-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
“I can never read all the books I want; I can never be all the people I want and live all the lives I want. I can never train myself in all the skills I want.
unknown
- Show previous comments 6 more
-
செல்லம் அன்ரிநெடுந்தீவு என்றால் கற்கள் கொண்டு அமைக்கப்படும் வேலி முறை என்றும் அதிக சுற்றுலா இடங்கள் உள்ள அழகான தீவு என்றும் எங்கு திரும்பினும் கோவில்களும் ஆலயங்களும் நிறைந்து பேசப்படும் உயிருள்ள தீவு என்றும் கூறப்படும் அன்பும் உபசரிப்பும் பரிவும் நிறைந்த இலங்கையின் தலைத்தீவே நெடுந்தீவாகும். சிலருக்கு நெடுந்தீவு என்று சொன்னதும் நினைவில் வருவது குமுதினிப்படகும் அதன் படுகொலை நிகழ்வுகளுமே ஆகும்.°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°நெடுந்தீவின் நானுணர்ந்த இறங்குதுறையில் இவ்வாறான கொடூர காப்பரங்கள் இல்லா காலமது. தீவை விட்டு வெளியேறும்போது செல்லம் அன்ரியிடம் தேனீர் குடித்து சென்ற நேரங்களில் அவர் முகத்தில் தோல் சுருங்கவில்லை. இதே சிரிப்பும் இதே உபசரிப்பும் அன்புகலந்த உண்மை உறவாடலுமே அன்ரியிடம் இருந்தது. யெற்றி கடலுக்கு சிப்பி பிறக்க போகும்போது அன்ரி கண்ணில படாம போக முடியாது. ஆனா போறத தடுக்கமாட்டா கூடவே தானும் வாறன் என்டு நெடுந்தீவின் நீண்ட கதைகளை சொல்லும் ஓர் பொக்கிஷம். கிழக்கு சனசமூக நிலையத்தில் புத்தகம் எடுக்க போறப்போ அன்ரி வீட்டு மதிலில சைக்கிள சாத்திட்டு அன்ரி இத பாத்துக்கொள்ளுங்க என்டா வரும் மட்டும் நிக்கும் காவல் தெய்வம் செல்லம் அன்ரி.இன்னாரின் மகன் என்று சொன்னா அம்மா, அம்மாச்சி, மாமா, பெரியம்மா, என தனக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையிலான நீண்ட கருத்தாடல்களை கூறுவதுடன் அதே தேனீர் மற்றும் பிஸ்கட்டுக்களுடனும் முருங்கைக்காய் பார்சலும் சுற்றி வழியனுப்பும் நல்உள்ளம் செல்லம் அன்ரி. கண்டதும் நலம் விசாரிப்பது தொடக்கம் பாசத்துடன் நிறைந்த தங்குமிடங்களையும் வழங்கிய கொடை வள்ளல் 🩵.ஊர்பற்றியும் உலகு பற்றியும் நாட்டு நடப்புக்களையும் தெரிந்ததை பிடித்தவர்களுடன் பகிரும் நடமாடும் பத்திரிகை செல்லம் அன்ரி. இறுதியாக போடப்படும் வீதீகளின் உயரம் தரம் பற்றி தனக்கு தெரிந்ததை எடுத்து கூறியதுடன் சிவனாலயம் கட்டுறாங்க நீயும் அத பாக்க விரும்பினா இன்னைக்கு வா என்ற செல்லம் அன்ரி..இன்று இல்லை"வாழும் காலத்தில் அன்பை கொடுத்தீர்நல் உறவை வளர்த்தீர்..பேசும் மொழிகளிலே உலகை வரைந்தீர்என் உள்ளமதில் எப்போதும் நிற்பீர் தாயே.."°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°நெடுந்தீவு என்றால் குமுதினியின் கதை சொல்லும் செல்லம் அன்ரியின் இறப்பு கூட இனி நெடுந்தீவில் ஆண்டாண்டு கதை சொல்லும்.
-
மார்ச் மாத ஆனந்த விகடனில் வெளியான சின்னக்கிளி.குட்டியப்பன் சிறுகதை."குட்டியப்பனை அந்த வீடு சுமந்தது. அந்த வீட்டை குட்டியப்பன் சுமக்கும் வயதில்தான் வேட்டையும் அவன் வாழ்விற்குள் வந்தது. சிலோனிலிருந்து கப்பலில் தூத்துக்குடி வந்த ஒரு வெள்ளைக்காரனிடம் தாத்தா வாங்கி வைத்திருந்த துப்பாக்கிதான் குட்டியப்பனை விளையாட்டு சாமான்களை விட அதிகம் ஈர்த்தது.இருளில் ஒளிரும் கண்களை வைத்தே அது வெளிமானா அல்லது காட்டுப்பூனையா என்பதை சொல்லிவிடும் அளவிற்கு வேட்டையில் தேர்ந்திருந்தான். அதிகாலை வீடு வரும்போது ஜீப்பின் பின்புறம் பெரியதொரு சாக்குப்பையில் உருப்படிகளை சுருட்டிக் கொண்டுவருவான், கூடவே துணைக்குஅவனது சேக்காளியில் ஒருவனும் வருவான். காட்டுப்பன்றி, விருவு, மரநாய், முயல் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். ஆச்சிதான் அத்தனையும் சமைத்துக்கொடுப்பாள். குட்டியப்பனுக்கு விருவுக்கறி என்றால் உயிர். அதனை நன்றாக சுத்தம் செய்து வறுத்துக் கொடுத்தால் சோற்றைக்கூட துறந்துவிட்டு விருவுக்கறியை ஒரு பிடிபிடிப்பான்."மேலும் வாசிப்பதற்கான சுட்டி முதல் பின்னூட்டத்தில்.