Jump to content

PIRA

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    9
  • Joined

  • Last visited

Everything posted by PIRA

  1. நான் சந்தேகப்பட்டேன் ஆனையிறவில் விகாரை அமைக்கிறார்களோ என அது சரியாகவே உள்ளது..
  2. நாம் ஏன் அங்கு போய் வாழ ஆசைப்படுகிறோம் எனில் எங்கள் எல்லோரினதும் சைல்ட் ஹூட் மெமரி அங்கேயே தங்கி உள்ளது, நாம் மீண்டும் அந்த பருவத்திற்கு சென்று வர ஆசை படுகிறோம்.ஆனால் தாயகம் அதேமாதிரி எங்களின் காலத்துடன் நின்று விட்டதா எனில் இல்லை . தாயகம் எங்களால் விரும்பப்படாத பல மாற்றங்களை உள்வாங்கி அவற்றினூடே எங்களை வரவேற்கிறது. அப்பா அம்மா அல்லது எங்களின் சகோதர சகோதரிகள் போன்ற உறவுகள் இருக்கும் வரையிலும் எங்களால் அங்கு போய் தங்கி இருக்க இயலுமானதாக இருக்க கூடும் . அவர்களின் பின்னான கால பகுதியில் தனிமை எங்களை அலைகளிக்க கூடும். பாதுகாப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் கிராம பகுதிகளில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் முதன்மையானதாக இருக்க கூடும்
  3. படங்களும் இடங்களும் நன்றாக உள்ளன தொடருங்க
  4. யாழ் போன்ற நகர பகுதிகளில் திருமண மண்டபங்கள் தேவையானவையே.. கிராம பகுதிகளில் மண்டபங்கள் பெரிதாக இல்லை ஆனாலும் இவற்றை பல் தேவைகளிற்கு பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கலாம் . பேட்மின்டன் அல்லது வலைப்பந்து, கைப்பந்து போன்ற உள்ளக அரங்குகளில் விளையாட கூடிய விளையாட்டுகளிற்கான இடமாகவோ பயன்படுத்ததலாம் ஆனால்அவற்றை விளையாடுவதற்க்கானோர் அங்கு பெருமளவில் இல்லை என்பதே உண்மை
  5. தனி மடலில் அவர்களின் தொடர்பு அனுப்பியுள்ளேன் வைபர் ல தொடர்பு கொள்ளுங்க . உங்களின் வேலை விபரங்களை அவர்களிடம் சொல்லி வந்து பார்க்க சொல்லி அவர்களின் மதிப்பீட்டினை பெற்று பின்னர் வேலைகளை ஆரம்பியுங்கள் , பொருட்களை நீங்களே வாங்கி குடுத்தால் அவர்கள் கூலி contract ல செய்து தருவார்கள்
  6. தமிழ் நாட்டில் எப்பிடி படித்து பிஎச்டி பெறுகிறார்கள் என்பது பற்றி தேடியதில் கிடைத்தவை https://m.timesofindia.com/city/chennai/tns-phd-factories/articleshow/73677278.cms அதுல நானும் ஒருத்தி🤣🤣🤣 என் கூட படிச்சதுல காசு கொடுத்து பிஎச்டி முடிச்ச எல்லாரும் 30 - 50 laks கொடுத்து கல்லூரியில் வேலைக்கு போயிட்டாங்க.பத்து அரியர் வச்ச ஒருத்தி உயிர் தோழியா இருந்தா. மாமனார் மாமியார் கொடுமை கணவர் கொடுமை, குழந்தைன்னு அழுது, நானே ஐயோ பாவம்ன்னு இரக்கப்படற அளவுக்கு act பண்ணா. அப்புறமா நானே topic எடுத்து work பண்ணி, எழுதியும் கொடுத்தேன். இப்போ 48 லட்சம் கொடுத்து ஒரு காலேஜ்ல வேலை வாங்கிகிட்டு உனக்கு திறமை இல்லைன்னு என்கிட்டயே சொல்றா🤣🤣🤣 வடிவேலு காமெடியை விட phd படிச்சவங்க கிட்ட நிறைய கதை உண்டு சகோ🤣 ( FB) நல்லா படிக்கிற பிள்ளைகளை கண்டிப்பா ph.d படிக்க சொல்லாதீங்க. ஏதாவது கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி வேலைக்கு போகட்டும் அதுக்கப்புறம் பிஎச்டி படிக்கலாம். லட்சக்கணக்கில பணம் இல்லாத நல்லா படிக்கிற பிள்ளைங்க Phd join பண்ணா அவங்களோட, திறமை எல்லாத்தையும் பணக்கார முட்டாள்களுக்காக தான் பயன்படுத்துறாங்க. நான் 4 Phd Thesis, 10 MPhil Thesis, 30 க்கும் மேல M.Sc Thesis முடிச்சு கொடுத்தேன் (Topics, Research, Correction, writing எல்லாமே). இதெல்லாம் முடிச்சு கொடுத்தா மட்டும் தான் என்னோட Thesis correct பண்ணுவாங்க என்கிற ஒரு சூழ்நிலை அங்க. இதுல நான் SET exam pass கூட Pass பண்ணிருக்கேன். எல்லா பெரிய கல்லூரிகளிலும் நல்லா படிக்கிற பிள்ளைகளோட நிலைமை கிட்டத்தட்ட அதுதான். கண்ட கண்ட பணக்கார முட்டாள்களுக்கு ஆராய்ச்சி படிப்பு எழுதிக் கொடுக்கிறதுக்கு பதிலா நமக்கு தெரிந்ததை புத்தகமா எழுதினா, வருங்கால தலைமுறைக்காவது பயன்பட்டுட்டு போகட்டும் நா முழுக்க முழுக்க எழுத வந்துட்டேன். அப்பாவி முனைவர்களுக்கு உதவி பண்ண குழு ஆரம்பித்தால் என்னையும் சேர்த்துக்கோங்க சகோ🤣🤣🤣 நாங்க எல்லாம் வடிவேல் காமெடி விட நிறைய அடி வாங்கி இருக்கோம்🤣🤣🤣 (fb)
  7. காசு இருந்தாலும் சமையல் எரி வாயுவுக்கு நீண்ட வரிசையில்இ பெற்றோலுக்கு நீண்ட வரிசையில்இ உங்கள் கையில கேஷ் இருக்கு ஆனால் பிள்ளைக்கு வருத்தம் வரும் போது மருந்து எங்கு தேடியும் கிடைக்கவில்லை அப்போது உங்களுக்கு வரும் பாருங்கள் ஒரு விரக்தி அது எல்லாம் அனுபவித்தால் மட்டுமே புரியும்
  8. நிக்சன் CONSTRUCTION தான் இப்போதுள்ள நிலைமைக்கு ஓரளவு நியாயமான விலைக்கு செய்து தருகிறார்கள் ஹரி ENGINEERING வெளிநாட்டுக்காரர் என்றாலே உச்ச விலை சொல்கிறார்கள் .. ஊரில் விழுந்து எழும்பினால் ஒவ்வொரு ஒப்பந்த காரரின் முகத்தில தான் முழிக்கனும் யாருமே ஒழுங்கான வேலைக்காரர்கள் இல்லை.
  9. மடகஸ்கார் என்றதும் நான் கொழும்பில் சந்தித்த ஒரு முசுலீம் பணக்காரர் தான் மடகாஸ்காருக்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்வதாக வும் அங்கிருந்து வைரம் போன்றவையும் இரத்தினக்கற்களும் வாங்கலாம் எனவும் கூறியதாக நினைவு. நன்றிகள் உங்களின் பகிர்வுக்கு
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.