சிறு வயதில் சில நிகழ்வுகள் நம் மூளையில் பதிந்துவிட்டால் மரணிக்கும் வரை அந்த உணர்வுகள் மாளாது.
நான் ஆரம்ப பள்ளியில் படிக்கும்பொழுது சில ஆசிரியர், ஆசிரியைகளைக் கண்டால் ரொம்ப பயமும் மரியாதையும் தோன்றும்.
நான் பிறந்து வளர்ந்த கிராமம் சிறியது.
ஆரம்ப பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் குறிப்பிட்ட டீச்சர் வசித்து வந்த வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். அந்த டீச்சரின் கண்டிப்பும், கற்பித்தலும் இன்றுவரை என் மனதில் பசுமையாக உள்ளது. அவரை கண்டால் பயமுண்டு. அவர் சொல்லிக்கொடுத்த விதம் ஆழமாக பதிந்ததால்தான் பின்னாளில் பொறியாளராக முடிந்தது.
இப்பொழுதும் முதிய வயதில் நான் பிறந்த கிராமத்துக்கு செல்லும்போது அவர் வசித்த வீட்டை கடக்கும்பொழுது என்னையுமறியாமல் கால்கள் தயங்கும். மனசும் கொஞ்சம் பதற்றத்தில் சலனப்படும்.
அவர் இன்னமும் வாழ்கிறாரா..? என தெரியாது. இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த டீச்சரம்மாவின் ஞாபகமே வரும்.