Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

srinivasan chennappan

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  122
 • Joined

 • Last visited

About srinivasan chennappan

 • Birthday திங்கள் 15 மார்ச் 1971

Contact Methods

 • AIM
  vasankcs@yahoo.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  Chennai,India

srinivasan chennappan's Achievements

Explorer

Explorer (4/14)

 • Conversation Starter
 • First Post
 • Collaborator
 • Week One Done
 • One Month Later

Recent Badges

0

Reputation

 1. ஆறுமுகம் அய்யா அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் எழுதி வரும் கருத்துக்கள் நல்லவையே. ஆனால், இந்த சமயத்தில் இது தேவையா என்று எனக்கு சந்தேகமாய் இருக்கிறது. தங்கள் எழுத்துக்களை பார்த்தால் சைவ சித்தாந்தத்தில் நல்ல பரிச்சயம் உள்ளவர் என்று தெரிகிறது. ஆனாலும், சுவாமி விவேகானந்தர் அவர்களை காட்டிலும் தாங்கள் இறையனுபூதி பெற்றவர் அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். ஏனெனில் ஏதாவது புத்தகத்தை பார்த்து அதை அப்படியே இணையத்தில் இணைப்பதற்கும், தன் எண்ணம், சொல், செயல் மூன்றிலும் கடவுள் தன்மை வெளிப்படுபவர் சொல்லும் ஒரு சிறு சொல்லுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை காணலாம். சுவாமி விவேகானந்தர் , "எப்போதும் மாதிரம் சொல்லுவதிலும், பூஜை செய்வதிலும் நேரத்தை செல்வவிடும் நீங்கள், 'நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், என் பணி என்ன?' என்று எப்போதாவது சிந்தனை செய்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டிய மகத்தான பணிகள் காத்து கொண்டிருக்கின்றன. முதலில் உங்கள் பூஜையறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் தூக்கி ஆற்றில் போடுங்கள். வெளியில் வாருங்கள். கடவுள் ஏழைகளின் வடிவில் உங்கள் சேவைகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார். அவர்களின் கண்ணீரை துடையுங்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். உங்களால் முடிந்தவரை உதவுங்கள். இந்த உடல் எடுத்தது வெறும் சிற்றின்ப போகத்தில் ஆழ்ந்து போவதற்கல்ல என்று உணருங்கள். எவன் இன்னொரு உயிரின் துன்பத்தை தன் ஆன்மாவில் உணர்கிறானோ அவன் கடவுளே." என்று சொல்லியிருக்கிறார். மேலும் என் சிறு மனத்தால் நினைவில் வைத்து கொள்ள இயலாத அளவில் ஆழ்ந்த கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். அவரது "கர்ம யோகம்" என்ற புத்தகத்தை சமயம் கிடைத்தால் படியுங்கள். தமிழர் தாயக நிலை தெரியும்தானே? தமிழர் தாயகம் வஞ்சனையினால் சுடுகாடாய் மாற்றப்பட்டுள்ளது தெரியும் தானே? புலம் பெயர் தமிழர்கள் தாங்கவொண்ணாத மனசுமையில் அவதிப்படுகிறார்கள் என்று தெரியும்தானே? தாயக தமிழர்களும் பிச்சசைகாரர்களை போன்று நடத்தப்படுவதும், குழந்தைகளை இழந்த பெற்றவர்களும், பெற்றவர்களை இழந்த குழந்தைகளும் கண்ணீருடன் சகிக்கவொண்ணாத சூழலில் வாழ்வது தெரியும்தானே? இவர்களில் யாராவது ஒருவர் வாழ்விலாவது நிம்மதியினை கொடுக்க தங்களால் இயன்றதை செய்யலாமே? அதன் பின், உங்கள எண்ணங்களையும், பக்தியினையும், அவர்களுக்கு ஊட்டலாமே? செய்வீர்களா? அன்புடன், சென்னப்பன் சீனிவாசன். . உயிருக்குச் சத்திநிபாதம் படி முறையால் நிகழும் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்பன அம் முறை. அவற்றிற்கேற்ப உயிர் சரியையாதிகளைச் செய்யும். சமய தீக்கையுற்றுச் சரியை நெறியிலும், விசேட தீக்கையுற்றுக் கிரியை நெறியிலும் யோக நெறியிலும், நிர்வாண தீக்கையுற்று ஞான நெறியிலும் நிற்க வேண்டும். அத் தீக்கைகளின்றி அந் நெறிகளில் நின்றாற் கிடைப்பது அற்பப் பயனே. அத்தீக்கைகளை யுற்றுப் பத்திவாயிலாக அம்மார்க்கங்களை ஆதரிப்பதே முழுப்பயனையுந் தரும். அத்தீக்கைகளும், சரியையாதிகளும், பத்தித் திறன்களும் உயிருக்கு ஞானத்தைக் கொடுத்தல்லது நேரே வீடு பேற்றைத் தரா. அவையனைத்தும் ஞானத்துக்கு அங்கம். ஞானமொன்றே வீடு பேற்றை நேரே யருளும்.
 2. சாத்திரி, இது என்ன முட்டாள்தனமான நடவடிக்கை? தலைவர் இறந்து விட்டார் என்று பல விடயங்களை ஆராய்ச்சி செய்து அதை நிரூபித்து எதை சாதிக்க போகிறீர்கள்? ஏதாவது பட்டம் தரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்கு உறுதியாக தெரியும் பட்சத்தில் உங்கள் வீட்டினுள்ளேயே அஞ்சலி செலுத்திவிட்டு போங்களேன். யார் தடுத்தார்கள்? ஊர்கூடி ஒப்பாரி வைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? தலைவர் இறந்ததாக நம்புபவர்கள் செய்ய வேண்டியது, கண்ணீரை துடைத்துக்கொண்டு அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று ஆக்கபூர்வமாக ஆராய்ந்து அதில் ஈடுபட வேண்டியதுதான். தலைவர் இறக்க வில்லை என்று நம்புபவர்கள் அவர் வருவார் என்று திட நம்பிக்கையுடன் செயல் படட்டுமே! உங்களை போன்றவர்கள் பரப்பும் இது போன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளால் மன உறுதி உள்ளவர்கள் சமாளித்துகொல்லுவார்கள். மன உறுதி இல்லாதவர்கள் நொந்து மூலையில் உட்கார்ந்து விட மாட்டார்களா? இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.