Jump to content

பாரதிசந்திரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3
  • Joined

  • Last visited

Everything posted by பாரதிசந்திரன்

  1. பனி உமிழும் மாலைப்பொழுதில் மொழிபெயர்ப்பு: பேராசிரியர் மு.விஜயகுமார் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி ஆவடி, சென்னை – 600062 யாருடைய‌ பனித்துகள்கள் இவைகள்? தெரிவது போல உணர்கிறேன். அவரின் வீடோ அருகே உள்ளகிராமத்தில் நானோ இங்கு ஓய்வில். என்இருப்பை அறிய வாய்ப்பில்லை. காடுகள் முழுவதும் பனித்துளிகளின் கைகள் படர்ந்துள்ளது. என் இளமை ததும்பும்குதிரை பனிஉதிரும் காடுகளுக்கும் சிலைபோன்ற ஆறுகளுக்கு இடையைவீடுகளற்ற இடத்தை கண்டு சற்றே குழம்பியது. அதன் கழுத்தில் உள்ள மணிகள் அசைந்து தவறுகள் நேராமல் கவனமாக இருக்க வேண்டி கட்டளையிட்டது. சூழலில்அமைதியும் காற்றின் மொழியும் பனிப்பொழிவின் ரீங்காரமும் மட்டுமேஎங்கும் பிரதிபலித்தது. பனிக்காடுகள் எங்கும் இருளில் ஆழமான வனப்பு பரவியிருந்தது. என் கடமைகள் என்னை பூர்த்தி செய்ய அழைக்கிறது. நெடுந்தூரம் செல்லவேண்டும் உறக்கத்திற்கு முன்பாக. நெடுந்தூரம் செல்லவேண்டும் உறக்கத்திற்கு முன்பாக. இராபர்ட் புரொஸ்ட் . (அமெரிக்க கவிஞர், கல்வியாளர், புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளர்.) (ஸ்டாப்பிங் பை தி வுட்ஸ் ஆன் எ ஸ்நோயி ஈவினிங்” என்ற கவிதை இராபா;ட் ஃப்ராஸ்டால்; 1922ஆம் ஆண்டில் எழுதப்பட்டு 1923-ஆம் ஆண்டு புதிய ஹேம்ப்ஷயா் என்னும் தொகுதியில் வெளியிடப்பட்டது.) Stopping by Woods on a Snowy Evening BY ROBERT FROST Whose woods these are I think I know. His house is in the village though; He will not see me stopping here To watch his woods fill up with snow. My little horse must think it queer To stop without a farmhouse near Between the woods and frozen lake The darkest evening of the year. He gives his harness bells a shake To ask if there is some mistake. The only other sound’s the sweep Of easy wind and downy flake. The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.
  2. ஹெர்மன் ஹஸ்ஸி- கவிதை தமிழில் மொழிபெயர்ப்பு : பேராசிரியர் மு. விஜயகுமார் ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர். (1970) தலைப்பு: நிலைகள் நிலைகள் ஒவ்வொரு பூக்களும் தோன்றி மறைதல் போல இளமையும் மறைகிறது வாழ்வின் நிலைகளில். ஒவ்வொரு ஒழுக்கத்திலும் உண்மையை அறிகிறோம் மலரின் பருவங்கள் நிலையானதல்ல ஏனெனில் வாழ்க்கை ஒவ்வொரு வயதிலும் உள்ளது வருந்தாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள் பழைய உறவுகள் மறக்காமல் புதிய ஒளியைக் கண்டுபிடிங்கள் எல்லாத் தொடக்கமும் ஒரு மாயசக்தியாக வழிநடத்துகிறது. அதுவே நம்மைப் பாதுகாத்து உதவுகிறது அமைதியாக நெடுந்தூரப் பயணத்தைத் தொடங்குங்கள். வீட்டு நினைவுகள் நம்மைத் தடுக்கிறது. பிரபஞ்ச ஆற்றலே நம்மைக் கட்டுபடுத்தி வழித்துணையாகிறது அகன்ற வெளியில் ஒவ்வொரு நிலையையும் உயர்த்துங்கள் இல்லமோ நம்மைச் சோம்பலாக்குகிறது விடைபெறுதலுக்குத் தயாராகுங்கள். அன்றி இவைகளுக்கு அடிமையாக இருங்கள் மரணத்தின் ஓசையானது விரைகிறது நம்மைப் புதியபாதைக்கு விரைவுபடுத்துகிறது மொழிபெயர்ப்பு : பேராசிரியர் மு. விஜயகுமார் Stages As every flower fades and as all youth Departs, so life at every stage, So every virtue, so our grasp of truth, Blooms in its day and may not last forever. Since life may summon us at every age Be ready, heart, for parting, new endeavor, Be ready bravely and without remorse To find new light that old ties cannot give. In all beginnings dwells a magic force For guarding us and helping us to live. Serenely let us move to distant places And let no sentiments of home detain us. The Cosmic Spirit seeks not to restrain us But lifts us stage by stage to wider spaces. If we accept a home of our own making, Familiar habit makes for indolence. We must prepare for parting and leave-taking Or else remain the slaves of permanence. Even the hour of our death may send Us speeding on to fresh and newer spaces, And life may summon us to newer races. So be it, heart: bid farewell without end. ”ஹெர்மன் ஹஸ்ஸி”- ஜெர்மன் எழுத்தாளர். (நோபல் பரிசு பெற்றவர்.) தலைப்பு -die gedichte- Hesse poems 1970).
  3. “வலியின் புனைபெயர் நீ” பாரதிசந்திரன் (முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் ) தமிழ்ப் பேராசிரியர் “தீப்பிடித்து எரிகிறது அந்தச் செங்கொன்றை என்று பயமுறுத்தமாட்டேன் அது உனக்கான ஆராதனை” (’வலியின் புனைபெயர் நீ) சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான். அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது, “தீ” என்கிற வார்த்தை, அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு செய்து விடலாம். அப்படியாக, உவமைகள் கூடக் காதலியிடம் பயமுறுத்த நான் விரும்புவதில்லை என்று கூறுகிற இந்த நவீன காதல் உணர்வுகள் எவ்வளவு மேன்மையானதாக இருக்கின்றது என்பதை உணர்கிறோம். காதலியின் மேலான அளவு கடந்த அன்பு காதலனை இவ்வாறு சொல்லச் சொல்கிறது. இவ்வாறான காதல் இருந்தால் போதும் உலகத்தில் எந்தக் காதலியும் மனைவியாகிறபொழுது உலகத்தைப் பார்த்துப் பயப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எதற்க்கும் பயப்படவே மாட்டாள். காதலிக்கும், காதலிக்குச் சொல்லப்போகும் உவமையிலும் கூட மென்மையை பதிவிக்கும் காதல் மனநிலைக்கு என்ன பரிசு தருவது? அன்பு நிறைந்திருக்கும் உலகில் பூவின் மென்மையோடுக் காதலியை வாழ்விக்க எவ்வளவு மனத்தூய்மை வேண்டும். கூறும் வார்த்தைகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஓசைகள், தொடும் தென்றல் இவை யாவும் காதலியைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்ட மோகன நிலையை ஒப்பிடக்கூடிய வார்த்தைகள் புவியில் வேறு எங்கு உள்ளது? கூறப்படும் யாவும் யார் புதிதாய் பேசியது? இருந்த வார்த்தைகளை, இருந்த சிந்தனையை நாமே பேசியதாகவும், சிந்தித்ததாகவும் இறுமாப்புக் கொள்கின்றோம். அவ்வளவு தானே? ஆழமாய் பதிந்து போனவைகள். சங்கம் தொட்டு இன்றுவரை காதல் எண்ணங்களில் விரிந்து கிளை பரப்பிக் கொண்டுதான் நிற்கின்றன.குதூகலத்தின் மையப் புள்ளியிலிருந்து பீறிட்டு வருகின்றன காதல் உணர்வுகள். அதைச் சாய்த்து விட எத்தனைக்கும் எவையும் அதற்குள்ளேயே ஜீரணித்து போய் விடுகின்றன. உடலும், மனமும் துகள் துகளாய்ப் பிரிந்து பிரபஞ்சம் கலக்கும் சுகத்தை ஒவ்வொரு நொடியும் காதல் தருகிறது. காதலனும் தலை சுமந்து தூக்கிக் கிடக்கத் தவம் இருக்கிறாள் காதலி. உலகம் மறந்து அவளின் ஒற்றைச் சிரிப்பில் மனதைக் சிக்க வைத்துப் போய்க் கிடக்கின்றதில் நீண்ட தூரம் பிரயாணம் செய்கிறான் காதலன். ஆராதனை செய்து, ஆராதனை செய்து வரம் கேட்டுக் கிடக்கின்றான் அளவு கடந்த பக்தியோடு பக்தனாய்… (கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின்வலியின் புனைபெயர் நீ என்னும் கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை.... அதற்கான விமர்சனம்) பாரதிசந்திரன் (முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் ) தமிழ்ப் பேராசிரியர் திருநின்றவூர். 9283275782 chandrakavin@gmail.com
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.