• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Vaasha

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  94
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About Vaasha

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. எங்கள் சமுதாயம் முன்னேற வேண்டுமாயின்; பல்கலைக்கழகப் புத்திஜீவிகளின் பார்வைப் புலம் விரியவேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-04 14:31:11| யாழ்ப்பாணம்] 02.06.2010 அன்று வலம்புரியில் வெளியான ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழக மருத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரை யாளர் வைத்திய கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படு கின்றது.-ஆசிரியர் மீண்டுமொருமுறை எனது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுத்த வலம்புரி ஆசிரியர் தலையங்கத்திற்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். 02.06.2010 அன்றைய ஆசிரியர் தலையங்கம் எம் சமூகத்தைக் காக்கப் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளிடம் இறைஞ்சி நிற்கிறது. நானும் ஒரு பல்கலைக்கழக ஆசிரியன் என்ற ரீதியில் என்னையும் சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கத் தூண்டியுள்ளது. பல்துறை நிபுணத்துவம் கொண்ட புத்திஜீவிகளைக் கொண்ட அதியுயர் கல்வி நிறுவனமாக பல்கலைக்கழகம் விளங்குகிறது. சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியது அதனது கடமையாகும்.எந்த ஒரு சமூக மறுமலர்ச்சியிலும் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பே காத்திரமானது. பன்மடங்கு ஊதியம், பல்வேறு வசதி வாய்ப்புகள் என்பனவற்றை நாடி மற்றையோர் ஓடிச் செல்கையில், எம் சமூகத்தின் கல்வியின் அதிஉச்ச நிறுவனமான யாழ் .பல்கலைக்கழகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்குத் தலை வணங்குகின்றேன். துரதிஷ்டவசமாக புத்திஜீவிகள் எனப்படுவோர் தானும் தன் குடும்பமும் வாழ புத்தியை விற்றுச் சீவிப்போர் என்ற கருத்து எம் சமூகத்தில் பரவலாக நிலவுவதையிட்டு மிகுந்த வேதனையடைகிறேன்.புலமைப்பரிசில் பரீட்சை சித்தியெய்தினால் நல்ல பாடசாலைக்குச் செல்லலாம், க.பொ.த உயர்தரத்தில் நல்ல புள்ளிகளெடுத்தால் கொழும்பு பல்கலைக்கழகம் செல்லலாம், அங்கு முதல் தரத்தில் சித்தியெய்தினால் வெளிநாடு செல்லலாம், அங்கு சுகபோக வாழ்க்கை வாழலாம் என்பதே எமக்குக் காலா காலமாக ஓதப்பட்டு வருகிறது. சிந்தித்துப் பாருங்கள். இது, தன்னையறியாமலே எங்கள் சமூகமே எம்மை தன்னிலிருந்து பிரிப்பதனைக் குறிக்கிறது. எமக்கு சமூகப் பொறுப்புணர்வு குறைகிறது. எமக்கொரு கடமை இருப்பதையே மறந்து விடுகின்றோம். எங்களின் முன் மாபெரும் பணி காத்துக்கிடக்கிறது. மனிதத்தையும் சுயத்தை அறிதலையும் மற்றும் எமது சமூகத்திற்குப் பயன்படுதலையும் கற்றுக்கொடுக்காத கல்வியால் யாதொரு பயனுமில்லை. எமது கற்கை நெறிகள் காலத்தினதும் எமது பிரதேசத்தினதும் எமது தேசத்தினதும் தேவைக ளைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருத்தல் வேண்டும். நாங்கள் பணிபுரிவது உயர்கல்விநிறுவனம்; கற்பிப்பது வருங்கால வைத்தியர்கள்,பல்வேறு அரச தனியார் நிறுவனங்களை நிருவகிக்க உள்ளோர், பணிபுரிய உள்ளோர், மாணவ சமுதாயத்தை வழிநடத்தவுள்ள ஆசிரியர்கள். இவர்களே சமுதாயத்துடன் நேரடியாக உறவாட உள்ளவர்கள். இவர்களை நல்ல முறையில் உருவாக்குதலே எமது தலை யாய கடமையாகும். இவர்களுக்கு சரியான முறையில் தகவல்களைக் கொடுக் கிறோம். மற்றைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது எமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மிகவும் பாடுபட்டு அதிக தகவல்களைக் கொடுப்பதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் வன்திறன்களும் தேவையான அளவு பயிற்றப்படுகின்றன. ஆனால் துரதிஷ்ட வசமாக பெரும்பாலான மாணவர்கள் மென்திறன்களில் பின்தங்கியிருப்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.சமூகத்துடன் ஒத்து வாழ்வதற்கும் சமூகத்திலே சிறப்பாகத் தொழிற்படுவதற்கும் இந்த மென் திறன்கள் மிக அத்தியாவசியமானவை. ஒருவருக்குள் உள்ள மென்திறன் மற்றவர்களுடனான மென்திறன் என்பவற்றை வளர்த் துக் கொள்ளல் மிக அவசியம். யதார்த்த உணர்வு ,பொறுப்புணர்வு ,நம்பகத்தன்மை , நேரமுகா மைத்துவம் ,திட்டமிடலும் ஒழுங்குபடுத்த லும் , முடிவெடுக்கும் ஆற்றல்,பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், புத்தாக்க முயற்சி , ஆர்வம் மற்றும் நெருக்கீடுகளைச் சமாளித்தல் போன்றன ஒருவருக்குள்ள மென் திறன்களாகும். இரக்கம், தொடர்பாடல், நற்பழக்க வழக்கங்கள், உறவுகளைக் கட்டியயழுப்புதல், குழுவாகச் செயற்படல், தலைமை தாங்குதல் மற்றும் ஒரு விடயத்தைக் கற்பிக்கவல்ல ஆற்றல் போன்றன ஒருவருடைய மற்றவர்களுட னான மென்திறன்களாகும். இவற்றிலே எவ்வளவு திறன்களை நாங்கள் கொண்டிருக் கிறோம்? இவற்றைக் கேள்விப்பட்டிருப்போம், படித்திருப்போம், இதன்படி ஒழுகவேண்டும் என நினைத்திருப்போம். ஆனால், கற்றாங்கு ஒழுகுவதிலேயே யாவும் தங்கியுள்ளன. சமூகப் பார்வையும் சமூகக்கடமையும் எங்கள் ஆழ்மனதிலி ருந்து கொண்டு எங்களை இயக்கிக் கொண்டிருக்க வேண்டும். உலகமெனும் நாடகமேடையில் எங்களுக்கு அரியதோர் பாத் திரம் இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அப்பாத்திரத்தை சரி வர நடிக்க வேண்டும். எங்கள் சொல்லிற்கும் செயலிற்கும் சமு கத்தில் ஒரு தனி மதிப்புள்ளது. எனவே, நாங்கள் காலத்தின் தேவைக்கேற்ப சரியான வற்றை சொல்ல வேண்டும், சரியானவற்றைச் செய்ய வேண் டும். முதலில் எங்களது பார்வைப் புலம் விரியவேண்டும். உலக மயமாதல் மூலம் உலகம் ஒரு கிராமமாகி வருகிறது. முன்பு பக்கத்து வீட்டுக்காரன் அயலூரவனுடன் போட்டி போட்ட நாம் இப்பொழுது இன்னொரு நாட்டுடன் , இன்னொரு கண்டத்து டன் போட்டி போடவேண்டியுள்ளது. அதற்கு ஈடுகொடுக்க வில்லையயனில் எம்மை எட்டி உதைத்துவிட்டு உலகம் தன் பாட்டிற்குச் செல்லும். பெரும்பாலும் நாம் குண்டுச்சட்டியினுள் குதிரையோட்டிக்கொண்டிருக்கிறோம். ஒரு சிலர் விதிவிலக் காக இருக்கலாம். இப்பொழுது எமது பிரதேச அபிவிருத்தி பற்றி அதிகம் கதைக்கிறோம். அபிவிருத்தியில் மனிதவளம் முக்கியமானது. ஆற்றல்மிக்க இளைய சமுதாயமே எமக்குத்தேவை. அவர்க ளது வலு வீணாகப் போகிறது. இது பற்றிச் சிந்திப்போம் . இதில் எமது பங்களிப்பு என்ன? ஆகவே, அறிவு, ஆற்றல்- குறிப்பாக மென்னாற்றல் , சமூகப் பொறுப்புணர்வு உள்ள பட்டதாரிகளைத் தொடர்ந்து உருவாக்குதல் மூலம் மறைமுக மாகவும் எமக்குக்கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நேரடியாகவும் எம் சமூகத்தைக்கட்டியயழுப்புவோமாக. வைத்தியகலாநிதி செல்வம் கண்ணதாசன் சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவபீடம்த யாழ்.பல்கலைக்கழகம். செய்தி வலம்புரி பத்திரிகை
 2. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் சிறுகதை நாவல்கள் எனப் பல சிறந்த படைப்புக்களை தமிழிற்கு தந்துள்ளார். இவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம் இன்றைய உதயனில் மேலும் விரிவான தகவல்களை பார்க்கலாம்.
 3. தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத வைகாசி மாதம் -2009 வன்னிப்போரில் உயிர்துறந்த அத்தனை உறவுகளிற்கும் எனது அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றேன். அவரவர்களின் நாடுகளில் நடைபெறுகின்ற அஞ்சலி நிகர்வுகளில் பங்கு கொள்வோம் வாரீர்.
 4. பூந்தி லட்டு கடலை மாவு - 1 1/2 கப் சீனி - ஒரு கப் பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 10 ஏலக்காய் - 6 கிஸ்மிஸ் - 10 மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை தண்ணீர் - 1/2 கப் எண்ணெய் - அரை லிட்டர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். கடலை மாவில் மஞ்சள் வண்ணப் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் நேரடியாக பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றி பூந்தியை பொரித்து எடுக்கவும். பிறகு வேறு ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் போட்டு தாளித்து பூந்தியில் போட்டு கிளறவும். இவை மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு அரைத்தெடுக்கவும். வாணலியில் பூந்தியை போட்டு லேசான சூட்டில் வறுக்கவும். பின் இதில் சீனி பாகை ஊற்றி உருண்டை பிடிக்கவும். சுவையான பூந்தி லட்டு ரெடி. .... Thanks mangayarkesari-
 5. குமாரசாமி நல்ல விடயத்தை பதித்துள்ளீர்கள். நன்றிகள் யாமினி உங்களது கருத்துக்களே எனது கருத்துக்களும். தமிழர் திருநாள் எனக் கொண்டாடுவார்கள் ஆனால் அதில் அவ்விழா பற்றிய நடனங்கள் குறைவாகவே இருக்கும். தற்போதைய இந்திய தொலைக்காட்சிகள் போல தமிழர் கொண்டாட்டம் என்றால் நடிகன் நடிகையுடனான பேட்டிகள் போடப்படும் இதில் இவ் விழாவிற்கும் அவர்களுடைய பேட்டிக்கும் எதுவித சம்பந்தமும் இருக்காது. ஏன் பரதநாட்டியம் என்பதே இங்கு சினிமாவாகிக்கொண்டிருக்கின்றது.இது வேதனைப்படவேண்டிய விடயமாகும். இதனை மாற்றுவதற்கு பெற்றோரும் நடன ஆசிரியர்களும் தொழிற்படவேண்டும்.
 6. நல்ல விடயம் சிறி அழைப்பிதழில் உள்ள திருமண மூகூர்த்தம் என்பது இங்கு நடைமுறையில் இல்லை என்பது வேதனையான விடயமாக உள்ளது. வீடியோவிற்கு உள்ள முதன்மையில் கொஞ்சமேனும் நேரத்திற்கு கொடுத்தல் நன்று.
 7. உங்கள் விளக்கத்திற்கு நன்றி காவாலி
 8. இவ் விடை சரியா ஏன் இவ் விடை என விளக்கம் தருவீர்களா காவாலி. நன்றி ஈழமகள் நன்றி நிலாமதி என்ன மச்சான் இப்படி சொல்லிப்போட்டியள். நன்றி
 9. ஒருவர் வந்து என்னிடம் இக் கேள்வியைக் கேட்டு விடை கூறச்சொன்னார். எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தந்துதவவும். தட்டானிற்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார். (சில வேளையில் கேள்வியில் பிழையிருக்கலாம்) வடிவேலின் 23ம் புலிகேசியில் வருகின்ற கேள்வி இது.
 10. யாழ் நேயர் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பிறகக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என எல்லோரும் பிராத்திப்போம்.
 11. ஸ்ரீறியண்ணை யாழ்ப்பாண மண்வாசனை என்பதை தான் அப்படி எழுதிவிட்டேன். புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கூழ் என்றால் அது யாழ்ப்பாணமக்களின் விரும்பிய உணவு. பாடல் பதிவிற்கு நன்றி ஸ்ரீறியண்ணை.
 12. நல்ல விடயம் விசுகு அவர்களின் நடைமுறையில் நல்ல கருத்துக்கள் உள்ளன. நான் பல பிள்ளைகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் பல. அப்போ பலருக்கு ஏதும் கருத்தினை அன்பாக சொல்வதை விட கண்டிப்புடன் சொல்வதை அதிகமாக கவனத்துடன் ஏற்பார்கள். ஆனால் ஒன்று இரண்டு பிள்ளைகள் அன்பாக சொன்னால் மட்டுமே கேட்பார்கள். கண்டித்தால் இல்லாத வருத்தங்கள் அவர்களிற்கு வந்துவிடும். கண்டிக்கவேண்டி நேரங்களில் கண்டிப்பது அவசியம்.
 13. ஸ்ரீயண்ணை - யாழ் மண் வாசனை அடிக்கின்றது. கூழ் என்றதும் ஆடிப்பிறப்பு தான் ஞாபகம் வருகின்றது. இத்துடன் சோமசுந்தரப்புலவரின் பாடலும் ஞாபகம் வருகின்றது. இணைப்புக்கு நன்றி.