Jump to content

shanthy

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4644
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Posts posted by shanthy

  1. On 5/4/2021 at 02:34, ஈழப்பிரியன் said:

    என்னையா இதுகளை முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா?

    பெருமையாக இருக்கிறது.பாராட்டுக்கள்.

    இன்னும் காலம் போகேல்ல ஈழப்பிரியன். 

  2. On 5/4/2021 at 13:33, புலவர் said:

    நான் தொடர்ந்து மெதுவான நடைப்பயிற்சி செய்கிறேன் . நிற்கம் போது இடது ககாலில் பின் பக்கம் கடுமையாக வலிக்கிறது.இன்னும் ஓட்டத்தை ஆரம்பிக்க வில்லை. சிலநாட்களில் நடைப்பயற்சி முடியும் வேளைகளில் மிகமிக குறுகிய தூரம் ஓடுவேன். கால் வலி தானாக மறையுமா அல்லது வைத்தியரிடம் காட்ட வேண்டுமா? விறைப்புத் தன்மையுடன் கூடிய வலி.

    உங்களுக்கு Fersensporn என நினைக்கிறேன். மருத்துவ ஆலோசனை பெறுங்கள். 

  3. மலரும் நினைவுகளை மீள மலர வைத்து எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். மழையாக குடையாக கண்ணீராக சிரிப்பாக கடந்து செல்லும் ஞாபகங்கள். அண்ணா அறிவாலயம் பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுகள் ஈழப்பிரியன். ஞாபகங்களை பகிர்தல் கூட உளவள ஆற்றுகை தான்.

    • Thanks 1
  4. துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது.  முடிவு மட்டும் தயக்கமாக முடிச்சிட்டியள். ஒரு கதையின் பலராலும் ஏற்கக்கூடிய முடிவை தந்திட்டீங்கள். ஞாபகங்கள் தொடரட்டும்.

  5. 3 hours ago, suvy said:

    இதில் மோகனுடன் கூட நடிப்பவர் ராதிகா இல்லை  நளினி போல இருக்கிறார்.......யாரும் பழைய ஆட்களைக் கேட்டால் தெரியும் அன்பு.......!  😂 

    ஸப்பா இந்த தாத்தாக்கள் கண்ணாடி போடச்சொன்னா எங்க கேக்கிறியள்😀

    1 hour ago, நிழலி said:

    இவர் நளினி

    ஆனால் நான் பழைய ஆள் இல்லை. இளம்தாரி நான். 😄

    🙄 46+ மறதி வரப்படாது கண்டியளோ 😀

    • Like 1
  6. அன்பையும் ஆற்றுதல் வார்த்தைகளையும் தந்த காவலூர் கண்மணி, சகாரா, உடையார், நிலாமதி, ஈழப்பிரியன், சுவியண்ணா, குமாரசாமி, விசுகு, தனிக்காட்டு ராஜா, வாதவூரான், புங்கையூரான் அனைவருக்கும் நன்றி. 

  7. ராசுக்குட்டி வொட்காவை மறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பட்சி சொல்கிறது. 

    எதுக்கும் சிறுநீர் றிசல்ட் வரட்டும் 😀

  8. 6 hours ago, suvy said:

    எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....!  👍

    நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....!  😁

    Best Sivaji GIFs | Gfycat

    அம்மாவின் அடியை குசினியில் உள்ள அகப்பைக்காம்புகள் தான் அறியும். ஆனால் அந்த நோவு எதுவும் அம்மாவின் அன்பில் மறந்து போகும். 

     

    4 hours ago, புங்கையூரன் said:

    சுவியர்,  மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡

    ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜

    மிளகாய் தூள் பறவாயில்ல முட்கிழுவை வீர வடுவெல்லாம் கடந்த ஆக்கள் இருக்கிறம் புங்கையூரன். 🤣

  9. 59 minutes ago, தமிழ் சிறி said:

       

    இடைவேளை... !!! ??? :grin:
    இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில்,  மீண்டும் தொடரும்....  🤣

    இடைவேளை கூடாமல் வந்து எழுதீட்டு ஓடீடுங்கோ தமிழ் சிறி.

    • Like 1
  10. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது.
    அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம்.
    அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது.
    29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான்.


    பார்த்திக்குட்டி...,


    அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது.
    எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ?
    நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ?
    இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ?


    ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது.
    அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது.

    அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான்.
    அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ?

    பிள்ளைகள் கொண்டு வந்து  தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம்.

    அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது.
    எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன்.

    கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி.

    நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக.

    நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ?

    இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம்.
    இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம்.
    நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான்.

    என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன்.

    தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன்.  கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன்.

    ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான்.

    என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது.

    அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது.
    எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன்.

    பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான்.
    ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான்.

    அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது.

    மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான்.
    எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி.

    2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது.

    என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது.

    அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும்.

    ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ?
    அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா.

    என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன்.

    ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது.

    எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது.
    கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில்  இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

    அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன்.

    என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47.

    அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான்.
    இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான்.

    கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை.

    08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

    நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம்.

    காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன்.

    அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன்.
    02.05.2020

    சாந்தி நேசக்கரம்

     

    • Like 18
    • Thanks 3
  11. 6 hours ago, குமாரசாமி said:

    என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

    இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......

     

    மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். 

    எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். 

    பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது. 

    • Like 1
  12. 1 hour ago, குமாரசாமி said:

    பழியை அங்காலை போட்டாச்சு.😁இருந்தாலும் கேக்கிறன்.யார் அந்த சனியன்?😎

    பாத்தியளோ கவிதையை நீங்கள் கேட்கேல்ல எண்டது உண்மையாகப் போயிட்டு.😀

    • Haha 1
  13. 5 minutes ago, குமாரசாமி said:

    சாந்தி அக்கா! சனியன் எண்டால் என்ன? ஆர் ஆள்? 😁

    நீங்கள் கவிதையை கேட்கேல்ல போல. கவிதையில் கவிஞர் ஒருவரை சனியன் எண்டு சொல்றார். அவரைத் தான் சொன்னேன்.😀

    • Haha 1
  14. கோரோனா கவிதை பேச்சு வழக்கில் எழுதியிருக்கிறீரகள். சொற்களை செருகாமல் அழகான வாசிப்பு நன்று. 

    வந்த சனியன் இப்போதைக்கு போகாது கவிஞரே. 

    • Like 1
  15. பெயர் பிரச்சினை பெரிய தொடர். ஏன் எங்களுக்கு குடும்ப பெயர் இல்லாமல் போனது என்பது பலமுறை யோசித்திருக்கிறேன். 

    எங்கள் பெயர்களை வெளிநாட்டவர்கள் உச்சரிக்க பெரும் சிரமப்படுவார்கள். 

    அவர்கள் சிரமம் என்றால் அதற்கு நான் அவர்களுக்கு சொல்வேன் உங்கள் மொழியும் எனக்கு சிரமமாகத் தான் இருந்தது. அதை சிரமப்பட்டுத்  தான் நானும் கற்றுக் கொண்டேன்.

    எனது அப்பாவின் பெயர் ஆனந்தசடாட்சரம்.  அதை யேர்மனியில் இழுத்து நீட்டி அலுவலகங்களில் கூப்பிடுவார்கள். அதற்கு ஒவ்வொரு இடத்திலும் மன்னிப்பு கேட்பார்கள். சிலர் தலையைப்பிடித்து ஒருதரம் சொல்வாயா உன் பெயரை என்று கேட்டால் நமது தன்மானத்தை சீண்டுவது போலிருக்கும். அப்படி கோட்போரிடம் அவர்கள் பெயரைக் கேட்பேன். அவர்கள் பெயரை சரியாக உச்சரிக்க முடியும் ஆனால் நான் இழுத்து நீட்டி முறிப்பேன். 

    தங்கள் பெயரை அப்படி தவறாக உச்சரிக்க விடாமல் திருந்துவார்கள். அவர்களுக்கு நான் சொல்வது "இதுபோல் என் பெயரையும் உச்சரியுங்கள்"

    தொடர்ந்து பழக்கப்பட்ட இடங்களில் ஆனந்தா என்று அடிவாங்காமல் சுருக்கி கூப்பிடுவார்கள். 

    • Like 1
  16. On 18/2/2021 at 20:57, suvy said:

                                              பரிசு.

      மூச்சின் சுவாசம் சீராகியது  

    செவ்வாயில் அமிலம் சுரந்தது 

    ஆக்கம் சுவி.......! 

     

    அண்ணோய் திருமூலர் அருளிய திருமந்திர மூச்சுப்பயிற்சி நன்றாக செய்கிறீர்கள். அதுதான் செவ்வாயில் அமிலம் சுரந்திருக்கிறது.  சத்துணவு களில் கிடைக்காத 24வகையான விற்றமின்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. 

    பி.கு :- திருமூலர் அருளிய திருமந்திரம் படித்துப் பயனடைக. 😷

  17. கண்மணி உங்கள் சிறுகதை போல யேர்மனியில் ஒரு நகரில் துருக்கியர்கள் வீட்டிலும் டிசம்பர் மாதம் நடந்தது. கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த மனைவி மீது கணவர் சுடுநீரால் ஊற்றி விட்டார். 

    கொரோனா என்பது உலக அரசியல் சும்மா சனத்தை அடக்கும் தந்திரம் என்றெல்லாம் எம்மவர் பலரும் கருதுகின்றனர். 

    இதுவே பேராபத்தான சிந்தனை. அரசு விதித்துள்ள தடைகள் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எங்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான உதவியாக எல்லோரும் உணர வேண்டும்.

     

    • Like 2
  18. புத்தா முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.எங்க ஆளைத் காணேல்லயெண்டு நினைச்சேன். முருகனை மறக்காமல் திரும்ப வந்திட்டீங்கள்.

    யேர்மனியில் நிறம் பொருந்த மாஸ்க் போடேலாது. 😷

    • Like 1
  19. 2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    நிர்வாகத்தினருக்கு வணக்கம், 

    சமூக சாளரத்தில் நான் இணைத்த ஒரு Cappuccino காதல் என்ற அவுஸ்ரேலிய கலைஞர்களின் படைப்பைத்தான் சாந்தி அக்காவும் தென்னங்கீற்றில் இணைத்துள்ளார்.. இரண்டு இடங்களில் ஒரே பதிவு இருப்பதைவிட இரண்டையும் சரியான பகுதியில் இணைத்துவிட முடியுமா?

    நன்றி. 

    நீங்கள் இணைத்ததை நான் கவனிக்கவில்லை பிரபா சிதம்பரம்பரநாதன். மன்னிச்சு கொள்ளுங்கோ ராசா. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.