Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8648
 • Joined

 • Days Won

  13

Everything posted by யாயினி

 1. இன்று மணம் தெரியுது.சுவை தெரிய வாய்ப்பு குறைவு, ஏதோ மாத்திரை கடிச்சு சாப்படுற மாதிரி தான் தெரியுது.சிறி அண்ணா.
 2. நான் வந்து இந்த தொற்றிலிருந்து சற்று விடுபட்டு இருக்கிறேன்..ஆனாலும் எனக்கு நிறைய வலி இருக்கிறது.ஒண்ணும் சாப்பிட பிடிக்க இல்லை.நித்திரை குறைவு.இன்று ஐந்தாவது நாள்.என்னைப் பிடித்த வருடத்தின் முதல் கஸ்ர காலம்.
 3. இவர்கள் இன்னும் ஒரு சில யூரிப்பெர்சையும் போய் சந்திச்சு எல்லாம் இருக்கிறார்கள்.அதுவும் யூடியூப் இருக்கிறது தானே..எங்கள் மக்கள் எப்போதும் ஆடம்பர விரும்பிகள் தானே, அதன் உச்சக் கட்டம் தான் இது.
 4. கடம் உமாசங்கர் குழுவினர் வழங்கும் 'நாத்ப்ரம்மம்'.பொங்கல் சிறப்பு நிகழ்வு.
 5. அனைத்து உறவுகளுக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
 6. இவ்வளவு நாளும் பயம் குறைந்த நிலைப்பாட்டோடு பிரச்சனை சொல்லி திருத்தி கொண்டோம்.இந்த தாத்தா போட்ட லிங் பார்த்தப் பிறகு..அய்யோ வேணாம் என்று போச்சு..இனி என்ன கேக்க தோன்றினாலும் இந்த லிங் தான் கண்ணுகக வரும்.
 7. Worst and worst உட்கார்ந்தா வலி,நிண்டா வலி, நித்திரை இல்லை.வேணாம் என்று போகுது.‌ .ஏலவே வீக்கானவர் எண்டதால் அப்பிடித்தான் இருக்கும் எண்டு சொல்கிறார் குடும்ப நல வைத்தியர்.
 8. இதில் உப்பு,புளி,காரம் ஒண்ணும் போட இல்லை..ஏன் தேனீர் கூட எடுக்க ஏலாமல் இருக்கு... அனைவருக்கும் நன்றி
 9. யாழிலும் ஒராள் குழப்படி கூட என்று கடசி 10 நாட்கள் ஐசுலேசனில் இருக்க சொல்லியாச்சு
 10. எனக்கு மூன்றாம் ஊசி போட்டு ஒரு கிழமைக்கு பின் காரணமே தெரியாமல் நல்லா வருத்தம் வந்துட்டு..எழும்பவே எலாமல் இருக்கிறது.
 11. ஊரில் வளர்ந்த பிள்ளைகள் ஏன் பெற்றோரிடம் ஒழுங்காக அடி வாங்கிறவே என்று இப்போது தான் விளங்குகிறது,.. ஆழ்ந்த இரங்கல்கள்
 12. நானும் ஒருக்கா செக் பண்ணி பார்ப்பம்..ஆ நான் ஸ்டில் இருக்கிறன் யாழில்...சோ என்ன பிரச்சினையாக இருக்கும்.தானியங்கி தள்ளி விட்டுப் போட்டுது போலும் உடையார் அண்ணா ..
 13. இது இங்கே பதியப்படும் எனது கட்சி பதிலாக கூட இருக்கலாம்.. எனக்கு என்னவோ இந்த ஆண்டோடு இவ்விடத்தில் இருந்து நகர்ந்து விடுவதே நன்று என்று மனதுக்கு படுகிறது.இவாக்கு போவதும்,வருவதும் தான் வேலை என்று சொல்லாமல் சொல்வதும்,ஆங்காங்கே பதிவதும் எனக்கு விளங்காமலும் இல்லை.. இதுவரைக்கும் நான் யார் மனதும் நோகும்படியோ அல்லது யாருக்கும் முரனாகவோ நடந்தவள் அல்ல.. அனைவரும் நலமோடு இருங்கள்.நன்றி.
 14. பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் இனிய தொரு புத்தாண்டாக அனைவருக்கும் அமையட்டும் 31/12/2021.
 15. இந்த ஆண்டின் இறுதி கணங்கள் ஊரில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து வாழும் ஒரு வயோதிபருக்கா மருத்துவ செலவுக்கான உதவிக் கரம் நீட்டியதோடு நிறைவுக்கு வருகிறது.இந்த உதவி கரம் நீட்டும் பணி எனக்கு சுய நினைவு இருக்கும் வரை தொடரும்
 16. யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” வெள்ளிக்கிழமை 31/12/2021 ஆண்டின் இறுதி நாள்.. அனைவருக்கும் இனிய நாளாக, பொழுதாக அமையட்டும்
 17. கியூபெக்கில் ஊரடங்கு அமுலுக்கு வருகின்றது. உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டிருக்கும். பாடசாலைகளை மீளத்திறத்தல் தள்ளிவைக்கப்படுகிறது. https://montamil.ca/?p=15346
 18. ஜேம்ஸ் வெப்: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 19 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 25 டிசம்பர் 2021 இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இது தமது சுற்றுவட்டப் பாதையை அடைந்த பின்பு அதன் ஏவல் வெற்றிகரமாக நடந்ததைக் காட்டும் சமிக்கள் கென்யாவில் உள்ள ஆண்டனா ஒன்றால் பெறப்பட்டது. ஏவப்பட்ட பின்னர் அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஜேம்ஸ் வெப் பூமிக்கு இந்த சமிக்ஞையை அனுப்பியது. பிரெஞ்சு கயானாவில் உள்ள கோவ்ரு விண்வெளி நிலையத்திலிருந்து 'அரியேன்' செயற்கைக்கோள் ஏவல் நிறுவனத்தின் ராக்கெட் ஒன்றின் மூலம் ஜேம்ஸ் வெப் ஏவப்பட்டது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் ஏவப்படும் காட்சியை வெளியிட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இந்தத் தொலைநோக்கி விண்ணில் இப்போது பாதுகாப்பாக உள்ளது என்று கூறியுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக, ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் எனப்படும் அந்தத் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட்டின் முனையில் பொருத்தி மூடுவதற்கு முன்பு விஞ்ஞானிகள் இறுதிச் சோதனைகளை முடித்தனர். ஜேம்ஸ் வெப்பை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசு என்று கூறுலாம். இதைக் கட்டமைப்பதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய். வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் ஆற்றிய உரை: தனது ஆபத்தை விளக்கியது இந்தப் புதிய தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தை அதன் முன்னோடிகளை விட இன்னும் ஆழ்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் அதன் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறார்கள். அங்கு உயிர்கள் வாழ்ந்த, வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்படலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. ஜேம்ஸ் வெப் திட்டத்தை முன்னின்று நடத்துவது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா. அதனுடன் இணைந்து ஐரோப்பிய விண்வெளி அமைப்பான ஈ.எஸ்.ஏ செயல்படுகிறது. ராக்கெட்டில் தொலைநோக்கி பொருத்தப்பட்டதைக் காட்டும் புகைப்படங்களை இந்த நிறுவனங்கள் சனிக்கிழமையன்று வெளியிட்டன. பட மூலாதாரம்,ESA/M.PEDOUSSAUT படக்குறிப்பு, பிரெஞ்ச் கயானாவில் ஏவுவதற்கு தயாராகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வளிமண்டலத்துக்குள் நுழைந்து செல்லும்போது தொலைநோக்கியை எரிந்துவிடாமல் பாதுகாக்கும் ராட்சத அமைப்பு லேசர்களின் உதவியுடன் பொருத்தப்பட்டது. வெப் மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் தங்கக் கண்ணாடிகளை பூமியில் நாம் கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பு இதுவே. 30 வருடங்களாக வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இந்த விண்வெளித் தொலைநோக்கியை இனி விண்ணில்தான் பார்க்க முடியும். ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்டு, தொலைநோக்கியை விடுவிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்ல சுமார் 30 நிமிடங்கள் ஆகும். இதன் பிறகான சாகசப் பயணத்தைக் காட்டுவதற்காக ராக்கெட்டில் வீடியோ கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. பட மூலாதாரம்,DAVID DUCROS படக்குறிப்பு, வரைகலை: ராக்கெட்டின் முனையில் இருக்கும் தொலைநோக்கியை பாதுகாக்கும் அமைப்பு தொலைநோக்கியில் இருந்து தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் உபகரணங்களுக்கு தரவுகளைக் கடத்தும் தகவல்தொடர்பு கேபிளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஏவுதலை சில நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தனர். இது சரி செய்யப்பட்ட பிறகு, தொலைநோக்கியின் இயங்கு தன்மை சோதிக்கப்பட்டது. "தொலைநோக்கியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக் குழு கடைசித் தருணம் வரை தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்" என்று கூறினார் நாசாவின் அறிவியல் இயக்குநர் தாமஸ் ஸுர்புக்கென். "நாங்கள் இந்தத் தொலைநோக்கியில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஏற்கனவே இது அபாயங்களைக் கொண்டது. அதனால் எல்லாம் முறையாகச் செயல்படுவதை நாங்கள் முழுமையாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம்." பிரெஞ்ச் கயானாவில் பணிகளை நிர்வகிக்கும் பிரெஞ்சு நிறுவனமான Arianespace, வரும் செவ்வாயன்று ஒரு ஏவுதல் தொடர்பான தயார்நிலை மதிப்பாய்வை நடத்தும். எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவுக்கு வந்தால், முனையில் தொலைநோக்கி பொருத்தப்பட்ட ஏரியன் ராக்கெட், ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்படும். ராக்கெட் வெள்ளிக்கிழமை தரையிலிருந்து புறப்பட அரை மணி நேர கால சாளர வரம்பு அளிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலை அல்லது சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் ஏதேனும் தெரியவந்தால், நிர்ணயிக்கப்பட்ட நாளில் ராக்கெட்டை செலுத்த முடியாது. அதன் பிறகு, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உந்து எரிபொருள்களை தயாரிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படும். அதனால் டிசம்பர் 25 அல்லது 26 ஆம் தேதிகளில் ஏவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பட மூலாதாரம்,IAU/L.CALÇADA படக்குறிப்பு, வரைகலை: சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களையும் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்யும் "ராக்கெட் இருக்கும் இடத்திலேயே ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை நாங்கள் தயாரிக்கிறோம். இது ஏரியன் ராக்கெட்டுக்கு மூன்றுமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும் அளவுக்கு உற்பத்தித்திறன் கொண்டது" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளி போக்குவரத்து இயக்குநர் டேனியல் நியூயன்ஷ்வாண்டர் கூறினார். ஏரியன் ராக்கெட்டில் இந்தப் பயணத்துக்காக பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, புவி வட்டப் பாதைக்கு முன்னேறும்போது அழுத்தம் குறைவதை உறுதி செய்வதற்காக, ராக்கெட்டின் கூம்பு முனையின் பக்கங்களில் சிறப்புத் துளைகள் போடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு அடுக்கு அகற்றப்படும்போது, தொலைநோக்கியை சேதப்படுத்தக்கூடிய அளவு புறச்சூழலில் மாற்றம் இல்லை என்பதை இது உறுதி செய்யும். பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கண்காணிப்புப் புள்ளிக்கு செல்லும் பாதையில் வெப் விண்வெளித் தொலைநோக்கியை ஏரியன் ராக்கெட் வீசியெறியும். அதன் பிறகான பயணம் ஒரு மாதம் நீடிக்கும். அந்த நேரத்தில் வெப் தொலைநோக்கி அதன் 6.5 மீட்டர் விட்டம் கொண்ட முதன்மை கண்ணாடி மற்றும் சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் டென்னிஸ் ஆடுகளம் அளவிலான கேடயத்தை விரித்துக் கொள்ளும். பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் பிக் பேங் என அழைக்கப்படும் பெருவெடிப்புக்கு பிறகு உருவான தொடக்க காலப் பொருட்களைப் படம்பிடிப்பதே வெப் தொலைநோக்கியின் குறிக்கோள். கருதுகோள்களின்படி, இவை முதல் விண்மீன் திரள்களில் இடம்பெற்ற நட்சத்திரங்களாகும். எக்ஸோப்ளானெட்ஸ் என்று அழைக்கப்படும் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களையும் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்ய இருக்கிறது. உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான வாயுக்கள் அங்கு இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். "பொதுமக்களும், வானியல் ஆய்வாளர்கள் தங்களுக்குள்ளேயும் கேட்டுக் கொண்டிருக்கும் மிக அடிப்படையான, 'நாம் தனியாகத்தான் இருக்கிறோமா? பூமி தனித்தன்மை கொண்டதா?, உயிர்கள் வாழத்தக்க பிற கோள்கள் உள்ளனவா?' என்பன போன்ற ஒரே மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு வாய்ப்பைப் பெறும்" என்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வெப் தொலைநோக்கித் திட்ட விஞ்ஞானி அன்டோனெல்லா நோட்டா கூறினார்.
 19. புத்தாண்டு 2022: நம்பிக்கையோடு காத்திருக்கும் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் ஜோ. மகேஸ்வரன் பிபிசி தமிழ் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, நம்பிக்கையோடு புத்தாண்டை எதிர்நோக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கிராமப்புற திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் என்றால் கட்டாயம் கலை நிகழ்ச்சிகள் இருக்கும். குறிப்பாக மக்களிசையாக போற்றப்படும் நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசும் ரசிகர்கள் கூட்டமும் இ(எ)ப்போதும் உண்டு. கிராமப் புறங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் நாட்டுப்புற கலை நிகழ்வுகளுக்கு வரவேற்பு உள்ளது. ஆனால். கொரோனா பெருந்தொற்றால் கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள், மேடை நாடகம் மற்றும் இசைக் கலைஞர்கள் மேடை ஏறும் வாய்ப்பை பெருமளவு இழந்துள்ளனர். "2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று வந்தது. இதனால் 2020ஆம் ஆண்டு பல்வேறு துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டது. இது கலைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக கிராமிய, நாட்டுப்புற கலைஞர்கள். தொடர்ந்து 2021ம் ஆண்டில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே வாய்ப்பிருந்தது. பொருளாதாரம் முடங்கியே இருக்கிறது என்கிறார்கள்," கிராமப்புற கலைஞர்கள். நன்கொடையாளர்களின் உதவிகளை மறக்க முடியாது தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்ற நிறுவனத் தலைவர் வளப்பகுடி வீரசங்கர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஆண்டிற்கு 4 மாதங்கள் தான் எங்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான், 12 மாதங்களையும் சமாளிக்க வேண்டும்," என்றார். நாட்டுப்புறக் கலைகளுக்கு வெளிநாட்டில் இருக்கும் மதிப்பு இந்தியாவில் ஏன் இல்லை? கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன? "கஜா புயல், கொரோனா என தொடர்ந்து 3 ஆண்டுகளாக போதிய வாய்ப்பில்லை. பலரும் அத்தியாவசிய செலவிற்கே வழியின்றி அல்லல்படுகின்றனர். தமிழ்நாடு அரசு நலவாரியத்தின் மூலம் ஒரு முறை ரூ. 2000 கொடுத்தது பெரும் உதவியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வாழ்க்கையை நடத்த நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்." சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், பல்வேறு தனியார் அமைப்பினர், தன்னார்வலர்களின் நன்கொடையால் இந்த ஆண்டு மட்டும் சுமார் 19 ஆயிரம் கலைஞர்களுக்கு உதவியுள்ளோம். நன்கொடையாளர்கள் பணம் மட்டுமல்ல, அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் என்று கொடுத்து உதவினர். அவர்கள் உதவியால் பல கலைஞர்கள் இன்றைக்கு உயிரோடு இருக்கிறோம். இந்த பெருந்தொற்று காலத்தில், இது போன்ற உதவிகளை என்றைக்கும் மறக்க முடியாது" என்கிறார். கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர் பட மூலாதாரம்,T. LAKSHMI படக்குறிப்பு, மதுரை லட்சுமி, நாட்டுப்புற கலைஞர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர், மதுரை லட்சுமி பிபிசி தமிழிடம் கூறுகையில், "கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. புத்தாண்டு பிறந்ததும், மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் போது, புதிய திரிபான ஒமிக்ரான் பரவல் ஒரு அச்சத்தை தருகிறது. தொடர்ந்து விழாக்கள் நடைபெறாத நிலையில், கடைகளுக்கு முன்பாக நின்று காசு கேட்கும் நிலை ஏற்பட்டது," என்றார். "புத்தாண்டிலாவது யாராவது சாப்பாடு தருவார்களா? என்று காத்திருக்கும் நிலை மாறும். வீட்டில் உள்ள வறுமை போய், மீண்டும் வீட்டில் விளக்கு எரியும் என்று காத்திருக்கிறோம். இந்த ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கரகாட்ட கலைக்காக எனக்கு விருது கொடுத்து அங்கீகரித்தார்கள். ஆனால், இதைக் கொண்ட்டாட கூட இயலவில்லை. சக கலைஞர்கள் அனைவரும் மகிழும் நாள், 2022ம் ஆண்டு கொடுக்கட்டும்." என்கிறார் லட்சுமி. புத்தாண்டில் நல் வழி பிறக்கும் என்று நம்பிக்கை இவரைப்போலவே புத்தாண்டாவது நல்வழி காட்டும் என்கிற நம்பிக்கையோடு பல கலைஞர்கள் காத்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,RAJIV GANDHI படக்குறிப்பு, ராஜீவ் காந்தி நாட்டுப்புற கலைக்குழு நடத்தி வரும் ராஜீவ்காந்தி, "மேடையில் திறமைகளைப் வெளிப்படுத்தி, மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நாட்டுப் புற கலைஞர்களுக்கு 2022ம் ஆண்டாவது இயல்பு நிலைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம். தமிழ் மாதத்தில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டுமே தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும். மற்ற மாதங்களில் ஒன்றிரண்டு வரும், அதுவும் எல்லாருக்கு கிடைக்காது. ஆகையால், 2018 ஆம் இறுதியில் கஜா புயலைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் தொடர்ந்து 3 ஆண்டுகள் கலைஞர்களுக்கு கஷ்டம்தான். ஆனால், கச்சேரி வாய்ப்பில்லாமல் தினக் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வேலையும் கிடைக்கவில்லை. இந்த துயரத்திலும் பலர் பண உதவி, பொருள் உதவி என்று செய்து வருகிறார்கள். அவர்களின் மனிதநேய உதவிகள்தான், எங்களை இப்போது வாழ வைத்துள்ளது," என்கிறார். மேடைகளில் மக்களால் கொண்டாடப்படும் கலைஞர்கள் பலரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் நாட்டுப்புறப் பாடகி ஆரூர் அம்பிகா. பட மூலாதாரம்,AMBIKA படக்குறிப்பு, ஆரூர் அம்பிகா அவர் கூறுகையில், "வாழ்வில் மிகக் கொடுமையான கால கட்டம் இது. கடந்த ஆண்டு வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. இந்த ஆண்டு கிடைத்த சில வாய்ப்புகளும் ரத்தாகின. இதனால், அன்றாட செலவு, குழந்தைகளின் கல்வி செலவு மட்டுமல்ல வயிற்றுப் பசி போக்குவதே பெரும்பாடு என்கிற நிலை. சேமித்து வைத்திருந்த கொஞ்சத்தையும் விற்று விட்டு கடனாளிகளாக உள்ளோம். அரசு நலவாரியத்தின் மூலம் ₹ 2 ஆயிரம் கொடுத்தார்கள். அந்த தொகையும் என்போன்ற பலருக்கும் கிடைக்கவில்லை." என்கிறார். தொடக்கம் நம்பிக்கை அளிக்கிறது பட மூலாதாரம்,VEERASANKAR படக்குறிப்பு, வளப்பகுடி வீரசங்கர் திரைத்துறையில், சின்னத்திரைகளில் வாய்ப்பு பெற்று கவனத்திற்கு உள்ளாகி, பிரபலமாகியுள்ள சிலர் உட்பட பெரும்பான்மையான கலைஞர்கள் பொருளாதாரத்தில் பெரிதும் நலிவடைந்துள்ளனர். அனைவருக்கும் அரசு உதவ வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்தி, கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத, அனைத்து கலைஞர்களுக்கும் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "பிறக்கும் 2022ம் ஆண்டு தொடக்கத்தில், "சென்னையில் ஊர்த் திருவிழா என்று திட்டமிட்டுள்ளார்கள். இதில், சற்றேறக்குறைய 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது நல்ல தொடக்கமாக தெரிகிறது. இது தொடர வேண்டும்" என்கிறார் ஊர்த்திருவிழா அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் வளப்பகுடி வீரசங்கர். நம்பிக்கையோடு காத்திருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நல் வழி பிறக்கட்டும் புத்தாண்டில்... bbc.com
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.