Jump to content

Ahasthiyan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2037
 • Joined

 • Last visited

 • Days Won

  3

Ahasthiyan last won the day on January 27 2017

Ahasthiyan had the most liked content!

1 Follower

About Ahasthiyan

 • Birthday February 16

Profile Information

 • Gender
  Male
 • Location
  UK
 • Interests
  தமிழ், விளையாட்டு

Recent Profile Visitors

6182 profile views

Ahasthiyan's Achievements

Mentor

Mentor (12/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Very Popular Rare
 • First Post
 • Posting Machine Rare

Recent Badges

780

Reputation

 1. GCE(A/L) வரை தமிழ் படித்த மாணவர்களுக்கும் உதவியாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொதுவாக ஜேர்மனியில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு தமிழ் அறிவு கூட.
 2. இங்கிலாந்திலும் இதே நிலைமைதான், விலை ஏற்றதினால் அரசாங்க உதவியில் உள்ளவர்களுக்கு மேலதிகமாக £650 வழங்கப்பட உள்ளது. எல்லா வீட்டுகாரர்களுக்கும் £400 எரி வாயு / மின்சார உதவி தொகை வழங்கப்படும். இதற்கு முன்பு சென்ற மாதம் வீட்டு வரி கட்டுவர்களுக்கு £150 வழங்கப்பட்டது. நிலைமை மோசமாக போகிறது. https://www.bbc.co.uk/news/business-61802109
 3. முதல் பௌத்த பிக்கு பல்கலைக்கழகம் போக உதவியவர் ஒரு தமிழர் நாங்கள் நடத்திய நிகழ்ச்சிக்கு ராகுல-தங்கராஜா இரட்டைப்பாடசாலை நிகழ்ச்சி என்று பெயர். 1930 களில் வல்பொல ராகுல தேரர் பல்கலைக்கழகத்துக்கு முதல் பௌத்த பிக்குவாக தெரிவு செய்யப்பட்ட போது அவர் பௌத்த சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டார். சரவணமுத்து தங்கராசா என்ற தமிழ் கனவானே உதவியவர். ராகுல கல்வியைத் தொடர உதவியவர்.
 4. உரிய மரங்களை வளர்த்து, சிறந்த முறையில் இதனை இயங்க வைத்திருக்க முடியும். இருப்பது தமிழர் பிரதேசம்.
 5. ஒரு கதைக்கு நீதி மன்றம் பணத்தை கட்ட சொல்லி சொன்னாலும் 35 மில்லியன் ரூபா தான் கட்ட வேண்டும். இவன்கட சேமிப்பு எல்லாம் டொலரில் தான். புரட்டாதி மாதம் பிரச்னை ஓரளவு தணிந்து விடும் என்று நினைக்கலாம் அல்லது வாய்தா. இந்த கதை இவருக்கும் பொருந்தும்: இரு நண்பர்கள், ஒருவர் சிறிலங்கா மற்றவர் நைஜீரியா, லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தார்கள். மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்து அவரவர் நாட்டுக்கு திரும்பினார்கள், இருவரும் அரசியலில் நுழைந்து இளம் வயதில் மந்திரி ஆனார்கள். சில வருடங்களுக்கு பின்பு சிறிலங்கா நண்பர் நைஜீரியா நண்பர் நாட்டுக்கு விசிட் அடித்தார். அங்கு அவர் ஆடம்பரமான பங்களாவில் வாழ்ந்து வந்தார், எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று வினவினார். நான் வீதி அபிவிருத்தி அமைச்சராக இருக்கின்றேன் என்று சொல்லி தான் போட்ட நெடுஞ்சாலை வீதியை காண்பித்தார், சிறிலங்கா நண்பருக்கு தூக்கிவாரி போட்டது , அங்கு மணல் தரை மட்டுமே இருந்தது. நைஜீரியன் இதுதான் அரசியல் என்றார். சனமும் எதிர் கட்சிகளும் இந்த நெடுஞ்சாலைக்கு போராட்டம் நடத்த, நாம் அடுத்த வேலை திட்டத்தில் சுமாரான பணத்தை எடுத்து இந்த பிரச்சனையை பூசி மெழுகி மூடி விட வேண்டும் என்றார். சில காலம் செல்ல நைஜீரியன் நண்பர் சிறிலங்கா நண்பரிடம் விசிட் அடித்தார், நண்பரின் செல்வந்த நிலையை கண்டவர் நல்லாத்தான் அரசியல் செய்கிறார் என்றார், எப்படி என்றும் கேட்டார். குருவே எல்லாம் உங்கள் ஆலோசனைதான், இங்கு நான் மகாவலி ஆறு திசை திருப்பும் அமைச்சர் என்று சொல்லி திரை சீலையை விலக்கி ஒரு வறண்ட காய்ந்த பூமியை காண்பித்தார்.
 6. பூரண குணமடைய பிரார்த்திக்கின்றோம், நேர்மையான மனிதர், ஈழத்தை ஆழமாக நேசிக்கிறவர்.
 7. இந்த நிகழ்வுக்கு போன ஒருவரின் கருத்து: மற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் இது ஒரு சிறிய தொடக்கமாகும். இது ஒரு பெரிய நிலைக்கு வளரும் என்றும், சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன். இந்த அரங்கம் இல்லாமல், இதை நம்மால் சாதிக்க முடியாது .
 8. நீங்கள் சிங்கமாயிருந்தாலும் நரியின் குகைக்குள் செல்லும் போது நரியின் உதவி தேவை, இது சாதாரண பாமரனுக்கே தெரிந்த விடயம். அவர் எந்த கொள்கை எடுத்தாரோ, தருணம் வரும்போது அந்த கொள்கையை வைத்தே நீங்களும் அடிக்கலாம், ஒற்றுமையாக இருந்தால்!
 9. அவர்கள் இந்த வீடுகளில் வாழ்ந்தால்(?) இது நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கான திறந்த வெளி சிறை. எப்பொழுதும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்,
 10. நேற்று பகல் வேலையில் நின்றதால் செய்திகளை பார்க்க முடிய வில்லை , ஒரு 4.30 போல போனை திறந்தால் , வாட்ஸ் அப், முக புத்தகம் யாழ் என சகலதும் களை கட்டி இருந்தது, நம்பவே முடியவில்லை. அதுவும் மே மாதம் நடக்கின்றது. 2005 இல் தலைவர் சொன்னார், இவர்தான் (மகிந்த) நான் எதிர் பார்த்த ஆள், எவ்வளவு தீர்க்க தரிசனம். மாவீரர், பொது மக்கள் இனிமேல் நிம்மதியாக உறங்குவார்கள், ஏன் நாமும் நேற்று ஏதோ மன பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்ந்தோம்.
 11. உண்மை, என்றும் மாறாத இழுக்காக வரலாற்றில் எழுத பட்டுவிட்டது. கலைஞர் அரசியலில் முற்றி பழுத்து கொட்டை போட்ட ஆளா இருந்தும், இதில் தோற்று விட்டார்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.