Jump to content

shanthy

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,343
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by shanthy

 1. பறவாயில்ல ஓடுங்கோ. கிறைன் கொண்டு வந்தெண்டாலும் மீட்கலாம்.
 2. இன்னும் காலம் போகேல்ல ஈழப்பிரியன்.
 3. இணையவன் யாழில் நீங்கள் இணையும் போது இருந்த வயதுப் பொடியன் என்ற நினைப்பில் ஓடுங்கோ. பயனுள்ள அனுபவம்.
 4. உங்களுக்கு Fersensporn என நினைக்கிறேன். மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
 5. இந்த மண் எங்களின் சொந்த மண் பாடல்கள் அவுஸ்திரேலியா இன்பத்தில் வானொலியில் இடம்பெற்ற வழியான வெளியீடு. செங்கோல் படைப்பகத்தின் அமைப்பாளர் சுதன் தலைவனின் தம்பி , கவிஞர் கவிபாஸ்கர் , கவிஞர் பேராசிரியர் திருக்குமரன் , கவிஞர் துளசிச்செல்வன் ஆகியோரின் கருத்துக்கள் ஒளிப்பதிவு.
 6. "இந்த மண் எங்களின் சொந்த மண்" பாடல் குறுந்தட்டு வெளியீடு 13.03.21 அன்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களுக்கான இசையை மண்வாசக் கலைஞர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் பார்த்திருக்கிறார். இந்நிகழ்வில் தமிழின உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். செங்கோல் படைப்பகத்தின் அமைப்பாளர் சுதன் தலைவனின் தம்பி அவர்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. 1990 வெளியான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் பாடலை தற்காலத்துக்கு ஏற்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்குறுந்தட்டில் மேலும் எட்டுப் பாடல்கள் வெளியாகியுள்ளது. தமிழகக் கவிஞர்கள் இள
 7. மலரும் நினைவுகளை மீள மலர வைத்து எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். மழையாக குடையாக கண்ணீராக சிரிப்பாக கடந்து செல்லும் ஞாபகங்கள். அண்ணா அறிவாலயம் பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுகள் ஈழப்பிரியன். ஞாபகங்களை பகிர்தல் கூட உளவள ஆற்றுகை தான்.
 8. துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது. முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.
 9. கவுண்டமணி ஒரு படத்தில் கத்தியோட ஓடின ஞாபகம் தான் வருது. அடி தாங்க முடியாமல் கவுண்டமணி ஓடினதை மறைச்சு சத்தம் போட்டால் ஊர் நம்பீடுமெண்ட நினைப்பு.
 10. ஸப்பா இந்த தாத்தாக்கள் கண்ணாடி போடச்சொன்னா எங்க கேக்கிறியள் 46+ மறதி வரப்படாது கண்டியளோ
 11. இன்று தான் விருப்புக்களை வழங்கிய உறவுகள் பெயர்களை கவனித்தேன். உங்களுக்கும் நன்றி.
 12. அன்பையும் ஆற்றுதல் வார்த்தைகளையும் தந்த காவலூர் கண்மணி, சகாரா, உடையார், நிலாமதி, ஈழப்பிரியன், சுவியண்ணா, குமாரசாமி, விசுகு, தனிக்காட்டு ராஜா, வாதவூரான், புங்கையூரான் அனைவருக்கும் நன்றி.
 13. ராசுக்குட்டி வொட்காவை மறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பட்சி சொல்கிறது. எதுக்கும் சிறுநீர் றிசல்ட் வரட்டும்
 14. அம்மாவின் அடியை குசினியில் உள்ள அகப்பைக்காம்புகள் தான் அறியும். ஆனால் அந்த நோவு எதுவும் அம்மாவின் அன்பில் மறந்து போகும். மிளகாய் தூள் பறவாயில்ல முட்கிழுவை வீர வடுவெல்லாம் கடந்த ஆக்கள் இருக்கிறம் புங்கையூரன்.
 15. ஆராயிருக்கும் அந்த கோல்டன்ஸ்? அதுவும் குமாரசாமியை குடியிருக்க விடாமல் பண்ணக்கூடிய ஆக்கள் frame Steuerelement
 16. இடைவேளை கூடாமல் வந்து எழுதீட்டு ஓடீடுங்கோ தமிழ் சிறி.
 17. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங
 18. மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது.
 19. பாத்தியளோ கவிதையை நீங்கள் கேட்கேல்ல எண்டது உண்மையாகப் போயிட்டு.
 20. நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.
 21. கோரோனா கவிதை பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறீரகள். சொற்களை செருகாமல் அழகான வாசிப்பு நன்று. வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.