• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

kumuthan

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  234
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About kumuthan

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 07/12/1989

Contact Methods

 • MSN
  tamilossai@live.co.uk
 • Website URL
  http://www.tamilseithekal.blogspot.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  canada
 1. கய்தே, கஸ்மாலம், பேமானியிலிருந்து பவுடர், மர்டர் என்று பிரமோஷன் ஆகியிருக்கும் ஸ்லம் கதை. அதில் ஜம்மென்று அறிமுகமாகியிருக்கிறார் அமீர். வாங்க குப்பத்து ராஜா... கூவக்கரையோரத்தில் குடியிருப்பதாலேயே அழுக்கும், ஆவேசமுமாக திரிகிறது இந்த இளைஞர் கோஷ்டி. தப்பு செஞ்சாலும் தமுக்கடிக்கிற மாதிரி செய்யணும் என்பது சக நண்பனான சினேகனின் ஆசை. அந்த ஊர் இன்ஸ்பெக்டரிமே ஆட்டைய போடுகிறார்கள். தப்பி ஓடும்போது ஒரு காரை கடத்திக் கொண்டு ஓடுகிறார் அமீர். காருக்குள்ளே... அழகான குழந்தை ஒன்று. அதுதான் அமீரின் சந்தோஷ ஆரம்பம். ஆயுளின் முடிவு. அது தெரியாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என அவர் முனைப்பு காட்டுகிறார். இன்னொரு பக்கம் குழந்தைக்கு அம்மாவான சுவாதி படுத்த படுக்கையாக கிடக்க, அவளது இரண்டாம் கணவரான வின்சென்ட் அசோகன் குழந்தையை கொல்வதற்காக அதே குப்பத்தில் ஆட்களுக்கு பணம் கொடுக்க, ஆரம்பமாகிறது சேசிங். குழந்தை தப்பித்ததா? கடத்திய அமீரின் கதி என்ன? கதையின் வேகத்தில் அங்கங்கே பிரேக் பிடித்தாலும், பிற காட்சிகளில் எக்குதப்பான வேகம். "ஒழுங்கா சமத்தா இருக்கணும்..." படம் எடுத்தாடும் பாம்பிடம் நிதானமாக எச்சரித்துவிட்டு போகும் அமீரின் கண்களும், முகமும் பயங்கரம். அதிலும் குளோஸ் அப்பில் வந்து பாம்பை சீண்டிவிடும் தைரியமே சொல்கிறது அவன் எதற்கும் அடங்காதவன் என்று! இறுதிவரை அந்த திமிரை காப்பாற்றியிருக்கிறார் அமீர். வெல்டன் பாஸ¨... 'சீர்மேவும் கூவத்திலே' பாடலில் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறாரே, பிரமாதம்ப்பா! தன்னை வளைக்கும் ரவுடிகள் மத்தியில் மெல்ல நடந்து ஒவ்வொருவனுக்கும் கீறல் போடுகிறாரே, செம சீன் சாரே! கவிஞர் சினேகன் பேனாவுக்கு பதிலாக பிஸ்டலை பிடித்திருக்கிறார். தோளில் புரளும் முடியும், துடிக்கும் கண்களுமாக மனிதர் இன்னொரு ஏரியாவில் சதம் அடிக்க கிளம்பி விட்டாராக்கும்! இவருடன் வரும் இன்னும் சில ஸ்லம்டாக் ரவுடிகளும் நடிப்பில் நங்கூரம் போட்டிருக்கிறார்கள். தோளில் தொங்கும் குழந்தையுடன் திரியும் மதுமிதா, தமிழ்சினிமா நாயகிகளின் இலக்கணங்களை துவைத்து காய போட்டிருக்கிறார். ஒரு காட்சியில் அவர் காட்டியிருக்கும் துணிச்சல் வேறெந்த நடிகைகளுக்கும் வராது. (அந்த காட்சியில் அமீர் மட்டும் வேறு பக்கம் திரும்பிக் கொள்வாராம். நாமெல்லாம் பார்க்கணுமாம். நல்லாயிருக்குய்யா நியாயம்) ரசிகர்களுக்கு ஆத்திரத்தை கிளப்பும் அந்த பிளாஷ்பேக்கில் அறிமுகமாகிறார் புதுமுகம் தேவராஜ். தாடியை சொறிந்து கொண்டே அவர் பேசுகிற டயலாக்குகள் ஆத்திரமூட்டுகிறது. 'நான் கடவுள்' தாண்டவனே இவரிடம் 'பிச்சை' வாங்க வேண்டும் போலிருக்கிறது. இவருக்கான முடிவை தியேட்டரே கொண்டாடுகிறது. இவருக்கு தமிழ்சினிமா தாராளமாக ஒரு 'நல்வரவு' சொல்லலாம். எல்லாம் ஓ.கேதான். குழந்தையை வளர்க்கிறேன் பேர்வழி என்று அமீர் செய்யும் அட்டகாசங்கள் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எந்த நேரத்தில் மூச்சடைக்குமோ என்ற ஐயுற வைக்கிறது, அந்த குழந்தை கிடக்கும் பெட்டியை மூடும்போதெல்லாம். இன்னொரு காட்சியில் உடம்பெல்லாம் கட்டெறும்பை கடிக்க விட்டிருக்கிறார்கள். பிராணிகள் வதை சட்டம் மாதிரி, குழந்தைகள் வதை சட்டத்தையும் சினிமாவில் கொண்டுவர வேண்டும். உடனே... உடனே... கத்திப்பாராவுக்கு தடை போட்ட மாதிரி, கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் க்ளைமாக்ஸ் வைக்கக் கூடாது என்றொரு தடை போட்டால் கூட பரவாயில்லை. யூ டூ அமீர்? யுவனின் இசையில் இரண்டே பாடல்கள். (பத்தாது நைனா...) மிரட்டலான லைட்டிங்கில் தனது இருப்பை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர். யோகி- கூவக்கரையில் ஒரு தவம்!
 2. கேரளாவில் 1850-களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னன் பற்றிய வரலாற்று படம். இந்தியாவுக்குள் வியாபாரத்துக்கு வரும் வெள்ளையர்கள் குறுநில மன்னர்களை பிரித்து நாடு பிடிக்கத்துவங்குகின்றனர். கேரளாவிலும் மன்னர்களை அடிபணிய வைத்து வரி விதிக்கின்றனர். பழசிராஜா அடிபணிய மறுக்கிறார். அவன் கோட்டைக்குள் வெள்ளையர் படை நுழைகிறது. அரண்மனையை கைப்பற்றி கஜானாவை கொள்ளையடிக்கின்றனர். பழசிராஜா தளபதி எடச்சன குங்கனுடன் தலைமறைவாகிறார். மலைவாழ் மக்களை திரட்டி ஆங்கிலேயருடன் யுத்தம் செய்கின்றார். வெள்ளையர் படைக்கு பேரழிவு ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் பழசிராஜாவுடன் சமரச ஒப்பந்தம் போட்டு போரை நிறுத்துகின்றனர். பிறகு திடீரென ஒப்பந்தத்தை மீறுகின்றனர். ஆவேசமாகும் பழசிராஜா மீண்டும் போரை துவக்குகிறார். வெள்ளையர் படைகளுக்கு உதவ வேறுபகுதிகளில் இருந்து நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் குவிகிறார்கள். உள்ளூர் எட்டப்பர்களும் வெள்ளையர்களுக்கு துணை நிற்கின்றனர். இதனால் ஆங்கிலேயர் படைகளை எதிர்க்க முடியாமல் பழசிராஜா வீரர்கள் நிலைகுலைகின்றனர். பழசியின் தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். சரணடையும்படி பழசிராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்... கையில் வாள், வீராவேச பேச்சு, அழுத்தமான நடையில் பழசிராஜா மன்னராக பளிச்சிடுகிறார் மம்முட்டி. மனைவியிடம் நேசம் காட்டுவது, வீர உரையாற்றி படைகளை திரட்டுவது, தளபதிகள் கொல்லப்பட்டதை கண்டு கண்கள் சிவப்பாகி கலங்குவது என உணர்வுகளை கொட்டுகிறார். கிளைமாக்சில் வீரமரணத்தை தழுவி நெஞ்சில் நிற்கிறார். எடச்சனகுங்கன் கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்துள்ளார். முறுக்கேறிய தேகம், லாவகமான வாள்வீச்சு, மன்னனை காக்க வெள்ளைய படையை எதிர்க்கும் வெறி என வரலாற்று தளபதியாய் இன்னொரு பரிணாமம் காட்டுகிறார். எட்டப்பவேலை செய்யும் சுமனை வாள் சண்டையில் கொன்று பழிதீர்ப்பது கைதட்டல். பதவி போட்டியில் பழசிராஜா படை பிரியும்போது பழசிராஜா வளர்ப்பு தந்தை என பிளாஷ்பேக் கதை சொல்லி தளபதி பதவியை தூக்கி எறிந்து மனம்பூரா வியாபிக்கிறார். இறுதியில் வெள்ளைய படைகள் சுற்றி வளைத்ததும் உங்களிடம் சிக்கி தூக்கில் தொங்கமாட்டேன் என கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்து மாவீரனாய் பிரதிபலிக்கிறார். மலைவாழ் பெண்ணாக வரும் பத்மபிரியா எதிரிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு கேரக்டருக்கு வலுசேர்க்கிறார். பழசிராஜா மனைவியாக வரும் கனிகா சோகத்தை பிழிகிறார். மலைவாழ் மக்கள் தலைவனாக வந்து தூக்கியிடப்படும் மனோஜ் கே.விஜயன், மனதில் நிற்கிறார். இளையராஜா இசை, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகளில் நாடகத்தனம். வரலாற்று கதையை ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான காட்சிகளுடன் கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர் ஹரிஹரன்.
 3. வணக்கம் தமிழ்பிரியன் வாங்கோ...!
 4. உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் தமது நாட்டுக்கெனஇ தம்மை பிரதிநிதிதுவப்படுத்தும் தனித்துவமான கொடிகளைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறாக நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் கொடிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே அந் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மரியாதையாகக் கருதப்படும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின்இ அந்த நாட்டு மக்களின்இ அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும். காலம் காலமாக தமிழீழ மக்கள் தொடர்ச்சியாக அந்நிய சக்திகளால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ் அந்நிய சக்திகளால் தமிழ் மக்களின் தேசிய இறையாண்மை தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வந்தது. யாழ் பேரரசின் முடியாட்சி போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது நந்திக் கொடியை தமிழர்கள் இழந்து நின்றனர். பின்னர் வன்னி இராட்சியம் தனது வாள் பொறிக்கப்பட்ட கொடியை பண்டார வன்னியன் மன்னன்னது தோல்வியோடு இழந்தது. இவாறான அந்னிய அடக்குமுறைப் போர்களால் தமிழர்களது கொடியும் அவர்களது பாரம்பரிய தேசியச் சின்னங்களும் இழக்கப்பட்டுஇ தொடர்ந்து அவர்களது வரலாற்றிலிருந்தும் அழிக்கப்பட்டது. தமிழீழரின் தேசியக்கொடியானது தமிழ் மக்கள் தம் பாரம்பரிய தாயகமாம் தமிழீழத் தேசியத்தின் மேற் கொண்டுள்ள அபிலாசைகளை எடுத்து காட்டுகின்றது. தமிழீழத் தமிழர் அனைவருமே தமது விடுதலைக்காக பாடுபட்ட மாவீரை நினைவூட்டும் தமிழீழக்கொடியை அவர் மனதில் வைத்து போற்றுகின்றனர். கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் இன்று கார்த்திகை 1ம் திகதியன்று பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழீழக் கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வுகளும் ஆரம்பிக்கப்பட்டன. தேசியக் கொடியின் கீழ் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தமது அரசியல் அபிலாசைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளனர். எமது தமிழீழக் கொடியை முன்மொழியும் இத் தொடர் விழிப்புணச்சி நிகழ்வின் மூலம் ஈழத் தமிழர்கள் உலகுக்கு தனித்தமிழீழமே தீர்வு என எடுத்துக் கூறவுள்ளனர். இன்றைய நினைவுதினத்தில் இவ் முன்மொழிவு நிகழ்வும் ஒவ்வொரு தமிழனும் தனது தமிழீழத் தேசியக் கொடியை முன்மொழியக் கூடியவாறு http://www.tamilnationalflag.com/ பிரத்தியோக இணையத்தளமும் மாவீரர் குடும்பத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களது நினைவுதினமான இன்றுஇ அவரின் மற்றும் அனைத்து தியாகிகளின் வேட்கையான தமிழீழத்தைஇ எம் தமிழீழக் கொடியை மற்றும் தேசியச் சின்னங்களை அனைத்து தமிழரும் இளையோரும் எமது பாரம்பரியக் சின்னங்களாக முன்மொழிந்து எற்றுக்கொண்டனர்.
 5. வணக்கம் வாங்கோ கவி மலர் உங்களையும் வரவேற்கிறோம்
 6. வணக்கம் அர்ச்சுன், உங்கள் வரவு, நல்வரவாகுக!
 7. வணக்கம் செப்படி வித்தை வாங்கோ!