Jump to content

Ahasthiyan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2042
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Ahasthiyan last won the day on January 27 2017

Ahasthiyan had the most liked content!

1 Follower

About Ahasthiyan

  • Birthday February 16

Profile Information

  • Gender
    Male
  • Location
    UK
  • Interests
    தமிழ், விளையாட்டு

Recent Profile Visitors

6257 profile views

Ahasthiyan's Achievements

Mentor

Mentor (12/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • First Post
  • Posting Machine Rare

Recent Badges

783

Reputation

  1. M.A.Yogeshwaran அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களில் 93.8 % பேர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்த பட்ச கல்வித் தகைமையாக கொண்டு இருக்கிறார்கள். நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் 90 % பேர் பல்கலைக்கழக பட்டம் ஒன்றை தங்களது குறைந்த பட்ச கல்வித் தகமையாக கொண்டு இருக்கிறார்கள். பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு குறித்த நாட்டு மக்களால் தெரிவு செய்யபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 85 % பேர் பல்கலைக்கழக பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்தபட்ச கல்வி தகமையாக கொண்டு இருக்கிறார்கள். அவுஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர்களில் 75 % பேர் பல்கலைக்கழக பட்டம் (university degrees) ஒன்றை தங்களது குறைந்தபட்ச கல்வி தகமையாக கொண்டு இருக்கிறார்கள். இது மட்டுமின்றி மேற்குறித்த நாடுகளில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் கல்வி தகமைகளோடு, நேர்மறையான விழுமியங்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அனுபவங்களையும் கொண்டு இருக்கிறார்கள். இதனால், சட்டவாக்க சபைகள் என சொல்லப்படும் பாராளுமன்றங்களில் குறித்த நாட்டின் வளர்ச்சி குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தவும் காத்திரமான தீர்மானங்களை எடுக்கவும் முடிக்கின்றது. நாட்டின் நலன் சார்ந்த சட்டங்களை உருவாக்க முடிக்கின்றது குறித்த நாட்டில் வசிக்கும் சகல மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முடிகின்றது. பேச்சு சுதந்திரம் உட்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடிகின்றது. அரசியல் தலையீடுகள் அற்ற அரச நிருவாகத்தை ஏற்படுத்த முடிகின்றது. இதனூடாக மேற்குறித்த நாடுகள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறவும் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி நகரவும் பங்களிக்கிறார்கள். குறிப்பாக நியூசிலாந்து பாராளமன்றத்தில் அங்கம் வகிக்கும் மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் கோவிட் 19 பெரும் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள பங்களித்தவர்களில் முன்னணியில் இருந்தார்கள். ஆனால், அண்மைய தகவல்களின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 225 பாராளமன்ற உறுப்பினர்களில் (Legislators) 94 பேர் GCE O/L Level பரீட்சையில் சித்தி பெற தவறியவர்களாக இருக்கிறார்கள் . அதாவது 42 % மான இலங்கை பாராளமன்ற உறுப்பினர்கள் GCE O/L Level பரீட்சையில் கூட சித்தி பெறவில்லை. இதுமட்டுமின்றி இலங்கையில் கொலை குற்றாவளிகள் , போதைப்பொருள் வியாபாரிகள் , ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் பலரும் பாராளமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்கள். வடக்கு கிழக்கிலும் இதே நிலைமை தான் இருக்கிறது குழந்தைகளை பணத்திற்காக கடத்தி கொலை செய்த பிள்ளையான் வடக்கு கிழக்கில் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றார். உலகில் எங்காவது இது சாத்தியமா ? அதாவது சட்டவாக்க சபையாக கருதப்படும் பாராளமன்றத்தில் தெரிவு செய்யப்படும் மேற்குறித்த கிரிமினல் குற்றவாளிகள் தான் சட்டங்களை உருவாக்குகின்றார்கள் அங்கயன் இராமநாதன், வியாழேந்திரன் போன்றோர் 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிதார்கள் வெறும் 2 ஆண்டுகளில் அதற்கு முரணான 20 ஆம் திருத்த சட்ட திருத்திற்கும் ஆதரவாக வாக்களிக்கிறார்கள். 17 ஆம் திருத்தம் , 18 ஆம் திருத்தம் , 19 ஆம் திருத்தம் , 20 ஆம் திருத்தம் என ஒன்றுக்கு ஒன்று முரணான சட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக ஆட்சியில் இருக்கும் தரப்புகளை திருப்திப்படுத்த டக்ளஸ் தேவானந்தா வாக்களிக்கிறார். இப்போது 21 ஆம் திருத்தும் முன்மொழியப்பட்டால் அதற்கும் ஆதரவாக வாக்களிப்பார்கள் . இவர்கள் யாருக்கும் எந்த குற்ற உணர்வும் இல்லை இதே நிலை தான் தெற்கிலும் இருக்கின்றது இவ்வாறான கிரிமினல்களை சொந்த இலாபங்களை வாக்களித்து விட்டு புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை Parliament not a place for thugs and hooligans Copied
  2. இது அவரின் கருத்து,இந்த போராட்டத்தை எங்களுக்கு சார்பாக திருப்ப ஏதாவது வழிகள் இருக்கின்றனவா என அனுபவம் உள்ளவர்களும் கருத்துரைக்கலாம். முடியாதது என்ற ஒன்றில்லை.
  3. ஈராக் போரின் போது எப்படி டொனி பிளேயர் அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் போல் செயல்பட்டாரோ அதேபோல் இனி வருபவர்களும் பென்டகனின் செய்தியை தாங்கி செல்பவராகவே இருப்பார்கள்.
  4. GCE(A/L) வரை தமிழ் படித்த மாணவர்களுக்கும் உதவியாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொதுவாக ஜேர்மனியில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு தமிழ் அறிவு கூட.
  5. இங்கிலாந்திலும் இதே நிலைமைதான், விலை ஏற்றதினால் அரசாங்க உதவியில் உள்ளவர்களுக்கு மேலதிகமாக £650 வழங்கப்பட உள்ளது. எல்லா வீட்டுகாரர்களுக்கும் £400 எரி வாயு / மின்சார உதவி தொகை வழங்கப்படும். இதற்கு முன்பு சென்ற மாதம் வீட்டு வரி கட்டுவர்களுக்கு £150 வழங்கப்பட்டது. நிலைமை மோசமாக போகிறது. https://www.bbc.co.uk/news/business-61802109
  6. முதல் பௌத்த பிக்கு பல்கலைக்கழகம் போக உதவியவர் ஒரு தமிழர் நாங்கள் நடத்திய நிகழ்ச்சிக்கு ராகுல-தங்கராஜா இரட்டைப்பாடசாலை நிகழ்ச்சி என்று பெயர். 1930 களில் வல்பொல ராகுல தேரர் பல்கலைக்கழகத்துக்கு முதல் பௌத்த பிக்குவாக தெரிவு செய்யப்பட்ட போது அவர் பௌத்த சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டார். சரவணமுத்து தங்கராசா என்ற தமிழ் கனவானே உதவியவர். ராகுல கல்வியைத் தொடர உதவியவர்.
  7. உரிய மரங்களை வளர்த்து, சிறந்த முறையில் இதனை இயங்க வைத்திருக்க முடியும். இருப்பது தமிழர் பிரதேசம்.
  8. ஒரு கதைக்கு நீதி மன்றம் பணத்தை கட்ட சொல்லி சொன்னாலும் 35 மில்லியன் ரூபா தான் கட்ட வேண்டும். இவன்கட சேமிப்பு எல்லாம் டொலரில் தான். புரட்டாதி மாதம் பிரச்னை ஓரளவு தணிந்து விடும் என்று நினைக்கலாம் அல்லது வாய்தா. இந்த கதை இவருக்கும் பொருந்தும்: இரு நண்பர்கள், ஒருவர் சிறிலங்கா மற்றவர் நைஜீரியா, லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்தார்கள். மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்து அவரவர் நாட்டுக்கு திரும்பினார்கள், இருவரும் அரசியலில் நுழைந்து இளம் வயதில் மந்திரி ஆனார்கள். சில வருடங்களுக்கு பின்பு சிறிலங்கா நண்பர் நைஜீரியா நண்பர் நாட்டுக்கு விசிட் அடித்தார். அங்கு அவர் ஆடம்பரமான பங்களாவில் வாழ்ந்து வந்தார், எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று வினவினார். நான் வீதி அபிவிருத்தி அமைச்சராக இருக்கின்றேன் என்று சொல்லி தான் போட்ட நெடுஞ்சாலை வீதியை காண்பித்தார், சிறிலங்கா நண்பருக்கு தூக்கிவாரி போட்டது , அங்கு மணல் தரை மட்டுமே இருந்தது. நைஜீரியன் இதுதான் அரசியல் என்றார். சனமும் எதிர் கட்சிகளும் இந்த நெடுஞ்சாலைக்கு போராட்டம் நடத்த, நாம் அடுத்த வேலை திட்டத்தில் சுமாரான பணத்தை எடுத்து இந்த பிரச்சனையை பூசி மெழுகி மூடி விட வேண்டும் என்றார். சில காலம் செல்ல நைஜீரியன் நண்பர் சிறிலங்கா நண்பரிடம் விசிட் அடித்தார், நண்பரின் செல்வந்த நிலையை கண்டவர் நல்லாத்தான் அரசியல் செய்கிறார் என்றார், எப்படி என்றும் கேட்டார். குருவே எல்லாம் உங்கள் ஆலோசனைதான், இங்கு நான் மகாவலி ஆறு திசை திருப்பும் அமைச்சர் என்று சொல்லி திரை சீலையை விலக்கி ஒரு வறண்ட காய்ந்த பூமியை காண்பித்தார்.
  9. பூரண குணமடைய பிரார்த்திக்கின்றோம், நேர்மையான மனிதர், ஈழத்தை ஆழமாக நேசிக்கிறவர்.
  10. இந்த நிகழ்வுக்கு போன ஒருவரின் கருத்து: மற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் இது ஒரு சிறிய தொடக்கமாகும். இது ஒரு பெரிய நிலைக்கு வளரும் என்றும், சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கும் என்றும் நம்புகிறேன். இந்த அரங்கம் இல்லாமல், இதை நம்மால் சாதிக்க முடியாது .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.