Jump to content

Bagalavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

Bagalavan's Achievements

Rookie

Rookie (2/14)

  • One Year In
  • One Month Later
  • Week One Done
  • Conversation Starter

Recent Badges

0

Reputation

  1. சம்பந்தன் வளர்த்த கடா அவர் மார்பில் பாய்ந்து விட்டது என அவருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளைத் தலைவரும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரந் குறித்தே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் அப்படியே வருமாறு:- நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது. ஆப்பிரஹாம் சுமந்திரனின் தன்னிச் சையான முடிவுகளால் தமிழ்த் தேசியம் தேய்ந்து, கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்பு களைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கா மையின் விளைவுகளைத்தான் இப்போது பகிரங்கமாக காணக் கிடைக்கின்றது. தகைமையுள்ள பல்வேறு தமிழ் தேசிய ஆளுமைகள் இருக்கத் தக்கதாக நீங்கள் 2010ஆம் ஆண்டு ஆப்பிரஹாம் சுமந் திரனை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப் பினராக்கி அரசியல் முகவரி கொடுத் தீர்கள். ஆனால் இப்போது அரசியல் ரீதியில் உங்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்துவிதமான சூழ்ச்சிகளையும் அவர் முன்னெடுக்கின்றார். 2015 தேர்தலுக்குப் பின்னர் நல் லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் தான் அரசியலை விட்டும் விலகப் போவதாகக் கூறிய சுமந்திரன் இப்போது உங்களைப் பதவி விலகச் சொல்வது வேடிக்கையா னது. இரா.சம்பந்தன் அவர்களே! தமிழரசுக் கட்சியின் மூத்த தலை வர் நீங்கள். தமிழ்த் தேசியத்தின் பால் நீங்கள் கொண்டிருந்த பற்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்து வத்தை உங்களுக்கு அளிக்கச் செய்தது. கடினமான கால கட்டங்களில் நீங்கள், நாம் திருப்தியுறும் வகையில் வழிநடாத்தி னீர்கள். இப்போது உங்களின் ஆளுமைத் தளத்தைப் படுகொலை செய்யும் வகை யில் (உழசசநஉவழச யுளளயளளiயெவழைn) (ளiஉ) உங்களை அவமதித்து ‘முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் இரா.சம்பந்தன். உடனடியாகப் பதவி விலக வேண்டும்’ என்ற தனது தனிப்பட்ட கருத்தை தனியார் ஊடகமொன்றில் பகிரங்கமாகக் கூறி, 288 நாடாளுமன்ற நாள்களில் வெறும் 39 நாள்கள் மட்டுமே சமுகமளித்த உங்களுக்கு நான்கு மில்லியன் ரூபா தொலைபேசி, எரிபொருள் வாகனம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ள தாகத் தகவலறியும் சட்டத்துக்கமைய பெறப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அளிக்கப்படும் சிறப்புரிமையைக் கூட கேள்விக்குட்படுத்திய சுமந்திரன் நாகரிகமற்ற கூற்றுப் பற்றியும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களைப் பதவி விலகச் சொல்லி நிர்பந்திப்பதும், அல்லாதவிடத்து அதற்காக நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லியிருப்பதும் உள்நோக்கங்கொண்ட ஒரு செயற்பாடாகும். இது உங்களை அவமானப்படுத்தியது மட்டுமல்ல தமிழ்தேசிய அரசி யலுக்கான உங்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவதுடன் அது தமிழ் அரசுக்கட்சியையையும் இழிந்துரைக்கும் செயற்பாடுமாகும். எனவே விரைவாக இதற்கு தகுந்த நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதே தமிழ்தேசிய வாதிகளின் எதிர்பார்ப்பாகும். நீங்கள் வளர்த்த கடா பகிரங்கமாக பொதுவெளியில் வைத்து உங்களின் மார்பில் பாய்ந்துவிட்டது. திண்ணை எப்போது காலியாகும் என்ற அவரது எதிர்பார்ப்பு பகிரங்கமாகவே வெளிப் பட்டுவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவே நீங்கள் செயற்பட்டீர்கள். அதை இல்லாமல் செய்வதற்காகவே கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுக் கோரப்பட்ட போது த.தே.கூட்டமைப்பைச் சிதைத்து, தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டடைப்பை ஆப்ரஹாம் சுமந்திரன் திட்டமிட்டு சிதறடித்தமையின் நோக்கம் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பதவி யில் இருந்து உங்களை தூக்கியெறிவ தேயாகும். இப்போது நாடாளுமன்ற உறுப் பினர் பதவியில் இருந்து உங்களை விலக நிர்ப்பந்தித்து, அரசியலில் இருந்து உங்களை முற்றாக அகற்றுவதே அவரது இலக்காகும். அதைத்தான் பகிரங்கமாக அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். உடல் ரீதியில் நீங்கள் பலவீணமுற் றாலும், மனரீதியில் மிகவும் வலிமையானவர். உங்களின் வலிமையைச் சிதைப்பதற்கே சுமந்திரன் பகிரங்கமாக இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளார். உடனடியாகக் கட்சி காப்பாற்றப்பட்டு தமிழ்த்தேசியத்தின் கனவுகளைச் சுமந்த மக்களின் அபிமானமிக்க தமிழ்த் தேசியவாதி ஒருவரைக் கொண்டு தலைமைத்துவத்தைப் பலப்படுத்தி, கட்சியை நிலைப் படுத்தாவிட்டால் நிச்சயம் கட்சியின் இருள்சூழ்ந்த பக்கத்தை விரைவில் காண வேண்டி வரும். அது நமது இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோக மாகும். நமது அரசியல் பாதையில் போடப்படும் மாபெரும் தடைக்கல்லாக அமையும். ஆக இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்க்கின்றனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் எங்களுக்கு தேவை சம்பந்தன் பிரச்சாரம் தொடர்புடைய முன்னைய செய்திகள் சம்பந்தன் பதவி விலக வேண்டும் - சுமந்திரன்(காணொளி) விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்-சுமந்திரன் தலைமைப் பதவி குறித்த கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில் தமிழரசு கட்சி தலைமை கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்-சிறிதரன் இணைப்பு மூலம்
  2. அவர் மேற்படி பேட்டியில் தமிழரசுக்கட்சி தொடர்பான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திருமலையில் கட்சி இரண்டு பிரிவுகளாக செயற்படுகிறது சம்பந்தன் திருமலைக்கு செல்லமுடியாததால் திரு குகதாசன் தனக்கு வேண்டியவர்களை கட்சி கிளைகளை புனரமைத்து நியமித்து வருவதாகவும் சம்பந்தன் தரப்பை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி இப்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு தனக்கும் அந்த ஐயம் இருப்பதாகவும் தெரிவித்த சிவஞானம் கட்சி தேய்வடைந்து வருகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். முக்கியமான பகுதியும் முழுமையான பேட்டியும் உங்கள் பார்வைக்காக தொடர்புடைய முன்னைய செய்திகள் சம்பந்தன் பதவி விலக வேண்டும் - சுமந்திரன்(காணொளி) சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி) விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்-சுமந்திரன் தலைமைப் பதவி குறித்த கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில் தமிழரசு கட்சி தலைமை கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்-சிறிதரன்
  3. இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு பாராளுமன்ற படிகளாக 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுமக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா? என்று வினவப்பட்டபோது பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன். அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார். 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் தனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார். எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன. எவ்வாறாயினும், சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார். தொடர்புடைய முன்னைய செய்திகள் விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்-சுமந்திரன் தலைமைப் பதவி குறித்த கேள்விகளுக்கு சுமந்திரனின் பதில் தமிழரசு கட்சி தலைமை கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன்-சிறிதரன் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள்-சுமந்திரன் இளைஞர் அணி தலைவர் சிவகரன் பேசியது சுமந்திரனின் நிலைப்பாடு குறித்து சிறிதரன் விளக்கம் தமிழரசுக் கட்சி மகளிரணி போர்க்கொடி சுமந்திரனின் திட்டங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம் . சுமந்திரனின் திட்டங்கள் தொடர்பில் சிறிதரன் விளக்கம் . சுமந்திரன் சம்பந்தனின் சுத்துமாத்து தொடர்பில் சிறிதரன் தொடர்புடைய முன்னைய செய்திகள் அடுத்த அரசில் அமைச்சர் பதவி ஆணை தாருங்கள் என்கிறார் சுமந்திரன்(காணொளி) 21 கோடியை நானே பெற்றுக்கொண்டேன் ஒப்புக்கொண்டார் சுமந்திரன்(காணொளி) சுமந்திரனுக்கு வாக்களிகாதீர்கள்!–மூத்த போராளி பசீர் காக்கா(காணொளி) 75 கள்ள வாக்குகள் போட்டேன் -சிறிதரன் அதிரடி(காணொளி) தமிழ் அகதிகள் ஓடிப்போனவர்கள் - கொச்சைப்படுத்தும் சுமந்திரன்(காணொளி)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.