சீட்டு .........(சுஜாதாவை மிகவும் யோசிக்க வைத்த சிறுகதை) ~
மூலக்கதை நன்றி: (The Lottery) Shirley Jackson , New Yorker
சுஜாதா தரும் கதைச்சுருக்கம் :
ஒரே ஒரு சிறுகதையால் உலகப் புகழ் பெற்றவர் என்றால் அமெரிக்காவைச் சேர்நத ஷர்லி ஜாக்ஸன் தான்(1919-1965)
ஷர்லி ஜாக்ஸன் எழுதிய 'லாட்டரி' எனும் நிஜமாகவே சிறிய சிறுகதை பலமுறை தொகுக்கப்பட்டு பலமொழிகளில் பெயர்க்கப்பட்டு நாடகமாக, டெலிவிஷனாக ஏன் பாலே (Ballet) நடனமாகக்கூட நடிக்கப்பட்டு பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட இந்தக் கதை முதலில் 1948ல் வெளிவந்த போது அமெரிக்க நாடே பலவிதங்களில் கண்டனம் தெரிவித்து அதை பிரசுரித்த நியுயார்க்கர் பத்திரிகையை கண்டபடி திட்டினார்கள் கதை என்ன?
ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு சாதாரண நாளில் ஒரு அசாதாரண நிகழச்சி நடைபெறுகிறது அன்றுதான் அந்த கிராமத்தின் புராதன வழக்கப்படி வருடாந்திர லாட்டரி நடைபெறவேண்டும அதிகாலையிலேயே கிராம மக்கள் அனைவரும் கூடி உற்சாகமாக எதிர்பார்க்க இன்று லாட்டரி யார் பெயருக்கு விழப்போகிறது என்று விவாதங்களிடையே ஒரிருவர் இந்த பழக்கம் இன்னும் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கிளப்ப, பழைய மனிதர்கள்' சும்மாரு காலம் காலமாக வரும் பழக்கம்' என்று அதட்ட, இறுதியில் மைதானத்தின் நடுவே ஒரு ஸ்டூலில் ஒரு கருப்புப் பெட்டி வைக்கப் படுகிறது.
நடுவர் நியமிக்கப் படுகிறார் . அகர வரிசைப்படி கிராமத்தின் ஒவ்வொரு குடுமபத்தற்கும் ஒரு பிரதிநிதி வந்து அந்தப் பெட்டியிலிருந்த சீடடு எடுத்து பிரிக்காமல் காத்திருக்கிறார்கள் எல்லோரும் எடுத்த பின் அவரவர் சீட்டை பார்ததுக் கொள்கிறார்கள் வெள்ளைச் சீட்டு கிடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.ஒரே ஒரு சீட்டில் மடடும் ஒரு கருப்புப் புள்ளி இருக்கிறது அது இந்த வருடம் திருமதி ஹட்சின்ஸனுக்கு வருகிறது "சீக்கிரம் முடித்து விடுங்கள் "என்கிறார் கிராமத்துப் பெரியவர்.
நடுவே ஒரு கற்குவியல். ஆளுக்கொரு கல் பொறுக்கிக் கொள்கிறார்கள் சீட்டு விழுந்த அபாக்கியப் பெண்மணி "இது அநியாயம்"என்று கதறி மைதானம் நடுவே வந்து நிற்க, முதல் கல் வந்து அவள் மண்டையில் படுகிறது அதன் பின் அவர்கள் அவளை கல்லடித்துக கொல்கிறார்கள்...
=================
இந்தக் கதையைப் பற்றி சுஜாதா:
முற்றிலும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி முடிவைக் கொண்ட இந்தக் கதை ஆயிரக்கணக்கான வாசகர்களை சங்கடம் பண்ணியது. இந்தக் கதையின் ஆழக்கருத்து என்ன என்று பலபேர் யோசித்திருக்கிறார்கள்
ஆசிரியையே கேட்டபோது "என்ன என்று விளக்கம் கூறுவது? கதையில் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று விளக்குவது கஷ்டம். ஒரு மூர்க்கத்தனமான புராதனப் பழக்கத்தை தற்காலத்தில் என் சொந்த கிராமததில் அமைத்து வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இன்றைய தினங்களின் அர்த்தமில்லாத வன்முறைகளையும் அவவரவர் வாழ்க்கையில் உள்ள மனிதாபிமானமற்ற செயல்களையும் சுட்டிக் காட்ட முயற்சித்தேன்" என்றார்
' பாலம் 'என்கிற கதை எழுதியபோது எனக்கு சிறிய அளவில் இந்த மாதிரியான ஒரு எதிர் விளைவு ஏற்பட்டது .குறிப்பாக கோவையிலருந்து ஒருவர் ' அந்தக் கதையைப் படித்ததும் உன்னையே கொல்ல வேணும் போலிருக்கிறது வரவா?" என்று கேட்டு எழுதியிருந்தார்.