யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

shanthy

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,250
 • Joined

 • Last visited

 • Days Won

  29

shanthy last won the day on April 2 2017

shanthy had the most liked content!

Community Reputation

1,195 நட்சத்திரம்

1 Follower

About shanthy

 • Rank
  முல்லைமண்
 • Birthday 06/16/1974

Contact Methods

 • Website URL
  http://mullaimann.blogspot.com/
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female
 • Location
  Germany

Recent Profile Visitors

6,765 profile views
 1. போர்க்கள நாயகன் புகழ் சொல்ல வார்த்தைகள் கோடி. நினைவுக்கவிக்கு நன்றி கவிஞனே.
 2. முள்ளிவாய்க்கால் முடிவுறாத்துயர் இசைத்தொகுப்பு பாடல்களை தேசக்காற்று இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு சுமந்த பாடல்கள். இலவசமாக பாடல்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். அனைவருடனும் பாடல்களைப் பகிருங்கள். 3தலைமுறையினரால் எழுதப்பட்ட பாடல்கள் இவை. தேசக்காற்று இணையத்தளத்தின் முதலாவது முயற்சியிது. முள்ளிவாய்க்கால் ஒரு இடத்தின் பெயரல்ல. தமிழினத்தின் மறக்க முடியாத அடையாளம். http://thesakkatru.com/ https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DZfLXdSYSs80%26feature%3Dyoutu.be%26fbclid%3DIwAR15dFkeWGJhhwUSzJj9bLUDhnsKOnwFgFu32EO7HkFVjv2MguB0u6wgnJg&h=AT1fWuVNdk0yJVc631vTYSJoet7aS5aQW98PXUHClZbbPu28HXxT9pmxB2VIrR54HnpzqWEjxGf4OkAUGsc1e4Q1hfUh2VkBF2DU_J2p22jsNqz7AfD13oVEasEmzY0UIqQTtr0wTZquODNchaw முள்ளிவாய்க்கால் முடிவுறாத்துயர்" இசைத்தொகுப்பில் போராளிக்கலைஞர் துளசிச்செல்வன் எழுதிய பாடல். இசை இசையமைப்பாளர் சிபோதன். பாடியவர் லக்ஸ்மி சிவனேஸ்வரலிங்கம். https://youtu.be/jjg_ooSxzB8
 3. நீக்கமற்ற நினைவுகளில்......! ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய் நீ நினைவுகளிலிருந்து மெல்லத் தேய்ந்து மறைந்தே போனாய். 25வருடங்கள் கழித்து என்னைத் தேடிக்கொண்டிருப்பதாய் உறவொன்றின் சந்திப்பில் சொல்லியனுப்பியிருக்கிறாய். கண்ணீரோடு என்னை நினைவு கூர்ந்து கதை(ன)க்கச் சொல்லியிருக்கிறாய். உன்னை அடிக்கடி நான் நினைத்துக் கொள்ளவில்லைத் தான். ஆனாலும் பக்கத்திலிருந்து நீ சொன்ன சினிமாக் கதைகளும் நடிகர்களின் பெயர்களும் முகங்களும் இன்னும் உன் நினைவில் தான் திரையில் வருகிறார்கள். சினிமாவை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியவள் நீ. சின்னத் தொலைக்காட்சிக்குள் வலம் வந்தவர்களை உயிரூட்டிய கதைசொல்லி நீ. காலம் ஞாபகங்களை மறை(ற)க்க நினைத்தாலும் பொய்யற்ற நேசிப்புகளால் காலம் கடந்தும் நினைவுகள் நீக்கமற்று வாழும் சாட்சி நீயும் நானும். 28. 10. 2016 நேசக்கரம் சாந்தி.
 4. நீண்டநாட்கள் கணணிப்பாவனை மறந்து போய்விட்டது. கருத்திட்டவர்களுக்கான பதிலையும் இடவில்லை முதலில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். கருத்திட்ட தமிழ்சிறி, புங்கையூரான்,கவி அருணாசலம் , மருதங்கேணி, யாயினி,குமாரசாமி, காவலூர் கண்மணியக்கா, கிருபன்,கந்தப்பு அனைவருக்கும் நன்றி. சுமைக்குமேல் சுமை. ஒரு வழி மீண்டு வர மறுவழி தொலையும் நிலை இதுவே இப்போதைய நிலையாக இருக்கிறது. காலமே எல்லாக்காயங்களையும் ஆற்றும் ஆயுதம். அந்தக்காலத்தையே நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.
 5. Sunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., ஓமோம்... சொல்லியும் ! நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. அப்ப ஊரில எந்த இடம்? சிலருக்கு பூராயம் ஆராயாமல் பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன். அதையும் மீறி வரும் கேள்வி இது :...., அப்ப வெளிநாடு வந்து கனகாலமோ? இங்கை இப்ப எங்க இருக்கிறியள்? சிலர் மேலும் விபரம் அறியும் ஆர்வத்தை இப்படியும் கேட்டு வழிமறிப்பார்கள். நீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவாக ஒதுங்கியது...., பழைய நினைவுகளைத் தொலைத்து புதிய நினைவுகளைச் சேமித்து மீள வேண்டும் என்பதும் பிரதான காரணம். அத்தோடு அதிகமாக தமிழர்கள் அல்லாத இடத்தை தேர்வு செய்தது யாருக்கும் என் தற்கால இருப்புப் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே. புதிய இடத்தில் வேலை. பெரும் நிறுவனம். 350பேருக்கு மேற்பட்டோரோடு வேலை செய்யும் சூழல். பணியில் சந்திக்கும் தருணங்களில் பொதுவான வணக்கம் நலவிசாரிப்பு அதோடு போகிறது முகங்கள். எந்த முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை. எனக்கான பணியை செய்து கொள்வதே பணி. அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது. இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள். நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம். நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல். தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன். பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம் ? அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. தவிர்க்க முடியாத சந்திப்புக்களை இயன்றவரை தற்கால இருப்பிடம் அடையாளம் சொல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன். சிலர் எனது அன்னியமாதல் புரிந்து எனக்கேற்ப பேசப்பழகியுள்ளார்கள். அதிகம் கேள்விகள் கேட்டு சங்கடம் தராமல் நாகரீகம் காக்கும் சிலரோடான தொடர்பாடலை மட்டும் பேணிக்கொள்கிறேன். யாரையும் பார்க்க பேசும் மனநிலையை ஏனோ இந்த நாட்கள் தருவதில்லை. அதிக நேசிப்பு நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு துரோகம் ஏமாற்று. இவற்றைத் தந்து பொய்யாகிப் போனவர்களை அடிக்கடி ஞாபகவோடை இழுத்து வருகிறது. உறவுச் சேர்ப்பில் கண்ணீரை விதைத்து மனவழுத்தத்தைக் கூட்டிக் கொண்டது தவிர வேறு பயனில்லை. மறந்துவிட நினைக்கும் முகங்களும் அவர் தம் துரோகங்களும் மனவோடையை ரணமாக்கிய காயம் அவ்வளவு இலகுவாய் ஆறிவிடக்கூடியதல்ல. இதுவும் கடந்து போகட்டும் இப்படித்தான் என்னை ஆற்றுகிறேன். தனிமையின் முழுமையான அழுத்தத்தை அணுவணுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன். இந்தக்காலம் என்னை முழுதாக மாற்றிப் புதிதாக்குமென்ற நம்பிக்கையில் ஒதுங்கிப் போகிறேன். ஆறாய் ஓடிவரும் கண்ணீருக்கு அணைகட்டி ஓயத்தெரியாது. நூறாய் பெருகும் நினைவுகளைத் தூர எறியவும் முடியாது கடக்கிறது காலம். 02. 05. 18 https://mullaimann.blogspot.com/2018/06/blog-post.html
 6. ஓட்ஸ் காலையில் நேரத்தை மீதப்படுத்தி தயாரிக்க முடியும்.இதனால் சில வருடங்கள் இதனையே தொடர்கிறேன். ஆராய்ச்சி எனும் பெயரில் வரும் கதைகள் எந்தளவு சரியானவை என்று தெரியவில்லை. எதுவும் அளவோடு சாப்பிட்டு வந்தால் சரி. இதுவே என் நிலைப்பாடு.
 7. முருகன் நிலயைவிட புத்தனை மஞ்சள் வேட்டியில் நினைச்சு பார்த்தாலே பாவமாயிருக்கு.??இப்போது நிலமை எங்கும் இதுதான் புத்தா. அனுபவ பகிர்வு தொடரட்டும்.
 8. கண்ணீர் வணக்கம்.நிழலி கவிதா துயரில் இருந்து மீண்டு வாருங்கள்.இயற்கை வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை.
 9. ஓடிய ஓட்டம் நின்று நினைவு கொள்கிறது காலம்.
 10. உங்கள் ஞாபகங்கள் பலரது இளம் பராயத்தை நினைவு கொள்ள வைக்கிறது.தலைமுறைகள் கடந்து வாழும் கதைகள் இவை.
 11. உங்கள் கருத்திற்கு நன்றி சகோதரரே.பிரிவுகளை தாங்கும் சக்தியை காலம் தருகுதில்லை.
 12. ஆலமரமும் அழியாத ஞாபகமும் - சாந்தி நேசக்கரம் - __________________________________ வேர்கட்டிய மண்ணின் ஆழத்தை அழி(ரி)த்தது மழை. ஊர்கட்டி வளர்த்த காலத்தின் க(வி)தை இறுக்கம் தளர்ந்து சரியத் தொடங்கியது. வல்லியர் காலத்து வைரம் வசந்தம் காணாமல் இரவடி(ழி)த்த மழையின் பெயரால் பாறி வீழ்ந்தது. எம்மூரின் பரம்பரை ஆல்விழுதின் கதை விடிய முதல் ஆயுள் முடிந்தது. இருந்தவரை நிழல் நாங்கள் ஊஞ்சலாட விழுது ஊர் மடியில் கனத்தோரின் கதையறிந்து கண்ணீர் துடைத்த தோழமை. சோளகக் காலம் கால்நடைகள் உணவாக ஆலிலைகள் தந்த உரம் பாய்ந்த மரம். எங்கள் பெரிய ஆலமரம் ஓரிரவில் குடைசாய்ந்து ஓய்ந்தது உயிர். பங்கு பிரித்து கோடரிகள் பல்லாண்டுப் பலம் பக்கமக்கம் எல்லாம் பிரிந்து போனது குளையாக விறகாக. கூடு கட்டிய பறவைகள் இடம்பெயரும் கண்ணீரை அறியாத மனிதர்களும் ஒருநாள் இடம் பெயர்ந்தோம். பறவைகளின் துயரறியாக் கண்ணீர் போல உலகறியாத - எங்கள் துயர் வலிகள் இன்னும் புரியாதவர்களாய். உலகெலாம் அலைகிறோம். வேர்களை அங்கங்கே நாட்டி வந்த வழி மறந்து வாழ்கிறோம். பெருமையும் பேரமும் பேசியே தொலைகிறோம். அருமை என்பதன் பெருமை அறியாப் பேதமைகளோடு. 19. 11. 2016 (என் கிராமத்தில் நான் வாழ்ந்த குறிச்சி பெயர் பத்தகல் சமாதி கோவிலடி. எங்கள் குறிச்சியில் இருந்த வைரவர் கோவிலடியில் இருந்த பெரிய ஆலமரம் 88ம் ஆண்டு பெய்த பெருமழையில் பாறிவிழுந்தது. அந்த ஆலமரத்தின் நினைவில் இக்கவிதை. வல்லிபுரம் (வல்லியர்) எனது பூட்டனார். அந்த ஆலமரம் பற்றி பலகதைகளைச் சொல்லியிருக்கிறார்)
 13. நீங்கள் சொல்லும் இதே வார்த்தைகளைத் தான் எனக்குள் நினைத்துக் கொள்கிறேன். என் பிள்ளைகளுக்கு உறவுகள் என யாருமே இல்லை. பிள்ளைகள் தங்கள் காலில் வாழ வேண்டும் அதற்காக இதையும் கடக்க வேண்டுமென்கிற எண்ணம் இருந்தாலும் பலநேரங்கள் பெரும் சவாலாவே இருக்கிறது.
 14. கருத்திட்ட கலைஞன் , சகாரா, நிழலி ,கண்மணியக்கா ,நிலாமதி ,சண்டமாருதன் ,புத்தன் அனைவரின் அன்புக்கும் நன்றி. துணிச்சலும் தோற்றுப்போகும் சகாரா பிள்ளைகள் பிரிவில். பழைய என்னை மீண்டும் கொண்டு வருவேன் காலம் மாறும் நம்புகிறேன். மகன் யுனி போனபோது இன்னொரு வகையான துயரம் அலைவு. அப்போது வீட்டில் மகள் இருந்தாள். இரண்டு பேரும் இல்லாத காலம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது அக்கா. என்னதான் இரும்பாக இருந்தாலும் பிள்ளைகளின் பிரிவு அதை அனுபவிக்கும் தருணங்கள் மிகவும் கடுமையான காலம். இப்பிரிவை தயார்படுத்திக் கொள்ளவும் முடியாது.
 15. பிரிவுகள் தரும் சுமை. 01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது. வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது. படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன். இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்லை. பிள்ளைகளின் நினைவுகளிலேயே அறுபடும் உறக்கத்தை மீட்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உதவுவதில்லை. காரணம் சொல்லத் தெரியாது கணங்கள் ஒவ்வொன்றையும் கண்ணீரால் கடக்கிறேன். சந்திக்கும் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் கண்ணீராலேயே அவர்கள் முன்னும் தொலைகிறேன். எங்களுக்கு நாடுமில்லை வீடுமில்லை...பலதடவைகள் சொல்லிவிட்டாள். சொந்தநாடில்லாத துயரத்தை அவள் இப்போது அதிகம் உணர்கிறாள் என்பதை அவள் சொல்லும் கதைகளில் இருந்து புரிகிறேன். சொந்த நிலமில்லாதவர்களின் பிள்ளைகள் என்றோ ஒருநாள் தன் வேர்களைத் தேடும் என்பதை என் குழந்தையின் ஏக்கங்களிலிருந்து கற்றுக் கொள்கிறேன். 19வருடம் அவள் அருகாமை இல்லாத நாட்கள் மிகவும் அரிதானவை. 2 அல்லது 3நாட்கள் சென்று வரும் பாடசாலை பயணங்கள தவிர அவள் என்னைப்பிரிந்து தூரம் போனதில்லை. அவர்கள் வரும் நாள்வரையும் அவர்களது படுக்கையில் உறங்கி அவர்கள் அறையில் என்னைத் தொலைப்பேன். 02.10.2017 அவளும் நானும் அவளது தோழிகள் இருவரும் அவளது பல்கலைக்கழக தங்குவிடுதிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். எண்ணங்கள் எங்கே போகிறது என்பது தெரியாமல் ஏதேதோ நினைவுகள். எனது காரும் 61ம் இலக்க நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறேன். அவள் அடுத்துவரும் தனிமையை புதிய இடம் புதிய மனிதர்கள் எல்லோரையும் சமாளித்து தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப் போகிறாள் என்பதே என் அந்தரமாக இருந்தது. என் குழந்தை என் முன்னால் பெரிய மனிசியாக தனது அலுவல்களை ஓடியோடிச் செய்து கொண்டிருந்தாள். அவள் போல நூற்றுக்கணக்கான மாணவமாணவியர் அந்தப் பகுதியெங்கும் தங்கள் பொருட்களோடும் உறவினர்களோடும் திரிந்தார்கள். அம்மா,அப்பா,சகோதரர்கள்,பேரன்,பேர்த்தி என ஆளாளுக்கு அவர்களது பொருட்களைக் காவிவந்து கொண்டிருந்தார்கள். என் குழந்தைக்கு அனைத்து உறவாயும் நானொருத்தி மட்டுமே. அவள் தனக்குள் அழுதிருப்பாள். உறவுகளே இல்லாது நாங்கள் தனித்திருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பாள். 02.10.2017 தொடக்கம் 04.10.2017 வரையும் அவளது பல்கலைக்கழக தங்குமிட விடுதிக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். பொருட்கள் கொள்வனவு செய்தல் , பதிவுகள் என ஓடியது. 05.10.2017 காலை எட்டு மணிக்கு அவளது மீதிப் பொருட்களையும் காரில் ஏற்றினோம். இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டேன்.... தான்உலவிய ஒவ்வொரு இடமாய் நின்று நின்று பயணம் சொன்னாள். அவளுக்கு 6வயதில் இந்த வீட்டுக்கு குடிவந்தோம். துயரங்களைத்தான் அதிகம் சுமந்த வீடு. 2012இல் இந்த வீட்டை விட்டு எங்காவது போவோம் எனக் கேட்ட போது ஓமென்றாள். வீட்டைவிட்டு வெளியேற இருந்த தடைகளை பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டு அலைய துணிவும் இருக்கவில்லை. அதற்கான வழிகளும் கடினமாக இருந்தது. அவளும்பல்கலைக்கழகம் போகும் வரை சூனியம் சூழ்ந்த இந்த வீட்டிலே இருப்போமென என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். உளவள ஆலோசகர்களும் மருத்துவர்களும் இந்த வீட்டைவிட்டு வெளியே போ தூரம் போ... புதிய இடம் புதிய வாழ்வு உன்னையும் பிள்ளைகளையும் மீட்கும் என சொன்னவர்களின் வார்த்தைகளை செயற்படுத்தக் கூடிய வலு என்னிடம் இல்லாதிருந்தது. அவளும் ஒரு கட்டத்தில் இந்த வீட்டில இருக்கேலாது வெளியேறுவம் என அழுத காலமும் ஒன்று வந்தது. அது அவளுக்கான பள்ளிப்படிப்பு இறுதிக்கால இரண்டு வருடங்களாக இருந்தது. பிள்ளையின்ரை படிப்பு முடிஞ்சு நீங்க யூனி போக ஒரேயடியா மாறுவம். அதுவரை பொறம்மா...அவளைச் சமாதானம் செய்தாலும் அவள் இந்த வீட்டில் அமைதியாக இருந்தது அரிது. 000 000 000 காரில் ஏறியவள் தனது பொருட்களை மீண்டும் சரிபார்த்தாள். இன்னும் சில மணித்தியாலங்களில் அவளைத் தனியே விட்டுவிட்டு நான் தனியே திரும்பி வர வேண்டும். குண்டம்மா கவனமா இருங்கோ , வடிவாச் சாப்பிடுங்கோ , நித்திரை கொள்ளுங்கோ, மருந்தை ஒழுங்கா போடுங்கோ,எப்ப கதைக்க வேணுமெண்டாலும் எந்த நேரமெண்டாலும் என்னோடை கதையுங்கோ...., அவள் பெரிய பட்டியலொன்றை சொல்லிக் கொண்டிருந்தாள். பிள்ளைகளே என் இதுவரைகால உலகம். அவர்களும் ஒருநாள் தங்கள் பாதைகள் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை மறந்த அம்மா நான். கொண்டு வந்த பொருட்களை அவளும் நானும் அவளது அறைக்குக் கொண்டு சென்றோம். இனி சமையல்,படிப்பு,படுக்கை, இருப்பு எல்லாமே அந்த ஒற்றை அறையில் தான். காலம் இப்படியும் ஒரு நாளை என் குழந்தைக்குக் கொடுக்குமென்று நினைத்திருக்காத எனக்கு அது பெரும் ஏமாற்றமே. இன்றிலிருந்து அவள் தனியே இருக்கப் போகிறாள். தனிமையை உணராத மன அமைதியையும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு காலம் கொடுக்க வேண்டும். எனது பிரார்த்தனைகள் அவளைக் காக்குமென்று நம்புகிறேன். சரி செல்லம் அம்மா வெளிக்கிடப்போறன்...கவனம்...அவள்கட்டிப்பிடித்து காதுக்குள் சொன்னாள். குண்டம்மா சந்தோசமா இருந்தா நான் சந்தோசமா இருப்பேன். அம்மாச் செல்லம் கவனம். என் குழந்தையின் அணைப்பிலிருந்து விடுபட்டு நடக்கிறேன். உடல் நடுங்குகிறது.நெஞ்சுக்குள் ஏதோ வலி. உயிரைப்பிடுங்கிக் கொள்கிறது துயர். வாகனத்தரிப்பிடம் வரையும் வந்தாள். வழியனுப்பிவிட்டு திரும்பி நடக்கிறாள். வாகனம் 61நெடுஞ்சாலைக்கு ஏறுகிறது. கண்ணீர் வழிகிறது. கத்தியழுகிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான் எனது பயணங்கள் அமைகிறது. காரில் ஒலிக்கும் பாடலும் இலத்திரனியல் வழிகாட்டியின் குரலும் தான் என்னோடு கூட வருகிறது. ஒலிக்கும் பாடலைச் சேர்ந்து பாடுவதும் , சில பாடல்களில் கரைந்து அழுவதுமாக அலைகிறேன். கார் போன போக்கில் என் பயணங்கள் தொடர்கிறது. கார் ஓடுகிறது வீதிவழியே. பிள்ளைகளின் நினைவுகளோடு ஓடுகிறது எண்ணம். பிள்ளையை திரும்ப கூட்டிவா என்கிறது உள் மனசு. வந்த தரிப்பிடமொன்றில் காரை நிறுத்துகிறேன். அதிகம் ஆட்களில்லாத அந்தத் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி அருகிருந்த காட்டுவழி கொஞ்சத்தூரம் நடக்கிறேன். பிள்ளைகளே கடைசிவரையென இதுவரை ஓடிய என் கால்களை இந்த நாட்கள் இழுத்துக் கட்டி வைத்துள்ளது. காலம் மாறும் நீயும் மாறவேண்டுமென்கிறார்கள் நண்பர்கள். என்னால் முடியவில்லை. இதுவும்கடந்து போகுமென்று ஆறுதலடையவும் முடியவில்லை. இதுவும் கடந்து போக வேண்டும்.