-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
300 ஏக்கர் பரப்பளவில் ஒரு வனத்தை உருவாக்கியுள்ள மணிப்பூர் நபர்!
மொய்ரெங்தெம் லோயா மருத்து விற்பனை வேலையை ராஜினாமா செய்துவிட்டு மணிப்பூரின் புன்ஷிலோக் பகுதியில் 17 ஆண்டுகள் செலவிட்டு காட்டை உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் மனித நடவடிக்கைகளால் காடுகள் அழிந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமேசானில் காட்டுத்தீ ஏற்படுகிறது. இதற்கு விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் வணிக பங்குதாரர்களே காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் பலர் இத்தகைய நிலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
மும்பையின் ஆரே வனப்பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான கார் நிறுத்தம் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட அனுமதியளிக்கப்பட்டதால் இந்த வனப்பகுதியைப் பாதுகாக்க மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறுகிறது. பல தனிநபர்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களித்து மற்றவர்களுக்கும் உந்துதலளிக்கின்றனர்.
மணிப்பூரைச் சேர்ந்த மொய்ரெங்தெம் லோயா, லங்கோல் மலைப்பகுதியில் உள்ள புன்ஷிலோக் காட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார். 45 வயதான இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றவர்களின் உதவியின்றி தனிநபராக இதைச் செய்துள்ளார். ஏஎன்ஐ உடனான உரையாடலில் கூறும்போது , “இன்று இந்த காட்டின் பரப்பளவு 300 ஏக்கர். இங்கு 250 வகையான செடிகளும் 25 வகையான மூங்கிலும் வளர்கிறது. இங்கு பல்வேறு பறவைகளும் பாம்புகளும் காட்டு விலங்குகளும் உள்ளன,” என்றார். மொய்ரெங்தெமிற்கு சிறு வயது முதலே செடிகள் மற்றும் மரங்கள் மீது ஆர்வம் இருந்து வருகிறது. ”நான் என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துத் திரும்பியபோது என்னுடைய பகுதியில் இருந்த காடு முழுவதும் அழிந்திருந்ததைப் பார்த்தேன். சிறு செடிகள் மட்டுமே இருந்தது.
இதைக் கண்டு நான் அதிர்ந்தேன். சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற ஆர்வத்தை இதுவே தூண்டியது,” என்றார். மொய்ரெங்தெம் விரைவிலேயே மருந்து விற்பனை வேலையை ராஜினாமா செய்துவிட்டார். புன்ஷிலோக் பகுதியில் ஒரு சிறு குடிசையை கட்டி வாழத் தொடங்கினார். சுமார் ஆறாண்டுகள் அங்கு தங்கி மூங்கில், ஓக் மரம், அத்தி, மாக்னோலியா, தேக்கு, பலா என பல வகையான மரங்களை நட்டுள்ளார். எனினும் இது எளிதாக இருக்கவில்லை.
உள்ளூரில் விறகு சேகரிப்பவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்களிடம் இருந்து மொய்ரெங்தெம் கடும் எதிர்ப்பை சந்தித்தார். மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சேதங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றினார்.
மொய்ரெங்தெமின் முயற்சிகள் முதன்மை தலைமை பாதுகாவலர் கெரெய்ல்ஹோவி அங்கமி உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றது. கெரெய்ல்ஹோவி கூறும்போது, ”அவரது முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். சுற்றுச்சூழலை பாதுகாத்து காடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
மற்றவர்களும் காடுகளை பாதுகாத்து மீட்டெடுக்க ஊக்குவிக்கிறோம்,” என்றார். மணிப்பூரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி வாலண்டினா எலங்பம் வளர்த்து வந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டபோது அவர் அழுத வீடியோ வெளியானது. இதனால் இந்த ஆண்டு துவக்கத்தில் மணிப்பூர் முதலமைச்சர் பைரன்சிங் அவர்களால் பசுமை மணிப்பூர் திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டு தலைப்புச் செய்திகளில் இவர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read more at: https://yourstory.com/tamil/manipur-man-who-created-forest-of-300-acres?fbclid=IwAR3NKB46W95IiDeJtJD40s51j8_O4Oti4aQi1p3giQG1J9bd5IK1tPS1oV8