Jump to content

ஜீவா

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    3551
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Posts posted by ஜீவா

  1. ஜீவா, ஒரு தன்னிலைத்தன்மையில் கதை சொல்லுகின்றீர்கள்!

     

    ஒரு குழந்தை கதை சொல்வது போல, அழகாக இருக்கின்றது!  :D

     

    தொடருங்கள்!

     

    இதில் சில சம்பவங்கள் நான் தவழ்ந்து கொண்டு இல்லை அம்மாவின் வயிற்றினுள் இருக்கும் போது நடந்தவை அதனாலோ என்னவோ தெரியவில்லை. :rolleyes:

     

    நன்றி அண்ணா,வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

    ஓ  அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் போல? தொடர் மச்சி.

     

    ஆக மொத்தம் என்னைக் காட்டிக்கொடுக்கிற பிளானோ மச்சான்???? :unsure::rolleyes:

     

    விரைவில் முடித்து விடுகிறேன். நன்றி நண்பா :)

     ஜீவா நீங்கள் அப்பவே கடவுளைக்காண வெளிக்கிட்டிருக்கிறியள் .

     

    :D :D :D

    கொடியேற்றத்துக்கு முதல் நாள் வைரவரைக்கட்டுறது என்று கேள்விப்பட்டிருக்கிறியளோ?

    அப்படித்தான் காவலுக்கு அம்மன் வெளிய வருவா என்று சொல்லுவார்கள் அதான் எப்படி இருப்பா என்று பார்க்கலாம் என்று தான். :rolleyes:

     

    நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

  2. செல்லடியில்....கணப்பொழுதில் உயிர் தப்பியவனில் நானும் ஒருவன்.....அதை இன்று நினைத்தாலும் பயம் போகவில்லை....நீங்கள் சொன்னவைகள் யாவும்  உண்மை...இவைபற்றிய கதைகளும் எனக்கு தெரியும்.... தொடருங்கள் ...வாசிக்க ஆவலாய் உள்ளேன்..

     

    அப்ப உங்கள் வயதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. :rolleyes:

     

    பல சம்பவங்கள் கேள்விப்பட்டவற்றையே வைத்து எழுதுவதால் சிலதை தவிர்த்தே எழுதுகிறேன்.

    ஏதும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

     

    நன்றி அல்வாயான் அண்ணா, உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

    • Like 1
  3. உங்கள் கதையை வாசித்ததும்  எங்கள் ஊர் அம்மன் நினைவும் அது சார்ந்த விடயங்களும் நினைவில் வந்திட்டுது. வந்திட்டுது.

     

    அநேகமா எல்லா ஊரிலையும் ஒரு அம்மன் கோவிலாவது இருக்கும், அந்த வகையில் அநேகம் பேருக்கு அதனோடு தொடர்புடைய ஞாபகங்களும் இருக்கும். ஆனால் ஏன் எக்கோ பண்ணுறிங்கள்???? :lol::icon_mrgreen:

     

    நன்றி அக்கா உங்கள் வரவிற்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

    எனது வீட்டுக்கு போகும் வழியிலும் ஒரு அம்மன் கோவில்.அதில் ஊர் பெடியள் தான் சிரமதானம் செய்கிறது.பிறகு இரவாக களவாக கோழி பிடித்து கோழிப்புக்கை சமைத்து சாப்பிட்ட சம்பவங்கள் இன்றும் நினைவில் உண்டு. :D  :D
     
    கோயில் பூசை தொடக்கம் அன்னதானங்கள் வரை கீழ் சாதியினர் வெளியில் நின்று தான் திருநீறு தொடக்கம் பிரசாதம் வரை வாங்குவார்கள்.மனதில் பெரிய மனவுறுத்தலாக இருக்கும்.சிலகாலத்தில் கோயிலுக்கு போவதையே நிறுத்தி விட்டேன்.
     
    தொடருங்கள் ஜீவா.

     

    அப்ப நுணா அண்ணாவும் பெரிய விளையாட்டெல்லாம் காட்டியிருக்கிறிங்கள் போல .. :D

     

    உண்மை. பல கோவில்களில் இன்றும் அதே தான் தொடருகிறது. பிரபலமான ஆலயங்களில் விருப்பம் இல்லையெனினும் கூட வருமானத்துக்கு வேண்டியாவது அனுமதித்தாலும், சுவாமி தூக்குவது போன்றவற்றை உள்ளூர்வாசிகளே செய்கிறார்கள். சில விதிவிலக்குகளும் உண்டு. :icon_idea:

  4. அம்மாளாச்சி ஓகே.ஆனால் இந்த தொடரும் என்கிறதிலதான் பிரச்சனையே.

    நேரப்பிரச்சனை தான் காரணம். வேலையில் இருந்தபடியே எழுதுவதால் அதிகம் எழுதமுடிவதில்லை.

    காக்கவைக்காமல் விரைவிலெயே முடித்து விடுகிறேன்.

     

    நன்றி ஈழப்பிரியன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

    தொடருங்கள் ஜீவா...

     

    நானும் ஒரு காலத்தில் கொழும்புத்துறையை கடந்து போனால் இருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு தவறாமல் போனவன். அங்கு தான் என் மச்சளுக்கு சின்ன முத்தமும் கொடுத்து ஆரம்பித்தவன்.

     

    கோயில்லையே கிஸ்ஸா ஆ?????? :rolleyes::icon_mrgreen:

  5. கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்

    நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.

    சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்

     

    எல்லாரும் பினாட்டு தீத்திறாங்கள் எண்டு கிளியறாய் விளங்குது  :lol:  :lol: .  இந்தக் கதையை உங்கள் வலைப்பூவில் படித்தளவில் ,  யாழில் மீண்டுமொரு அதிர்வு ஏற்படுவதற்கான சமிக்கைகளைக் காண்கின்றேன் . இளயதலைமுறையை சேர்ந்த உங்களின் சாதியம் பற்றிய கண்ணோட்டத்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் .வலிமிகுந்த உண்மைகள் பேசப்பட்டு , அதனால் தெளிவுகள் ஏற்பட்டு நாம் போகப்போகின்ற பாதை செப்பனிடப்படவேண்டும் . உங்கள் தொடருக்கு எனது வாழ்த்துக்கள் .

     

    குறிப்பிட்ட சம்பவங்களில் நேரடித்தொடர்பு இல்லாமல் கேள்விப்பட்டவற்றையே எழுதுவதால், ஒரு கதை சொல்லியாக என் வரம்புக்குள் நடந்த சம்பவங்களின் கோப்புக்களாகவே எழுத முனைகிறேன்.

    ஆனால் இது சாதியத்திற்கான ஒரு பதிவு அல்ல. :)

     

    பினாட்டு தீத்துறது என்பது புதிய உரைநடையாய் இருக்கிறது. :rolleyes:

     

    நன்றி கோமகன் அண்ணா உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும். :)

  6. அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை.

    அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா.
    எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே 
    இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை.



    கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட.

    எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி.

     நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம்.

    பத்து வயசிலையே அந்த அம்மன் கோவிலில் வைத்து "சிவ தீட்சை" எடுத்துவிட்டேன்.
    ஐயர் பூசையாக்கும் போது கேட்டுக்கேட்டே எனக்கும் சில மந்திரங்கள்
    அத்துப்படி. அந்தளவுக்கு அம்மாளாச்சி என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டா.



    ஆனால் அப்பாவுக்கு அப்படியல்ல,

    அப்பாவின் முன்னோர்கள் வழி வந்த கோவில் என்று அப்பாவும்,அவர் சகோதரர்களும்
    சொல்லுவார்கள். பிற சாதியினர் செல்வதற்கு எல்லாம் தடைவிதிக்கப்பட்டிருந்த
    காலங்கள் அவை வெளியில் இருந்து தான் கும்பிடலாம், கோவிலுக்குள்
    நுழைவதோ,சுவாமி தூக்குவதோ தடைசெய்யப்பட்டிருந்தது, மீறினால் தண்டனைகளும்
    வழங்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பிறகாலத்தில் இயக்கங்களின் வருகையோடு பல
    மாற்றங்கள் நடந்தது அப்படித்தான் இங்கும் "கிரகப்பிரவேஷம்" என்ற பெயரில்

    புலிகளால் அனைத்து சமூகத்தவர்களும் கோயிலுக்குள் செல்லவும், திருவிழாவின்
    போது ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு திருவிழாவும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
    இதை முன்னின்று செய்தது கூட ஒரு வகையில் எமக்கு பெரியப்பா முறை தான்,
    அவர்களே திரும்பவும் கோவில் நிர்வாகத்தை பொதுச்சபையைக் கூட்டி திர்ம்ப
    வந்தது போன்ற பல சம்பவங்களால் அப்பா கோவிலுக்குள் போவதே இல்லை. எப்போதாவது
    வாசலில் நின்று கும்பிட்டு விட்டு வந்திடுவார்.



    ஆனால் என்ரை அம்மாளாச்சியும் கன ஷெல்லடியளை எல்லாம் தாங்கினவாவாம்.
    எண்பத்தியேழாம் ஆண்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த
    இராணுவத்தின் மீதான மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து
    வல்வெட்டித்துறை,திக்கம், பொலிகண்டிச் சனம் எல்லாம் அந்த அம்மன் கோவில்லை
    தானாம் இருந்ததுகள், அப்ப ஆமிக்காரன் ஆட்லறி அடிச்சு எவ்வளவோ சனம்
    உடல்சிதறிப்பலியானார்களாம். எல்லாற்றை சடலமும் பக்கத்திலை இருந்த
    பள்ளிக்கூடத்திலையும், கோயில் மடத்திலையும் தான் புதைச்சாங்களாம்.

    அந்த கொடுமையுக்குள்ளையும் கனக்கச் சனம் கொண்டுவந்த நகையள், பிணங்களிலை இருந்த நகையளைக் கூட கொள்ளையடிச்சதுகளாம்.

    அப்படி அம்மாளச்சியும் தன்ரை வாசல்லை கனக்க கண்டுபோட்டா.



    அதே போல அம்மாளாச்சியைப் பற்றிய கதைகளுக்கும் கூடக் குறைவில்லை.

    அதுக்காக நான் வரலாறுகளை எல்லாம் சொல்ல வரேல்லைப் பாருங்கோ.

    தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இளைஞர்களிடம் தான் கோயில் நிர்வாகம்
    இருந்தது. அப்ப தான் பொடியள் கனகாலத்துக்குப் பிறகு கோயிலுக்கு
    கும்பாபிசேகம் செய்வதற்காக பல திட்டங்கள் போட்டிருந்தார்கள்.

    கேணிகட்டுவது

    பூங்காவனம் கட்டுவது

    சித்திரத் தேரும்,மணிமண்டபமும்.

    அன்னதான மடம்

    இப்படிப் பல..



    கும்பாபிசேகத்துக்காக இரவு,பகலா பொடியள் வேலை செய்துகொண்டிருந்த காலம்.
    ஒருநாள் எல்லாரும் கோயிலடியிலை படுத்திருந்திருக்கிறாங்கள். விடிய
    எழும்பிப் பார்க்க குகனை மட்டும் காணேல்லையாம். தேடிப் பார்க்க கனக்கத்
    தூரம் தள்ளி ஒரு கடை வாசலிலை ஒவ்வொரு படியிலையும் தலை மேலை,கால் கீழை
    இருக்கிற மாதிரி கிடத்தி இருக்காம். அவன் நல்ல நித்திரையாம். "அம்மாளாச்சி
    தான் அங்கை தூக்கிக் கொண்டுபோய் போட்டிட்டா" என்று சொல்லுவாங்கள்.



    அதை விட சாமப் பூசை முடிஞ்சதும். கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்
    நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.
    சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்.

    ஆனால் எனக்கு அப்பவே இது உண்மையா என்று பார்க்க வேணும் என்று ஆசை. என்னை
    அக்கா தான் எப்பவும் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவாள். ஒரு நாள் கோயில்
    திருவிழா நேரம் நான் அண்ணாட்டை கடைக்குப் போறேன் என்று சொல்லிப்போட்டு
    சுவாமி வெளிவீதி வர நான் ஓடிப்போய் உள்ளை படுத்திட்டன்.

    "அம்மாளாச்சி வருவா வருவா என்று பார்த்தால் வரவே இல்லை, சலங்கை சத்தம்
    கூடக் கேட்கவே இல்லை" பிறகு என்ன நடந்தது என்றே தெரியலை படுத்திட்டன்.



    யாரோ என்னை எழுப்புற மாதிரி இருந்திச்சுது அம்மாளாச்சி தான் வந்திட்டா
    "வரம் கேட்டிட வேண்டியது தான்" போல என்று பயந்து, நடுங்கி எழும்பிப்
    பார்த்தால் அண்ணாவும்,அக்காவும், கோயில்லை மணி அடிக்கிறவனும்
    நிக்கிறாங்கள்.



    தொடரும்..

    • Like 15
  7. அர்ஜுன் அண்ணா,

    நடந்தவை,தெரிந்தவற்றை எந்த விருப்பு,வெறுப்புக்களும் இன்றி உண்மையாய் எழுதுங்கள், தனிப்பட்ட சொந்த அனுபவங்களை எழுதுவது வேறு இப்படி ஒரு இனத்தின் விடுதலையை உண்மையாய் எழுதும் போது அது சரி,பிழைகளுக்கு அப்பால் சரியான தகவல்களை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்லும்.

     

    உண்மையான,சரியான தகவல்கள் தெரியாமல் யாரும்,யாரையும் விமர்சனம் செய்வது என்பது ஏளனத்திற்குரியது.

    போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் எல்லாம் நாங்கள் பிறந்திருக்கவே இல்லை அப்படி இருக்க,வாசித்ததும் செவிவழி செய்திகளையும் வைத்து முடிவெடுப்பதென்பது எவ்வளவு தூரம் நம்பிக்கையானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் அடுத்த சந்ததிக்காக உங்களுக்கு தெரிந்த ஆரம்பகாலப் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுதுங்கள்.

     

    புலிகள்,புளொட்,ரெலோ என்று எல்லா அமைப்பிலும் சில தலைசிறந்த வீரர்கள் இருந்ததும், தலைமைகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்துக்காக போரடப்போய் வீரத்தின் விளைநிலங்களாய் ஆனதும்,

    வழிமாறிப்போனதும் கண்முனே நடந்த ஒன்று, அந்தப்பொறுப்புணர்ந்து எழுதுங்கள்.

     

    (இது ஆலோசனை அல்ல, உங்களுக்கு சொல்லுமளவுக்கு வயதும்,அனுபவமும் இல்லை ஆனால் வரலாறுகள் திரிக்கப்படக்கூடது என்ற ஒரே நோக்கத்தில் தான்)

     

    தொடர்ந்து எழுதுங்கள். :)

    • Like 1
  8. உண்மையில் இதற்கு முதலில் எழுதி அழித்தனான், என்ன சொல்வது அல்லது நான் நினைப்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் இப்படி ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தோம் இந்தியாவில் தற்போது விடுமுறைக்கு கோயிலில் இருந்து வரும் போது பஸ்ஸில் தான் வந்தோம். நானும் அவளும் கடைசி சீட்டில் இருந்தோம் அத்தை,சித்தி,விஷாலி பக்கத்திலை

    இருந்தாங்க ..

    ப்ரியா சொன்னாள்.."எனக்கு அந்த பொம்பிளையை பிடிக்கவே இல்லை" !

     

    யாரை? ஏன்??

     

    "நீயே பாரு.."

     

    பஸ்ஸில் நல்ல நெரிசல் 45 - 50 வயது மதிக்கத்தக்க மனுசன் ... உங்கள் கதையில் வரும் சம்பவம். நீங்களே கற்பனை பண்ணிப்பாருங்கள்.

     

    "அவளுக்கு தெரிஞ்சும் விலத்தாமல் இருக்கிறாளே" என்றாள் பிரியா..

     

    உண்மையில் கோவம் வந்தாலும், அந்த நொடி ஆணாக இருந்து அதைப் பார்க்கும் போது வந்த கோவம்..

     

    "இவங்களை எல்லாம் என்ன செய்ய"

     

    விடுங்கோ அவளே பேசாமல் இருக்கிறாள்.

     

    .............. முடிவு உங்களிடமே .....

     

    உண்மையில் இதையும் அந்த அனுபவப் பகிர்வில் எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால், இதை எப்படி என்று எழுத தவிர்த்திருந்தேன்.

  9. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சாத்திரி அண்ணா .. & மைத்திரேயி அக்கா.. :)



    சாத்திரி அண்ணாவுக்கும், மைத்திரேயிக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! இருவருக்கும் ஒரே நாள் என்பது கவனிக்கத்தக்கது.. :D

     

    அப்ப இரண்டு பேரும் ஒரே ஆக்களா இருப்பினமோ? :rolleyes:

  10. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா.

    வீட்டில் சில,பல பிரச்சனைகள் அதனால் யாழுக்கு வந்தும் எழுதும் மனநிலையில் இல்லை அதனால் உங்களுக்கும் மற்றும் பல அன்பு உறவுகளுக்கும் வாழ்த்துச்சொல்ல முடியவில்லை.

     

    எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா,

    மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும். :)

  11. நுணா அண்ணா மட்டுறுத்தினராக பதவி உயர்வுபெற்றதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை பாடபட்சமின்றி மிகவும் திறமையாக செயற்பட வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :)

    [size=3](ஒரு அப்பிராணிய போட்டுட்டாங்களே..... :lol:[/size][size=3] :lol:[/size][size=3] :icon_mrgreen:[/size][size=3] :icon_idea:[/size][size=3] )[/size]

  12. என் உடன்பிறவா விசுகு அண்ணாவுக்கும்,

    துன்னையூரான் அண்ணாவுக்கும்,இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். :)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.