ஜீவா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  3,551
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by ஜீவா

 1. குத்தவேணும் என்றால் அடுத்த நாள் வந்து குத்த வேண்டியது தானே? புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவது ராஜதுரோகம் சகோ.. சரி ..சரி வந்து கருத்து எழுதினதுக்கு நன்றி சகோ
 2. கவிதையை விட உங்கள் கருத்து கனதியாய் இருக்கிறது, என்ன இருந்தாலும் "நன்றி மறப்பது நன்றன்று" தானே அக்கா. நன்றி அக்கா, உங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும்.
 3. ஆஹா ! அருமை !! அற்புதம் !!! எதை சொல்ல? சிந்திவிட்ட முத்துமணிகள் போல தமிழ் துள்ளி விளையாடுகிறது. சொல்ல வார்த்தையில்லை வாழ்த்துக்கள் சஹாரா அக்கா. பி.கு: கட்டழகனுக்கு கடிவாளம் போடுங்கக்கா, இல்லைனா காவாலியாகிடப்போறான்.
 4. ஆடின காலும்,பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அதே போலத்தான் யாழுடனான உறவும் விலக முடியாத பந்தம் இது. நன்றி அண்ணா கருத்துப்பகிர்வுக்கு.
 5. இதற்கு மேல் புதிதாய் என்ன சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் என் எண்ணக்கருக்களை பதிந்துவிட்டார்கள், அருமை. வாழ்த்துக்கள் புங்கை அண்ணா.
 6. ஊடலும்,கூடலும் இருந்தாலும் தேடி நித்தம் தொலைவதால் அவள் காதலி தானே? நன்றி அக்கா வரவுக்கும்,கருத்துப் பகிர்விற்கும்.
 7. அருமை சகோ. சஹாரா அக்கா சொன்னது போல மட்டுப்படுத்தப்பட்ட புள்ளிகளால் ஊக்குவிக்க முடியாமைக்காக வருந்துகிறோம். ஓகே கூலா மச்சி.. சொன்னது போல எழுதிட்டேனா? 50€ என்ரை எக்கவுண்டுக்கு போட்டு விடணும் சரி தானே. +++ அப்ப நான் வரட்டே +++
 8. விருப்பு வாக்கு முடிந்து விட்டது சுவி அண்ணா. என்ன சொல்ல அந்தமாதிரி இருக்குது. வாழ்த்துக்கள்.
 9. எட பாவி மக்கா .. பயபுள்ளை எம்புட்டு கருத்தா எழுதியிருக்கு என்று பாஞ்சு விழுத்து கருத்தெழுதலாம் என்று வந்தால் சுட்டது னு போட்டிட்டானே எது எப்படியோ இணைப்புக்கு நன்றிப்பா..
 10. தொடருங்கள் கோமகன் அண்ணா, நெருடிய நெருஞ்சி போல இதுவும் ஒரு காத்திரமான படைப்பாக இருக்கும் என்று காத்திருக்கிறேன், உங்கள் பயணங்களின் மூலம் எங்கள் ஞாபகவீதிகளையும் மீட்டிப்பார்க்கும் வாய்ப்பாக இது இருக்குமென நம்புகிறேன், வாழ்த்துக்கள் அண்ணா, அதே வேளை வர்ணனைகள்,விபரிப்பிலும் முன்னரை விடச் சற்று மெருகேறியிருப்பதாகவே படுகிறது, பார்க்கலாம் அடுத்து வரும் பகுதிகளையும். எனிவே தொடருங்கள்..
 11. பாடல்வரிகளும்,இசையும், படக்கலவையும் அருமை. இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
 12. "யாழ்" என் காதலி கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக் கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன் விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்.. களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன் காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும் வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள் நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.. வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான் அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..! எண்ணிரண்டு பதினாறு வயதின்று - என் இதயத்து ஆசைகளைச் சொல்லிவிட போதாது இது ஒன்று - இருந்தும் இன்று போல் என்றும் இருக்க என் "யாழ்"காதலிக்கு வாழ்த்துக்கள்.. !! ************************** 16ம் அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ்மகளின் நினைவுகள் சுமந்து, ஜீவா 30.03.2014 12:39
 13. இணையவன் அண்ணா, தமிழ்ப்பொடியன் அண்ணா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
 14. அருமை நெடுக்ஸ் அண்ணா, உங்களின் யாழுடனான நெருக்கம் வியக்க வைக்கிறது. வார்த்தைகளில் சொல்லிவிட முடியவில்லை நெடுக்ஸ் அண்ணா, யாழுடன் இணைந்திருக்கிறோம் என்ற வகையில் நமக்கும் பெருமை தான்.
 15. யாழ்கள உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
 16. இந்தக் கதையை தங்கள் முகப்புத்தகத்திலும் படித்தேன் அண்ணா. நன்று, வாழ்த்துக்கள் அண்ணா, தொடர்ந்திருங்கள் ..
 17. இப்படி ஒரு கவிதையை எங்கோ படிச்ச மாதிரி இருக்கு சகோ ..
 18. தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் சபேசன் அண்ணாவிற்கும், உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 19. தமிழ் சூரியன் அண்ணா, என்ரை மனசிலை இருந்ததை எப்படியப்பா இப்படிச் சரியா கண்டு பிடிச்சனிங்கள்? நான் எழுத வேணும் என்று நினைச்சனான். நீங்கள் எழுதிப்போட்டிங்கள். நாங்கள் சொல்லுறதாலை குடிக்கிறவன் யாரும் கேட்கப்போறதில்லை. ஆனால் குடிக்காமல் கூட இருக்கிறவங்களைப் பற்றி மட்டும் யோசியுங்கோப்பா என்று தான் சொல்லுவன். குடி ஒருத்தரின் வாழ்வை என்னவாக்கும் என்று சாகும் கணத்தில் கூட பார்த்திருக்கிறேன். எழுத்துக்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் அவை. அண்ணாவிற்கு ஒரு கிழமை நத்தார் விடுமுறை இருந்ததால் நேற்று அவனுடைய நண்பர் ஒருவருக்கு வீட்டில் பெயின்ட் அடிச்சு குடுத்திட்டு வந்து எங்கள் வீட்டிலிருந்து கதைத்து விட்டு அண்ணி பேசுவா என்று என்னுடைய வீட்டில் இருந்து இருவரும் மது அருந்திக்கொண்டிருக்கிறார்கள். நான் போகவும் கதை நடக்குது. நான் காலமை 8 மணிக்கு கடை திறந்து வீட்டை போக இரவு 12.30 கடுப்புத்தான் வந்திச்சு. போய்க் குளிச்சிட்டு உடுப்பு மாத்தி படுப்பம் என்டாலும் கதைச்சிட்டே இருக்கிறாங்கள், நான் கலைக்க பட்ட பாடு இருக்கே ஸப்ப்பப்பா.. 2.30 க்கு தான் முடிச்சாங்கள். நான் படுக்க 3 மணி. எப்படி கடுப்பா இருக்கும் யோசியுங்க மக்கா. அதனாலை நான் சொல்லவாறது என்ன என்றால் குடிக்காத அப்பிராணியளை தொல்லை பண்ணாமல் என்னவோ பண்ணுங்கப்பா. என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எது என்றாலும் நேசிக்கவும்,வெறுக்கவும் ஒரு நொடி போதும். ஒரு நிமிட கலக்கம்,கவலை அத்துடன் சரி. அதற்கு மதுவும் வேறு எதுவும் தீர்வாய் அமைந்திடாது.
 20. நல்லதொரு அனுபவப் பகிர்வு. பழைய நாட்களை நினைவுபடுத்தியுள்ளது கதை. எழுத்துப்பிழைகளை சரிபாருங்கள்.
 21. கு.சா தாத்தா கவுத்துப் போட்டார், நான் வந்த நிலையப் பாருங்கோ. வாற வழியிலை கவிதை அண்ணாவையும் கரைசேர்ப்பம் என்டு பார்த்து கடைசிலை என்ரை *** சேதாராமாப் போட்டுதே..
 22. எதுக்கு அவசரப்படுறியள்? அங்காலை ஈரான், ஈராக் எல்லாம் இருக்கெல்லே ..