Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. பிந்திய வாழ்த்துக்களுக்கு நன்றி, யாழ்வாலி.
  2. மனமார வாழ்த்திய தமிழ்சிறி, புங்கையூரன், கறுப்பி, தமிழரசு, சுமேரியர், துளசி, சோழி, நிலாமதி, விசு, டங்குவார், நிழலி, தமிழினி, நுணா, சுவி, துல்பன் மற்றும் யாழ் உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன், - ராசவன்னியன்.
  3. கண்ணாடி அணியாததால் "பச்சை பிள்ளைகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்" என படித்துவிட்டேன். ஆகவே இதுவரையிலும் பச்சை பிள்ளைகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துகிறேன்.
  4. இந்த '15 நாள்' நாராயண சாமி, எப்பொழுதும் சென்னை உள்நாட்டு முனையத்தினுடாக விமானம் ஏறும்போதும், இறங்கும்போதும் நிருபர்களை அழைத்து, இன்னும் பதினைந்தே நாளில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும் என சலிக்காமல் கடந்த மூன்று வருடமாக தொடர்ந்து வாக்கு அருளி சாதனை படைத்த சிங்கம். ஆனால் இன்னும் மின்சாரம் தான் வந்த பாடில்லை! அரசின் செலவில் வார வாரம் டெல்லிக்கும், சென்னைக்கும் பறக்கும் இவருடைய விமான பயணச் செலவுகளை கணக்கிட்டால், அதுவே மில்லியன் கணக்கில் பணம் தேறும்.
  5. காலனால் மனித இனம் அழிந்த தனுஸ்கோடியில், மனிதம் தேடி இறங்கும் உறவுகள்...
  6. யார் வீட்டு நிலத்தை, யார், யாருக்கு தாரை வார்ப்பது டங்கு? இது 1974ம் வருடம் அல்ல..'மணிமேகலை'யின் தோழரும் இப்பொழுது அரியணையில் இல்லை!
  7. இனி காலம் விட்டுச் சென்ற படங்கள் - தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் வரை சாலை. இதன் பின்னர் தனுஷ்கோடிக்கு(10 கி.மீ) வரை சாலை கடலால் அழிந்து போயுள்ளது. தனுஷ்கோடி சாலை. அழிந்த நிலையில் தனுஷ்கோடி தொடருந்து நிலையம் எஞ்சியுள்ள வீடுகள் சர்ச்
  8. அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி! தனுஸ்கோடி பெயர் வரக் காரணம் என்ன? என தேடியதில் கிட்டிய செய்தி ராமேஸ்வரத்தில் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்படும் இடம் தனுஸ்கோடி. ரத்னாகரம் மற்றும் மஹோததி என்ற இரண்டு கடல் சந்திக்கும் இடம் இது. மேலும் இந்த இடத்திலிருந்து தலைமன்னார் 18 கடல் மைல் மட்டுமே. இந்த தனுஸ்கோடி பெயர்காரணம் என்ன எனில், ராவண வதத்தின் பின் விபீஷனன் ஆட்சியில் அமர வேண்டிய நேரம், ஆனால் விபீஷனனோ அமர மறுத்தான். ராமனே அமர வேண்டுமென எண்ணினான். ஆனால் ராமன் அதனை மறுத்து விபீஷனனை ஆட்சியில் அமரச்செய்தான். விபீஷனன் மேலும் ஒரு வேண்டுதலை வைத்தான். அது என்ன எனில், “ராமா! என்ன இருந்தாலும் நாங்கள் அரக்கர்கள், நீங்களோ மானுடர்கள். எதிர் காலத்தில் நம் சந்ததியினர் சண்டையிடலாம். எனவே தாங்கள் தயை கூர்ந்து இந்த பாலத்தை உடைத்து விடுங்கள்” என்பதே அது. அவனது கோரிக்கையை ஏற்ற ராமபிரான் தனது அம்பு நுனியால் கோடு கிழித்து பாலத்தை உடைத்தார். அம்பு = தனுஸ், நுனி=கோடி: தனுஸ்கோடி. இதுவே இந்த பெயர் காரணம். ராமன் தனுஸால் கோடு கிழிக்க ஆரம்பித்த இடமே தனுஸ்கோடி.
  9. தனுஷ்கோடி மீனவர் சமுதாயம் குறுகிய நிலபரப்பில் தனுஷ்கோடி நோக்கி ... கடல் அரிப்புகளினூடாக பயணம் இன்றைய(06-12-2013) தினமலரில் வந்த செய்தி
  10. தனுஷ்கோடி பற்றி நேற்றைய (04-12-2013) தினமணியில் வந்துள்ள செய்தி: ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே 20 கோடி செலவில் சாலை அமைக்கபடும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் நீலமேகம் தெரிவித்துள்ளார். 1964 ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு பிறகு ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான சாலை போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் முதன்முறையாக சாலை அமைக்கபடவுள்ளது. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே தற்போது முகுந்தராயர் சத்திரம் வரை சாலைவசதி உள்ளது. இந்நிலையில் தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி ஜனவரியில் துவங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் நீலமேகம் தெரிவித்துள்ளார். source:http://dinamani.com/latest_news/2013/12/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81/article1927431.ece
  11. தனுஷ்கோடி... உன்னைத் தேடி! இவ்வருடத்தில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதனால் எழும் புதுப்புது பெயர்களில் வலம் வரும் புயல்களை அறிகையில், ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் அக்கால சிலோனையும், தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கி, தற்பொழுது உருத்தெரியாமல் சுயமிழந்து நிற்கும் தனுஷ்கோடி நகரம் பற்றிய நினைவு வந்தது. தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடியபோது படித்ததை இங்கே பகிர்கிறேன். நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும் நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சில நாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப் பின்னான சிறு தூறல்கள் பாம்பன் ரயில் நிலையத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்ததன. தனுஷ்கோடி செல்லும் கடைசி ரயிலான பாம்பன்-தனுஷ்கோடி பாசன்ஜர் 110 பயணிகளையும், 5 ரயில்வே அதிகாரிகளையும் சுமந்து கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. ஏழு பெட்டிகள் கோர்க்கப்பட்டிருந்த ரயிலில் 40 வட இந்தியக் கல்லூரி மாணவர்களும், துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்ப் பயணிகளும் இருந்தனர். டிசம்பர் 17ம் தேதியே வங்காள விரிகுடாவின் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருந்தது, அந்த காற்றழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வலுபெற்று 19ம் தேதி புயல் சினமாக வலுகொண்டது. எப்போது வேண்டுமானாலும் புயல் தாக்கலாம் என்ற நிலையில் தான் வங்களா விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான கடற்கரை ஓரங்கள் இருந்தன. காரணம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது துரதிஷ்டவசமாக மக்கள் அதிகம் வாழும் மிக முக்கியமான பகுதிகளான இலங்கையின் வவுனியா வழியாக தலைமன்னாரையும் தனுஷ்கோடியையும் சேதப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாக நெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கி நகரத் தொடங்கியது. தனுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். சென்னை தூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது. பிரிட்டிஷ் அரசு, இந்தியாவையும் இலங்கையையும் ஒருசேர ஆண்டு கொண்டிருந்த 18 - 20 ம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம் வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது. 1911ம் ஆண்டு பிரிட்ஷ் அரசு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒரே போன்ற துறைமுகக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில் (1914) கப்பல் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இர்வின், போஷின் என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தில் இருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கப்பல் போக்குவரத்து நடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் வரை தனுஷ்கோடி சென்று வந்து கொண்டிருந்தன. சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் தனுஷ்கோடி வரை சென்று வந்தன. இந்தோ-சிலோன் போட் மெயில் (BஓஆT Mஆஈள்) என்று அழைக்கப்பட்ட இந்த ரயிலின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும் இணைத்தது தான். எண்பது ருபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால் சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம். சென்னையில் இருந்து தனுஷ்கோடி துறைமுகம் வரை ரயில் பயணம், தனுஷ்கோடி துறைமுகத்தில் தயாராக இருக்கும் நீராவிக் கப்பலில் ஏறினால் அங்கிருந்து தலைமனார் துறைமுகம் வரை கப்பல் பயணம். தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம். இந்தியாவையும் கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலான இந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபாரம் நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள் மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருந்த இந்த ரயில்வழிபோக்குவரத்து 1964 புயலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதன் பின் இந்த ரயில் தற்போது சேது எக்ஸ்பிரஸாக பயணித்து வருகிறது. இர்வினும் போஷினும் தங்கள் பயணத்தை கணித மேதை ராமனுஜம் பெயரில் தொடர்ந்து கொண்டிருந்தன. 1984ல் ஏற்பட்ட இனப் போராட்டம் மூலம் நீர்வழி சேவையும் முடிவுக்கு வந்தது. தனுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொரு நம்பிக்கை உண்டு, மேலும் காசி புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு, அதனால் வாரனாசியில் இருந்து தனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை இரயில்கள் வந்து செல்லும். மேலும் பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பாசன்ஜர் ரயிலும் உண்டு. பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாகத் தான் ரயில் பாதையை அமைத்திருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதை இந்தியப் பெருங்கடலின் கடற்கரையோரம் அமைந்திருந்தது. சாதாரணமாகவே இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்தக் காற்றானது அடிகடி இரயிலின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டு மூடிவிடுவதால் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபடுவது உண்டு. இதற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில் பாதையை குந்துக்கல் என்ற இடம் வழியாக மாற்றி அமைத்தார்கள். மேலும் குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு ரயில் உண்டு. ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பற்றி புயலுக்கு முன் பயலுக்குப் பின் என்று பார்தோமானால் ராமேஸ்வரம் இராமன் வழிபட்ட தீர்த்தத் ஸ்தலம் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் அடைந்திருக்கவில்லை. தனுஷ்கோடியோ துறவிகளும் யாத்ரீகர்களும் வியாபாரிகளும் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்ற மிகவும் பரபரப்பான ஒரு நகரம். மிகப்பெரிய ரயில் நிலையம், தபால் நிலையம், தந்தி ஆபீஸ், கஸ்டம்ஸ் ஆபீஸ், மேல்நிலைப் பள்ளி, மாநிலத்தின் மிக முக்கியமான துறைமுகம் என்று பரபரப்பாக இயங்குகின்ற மிக முக்கியமான வர்த்தக நகரம். மீன் கருவாடு உப்பு ஒப்ன்றவை மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். மேலும் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று வர விசா தேவை இல்லை என்பதால் மக்கள் போக்குவரத்தும் அதிகம். புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாக நெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கி நகரத் தொடங்கியது, எதிர்கொள்ளப் போகும் ஒரு அபாயத்தை எதிர்பாராமல். டிசம்பர் 22 1964, தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு எப்போது எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும் மழை பெய்யும் கடலுக்குள் செல்லக் கூடாது என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது தெரியும் ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது. ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார், தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும் என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை. எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே ரயில் வருவதை தெரிவிக்க தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகித்துக் நீங்களே கொள்ளுங்கள். ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும், அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். விதி சற்றே வலியது அதனால் தானோ என்னவோ அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது. தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர். இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுந்த இந்த அபாய அறிவிப்பை உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். இதில் நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது. ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . ஆம் பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக்க மூடிக் கொண்டது. ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது. இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது, படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே போக்குவரத்துக் காரணிகள். மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடார்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள்அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று. மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர், இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. அதில் பயணித்த 115பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது என்று குறிப்பிடுகிறார். தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது. சமீபத்தில் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாகிய புயல் பல ஆயிரம் மக்களை பலி வாங்கியது. அதனுடன் ஒப்பிடும் பொழுது தனுத்கொடியில் உயிரிழப்புகள் குறைவு தான் என்ற போதிலும் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலானா நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. நிலமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது. ராமேஸ்வரமும் மற்ற பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாலும், தனுஷ்கோடி முழுவதுமாய் அழிந்திருந்தது. இந்நேரத்தில் பத்திரிகைகள் வேறுவிதமான ஒரு பீதியைக் கிளப்பின, "தனுஷ்கோடி புயலில் சிக்கிய ஜெமினி கணேசனும் அவரது மனைவி சாவித்திரியும் மாயம்". தமிழகமெங்கும் இந்த செய்தி இன்னும் பரவலாகப் பேசப்பட்டது. தங்களுக்கு எதுவும் ஆகவில்லை தாங்கள் நலமாக இருப்பதாக ஊடகங்களின் வாயிலாக தகவல் அறியப்பட்டதுமே தமிழகம் அந்தப் பீதியில் இருந்து தெளிந்தது. இருந்தும் புயலின் தாக்கம் பற்றி இவர்கள் கூறிய கருத்துக்கள் தனுஷ்கோடி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கின்றன. டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. அன்றைய இரவுப் பொழுதை தனுஷ்கோடியில் வேண்டும் என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை. சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர். தனுஷ்கோடிக்கு முன்பே புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள் தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது. புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : "ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுதே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது. சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல." "அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது. அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள். ராமேஸ்வரம் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை தங்களுக்காக பாம்பன் வரை முடியுமா என்று கேட்டுள்ளனர். இருந்த நிலகரிகள் அனைத்தும் புயல் மழையோடு சென்று விட்டதால் எரிபொருள் இல்லை என்று கூறி கையை விரித்துவிட்டனர் . அதன்பின் பேரிழப்பைப் பார்வையிட வந்த முதல்வரை சந்தித்து ஜெமினி தங்கள் நிலைமையை எடுத்துக் கூற அவரும் உதவி செய்வதாக கூறியுள்ளார். பின்பு ஒருவழியாக அவர்கள் பாம்பன் வந்து அங்கிருந்து மோட்டார் படகு மூலம் ராமநாதபுரம் வந்து பின் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். ராமஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் தங்கள் கையிலிருந்த ஆயிரம் ரூபாயையும் அங்கிருந்த மக்களுக்காகக் கொடுத்துவிட்டுத் தான் வந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியைப் பார்ப்பதற்கு வந்திருந்த தனுஷ்கோடி மக்கள் புயலில் இருந்து தப்பித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அப்படித் தப்பித்தவர்களில் ஒருவர் கூறுகிறார் " அன்னிக்கு மட்டும் நான் ராமேஸ்வரம் போகாம இருந்திருந்தா என் பொண்டாட்டி புள்ளைங்கள காப்பாத்தி இருப்பேன், இல்ல அதுங்களோட சேர்ந்து ஒரேடியாப் போயிருப்பேன்" தன்னைச் சந்திக்கும் பலரிடமும் இந்த வார்த்தைகளையே கூறிக் கொண்டுள்ளார். அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று. மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை மக்கள் வாழத் தகுதியற்ற நகரம் என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி. ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து மக்கள் வாழத் தகுதியற்ற என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து அன்று தொலைந்த தனுஷ்கோடி இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு. Thanks: http://www.seenuguru.com/p/blog-page_2408.html
  12. "அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை" அதுதான் பல தமிழர்களின் நிலை, பொயட். முதலில் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் தானே? அவர்கள் தாய் மொழி தமிழ் தானே? இதில் ஏன் மயக்கம்? அவர்கள் தாம் "தமிழர்கள்" தான் என்று எண்ணாதவரை இப்படி தேவையற்ற "நல்லுறவு(?), வல்லுறவு" என உறவுப்பாலம் போட்டே தமிழர்களின் சக்தி வீணாகிவிடும்.
  13. 'பொயட்' மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால் அவர் கவிதை, திரையுலகம் மற்றும் இலக்கியம் மட்டோடு நின்றுவிடுவதே தமிழர்களுக்கு நல்லது என்று தோன்றுகிறது.
  14. விசு 'நானா'வுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள். சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஜீவாவிற்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துகள்.
  15. வாழ்த்துக்கள் சாத்திரி. வட்டி விகிதமும் 'பாஞ்' पांच(५) ஞா? உங்கள் வங்கியோட 'லாக்கர்' எங்கேயிருக்குன்னு சொல்லுங்கள், ஒரு 'பஞ்ச்'சில் அள்ளிடுறோம்!
  16. "சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டம் என்பது, துறைமுக வளர்ச்சிக்கான திட்டம் மட்டுமல்ல, மாநகரின் நெரிசலுக்கு தீர்வு காண்பதோடு, மாநிலத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதால், மாநில அரசு, தடையை நீக்க வேண்டும்" என சுங்க முகவர்கள், வர்த்தக அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை துறைமுகம் ஆண்டுக்கு, 15 லட்சம் கன்டெய்னர்களை கையாண்டு வருகிறது. தினமும், 4,000 கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. போதிய சாலை வசதி இல்லாததால், நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.இதற்கு தீர்வு காண, 1,815 கோடி ரூபாயில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை, 19 கி.மீ., தூரத்திற்கு, மேம்பாலச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு, 2010, செப்., மாதம், பிரதமர் மன்மோகன் சிங், அடிக்கல் நாட்டினார். இதற்காக கூவம் கால்வாயையொட்டி பள்ளம் தோண்டி, பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டன. 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்த நிலையில், கூவம் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில், பணிகள் நடப்பதாகக் கூறி, தமிழக அரசு தடை விதித்தது. இதனால், கடந்த ஆண்டு மார்ச், 30ம் தேதி முதல் பணிகள் முடங்கின.இதை தொடர்ந்து, பிரதமரின் ஆலோசகர் டி.கே.நாயர், மத்திய அரசின் செயலர் ஏ.கே.உபாத்தியாயா ஆகியோர், நேரில் வந்து, அரசுடன் பேச்சு நடத்தினர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுத்த, அடுத்தடுத்த முயற்சிகளும், தோல்வியில் முடிந்ததால், 450 நாட்களையும் கடந்து, பணி முடங்கியுள்ளது. வேறு வழியின்றி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், 872.1 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் என, ஒப்பந்த நிறுவனம் கோரியுள்ளது. இந்த நிலையில், திட்டம் கைவிடப்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாமல், மாநில அரசு, தான் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என தொழில் வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர். எஸ்.நடராஜன், சென்னை சுங்க இல்ல முகவர் சங்க நிர்வாகி: நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முக்கியம். 130 ஆண்டுகளைக் கடந்த சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கேற்ப, கட்டமைப்பு வசதிகள் அவசியம். கன்டெய்னர் லாரிகளால் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை - மதுரவாயல் மேம்பால சாலை, சிக்கலுக்கு பெரும் தீர்வாக அமையும். மாநில அரசு, உள்நோக்கத்தோடு, ஏதோ காரணத்தைச் சொல்லி முடக்கி வைப்பது, ஏற்புடையது அல்ல. இந்த திட்டம் வராவிட்டால், துறைமுகத்தை நம்பியுள்ளோருக்கு பின்னடைவு ஏற்படும். துறைமுகம், 10 ஆண்டுகள் பின்னோக்கி போய்விடும். வெளிநாட்டு வணிக நிறுவனங்கள், வரதயக்கம் காட்டும். இது துறைமுகத்திற்கு மட்டுமல்ல; மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாதிப்பாகும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். சோழநாச்சியார் ராஜசேகர், தமிழ் வர்த்தக சங்கத் தலைவர்: சென்னை நகரின் நெரிசலுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட திட்டத்தை, சரியான நேரத்தில் செயல்படுத்த முடியாதது கவலை அளிக்கிறது. டில்லி - மும்பை இண்டஸ்டிரியல் காரிடாரால், மும்பை அதிவேக வளர்ச்சி பெற்றது. விரைவில், பெங்களூரு - சென்னை இண்டஸ்டிரியல் காரிடார் அமைக்கப்பட உள்ளது.இதனால், தென் மாநிலங்கள் அனைத்தும், சென்னையோடு இணைக்க முடியும். சென்னை - மதுரவாயல் மேம்பால சாலை அமைவதால், காரிடாரின் பயன் தமிழகத்திற்கு முழுவதும் கிடைக்கும். தொழில் நிறுவனங்களும் அதிகரிக்கும். சென்னை துறைமுகத்துக்கான திட்டம் என, குறுகிய நோக்கில் பார்க்கக் கூடாது. எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களின் வளர்ச்சி, மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியது. மாநில அரசு தடை நீக்கி, திட்டத்துக்கு ஊக்கப்படுத்த வேண்டும். கஜேந்திரன், ஏற்றுமதியாளர்: சென்னை துறைமுகத்தில், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வர்த்தகர்கள், எண்ணூர், காட்டுப்பள்ளி, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுகங்களுக்கு திரும்பிவிட்டனர். ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல், சுங்க வரி ஈட்டித்தரும் துறைமுகத்தின் எதிர்காலமே, சென்னை - மதுரவாயல் மேம்பால சாலைத் திட்டத்தில் தான் உள்ளது. இதை செயல்படுத்தாவிட்டால், நாளடைவில் நலிவடைந்து, மூடும் நிலை வரலாம்.துறைமுகம் சார்ந்த பிரச்னைமட்டுமல்ல; மாநில வளர்ச்சியும் இதில் அடங்கியுள்ளதை, தமிழக அரசு உணர வேண்டும். சுகுமார், தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர்: நெரிசல் காரணமாக, துறைமுகத்தில் சரக்கு ஏற்றும் லாரிகள், நகரை விட்டு வெளியேற, ஐந்து நாட்கள் வரை ஆகி விடுகிறது. இதற்கு, சென்னை - மதுரவாயல் மேம்பால சாலை தான் ஒரே தீர்வு; அரை மணி நேரத்தில் சென்று விடலாம். மதுரை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டாலும், அவசர உதவிகள் தேவைப்பட்டாலும், பாலத்தில் இருந்து இறங்க வழி உள்ளதால், 20 நிமிடங்களில், சென்னை அரசு பொது மருத்துவமனையை அடையலாம்.திட்டத்துக்கான தடை நீக்கக் கோரி, 30ம் தேதி முதல் ஸ்டிரைக் நடத்த உள்ளோம்.இவ்வாறு தெரிவித்துள்ளார். திட்ட வரைவில், தொழில்நுட்ப ரீதியாக சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை சரி செய்து, திட்டத்தைத் துவங்க, எல்லா நடவடிக்கைளையும், மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மாநில அரசு தடை நீங்கி, பணிகள் விரைவில் துவங்க வேண்டும் என்பதே, சென்னை மக்களின் எதிர்பார்ப்பு. Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=785939
  17. டங்கு, கூவத்தில் கழிவுநீர் கொட்டலாம், மேசைக்கு கீழே துட்டு வெட்டணும்! கீழ்க்காணும் இடங்களில், "சென்னை குடிநீர் வழங்கல் & கழிவுநீர் வாரியத்திற்கு" சொந்தமான கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் உள்ளன. கொடுங்கையூர் வில்லிவாக்கம் கோயம்பேடு நெசப்பாக்கம் பெருங்குடி இந்த இணையத்தில் விவரணை இருக்கிறது. http://www.chennaimetrowater.com/departments/operation/sewerage.htm http://www.chennaimetrowater.com/pdf/stp.pdf நான் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் இம்மாதிரி ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை பார்த்த நினைவு.
  18. நேற்றைய டெக்கான் க்ரோனிகிள் ஊடகத்தில், மதுரவாயல்- சென்னை துறைமுகம் விரைவு மேம்பால திட்டதைப்பற்றி ஆங்கிலத்தில் வந்த செய்தி இது.
  19. சுமோ அக்கா, வாணன் மற்றும் குமாரசாமி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.