Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Ahasthiyan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,985
 • Joined

 • Last visited

 • Days Won

  3

Everything posted by Ahasthiyan

 1. ஆமாம், மனைவி பருத்தித்துறை மெதடிஸ் பாடசாலையில் ஆசிரியராக இருந்தவர், இரண்டு பிள்ளைகள். மகன் மாவீரர் ஆவார், இந்தியன் ராணுவத்துடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்தார் என்று நினைக்கின்றேன். மகள் இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்.
 2. Out post என்றோரு படம் பார்த்தேன். திட்டமிடல் இல்லாமல் ஒரு பள்ளத்தாக்கில் முகாம் அமைக்கிறார்கள், தீவிரவாதிகளின் பலத்த தாக்குதலால் உயிர் இழப்புகளுடன் ராணுவம் பின் வாங்குகிறது. ஒரு கட்டத்தில் Bharain இல் இருந்து தாக்குதல் விமானங்கள் அழைக்க படுகின்றன. கடல் வழி இல்லாத நாட்டில் தோற்ற மூன்றாவது வல்லரசு நாடாக திரும்புகிறார்கள்.
 3. ரணில் எடுப்பார் கைப்பிள்ளை. தன்னிடம் இருக்கும் சொற்ப அறிவை, எதிர் கட்சிகளை பல படுத்தவே பயன்படுத்துகிறார்.
 4. 2019 2015 எங்கள் நிலத்தில் நாம் தான் பெரும்பான்மை, இதுதான் சிங்கள அரசுக்கு தமிழ் மக்களின் பதில். இதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த அரசு எமது தேசிய இனத்தின் அரசு அல்ல. ஒரு நாடு இரு தேசிய இனங்கள். (One country two nations) கடும் அடக்குமுறைகளின் நடுவிலும் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்களை சைக்கிள் டைனமோவில் கேட்டவர்கள் எம் மக்கள்.
 5. எத்தனையோ முறை பார்த்து விட்டேன் இந்த வாலியின் கவிதை, சில வலிகளை மறந்து வாழ்வதுதான் மனித வாழ்க்கை, அவை தந்து விட்ட பாடங்கள் தான் எத்தனை- ஒரு காலமும் மறக்க முடியாது. இவன்தான் எங்கள் துரோகி , இவன்தான் எங்கள் எதிரி என எங்கள் இதயத்திற்கு அடிக்கடி pacer கொடுக்கும் வாலியின் வரிகள். இன்னும் 10 ஆண்டுகள் சென்றாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். இணைப்பிற்கு நன்றி கு.சா.
 6. இன்று மேதகு படம் பார்த்தேன். அக்கினி குஞ்சொன்று பிறந்தது, படத்தின் ஆரம்பம் பிரமாதம். வீர தமிழ் மகள் போலீஸ்காரன் தலையில் குடத்தால் அடித்து பின் வந்தவர்களுக்கு வழி காட்டி நிக்கிறாள். புத்த பிக்குகள் வழி மாறி பயணிக்கிறார்கள், இலங்கை புத்த பிக்குமாரில் சாந்தமான பார்வை இல்லை, இதை அழகாக காட்டி இருக்கிறார். பாடல்கள் பிரமாதம், மேள சத்தமும் பறையோசையும் பாடல்களுக்கு மெருகூறுகின்றன. கூத்து கலைஞர்களை நன்றாக வடிவமைத்துள்ளார், மாவீரன் கதை சம காலத்தில் வாழ்ந்த எமக்கு பெரும் பாக்கியமாக உள்ள அதே வேளை கண்ணீரையும் வரவழைக்காமல் இல்லை. மிகச் சிறந்த படைப்பு, பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய படம்
 7. இவர் முன்னைய காலங்களில் சிறி லங்கா அரசுகளை பல நெருக்கடிகளில் இருந்து தனது நரித்தனத்தால் காப்பாற்றினவர். இப்பொழுது மகிந்த கோத்தா அரசு சர்வதேச நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது. இவரின் உதவி அவர்களுக்கு தேவை. இது மகிந்த/ கோத்த காய் நகர்த்தல் என்றுதான் நினைக்கின்றேன்.
 8. கொழும்பில் இருந்து புகையிரத்தில் யாழ் வருகையில் சாவகச்சேரியில் சிலர் ஆயுதங்களுடன் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இளம் வயது பெடியலை இறக்கினார்கள், அதில் நானும் ஒருவன். TNA இக்கு ஆட்கள் சேர்ப்பதாக கதைக்க பட்டது. புகையிரதம் புறப்பட்ட நேரம் எங்கள் பக்கத்தில் ஒரு ஆயுத தாரியும் நிக்காததால் நாங்கள் 4, 5 பேர் புகையிரத்திற்குள் ஏறி கொண்டோம். ஒரு வழியாக வீட்டுக்கு வந்தது நிம்மதி என்றால் அடுத்த நாள் சுற்றி வளைப்பில் என்னை மட்டும் தலையாட்டி கையை காட்டினார். மற்றவர்கள் எல்லாம் போக என்னை மட்டும் கடற்கரையை அண்டிய தென்னம் தோப்பிற்குள் இந்திய ராணுவமும் ஒட்டுக்குழுவினரும் அழைத்து சென்றனர். எனது மூத்த அண்ணர் (என்னை விட 10 வயது கூடியவர்) இவர் படிக்கிறார், புலிகளுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி பார்த்தும் அவர்கள் விடவில்லை. தூரத்தில் இன்னுமொரு ஆள் மக்கள் கூட்டத்தில் இருந்து எங்களை நோக்கி நடந்து வந்தார், அவர் சாந்தன் (இந்த இடத்தில இவரை நினைவு கூறுவது சால சிறந்தது). என்னுடன் 5ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர். 83இல் பல இளைஞர்கள் இயக்கங்களுக்கு போக இவரும் டெலோவில் சேர்ந்தார். புலிகள் டெலோவை தடை செய்யும் போது இவரை ஊருக்குள் மட்டும் இருக்க சொல்லி விட்டு விட்டார்கள். இந்தியன் ஆமி ஒட்டுக்குழுக்கள் இவரை கூப்பிட்டும் தான் இனிமேல் இயக்கங்களுக்கு வர மாட்டேன் என்று தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விட்டார். இவர்தான் அந்த கும்பல்களுடன் இருந்து என்னை காப்பாற்றியவர். எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை என்று கூறினார், அவர்களும் அவர் சொன்னதை நம்பினார்கள் . துரதிஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் காலமாகி விட்டார். பிள்ளை பிடிகாரர்கள் தீவிரமாக இயங்கியதால் மயிலிட்டி வைத்தியசாலையில் பணியாற்றிய ஓன்று விட்ட அண்ணரின் உதவியுடன் அவரது அறையில் ஒழித்து இருந்து சிறி லங்கா ராணுவத்தின் விமானத்தில் 1000 ரூபாய் டிக்கெட் எடுத்து ரத்மலானை வந்து சேர்ந்தேன். ஆனையிறவு சோதனை சாவடியில் ஆசிரியைகள் ஒருவர் இருவர் தலையை சொரிஞ்சதால் தாக்கப்பட்டார்கள் என்று அறிந்தேன். காரணம் ஈரும்-பேனும் (EP). மறந்தும் தலையில் விரலை விட்டு நோண்ட கூடாது
 9. எனக்கும் டேவிட்டை தெரியும், இந்தியன் ஆமி காலங்களில் ஊரில் நிற்கும் போது இவரை சந்தித்து இருக்கின்றேன், மிக பலசாலி, கட்டு மஸ்தான உடல்வாகு, தெளிவாக ஆறுதலாக கதைப்பார். பாரமான ஆயுதங்களை தோளில் சுமந்து தாக்குதல் நடத்த கூடியவர். வீர வணக்கங்கள்
 10. இந்தியாவின் திட்டமிடல் இலங்கையை செல்லமாக தட்டி தங்கள் வழிக்கு கொண்டு வருவதை நோக்கியே இருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு அசைவும் தீவிர போக்கு சிங்களவர்களை உசுப்பேற்றும். ஆகவே இலங்கையை பகைக்க மாட்டார்கள். பொன் மலையில் நின்று கொண்டு இலங்கை இப்ப பிச்சை எடுக்கின்றது.
 11. எப்படி 3 மாதத்தில் திருப்பி கொடுக்க போகிறார்கள்? ஸ்ரீ லங்காவின் பொருளாதாரத்திற்கு கொள்ளி வைத்து விட்டு தான் ஆயுத மௌனிப்பு செய்தார்கள் , இப்ப பற்றி எரியுது
 12. மாஸ்டர் கூப்பிட்டு ரெண்டு குட்டு குட்டி, நான் சொல்லுறேன் உங்களுக்கு தமிழ் ஈழம் தான் தீர்வு, விருப்பமில்லாவிடில் வாய் பேசாமல் பொத்திக் கொண்டு இருங்கோ என்றால்...... சிலவேளை ஈழ எதிர் கருத்தாளர்கள் மௌனமாக இருக்கலாம் அல்லது புலிகள் இருந்த போது இருந்த உறங்கு நிலைக்கு போகலாம். நேற்று ஒருவரை கிரிக்கெட் கிளப்பில் சந்தித்தேன், எமது பிரச்சனைக்கு காரணம் இஸ்ரேல் என்று சொன்னார். ஏனப்பா பெரிய வட்டத்தில் நின்று ரவுண்டு அடிக்கிறீங்கள், முதல் உங்களை திருத்தி கொள்ளுங்கள், இயற்கை உங்கள் வ(லி)ழிக்கு பாதை காட்டும்.
 13. இப்படியும் நடக்கலாம் இந்தியா எவ்வாறு அணிசாரா கொள்கையில் (?) இருந்து அமெரிக்கா பக்கம் சார்ந்ததோ அவ்வாறு சீனாவுடன் சேரந்து இயங்கலாம் அல்லது கண்டும் காணாமலும் இருக்கலாம், ஐரோப்பியரின் காலனித்துவ அரசுகளை விட சீனா பரவாயில்லை என்ற நோக்கில். ஆனால் இந்து சமுத்திர பிராந்தியம் முற்றாக கை நழுவி போவதை அமெரிக்கா பார்த்து கொண்டு இருக்காது. 2000 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர் ஏன் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இல்லை? ஒரு வேளை படை கொண்டு இடங்களை பிடித்திருந்தாலும், அவர்களால் நிலைத்து நிக்க முடியவில்லை. இப்போது கொக்கிளாய், மணலாறு பகுதிகளில் குடியேறி இருக்கும் சிங்களவர்களும், ராணுவ பாதுகாப்புடன்தான் குடி அமர்த்த பட்டிருக்கிறார்கள். இந்த ராணுவ நிலைகள் வேறொரு சக்தியால் நீக்கப்பட்டால், இவர்கள் இங்கு தொடர்ந்து இருப்பார்களா? உலகில் பலரும் எதிர்வு கூறாத மாற்றங்கள் பல நடந்துள்ளன.
 14. உங்கள் கணிப்பு சரியாக இருந்தால், எங்கள் தேசம் மலர்வதை எந்த சுப்பனாலும் தடுக்க முடியாது.
 15. கொழும்பு: இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிகப் பெரும் அச்சுறுத்தலை சீனா மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.இதனடிப்படையில்தான் காலந்தோறும் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் நீடித்த ஒன்றாக இருந்தது. மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி இந்த விவகாரத்தில் தெள்ளத் தெளிவான நிலைப்பாடுடன், இலங்கையில் வேறு எந்த ஒரு அன்னிய நாடு காலடி கூட வைக்கவிடாமல் வெளியுறவுக் கொள்கையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்த இறுக்கம் தளர்ந்து போனதுஅணிசேரா கொள்கையில் தளர்வு 1990களுக்குப் பிந்தைய தாராள பொருளாதார மயமாக்கல் கோட்பாடு வியாபித்து இந்தியாவையும் ஆட்டிப் படைக்க இந்தியாவின் திடமான வெளியுறவு கோட்பாடுகள் ஊசலாட்டத்துக்குள் தள்ளப்பட்டன. ஒருகாலத்தில் அணிசேரா கொள்கை பேசிய இந்தியா, மெல்ல மெல்ல அமெரிக்கா சார்பு நிலையை நோக்கிப் போனது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த அண்டை தேசங்களையும் தம் பிடியில் வைத்திருந்த இந்தியா அதன் வல்லாண்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது.தமிழீழமும் தமிழரும் இந்தியாவின் பிடி நழுவிய இடங்களில் எல்லாம் மெல்ல மெல்ல சீனா தனது இருப்பை விஸ்தீரனப்படுத்தியது. இதன் உச்சம்தான் இப்போது இலங்கையில் ஒரு சுயாட்சி பெற்ற நகரையே சீனாவினால் பெற முடிந்திருக்கிறது. இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்கள், இலங்கையின் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை கோரியபோது அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன்விளைவாக தனித் தமிழீழம் எனும் தேசத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய போது அழித்தொழிக்கப்பட்டார்கள் தமிழர்கள். சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம் ஆனால் இலங்கைக்கு எந்தவித தொடர்புமே இல்லாத நாடுபிடி வேட்கையில் நுழைந்த சீனாவுக்கு சுயாட்சி தேசமாக ஒரு நகரையே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து கொடுத்திருக்கிறது சிங்களம். இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றமும் வழங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகால இந்திய மத்திய அரசுகள் வெளியுறவுக் கொள்கையில் எப்படி கோட்டை விட்டிருக்கிறது என்பதற்கு இந்த சீனாவின் சுயாட்சி நகரமே நல்ல எடுத்துக்காட்டு. இந்த சுயாட்சி நகரத்துக்குள் சீனா, ஆங்கிலம், சிங்களம்தான் மொழிகளாம். இங்கே தமிழுக்கு இடம் இல்லை. என்னதான் இலங்கைக்கு சொந்தமானதாக கொழும்பு நகரம் இருந்தாலும் கொழும்பு துறைமுக நகரம் என்பது சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது.இந்திய பாதுகாப்புக்கு பேராபத்து துறைமுக நகர பணிகள், வேலைவாய்ப்பு என்ற பெயரால் சீனர்கள் தங்குடையின்றி குடியேறலாம். ஏற்கனவே மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்ட காற்றாலை அமைக்க சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் தலைப்பகுதி தொடங்கும் வங்கக் கடல் பிராந்தியத்தை மிக எளிதாகவே வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா. இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருக்கிறது. இந்தியாவும் தமிழீழமும் இலங்கையில் தமிழீழம் உருவானால் இந்தியாவுக்குதான் பாதுகாப்பு என்கிற யதார்த்த உண்மையை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதனால் தமிழீழம் உருவாக அவர் அத்தனை விதமான உதவிகளையும் செய்தார். ஆனால் பின்னாளில் இலங்கையில் தனி ஈழம் உருவானால் இந்திய இறையாண்மைக்கு பேராபத்து என்று உண்மைக்கு மாறாக அதிகாரவர்க்கத்தினர் குறுக்குசால் ஓட்டினர். அதனால் தமிழீழம் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளும் 2 லட்சம் தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.இந்திய வெளியுறவு கொள்கை இப்போது எந்த ஆயுதப் போராட்டமும் இல்லாமலேயே இலங்கைக்குள் சீனா ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனி ஈழம், இந்தியாவுக்கு பேராபத்து எனில் தனி சீனா சுயாட்சி தேசம் இந்தியாவுக்கு நன்மையா செய்யப் போகிறது? இனியேனும் இலங்கை விவகாரத்திலும் ஈழத் தமிழரின் நியாயமான யதார்த்தமான கோரிக்கைகள் தொடர்பிலும் இந்திய வெளியுறவு சக்திகள் அதீதமான உண்மையாக அக்கறை செலுத்துவது என்பதுதான் நமது தேசத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய ஒரு யுக்தியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். https://tamil.oneindia.com/news/colombo/china-gets-overseas-colony-in-sri-lanka/articlecontent-pf551523-421655.html
 16. இந்தியன் ஆமி சுற்றி வளைந்திருந்த போதும் அவர்களுக்கு அடி பணியாது நேரடி மோதலில் மூவர் வீரச்சாவு அடைந்தனர். ரமேஷ் மாஸ்டர், ஜீவா, மற்றவரின் பெயர் ஞாபகமில்லை, யாரும் தெரிந்தால் பதிவிடவும். ரமேஷ் மாஸ்டர், ஜீவா வித்துடல்களை சுமந்து சென்று எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் எரித்தோம். வேவிலில் பல மூத்த உறுப்பினர்களின் உயிர் காத்தீர்கள். என்றும் அகலா நினைவுடன் வீர வணக்கங்கள் தம்பிராசா சத்தியமூர்த்தி (ஜீவா) வீரச்சாவு 20/05/1988
 17. நேரில் கண்ட உண்மை, 5 பரப்பு தோட்ட காணிக்கும் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்லாது அயலவர்களுக்கும் அலுக்காமல் நல்ல தண்ணீர் கொடுத்த ஊற்று கிணறு. 18 முழ ஆழம் (30 அடி), ஒரு முழு பனை அளவு துலா, நீர் தொட்டிகள், பத்தல் இப்படி full suite. இப்ப கிணற்றை வலைக் கம்பி போட்டு மூடி விட்டார்கள். மோட்டார் இயந்திரம் மட்டும் வேலை செய்கிறது. வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கி நிக்க கூடாது, புல் பூண்டுகள் பெரிதாக வளர்ந்து நிக்க கூடாது. இப்படி பல சட்டங்கள். நாங்கள் இயக்கையில் இருந்து ரொம்ப தூரம் விலகி வந்து விட்டோம். எனது ஆங்கிலேய நண்பர், லண்டனில் வாழ்ந்தவர் , இப்போ வடக்கிற்கு போய் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், முழு குடும்பமும் மரக்கறி மட்டும் சாப்பிடுகிறார்கள். எனது பக்கத்து வீட்டு ஆங்கிலேயர்கள் கணவனை தவிர இரு பிள்ளைகளுடன் தாய் மரக்கறி மட்டும் பிறந்த காலம் தொட்டு சாப்பிடுகிறார்கள்.
 18. முன்பே சீனாவை நோக்கி யாராவது போய் இருந்தால் நமது அதி மேதாவிகள் தோல்வியின் பழியை இவர்கள் மேல் போட்டு ஏறி இருந்து குத்தி இருப்பார்கள். இந்தியாவை நம்பியிருந்தால் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும், இப்ப சீனாவை நம்பி நாங்கள் அழிந்திட்டம் என்றெல்லோ ஒப்பாரி வைத்திருப்பார்கள். வறுத்தெடுப்பவர் 1. ஒருவர் முக புத்தகத்தில் நண்பராக உள்ளார் . இவர் ஆரம்பத்தில் புளட்டில் இருந்து துண்டை காணம் துணியை காணம் என்று ஓடி வந்து ஒருவாறு மன்னார் வந்தடைந்தார். தமயன் மன்னாருக்கு போய் இவரை தேடி கண்டு பிடித்து ( பிணங்களில் கூட தேடினார்) ஒருவாறு வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டார். பிறகு என்ன தான் சமூக நீதி கண்ட செம்மல் என்ற மாதிரி இவரின் எழுத்துக்கள். எங்கள் சடங்குகள், கோவில் திருவிழாக்கள் எல்லாம் இவரின் நகைப்புக்கு இடமாகின (ஊருக்குத்தான் உபதேசம் தனக்கல்ல). புலிகளையும், தலைவரையும் வறுத்தெடுப்பார், வாசிக்க ஏலாது. ஆயுத மௌனிப்புக்கு பிறகு தலைவர் மேல் இரக்கம் உள்ளவர் போல் நடித்தார். இப்போ சீமானின் மேல் இவரின் அனல் பார்வை கக்குகிறது . யாராவது எம் இனத்திற்கு எதாவது நன்மை செய்ய வந்தால் எதிர்ப்பதே இவர்களின் தொழில்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.