ரோசாப்பூக்களில் இருந்து, நமக்கு பன்னீர், அத்தர், தைலம் போன்றவை கிடைக்கின்றன. ரோசா இதழ்களைத் தகுந்தமுறை யில் வடிகட்டிப் பன்னீர் பெறப்படு வது முதன்முதலில், இஸ்லாமிய வேதியியலாளர்களாலேயே
அறிமுகப்படுத்தப்பட்டது.
கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளில் ரோசாவின் நறுமணத்திற்காகவும், மருத்துவம், உண்ணும் பதார்த்தங்களில் சேர்ப்பதற்காகவும் பயன்படுத்தி னர். பாரசீகம், பல்கேரியா, மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அத்தர் தயாரிக்கப்பட்டுவந்தன.
ஈரானிய சமையலிலும் பன்னீர் பயன்பாடு, சைப்ரஸ், ஈரான், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் எங்கும் ரோசாச்சாறு கலந்த பொருட்கள்தான்.
மதவேறுபாடின்றியும், சமய நிகழ்வு களில் பன்னீரைப் பயன்படுத்து
கின்றனர். லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீன் நாடுகளில், எலுமிச்சைச் சாறுடன் பன்னீரும்
கலக்கப்படுகின்றது.
இந்தியாவில், உ.பி கனோஜ் நகரில் இவையனைத்தும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.
அங்கு சுற்றுப்புற விவசாயிகள் நாள்தோறும் தங்களது நிலப்பூக்க ளை ஆலைகளுக்குக் சேர்ப்பர்.
-திருப்பூர். இரா. சுகுணாதேவி.-