Jump to content

யாயினி

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  8829
 • Joined

 • Last visited

 • Days Won

  13

Posts posted by யாயினி

 1. எழுதுபவர்களுக்கு கற்பனை வளம் அதிகம்  அதற்கு இவரும் விதி விலக்கல்ல என்று நினைக்கிறன்..சொல்லப் போனால் தங்கள் பிரதேசங்களை விட கிழக்கு மாகாணம் போன்ற இடங்களுக்கு உதவி செய்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள்..நான் முன்பும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தேன்.மட்டு மக்கள் ஒரு பணி முடிக்க முதல் அடுத்தடுத்த தேவைகளை கேட்பது மற்றும் புலம் பெயர்ந்தவர்களை தரத்தானே வேணும்...எல்லாரும் என்ன செய்து கொண்டு இருக்கிறீங்க.....இப்படி நிறைய கேட்டு சண்டை போடுவதை என் காதால் கேட்ட காலங்களும் இருக்கிறது....என்ன செய்வது நிறைய தேவைகள் இருந்து  கொண்டே இருக்கிறது..

 2. எனது விருப்பத்தின் பேரில் யாயினியின் பக்கம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் September 5, 2014 ஆரம்பிக்கப்பட்ட பகுதி தான் இது..இன்று என்னாலயே நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது...அவ்வப்போது வந்து தங்கள் ஆதரவுகளை கருத்துக்களை தந்து சென்ற அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல..எனக்கு கனடா உறவுகள் சிலரைத் தவிர மற்ற உறவுகள் யாரையும் தெரியாது ஆனாலும் எனது குடும்ப உறவுகள் போல் நானும் சின்ன சின்ன சண்டைகள்; கோவங்கள்; விட்டுட்டு போறது அப்புறம் வேற இடம் போக விருப்பின்றி திரும்ப வாறது இப்படியே தான் கடந்த எட்டு ஆண்டுகளை கடத்தி இருக்கிறேன்.சொல்லப் போனால் நாங்களும் குருவிச்சை கொடி போலத் தான் படர்வதற்கு ஒரு சிறு இடம் கிடைத்தது கொடியாக படர முயற்சித்தோம் இப்போ அது பட்டுப் போகும் நிலைக்கு வந்து விட்டது..ஆகவே நாங்களாவே போய் விடுகிறோம்..எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு அவ்வப்போது ஏற்படும் பிழைகள் மற்றும் திருத்தங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக ஒத்துழைத்த அண்ணாவுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள் பல...இதனை விட வேற என்னத்தை சொல்வது.கார்த்திகா என்ற ஒருத்தியை நிறைய பேருக்கு தெரியாது ஆனால் யாயினியை நிறைய பேருக்கு தெரியும்.அந்த வகையில் அனைவரோடும் இனிமையாக பழகி இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இந்தப் பகுயை நிறைவுக்கு கொண்டு வருகிறேன்..அனைனவரும் நலமோடு இருங்கள்.23/05/2022 

  Beautiful sunny summer days to enjoy!! 🌹
  May be an illustration
   
  நன்றி🙏
   
   

  May be an image of 1 person and text that says 'Believe in the the efforts more than promises. Believe in the silence more arguments. than'
   
   
   
   
  • Like 1
  • Sad 2
 3. பிடித்ததெல்லாம் 
  கிடைப்பதில்லை
  கிடைப்பதெல்லாம்
  நிலைப்பதில்லை
  நிலைப்பதெல்லாம்
  மகிழ்ச்சியைத் தருவதில்லை
  ஆனாலும் வாழ்ந்துதான் 
  ஆகவேண்டும்!

  படித்ததிலிருந்து...
   

 4. Outstanding Academic Excellence Award (Gold) 2022 (President’s Education Award Program)
  அமெரிக்க ஜனாதிபதியாலும்,அமெரிக்க கல்விச்செயலாளராலும் கூடவே பாடசாலை அதிபராலும் கையெழுத்திடப்பட்டு வழங்கப்பட்ட விருது. This certificate is signed by the US President, the U.S. Secretary of Education and the School principal. Congratulations sweetie for your high school journey ❤️
  283018257_4989088784479029_5809479643857
   
   
  283083653_4989088811145693_9183634176570
   
   
   
  யாழ்கள உறவுகளின் புதல்வி என்பதில் மிகவும் சந்தோசப்படுகிறோம்.✍️😀
  • Like 4
  • Thanks 1
 5. அவன் வெளியே வந்துவிட்டான்
  உலகம் மிகப்பெரிதாக இருக்கிறது
  ஆஹா நிலவு முழுதாக தெரிகிறது
  வானம் இவ்வளவு பெரியதா
  காற்று திபுதிபுவென்று அவன் மீது வீசுகிறது
  காற்றுக்கு இவ்வளவு வலிமையா
  கால்கள் எங்குவேண்டுமானாலும் செல்கின்றன
  அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்
  நினைத்த திசையெல்லாம் நடந்து நடந்து பார்க்கிறான்
  பூமியின் எல்லையில்லா அழகு விரிந்து விரிந்து செல்கிறது
  ஒரு சிறிய அறைக்குள் ஜன்னல்
  அளவிலான வெளிச்சத்தைக் கண்டிருந்தவன்
  இப்போது முழு சூரியனை காண்கிறான்
  அவன் காணும் வெளிச்சம் எல்லையற்று நீண்டு செல்கிறது
  கட்டுப்பாடுகள் அற்ற ஒரு காட்டு பறவையைப் போல
  அவனால் எங்கும் பறக்க முடிகிறது
  அவனுக்கு பூட்டப்படாத இறகுகள் வாய்த்துவிட்டன
  இனி அவனது தாய்ப்பறவை
  அவனை அருகில் வைத்து
  இரை ஊட்டும்
  அவன் வெளியில் வந்து விட்டான்
  அவன் திசைகளெல்லாம் திறந்தே கிடக்கின்றன
  May be an image of bird and nature
   
   
   
   
 6. அப்படியே போனா அங்காலை அடுத்தடுத்த நாடுகளையும் வருசைப்படுத்தலாம் ஐயா...நீங்க அப்படியே உல்லாசமா உல்லாச விடுதியில் இருந்து கொள்ளுங்க...இருக்கிற கொஞ்ச நஞ்ச சனமும் பசி பட்டினியில கிடக்கட்டும்...

 7. Parliament creates day to remember Tamil genocide in Sri Lanka

  OTTAWA — Canada's Parliament has created a day to recognize the genocide of Tamil people in Sri Lanka. Parliament unanimously adopted the motion to make May 18 of each year Tamil Genocide Remembrance Day.
  Canadian Pressabout 17 hours agoabout 16 hours ago

   

  20220518170512-628561e6b5140a617c9bdeb3jpeg Gary Anandasangaree speaks during a news conference in Vancouver, B.C., on Tuesday October 20, 2009. Parliament unanimously adopted a motion Wednesday to make May 18 of each year Tamil Genocide Remembrance Day.THE CANADIAN PRESS/Darryl Dyck

  OTTAWA — Canada's Parliament has created a day to recognize the genocide of Tamil people in Sri Lanka.

  Parliament unanimously adopted the motion to make May 18 of each year Tamil Genocide Remembrance Day.

  Liberal MP Gary Anandasangaree put forward the motion on Wednesday.

  Anandasangaree, the MP for Scarborough-Rouge Park, says in a statement that Canada became the first national Parliament in the world to create such a day.

  He says the passed motion is the result of years of work by the Tamil community, survivors and their loved ones.

  Anandasangaree says he knows much work lies ahead to make sure those responsible for the "atrocities" are held to account.

   

  He says, "I hope this will give some solace to those who are impacted and traumatized by the genocide."

  This report by The Canadian Press was first published May 18, 2022.

  ---

  This story was produced with the financial assistance of the Meta and Canadian Press News Fellowship.

  The Canadian Press

 8. "கஞ்சி வேண்டிக்கொண்டு போகும் போது எறிகணை வீழ்ந்து வெடித்தது. என்ர சட்டிக்குள்ள காயமடைந்தவரின் தசைத்துண்டு ஒன்று விழுந்திட்டுது. எறிந்தால் திரும்ப கஞ்சி வேண்ட முடியாது என்று தசைத்துண்டை வெளில போட்டிட்டு தான் குடித்தேன்.” - இறுதிப்போரில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி(2009)
  Suren Karththikesu (முள்ளிவாய்க்காலிலிருந்து மீண்ட ஊடகவியலாளர்)
   
  ஈழம்
  ஈழம் அழுதது போல்
  இதுவரை
  எந்த மழையும் தூறவில்லை
  கட்டி வைக்கப்பட்டுள்ளது ஈழம்
  ஒரு சோழன் வேண்டும்
  அவிழ்த்துவிட
  தமிழின் கனவு
  ஈழமன்றி
  வேறில்லை
  இன்னும் கழுவப்படவில்லை
  செங்குருதி தோய்ந்த
  ஈழம்
  புறாக்கள் ஏந்திய
  துப்பாக்கியல்லவா ஈழம்
  ஈழம்போல் புகழ் இல்லை
  நிலவுக்கும்
  அலக்ஸ்சாண்டருக்கும்
  ஒவ்வொரு தமிழனும்
  முள்ளி வாய்க்காலில் மாண்டவன்தான்
  புலம் பெயர்ந்தாலும்
  பெயராது
  முள்ளிவாய்க்காலில் நின்று அழுகிறது
  மனம்
  ராஜகவி ராகில்
  May be an image of rose and body of water
   
   
   
   
  • Like 1
  • Thanks 1
 9. நானும் இந்த கவிதையை முகபுத்தகத்தில் படித்தேன்..மிகுதி இந்த பகுதிக்குள் வரும் அனைவரும் படித்து புரிந்து கொள்ளுங்கோ..✍️
   

 10. 1 hour ago, தமிழ் சிறி said:

  May be an image of 1 person and text

  பாவம் வயது  போன சீவன் ஏதோ சொல்லுறார் என்று கடந்து போக வேண்டியதாக இருக்கிறது...✍.😀
   

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.