Jump to content

பகிடி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  87
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by பகிடி

 1. ஓடுவது நல்லது தான் என்றாலும் இப்படி ஓடுவது கடைசியில் முழங்கால் அறுவை சிகிச்சையில் கொண்டு போய் முடிக்கும்
 2. சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்வேன் என்று மிரட்டுவது,பிறகு அதனை செய்வது இதெல்லாம் யாழ் சமூகத்தில் சர்வ சாதாரணம். இன்றைய திகதியில் மட்டும் யாழ்ப்பாணம் முழுவதும் குறைந்து ஆயிரம் குடும்பங்களிலாவது தற்கொலை செய்வேன் போன்ற கதையாடல்கள் நடந்து இருக்கும். பிரச்சனை எம் சமூகத்தின் மனோவியல் சம்பந்தப்பட்டது.யாரும் சைக்கோலஜி படித்தவர்கள் தான் விடை தர வேண்டும்
 3. அந்தச் செய்திகள் சலிப்பை தருகின்றன.. அதனால் தான்
 4. ராணிக்கு blood clot தான் இறப்புக்கு காரணம் என்று இந்த ராணியின் போட்டோவை வைத்து சொல்கிறீர்களா அல்லது வேறு ஏதும் அத்தாட்சியின் அடிப்படையில் சொல்கிறீர்களா? பொதுவாக blood clot இரத்த நாளாங்களுக்குள் தான் ஏற்படும் அதுவே மரணத்தை ஏற்படுத்தும்.. போட்டோவில் ஒரு கையில் மட்டுமே ஊசி போட்டதால் ஏற்பட்ட hematoma தெரிகிறது. பொதுவாக Blood clot இப்படி வெளியே தெரியாது.
 5. Blood clot வேறு hematoma என்பது வேறு. மேற்படி போட்டோவில் தெரிவது hematoma ( bruise ). ஆஸ்பத்திரியில் உள்ள வாயோதிபர்கள் intra Venus மூலம் மருந்து எடுத்து இருப்பின் இப்படி அவர்கள் எல்லோருக்கும் இருக்கும். இரத்தம் நாளத்தில் இருந்து கசிந்து சுற்றியுள்ள தசை மற்றும் தோலின் கீழ்ப் பகுதிக்கு சென்று இருக்கும். இந்தக் கசிவு blood clot ஐ உருவாக்காது. யாரும் இப்படி ஒன்று ஏற்பட்டு மரணம் அடைவது மிக சொற்பம்.
 6. அவர் கை கறுத்து இருந்ததற்கு காரணம் hematoma. கையில் saline ஊசி மூலம் செலுத்தும் பொழுது இரத்த நாளத்தில் இருந்து ஏற்படும் கசிவு.. இதனால் குருதி உறைந்து ஒருவர் இறப்பது வலு குறைவு. அவருக்கு வேறு நாளபட்ட நோய்கள் இருந்து இருக்கலாம்
 7. இந்த விஷயத்தில் பிரச்சனைகளை அதிகப்படுத்தி தமக்கு தேவையானவற்றை அரிசிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெற்றுகொள்வது தான் சாலச்சிறந்தது. உதாரணத்துக்குவிவசாய நிலங்கள் பறிப்போகும் என்பதால் இழப்பீட்டை பெறுமதிக்கும் அதிகமாகக் கேளுங்கள். பறிப்போகும் காணிகளுக்கு பதில் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கும் காணிகளைக் கேளுங்கள்.
 8. சோவியத் உடைந்த பொழுது அதை தடுக்க எத்தணிக்காமல் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்தவர் என்று கம்முனிஸ்ட்களால் வையப்பட்டாலும் அதை செய்யாமல் விட்டு ஏற்படவிருந்த பெரும் இரத்தக்களரியை தவிர்த்தவர் இந்த கோர்ப்பச்சோவ்.
 9. இவர் யப்பான் கொம்பனி ஒன்றிடம் இலங்கையில் தொழில் தொடங்க நூறு மில்லியன் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாக யப்பானிய உயரஸ் தானிகரால் நேரடியாக பெயர் சொல்லி குற்றம் சாட்டப் பட்டவர். ரணில் வந்ததும் சாட்டுக்கு ஒரு கோமிற்றி நியமித்து இவரில் பிழை இல்லை என்று தீர்ப்பு வந்ததற்கு பிரதி உபகாரம் செய்கிறார். இவர் முன்னர் சுகாதார அமைச்சராக இருந்த பொழுது தாதியர் வேலைக்கு பாலியல் லஞ்சம் கேட்டே வேலை நியமனம் கொடுத்தவர் ஆவார். நிறைய திருகுதாளங்கள் செய்தாலும் இன்னும் முறையாக மாட்டுப்படாமல் இருக்கிறார்
 10. அப்படி இலகுவில் நடக்காது.. இவரின் பாட்டன் தான் நீதிக் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவரை இழந்தால் இழப்பு திமுக க வுக்கு தான். தவிர உறவு முறையில் இவரும் சபரீசனும் சொந்தம் என்று கேள்வி
 11. இங்கே கனடாவில் லிபேரல் கட்சி எல்லோருக்கும் அடிப்படை சம்பளம் என்ற ஒன்றைப்பற்றி பேச தொடங்கி விட்டது.. கொரோனா போகிற போக்கில் அரைவாசிப்பேரை வீட்டில் இருந்தே வேலை செய்ய வைத்து விட்டது. ட்ரான் மூலம் டெலிவரி நடக்க எல்லாம் ஆயத்தம் ஆகி விட்டது, பாடசாலைகள் zoom மூலம் நடக்கிறது, எக்ஸாம், நேர்முகத்தேர்வு என்று எல்லாமே zoom மூலம் தான். ஆக அடுத்த ஒரு வருசத்துக்குள் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்
 12. அதன் பிறகும் பேசினார். கடைசிக் கூட்டம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தது. காங்கிரஸ்காரர் என்பதால் ராஜீவ் காந்தி மரண நிமித்தம் புலிகளை எதிர்த்தார். என்றாலும் கால ஓட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு தமிழ் தேசியவாதியாகவே மறைந்தார். கடைசி மூன்று ஆண்டுகளில் அவர் பிஜேபி காரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்
 13. இது தான் இப்போதைக்கு முதல் முதலாக செய்யப்பட வேண்டியது. இதற்காக ஓரு பலம் வாய்ந்த அமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப் பட வேண்டும். வெறுமனே அவர்களோடு இவர்களோ செய்யட்டும் என்று விட முடியாது. இதற்க்கு சரியான வழியாக எனக்குத் தெரிவது வடகிழக்கில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களும் ( ஓய்வு பெற்றவர்கள் உட்பட ), பெயர் பெற்ற ஆசிரியர்களும் இணைந்து இதை தொடங்க வேண்டும்.. யாராவது பூனைக்கு மணி கட்ட வேண்டும். தமிழ் ஈழம், மொழி உரிமை, சுயாட்சி என்பதெல்லாவற்றையும் விட இந்த சமூகத்துக்கு மாண்பு மிக முக்கியம்.
 14. ஜெயமோகன் என்னும் நஞ்சை உமிழும் உயிரினத்தை அதன் போக்கில் விட முடியாது. தொடருங்கள்
 15. பிரச்சனைகளுக்கு காரணம் 1) தட்டுப்பாடு அற்ற பொழுது போக்கு வசதிகள் ( இன்டர்நெட் ) 2) இறுகிய குடும்ப அமைப்பு மெல்ல மெல்ல அதன் கட்டுகோப்பை இழந்து வருவது 3) பக்தி இல்லாத சமுதாயம் இதை எப்படி சரிப்படுத்துவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை
 16. லூசுகள்.. இப்படி ஊருக்கு படம் காட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் எவரும் இன்று நன்றாய் இல்லை.
 17. இதை வீட்டில் சொல்ல அவர்கள் சொன்னது " பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்.. இவர்களை எப்படி திருத்துவது? (சொன்னது இரண்டும் பொம்பிளைகள் )
 18. ஏன் இலங்கையில் கோழி முட்டை போடாதா? இல்லாட்டி இலங்கை சேவல்களுக்கு ஆண்மை குறைந்து விட்டதா?
 19. Ukraine மக்களுக்கு எப்பொழுதுமே ஏனைய ஐரோபிய நாடுகளின் பால் பேரன்போன்றும் கிடையாது. ஒரு காலத்தில் ஜெர்மனியை எதிர்த்தார்கள். பின்னர் அவர்களோடு கூட்டு சேர்ந்து சோவியத்தை எதிர்த்தார்கள்,அங்கு அன்றும் இன்றும் குறிப்பிட்ட மக்கள் யூதர்களை தொடர்ந்து வெறுக்கவே செய்கிறார்கள். எல்லாம் எந்தப்பக்கம் போனால் தமக்கு எது வாசியோ அதற்காக்கத் தான். என்ன ஒரு வித்தியாசம் என்றால் ரஷியன்ஸ்ஸை விட கொஞ்சம் பழக சௌகரியம் ஆனவர்கள். எந்த வெள்ளைத்தோல் இல்லாத மனிதரையும் தம்மை விட ஒரு படி குறைத்தே மதிப்பிடும் மனோபாவம் உள்ளவர்கள். செர்பியர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் என்று கனக்க இல்லை. எனக்கு தமிழ் நண்பர்களை விட ukraine நண்பர்கள் அதிகம் என்பதால் இதை தெளிவோடு சொல்ல முடியும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.