Jump to content

shanthy

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,300
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Posts posted by shanthy

 1. 6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

  இஞ்ச பாருங்க அப்பு வந்ததும் வந்தீங்க ஒரு பைலா  பாட்டு ஒன்று அடிச்சிட்டு உள்ள வாங்க‌

  Wel Come  Sekar Annaa  

  10 காதல் பாடல்கள் வெளியீட்டு விழா களைப்பு தீரேல்ல தம்பி சேகருக்கு🙄

  • Haha 2
 2. 6 hours ago, balakumar2 said:

  வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன். 

  வரலாறு முக்கியம் அமைச்சரே. வருக வருக. படையணிகள் சேர்ந்து வரவேற்கப்படுகிறீர்கள்.😷

 3. On 3/1/2021 at 19:45, nige said:

  நன்றி இணைப்பிற்கு

  வரவுக்கு நன்றி nige. 

  On 4/1/2021 at 10:28, suvy said:

  உங்களின் அனுபவங்களை அழகாகத் தொகுத்து கதையாக்கியிருக்கிறீர்கள்....மிகவும் சிறப்பான எழுத்து நடை வாசகரை தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது .....பாராட்டுக்கள் சகோதரி.......!   👍

  கருத்துக்கு நன்றி சுவியண்ணா. 

 4. On 22/12/2020 at 22:59, குமாரசாமி said:

   இயல்பாக வர அவருக்கு கிடத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் சென்றதாம்.வேறு ஒரு சிலரையும் விசாரித்த போதும் உங்களுக்கு இருக்கும் வலிகள் இருந்ததாக தெரியவில்லையாம். எதற்கும் பயப்பிடாமல் வேறு வைத்தியரிடம் சென்று ஆலோசனை கேளுங்கள்.

  வைத்தியர்கள் எல்லோரும் மன தேற்றத்திற்காக  இரண்டு வாரம் மூன்று வாரத்தில் அனைத்தும் சுகமாகும் என்றுதான் கூறுவார்கள். பிரச்சனை என்று வந்தால் புதிய காரணங்கள் ஏதும் கூறுவார்கள்  இது எனது சொந்த அனுபவம்.

  நலமோடு இருங்கள்.

  தகவலுக்கு நன்றி குமாரசாமி.

  On 23/12/2020 at 18:34, யாயினி said:

  நலமாக இருங்கள் அக்கா..வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக அவசரப்படாதீர்கள்..ஒவ்வொருவரது உடல் நிலைகளும் பிரச்சனைகளும் ஒரே மாதிரியாக இருக்காது தானே..சிலருக்கு சில வருடங்கள் குடச் செல்லலாம்..✍️
   

  அன்புக்கு நன்றி தங்கையே.

  On 23/12/2020 at 18:48, தனிக்காட்டு ராஜா said:

  சாந்தி அக்கா குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 

  ஆனால் விரல்களை வெட்ட விடாதீர்கள் மருத்துவர்கள் கூட நம்மை சோதித்து பார்ப்பதுதான் சிலருக்கு சில மருந்துகள் பொர்ந்தும் சிலருக்கு சில மருத்துவர்கள் பொருந்தும் 

  வேறு வைத்தியரை நாடிப்பார்ப்பதும் நல்லது 

  நன்றி தம்பி. வேறொரு வைத்தியரிடம் சந்திப்பு நேரம் எடுத்தாச்சு. அடுத்தவாரம் போகிறேன்.

  On 24/12/2020 at 22:16, ரதி said:

  சாந்தி அக்கா நலமடைய வேண்டுகிறேன் ....உடம்பை கவனித்து கொள்ளுங்கள் 

   

  அன்புக்கு நன்றி ரதி.

 5. On 22/12/2020 at 19:14, Eppothum Thamizhan said:

  சாந்தி அக்கா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  அன்புக்கு நன்றி .💙

  On 22/12/2020 at 20:00, suvy said:

  சகோதரி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.....! 

  அன்புக்கு நன்றி சுவியண்ணா.💙

  On 22/12/2020 at 21:01, நிழலி said:

  விரைவில் பூரண சுகமடைவீர்கள் சாந்தி. ஒவ்வொருவருக்கும் சுகமாகும் காலம் வேறுபடலாம், ஆனால் கண்டிப்பாக சுகமடைவீர்கள்.

  நன்றி நிழலி. 💙

  On 22/12/2020 at 22:11, கிருபன் said:

  நண்பர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இந்த சத்திரசிகிச்சையைச் செய்திருந்தார். சிக்கல்கள் எதுவுமில்லாமல் சில மாதங்களில் பழையபடி கையை முழுமையாகப் பாவிக்கத்தொடங்கியிருந்தார்.

  சாந்தி அக்கா, தேனீ கொட்டியது மாதிரி கடுக்கின்றதென்றால் மீண்டும் மருத்துவ உதவியை நாடி முழுமையாக பரிசோதனை செய்வது நல்லது.

   விரைவில் பூரண குணமடைவீர்கள் என்று நம்புகின்றேன்.

  நண்பரின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி கிருபன். இரண்டு மாதமாகிவிட்டது எனினும் வலி ஒரேமாதிரி இருக்கிறது. 4ம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.

 6. Monday, December 28, 2020

  றைன் நதியோடு நானொருநாள்

  ---------------------------------------------------

   (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது)

  நேரத்தைப் பார்க்கிறேன்.  காலை 6.56. இன்னும் 2 மணித்தியாலங்கள் இருக்கிறது என் பயணத்தின் இலக்கையடைவதற்கு.

  இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மகளிடம் போகிறேன். ஒரு குழந்தையென்ற எனது கனவுகள் விலக்கி அவள் 4வது செமஸ்ரர் தொடக்கத்தில் நிற்கிறாள். இன்னும் இரண்டு செமஸ்ரர் முடிந்தால் அவளது கற்றலின் இளமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்வாள்.

  காலமே என் குழந்தையைக் காத்திடு. அவள் கனவுகள் மெய்ப்பட உன் கைகளால் ஆசீர்வதித்து ஒளியிடு. நீயே நிதர்சனம் நித்தியம்.  உன்னைச் சரணடைகிறேன் என்னை வதைக்காதே.

  குறையுறக்கத்தில் கண்கள் தடுமாறுகிறது.

  மலைகளின் உறக்கத்தையும்  மரங்களின் சோம்பலையும் கலைத்துக் கொண்டு வெயில் கீழிறங்கிக் கொண்டிருந்தது.

  சூரியக் கோளத்துச் சிவப்பு சந்தனமாகிக் கரையத் தொடங்கிப் பிறகு வெண்ணிறத்தை மலையின் இடுக்குகளில் வடித்தது.

  அழகான ஏப்றல் மாதத்தின் துளிர் மரங்களின் வர்ணப்பச்சையில் குதித்தன வெயில் கதிர்கள்.

  ஒடிக்கொண்டிருந்த ரயிலில் எனது இருக்கையைத் தேடிவந்து ஊற்றிய காலை ஒளியில் என் நித்திரை கலங்கி விழித்து கலங்கி மீண்டும் குறைத்தூக்கம் என் கண்களைப் பிடிக்கிறது.


  றைன் நதியோரமாய் இன்ரசிற்றி எக்ஸ்பிறஸ் நடைவேகத்தில் உருளத் தொடங்கி வேகமெடுத்தது.

  நதியின் கரையோரத்து மரங்களின் கிளைகளும் இலைகளும் பரப்பிய நிழல்க்கவிதை நதியில் ஏறி நின்றது.

  மரங்களின் நிழலோடு முகில்கூட்டம் சேர்ந்து அழகான ஓவியமொன்றைக் கண்முன்னே விரித்து வைத்தது.

  இயற்கை எவ்வளவு மர்மம் நிறைந்தது. வினாடிக்கு வினாடி எத்தனை அற்புதங்களையும் அனர்த்தங்களையும் நிகழ்த்தி விடுகிறது ?

  வந்து வந்து போன ஒளிச் சிதறலில் நித்திரை தீர்ந்து போகிறது.  முழுமையாக முறிந்தது சோம்பல்.  றைன் நதியின் கரும்பச்சை நிறத்தின் மீது கண்கள் பாய்கிறது.

  கண்ணில் தெரிந்த ஓவியம் கண்ணெதிரே கரைகிறது.  காவல்துறையென எழுதப்பட்ட படகொன்று  சத்தமேயில்லாம் கிடந்த சித்திரம் மீது ஏறிச்செல்ல வர்ணங்களெல்லாம் கலந்து கலங்கி நவீன வர்ணச் சித்திரமாகியது.

  குட்டித்தீவுகள் போல இடையிடையே கற்பாறைகள் அதைச்சூழ சில மரங்கள். அங்கங்கே வாத்துக் குஞ்சுகள்.  ஈரச்சிறகுகளைக் கற்களின் மேலேறி உலர்த்திக் கொண்டிருந்தன. தாய் வாத்துகளின் அருகே சில குஞசுகள் குந்தியிருந்தன.

  காற்றிலே மெல்லவூரும் அலைகளின் கைகளால் நீருயரம் இடையிடையே மேலேறிப் பிறகு தன் பாதைகளை தேடி ஓடிக் கரைகளை உதைக்கிறது.

  நீண்ட அகன்ற பெரிய  சரக்குக்கப்பல்கள் சில பச்சை அடையாளமான பெருங்குற்றிகளின் வழியே பயணிக்கின்றன.

  தன்னை யாரென அடையாளம் சொல்வது போல தன் பாதைவழியே றைன்நதி நடந்து கொண்டிருந்தது.

  இந்தக் கரைகளின் வழியில் எனது பயணங்கள் ஆரம்பமாகி ஒன்றரை வருடமாகிவிட்டது.

  வருடத்தின் அனைத்துக் காலநிலை மாற்றத்தையும் கடந்தே நடக்கிற  நதியோடு  என் மௌனங்களும் கண்ணீரும் கலந்தேயிருக்கிறது.

  10. 15மணிக்கு மைன்ஸ் ரயில் நிலையத்தில் இறங்கி மகளின் வீட்டுக்கு நடக்கிறேன்.  மலைகள் றைன்கரைகள் தாண்டி மனிதத்தலைகள் நடுவே போகிறேன்.

  12பாகை செல்சியஸ் வெக்கை. வியர்க்கிறது போட்டிருந்த யக்கற்றைக் கழற்றி இடுப்பில் கட்டுகிறேன். மகளுக்கான பொருட்கள் பாரம் வலது தோளில் இருந்து இடது தோழுக்கு மாற்றுகிறேன்.

  அவளது வீட்டுக்கு 300மீற்றர் இருப்பதாக ஜீபிஎஸ் குரல் ஒலிக்கிறது.  50மீற்றர் தொலைவில் வரும் பாதசாரிகள் சமிஞ்ஞை விளக்கில் வலது பக்கம் திரும்பி நடவென்கிறது ஜீபிஎஸ்.

  திரும்புகிறேன் அந்த வளைவின் நான்காவது உயர்ந்த கட்டடம் வங்கியொன்று. ஆட்கள் போயும் வந்தும் கொண்டிருந்தார்கள். அதைத்தாண்டி ஒரு துருக்கிய உணவகம்.  அதனருகில் ஒருத்தி வெள்ளை நிறத்திலான கப் ஒன்றினை நீட்டிப் பிச்சை கேட்டுக் கொண்டிருநதாள்.

  பிச்சையெடுப்போர் மீது முன்பெல்லாம் கோபம் வரும்.  என்னை மறித்துப் பிச்சை கேட்ட பலருக்கு 'வேலைக்கு போங்கோ' சொல்லியிருக்கிறேன்.

  அம்மா... உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையோ? ஒருதரம் பிள்ளைகள் என்னில் சினந்தார்கள்.

   எல்லாராலையும் வேலை செய்ய ஏலாது தெரியுமோ ?  உதவி செய்யாட்டில் பேசாமல் போங்கோ... அவையளும் மனிசரம்மா....

  இங்கே வாழ வசதிகள் இருந்தும் வாழத்தெரியாது சோம்பேறிகளாக இருப்போரே இப்படி வீதிகளில் இரப்போரென்பது  என் எண்ணம்.

  நேசக்கரம் செய்து கொண்டு உப்பிடிச் சொல்லைதையுங்கோ....

  இப்போது அப்படிச் சொல்வதில்லை.  அவர்களுக்கும் என்னென்ன இடைஞ்சல்களோ ?  முடிந்தால் இயன்றதைப் போட்டு விட்டுப் போகப்பழகி விட்டேன்.

  பச்சைப் பாவாடையும் வெள்ளை நிறத்தில் பூப்போட்ட மேலாடையணிந்து இன்னொரு பெண் அடுத்த வீதியில் இருந்தாள்.

  000         000              000

  மணி 12.10 மகளோடு அவள் வீட்டிலிருந்து வெளியில் வருகிறோம். சனிக்கிழமை அவசரமில்லாது இயங்குவது போல கடைகளில் வீதிகளில் மனிதர்கள் திரிந்தார்கள்.

  அடுத்து பிராங்பேட் நகரத்திற்கு நான் போக ரயிலுக்கான நேரத்தை இணையத்தில் பார்க்கிறேன்.

  மகள் வேலைக்குப் போகும் ரயில் வர இன்னும் 10நிமிடங்கள் இருந்தன.

  நான் உங்களை ஏத்தீட்டு போறனம்மா...

  சொல்லிக் கொண்டு என்னோடு வீதிச் சமிஞ்ஞையைக் கடந்து  என்னோடு வருகிறாள்.

  அம்மா..., ஒரு வீடில்லாத ஆளுக்கு கிழமைக்கு ஒருக்கா சாப்பாடு குடுப்பேன் அந்த ஆளைப்போன கிழமை கண்டனான். நல்ல உடுப்புப் போட்டு ரயிலுக்கு நிண்டவர்.  என்னட்டை வந்து கதைச்சவர்.  நான் சாப்பாடு தந்ததுக்கு கனதரம் நன்றி சொன்னவர். அவர் இப்ப வேலை செய்றாராம்...

  நல்லது...

  அந்த மனிதனை அவள் சந்தித்த அனுபவம் பற்றி கடந்த வருட இறுதியில்  சொல்லியிருந்தாள்.  

  அப்போது அவள்  மனவுளைச்சல் அதிகமாகி மிகவும் அந்தரப்பட்ட நேரம்.  வாரம் ஒருநாள் தேவாலயம் சென்று வருவாள்.

  ஒரு இரவு உறங்க முடியாது அவள் விடியற்காலை 4மணி வரையும் தொலைபேசியில் என்னோடு அழுதபடியிருந்தாள்.  உடனடியாக அருகே ஓடிப்போக முடியாத அந்தரம் எனக்கு. மறுநாள் பின்னேரம் தான் அவளிடம் போனேன்.

  முதல் நாள் அவள் தேவாலயம் போகும்போது வாசலில் அந்த மனிதன் தேவாலயத்தின் வாசலில் கையேந்தி நின்றான். அவனுக்கு கொடுக்க அன்று அவளிடம் எதுவும் இல்லை.

   மனக்கலக்கத்தில் தேவாலயம் போனவள் திரும்ப வரும் போது பணம் தருமாறு அவன் கேட்டால் தனது மனநிலை மேலும் துயரடையும் என நினைத்தபடி வந்தாள்.

  அவன் எதுவும் கேட்காமல் கையை நீட்டிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்துச் சிரித்தான். இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டுமெனச் சொன்னான்.  

  சிலர் பிச்சையேந்துவார்கள் எதுவும் கொடுக்காமல் போகிறவர்களை சபிப்பார்கள். இவன் யாரையும் சபிக்காமல் அமைதியாகவே கையேந்திக் கொண்டிருந்தான்.

  அதன் பிறகு சிலநாட்கள் பேரூந்து நிலையத்தில் கையேந்திக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.

  வீட்டிலிருந்து தனக்கு கொண்டு போகும் சாப்பாட்டில் அவனுக்கும் கொடுக்கத் தொடங்கினாள்.  

  ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து பெறும் உணவுக்கு அவன் சொல்லும் நன்றி அவளுக்கு பசியிருக்கும் ஒருவரின் பசிபோக்கும் ஆறுதலைக் கொடுத்தது.

  வாரத்தில் சிலநாட்கள் தொடர்ந்து ஒருநேர உணவைக் கொடுத்து வந்தாள்.

  000             000            000

  13.35 மணிக்கு பிராங்பேட் பிரதான ரயில் நிலையத்தை அடைகிறேன். ஓர் விஞ்ஞானியுடனான சந்திப்புக்கான பயணம்.

  மின்னஞ்சல் குறுஞ்செய்தியில் ஆரம்பித்த எங்கள் உறவு இன்று நேரே சந்திக்கப் போகிறோம்.

  என் பெரும் பலத்தை நம்பிக்கையை கனவுகளைக் காவு கொண்டது 2019ம் ஆண்டு. இந்த வருடம் தந்த  பெருந்துயரையும் அதிர்ச்சியையும் கடந்து போக  அதற்கான தீர்வைத் தேடியலையும் இந்த நாட்கள். இனி இழப்பதற்கு எதுவுமற்ற நிலையை மாற்றும் வழியொன்னை எதிர்பார்த்து எங்கெல்லாமோ அலைகிறேன்.

  ஒரு சிறு துவாரம் கிடைத்தாலே அதனூடு பயணித்து என் பாதையைக் கண்டடைவேன் என்ற என் நம்பிக்கை மீது வீழ்கின்ற பாறைகளைத் தாண்டியோடும் பயணத்தில் இதுவும் ஒன்று.

  ரயில் நிலையத்தில் என்னை வரவேற்ற உறவும் நானும் நெருக்கம் மிகுந்த பிராங்பேட் நகரின் வீதியொன்றில் நடந்து உணவகமொன்றிற்குப் போனோம்.

  எங்களுக்கான உணவு வந்தது. சாப்பிட்டபடி பேசத் தொடங்கினோம்.  திறமைகளைப் பலிகொள்ளும் உலகின் பயங்கரங்கள் பலியெடுப்புக்கள் பற்றிய உரையாடலில் என் கண்ணீரும் கலந்தது. ஆச்சரியமும் பரிதவிப்பும் அந்தக் கண்களிலிருந்த கருணையும் எனக்கு உதவுமென்ற நம்பிக்கையைத் தந்தது.

  மூன்றரை மணிநேரம் நாங்கள் பேசினோம். நான் வேண்டிய உதவி தவிரவும் நிறையவே பேசினோம். ஒரு சின்ன வழியைக் கண்டு பிடித்த ஆறுதல் என்னுள் குடியேறுகிறது.

  16.38 மணிக்கு மீண்டும் மைன்ஸ் நகர் நோக்கிப் போகிறேன். நதிகளைக் குறுக்கறுக்கும் பாலங்களையும் பாதைகளையும் கடந்து ஓடும் ரயிலில் கண்ணாடி வழியே என் விழிகள் போகிறது.

  எத்தனையோ கேள்விகள் அதிர்ச்சிகள் பயங்கரங்கள் நடைபெறும் நாடு.  துறைசார் போட்டிகள் நேர்மையை மட்டுமே நம்பும் மனங்களை தடயங்கள் இல்லாமல் அழிக்கும் கொடூரம், வியாபாரிகள் பணமுதலைகள் கையில் சிக்கிய நேர்மையாளர்களின் இழப்பு... இப்படி எத்தனை மர்மங்கள்....?

  ஜனநாயகம் மனிதம் பேசிக்கொண்டு  அடையாளமில்லாத பலியெடுப்புக்கள்.

  எத்தனை அம்மாக்களை என்போல் உயிரோடு கொல்லும் நுணுக்கங்களை  இந்த உலகம் தன் பொய்யான முகத்துள் புதைத்து வைத்திருகிறது...?

  நினைவுகளில் தடக்கித் தடக்கி விழும் என் காலத்தைத் தொடரும் பயம் வெறுப்பாகிக் கண்ணீராகி கைவிரல்களில் காய்கிறது.....????

  17. 20 மணிக்கு மைன்ஸ் ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். அடுத்த பயணத்திற்கு இன்னும் 81 நிமிடங்கள் இருந்தன.  ஆட்கள் குறைந்த இடமொன்றில் இருந்த இருக்கையொன்றில் போயிருந்தேன்.  

  மைன்ஸ் ஓப்பிள் அரேனாவில் நடைபெற்ற மைன்ஸ் டுசில்டோர்ப் இடையேயான காற்பந்தாட்டத்தில் மைன்ஸ் 3கோலடித்து வென்றதை செய்தியில் வாசித்துக் கொண்டிருந்தேன்.

  எத்தனை மனிதர்களின் வாழ்வையும் கனவுகளையும் சுமந்து செல்லும் ஒவ்வொரு ரயிலுக்காகவும் காத்திருக்கும் பலரோடு நானும் ஒருத்தியாக காத்திருந்தேன்.

  நான் காத்திருந்த பகுதிக்கு டுசில்டோர்ப் ரீசேட்கள் அணிந்த பலரும் வந்திருந்தார்கள்.  அவர்கள் அனைவருமே டுசில்டோர்ப் காற்பந்தாட்ட அபிமானிகள். பலரின் கைகளில் பியர்ப்போத்தல்கள்.

   சிலர் நடனமாடியும் சிலர் மௌனமாகவும் பலர் பாடியும் அந்த நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தது.

  18. 41மணிக்கு ரயிலேறுகிறேன். டுசில்டோர்ப் காற்பந்து ரசிகர்கள் பலராலும் அதிகம் ரயில் பெட்டிகள் நிறைந்தது.

  மீண்டும் றைன்நதிக் கரைகளால் ரயில் போகிறது.  இரவு 19. 42மணி.  கண்ணுக்கு நேரே தன் கதிர்களை வீசுகிறது சூரியன். கண்ணில் ஒளிவீழக் கண்கள் கூசுகிறது.

  மேலிருந்து கீழாக நிழலைக் கீறுகிறது சூரியக்கதிர்கள்.  எதிர் வளத்தில் படிக்கட்டுக்களாக ஒழுங்கமைக்கப்பட்ட மேடுகளில் துளிர் கட்டியிருக்கும் முந்திரிகைக் கொடிகள் மீதும் நதிக்கரைகளில் அமைந்த வீடுகளின் முகடுகளில் படிந்த சூரிய வெளிச்சம் தண்ணிரில்லாத சித்திரமாகி தன்னழகோடு என்னை அழைக்கிறது.

  அங்கங்கே பழங்கால வரலாறுகள் எழுதிய கோட்டைகள் பழமை மாறாத இளமையோடு கூட ஒடிவருவது போலிருந்தது.  

  யேர்மனியக் கோட்டைகள் ஒரே கலைஞரின் கைவண்ணமோ ?    பலதடவை நினைத்திருக்கிறேன். அவை எப்போதும் ஒரே வடிவங்களையே கொண்டிருக்கிறது.

  சில இடங்களில்  உள்மனைகளை ஊடறுத்து ரயில்  ஓடும் போது கோடைகாலத் தோட்டங்கள் தேவாலயங்களைக் கொண்டு வரும் ஊர்மனையழகு உயிரோவியங்களைக் கண்ணிலூற்றுகிறது.

  நேரம் 20. 02 நிமிடங்கள்...,
  கண்ணைக் காந்திய சூரியன் கோபமாறிச் சிவக்கிறது. கீழிருந்து மென்னிருள் மேலேறுகிறது. மலைகளின் மறைவுகள் கருமண்ணிறமாகிறது. மரங்களின் குருத்திலைகள் இருளையேந்தத் தயாராகிறது.

  நேரம் 20. 24....
  நதிகளின் பாதைகளை மறைத்துக் கொண்டு ரயில் பதிவான பகுதியில் ஓடுகிறது.  

  மஞ்சள் வெளிகளாய் கடுகுத் தோட்டங்கள்.  ஒரே சீராக வடித்த குன்றுகளாக கடுகுப் பூக்கள். பரந்த பச்சை வெளிகளில் புற்கள் பாய்விரித்திருக்க சிறு பறவைகள் குந்தியிருக்கின்றன.

  மீண்டும் றைன்நதிக்கரை வருகிறது. மலைகளின் வெளிகளில் ஆங்காங்கே புகார் மூட்டம்.

  நேரம் 20. 33....,
  துரத்தே தெரியும் கட்டடங்களிலிருந்து ஒளிப்பூக்கள் கண் திறக்கிறது. நதியின் மடியில் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பல்களும் மின்குமிழ்களால் ஒளியேறிக் கண்திக்கிறது.

  றைன்நதிக்கு நித்திரை வருது போல. அலைகளின்றி நதி அமைதி கொள்கிறது. மரங்கள் ஆடாமல் அப்படியே கண்ணுறங்கத் தொடங்குகிறது.

  நதியோடு நானும் கரைகிறேன். பயண அலைவின் களைப்புத் தீர காதில்  கெட்செற்றூடாக காதை நிறைக்கும் தாமரையக்காவின் '  கண்கள் நீயே காற்றும் நீயே 'பாடல் ஒலிக்கிறது.  

  கொலோன் நகரத்துக் கோபுரங்களிலிருந்து சிதறும் ஒளிவெள்ளம் இரவு நேரத்தின் கொலோன் அழகை இதோ பாரென அழைத்தது.எத்தனை தடவைகள் இந்தக் கரைகளையும் அழகையும் அனைத்துக் காலநிலை மாற்றங்களோடும் கண்டாயிற்று. ஆனாலும் புதிது புதிதாய் தன்னழகை கொலோன் நகரும் கோபுரங்களாய் உயர்ந்து நிமிர்ந்திருக்கும் கட்டடங்களும் கண்ணுக்குள் புதிதுபுதிதாய் எழுதிக் கொள்ளும் கவிதைகளின் படிமங்களாய் பதிகிறது.

  கொலோன் ஆற்றங்கரைகளை அடையாளம் சொல்லுமாப் போல ஆற்றிலோடிக் கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சம்.

  இருளைப் பிரித்தோடிக் கொண்டிருந்த ரயில் யன்னல்களில் பயணிகளின் முகங்கள் தெரிந்தன.

  கொலோன் பிரதான தொடரூந்து நிலையத்தை அடையவிருப்பதை ரயில் அறிவிப்பு ஒலிவாங்கி அறிவித்தது.

  நேரம் 20. 54..,
  நான் இறங்க வேண்டிய தரிப்பிடத்தை இன்னும் சில நிமிடங்களில் அடையவிருப்பதாக அறிவிப்புக் கேட்கிறது.

  இப்போது இருளோடு வெளிச்சப் பொட்டுகள் தெரிகின்றன. இருள் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியாகி ரயில் வெளிச்சம் மட்டுமே இப்போது கனமடைகிறது.  

  சாந்தி நேசக்கரம் யேர்மனி
  04/2019
   

  றைன்நதி பற்றிய குறிப்பு :-
  றைன் நதியானது சுவிஸ் நாட்டின் அல்ப்ஸ் மலைத்தொடரின் தென்கிழக்குப் பகுதியில உருவாகி ஐரோப்பாவின் பல நாடுகளை ஊடறுத்து ஓடும் பிரதான நதியாகும்.

  இது ஐரோப்பாவின் நீளமான நதிகளில் ஒன்றாகும். நீளம் கிட்டத்தட்ட 1230கிலோமீற்றர். நீர்வழிப் போக்குவரத்தின் பிரதான வழியாகவும் அமைகிறது.

  யேர்மனியில் றைன் ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் கொலோன் நகரமாகும். யேர்மனியின் பிரதான வரலாற்று நகரங்களில் கொலோன் நகரும் ஒன்றாகும்.

  றைன் நதியானது சுவிஸ்,ஒஸ்ரியா ,லக்சம்பேர்க் யேர்மனி ஆகிய நாடுகள் உடாகப் பாய்ந்து நெதர்லாந் நாட்டின் வடகடலில் கலக்கிறது. இந்த நதிக்கரைகளையண்டி பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டைகள் கட்டப்பட்டுள்ளது.

   (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது)

  https://mullaimann.blogspot.com/2020/12/blog-post.html

   

  • Like 6
 7. On 6/12/2020 at 00:46, பெருமாள் said:

  கன காலத்துக்கு பிறகு சாந்தியக்கா நல்வரவு .

  அன்புக்கு நன்றி பெருமாள். 

  On 6/12/2020 at 03:00, goshan_che said:

  வருகைக்கும் கவிதைக்கும் நன்றி அக்கா.

  மன்னிக்க தெரிந்த மாமனிதன் மண்டேலா.

  அத்தனை வருட அடக்குமுறைக்கு பதிலாக ஆட்சிக்கு வந்த அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளையினத்தவரை வேலையில் இருந்து,  வியாபாரத்தில், பண்ணகளில் இருந்து விரட்டி அடித்திருக்கலாம்... ஆனால் மடிபா செய்யவில்லை.

  சாகும் வரை ஜனாதிபதியாக இருந்திருக்கலாம்.. ஆனால் மடிபா அதையும் செய்யவில்லை.

  The long walk to freedom ... வெள்ளை சிறையில் இருந்து மட்டும் அல்ல, சாதாரண மானிடர்களின் உள்ளத்தில் இருக்கும் சிறையில் இருந்தும் மடிபாவை விடுவித்திருந்தது. 

   

   

  போராடிய எல்லோயும் வலியவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் கைகளில் கட்டுப்படுத்தி விடுகிறார்கள். அந்தப் பிடியில் இருந்து வெளிவரும் போது பலவற்றை இழந்து விடுகிறது வரலாறு. அதுதான் மடிபாவுக்கும் நடந்திருக்கும் goshan_che. 

  On 6/12/2020 at 03:14, Justin said:

  சாந்தி போன்றோர் தொடர்ந்து எழுத வேண்டும். 

  மண்டேலா ஒரு உதாரண புருஷர் தான். இருண்ட கண்டத்திலிருந்தும் ஒரு நேர்மையான தலைவர் உருவாக முடியும் என்று நிரூபித்தவர் மண்டேலா!

  ஜனநாயக்தைப் பொறுத்தவரை குன்றில் விளக்காக (Beacon on the Hill) இருக்கும் அமெரிக்காவிலிருந்தும் ஒரு சர்வாதிகாரி உருவாக முடியும் என்று நிரூபித்தவர் ட்ரம்ப்!

  வலியது முந்தும் எளியது வீழ்ச்சி காணும் என்பதை அமெரிக்கா மீண்டும் நிரூபித்துள்ளது. 

 8. 17 hours ago, nunavilan said:

  அக்கா விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன். 

   

  splint அல்லது wrist brace போட வேண்டும் அக்கா. முற்று முழுதாக மாற வருடம் கூட எடுக்கலாம்.

  நன்றி நுணா. சிகிச்சைக்கு முன் சொன்னபடி சிகிச்சை முடிந்த பிறகு இல்லாமல் இருக்கிறது.

 9. 16 hours ago, goshan_che said:

  சாந்தி அக்கா

  பெரிய விடயம் போல தெரிகிறது - உங்கள் மருத்துவர்களிடம் இதை escalate பண்ண பாருங்களேன்?

  கருத்திற்கு நன்றி goshan Che.

  இந்த சத்திர சிகிச்சையை செய்த மருத்துவர் அடுத்து விரல்களை வெட்டிப் பார்க்கவே ஆலோசிக்கிறார். 

  செய்யப்பட்ட சிகிச்சை மூலம் கை முழுமையாக குணப்படுத்தும் என்று தான் சொல்லிச் செய்தார்கள்.  ஆனால் இப்போது கை எதுவும் செய்ய முடியாது இருக்கிறது.  அடுத்து புது வருடத்தின் பிறகு தான் மாற்றம் பற்றி பார்க்க வேண்டும்.

  15 hours ago, உடையார் said:

  எனக்கும் இதைப்பற்றி தெரியா, அக்கா விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்🙏

  அன்புக்கு நன்றி உடையார்.

  15 hours ago, பெருமாள் said:

  விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

  நன்றி பெருமாள்.

  14 hours ago, குமாரசாமி said:

  எனக்கு தெரிந்த சகோதரி ஒருவரும் இதே மாதிரி சத்திர சிகிச்சை செய்தவர். சுகம். ஆனால் குளிர் நீரில் கை கழுவினால் அல்லது குளிரான பொருட்களுடன்  வேலை செய்தால் வலி வேதனை இருப்பதாக கூறினார்.

  நலமோடு இருங்கள்.

  நன்றி குமாரசாமி. 2வாரத்தில் காயம் மாறிவிடும் ஒருமாதம் முடியும் போது எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்யலாம் என்று சொல்லித்தான் சத்திரசிகிச்சை நடந்தது. நானும் புதுவருடத்தோடு வேலைக்கு போகலாம் என்று நம்பிக்கையுடன் தான் சிகிச்சைக்கு சம்மதித்தேன். இப்போது நிலமை தேனீர் கப் கையில் வைத்திருக்கவே முடியாது இருக்கிறது.  

  சகோதரிக்கு எவ்வளவு காலத்திற்கு பிறகு இயல்பாக வந்தது என்று கேட்டு சொல்லுங்கள். 

   

 10. 1 hour ago, Justin said:

  எனக்கு அனுபவமில்லை. ஆனால் physiotherapy சத்திர சிகிச்சைக்குப் பிறகு செய்திருக்க வேண்டுமே? செய்தீர்களா?

  2தடவை மட்டுமே தந்தார்கள். நானே அந்தப் பயிற்சிகளை செய்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. 

  நடுவிரல் மோதிர விரலில் இன்னொரு சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என இன்று சொன்னார்கள். அடுத்த வருடம் தான் மேற்கொண்டு வைத்தியரிடம் போக வேணும். 

 11.  Carpal tunnel surgery செய்தவர்கள் இருக்கிறீங்களோ? 

  எவ்வளவு காலத்திற்கு பிறகு கை இயல்பான செயற்பாடு வரும்? 

  6 வாரம் முதல் Carpal tunnel surgery செய்தேன். காயம் ஆற 5 வாரங்கள் சென்றது. Carpal tunnel surgery செய்த கையில் 2 விரல்கள் ஏற்கனவே உணர்வு இல்லாமல் போய் விட்டது.

  தற்போது உணர்வு வந்துள்ளது ஆனால் விரல்கள் மடிக்கவோ வேலை செய்யவோ முடியாது இருக்கிறது. 

  மணிக்கட்டு உள்ளங்கை தேனீ குற்றினால் இருக்கும் வலிபோன்று வலிக்கிறது. 

  உங்கள் அனுபவங்களை பகிருங்கள். 

  • Sad 1
 12. On 12/12/2020 at 16:47, தனிக்காட்டு ராஜா said:

  அவர் என்ன போராட்டத்துக்கு அழைத்தா எழுர்கியிருக்கார் மருதர் ??

  இந்த திரிக்குள்ள ஒருத்தரையும் காணல்ல பாருங்கள் அங்க நிற்கிறார்கள் நம்மவர்கள்.

   பல உன்மை சம்பவங்கள் சிறைக்குள் இருந்து வெளிவந்தவையே

  ஆரூரனின் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். 

  தம்பியா இங்கு வந்து கருத்து செல்லாமல் அவர்கள் விடுதலைக்காக பலர் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

   

  37 minutes ago, goshan_che said:

  இது எனக்கும் புரியவில்லை. பல பெரும் தளபதிகளே வெளியில் வந்தபின்னும் இவர்கள் ஏன் உள்ளே?

  அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி, மகேஸ்வரி, குமார் பொன்னம்பலம், மனோ கணேசன் (காசு வாங்கி கொண்டுதான் என்றாலும்) பலரை வெளியில் கொண்டு வந்தவர்கள்.

  அவர்கள் வெளியில் கொண்டு வந்த வழக்குகளின் தன்மையும் இன்னும் விசாரணைக் கைதிகளாகவும் ஆண்டு கணக்கில் தண்டனை பெற்றிருக்கும் கைதிகள் வழக்குகள் போலானது இல்லை. 

  • Like 3
 13. 1 hour ago, Justin said:

  தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள் வருவோரின் துன்பம் நினைத்துப் பார்க்க முடியாதது. நான் அறிந்த வரையில், சிறையில் இருக்கும் பலர் இலங்கைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட முடியாதோர். மிகப்பெரிய முரண்நகை என்னவென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்பு பட்டுக் கைதான சில சந்தேக நபர்களே சிறந்த சட்டப் பிரதிநிதித்துவத்தினால் விடுதலை பெற்றிருக்கின்றனர்.

  நான் நினைக்கிறேன் இப்படியான சட்ட உதவி எல்லா அரசியல் கைதிகளுக்கும் கிடைக்கும் வழி ஏற்படுத்தப் படவில்லை!

  பலருக்கு டக்கியோடு சேர்ந்தியங்கிய மகேஸ்வரி வேலாயுதத்தை நினைவிருக்கலாம். இவருடைய அணுகுமுறை, அரசியல் கைதிகளை நீதி மன்றின் மூலம் பிணையெடுத்து விடுவார், விடுதலை பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. பின்னர் வழக்கு சில வருடங்கள் தவணையில் இழுபட்டு ஒரிரு நாட்கள் காவல்துறை/அரச  தரப்பு வராமல் , துலங்காமல் விட எரிச்சல் கொண்ட நீதவான்களால் தள்ளுபடியாகி விடும். இப்படிப் பலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 

  இப்படி இலங்கை நீதித்துறையின் பலவீனங்களை அரசியல் கைதிகளுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் ஏதாவதொரு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்! 
   

  நீங்கள் சொல்லும் வகையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் இல்லை. 

  நீதித்துறை பலவீனங்கள் அதன் வரையறை பற்றி விளக்கம் தர முடியாமைக்கு மன்னிக்கவும் ஜஸ்ரின். 

  வெளியே இருந்து நாம் கருத்தாடுவது போல தமிழ் அரசியல் கைதிகள் நிலமை இல்லை என்ற துயர் தரும் நிலமை அதிகம். 

  கருத்தால் அரசியல் கைதிகள் மீதான அக்கறையை விட அவர் வழக்குகளுக்கு தேவையான பண உதவி இல்லாமலேயே பலரது வாழ்வு வழக்கு ஊடாக 20 வருடங்களுக்கு மேலாக கூட இழுபடுகிறது. 

  On 12/12/2020 at 18:32, goshan_che said:

  அண்மையில் அமல் அங்கயன் இருவரும் சேர்ந்து அலி சப்ரியியிடம் விடுதலை மகஜர் கொடுத்ததாக செய்தி வாசித்தேன்.

  இதை மட்டும் செய்தால் உண்மையில் இருவரும் விசயகாரர்தான்.

  சிங்கள கைதிகள் விடுதலைக்காக சிங்கள அரசியல்வாதிகள் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு விடுதலை பெற்ற சிங்களக் கைதிகள் இருக்கிறார்கள். 

  அமல் அங்கயன் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது. 

  • Like 1
 14. Friday, December 6, 2013

  ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா !

   
  POTD-mandela_2617707b.jpg


  நிறவெறிக்கெதிராய்
  நெருப்பெடுத்த கறுப்புச் சுடர்.
  காலம் ஆபிரிக்க இருளகல
  கைபிடித்தேற்றிய பேரொளி.

  இருள் கொன்று ஆபிரிக்கர்
  ஒளிகொண்டெழ உதித்த
  மூத்தவன் மண்டேலா.


  இனவிடுதலையை
  உயிராய் கொண்டதால் - நீ
  இருபத்தேழு வருடங்கள்
  இரும்புக்கம்பிகளில் அடைபட்டு
  வெளியில் வந்த போது நீயே
  உலக விடிவெள்ளியாய் ஆகினாய்.

  போராடும் தேசங்களின்
  வழிகாட்டியாய்
  ஒளியூட்டிய இரும்பு.
  இறந்து போனாயாம்
  இன்றைய செய்திகள்
  உன்னையே நினைவில்
  உடுத்திக் கொள்கிறது.

  தங்கச் சூரியன் எங்கள் தலைவன்
  உன்னையும் சொல்லியே
  உருவாக்கினான் தமிழனை
  தமிழீழ விடுதலைப்போரை
  வரலாறாக்கினான்.

  உனக்கு நிகராய் உனக்கு நேராய்
  வாழ்ந்த எங்கள் தலைவனை
  உன்னில் காண்கிறோம்
  உலகில் வாழ்கிறோம்.
  என்றோ நாங்களும்
  இவ்வுலகை வெல்லுவோம்.

  உண்மையின் குறியீடே
  உலகின் ஒப்பிலா வீரனே
  இருள் அகற்றிய ஒளியே
   போய் வருக
  போராடும் பூமியெங்கும்
  போராடியவர்கள் யாவரின் சார்பாய்
  உனக்கெங்கள் வீரவணக்கம்.

  ஓய்வில்லை வீரனுக்கு - அவன்
  உறங்கினாலும் ஓயாத வேகம்
  கல்லறைக்குள்ளிருந்தும்
  படைநடத்தும் அவன் வாழ்வு.
  நீயும் காலமெல்லாம்
  படை(கை) வெல்லும் வீரனாய்
  இந்தப் பாருள்ளவரை
  படைநடத்திக் கொண்டேயிருப்பாய்.
  போய் வருக மண்டேலா
  உலகின் போர் விதியை வென்றவனே
  போய் வருக.

  06.12.2013
  சாந்தி நேசக்கரம்

   
  • Like 4
 15. On 22/9/2020 at 12:25, theeya said:

  வாழ்த்துகள்!

  நன்றி. 

  On 23/9/2020 at 12:34, suvy said:

  உங்கள் மகனிற்கு வாழ்த்துக்கள் சகோதரி. நீண்ட ஆயுளுடன் நன்றாக வாழ வேண்டும்.........!  💐

  நன்றி உறவே. 

  On 23/9/2020 at 19:32, nige said:

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் . உங்கள் வளர்ப்பின் மகத்துவம் உங்கள் மகனின் நடத்தையில்தெரிகிறது.உங்கள் அன்பின் பிணைப்பு எந்த இடையூறும் இல்லாமல் பல்லாண்டுகாலம் தொடர வாழ்த்துக்கள்...

  உங்கள் வாழ்த்துகள் அவனை சென்றடையும். நன்றி. 

  On 23/9/2020 at 20:16, நிலாமதி said:

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . மென்மேலும் முன்னேற இறைவன்

  துணை கிடைக்கட்டும்

  நன்றி நிலாமதி. 

  On 29/9/2020 at 12:27, ஏராளன் said:

  வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.

  நன்றி. 

  On 29/9/2020 at 13:32, வாத்தியார் said:

  பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்கள்
  இங்கே பிள்ளை தங்கத்தையே தம் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கும் மனத்துடன்  வைரமாக ஜொலிக்கின்றார் .
  வாழ்த்துக்களுடன்
  அவரின் இளமைக்காலக்  கனவு நினைவேற அவரின் ஆத்மபலமும்  ஆண்டவனும்  துணைபுரிய வேண்டுகின்றேன்

  நன்றி வாத்தியார். 

 16. On 22/9/2020 at 09:36, பகலவன் said:

  இவ்வளவு நாள் சென்றதா அக்கா இதை எழுதுவதற்கு.

  உங்கள் தன்னம்பிக்கையும் மனவுறுதியும் எனக்கு இருந்தால் இப்போ நிலமை வேறு.

  வாழ்த்துக்கள் இருவருக்கும். தொடர்ந்து முன்னேறுங்கள்.

  விடியல் தொடும் தூரத்தில் தான்.

  ஏற்பட்ட அனுபவம் இலகுவானதல்ல. அதை ஏற்று வர வருடம் கடந்து விட்டது. அன்புக்கு நன்றி. 

  On 22/9/2020 at 09:40, உடையார் said:

  பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் மகனிற்கு.

  சாதனையாளர்கள் எல்லோரும் பல தடைகளை தாண்டிதான் வெற்றி பெற்றார்கள்.

  உங்கள் மகனும் வெற்றி பெறுவார் வாழ்க்கையில் 🙏

  நன்றி உடையார். வெற்றியை நோக்கிய ஓட்டத்தில் முதலில் இருந்து மீண்டும் ஓடத் தொடங்கியிருக்கிறான். 

 17. 6 hours ago, Nathamuni said:

  நீஙகள் சொல்வது வேறு..... நான் சொல்வது வேறு. உங்கள் மகனும் நான் சொன்னது சரி என்பார். 😁

  சைபர் செக்கீயூரிட்டி என்பது ஹக்கர்ஸ் திருடர்களிடம் இருந்து எவ்வாறு நிறுவனங்களையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பது என்பது குறித்த திறனறிவுப் படிப்பு.

  நான் சொல்வது, ஹக்கர்ஸ் திருடர்கள் எப்படி, எப்படி எல்லாம் ஜடியா போட்டு வருவார்கள் என்று ஊகித்து, உள்ளிருந்தே, சட்டபூர்வமாக, சைபர் செக்கியூரிட்டிக்காரரின் வேலைகளை உடைத்து, இன்னும் உறுதியாக்க உதவுவது..

  உங்கள் மகனது வேலையில் குடைச்சல் போட்டு, நொட்டை, நொள்ளை புடுங்குவதே இவர்கள் வேலை.

  உண்மை தான். நான் ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டால் அவன் சொல்லும் விளக்கம் எனக்கு பயமாக இருக்கும். 

  மேலதிக விளக்கதுதிற்கு நன்றி நாதமுனி. 

 18. 1 hour ago, Nathamuni said:

  இங்கு வங்கிகளில் லீகல் ஹக்கேர்ஸ், நல்ல கொழுத்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.

  படுபாவிகளுக்கு வேலையே.... மாஞ்சு, மாஞ்சு எழுதிறதை உடைச்சுப் போட்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறது தான். 

   🤗

  படுபாவிளெண்டு திட்டப்படாது நாதமுனி.எனது மகனை படுபாவிளெண்டு நீங்கள் சொல்றபோல இருக்கு. 🙄எனது மகன் cyber security😊முன்பு தான் யுனி புறொயெக்ட்டில் செய்த ஹக் பற்றிய விடயங்களை சொல்லுவான். எனக்கு பாதி விளக்கம் அவன் சொல்லி தான் புரியும். 

  இரவிரவாக நித்திரை முளித்து செய்த அவனது படிப்பு தான் ஞாபகம் வருகிறது. 

 19. இந்தக் கவிதையின் சொந்தக்காரன் திரு பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் வரும் இணைப்புக்கு செல்லுங்கள்.

  வாழத்தெரியாதவனின் வாழ்வை கவிதையாகத் தந்த திரு தன் வாழ்வையும் சிறைகளிலும் வதைமுகாம்களிலும் கழித்த வரலாறுகளையும் எழுத வேண்டும். 

  https://ta.m.wikipedia.org/wiki/திருச்செல்வம்_திருக்குமரன்?fbclid=IwAR0NEoeyEROtEaMb_j69MMTCTPhjIHmirGR9ok1TAKpioiGm8Lal7lBShjA

   

 20. " பார்த்திபன் "
  இன்று உங்கள் பிறந்தநாள்.
  24 வயது..., 
  இன்னும் என் கைகளுக்குள் குழந்தையாகவே இருக்கிறாய்.
   
  கருவிலிருந்து இந்த வினாடி வரையும் நீ போராட்டக்காரனாகவே இருக்கிறாய். 
   
  உன் குழந்தைக் காலம் உனக்கு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. 
  அம்மாவுக்காக அம்மாவோடு கூட வந்த குழந்தை நீ.
   
  அம்மா அழக்கூடாது என்பதற்காகவே எல்லாச் சுமைகளையும் என்னோடு சுமந்தவன். 
   
  இலகுவாய் கிடைக்க வேண்டியவற்றையும் நீ போராடித்தான் பெற்றாய். 
   
  நாங்கள் கடந்து வந்த தடைகள் கண்ணீர்ச் சுவடுகள்  நீங்கும் காலம் 2019ம் ஆண்டாக நம்பியிருக்க...,
   
  12.01.2019 காலம் உன்னைத் தன்னோடு கொண்டு போக வந்தது. 
   
  என்னை என்னிலிருந்து பிடுங்கியெடுத்த அந்த நாட்களில்....,உடைந்து  போனேன் என்பதை விட எப்படி உயிர் வாழ்ந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன் ! 
   
   என் துணிச்சல் தன்னம்பிக்கை எல்லாம் நடைகட்டி நெடுந்தூரம் போயிருந்த நாட்களவை.  
   
  எது செய்தென்ன எங்களையே தொடரும் காலவிதி மீது கோபம். இனி எப்படி மீளவும் எழுவோமென்ற துக்கம். அந்த ஒருவருடம் பல யுகங்களின் துயர் சுமந்தேன்.
   
  தினமும் கண்ணீரோடு அலைந்த என் நாட்களை நீ நம்பிக்கையால் நிறைத்தாய். 
   
  இனி எதுவும் இல்லையென்ற மருத்துவமும்  நான் தேடிய பாதைகளும் அடைபட்டுப் பாதைகளெல்லாம் தடைப்பட்டுப் போனது. எனினும் நீ மீண்டு வருவாயென்ற என் சொட்டு நம்பிக்கையையும் உடைத்தார்கள். 
   
  ஆனால் நீ மீண்டு அம்மாவென்று அழைப்பாய் அந்த ஒரு நம்பிக்கையை என்னோடு இறுக்கிக் பிடித்த படி அலைந்தேன்.
   
  உனது தன்னம்பிக்கையால் நீயே உன்னைப் புதுப்பித்துப் பிறந்தாய்.
   
  உன் ஆயுளுக்கு நாட்குறித்து வைத்திருந்த மருத்துவ உலகையும் காலதேவனையும் மிதித்துக் கொண்டு மீண்டாய்.
   
  மருத்துவ உலகம் இன்னும் உனது ஆன்மபலத்தை அளந்துவிட முடியாது அதிசயித்து நிற்கிறது. ஆராய்ச்சிகள் செய்கிறது.
   
  முடியவிருந்த பல்கலைக்கழக கல்வியை மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டுமென்றது காலம். 
   
  உன்னால் எல்லாம் முடியுமென்று மீண்டும் இழந்த கல்வியை தொடரத் தொடங்கினாய். 
   
  இனி எங்களை எந்தத் தடையும் நெருங்காது நீ வெற்றிகளைத் தொடுவாய். 2019 வருட இறுதியில் உன்னிடமிருந்து விடைபெறும் போது நம்பிக்கையுடன் திரும்பினேன். 
   
  2020 உலகையே தன் கையில் வைத்திருக்கும் கொரோனா உன்னை மீண்டும் போராட வைத்தது. மறுபடியும் மருத்துவ உலகத்தை வியக்க வைத்து வந்திருக்கிறாய்.
   
  "ஆன்மபலம் தன்னம்பிக்கை" இரு வார்த்தைகளும் உன்னிடமிருந்து தான் உண்மையான அர்த்தத்தை உணர்கிறது.
   
  உன் குழந்தைக்காலக் கனவு "நானொரு விஞ்ஞானியாக வருவேன்"  ஏழு வயதில் நீ எழுதி வைத்த வாசகங்கள் இன்றும் வாசித்து பார்க்கிறேன்.
  உன் கனவு விரைவில் மெய்யாகும் என் குழந்தையே.
   
  குழந்தைகள் முன்னால் அம்மாக்கள் எப்பொழுதும் முட்டாள்கள் ஆகிவிடுகிறோம்.
   
  உனது பிறந்தநாள்களில் யாருக்காவது உணவும் என்னால் முடிந்த உதவியைச் செய்தல் என் வரையில் மனநிறைவு. 
   
  ஒருமுறை அதுபற்றி உனக்குச் சொன்ன போது என்னில் கோபித்தாய்.  
   
  எனக்கு பிறந்த நாள் வரும் வரைக்கும் ஒராளின்ரை பசி காத்திருக்குமோ ? நீங்கள் மற்றவைக்கு உதவி செய்ய விரும்பினால் உங்களால எப்ப செய்ய ஏலுமோ அப்ப செய்யுங்கோ அம்மா. பிறந்த நாள் வரை காத்திருக்க வைக்கிறது பாவம்.
   
  உன்னிடம் உதவ வசதி உள்ள போது காத்திருக்காமல் உடனே செய்யும் பழக்கத்தை உன்னிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.
   
  2016 நீ பல்கலைக்கழகம் போனாய். அந்த வருடம் உன் தங்கச்சி வவுனீத்தா 18வயதை அடைந்தாள். உங்கள் இருவருக்குமான அந்த வருடத்தின் பிறந்தநாள் பரிசாக தமிழில் இருவரின் பெயர்கள் பொறித்த சங்கிலியை உங்கள் இருவருக்கும் பரிசளித்தேன். 
   
  கையில் வாங்கிப் பார்த்துவிட்டு " இது எவ்வளவு யூரோ வரும்" கேட்டாய்.
  700யூரோ. என்றேன் நான். உடனே 700யூரோவுக்கு அன்றைய இலங்கைக்கான பணமாற்றீட்டு பெறுமதியைக் கணக்கிட்டுப் பார்த்தாய். 
   
  உதை வித்திட்டு அங்கை சாப்பிட இல்லாத குழந்தைகளுக்கு அனுப்புங்கோ எனச் சொன்னாய். இன்றுவரை அந்தச் சங்கிலியை நீ அணிந்ததே இல்லை. 
   
  உனக்காக நான் விரும்பிச் செய்த சங்கிலியது. பத்திரமாக வைத்திருக்கிறேன். உனது பிள்ளைக்கு அதைப் பரிசளிப்பதற்காக. 
   
  பெரிதாக தங்கத்தில் ஆசைப்பட்டதோ அணிந்து கொண்டதோ இல்லை. இருந்த சில நகைகளை கடந்த வருடம் ஒவ்வொன்றாய் விற்றேன். இப்போது எதுவும் இல்லை. உனக்காக நான் விரும்பிச் செய்த சங்கிலியை மட்டுமே வைத்திருக்கிறேன். 
   
  என் குழந்தையே உன்பற்றி உன்னோடு பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. 
   
  விரைவில் நாம் சந்திப்போம் ஒன்றாக வாழும் நாளை எமக்கு காலம் தருகிறதோ இல்லையோ நாங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வோம். 
   
  அன்பே இனிமையான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
   
  அன்புடன் அம்மா சாந்தி நேசக்கரம் 
  15.07.2020.
   

   

  • Like 4
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.