Jump to content

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    63
  • Joined

  • Last visited

  • Days Won

    1

பகிடி last won the day on April 27

பகிடி had the most liked content!

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

பகிடி's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • One Month Later
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Week One Done
  • Collaborator

Recent Badges

91

Reputation

  1. Ukraine மக்களுக்கு எப்பொழுதுமே ஏனைய ஐரோபிய நாடுகளின் பால் பேரன்போன்றும் கிடையாது. ஒரு காலத்தில் ஜெர்மனியை எதிர்த்தார்கள். பின்னர் அவர்களோடு கூட்டு சேர்ந்து சோவியத்தை எதிர்த்தார்கள்,அங்கு அன்றும் இன்றும் குறிப்பிட்ட மக்கள் யூதர்களை தொடர்ந்து வெறுக்கவே செய்கிறார்கள். எல்லாம் எந்தப்பக்கம் போனால் தமக்கு எது வாசியோ அதற்காக்கத் தான். என்ன ஒரு வித்தியாசம் என்றால் ரஷியன்ஸ்ஸை விட கொஞ்சம் பழக சௌகரியம் ஆனவர்கள். எந்த வெள்ளைத்தோல் இல்லாத மனிதரையும் தம்மை விட ஒரு படி குறைத்தே மதிப்பிடும் மனோபாவம் உள்ளவர்கள். செர்பியர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் என்று கனக்க இல்லை. எனக்கு தமிழ் நண்பர்களை விட ukraine நண்பர்கள் அதிகம் என்பதால் இதை தெளிவோடு சொல்ல முடியும்.
  2. இது தெரியாமல் போய் விட்டதே எனக்கு!!! கட்டாயம் வாசிக்கின்றேன் ரஞ்சித். விளக்கத்துக்கு நன்றி
  3. ரஞ்சித் அவர்களுக்கு நான் டன்பாசில் பல வருடம் வாழ்ந்தவன் என்பதால் சொல்கிறேன், உங்கள் எண்ணத்தோற்றத்தில் பிழைகள் இருக்கிறது. கம்யூனிச மனநிலையோடு காரியங்களை அணுகுவதால் இப்படித்தான் சிந்திக்கத் தோன்றும். அங்குள்ள ரஷியன் மக்கள் பெரும்பான்மை வாத மனநிலை கொண்டவர்கள், சிறுபான்மையினரின் மனநிலையை அறிய முடியாதவர்கள். உலக ஒழுங்கு முறையின் சமநிலை மாறாமல் இருக்க ரஷியா என்ற வல்லரசின் ஆதிக்கம் அவசியம் என்றாலும் ரஷ்யாவை அமெரிக்காவின் அல்லது பிரிட்டனின் இடத்துக்கு விடக் கூடாது. இலங்கைக்கு எதிரான மனித உரிமை பிரச்சனைகள் ஐக்கிய நாடுகளில் சபையில் வந்தப்பொழுது விக்டர் யனுக்கோவிச்சுக்கு (ரஷிய சார்பு அதிபர் )பிறகான உக்ரனிய அரசு இலங்கைக்கு எதிராகவே வாக்காளித்து இருக்கிறது.
  4. நீங்கள் சொல்வது சரிதான்.. போகப் போகத் தான் அடுத்தடுத்த பொறி முறைகள் நடைமுறைக்கு வரும். வீட்டில் இனி காஸ் அடுப்பு இல்லை விறகு அடுப்புத்தான் என்று அப்பா சொன்னதும், முந்தி பாவித்த உமி அடுப்பு ஒன்று வாங்கலாமே என்று சொன்னதும் அவரும் நீங்கள் சொன்னதைத்தான் சொன்னார்.. எல்லாம் இனி இனிதான் திரும்ப வரும் என்று.. அரபு நாடுகளில் ஓட்டகம் மேய்க்கப் போவீனம் ஆனால் நாட்டில் மாடு வளர்த்து பால் கறக்க வெட்கம்... எல்லாத்துக்கும் காரணம் ஊர் பெட்டைகள். மாடு வளர்க்கும் ஆம்பிளையை எவள் பார்க்கிறாள்?
  5. மாடு வைத்து உழுது பலகையடிக்கலாமே? நாட்டில் மாட்டுக்கும் பஞ்சமா?
  6. இலங்கை இனி மீள முடியாது. எங்காவது ஏறிய அமெரிக்க டோலரின் பெறுமதி குறைந்ததாக கேள்விப்பட்டதில்லை. சும்மா ஓரளவுக்கு பூசி மெழுகி ஓட்ட வைக்க முடியுமேயோழிய நாட்டை முழுமையாக உருப்படுத்தி எடுக்க மீண்டும் ஒரு ஸ்ரீமாவின் ஆட்சி வேண்டும். அதற்க்கு இலங்கை மக்கள் தயார் இல்லை. அவர்களுக்கு தேவை ஓரளவுக்கு பட்டி தட்டி ஓடக்கூடிய இலங்கை. அவர்கள் எந்த தியாகத்துக்கும் தயார் இல்லை தமிழர்க்கு உரிமை கொடுப்பது உட்பட. இந்த நாடு இன்னும் 50வருடம் ஆனபின்னும் இப்பிடி வேறு நாடுகளிடம் பிச்சை கேட்டுக்கொண்டு தான் இருக்கபோகின்றது.
  7. சரி தான் ஆனால் இதில் யாழ்ப்பாண மேட்டுக்குடி என்று ஒரு தரப்பாரை மட்டும் வைவது தவறு.. எல்லாரும் மலையக தமிழரை பார்த்த பார்வையில் தவறு இருக்கின்றது
  8. இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன். மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம். ஒரு நாள் மலையகத் தமிழரை நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது. எத்தனை வீட்டு வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த மகளின் உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை? இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி அவர்களை தூக்கி விட என்றும் நாங்கள் நினைத்ததில்லை. இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..
  9. இணைப்பிற்கு நன்றி நுணாவிலான் அவர்களே
  10. தனது எதிரி உண்மையில் யார் என்று தெரியாமல் வாள் சுழற்றும் வீரன் எப்படி வெற்றி பெற முடியும்?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.