Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

shanthy

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,281
 • Joined

 • Last visited

 • Days Won

  29

Everything posted by shanthy

 1. இளைஞா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 1997முதல் முதலில் ஐபீசி வானொலியில் 14வயதுப் பையனாய் வந்து புதியதோர் உலகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நட்பான அந்தக் கவிஞன் தான் இப்பவும் நினைவில் வருகிறான். அப்போது இன்னொரு இளைஞனும் வந்தான் பிரான்சிலிருந்து சந்திரன். சந்திரன் விமானம் செய்யும் கனவோடு பல முயற்சிகளில் இறங்கி கண்காட்சிகள் நடாத்தினான். சமாதான காலத்தில் விமானியாக தாயகத்துக்குப் போனான். கடைசியில் அவன் மாவீரனாய் நினைவுகளில் மட்டும் நிரந்தரமாகிப்போனான். இளைஞனின் பிறந்தநாளில் சந்திரனும் ஞாபகத்தில் வந்து போகிறான். என்னோடு வவுனியன், பார்த்திபன், வவுனீத்தாவும் தங்கள் வாழ்த்துக்களைய
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.
 3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜீவா.
 4. சிட்டுபாடிய " அலைபாயும் இசையோசை கேட்கலையா கரையில் இளம் வீரர்" என்ற பாடல் யாரிடமாவது இருக்கிறதா ? இருந்தால் தந்துதவுங்கள்.
 5. மாவீரர் மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய இணையம் http://chiddu1997.wordpress.com/
 6. அன்புள்ள அப்புவுக்கு (குமாரசாமி அண்ணா) இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அடுத்த வருசம் அப்புவுக்கு அதிர்ஸ்டம் இப்பிடிக் குவிய வாழ்த்துக்கள்.
 7. புலிக்குரல், இத்திரி சிட்டுவிற்கான நினைவுமீட்டலாகத்தான் இடப்பட்டது. ஏன் களம் போனான் எப்படி மரணம் நிகழ்ந்தது என்ற ஆராட்சி நடக்கவில்லை. ஆக நீங்கள் பூடகம் போட்டு எழுதிய கருத்து இங்கு பொருத்தமற்றது அதையே சுட்டினேன். நீங்கள் தெரிந்த காரணத்தை பகிரவில்லை. ஆனால் ஏதோவொரு பூதம் இருப்பது போன்ற தோற்றத்தை உங்கள் கருத்து உருவாக்கியிருக்கிறது. சாவீட்டில் சாவில் இழந்த உயிருக்கான மதிப்பைப் பேசலாமே அதுதான் அந்த உயிருக்கான கெளரவம். உங்களை சிரமப்படுத்தியமைக்கு மன்னிக்கவும்.
 8. சிட்டுவும் சாந்தனும் இணைந்து பாடிய இப்பாடல் அதிகளவில் மக்களிடம் பேசப்பட்ட பாடல்களில் ஒன்று. வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் கடல் விசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்.
 9. சிட்டு பாடிய கடைசிப்பாடல். தமிழீழ மொட்டுக்கள் இசைத்தட்டிலிருந்து....இணைப்பில் அழுத்தி பாடலைக் கேளுங்கள். சிறகு முளைத்து உறவை நினைத்து பறக்கும் குருவிகள்.
 10. உண்மைதான் உடையார். எங்களுக்காக தங்களை இல்லாமல் ஆக்கியவர்களை ஆவணப்படுத்தலும் அவசியமானது.
 11. சிட்டுவின் பாடல்கள் சில :- புலியொரு காலமும் பணியாது தளராத துணிவோடு கேணல் கிட்டு வெற்றி பெற்று தந்து விட்டு சங்கு முழங்கட தமிழா
 12. பாட்டு தந்து...எம்மை விட்டு....பறந்த சிட்டு....! நன்றி: பூராயம்,தமிழ்ப்புலிகள் போன்ற வலைப்பூக்கள். ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்ட
 13. புலிக்குரல் ஊகங்களை இங்கு சொல்லி சிட்டுவின் தியாகத்தைக் கூறுபோடாதிருங்கள். நீங்கள் அறிந்தவற்றில் பல பொய்யானவை(என்னவென்று புரிந்து கொள்வீர்கள்) சிட்டு விரும்பியிருந்தால் எங்கள் எல்லோரையும் விட மேலான வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு வசதியை அவனது குடும்பம் செய்யக்காத்திருந்தது. உறவுகள் அவனது பதிலுக்காக காத்திருந்தும் கடைசிவரை தனது கொள்கைக்காக எல்லாவற்றையும் துறந்த போராளி. இயல்பிலே அமைந்த கலகலப்பான சுபாவம் உங்கள் காது கேட்ட விடயங்களுக்கான காரணமாக இருக்கலாம். மற்றும்படி அவன் ஓர் சிறந்த போராளியாக அதாவது உயிர்விடும்வரை வாழ்ந்துவிட்டுப் போனான் என்பது தான் உண்மை. அவனது வழித்தடங
 14. ஈழவர்குரல் இணையத்தில் சிட்டபற்றி வெளியான நினைவுக்குறிப்பு: 01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டுபோராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போரா
 15. 01.08.1997ம் ஆண்டு யெஜசிக்குறு சமர்களத்தில் மேஜர் சிட்டு அவர்கள் வீரகாவியமானார். தனது இனிய குரலால் இன்றும் எல்லோரின் நினைவுகளோடும் வாழும் சிட்டு அவர்களது14ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 70பாடல்கள் வரை பாடியுள்ளார். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிட்டு உறங்கிய துயிலிடம் 2003 தாயகம் போனது போது எடுக்கப்பட்ட படம் இது. சிட்டுவின் நினைவாய் புதுவை அவர்கள் எழுதிய நினைவுப்பாடல் சாந்தன் அவர்களால் பாடப்பட்டது. சிட்டு பாடிய *கண்ணீரில் காவியங்கள் என்ற பாடல்.இதுவே சிட்டுவின் முதலாவது பாடல்.
 16. கலைஞனுக்கும் கவிதைச் சகாராவுக்கும் கருத்து யுத்தம் ! கருத்துக்களை இருவருமு் கருத்துக்களால் வெல்லுங்கள்.
 17. அறுபதாண்டுச் சாபம் நீங்காமல் ஆறாவடுக்களை நிரந்தரமாக்கிச் சென்றுளது தோழி...., ஆறுமாதமோ அதற்கும் பின்னால் இன்னும் எத்தனை மாதங்களோ...? காலமழை வருமுன் காலாற ஊர்போக வேண்டும் என் உறவுகள். காலம் மாறுமென்ற காத்திருப்பு மட்டுமே நம்பிக்கை தருகிறது. ஓராறாய் அழுத கண்ணீர் ஒற்றித் துடைத்து உள்ளோமெனச் சொல்ல எவருமில்லாத் தனிமையில் இதயம் வெறுமையாய்..... எல்லாளன் போய்விட்ட பின்னர் எல்லாம் இல்லாததாய் உணர்வு..... எனினும் கடைசிச் சொட்டு நம்பிக்கையில் கைகளை பற்றிப்பிடித்திருப்போம்.
 18. கனவுகளைவிட்டு விழித்தால் கள்வர்களின் கபடம் அம்பலமாகிவிடும் என்பதால் இன்னும் மக்களை கனவுகாண வைக்கும் வியாபாரிகள் இனியாவது தங்கள் போல முகங்களைக் கழற்றிவிட்டு அவலப்படும் மக்களுக்கு உருப்டியாக எதையாவது செய்ய முன்வர வேண்டும். சும்மா புழுகிப்புழுகி காலத்தை ஓட்டும் புழுகன் அரிச்சந்திரன்கள் புரிய வேண்டும் உண்மையை. இந்தக் கள்வர்களை துரத்துங்கள். துணிந்து இவர்களை மக்களுக்கு அறியச் செய்யுங்கள். இதுவே இப்போது தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளில் முதன்யைமானது.
 19. இறப்பு தனக்கும் உண்டென்பதை ஒவ்வொரு போராளியும் அறிந்துதான் போராளிகள் ஆனார்கள். அவர்களது ஒவ்வொரு இழப்பும் நிழலி சொன்னது போல அடர்துயர்தானே ஒழிய அதுவே இறுதியான ஓய்வு அல்ல. மிஞ்சிய 3லட்சம் பேரையும் காக்க எவருக்கும் துணிச்சலில்லை. தங்கள் மடியிலிருந்து 10யூரோ அந்த உயிர்களுக்காக கொடுக்க முடியாதவர்கள் தேசநலன் பேசுவதில் பயனில்லை. வேணுமானால் கருத்துமட்டும் எழுதி தங்களை புனிதர்களாக்கலாம். மக்களின் பணத்தில் வெற்றிலைக்கணக்குப் பார்க்க முடியாத வருத்தம் சிலரது கருத்தில் வெளிப்படுகிறது. வியாபாரிகள் மிஞ்சியிருக்கும் மக்களை காப்பதற்கான வழிகளைத் தேடுவதுதான் அந்தத்தலைவனுக்கு செய்யும் நன்ற
 20. இதிலிருந்து உங்கள் தேசிய அக்கறையும் தமிழினத்தின் மீதான கரிசனையும் புரிகிறது. உங்களால் இந்த நண்பரைப்பற்றிக் கூற முடிந்தவையெல்லாம் உங்களுக்குள்ளிருக்கம் தனிப்பட்ட குரோதங்களன்றி வேறொன்றுமில்லை. மோகன் அனுமதியுங்கள் அரிச்சந்தின் சோழன் உண்மைகளை உரத்துக்கூற. நீங்களே உண்மையான உங்கள் முகத்தை மறைத்து வைத்துக்கொண்டு ஒளிச்சு நிக்கிறியயள். நீங்கள் சொல்வதை எப்படி உண்மையென்று நம்புவது நமது களம். நீங்கள் குறிப்பிடும் நண்பர் தனது வாழ்விடம் தொடர்புகள் எல்லாவற்றையும் தந்துவிட்டுத்தானே நேர்மையாகக் கருத்தாடுகிறார். அப்படிச் செய்து கொண்டு நீங்களும். உண்மைகளைச் சொன்னால் உங்களை "புழுகன் அரிச்சந்திரன்"
 21. மகிந்த என்ன சொன்னார் எப்பிடிச் சொன்னார் என்பதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். மகிந்த வந்து எங்கடை சனத்தை வாழ வைப்பாரென்றும் நம்பவில்லை. ஆனால் தற்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் புலம்பெயர்ந்தவர்களால் செய்யப்பட வேண்டும். இன்னும் வணங்காததும் வன்னிக்கப்பலும் வருமென்று நம்பிக்கொண்டிருக்கும் அந்து மக்களுக்கான மறுவாழ்வு யாரால் கிடைக்கப்போகிறது ? அரசு சொன்னதை ஏற்று எங்கள் பணிகள் தொடங்கவில்லை. நாங்களும் அந்தப்போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உரித்துடையவர்களாய் இருக்கிறோம். அவர்களை சிங்களவர் காப்பாற்றட்டும் நாங்கள் சிங்களவருக்குத் துணைபோகமாட்டோம் என சப்பைக்கட்டு
 22. இங்கு கருத்தாடும் அனைவரும் ஆதாரங்களை இழந்து நிற்போரை ஆளுக்கொரு குடும்பத்தை ஆளுக்கொரு குழந்தையை பராமரிப்பீர்களா ? அப்படி மனிதாபிமானப்பணி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். சிதிலமாய்க் கிடக்கும் எங்கள் சிறுவர்கனை பெண்களை மீளவும் புதுவாழ்வு பெறும் வழிகளைத் திறந்து விடுவோம். ஆயிரமாயிரமாய் வேண்டாம் ஆளுக்கு ஒருவர் மாதம் பத்து யூரோ பங்களிக்க முடியுமானால் தயவு செய்து தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். இதை அனைவருரும் மனதால் ஏறு்றுக்கொள்ள வேண்டும். உணர்வால் உண்மைகளை ஒத்துக்கொள்வோரால் இலகுவாக விடுபட முடியும். இத்தோடு இப்பகுதியிலிருந்து விடைபெறுகிறே
 23. நிறுவுதல்களில் நேரத்தை கழிக்காமல் அடுத்த கட்டத்தை எண்ணுவோம். நினைத்துப்பார்க்க முடியாதவையெல்லாம் நடந்து முடிந்து விட்டது. எஞ்சியவர்களையாவது பாதுகாப்போம். எல்லோரையும் கூட்டிச்செல்வது சிரமம் என்றால் எல்லோராலும் நம்பப்பட்டவர்கள் நம்பியவர்களுக்குச் செய்தது மோசமல்லவா. இத்தனை காலமும் தங்களை இந்த விடுதலையென்ற தீயுக்கள் ஆயிரமாயிரமாய் அழித்தவர்களும் அதை நம்பிப் பின் சென்றவர்களும் பாதுகாக்கப்பட முடியாதளவுக்கு பலியெடுக்க விட்டது நம் எல்லோரின் துரோகமும்தான்.
 24. உங்களது இக்கருத்தானது பல்லாயிரம் கேள்விகளுக்கான விடையை உள்ளடக்கியிருக்கிறது நிதர்சன். இங்கு வாதிட்டு வெல்வதில் பயனேதும் இருக்காது. புதுவை இரத்தினதுரை, தமிழினி , தங்கன், யோகி , கரிகாலன் , பாப்பா இப்படிப் பல அரசியல்துறைசார்ந்த போராளிகள் 4ம்மாடியில் விசாணையென்ற பெயரில் தடுப்பில் இருக்கிறார்கள் என்பது பொய்யில்லை. வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாமில் இளம்பருதி உட்பட பலபோராளிகள் இறுதிவரை தங்களை களத்தில் பணயம் வைத்தவர்களெல்லாம் சிறையிருக்கிறார்கள். இதையினி எவர் பார்த்தார் எவர் சாட்சியம் சொல்வார் என்று ஆராட்சி செய்வதிலும் பார்க்க அந்தப்போராளிகளை எப்படி மீட்பது அவர்களின் வாழ்வுக்கான உத்த
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.