Jump to content

shanthy

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4644
  • Joined

  • Last visited

  • Days Won

    29

Posts posted by shanthy

  1. புலனாய்வுத்துறை மாவீரர்கள் (1990 – 1992)

    %E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%

    தமிழீழ விடுதலைக்காய்  02.09.1990 தொடக்கம் 04.01.1992 வரையிலான காலப்பகுதி வரை எங்கெங்கோ பணிமுடித்து காவியமான தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை மாவீரர் விபரங்கள்.

    http://thesakkaatu.com/doc12593.html

  2. ஆதவன் றட்ணம்மாஸ்ரரின் நினைவுப்பகிர்வு ஏற்கனவே யாழ்களத்தில் பதிவாகியுள்ளது. இதோ அதன் இணைப்பு.

     

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=132420

    http://thesakkaatu.com/doc11990.html

    http://mullaimann.blogspot.de/2013/12/blog-post_8.html

    http://mullaimann.blogspot.de/2013/11/blog-post_20.html

  3. லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்

     

    டிசம்பர் 6, 2013 | வீரவணக்க நாள்.   

    ninavu_jeevan-copy-600x4321.jpg

    லெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

    மட்டுநகர் வாகனேரிப் பகுதியில் 06.12.2001 அன்று சிறிலங்காப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மட்டு – அம்மாறை மாவட்ட தளபதி லெப். கேணல் ஜீவன் உட்பட ஏழு மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

    தாய்மண்ணின் விடியலுக்காய் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…

    Lt-Col-Jeevan.jpg

    கப்டன் சேகரன் (சண்முகம் காந்தரூபன் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை தயாபரன் (கிருஸ்ணபிள்ளை இராசு – மட்டக்களப்பு)
    வீரவேங்கை சுஜீவன் (நமசிவாயம் இராசா – மட்டக்களப்பு)
    வீரவேங்கை குகராஜ் (நல்லரத்தினம் சிவராஜ் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை திருமகன் (வடிவேல் மதியன் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை சதானந்தன் (தங்கராசா ரவிக்குமார் – மட்டக்களப்பு)
    வீரவேங்கை சங்கர் (அமிர்தலிங்கம் ராஜ்கரன் – மட்டக்களப்பு)

    இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் -  தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

    “புலிகளின் தாகம் தமிழீழத் தா
    யகம்”

    http://thesakkaatu.com/doc12239.html

     

     


    ஜீவனுள்ள நினைவுகள்….லெப் கேணல் ஜீவன்

    டிசம்பர் 6, 2013 | வீரத்தளபதிகள்.   

    Lt-Col-Jeevan.jpg

    || ஜீவனுள்ள நினைவுகள்….

    கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும்.

    ஒரு பத்தாண்டிற்கு மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம்.

    உச்சிவரை முகர்ந்து….

    அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகரத் தொடங்கியது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான்.

    இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் கூச்சம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    சிங்கபுர தங்கக பகுதி படையினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத்தளபதி.

    இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    தாக்குதல் தொடங்கியது.

    எதிரியின் கவச ஊர்தியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவள் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் பொறிகளின் உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவலிற்கு மிக நெருக்கமாக ஜீவன் ரீ56 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம், அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். “எங்கும் செல்வோம்” என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் “எதிலும் வெல்வோம்” என்று சூழ் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல.

    ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, பகட்டு ஏதுமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன்.

    போராளிகளுடன் சேர்ந்து பதுங்கு அகழி வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பதுங்கு அகழி வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள்.

    வாகரையின் வாவி…

    வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் ‘ஓயாத அலைகள் – 2′ நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்து, பின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் – ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும், சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த ஈகை உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

    87ன் தொடக்கத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90ன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது.

    எதிரியின் மீது தாக்குதல், போர்க் கருவிகள் பறிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு.

    மூன்றாம் ஈழப்போர் தொடங்கி 97ன் தொடக்கத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை மேலாளராக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய நன்மைகளை் அவனால் ஏற்படுத்தப்பட்ட . கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரை முதன்மைச் சாலைக்கு அருகே (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது.

    அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: “அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச ‘விசாலகன் படையணி’ சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக்கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை.”

    சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான்.
    “ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி பொறுப்பாளர் சொல்லியிருக்கிறார்.”

    இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதி, தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. “சரி நிறைவேற்றுங்கள்”
    அதைத் தொடர்ந்து ஒரு புதியை போராளியைப் போல ‘புளுக்குணாவ’ முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன.
    தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் – மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது.

    “ஜீவண்ணன்…… நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்.”
    புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது.
    “எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்”
    இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சி பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து வழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான்.
    “பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய கட்டளை. நீங்கள் எழும்பலாம்.”
    இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள்.

    ஜீவனுடைய எளிமையையும் ஈகையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன – தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார்.

    சாலையில் ஜீவன் மிடுக்காய் கால்பாரவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு நலம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு முதன்மைக் காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது.

    விழி சொரியும் கண்ணீரில்….

    “நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் படையாளின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு படையாள் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது.” சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வதும வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழப்போரின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த படையாள் ஒருவனின் தொடக்க ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை.

    ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற மிடுக்கே காரணம்.

    பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடப்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே துயரம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது.

    ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத விடுதலை திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை.

    - இராசமைந்தன்.
      விடுதலைப்புலிகள் இதழ் ( தை – மாசி 2002 )

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

     

    http://thesakkaatu.com/doc1498.html

  4. கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள்.

    நவம்பர் 23, 2013 | வீரவணக்க நாள்.   

    Karumpuli-Lep.Kenal-Pork-600x337.jpg

    கரும்புலி லெப்.கேணல் போர்க் மற்றும் லெப் கேணல் மாறன், கப்டன் கஜன் உட்பட 54 போராளிகளின் வீரவணக்கக் நாள் இன்றாகும்.

    || தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்…

    மாங்குளத்தில் 23.11.1990 அன்று சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

    Karumpuli-Lep.Kenal-Por-600x849.jpg

    கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….

    Karumpuli-Lep-Kenal-Pork-600x401.jpg

    தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல் நினைவாக அதே தாக்குதல் நடந்த திடலில்  மாமனிதர் நாவண்ணனால் வடிக்கப்பட்ட கரும்புலி லெப். கேணல் போர் அவர்களின் நினைவுத் தூபம் நிறுவப்பட்டது தற்சமய சிங்கள ஆக்கிரமிப்பால் அடித்து உடைத்து அழிக்கப்பட்டு உள்ளது.

    http://thesakkaatu.com/doc12046.html

    கரும்புலி லெப் கேணல் போர்க்

    நவம்பர் 23, 2013 | உயிராயுதங்கள்.   

    Karumpuli-Lep.Kenal-Pork-600x337.jpg

    “நான் புறப்படுகின்றேன்….  இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க்

    வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

    இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. “நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.

    Karumpuli-Lep-Kenal-Pork-600x401.jpg

    அந்தக் குரலில் உறுதி தெரிந்தது”போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்”. தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, “நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்”முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.

    கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….

    இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.

    அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

    “தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?” ‘ஏன் சாகப் போறியளோ’ பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன”

    அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.

    அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

    கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.

    சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.

    சிறிது நேரத்தின் பின்

    தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.

    Karumpuli-Lep.Kenal-Por-600x849.jpg

    பழசாக்கும், அதுதான் விட்டிட்டுப் போட்டான் போலக்கிடக்கு என்றார் அம்மா. இன்று போர்க் அண்ணையின் அம்மா சொல்கின்றார். “தம்பி அவன் அண்டைக்கு வித்தியாசமா நடந்ததை என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லை. ஆனால் கரும்புலியாச் செத்த பிறகுதான், அவன் தன் பக்கத்தில படுக்கச்சொன்னது பொட்டு வைக்கச் சொன்னது உடுப்புகளை விட்டிட்டுப் போனது ஏனெண்டு விளங்குது” போர்க் அண்ணனின் அம்மாவின் நா தழு தழுத்தது.

    - உயிராயுததிலிருந்து ….

     

    http://thesakkaatu.com/doc1628.html

    ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

  5. கப்டன் மலரவன்

    Malaravan-2011-600x849.jpg

    “விடுதலைப்படைப்பாளி’ கப்டன் மலரவன்”

    போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 23ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று.

    கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகியிருந்தாலும் தனது களப்பணிகளிற்கு மத்தியில், தன்னுடைய அனுபவப் படைப்புகளினூடாக சிறந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல், மாங்குளம் முற்றுகைச் சமரின் அனுபவப் பார்வை கொண்ட சிறந்த பதிவையும் படைத்திருந்தார். அது போராளிகளுக்கான அனுபவத்தைக் கொடுத்தது. அவரது எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள், ‘நீ எழுத்துருவில் தந்துவிட்டுப் போன படைப்புகள் நிச்சயமாக எமது சந்ததியின் மனங்களிலே ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை’ என பதிவு செய்துள்ளார்.

    எழுத்துக்களுடன் வாழ்ந்த மலரவனின் படைப்புகள், அவரது வீரச்சாவிற்குப்பின் வெளியீடுகளாக வெளிவந்தன. அவற்றில் போர் உலா என்னும் படைப்பு இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான தேர்வில் முதல் பரிசு பெற்றமை அவரது படைப்பாளுமையின் தரத்தைச் சான்று பகர்ந்து நிற்கின்றது. மேலும், எனது கல்லறையில் தூவுங்கள் (சிறுகதை,கவிதைகளின் தொகுப்பு), மலரவனின் ஹைக்கூ கவிதைகள் (இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பாகும்), புயல் பறவை (நாவல்-வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிவு பெற்றது) என படைப்புகள் பல. இவை அத்தனையும் தனது இருபது வயதிற்குள் எழுதி முடித்தவர்.

    ஒவ்வொரு போராளியும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுகிறான், உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்படுகிறான் என்பதற்கு கப்டன் மலரவனின் வாழ்க்கையும் அதன் பின்னணியும் மிகச் சிறந்த சான்று. மலரவனின் தந்தை ஒரு வைத்தியர். கொழும்பில் வெடித்த 1958ம் ஆண்டு இனக்கலவரத்தில் சிக்குண்ட அவர் கடை ஒன்றுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியிருந்தார். அங்கும் வந்து அவரைத்தாக்க முற்பட்ட சிங்களக்காடையர்களை சோடாப்போத்தில்களால் தாக்கி விரட்டியடித்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். பின்னர் 1977ம் ஆண்டு கண்டி வைத்தியசாலையில் கடைமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது சிங்கள வைத்திய நிர்வாகம் தமிழ் வைத்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்துத் தனது வேலையை இராஐpனாமா செய்துவிட்டு, மாங்குளத்தில் வந்து விவசாயம் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். 1985ம் ஆண்டு கொக்கிளாய் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளான போது போராளிகளுக்கான வைத்தியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கை, வவுனியாவில் எல் 3 எடுத்த தாக்குதல் என பல தாக்குதல்களின் போது களமுனை வைத்தியராக, காயமடைந்து வந்த  போராளிகளிற்குக் களத்திற்கு நெருக்கமாக நின்று சிகிச்சையளித்த ஒரு சிறந்த தேசப்பற்றாளர். மலரவனின் மற்றுமொரு அண்ணன்; மருத்துவபீடத்தில் படித்துக்கொண்டு, தியாகி திலீபன் அவர்களுடன் தொடங்கி விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தார். தேசப்பற்றுக் கொண்ட அக்குடும்பத்தின் புறச்சூழல்கள் சிறுவயதிலிருந்தே மலரவனுக்குள் விடுதலைத்தீயை வளர்க்கத்தொடங்கின.

    யாழ்ப்பாணத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான சென் ஜோன்ஸ் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட மாணவனாக விளங்கிய அவர், உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் முதலாவது வருடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் முதல் மாணவனாகத் தேர்வாகியிருந்தார்.  அந்த வேளையில்தான், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிங்கள அரசுடனான போர் முழு வீச்சில் தொடங்கியது. மலரவன், தனது கல்வியைத் துறந்துவிட்டு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார். மணியந்தோட்டம் பயிற்சி முகாமில் தனக்கான அடிப்படைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.

    பயிற்சியை முடித்த பின், பசீலன் மோட்டார் பிரிவில் ஒரு மோட்டார் அணியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டு மீண்டும் அதற்கான பயிற்சியை தொடங்குகின்றார். 1990களில் சண்டையின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான பணி பசீலன் அணியையே சார்ந்திருந்தது. அந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை. அவற்றைக் கையாளுவதற்கும்; துல்லியமான சூட்டை வழங்குவதற்கும் துல்லியமான கணிப்பீடுகள் மிகமுக்கியமானவை. அந்தப் கணிப்பீட்டுப் பணியிலும் அதனை நேர்த்தியாக இயக்குவதிலும் பெரும்பங்கு மலரவனுக்கு உண்டு. அதற்காகக் கடுமையாக உழைத்தார். பீரங்கிகளின் வேகத்தையும் தூரத்தையும் கணிப்பது தொடர்பில் கணிதத்தில் உள்ள விதிமுறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு செல்லின் நிறையையும் கணித்து ஒவ்வொன்றும் என்ன வாசிப்பில் விட்டு செலுத்தினால் அது இலக்கைத் தாக்கும் என்பதைப்பற்றிய கணிப்பீடுகளில் தனது நேரத்தை செலவிட்டுத் துல்லியமாகக் கணித்தார். அதற்கும் மேலாக, ஏனைய மோட்டார் அணியின், எத்தரத்திலுள்ள வீரர்களிற்கும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தது.

    தனக்கு தரப்படும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அதை புதிய பரிமாணத்தில் அல்லது கோணத்தல் பார்க்கும் திறனும் அதைப்பற்றி மென்மேலும் சுயமாக அறிந்து மெருகேற்றும் திறனும் அவரை சிறந்த செயல்திறன்மிக்க போராளியாக இனங்காட்டியது. அதுவே குறுகிய காலத்தில் பசீலன் மோட்டார் பிரிவின் உதவிப் பொறுப்பாளர் என்னும் நிலைக்கு அவரை உயர வைத்தது.

    யாழ்கோட்டையில் இருந்து இராணுவம் தப்பியோடியது என்றால் அதன்பின்னணியில் பிரதானமான பங்கை வகித்தது பசீலன் படையணி. அந்தக்களமுனை தொடக்கம் மாங்குளம், சிலாவத்துறை, காரைநகர், ஆனையிறவு, மின்னல் என பல களமுனைகளில் வெற்றிகளில் பசீலன் மோட்டாருடன் பங்கு கொண்ட மலரவனின் பங்குகள் பெறுமதியானவை.

    சிங்களப்படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் சிங்களப்படைக்கு புளியைக் கரைப்பது பசீலன் செல்கள் என்பதனால் பசீலன் செல் அடிக்கப்படும் போது வெளிவரும் வெளிச்சத்தை கணிப்பிட்டு அப்பகுதியை நோக்கி கடுமையான செல்தாக்குதலை நடாத்தி பசீலன் தாக்குதலைக் கட்டுப்படுத்த சிங்களப்படை முயற்சிப்பது வழமை. அவ்வாறான சமயங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான செல்த்தாக்குதல்களின் மத்தியிலும் இயல்பாகவும் தெளிவாகவும் செயற்படும் அவரது துணிச்சல் மற்றைய போராளிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்றைக்கும் சோர்ந்து போனதில்லை.

    சிலாவத்துறை முகாம் தாக்குதலின் போது வெட்டவெளியில் விமானக் குண்டு வீச்சுக்களின் மத்தியில் எவ்வித தடையரண்களும் இல்லாமல் முகாமிற்கு நேருக்கு நேரே பசீலனை வைத்துப் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த அவர், செல் தாக்குதலில் காயப்பட்டு மரணத்தின் வாசல் வரை எட்டிப்பார்த்து, களமருத்துவமனையில் கடமையாற்றிக்கொண்டிருந்த அவரது அண்ணனின் கரங்களுக்குச் சென்று மீண்டுவந்தார்.

    ஆ.க.வெ சமரில் ஆனையிறவு பிரதான முகாம் தாக்கியழிப்பில் பசீலன் மோட்டார் அணிக்குத் தலைமைதாங்கி, முகாமின் மையத்திலிருந்த கோபுரத்தைத் தனது துல்லியமான கணிப்பால் தகர்த்து விழுத்தி தனிமுத்திரையைப் பதித்தார். இத்தாக்குதலில் இவரது தந்தையும் அண்ணனும் களமுனை மருத்துவர்களாகப் பணியாற்றினார்கள். இத்தாக்குதல் மட்டுமன்றி, மணலாற்றில் நடைபெற்ற மின்னல் எதிர்த்தாக்குதலிலும் குடும்பத்தில் மூன்று பேரும் பங்காற்றியது என்பது விடுதலைப் போராட்டத்தில் இக்குடும்பத்தின் பங்களிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.

    பசீலன் படையணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தபின்னர் யாழ்மாவட்டத்தின் மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்து தனது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தயிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி முந்நகர்த்தியதில் பெரும் பங்கு மலரவனுக்குண்டு. அவை, சமூகத்தின் மீதும் அதன் இளம் தலைமுறையின் கல்வி மீதும் அவர் கொண்ட தாகத்தின் வெளிப்பாடாக விளங்கின.

    பின்னர் யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பணியாற்றினார். குறிப்பாக மாவட்ட இராணுவ அறிக்கைப் பொறுப்பாளராக இருந்தார். இதன்போது ஒவ்வொரு சண்டையிலும் பங்குபற்றுபவர்களிடம் சண்டையில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து சண்டை எவ்வாறு நடந்தது, அதில் திறமையாக செயற்பட்டவர்கள், திட்டத்தில் ஏற்பட்ட சரி பிழைகள், அடுத்த சண்டையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்ற ஒரு மதிப்பீட்டு இராணுவ அறிக்கையை செய்து, தளபதிக்கு சரியான நிலவரத்தைப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார்.

    அக்காலப்பகுதியில், தெல்லிப்பளையில் வேவு நடவடிக்கை ஒன்றிற்காக பணியாற்றிக் கொண்டிருந்தவேளை எதிரியின் பதுங்கித்தாக்குதலில் வேவுப் பொறுப்பாளர் காயமடைந்தபோதும் தொடர்ந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு காயமடைந்தவரை கொண்டுவந்து சேர்த்தார். இது அவரது ஓர்மத்திற்கு எடுத்துக்காட்டு.

    அந்தநேரத்தில்தான் 1992ம் ஆண்டு பலாலி வளலாய் தாக்குதலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் சு.ப.தமிழ்க்செல்வன் அவர்களின் பகுதித் தாக்குதல் தொடர்பான சகலவிடயங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி, அதுதொடர்பான விடயங்களை தளபதியுடன் பரிமாறும் வேலைகள் உட்பட தாக்குதலுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வேலைகளில் தளபதிக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டார்.

    எப்போதும் சண்டை நேரங்களில் மலரவணை கட்டுப்படுத்துவது கடினம். சண்டை தொடங்கினால் உடனே அங்கு செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோலத்தான், அன்றைக்கும் சண்டை தொடங்கும்வரை தளபதியுடன் நின்ற மலரவனை திடீரெனக் காணவில்லை. தளபதி கோபத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில், களமுனைப்பகுதிக்குச் சென்று நிலமைகளை அவதானித்துவிட்டு தன்னால் இயன்றளவு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்த சேர்ந்த மலரவனைப் பார்த்த தளபதி, அவரது குணாதிசயத்தைக் கண்டு பொறுமையானார். நெகிழ்வாக, தன்னுடன் நின்று சிலவேலைகளை ஒழுங்குபடுத்துமாறு கூறினார். மேலும் சீற்றத்திற்கு ஆளாகக்கூடாது என்று நினைத்த மலரவன் அவர் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

    தாக்குதலில் பலத்த இழப்புகளைச் சந்தித்த இராணுவம், புலிகளுக்கு இழப்புகளைக் கொடுக்கும் நோக்குடன் பின்தளப்பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து வெடித்த மூன்று செல்களில் மலரவன் படுகாயமடைந்தார். அந்த இறுக்கமான நிமிடங்களை நினைவு கூர்ந்த தளபதி ‘காயப்பட்டவுடன் களமருத்துவனைக்கு அவசரமாக அனுப்பினோம். என்னோடு நின்ற ஒருவர் வந்து மலரவனுக்கு கொஞ்சம் கடுமையாக உள்ளது, கால்துண்டாடப்பட்டுவிட்டது என்று கூறினார். கால் கழற்றினாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் அவன் இன்னும் எவ்வளவோ சாதனைகளைப் படைப்பான என்;று என் உள்ளுணர்வு அடிக்கடி வேண்டிக்கொள்கின்றது. ஏனெனில் பல நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருசிலர், இப்படியான நிலையிலும் அபரிமிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நிற்பார்கள். அந்த வரிசையில் மலரவனும் ஒருவன் என்று நன்றாகத் தெரியும். இவ்வேளையில் எமக்கு அடுத்த களமுனையில் மலரவனது அண்ணன் – அவர் மேல் உயிரையே வைத்திருந்த சகோதரன் – வைத்திய கலாநிதியும் போராளியுமான அவர், எமது மருத்துவமனையில் நின்று பல போராளிகளின் உயிர்களைக் காக்கும் கடமையில் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால்……. தாக்குதல்கள் முடிந்து எம் நிலைகளுக்கு நாம் வருகின்றபொழுது எங்கள் உள்ளத்தை உருகவைக்கும் பேரதிர்ச்சி தரும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள்’ என்று அந்தக் கணங்களை விவரித்தார். போர்க்களத்தில் ஆயுதங்களுடன் மட்டுமன்றி பேனாவுடனும் சுழன்று கொண்டிருந்த அந்த வீரன் மண்ணுக்காக வித்தாகி விட்டான். அதேவேளை, அவரது அண்ணன் அதிகாலை மூன்று மணிக்கு தம்பியின் வீரச்சாவுச் செய்தியை அறிந்திருந்த வேளையிலும் தொடர்ந்து அங்கு காயமடைந்து வந்துகொண்டிருந்த போராளிகளிற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

    மலரவன் என்னும் ஒரு போராளியை தமிழன்னை அவரைப் பெற்ற மலரன்னையிடம் இருந்து பறித்து எடுத்துவிட்டாள். அந்தப் போராளியை, படைப்பாளியை சுமந்த தாயின் கரங்கள் போராட்டம் தொடர்பான பல பதிவுகளை செய்தது. தனது பிள்ளைக்கும் வீரமகனுக்கு தாயின் கவிதை அஞ்சலி! என்ற தலைப்பில் கவிதைகளைக் கண்ணீரோடு வரைந்தார் வீரத்தாய் மலரன்னை. அக்கவிதையின் இறுதி வரிகளில்

    மண்ணில் உதிர்த்திட்ட மைந்தனே! – இன்று

    விண்ணில் உயர்ந்திட்டாய் மா வீரனாய்

    விதையாய் வீழ்ந்திட்டாய் மண்ணிலே – இன்று

    கதையாகி விட்டதே உன் சரிதை.

    இருபதே வருடங்கள் வாழ்ந்தாலும்

    அர்த்தமாய் வாழ்ந்திட்டாய் வல்லமையால் – இந்த

    மண்ணின் விடியலே உன் கனவு – நீ

    விண்ணிலிருந்து நோக்குவாய் மலரும் தமிழீழமதை!

    மேலும் ‘மலரவனிடத்தில் குறுகியகால அனுபவத்திற்குள்ளேயே அவனிடம் ஓர் தளபதிக்கே உரித்தான திட்டமிடும் ஆற்றலைப் பார்த்தேன். அவன் கதைப்பது மிகவும் குறைவு. இதை செயல் வடிவம் நிறைவுபடுத்திற்று. இது எங்கள் தலைவரிடம் இருக்கும் தனித்துவமான ஒர் உயர்ந்த தன்மை’ என சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிவு செய்கின்றார்.

    ஒற்றைவரியில் மலரவன் – போர்வீரன், வேவுப்போராளி, சிந்தனையாளன், தனக்குத் தரும் பணியை மெருகேற்றும் முயற்சியாளன், களத்தின் தேவையை விளங்கிச் சுயமாகச் செயற்படும் ஒருவன், சண்டையை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளன், படைப்பாளி, தீவிர உழைப்பாளி, என நீண்டு செல்லும் அவரது ஆளுமை பன்முகத்தன்மை வாய்ந்தது.

    இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மலவரன் உட்பட 57 பேருக்கும் மற்றும் வீரச்சாவடைந்த அத்தனை மாவீரர்களிற்கும் நாட்டுப்பற்றாளார்களிற்கும் நினைவஞ்சலியை செலுத்துவோம். விடுதலை வீரர்களின் சுவாசமான சுதந்திர விடுதலை என்னும் அடைவை நோக்கி தளர்வில்லாமல் ஒன்றாகப் பயணிப்போம்.

    ‘ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது’  – தலைவர் பிரபாகரன் அவர்கள்.

    - அபிஷேகா.

    “மண்ணில் எங்கள் மைந்தனாய்

    மலர்ந்திட்ட இளையவன்-மலரவன்

    அண்ணர் மூவரின் அரும் பெரும்

    ஆருயிர்ச் சோதரனாகியவன்.

    குலம் விளங்க மலர்ந்தவன்

    குடும்பத்தின் ஒளி விளக்கானான்

    பாசத்தை உணர்த்திய பாலகன்-இவன்

    பண்பினால் பலரைக் கவர்ந்தவன்.

    “………………….”

    இலட்சியப் பயணங்கள் மேற்கொண்டு

    பசீலனை இயக்கிடும் பணி செய்தான்

    “……………….”

    இடை வழியில் அவனை இழந்திட்டோம்

    இராணுவ வேலியை அழித்திடவே

    இளம் வேங்கையவன் வேட்கை கொண்டதனால்

    களத்தில் காவியம் படைத்திட்டான்.

    - கப்டன் மலரவனின் பெற்றோர்.

    captanmalaravan_zps972c3332.jpg

    விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயணக்குறிப்புகள்தான் இந்நூல். 1992ல் கேப்டன் மலரவன் ”வீரமரணமடைந்தார்.”

    அவருடைய மரணத்திற்கு பின்ப அவரது ”உடைப் பையிலிருநது” எடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதி 1993ல் ”போர் உலா” என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. “போர் உலா” என்ற தமிழ் இலக்கிய மரபின் நிழல் படிந்த தலைப்பு, ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் என்ற செயல்பாடு விடுதலைப்புலிகள் அமைப்பால் எந்தவொரு பரிமாணத்தில் உள்வாங்கப்பட்டது என்பதை நமக்குப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. தலைப்பின் நிலையும் கடந்து விரியும் மலரவனின் குறிப்புகள், மகிழ்ச்சியும் துக்கமம் திவிரமும் மரணமும் நிறைந்ததோர் நிலையில், போர் என்பது அன்றாட வாழ்வாக மாறி இருந்த ஒரு ஈழச்சூழலை கண்முன் நிறுத்துகின்றன. “குவேராவின் நினைவு ஒரு தழும்பல்ல/தொடர்வதற்காக தன்னைத்தானே கிழித்துக்கொள்ளும் ஒரு தொடர்ச்சி அது.“ மலரவனின் மரணமும் அப்படிப்பட்டதுதான்.

    அரசியல் சூழல் காரணமாக தமிழகத்தில் கவனிக்கப்படாமல் போயிருந்த ஈழப் பதிவுகளை மீண்டும் வெளிக்கொண்டு வரும் விடியலின் புதிய வெளியிட்டு வரிசையை தொடங்குவதாக அமைகிறது மலரவனின் இந்நூல்.

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

    http://thesakkaatu.com/doc11481.html

  6. தமிழீழ தேசிய மாவீரர் வாரம்

    ஜனவரி 15, 2013 | வழித்தடங்கள்.   

    Maaveerar-vaaram-copy-600x337.jpg

    களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான்

    “தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் “தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது ”

    உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது.

    “இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்”

    1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று, மாவீரன் சங்கர் சார்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிடுகையில்…

    ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

    அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டு மதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

    படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

    விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

    தேசியத்தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற் களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.) அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..

    ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான்.

    அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

    இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது.

    இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

    சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்?

    ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

    பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.

    எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

    சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.

    தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தாப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

    Viravanakka-Nigalvil-15.jpg

    இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான். சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.

    ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.

    தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது – எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்.

    Viravanakka-Nigalvil-3-600x398.jpg

    || மாவீரர்கள் ஈகத்தில் நீளும் படைப்புகள்..

    மாவீரர் நினைவில் கட்டுரைகள்….

    மாவீரர் நினைவில் கவிதைகள்….

    மாவீரர் நினைவில் ஒளிப்பதிவு விபரணங்கள்..

    மாவீரர் நினைவுப் பாடல் இறுவெட்டுக்கள்…

    மேலதிக தமிழீழப் பாடல்களை “பாடல்” பகுதிக்குள் சென்று கேட்டு தாய்மண்ணின் உணர்வில் கேட்கலாம்.

    மாவீரர் தாகத்துடன் விரியும் நினைவு மலர்கள்…

    தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரைகள்

    தமிழீழ மாவீரர் துயிலுமில்லங்கள் அந்நிய ஆதிக்க சக்திகளின் அராஜகத்தில் தமிழீழ தெய்வங்களின் தடம் சிதைக்கப்பட்டு சின்னாபின்னபக்கபடுகின்றது. கனக்கும் இதயங்களுடன்…

    Viravanakka-Nigalvil-21.jpg

    நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

    - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

    http://thesakkaatu.com/doc11816.html

    • Like 2
  7. லெப்.சுடரொளி (சிம்மான்)

     

     

    வீட்டுக்கொரு ஆண் பிள்ளையாயிருந்தும் விடுதலையை நேசித்த வீரன்.

    கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே.

     

    ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய் உணரவும் முடியும். அத்தைகயவனாய் தான் சிம்மான் என்னோடு அறிமுகமானான்.

     

    1989ம் ஆண்டு வவுனியா பாலமோட்டை அடர்ந்த காட்டுப்பகுதியில் எங்களது பாசறையமைந்தது. அங்கேதான் உருவத்தில் சிறியவனான துடிப்பான அதே நேரம் நகைச்சுவையான ஒரு போராளியாக என்னுடன் அறிமுகமானான்.

     

    எங்கள் கிராமப்புற வாழ்விலிருந்து மாறுபட்ட பாலமோட்டை அடர்காடு எங்களுக்கு புதிய வாழ்வைத் தந்தது. ஒளிகாணாத இருளுமல்லாத பாதைகளால் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அந்தப்பாசறை எங்களைப் புடம் போட்டெடுக்கும் முனைப்பில் ஒவ்வொரு போராளியின் மனவுறுதியையும் செயலுறுதியையும் பரீட்சிக்கும் களமாகவும் மாறியிருந்தது.

     

    பாலமோட்டைக் காடுகளே இந்திய இராணுவ காலத்தில் புலிகளின் வரலாற்றில் முக்கிய பங்கை வகித்த வரலாற்றைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருந்தது.

     

    கடுமையான காலகட்டமான இந்திய இராணுவ காலத்தில் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் காலம். எந்த நேரமும் இந்தியப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட வழிதேடிக்கொண்டிருந்த காலமும் அதுவே. அந்த இறுக்கமான காலப்பகுதியில் அரசியல் போராளிகளை பாலமோட்டைக் காட்டில் உலங்கு வானூர்தியில் ஏற்றிச் செல்ல இலங்கையரச விமானப்படை வந்து செல்லும்.

    அந்த நேரத்தில் அரசியல் பேச்சுக்குச் சென்று திரும்பும் யோகியண்ணன் உள்ளிட்ட போராளிகளைப் பத்திரமாக வழியனுப்பி வைத்து மீளவும் கொண்டு வந்து இறக்கப்படும் இடத்தில் பாதுகாப்பபு வழங்கி அவர்களை எமது தங்கிடத்திற்கு கொண்டு வரும் பணியும் எமக்காயமைந்த பணிகளில் ஒன்று. அந்தப் பாதுகாப்புப் பணியில் நாங்கள் நித்திரை கொண்டு அதற்கான தண்டனையும் பெற்ற அனுபவம் கூட இனிமையான காலமே.

     

    வரலாற்றின் வெற்றியின் தடயங்களையும் இறுக்கமான கள நிலமையையும் கொண்டு மௌனமாகத் தனது பணியை ஆற்றிக் கொண்டிருந்த பாலமோட்டையில் நாங்கள் பயிற்சிக்காகத் தயாராகினோம்.

     

    கூடப்பயிற்சிக்காய் வந்திருந்தவர்களின் சொந்தப் பெயர்களையோ ஊர்களையோ அறிய ஆவலாயிருந்தாலும் அன்றைய இயக்கக்கட்டுப்பாடு கேட்டு அறிய முடியாததாகவே இருந்தது. எங்கள் பாசறையானது முற்றிலும் வித்தியாசமான கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கொண்டிருந்தது. புலிகளின் புலனாய்வுத்துறையின் வளர்ச்சியில் இந்தப் பயிற்சியின் தொடக்கமே புதிய பரிணாமங்களை உருவாக்கியதெனலாம்.

     

    அப்போதுதான் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள் ஆரம்ப பயிற்சியை முடித்து புலனாய்வுப் பயிற்சிக்கு எம்முடன் இணைக்கப்பட்டிருந்தார்கள்.

     

    அன்றைய காலம் இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள் எமது விடுதலைப் போராட்டம் உட்பட்டிருந்தாலும் தேசியத்தலைவர் அவர்கள் அனைத்து முற்றுகையையும்    உடைத்து    போராட்டத்தையும்    போராளிகளையும் இயக்கக் கட்டமைப்புகளையும் சீர் செய்த வண்ணமே இருந்தார்.

     

    அவ்வாறான இறுக்கமான காலகட்டத்திலும் கூட அவரது சிந்தனையில் உதித்ததுதான் எமது புலனாய்வுப்பயிற்சிமுகாம். அப்போதைய பிரதித்தலைவர் மாத்தையா அவர்களின் நிருவாகத்தின் கீழ் சலீம் அவர்களின் பொறுப்புக்கு உட்பட்டு பிரிகேடியர் மாதவன் மாஸ்ரரின் கடும்பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறோம் என்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை.

     

    எல்லா மாவட்டத்திலிருந்தும் ஐந்து ஐந்து போராளிகள் வந்திருந்தார்கள். யாழ்மாவட்டத்தில் இருந்து கூடுதலான போராளிகள் வந்திருந்தார்கள். முதலில் தனித்தனியாக மாத்தையா அவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த போராளிகளை நேர்முகம் செய்திருந்தார்.

     

    அப்போது அவர் சொன்னார் :- நாம் எந்த ஒரு நிலைமையிலும் எக்கட்டளையையும் ஏற்றுச் செயற்படும் போராளியாகவே இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்தப் பயிற்சியில் நாங்கள் கலந்து கொள்ளலாமெனவும் கூறப்பட்டது.

     

    பயிற்சியின் கடினம் எதுவென்று பார்த்துவிடும் உறுதியோடு சிம்மான் உட்பட பயிற்சிக்கென வந்த அனைத்துப் போராளிகளும்   மாத்தையா அவர்களின் கட்டளைகள்  விளக்கவுரைகளை  ஏற்றுக்  கொண்டு  பயிற்சியின்  கடினம் தெரியாதவர்களாய் அனைத்துக்கும் தயரானோம்.

     

    இதில் என்னுடன் பயிற்சிக்கு வந்தவர்களுக்கும் எமது அணியோடு இணைத்துக் கொள்ளப்பட்ட  பெண்போராளிகளுக்கும்  இன்னும்  சில  போராளிகளுக்கும் ஏற்கனவே களச்சண்டை அனுபவம் இருந்தமையால் நடக்கப்போகும் பயிற்சியின் கடுமையை ஒரளவு உணர்ந்திருந்தனர்.

     

    ஆனால் அங்கேயே பயிற்சியை முடித்து பயிற்சி முடிந்தவுடன் இச்சிறப்பு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு வந்தவர்ளுக்கு அதன் கடுமையைப் புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டது. அத்தைகயவர்களுள் சிம்மான் போன்ற சிலரும் உள்ளடங்கலாகினர்.

     

    விளையாட்டும் வீடும் உறவுகளும் தாளையடிக் கடற்கரையும் மட்டுமே உலகாயிருந்த சிம்மான் இயக்கத்தில் இணையும் போது மிகச்சிறியவனாகவே இருந்தான்.  அவன் தனது ஆரம்பக் கல்வியை தாளையடி  பாடசாலையில் பயின்றவன்.

     

    அவனது ஊர் அடிக்கடி இந்திய இராணுவத்தால் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டு திடீர் திடீரென அவனது கிராமமும் அமைதிய இழந்து போகிற தருணங்கள் அடிக்கடி நிகழ்ந்தது. இச்சுற்றிவளைப்பு இளைஞர்களை ஊரில் நிம்மதியாக இருக்கவிடாது தொல்லையாகவே இருந்தது. இதனால் சிம்மானை அவனது  பெற்றோர்  யாழ்நகரில்  உள்ள பற்றிக்கல்லுரியில்  இணைத்தார்கள். அத்தோடு விடுதியிருந்தே அவன் கல்வியைத் தொடர விடப்பட்டிருந்தான்.

     

    அந்த நாட்களில் தான் சிம்மானுக்கு சந்திரன் அறிமுகமாகிறான். சந்திரன் ஒரு அநாமதேயக் கரும்புலியாக கொழும்பு நகரில் காவியமானது ஒரு வரலாறு. சிலரால் மட்டுமே அறியப்பட்ட மறைமுகக்கரும்புலி சந்திரன் ஊடாக சிம்மான் போராளியாகினான். தாயகத்தின் விடுதலையை சிம்மான் உணர்ந்த காலமும் அதுவே.

    வீட்டில் ஒரேயொரு ஆண்பிள்ளையவன். அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு செல்லப்பிள்ளையாகவே அவன் வாழ்ந்து வந்திருக்கிறான். அவனுக்கு உடன் பிறந்த இரு பெண் சகோதரிகள் இருந்தார்கள். அவன் மீது அவர்கள் அளவு கடந்த பாசத்தைக் காட்டி அவனைப் பார்த்து வந்தார்கள். அவனென்றால் உயிராகவே அவன் மீது பாசமாக இருந்தார்கள்.

     

    குட்டி இத்தாலி என அழைக்கப்படும் இவனது ஊரான தாழையடி செம்பியன்பற்று கிராமத்திலிருந்து இவனது உறவுமுறையான மாமாமார் தந்தையின் உறவுகள் யாவரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்திருந்தார்கள். நினைத்தால் அவனால் விரும்பும் வசதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியோடு அவனது குடும்பச்சூழல் அமைந்திருந்தது.

     

    இத்தகைய வசதிகள் இருந்தும் தனது சிறிய வயதில் அனைத்து உறவுகளையும் வசதிகளையும் துறந்து சந்திரன் ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பில் போராட்டத்தில் இணைந்து கொண்டான்.

     

    வவுனியாஅடர்ந்த காட்டுப் பகுதியில் அமீர் பயிற்சியாசிரியராக இருந்த பயிற்சி முகாமில் சிம்மான் பயிற்சியை முடித்திருந்தான். அன்றைய இந்திய இராணுவ காலகட்டத்தில் போராட்டம் என்பதும் பயிற்சிகள் என்பதும் நினைத்துப் பார்த்தால் இன்றும் மனசை ஒரு உறை நிலைக்குக் கொண்டு செல்லும் நிகழ்வுதான்.

     

    இந்திய முற்றுகைக்குள் அதிகாலை தொடக்கம் மதியம் வரையில் கடும் பயிற்சிகளையும் செய்து கொண்டு உணவுப் பொருட்களை எடுத்து வருவதென்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது அக்காலம். கடும் பயிற்சி நீண்டதூர நடைப்பயணத்தின் போது திசையறிகருவி மூலம் சென்று காடுகளை ஊடறுத்துத் தினம் ஒவ்வொரு பாதையை அமைத்துச் சென்று எம்மைவிடவும் பாரம் கூடிய உணவுப் பொதிகளைக் காவிவருவது என்பதும் அதன் வலியும் வேதனையும் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியமுடியும்.

     

    கடுமையும் இனிமையும் நிறைந்த பயிற்சியை நிறைவு செய்து அடுத்த கடும் பயிற்சிக்கு இணைந்து கொண்டவன் தான் சிம்மானென்ற இனிமையானதொரு பாச உணர்வோடு நட்பை வளர்த்துக் கொண்ட தோழன் சிம்மான் என்ற சுடரொளி.

     

    பாலமோட்டை அடர்ந்தகாட்டில் அன்றைய பிரதித்தலைவரான மாத்தையாவின் 37 என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு இயங்கிய ஒரு முகாம் எமக்கான பயிற்சி முகாமாக அமைக்கப்பட்டிருந்தது.

     

    அனைத்து முகாம்களுக்குமான பொறுப்பாளராக லெப்.கெணல் கிறேசி அவர்கள் இருந்தார். எங்களது புலனாய்வுப்பகுதிக்கு சலீம் அவர்கள் பொறுப்பாக இருந்தார். நாம் அவருக்கு கீழ் தனியாக சண்டையணியுடன் கலக்கப்படாமல் பெண் போராளிகள் தனியாகவும் ஆண்போராளிகள் தனியாகவும் 37 முகாமில் ஒரு பகுதியில் தனித்துவமாக இருந்தோம். அந்தப்பகுதியின் காவல்கடமை யாவையும் நாமே கவனித்து வந்தோம்.

     

    எமக்கான முதல்நாள் கலந்துரையாடல் மாத்தையா அவர்களால் நடத்தப்பட்டது. பயிற்சியின் நோக்கம் கடுமை யாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்த மாத்தையா அவர்கள் தினமும் பயிற்சியின் போது 10கிலோ மண்மூடையை சுமந்தபடியே பயிற்சியை செய்ய வேண்டும். இரவு நித்திரைக்கு செல்லும் போது மட்டுமே அந்து மணல்மூடையைக் கழற்ற அனுமதிக்கப்படும் என்றார்;. அதுவரையும் நாங்கள் என்ன பணிகளைச் செய்தாலும் எம் முதுகில் அந்த 10கிலோ மண்மூடையைக் கழற்றவேகூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

     

    இப்பயிற்சியினை சலீம் அவர்களும் மாதவன் மாஸ்ரர் அவர்களும் நெறிப்படுத்துவார்கள்; எனவும் குறிப்பிட்டார். இக்கடும் பயிற்சியைப் பெற விரும்பாதவர்கள் விலகிக் கொள்ளாம் எனவும் மீண்டும் கூறப்பட்டது. எனினும் யாரும் விலகாது பயிற்சியை முடிக்கவே தயாராக இருந்தார்கள்.

     

    இப்படியாகப் பயிற்சி தொடங்கிய நாளிலிருந்து நாம் யாரும் நிம்தியாகத் தூங்கியதில்லை. பயிற்சியின் கடுமை எந்த நேரமும் முதுகில் எம்மோடே காவப்பட்டுக் கொண்டிருந்த 10கிலோ மண்மூடையோடு இவ்வாறு தொடாந்த பயிற்சியின் கடினத்தின் அசதியில் நின்றபடியே சிம்மான் நித்திரைக்குச் சென்று விடுவான். எங்கு அவனுக்கு இடைவெளி கிடைக்கிறதோ அங்கே அவன் அவனது துப்பாக்கியோடும் மண்மூட்டையோடும் நித்திரையாகிவிடுவான்.

     

    மாதவன் மாஸ்ரர் முக்கியமான பாடங்களைப்   படிப்பிக்கும் போது கூட நித்திரையாகிவிடுவான். எங்களது முகாமில் தினம் தினம் தண்டனை பெறும் போராளியாகவே சிம்மான் இருந்தான்.

     

    தண்டனைக்காக சிறிய மரக்குற்றியொன்றில் மாதவன் மாஸ்ரர் எற்றிவிடுவார். அதில் இரு கால்களையும் வைத்துக் கொண்டு எத்துணையுமில்லாமல் துப்பாக்கியையும் பிடித்து நிற்பதென்பது கடினம். பலர் பலமுறை அந்த மரக்குற்றியிலிருந்து தவறி விழுந்து திரும்பத் திரும்ப ஏறிக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிம்மானோ அந்த கடினமான நிலமையிலும் மரக்குற்றியில் நின்றவாறு நித்திரையாகிவிடுவான்.  அந்த  நித்திரை  சிம்மானைத்  தவிர  யாராலுமே இயலாதது.அவனது அதிசயமாக நிலையும் நித்திரையும் காணுகிற யாவரும் சிரிப்பார்கள்.

     

    மாதவன் மாஸ்ரரை தனது குறும்புகளாலும் நின்றபடியான நித்திரையாலும் சினப்படுத்தியிருக்கிறான். எத்தனை தண்டனை கொடுத்தாலும் அத்தனையையும் சாதாரணமாக  செய்து  முடித்துவிட்டு  மாஸ்ரர்  முன்னால் சாதாரணமாகவே இருப்பான்.

     

    இனி கொடுப்பதற்கு தண்டனையே இல்லையென்ற நிலமையில் மாதவன் மாஸ்ரர் சொல்லுவார்….! மச்சான் சிம்மான் அம்மாவாணை இனி ஏலாது சொல்லீட்டு போமச்சான்….! என்பார். ஆனால் இவனோ அதனையும் சிரித்துக் கொண்டு ரசித்தான். ஆனால் கடினமான பயிற்சியை விட்டு விலகிப் போகவில்லை. பயிற்சியின் கடுமையைத் தாங்க முடியாமல் மன்னாரைச் சேர்ந்த பஸ்தியான் என்ற போராளி ஒருவர் சயனைட் கடித்து பின்னர் மருத்துவப் போராளிகளால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்திருந்தான். அப்படியிருந்தும் சிம்மான் போன்ற இன்று மாவீரர்களான பல போராளிகள் உறுதியுடன் தங்கள் பயிற்சியை முடித்ததும் கடமைகளை முடித்ததும் வரலாற்றில் மறக்க முடியாதது.

     

    எமது புலனாய்வுப் பயிற்சியின் தொடர்ச்சி பலமாதங்களைக் கடந்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்புப்படைகளும் தேசவிரோதிகளும் எமது மண்ணைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இவ்வேளையில் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமிருந்தது. எங்கள் அணிகளையும் தாக்குதலுக்குத் தயாராகும்படி தலைவர் அவர்களிடமிருந்து கட்டளை வந்தது. இதற்காக கிறேசி அவர்கள் சிறப்புப் பயிற்சியை ஆரம்பித்தார். எமது துறைப்போராளிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர்.

     

    ஒன்று கிளிநொச்சி பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டியிருந்த ஈஎன்டிஎல்எவ் மீது மறிப்புத் தாக்குதல் அடுத்தது வவுனியா பகுதியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த  ஈபிஆர்எல்எவ்  புளட் மீது  வழிமறிப்புத்  தாக்குதல்.  இதில் நெளுக்குளம் பகுதியில் நடந்த மறிப்புச் சமரில் சிம்மானும் கலந்து கொண்டான்.

     

    இது வெற்றிகரமான தாக்குதலாக முடிந்திருந்த போதும் சமநேரத்தில் வவுனியா செட்டிகுளத்தில் உள்ள முசல்குத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த புளொட் மாணிக்கதாசனின் முகாம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

     

    இத்தாக்குதல் தோல்வியில் முடிந்திருந்தது. இதனால் முசல்குத்தி புளட் முகாம் மீது பெரியளவிலான தாக்குதலை மேற்கொள்ள பல தளபதிகளும் பங்கேற்றனர் நடந்த சண்டையில் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது. மாணிக்கதாசன் தப்பி சென்றிருந்தார்;. இவ்வெற்றிகரத் தாக்குலில் சிம்மானும் கலந்து கொண்டான்.

     

    இத்தாக்குதல் முடிவுற எமக்கான புலனாய்வுப் பணி காத்திருந்தது. இவ்வேளையில் மாத்தையா அவர்களிடமிருந்து புலானய்வுத்துறையின் பொறுப்பை பொட்டு அம்மான் பொறுப்பேற்கிறார். இவரே சிம்மானை இறுதிக்காலம் வரையும் வழிநடத்தினார். பொட்டு  அம்மான்  பொறுப்பேற்ற  பின்பு  மாதவன்  மாஸ்ரர்  வவுனியா

    நெழுக்குளத்திலும் சலீம் அவர்கள் துணுக்காயிலும் மாதகல் லெப்.கேணல் ராஜண்ணா லெப்.கேணல் சூட்டண்ணனுடனும் யாழ்ப்பாணத்திலும் லெப்.கேணல்.மல்லியண்ணன் கிளிநொச்சியிலும் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

     

    சிம்மான் வவுனியா நெளுக்குளத்தில் மாதவன் மாஸ்ரருடன் விசாரணைப்பணியில் ஈடுபட்டிருந்தான். அப்பணி முடிந்த கையோடு யாழ்ப்பாணத்தில் லெப்.கேணல்.பொஸ்கோ அண்ணனுடன் விடப்பட்டான். அவரோடு சிம்மான் தகவல் சேகரிப்பிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டான். அப்போது தர்சன் என்ற பெயரிலும் புலனாய்வுப் பணியில் செயற்பட்டான்.

     

    கோப்பாய் பகுதியில் இருந்து புலனாய்வில் செயற்பட்ட சிம்மான் அங்கு நின்ற போது அவன் அனைத்து வாகனங்களையும் செலுத்த இலகுவாகக் கற்றிருந்தான்.

     

    இவ்வேளையில் பொறுப்பாளரின் அனுமதியின்றி வாகனத்தை ஓடி ஒரு விபத்தில் மாட்டியிருந்தான். இது பொறுப்பாளருக்குத் தெரியவர யாழ் கோட்டைப் பகுதியில் தண்டனைக்காக விடப்பட்டியிருந்தான். தண்டனைக்காலம் முடியும் போதே நான் வெளியகவேலை ஒன்றிலிருந்து மீண்டும் வந்திருந்தேன்.அன்றிலிருந்து என்னுடன் மீண்டும் நட்பினை வளர்த்தவன் வீரச்சாவு அடையும் வரை பிரியாத நண்பனாகவே இருந்தான்.

    அவ்வேளை நான் வடமராட்சி புலனாய்வுத்துறைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். இதன் போது இருவரும் குடும்ப உறவு போல அவன் மூலம் அவனது குடும்பத்தினருடன் பழகச் சந்தர்ப்பம் கிடைத்தது.

     

    நானும் அவனும் சில நாட்களில் சண்டை பிடித்து பலமாதங்கள் கதைக்காமலே இருந்த நினைவுகளையும் மீட்டுக் கொண்டான். இருவரும் சிறு சிறு சண்டைகள் பிடித்தாலும் அவன் தானாகவே வந்து என்னுடன் கதைப்பான். இப்படி அவனிடம் குழந்தைத்தனமும் அதேநேரம் அன்பாகவும் என்னுடன் பழகிய காலங்கள் நினைவுக்குள் இன்னும் பச்சையம் மாறாமல் இருக்கிறது….!

     

    சிம்மான் சிறந்த நண்பனாக இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் தோழனாக என்னோடு   உறவாகினான்.   இவ்வேளையில்   சிறுவயதில்   வழமையாக எல்லோருக்கும் வருவது போல ஒரு காதல் அவனுக்கும் வந்தியிருந்தது.

     

    அவனுடன் ஒன்றாகப் படித்த பெண்ணை அவன் நேசிக்கத் தொடங்கினான். காதல் அவனை மிகவும் நேசிக்க வைத்தது. தனது காதலியைச் சந்திக்க போகும் போதெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டே போவான். நானும் அவன் எண்ணம் நிறைவேறி குடும்பமாகி வாழ்வான் என்றே நினைத்திருந்தேன். போராளிகளின் வாழ்க்கை அனைத்தையும் கடந்தது என்பதனை அவனது வீர மரணம் வரை நான் உணரவேயில்லை.

     

    பொஸ்கோ அண்ணன் நிருவாகத்திலிருந்து ராயு அண்ணனின் கண்காணிப்புப் பிரிவு நிருவாகத்தில் செயற்பட்டு வந்தான். அம்முகாமுக்கும் அவனே பொறுப்பாகவும் இருந்தான். எந்த வேளையிலும் இவன் பாடசாலை மாணவன் போன்றே தோற்றம் தருவான். ஒரு புலனாய்வாளனுக்குரிய மாற்றங்கள் இலகுத் தன்மை யாவையும் சிம்மான் பெற்றிருந்தான். காலத்திற்கும் கடமைக்கும் ஏற்ப அவன் தன்னை மாற்றியமைத்துத் தனது கடமையில் சிறந்தவனாகவே இருந்தான்.

     

    அவன் எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் பாக்கர் பேனையும், கொப்பியும் லுமாலா சயிக்கிளும் இன்னும் என் நினைவோடிருக்கிறது. இவனது குறும்புகளால் நான் மாதவன் மாஸ்ரரிடம் பலமுறை தண்டனை பெற்றிருக்கிறேன். மாஸ்ரருக்கு தெரியாமல் என்னை வெளியில் கூட்டிப்போகவே பிரயத்தனப்படுவான்.

    மாஸ்ரருக்கு தெரியும் அங்கே அவன் வந்தால் என்னைக் கூட்டிப்போவானென்று. இதனை உணர்ந்த மாஸ்ரர் அடிக்கடி கேட்பார். என்ன ஆளைக்கூட்டிக் கொண்டு போகப்போறிங்களே மச்சான் பகிடியாய் கேட்பார். சிம்மானுடன் கிடைக்கும் நேரமெல்லாம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவனது உறவினர்களின் வீடுகளிற்கெல்லாம் சென்று வருவோம்.

     

    இப்படியே நாட்கள் போக இயக்கத்தின் வளர்ச்சியும் செயற்பாடுகளும் வளர்ச்சி காண இவனுக்கும் பொறுப்புகள் வரத் தொடங்கியது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி பல்கலைக்கழகத்துக்கு பின்பாக அமைந்திருந்த இரகசிய முகாமுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். இம்முகாமில் தான் மாத்தையா அவர்கள் விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வேளையில் மாத்தையாவிற்கான சகல தேவைகளையும் இவனே கவனித்தான். பத்திரிகைகள், தொடக்கம் யாவையும் கொடுத்துக் கவனித்தான்.

     

    இக்காலப்பகுதியில் பூனகரி முகாம் தகர்ப்புக்கான ஆயுத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. தாக்குதலை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தளபதி பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த போதும் அவர் யாழ்தேவி சண்டையில் காயமடைந்திருந்ததால் பொட்டு அம்மான் அவர்கள் தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

    இச்சண்டைக்காக  அனைவரும் தயார்படுத்தப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின. இதன் போது மல்லியண்ணனும் சூட்டண்ணனும் புலானய்வுத்துறைப் போராளிகளுக்கான தளபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

     

    இச்சந்தர்ப்பத்தில் நான் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கு புலனாய்வுப் பொறுப்பாளராக பொறுப்பேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். இதற்கான போராளிகள் தெரிவுகளைச் செய்யும்படி தலைவரும் பொட்டுஅம்மானும் கேட்டுக் கொண்டனர்.

     

    இதில் யாழ் மாவட்டப் புலனாய்வுப் போராளிகள் மட்டக்களப்பிற்கு வர ஆளுக்கு ஆள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதனையறிந்த சிம்மான் என்னை இரவு பகலாக உன்னுடன் கூட்டிப்போய்விடு மச்சான் என கேட்டுக் கொண்டேயிருந்தான்.

     

    நானும் அவனை அம்மானுடன் கதைத்து அழைத்துப் போவதென்றே சொல்லியிருந்தேன். இதற்காக ஒருமுறை அம்மானுடன் கதைத்து பேச்சு வாங்கி பிறகு ஒரு வகையாக அம்மானை சமாளித்து அவனை என்னோடு கூட்டிப்போக அனுமதியும் பெற்றேன்.

     

    அம்மானுக்கு சிறு தயக்கம் இருந்து கொண்டேயிருந்தது. காரணம் சிம்மானின் குழப்படிகளை அறிந்திருந்தார்.

    ஒருமுறை நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வொன்று :-

     

    ஒருமுறை அவனது தந்தையின் சகோதரர் அவுஸ்ரேலியாவில் இருந்து ஊரில் வந்து நின்றார். அப்போது சிம்மானும் விடுமுறையில் போயிருந்தான். அப்போது அந்தச் சித்தப்பா கொண்டு வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு உடுப்பிட்டியில் நின்ற என்னிடம் வந்திருந்தான். வா மச்சான் வீட்டை போய் வருவோமென அடம்பிடித்தான்.

     

    இருவரும் போவதை அறிந்தால் அம்மான் கோபப்படுவார் என நான் மறுக்க இவனோ பறாவயில்லை இருவரும் சேர்ந்து தண்டனையைச் செய்வோமெனச் சொன்னான். இன்று நீ வராது விட்டால் உன்னுடன் இனிமேல் ஒருபோதும் கதைக்கமாட்டேன் என்றான். அவனது அன்புக்கு முன்னால் தண்டனையொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஒருவாறு என்னை சமாளித்து மோட்டார் சயிக்கிளில் ஏற்றிக் கொண்டு தாளையடி நோக்கி புறப்பட்டான்.

     

    இவன் வளமையில் வேகமாகவே வாகனத்தைச் செலுத்துவான். அன்றும் நான் பின்னாலிருக்க அவன் வேகமாகவே மோட்டார் சைக்கிளை ஓடினான். உடுப்பிட்டியிலிருந்து நெல்லியடி நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் போது கடற்புலிகளின் முகாமைத் தாண்டி வரும் வீதி வளைவில் வந்த ஒரு பெண்ணோடு மோதி மூவரும் துக்கி எறியப்பட்டோம்.

     

    அதே சமயம் அவ்வழியால் வந்த கடற்புலி போராளிகளால் மீட்கப்பட்டு மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோம். இச்சம்பவத்தால் அம்மான் என்னுடன் கோபத்திலிருந்தார். இந்த நிகழ்வை அவ்வேளையில் அம்மான் நினைத்திருக்கக் கூடும்.

     

    இவ்வேளையில் றொபேட்டிடம் இருந்த யாழ்மாவட்ட புலனாய்வுப் பொறுப்பு பூனகரி முகாம்தாக்குதல் முடியும் வரை என்னிடம் தரப்பட்டு யாழ்மாவட்ட புலனாய்வுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தேன்.

    அம்மான் பூனகரி முகாம் தாக்குதல் ஒருங்கமைப்புக்குத் தயாராகியிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் புலனாய்வுத்துறை வெளிவேலை செய்யும் போராளிகளும் தாக்குதலின் தேவை கருதி தாக்குதல் அணிக்காக பெயர்கள் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

     

    நான் நினைத்துக்கூட பார்க்காத அந்தப்பெயர் அப்பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நான் மட்டக்களப்புக்குக் கூட்டிப்போவதாக இருந்த சிம்மானின் பெயர். நான் அவனுக்காக வேலைகளை மனதில் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது அவனை இவ்வாறு உடன் சண்டையணியில் இணைத்தது கவலையைத் தந்தது. இதுவிடயம் பற்றி அவனும் அறிந்திருந்தான். அவன் என்னிடம் வந்த போது இதுபற்றி சொன்னான்.

     

    மட்டக்களப்பு வந்தும் சண்டைபிடிக்கத்தானே போறன்…இந்தச் சண்டைக்கு நான் போய் வந்தால் அனுபவமாகவே இருக்கும் உனக்கும் உதவியாயிருக்கும் என்றவன். ஆனால் நீ என்னை மட்டக்களப்புக்கு விட்டுவிட்டு போகாமல் இருந்தால் சரியென்றான்.

     

    இருந்தும் நான் றொபேட்டுன் கதைப்பதாக அவனிடம் சொல்லிவிட்டு அம்மானை சந்திக்க முயற்சித்து முடியாது போக றொபேட்டிடம் கேட்டேன். அவனை நான் கூட்டிப்போக  உள்ள  வேளையில்  கட்டாயம்  சண்டைக்கு  வர  வேணுமா

    எனக்கேட்டேன். றொபேட் சண்டையின் கடுமை பற்றியும் ஆட்கள் பற்றாக்குறை பற்றியும் விளக்கியதால் நானும் வேறு வழியில்லாமல் திரும்பிவிட்டேன்.

     

    சண்டைக்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு அணியணியாக போராளிகள் பிரிக்கபட்டார்கள். அப்போது எனது ஓய்வு நேரங்களில் இவன் என்னிடம் வந்துவிடுவான். கிடைத்த அந்த ஓய்வுகளில் தனது குடும்பம் , காதல் போராட்டப் பணிகள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டான். தேசத்தின் விடுதலையைத் தேடிய கால்களின் வேகம் பூனகரியின் வெற்றியின் நாதமாக….! அணிகள் தயாராகின….!

     

    பூனகரி முகாம் தகர்;ப்புப் பயிற்சிக்காக பிரியும் நேரம் வந்தது. அந்த நாள் வந்த போது இது நிரந்தர பிரிவென்று நான் நினைக்கவேயில்லை. மாறாக திரும்பி வருவானென்றே நினைத்திருந்தேன். போருக்குப் போகும் போது ஒருவித கலக்கத்துடனேயே பார்த்தான். என்றுமில்லாத அவனது கலக்கம் அவன் என்ன நினைக்கிறான் என்பதை என்னால் ஊகிக்க முடியாதிருந்தது.

     

    சண்டைக்கான பயிற்சி தொண்டமானாறு , அச்சுவேலி பகுதிகளில் நடந்து கொண்டிருந்தது. அப்பயிற்சி முகாமுக்கு மல்லியண்ணன் யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால் நான் அவனைத் தேடிப்போனேன். அவனைச் சந்திக்க வேண்டும் நிறையப் பேசவேண்டுமென அவனருகில் போனாலும் அவனது முகத்தைப் பார்த்த போது எல்லாம் மறந்துவிடும்.

    Sudaroli-4-600x924.jpg

    பயிற்சி நடந்து கொண்டிருக்கும் போது முகம் வாடியிருந்தது. மனசுக்குள் அவன் சொல்வதற்காய் பலவற்றைப் புதைத்து வைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவனிடம் ஆற அமர எதையும் கேட்டறியும் நிலமையில் நிலமை இருக்கவில்லை.

     

    அப்போது பயிற்சியின் போது அவனுடன் பயிற்சியில் ஈடுபட்ட சக போராளிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தந்தான். தங்கைமார் அம்மா உறவினர்கள் காதலியென விசாரித்துவிட்டு அனைவரையும் சுகம் விசாரித்தாய் சொல்லு மச்சான் எனச்சொன்னான். அத்துடன் ஒரு கடிதத்தையும் தந்தான். அத்துடன் பாக்கர் பேiனையையும் தந்தான்.

     

    அவன் பழகிய ஒரு வீடு அது யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் இருந்தது. அவர்களின் வீட்டில் அவனுடன் நட்பினை வளர்த்திருந்த ஒரு பிள்ளை அவன் தூரம் போவதைத் தெரிந்து போகும் போது பாக்கர் பேனையொன்று கேட்டுள்ளது. அதையும் தந்து கடிதம் ஒன்றையும் தந்திருந்தான்.

    அந்தக் கடிதம்:-

    Sudaroli-1-600x631.jpg

    தனக்குச் சாவு வரும் என்பதைத் தெரிந்து கொண்டு ஒரு போராளி போருக்குப் போவது எப்படியான உள்ளுணர்வை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும். தான் சாகும் தருணத்திலும் தங்களை நேசித்தவர்களுக்காக எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற அவனது தியாகத்தினையே நான் கண்டு கொண்டேன்.

     

    அத்தோடு இத்தாக்குதலில் தான் மரணித்தால் தனது காதலிக்கு தனது வித்துடலைக் காட்டுமாறும் பூமாலை ஒன்றைக் கொடுத்து எனக்கு அணிவித்து விடு எனவும் வேண்டிக் கொண்டான்.

     

    இதனை நானோ வழமையான கதையாகவே நினைத்தேன். இவன் என்னுடன் மட்டக்களப்பு வருவான் என்ற திடமான நம்பிக்கையுடனே இருந்த என்னால் அவனது மரணத்தை நினைக்கவே தெரியாது போயிருந்தது.

    இரும்பாயிருக்கும் போராளிகளின் மனவுறுதியின் அடியிலும் ஈரமான நினைவுகளும் சின்னச் சின்ன ஆசைகளும் இருப்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

     

    பூனகரித் தளம் தேடிய புலிகளணி இறுதிப் பிரிவு நாளது. அன்றைய நாள் அவனுடன் கதைத்து பம்பல் அடித்து விட்டுப் போராளிகளிடம் விடைபெறும் நேரம் அவனுக்குச் சொன்னேன். தாக்குதல் வெல்லும் நீ திரும்பி வருவாய் நீ வந்த பிறகு மட்டக்களப்பு போவோம் என்றேன்.

     

    11.11.1993 அன்று இருளொடு இருளாக பூனகரி தவளைப்பாய்ச்சல் தாக்குதலுக்காக அணிகள் தயாரானது. (தவளை நடவடிக்கை நீரிலும் நிலத்திலும்…) நீரிலும் நிலத்திலும் எதிரியுடன் சமராட புலிகளணி தாக்குதலுக்குத் தயாராக இருந்தார்கள். அப்போது நானும் அவ்விடத்துpற்கு செல்ல அவர்கள் பூனகரி உப்புத்தணீருக்குள் இறங்கத் தயாராகி தாக்குதலணிப் போராளிகள் நின்றார்கள்.

     

    உப்பு நீரில் கால்நனைத்து உறுதியுடன் விடை தந்து வெற்றி பெற்று வர எங்கள் வீரர்கள் தயாரானார்கள். கரிய இருட் திரையைக் கரைத்தபடி புலிவீரர் அணியணியாய் தயாராகி உப்பு நீரில் நடந்தார்கள்.

     

    அந்த ஈரக்காற்று மேனிதடவி ஒவ்வொரு வீரனையும் வழியனுப்பிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராய் விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். மனசின் அடியில் அவர்களில் யாரை இழந்து விடப்போகிறோம் என்ற ஏக்கம் தானாகவே வந்துவிட சிரித்துக் கொண்டு போகிற அவர்களுக்காக சிரித்து விடைகொடுத்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது மச்சான் என்று கையைப்பிடித்த சிம்மான். மச்சான் நான் திரும்புவனோ தெரியாதெனச் சிரிப்புடன் பகிடி போன்று சொன்னான் சிம்மான்….நீ யோசிக்காதை நீ திரும்ப வருவாய் எனக்கூறியதும் அப்போது அவனது கையில் கட்டியிருந்த கோவில் நூலொன்றைக் கழற்றி எனது கையில் கட்டிவிட்டான்.

     

    அவனைப் பிரியப் பிரியப்படாத எனக்கு நம்பிக்கை தருபவனாய்…., இந்தச் சிங்கள இராணுவத்தினர்  இந்த  முகாமிலிருந்து  வெளியேற  வேண்டும்.  நாங்கள் இச்சண்டையில் வெல்வோம் நான் திரும்பி வருவேன் வந்ததும் உன்னுடன் மட்டக்களப்பு வருவேன் யோசிக்காதையென கடைசியாக எனக்கு தைரியம் சொல்லிவிட்டு உப்புத்தண்ணீரில் இறங்கினான்.

     

    தண்ணீரில் நடந்து கொண்டிருந்த போராளிகளோடு அவனும் நடக்கத் தொடங்கினான். அவன் மறையும் வரையும் கரையில் நின்ற நான் அவன் உருவம் மறைந்ததும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். என் கண்களில் உப்பு நீர் உவர்த்தது. சிம்மானும் அச்சமருக்கு போய்க்கொண்டிருந்தவர்களையும் சுற்றியே மனசு அலைந்து கொண்டிருக்க திரும்பிக் கொண்டிருந்தேன்.

     

    சண்டை தொடங்கியது. கடும் வெடியோசைகளுடன் காதைப் பிளக்கும் அளவுக்கு தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சண்டையின் நிலவரத்தைப் பற்றிய நிலமையைக் கட்டளை மையத்திலிருந்து வரும் வோக்கி அலை வரிசைகளை மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

    வீரச்சாவுகளும் காயங்களும் வெற்றிச் செய்தி அறிவிப்புக்களும் வந்து கொண்டிருந்தது. சிம்மானின் நினைவும் எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வீரச்சாவும், காயமென வரும் அறிவிப்பும் மனசை ஆயிரம் கத்திகள் கொண்டு அறுக்கும் வலியைத் தந்து கொண்டிருந்தது. அடுத்த பெயர் எனது நண்பனாக இருக்கக் கூடாதென்ற எண்ணமே வலுத்திருந்தது.

     

    லெப்.கேணல்.சூட் அவர்களின் பெயரை வோக்கி ரோக்கி கதைகளை வைத்து வீரச்சாவு என்பதை அறிந்து கொண்டதும் எனது இதயத்தில் பேரிடியைத் தந்தமாதிரி உணர்ந்தேன். நான் நேசித்த எனக்கு மிகவும் பிடித்த தளபதிகளுள் தளபதி சூட் அண்ணனும் ஒருவர். எனக்கும் சூட்டண்ணன் அவர்களுக்கும் இருந்த தனித்த நட்பு மிகவும் வித்தியாசமான அனுபவம். அந்த நேரம் சூட் அவர்களின் இழப்பானது எமது துறைக்கும் விடுதலைப்புலிகள் ஒட்டுமொத்த அமைப்புக்கும் பேரிழப்பாக இருந்தது. இப்படியாகப் பலநூறு போராளிகள் காயம் வீரச்சாவு அறிவிப்புகளும் வந்து கொண்டிருந்தது.

     

    தொடர் அறிவிப்புக்கள் மனசை அமைதியாக இருக்க முடியாதபடி அலைக்கழிந்தது. சிம்மான் பற்றி மல்லியண்ணனைத் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் போலிருந்தது. அதேநேரம் தளபதி பால்ராஜ் அவர்களுக்கு பாதுகாப்புக்காகவும் நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது தளபதி பால்ராஜ் அவர்களும் , காயமடைந்த போராளிகளும் யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துமவனை என்று பார்க்காமல் சுப்பர் சொனிக் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. இப்படியான நிலமைகள் இருந்தும் வீதியோர தாக்குதலினையும் பொருட்படுத்தாமல் பூனகரிக்குச் சென்றேன்.

    அங்கு வழங்கல் பகுதிக்கு சென்ற போது என்னால் நம்பவே முடியாத அந்தத் துயர் வந்தது. எனது நண்பன் சிம்மானின் வீரச்சாவுச் செய்தியே என்னை வந்தடைந்தது. நம்ப முடியாத அந்தச் செய்தியை உறுதிப்படுத்த மீண்டும் தொடர்பெடுத்து கேட்டேன்.

     

    முதலில் காயம் என்றார்கள் , பின்னர் வீரச்சாவென்றார்கள். எனது துறை சார்ந்த நண்பர்களான மஞ்சு , சிம்மான் என புலனாய்வுத்துறை சார்ந்த போராளிகளின் சாவுச்செய்திகள் கிடைத்த வண்ணமிருந்தது.

     

    அந்தச் செய்தியோடு உடைந்து போனேன். ஒருகணம் எல்லா நம்பிக்கைகளும் போனது போன்ற பிரமையில் வெளியேறினேன். போன வழியெல்லாம் சிம்மானினதும் ஏனைய போராளி நண்பர்களினதும் நினைவுதான் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த விமானத்தாக்குதலையும் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது சிந்தனை முழுவதும் சிம்மானின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதே எண்ணமாக இருந்தது.

     

    தான் இறந்தால் தனது காதலி தனக்கு மாலையணிவிக்க வேண்டுமென்ற அவனது ஆசையை நிறைவேற்ற அவனது காதலியைத் தேடிப்போனேன். அவனது வீரச்சாவுச் செய்தியை சொன்னதும் அவனது காதலி அழுத அழுகை இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது.

     

    ஒவ்வொரு மாவீரனையும் இழக்கும் எல்லாக் காதலிகளின் கண்ணீருக்கும் ஒரே கனம்தான் இருக்குமோ ? அந்தச் சமரில் மரணித்தவர்களின் காதலிகள் பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் கண்ணீரில் தொலைய அவர்களது வித்துடல்கள் வெற்றிகளைத் தந்துவிட்டு நிரந்தரமாய் பூனகரி மண்ணை மீட்ட நிமிர்வில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

    Sudaroli-3-600x221.jpg

    சிம்மானின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனது வீரச்சாவுச்செய்தி அவர்களுக்கும் போயிருந்தது. எனினும் நான் போகும் போது வித்துடல் கொண்டு வரப்படவில்லை. அன்றைய மாலைப்பொழுதில் வித்துடல் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. யாராலும் நம்ப முடியாதபடி வரிச்சீருடையில் வளர்த்தப்பட்டிருந்த சிம்மானின் வித்துடல் அடையாளம் காணமுடியாதளவு உருமாறியிருந்தது. அப்போது அவனது உறவினர் சகோதரிகள் தாயார் ஊரவர்கள் கதறி அழுதார்கள்.

     

    அவன் வித்துடலாய் கண் முன்னே கிடந்தான். அது சிம்மான் தான்; என்பதனை யாரும் உடன் அடையாளம் காணவில்லை. உப்பு நீரில் கிடந்த அவனது உடல் நிறமும் மாறி முகமும் மாறியிருந்தது.

    தம்பி உன்ர நண்பன் தானே அடையாளம் தெரியேல்ல ஒருக்கா பார் ! என அழுதார்கள். ஏற்கனவே அவனும் நானும் ஒன்றாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட காயத்தின் அடையாளமும் அவனை என்னால் இனங்காண முடிந்தது.

     

    அன்றைய நாள் அவனது பிரிவினால் அவனை நேசித்தவர்கள் அவன்கூடப் பழிகியவர்கள் என அவனுக்காகக் கண்ணீர் விட்டழுது கொண்டிருந்தார்கள். அவனது வீட்டிலிருந்து வித்துடலை மக்கள் அஞ்சலிக்காக வல்வெட்டித்துறை வாசிகசாலையில் இரவு வைக்கப்பட்டது.

     

    அந்த இடத்திற்கே அவனது காதலியைத் தெரிந்த ஒரு வீட்டுகாரர் அழைத்து வந்திருந்தார்கள். அந்த நேரம் அவன் நேசித்த அவனது உயிர்க்காதலி உயிரற்ற அவன் உடலைக் காணும் போதும் அந்த மாலையை அழுதபடி அவனுக்கு அணிவித்த போதும் நான் கொண்ட துயருக்கு அழவேயில்லை. காதலின் மீதம் அவனுக்கான ஞாபகமாக அவனது கடைசி ஆசையாக அவளால் அணிவிக்கப்பட்ட மாலையின் பூவாசம் மட்டுமே நிரந்தரமானது. அவன் நித்தியமானவனாக வெற்றியுடன் துயின்று கொண்டிருந்தான்.

     

    இப்போதும் அந்த நாள் அழுத அந்தக் குரல்கள்கள் தான் ஒவ்வொரு இரவுகளும் வந்து போகும் நினைவுகளாகவுள்ளது. யாராலும் திரும்பி அழைத்துவர முடியாதவர்களின் இழப்புகளின் நினைவுகள் நிரந்தரமான துயரையே ஒவ்வொரு மாவீரரை இழந்தவர்களுக்கும் தந்துவிட்டுப் போனது. அந்த இழப்பின் வரிசையில் சிம்மான் இழக்காத மனவுறுதியோடு எங்களின் கைகளிலிருந்து எட்டாமல் போனான் மாவீரனாக மரணத்தை வென்றவனாக…..

    Sudaroli-2-600x799.jpg

    அவனை விதை குழியில் இறக்கி மண்போட்ட அவ்வேளையில் பலாலியில் நிலைகொண்டிருந்த எதிரியின் தளம் மீது கரும்புலிகள் தாக்குதல் அணி காவியமாகிக் கொண்டிருந்தார்கள். வெளிச்சங்களோடு வெடியோசையுடன் அதிர்ந்த வண்ணமிருந்தது.

    Lep-Sudaroli-600x849.jpg

    பூனகரி வெற்றியில் மீண்டும் நிமிர்ந்த தமிழர் வீரத்தின் உச்சம் பலாலியில் பேரொளியாய் கரும்புலிகள் எழுதிய காவியத்தின் வேர்கள் காற்றோடு சொன்ன சேதி காலமெல்லாம் தமிழர் வீரம் சொல்லிக் கரைந்து கொண்டிருந்தது.

    சிம்மான் தனது தாயகவிடுதலைக்காகத் தன்னைத் அர்ப்பணித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் அவனது கனவுகளை நெஞ்சில் சுமக்கின்றோம். இலட்சிய வீரர்கள் என்றும் வாழ்வார்கள். சிம்மானும் சுடரொளியாக ஜெகதீபமாக என்றும் கால    காலத்துக்கும்    ஏனைய    தாயக    விடுதலைக்காக    தம் இன்னுரையீர்ந்தவர்களுடன் இறவாமல் வாழ்ந்து கொண்டேயிருப்பான். எங்கள் நினைவோடும் கனவோடும் மாவீரர்களாய் குனிந்த தலைகளை நிமிர்த்தியெழ வைத்த வெற்றியின் கிரீடங்களாய்….

    மழை மேகம் துளியாகி…

    நினைவுப்பகிர்வு ….  
    - நிக்சன்.

    Email :- 2012.tamil@gmail.com (நிக்சன்)

     

    http://thesakkaatu.com/doc11294.html

    “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

  8. ஆயிரம் பச்சைப்புள்ளிகளை எடுத்த தமிழ்சிறி அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.மற்றும் 100எடுத்த சோழி அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்.

  9. களத்தில் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. பச்சைப்புள்ளிகள் பெறுவோருக்கான திரியொன்று இருக்கிறதென்றது தெரியும். ஆனால் பச்சைப்புள்ளிகளை எங்கே பாக்கிறதெண்ட விவரம் தெரிந்திருக்கவில்லை. நேற்றைய தெரிவில் தெரிவான எனது சிறுகதையொன்றை வாசித்த நண்பர் ஒருவர் இந்தத் திரியையும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதன் பின்னர் தான் இந்தத்திரியை வாசித்தேன்.

    என்னை நினைவு வைத்து ஊக்கம் தந்து உயர்த்திய கள உறவுகள் வாழ்த்திட்டு வரவேற்றுள்ளமைக்கு மிக்க நன்றிகள். இதுவரை நாளும் இந்தப்பக்கத்தை கவனிக்காமல் இருந்தமைக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.


    நேற்று இப்பிடி எழுதிப்போட்டு.....நானும் என்ரை பாட்டிலை நித்திரைக்கு போட்டன்.....இரவுமுழுக்க ஒரு கறுப்பன் கத்தியோடை என்னை திரத்திக்கொண்டுவாரமாதிரி கனவுவந்தது.....ஆரும் கனவுப்பலன் தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா :o

     

    அந்தக்கறுப்பனின் கத்தி உங்களை விரைவில் வந்தடையவுள்ளதாக உங்கள் கனவின் பலன் சொல்கிறது. எதுக்கும் நீங்கள் இரவில் யாழ்களம் தனிய வராமல் விடுவதுதான் நல்லம். :lol:
     

  10. எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்

    அக்டோபர் 21, 2013 | வீரவணக்க நாள்.   

    Esai-1-600x337.jpg

    || எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்.

    தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி நாள் 22.10.2007 ஆகும்.

    விடுதலைப் போராட்ட வரலாற்றின் அனுராதபுர வான்படைத்தளத் தாக்குதலில் காவியமான 21 கரும்புலி மறவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள்  இன்று.

    தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும்.

    எல்லாளன் ….! எல்லாளன் …..! எல்லாளன் …..!

    தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம்.

    தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

    Esai-2-600x337.jpg

    || வான்படைத் தளத்தினை சூட்டேரித்த தேசத்தின் புயல்களின் நீளும் நினைவுகள்….

    இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் -  தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

     

    http://thesakkaatu.com/doc10935.html

     

     

    ” எல்லாளன் பெயர் சொல்லி “

    ஏப்ரல் 16, 2013 | பாடல்கள்.   

    Ellaalan-Peyar-Solli.jpg

    இறுவெட்டு :  எல்லாளன் பெயர் சொல்லி

        

    பாடலாசிரியர்கள் : ” உணர்சிக் கவிஞர் ” காசி ஆனந்தன் , புரட்சி , புதுவை இரத்தினதுரை , செந்தோழன் , கு .  வீரா , அம்புலி

    இசை : தமிழக இசைக் கலைஞர்கள்

           

    பாடியவர்கள் :      எஸ் . பி . பாலசுப்ரமணியம் , திப்பு , மஞ்சு , முகேஷ் , கல்யாணி , மனோ , தீபன் சக்கரவர்த்தி , சத்தியன் , கிருஷ்ணராஜ் , தியானந்திரு , தினேஷ்

    வெளியீடு : தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம்  .

    குறிப்பு : எல்லாளன் திரைப்பட பாடல் ” தாயக மண்ணே ” பாடலும் இணைக்கபட்டுள்ளன

     

    முகவுரை

    அள்ளித்தின்று

    யுத்தத்தாயே

    ஆட்டுக்குட்டி

    அட சின்ன ராசா

    அனுராதபுரத்தில் உயிர்

    அனுராதபுரத்திலே

    மின்னலே பூ

    வானத்தில் ஏறி

    சிங்கள வான் படை

    நெருப்பு மூண்டு

    தாயக மண்ணே

     

    http://thesakkaatu.com/doc6241.html

  11. வெஞ்சமரின் வரிகள்

    ஏப்ரல் 8, 2013 | பாடல்கள்.   

    Vegnchamarin-Varikal.jpg

    இறுவெட்டு :  வெஞ்சமரின் வரிகள்

        

    பாடலாசிரியர்கள் : தமிழீழ கவிஞர்கள்

    இசை :  தமிழீழ இசைக்குழு

           

    பாடியவர்கள் : எஸ் . ஜி . சாந்தன் , ஜெயா சுகுமார் , திருமலைச்சந்திரன் , நிரோஜன் , வசீகரன் , இசையரசன் , மணிமொழி கிருபாகரன் மற்றும் பல பாடகர்கள்

    வெளியீடு : 2 ம் லெப் மாலதி படையணி – தமிழீழ விடுதலைப்புலிகள்.

     

    மாலதி எனும் போரணி

    கோப்பாய் வெளிக்காற்றில்

    இருளின் திசைகள்

    காவலரண் மீது

    மின்னல் இடி மழை

    தென்றல் தீயாய்

    வெல்லும் தலைவன்

    தோளின் சுமைகளில்

    கல்லறைகள் உங்களுக்காய்

     

    http://thesakkaatu.com/doc5078.html

  12. முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட 7 போராளிகளி​ன்….

     

    அக்டோபர் 9, 2013 | வீரவணக்க நாள்.   

    2nd-Lt-.malathi1-600x375.jpg

    || முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட 7 போராளிகளி​ன் வீரவணக்க நாள்.

    தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஏழு போராளிகளி​ன்  26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

    தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.

    2nd-Lt-.malathi-with-lttes-3-600x476.jpg

    2nd-Lt-.malathi-with-lttes-4-600x487.jpg

    || முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப் மாலதியின்  நினைவில் நீளும் நினைவுகள்…

    Muthal-Pen-Viththaakiya-Malathi1.jpg

    2ஆம் லெப். மாலதி 26 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

    Malathi-Padaiyani-copy-600x337.jpg

    Malathi-Ninaivil-Thesakkaatru-600x222.jp

    இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் -  தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

    || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

  13. காலம் எழுதிய வரிகளில் கப்டன் ரவி…!

     

    இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது.

     


    Kapdan-Ravi-Thesakkaru.jpg

    1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர்.

     

    ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை அலட்டலில்லை. அத்திபூத்தாற்போல ஏதாவது பகிடிகள் அப்படித்தான் அவரது சுபாவம். எப்போதுமே எதையோ கடுமையாய் யோசிக்கிறவர் போலவே இருப்பார். தனக்கு ஏதாவது தேவையென்றாலும் உடனே கேட்கிற பழக்கமில்லை. சாப்பாடென்றாலென்ன தேனீரென்றாலென்ன கையில் கொடுத்தால் மட்டுமே வாங்குவார்.

     

    அமைதியான அந்த முகமும் மெல்லவே கதைக்கிற அந்தக் குரலும் ஒரு வித்தியாசமான போராளியை எங்கள் ஊரில் உலாவ வைத்தது. அமைதியே உருவான அந்த உருவம் கருணையே வடிவான அந்தக் கண்கள் எப்போதும் தனது இலட்சியக்கனவையும் ஈழத்தின் விடியலையுமே கண்களில் சுமந்து திரிந்தது.

     

    சிலரை வருடக்கணக்காகச் சந்தித்திருப்போம் பழகுவோம். ஆனால் அவர்கள் மீதான கரிசனை அல்லது பாசம் ஒரு வழிப்போக்கரை சந்தித்தது போலவே இருக்கும். சிலர் காரணம் சொல்ல முடியாதபடி அவர்களுடனான பரிச்சயம் , உறவு சிலநாளாகவோ அல்லது சிலகாலங்களாகவோ இருக்கும்  ஆனால் நெஞ்சுக்குள் நிரந்தரமாய் இடம்பிடித்து விடுவார்கள். எங்கள் வாழ்வின் நீளத்தில் அவர்களது நினைவும் அன்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதுபோலவே றவியண்ணாவின் அமைதியும் எதையும் தனக்காக கேட்டுப் பெறாத குணமும் எல்லோரையும்விட றவியண்ணா மீதான அன்பை அதிகமாயிருந்தது.

     

    வீட்டில் சமைக்கப்படுகிற சிறப்பான  உணவுப்பண்டம் வரை ஒரு பங்கு றவியண்ணாவுக்காகக் காத்திருக்கும். அந்த அமைதியான மனிதனைக் காலம் பிரித்துவிடாதிருக்க சாமியிடம் பிரார்த்தனை  சத்தமில்லாத் தொடராய்…..!

     

    ஒருநாள் றவியண்ணா வராது போனாலும் றவியண்ணாவைத் தேடும் கண்கள். ரவியண்ணா எப்போதும் சாய்ந்திருக்கும் இலுப்பைமரம் கூட அந்த இலட்சிய வீரனை இதயத்தில் சுமந்திருந்தது. அந்து வீரன் எல்லா உயிர்களிடத்தும் செலுத்திய அன்பின் சாட்சியாய் இயற்கை கூட றவியண்ணாவுக்காய் காத்திருந்தது.

     

    ஓவ்வொரு போராளியும் ஏதாவதொரு பொருளை அல்லது தனது நினைவை மறக்காதிருக்க ஏதாவதொன்றை விட்டுச் சென்றது போல றவியண்ணாவும் விட்டுச் சென்ற ஞாபகங்கள் ஏராளம். அதில் ஒன்று றவியண்ணா எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல் ‘ஓ மரணித்த வீரனே’. இந்தப்பாடல் தியாகி.திலீபன் அவர்கள் மரணித்த நல்லூர் வீதியில் தியாகி திலீபன் அவர்களது அஞ்சலி நிகழ்வில் அதிகம் ஒலிக்கவிடப்பட்ட பாடல். அதையே றவியண்ணாவும் அடிக்கடி விரும்பிக் கேட்பார். சிறப்பான காரணம் ஏதாவது உண்டா என்பதை றவியண்ணா யாரோடும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதைக் கேட்டாலும் ஒரு புன்னகையால் சொல்லிவிடுகிற அல்லது மறைத்துவிடுகிற வல்லமையைக் கொண்டிருந்த அந்த விழுதின் நினைவுகளை எழுதிவிட சொல்லிவிட காலத்தாலும் முடியாத கதைகளை அந்த அமைதியான மனிதன் கொண்டிருந்தது அதிசயம்தான்.

     

    வோக்கி ரோக்கியையும் தனது துப்பாக்கியையும் எங்கேயிருந்தாலும் கழற்றியதையே காணவில்லை. வோக்கி ரோக்கி இரைச்சலோடு குரல்கள் வரும். மாமரத்தில் அல்லது ஏதாவதொரு உயரத்தில் ஏறிநின்று கதைக்கிற போது மட்டுமே வோக்கியை கையில் எடுப்பார்.

     

    துவக்குத் தவறி வெடிச்சா என்ன செய்வீங்கள் ? ஒருநாள் கேட்ட போது அந்த ஆயுதத்தின் பெறுமதியையும் அதன் தேவையையும் வளமை போல அமைதியான சிரிப்போடு ஒரு கதையாகவே சொல்லி முடித்தார். ஒரு ரவையும் ஒரு கைக்குண்டும் எத்தனை பெறுமதியானவை என்பதனை றவியண்ணா சொல்லும் வரை அறிந்திருக்கவில்லை. அப்படி எல்லாவற்றிலும் நிதானமும் கவனமும் மிக்க ஒரு அற்புத மனிதன்.

     

    தனது சொத்துக்களாக வைத்திருந்த சில உடுப்புக்களோடு ஒரு நாட்குறிப்புப் புத்தகம் சிவப்பு, நீலம் றொனோட் பேனாக்கள் , சில புத்தகங்கள் , சில ஒலிநாடாக்கள். சின்னம்மான் வளவுப் பெரிய பெரியபுளிமரத்தடியில் அந்தப்புத்தகங்களில் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்.

     

    சக போராளிகள் ஆளாளுக்கு அடிபட்டு கும்மாளமடிப்பார்கள் அமைதியாகச் சிரித்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். சிலர் பகிடிச்சண்டைகளில் கோபித்து ஆளையாய் பார்க்காமல் பேசாமல் இருந்ததைக் கண்டிருக்கிறேன் ஆனால் றவியண்ணா அப்படி யாருடனும் கோபித்துக் கதைக்காமல் இருந்ததைக் கண்டதே நினைவில் இல்லை.

     

    ஒரு மழைநாள்.  பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து பஞ்சுமாமா வீடுவரை வெள்ளம். பெஞ்சன் வடலிப் பற்றைகளில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு வெள்ளத்தில் இருக்கிறதென்று வதனிமாமி சொல்லியிருந்தா. ரியூசன் முடிஞ்சு பிள்ளையார் கோவில் மடத்தடி வரையும் போய் அதனைத் தாண்டிப்போகப் பயத்தில் கொஞ்சம் முன்னே போவதும் பின்னே நிற்பதுமாக நிற்க ஜீன்சை முளங்காலளவு மடித்துவிட்டு நடந்து வந்தார் றவியண்ணா. என்ன பாம்பு வருமாமோ ? எல்லா வீரமும் போய் பாம்புதான் காலைச்சுற்றும் போலிருக்க அந்தப் புலிவீரன் அதெல்லாம் சும்மா வாங்கோ நான் வாறன் என வந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

     

    வதனிமாமி சொன்ன கொம்பேறிமூக்கன் பாம்பு பின்னர் ஒருநாள்; நல்லாரப்பாவால் அடிக்கப்பட்டு ஒன்றரை மீற்றர் நீளமான பெரிய உருப்படியான அந்தப் பாம்பை பெஞ்சன் வடலி இலுப்பைக்கு மேற்கு வேலிக்கரையை அண்டியிருந்த முட்கிழுவையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த வீதியால் நடந்து வந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமெடுக்கிற ஓட்டத்தையும் சயிக்கிளையும் பார்த்து அதேயிடத்தால் எந்தப்பயமும் இல்லாமல் சென்று வரும் றவியண்ணா சொல்லுவார். செத்தபாம்பு உயிர்க்காது….!

     

    இப்படிப் பல நினைவுகள் றவியண்ணா பற்றி….! பயத்தையகற்றிய பாரதியாய் தன் பார்வையால் , சிரிப்பால் , தன் பேச்சால் தந்த துணிச்சலை என்றும் மறக்க முடியாத மனிதனாய் எங்கள் ஊருக்குள் உலவிய றவியண்ணாவும் அவரது தோழர்களும் ஒருநாள் எங்கள் ஊரைவிட்டுப் போனார்கள்.

     

    போகும் போது ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த நினைவுப் பொருட்களில் ஒன்று றவியண்ணா போட்டிருந்த கறுப்பு பிளாஸ்டிக்காப்பு. எல்லோரோடும் அமைதியாகவே போனார் றவியண்ணா. சொல்லில் வடிக்க முடியாத துயரை அந்தப்பிரிவு தந்து போனது. ஊரே வெறிச்சுப் போனது போல அதற்குப் பிறகு வந்த நாட்கள் அவர்களில்லாமல் கலகலப்பை இழந்த உணர்வு.

     

    திரும்பி வருவேன் எனச்சொல்லிப் போனவர்களுள் சிலர் மட்டுமே வந்து போனார்கள். றவியண்ணா எங்களிடம் வரவில்லை. 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலமது. காற்றில் பறந்துவிடுமாப்போல அந்த மெல்லிய உருவம் அணிகிற சேட்டிற்குள் ஆயிரம் கிலோ காற்றை அடைத்துவிட்டது போல காற்றள்ளி நிற்க , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் வீதியில் சில தடவைகள் வேகமாய் ஓடும் மோட்டார் சயிக்கிளின் சாரதியாய் யாரோ ஒரு போராளியை ஏற்றியபடி அல்லது தனியாகப் போனதைக் கண்டிருக்கிறேன். இன்னும் உங்களையெல்லாம் மறக்கவில்லையென்பதைச் சொல்லுமாப் போல ஒரு பன்னகை , ஒரு கையசைப்பு அதுவே றவியண்ணாவின் அன்பின் வெளிப்பாடாக அமையும்.

     

    அப்போதெல்லாம் புலனாய்வுப்பிரிவு என்பதன் அர்த்தமே புரியாது. ஆனால் றவியண்ணா ஒரு புலனாய்வுப்போராளியென்றும் அவர் புலனாய்வுப்பணியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

    புலனாய்வாளனுக்குரிய அனைத்துத் திறமைகளையும் அந்த வீரன் தனக்குள் ஒளித்து வைத்திருந்த திறமைகளை வெளியார் யாருமே காணாது காத்து ரவியண்ணா படைத்த வெற்றிகளை சாதனைகள் பலவென்று சொல்வார்கள். சாதனைப்புலியொன்று சத்தமில்லாமல் எங்களோடு வாழ்ந்து எங்கள் ஊரோடு உறவாடி எங்களைப் பிரிந்து போனது ஒரு பொழுது…..!

     

    காற்றள்ளிக் கொண்டு போகும் வேகத்தில் போகும் றவியண்ணாவின் மோட்டார் சயிக்கிளில் றவியண்ணாவைக் கொண்டு போன காலத்தின் சதி நடந்த தினம் 02.09.1990. அன்று றவியண்ணாவின் கதையை அவர் ஓடித்திரிந்த மோட்டார் சயிக்கிளில் வந்தே காலன் முடித்து வைத்தான். கப்டன்.ரவியாக எங்கள் ரவியண்ணா இரத்தத்தில் தோய்ந்து மரணித்துப் போனார்.

     

    றவியண்ணாவின் போராளித் தோழனொருவனே அந்தத்துயரச் சேதியைச் சொல்லிவிட்டுப் போனான். சாவின் வலியை எங்களின் குடும்பத்தில் ஒரு உறவாய் அண்ணாவென்றழைக்கும் உரிமையைத் தந்த அந்த மாமனிதனை இழந்த துயரத்தை கண்ணீரால் கரைத்த துயரம் இன்றும் அந்த மாவீரனை மனக்கண் முன்னே நிறுத்தி வைத்திருக்கிறது.

     

    தாயகக்கனவோடு தமிழின விடுதலைக்காகவே ஓயாது உழைத்த அமைதியே உருவான றவியண்ணாவின் மூச்சுக்காற்று அதே கனவோடு எங்கள் மனங்களிலும் தாயக மண்ணோடும் கலந்து போனது.

     

    தையிட்டி மண்ணில் திரு.திருமதி.மாசிலாமணி தம்பதிகளின் மடியில் தவழ்ந்த ரவீந்திரன் என்ற குழந்தையை ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு புலனாய்வுப்போராளியாய் ஒரு சிறந்த போராளியாய் எமக்குத் தந்து ஈழவரலாற்றில் கப்டன் ரவி என்ற கௌரவத்தோடு பதிவு செய்து கொண்டது.

     

    2003இல் ஊர் போன போது றவியண்ணா அதிகம் நடந்த எங்கள் பிள்ளையார் கோவில் மேற்கு வீதியால் நடந்து நான் பிறந்த வீட்டைப் பார்க்கப் போனேன். பெரிய வாகனம் போகும் அளவு பெரிய வீதி ஒன்றையடிப் பாதையாய் ஒடுங்கியிருந்தது. றவியண்ணா  , றோயண்ணா , நெல்சம்மான் ,  அப்பாண்ணாவென பல போராளிகள் உலாவிய அந்தத் தெரு பற்றைகளாலும் மதிவெடிகளாலும் நிறைந்திருந்தது.

     

    கனவுகளில் பிள்ளையார் மேற்குவீதி கண்ணில் தெரிகிற போது றவியண்ணாவும் அந்த வீதியில் வருவது போலவே பலமுறை கனவுகள் வந்திருக்கிறது. காலம் எங்கள் றவியண்ணாவையும் மறக்காமல் தன்னோடு கொண்டு செல்வதை அந்த வீதியில் மிஞ்சியிருந்த எச்சங்கள் நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

     

    காலம் 2003…,ஆடிமாதம்…..,

    வன்னியில் மாவீரர்களின் நிழற்படங்கள் அவர்களது ஞாபகங்கள் தரும் பொக்கிசங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் காப்பகத்திற்குச் சென்ற போது பலரது படங்கள் கேட்டிருந்தேன். நெடுநாள் தேடிய கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசம் போல ஒரு போராளியிடமிருந்து ஒரு தொகை மாவீரர்களின் படங்கள் கிடைத்தது. 1981 – 2002 வரையில் புலனாய்வுத்துறையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் படங்கள் யாவையும் ஆவணப்படுத்துமாறு ஒரு போராளித் தோழன் இறுவட்டுக்களில் பதிவு செய்து தந்தான்.

     

    கிடைத்த படங்களை ஒருமுறை பார்த்துவிடும் ஆவலில் சிலவேளை நான் தேடுகிற படங்கள் அதில் பதிவாகியிருக்கலாமென்ற நம்பிக்கையில் அந்தத் தோழனின் மடிக்கணணியை வாங்கி அதில் ஆண்டுவாரியாகத் தேடினேன். நம்பிக்கை பொய்க்காது றவியண்ணாவின் படமும் அந்த இறுவட்டில் பதிவாகியிருந்தது. மீண்டும் றவியண்ணாவை கண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளில் றவியண்ணா மீண்டும் பிறந்து வந்திருப்பது போல ஓர் சந்தோசம்….!

     

    வருடாவருடம் றவியண்ணாவின் பிறந்தநாள் , நினைவுநாள் ,மாவீரர்நாள் நாட்களில் நினைவுகளைத் தந்து சென்ற பலரது படங்களோடு றவியண்ணாவின் படத்தின் முன்னாலும் ஒரு மெழுகுவர்த்தி எரிந்தபடியிருக்கிறது.

    -  சாந்தி ரமேஷ்.

    http://thesakkaatu.com/doc9272.html

    • Like 1
  14. வீரத்தமிழ் தேசத்திலே பாட்டிசைத்த கானக்குயிலே எங்கே சென்றாய் சிட்டு எங்கே சென்றாய் ?

    நீயிசைத்த கானமெல்லாம் வானலையில் கேட்குதைய்யா உன்நினைவு முட்டுதைய்யா தொண்டைக்குள்ள கட்டுதைய்யா …..

    கண்ணுறங்கும் நேரத்திலும் உன் வீரத்தமிழ்ப்பாட்டு காதுகளை எட்டுதைய்யா சிந்தைதனை தொட்டதைய்யா வாராயோ சிட்டு இங்கு வாராயோ பாடாயோ மீண்டும் வந்து பாடாயோ ?

     

    http://youtu.be/3lyUE8gdUTo

  15. மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள்

     
    annalingam04.jpg

    காற்றாய் வருகிறாய்

    தேசக்கனலாய் திரிகிறாய்…!

    காற்றலையின் இளையெங்கும்

    கவிதையாய் வாழ்கிறாய்…!

    ஊற்றாய் இசையின் மூச்சாய்

    உலகெங்கும் உலவித் திரிகிறாய்….!

    எங்கள் காதுகளில் உன் கானம்

    தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..!

    ‘மேஜர் சிட்டுவாய்’

    தமிழ் வாழும் உலகெங்கும்

    தமிழிசை வாழும் திசையெங்கும்

    தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..!

    அரும்பு மீசைக்கனவறுத்து

    ஆழ்மனக் காதல் நினைவறுத்து

    ஈழக்காதல் இதயத்தில் சுமந்து

    இலட்சியக்கனவோடு போன புலியே….!

    வருவாயொரு பொழுது மீண்டும்

    பாடியும் பகிடிகள் விட்டும்

    பல கதைகள் பேசியும்

    கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….!

    இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு

    மீளும் நினைவோடு கரைகிறோம்

    உன் தோழமைகள் நாங்கள்

    உன்னை மீளவும் நினைவேற்றி….!

    01.08.2013

    – சாந்தி யேர்மனி –

    http://chiddu.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-16%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/#more-148

    http://mullaimann.blogspot.de/2013/08/16.html

     

  16. கரும்புலிகள் சிறப்பிதழ் நன்றியோடு தேசக்காற்று....!

     

    தேசக்காற்று இணையத்தில் சென்று மாவீரர்களின் விபரங்கள் நினைவுகள் பகிர்வுகள் யாவற்றையும் பார்க்கலாம். இதுவரையில் வெளிவராத பல்வேறு வகையான தேசத்தின் நினைவுகள் வீரம் செறிந்த விடுதலை வரலாற்றின் பாதையில் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான ஒரேயொரு இணையத்தளம்....!

    http://thesakkaatu.com/doc1767.html

     

    கரும்புலி நாள் சிறப்பிதழ்

    -----------------------------------------------------

     

    தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.

     


    அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்

     

    நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.

     

    தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.

     

    இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு சிறீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீரவரலாறானார்கள்.

     

    2007ஆம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர்சூட்டப்பட்ட கரும்புலித்தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த அதேவேளை, 2009ஆம் ஆண்டு வான்கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.

     

    முள்ளிவாய்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீரவரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புதமனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

     

    http://thesakkaatu.com/doc1767.html

    • Like 1
  17. வாழ்த்திய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.


    t1213peninsula-ice-cream_feat2_2.jpg

     

    யாழ் களத்தின் இரண்டு முக்கிய வி.ஐ.பி. க்களான....
    சாந்திக்கும், தமிழ்ச்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :) 


     

    நமக்கு பிடிச்ச ஐஸ்கிறீமை படமாகத் தந்த தமிழ்சிறி நன்றிகள். அடுத்த முறை உங்கள் நகரம் வரும் போது நிச்சயம் கதவு தட்டப்படும் படத்தில் போட்ட ஜஸ்கிறீம் தந்தா சரி. :lol:

     


    சாந்தி அக்கா(?)வுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

     

    அடைப்புக்குறியில் கேள்விக்குறிபோட்ட அண்ணாச்சி ஒரு சம்பிரதாயத்துக்குத் தான் அக்கா எண்டு சொல்றீங்கள். ஆனால் எனக்கு நீங்க அண்ணாச்சி அதை மறக்கப்படாது கண்டியளோ ? :D
     

  18. அக்கா நீங்களுமா :D .................நான் ஏற்கனவே நொந்துபோய் உள்ளேன் ......... :icon_idea: 

     

    லைக் போடேக்க உந்த பயம் இருந்திருக்க வேணும்.சரி இந்தமுறை மட்டும் மன்னிப்பு தருகிறேன்.

    :lol:

     

     

  19. சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

     



    சுபேஸ் நான் லைக் போட்டதை என் மனைவி மட்டும் பார்க்ககூடாது ............... :D 

    உந்த லைக்கை நான் போட்டுக்குடுக்கமா விடப்போறதில்லை. சூரியன் மிது இடிமழை பொழியும் காட்சியை நெதர்லாந் கடலலைகள் காவிவரும் அழகை காணாமல் விடப்போவதில்லை. :lol:

     



    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுண்டல்... கல்யாணம் மட்டும் கட்டீடாதை.. இப்படியே இரு.. அப்பத்தான் இன்னும் பல பிறந்த நாட்களை சந்தோசமாக கொண்டாடலாம்.. :D

     

    ஏனடா தம்பி இப்பிடி நல்லநாள் அதுவுமா சுண்டலின்ரை வாழ்க்கையில கலியாணகாற்று வீசட்டுமெண்டு வாழ்த்தாமல் இப்படி..... :lol:

     

     

  20. இந்த வயதிலும் வீர நடை போடுவது, மிகப் பெரிய விசயம்! :D

    குமாரசாமிக்கு வயது போட்டெண்டு சொல்ல வாறியளோ புங்கை ? :lol:

    எண்ணமே வாழ்வு. என்றென்றும் இளமை.

     

    மேலும் பல பச்சைப்புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் குமாரசாமி.

     

  21. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

     

    யாயினியின் உதவியால் 3பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை முடித்துள்ளார்கள். கடந்த வருடம் முதல் ஒரு மாணவி யாயினியின் உதவியால் படித்துக் கொண்டிருக்கிறார். தன்னை வெளிப்படுத்த வேண்டாமென யாயினி கேட்டு உதவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய கருணையாளர்களை ஒளித்து வைக்க வேண்டாம் எல்லாரும் அறிய வேண்டும் என்பதால் இங்கு தெரியப்படுத்தியுள்ளேன். நேசக்கரத்தின் வளர்ச்சியிலும் பயனாளிகளின் வளர்ச்சியிலும் யாயினியின் பங்கு அளப்பரியது.

    எல்லாவற்றுக்கும் நன்றி தங்கையே.

     

    depositphotos_6406022-Round-birthday-cak

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.