Jump to content

SwissTamil

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    1
  • Joined

  • Last visited

Everything posted by SwissTamil

  1. சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இந்த நாட்டில் உல்லாசப் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருககின்றன. ஆனால் ஒன்றை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். இங்கு பயணிகளாக வருபவர்கள் கைநிறையப் பணம் கொண்டு வந்தால்தான், இங்குள்ள செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியும். எங்கும் அப்படித்தானே என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் இந்த நாட்டில் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்…. இங்கே மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட மொழி..நீங்கள் ஜெனிவா சென்றால் பிரான்ஸ் நாட்டுக்குள் கால்வைத்து விட்டோமோ என்று எண்ண வைப்பது போல எல்லாமே பிரெஞ் மயம். ஜேர்மன் மொழி அறிவும், ஆங்கில மொழி அறிவும் உங்களுக்கு கைகொடுக்கும். சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? ஏரிகளுக்கு பிரபல்யமான இந்த நாட்டில், ஜெனிவா ஏரி அழகின் உச்சத்தை தொடுவது. மேலை நாட்டவர்களுக்கு Windsurfing, water skiing, kayaking விளையாட்டுகளுக்கு பொருத்தமான இடம். சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? நகருக்குள் நுழைந்தால் ஐ.நா.சபை அமைப்பு உங்களை வரவேற்கும். Palais des Nations என்று அழைக்கப்படும், ஐ.நா.சபையின் ஐரோப்பிய தலைமையகம் இங்கேதான் இருக்கின்றது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமிது.. நியூயோர்க் நகரின் தலைமை அலுவலகத்திறகு அடுத்து மிகப் பெரியது இந்த சுவிஸ் பிரிவுதான்.. வருடாவருடம் 25000க்கு மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள் இங்கு வந்து போகிறார்கள். நீங்கள் ஒரு தினத்தை இங்கு கழிக்கலாம். மறக்க முடியாத அனுபவமாக அது இருக்கும். உல்லாசப் பயணிகள் இங்கு குழுவாக வந்தால், இவர்களுடன் ஒரு வழிகாட்டி அனுப்பப்படுவார். இவர் அழகான விளக்கங்களைச் சொல்லி எம்மை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். International Red Cross and Red Crescent Museum இந்த அருங்காடசியகத்தை நீங்கள் தவறவிட வேண்டாம். வாஷிங்டனிலுள்ள Holocaust Museum ருவண்டாவிலு்ளள Genocide Museum,Yad Vashem Jerusalem Holocaust Museum போல, மக்கள் பட்ட அவலங்களை பட்டவர்த்தனமாக சொல்லும் அருங்காட்சியகம் இது.. சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? பாசெல் உலகம் ஜெர்மன் மொழியைப் பேசும், பழமையும் புதுமையும் நிறைந்த பிரதேசம் .. ஜேர்மனியை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எல்லையாகக் கொண்டது. மிதிவண்டியில் சென்று பொருட்களை ஜேர்மன் எல்லையில் விலைமலிவாக வாங்க எமக்கு வசதியளிக்கும் பிரதேசம்.. இங்குள்ள ரைன் நதியும், கப்பல் பயணமும் நீங்கள் தவற விடக்கூடாதது. Rhine River, Basel இங்குள்ள ஆபரணக் கண்காட்சியகம் வருடாவருடம் உலக நாடுகளைக் கவர்ந்திழுப்பது. Baselworld என்று இதற்கு பெயர். உலகின் தலை சிறந்த கடிகாரங்கள் முதல், பல்வகையான அணிகலன்களை் இந்த நாளை அலங்கரிக்கும். சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? Basel City 100 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்ள வரும் இந்தக் கண்காட்சி, அனேகமாக ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறும். நகரமே திருவிழாக் கோலம் பூண்டு விடும். ஹாட்டல்கள் எல்லாம் நிரம்பி வழியும்.. சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இவ்வளவோடு நிறுத்தி விடுகிறேன்.. காரணம் பட்டியல் நீள்கின்றது. பார்த்து ரசிக்க இங்கு இடங்களுக்கு பஞ்சமே இல்லை. தன்னிடம் வந்த எந்தப் பயணியையும் ஏமாற்றாதது இந்த நாடு! சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமான இடங்கள் இருக்கின்ற.. அவற்றை ஒரு தொகுப்பாக இன்னொரு பதிவில் பார்க்கலாம். SOURCE
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.