அறியும் வகையில் எல்.இ.டி.(LED) திரை ரயிலில் இருக்கும். இது தவிர ரயில் நிலையங்களை குறிப்பிடும் வரைப்படமும் பயணிகள் பார்வைக்காக இருக்கும். பயணிகளின் அவசர உதவிக்கு ரயில் டிரைவரை அழைக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதை அழுத்தி அவரிடம் தகவல் தெரிவிக்கலாம். ரயில் பெட்டி முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயிலில் சிறப்பு வகுப்பு, சாதாரண வகுப்பு என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டி முழுவதும் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் வெளியே பார்ப்பதற்கு வசதியாக இருபுறமும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை, ஜூன் மாதத்தில் இயக்கப்படும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/tamilnadu/chennai-metro-holds-trial-on-elevated-section-193582.html
  14. நிலவில் வெற்றிகரமாக மனிதன் காலடி வைக்க, நம் அண்ணல் சசிவர்ணமும் இம்மண்ணில் உதிக்க, இன்று பச்சையின் முதல் கணக்கு தொடங்கி, சுழிபோட்டுள்ள அன்பர், கூடியவிரைவில் 1 அருகே 000 அடைய வாழ்த்துக்கள்!
  15. பச்சைப்புள்ளிகள் பல வென்ற 'அண்ணா'க்களுக்கு வாழ்த்துக்கள்.
  16. அழுத்தமிருந்தாலும், ஆயிரம் இச்சைகளையும், பச்சைகளையும் பெற "ஆழமான" பாஞ்ச் பாஞ்ச்விற்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
  17. New update about Chennai Metro Phase II - Extension of the project up to Thiruvottiyur, Chennai North. சென்னை: வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் வழித் தடத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா தனது உரையின்போது, ''சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை இங்கு நான் மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். நமது முதலமைச்சர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்தடத்திற்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒப்புதல் பெறவும், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும் இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த அரசால் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் பொது அமைதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதை எதிர்கொண்டு தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு உறுதிக் கொண்டுள்ளது. இதன்மூலம் 2013௧4 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை மிஞ்சும்" என்று கூறினார். http://news.vikatan.com/article.php?module=news&aid=23950
  18. நல்ல எண்ணம் தான். ஆனால் 'வத வத'வென பெருகியுள்ள மக்கள் தொகையினை நினைத்தால், யானைப் பசிக்கு சோளப்பொரி போலத்தான் இந்த வெகுசன திட்டங்கள் முடியும். உதாரணத்திற்கு இங்கேயுள்ள ஒரு நடுத்தர கிராமத்திற்கு சென்று தெருவில் பாருங்கள் எத்தனை மனித தலைகள் வீதியில் தென்படுமென்று, அது நிச்சயம் யாழ்ப்பாண நகரின் சன நடமாட்டத்தை விட அதிகமாகவே இருக்கும். மக்கள் என்று நாம் இருவர், நமக்கு இருவர் என எண்ணத் தலைப்படுகிறார்களோ அப்பொழுதான் இந்தியாவின் திட்டங்களின் பலன் பெரும்பாலான சனங்களுக்கு சென்றடையும்.
  19. 'மேரியம்மே' அடுத்த வரிசையில் வர இருக்கிறார்... அவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
  20. சென்னையின் புதிய விமான நிலைய முனையங்களின் கட்டுமானப் பணிகள் மிக மிக தரமற்றவை. ஏர்போர்ட்ஸ் அதாரிடி அஃப் இந்தியா(AAI)வின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற ஊழல் மலிந்த வேலைகள் அவை. இதைத் தவிர சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையின் ஒரு பகுதி, அடையாறு நதியின் மேலே கட்டபட்ட முறையிலும் தரமற்ற வகையில் உள்ளதாக கூறி இன்னமும் பயணிகள் பாதுகாப்பு காரணமாக திறக்கப்படவில்லை. இவையனைத்தையும் சரி செய்யும்வண்ணம் விமான நிலையத்தை தனியார்வசம் ஒப்படைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, முடிவாகும் தருணத்தில், விமான நிலைய ஊழியர்கள் சங்கம், சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடையை சென்ற வாரம் வாங்கியுள்ளனர். அரசு நிறுவனமென்றால் ஊழலில் திளைப்பது புதிதல்லவே? இதற்கு சென்னை விமான நிலையமும் விதிவிலக்காகவா இருக்க முடியும்? மும்பாய், தில்லி, பங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் போன்று சென்னை விமான நிலையமும் சீக்கிரம் தனியார்வசம் (PPP - Private, Public Partnership முறையில்) ஒப்படைக்க இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை!
  21. இன்னமும் திட்டப்பணிகள் முடிவுறவில்லையே தூயவன், நிறைவுற்றதும் குப்பைகளை பணியாளர்கள் அகற்றிவிடுவர்..ஆனால் சென்னைவாசிகளைப் பற்றி தெரியும் தானே? பெட்டிகளை எப்படி தூய்மையாக வைத்திருக்கப் போகிறார்களென அடுத்த வருடம் தெரிந்துவிடும். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்..தாய் மண் மீது பற்றுறுதிகொள்ளும் வரை உணர்வுகள் வளரவில்லை. All are in 'take it policy'!
  22. சென்னையில் கோயம்பேடு பணிமனை முதல் கோயம்பேடு ரயில் நிலையம் வரையிலான 1.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர். சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே, அண்ணா சாலை, சைதை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையுமாக இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் மும்முரமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த நவம்பரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்குள்ள 800 மீட்டர் நீள ‘டெஸ்ட் டிராக்’கில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ரயிலின் வேகம், பிரேக் சிஸ்டம், ஏ.சி.யூனிட், தானியங்கி கதவுகளின் செயல்பாடு உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. 1.5 கி.மீ.க்கு நடந்த சோதனை இந்நிலையில், கோயம்பேடு பணிமனை - கோயம்பேடு ரயில் நிலையம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து 1.5 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையமான கோயம்பேடு ரயில் நிலையம் உள்ளது. இதில் 1 கி.மீ. தூரத்துக்கு ‘ரேம்ப்’ எனும் சாய்தள ரயில் பாதை போடப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்து கோயம்பேடு ரயில் நிலையம் வரை வியாழக்கிழமை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மெட்ரோ ரயில் போக்குவரத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். எல்லாமே ஆட்டோமேட்டிக் இன்னும் 2 வாரத்துக்குள் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 8 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஏப்ரலில் இருந்து ஆலந்தூர் வரை சோதனை ஓட்டம் நடக்கும். சிக்னல், மெட்ரோ ரயில் இயக்கம் என அனைத்தும் ஆட்டோமேட்டிக் என்பதால் 4 மாதங்கள் வரை சோதனை ஓட்டம் நடைபெறும். முதல்கட்டமாக, கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். சிட்கோ வரை 8 கி.மீ.க்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுவிட்டது. அசோக் நகர் வரை 6.5 கி.மீ. தூரத்துக்கு மின் பணிகளும் முடிந்துவிட்டது. உடனுக்குடன் சிக்னல் வேலைகளும் நடக்கின்றன. 'கத்திப்பாரா' வரையிலான பணிகள் பிப்ரவரியிலும், ஆலந்தூர் வரையிலான பணிகள் ஏப்ரலிலும் முடியும். ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி செப்டம்பரில் முடியும். முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர். source:http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5636572.ece
  23. வருது வருது ...! ஆ...விலகு...விலகு!! வேங்கை வெளியே வருது...!!! அதான் நம்ம சென்னை 'மெட்ரோ ரயில்' சோதனை ஓட்டத்திற்காக கோயம்பேடு பணிமனையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வரை சுமார் 1.5கி.மீ தூரம் பரீச்சார்த்த ஓட்டத்திற்காய் ஓட்டம்விட்டு மக்களுக்கு நோட்டம் பார்க்க விடப்பட்டது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.