Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9084
  • Joined

  • Days Won

    14

Posts posted by யாயினி

  1. கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய செய்திகள் பகுதியில் நானும் இந்தக் கடிதத்தை இணைத்திருந்தேன்..எனிவே..உரியவர்களுக்கு ஏதாவது விடிவு கிடைத்தால் மிக்க சந்தோசம்.🖐️

    • Thanks 1
  2. 12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

    ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்

     

    நான் ஏற்கனவே தேடி கண்டு பிடிச்சுட்டு எதற்கும் தனி வந்து எழுதட்டுமே என்று காத்துக் கொண்டு இருந்தேன்.தகவலுக்கு நன்றி தனி.இங்கு குடினீர் பைக்கற் என்று சொல்கிறார்கள்.✍️

     

  3. 9 hours ago, Cruso said:

    எதோ ஒரு மூலையில் தொங்கிக்கொண்டு கருத்து எழுதும் உங்களுக்கு வேறென்ன வேலை. sorry.com

    சொல்லப் போனால் இப்படி எழுதும் உங்களைப் போன்றவர்களை விட தேசம்,தேசமாக வாழும் நாங்கள் ஊருக்கு மிக கூடுதலாக தான் செய்து  கொண்டு இருக்கிறோம்..இதுக்கு மேல வாயைத் திறக்காதீர்கள்..நிர்வாகம் எனக்கு தண்டடனை தந்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொண்டு  போகிறேன்.

    • Like 1
    • Thanks 2
  4. நல்லது தொடருங்கள்.மற்றவர்களும் வந்து வாசிக்கட்டுமே,கருத்துக்களை பகிரட்டுமே என்பதற்காகவே சில ஆக்கங்களுக்கு அடிக்கோடு இடுவது போல் ஏதாவது எழுதுவது வழமை.✍️

  5. 4 hours ago, nedukkalapoovan said:

    நமக்கு விளங்குது உங்கள் தீவிரம்.

    ஆனால் அண்ணா.. நாங்கள் நேரடியாக இந்தத் துறை சாரவில்லை. மருத்துவத்துறை என்பதால்..  பலதையும் அறியும் ஆர்வம் இருக்குது. மின்னஞ்சல்களும் பலதுறை சார்ந்தும் வரும்.  

    இணைப்பிற்கு மிகவும் நன்றி.🖐️

  6. இங்கும் சில குளறபடிகள் நடக்கிறதாக அறியக் கூடியதாகவும் இருந்தது.இறந்தவரின் அஸ்த்தியை வைத்துக் கொண்டே இன்னும் அஸ்த்தி வரவில்லை. நீங்கள்  கடசியாக எங்கே கொண்டு போய் ஈமைக்கிரியை செய்தீர்களோ  அந்த மண்டபக்காரரிடம் போய் கேழுங்கள் என்று சொல்லும் சம்பவங்களும் நடந்திருக்கிறது.இறந்து பொடியான பின் எந்த அடையாளத்தை வைத்து நாம் உரிமை கொண்டாட முடியும்.என்ன இந்த யாயினி இப்படி எல்லாம் எழுதுறா என்று நினைக்க கூடாது.நானும் வருடம் தோறும் இறப்புக்களை சந்தித்துக் கொண்டே வருகிறேன்.கடந்த 3 1/2 ஆண்டுகளுக்குள்  அம்மா, அண்ணா, அப்பா, என்று 3 பேர் போய் விட்டார்கள்.மன அமைதிக்காக ஏதோ ஒன்றை செய்து விட்டு போகிறோம்.🙏

    • Sad 2
  7. 4 hours ago, Kavi arunasalam said:

    எல்லாம் சரி.  துயர் வரும் முன் காப்பதுதானே அறிவு. இந்தக் கட்டுரையை நிகழ்ச்சிக்கு முன்னர், நிலாந்தன் எழுதியிருக்கலாம். முடியட்டும், பிறகு போய் சங்கு ஊதலாம் எனும் விதமாகவே நான் இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.

    இனி இப்படி நடக்க விடமாட்டேன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பாணியில் கூட, சூளைமேட்டுச் சூரர் சமீபத்தில்அறிக்கை விட்டிருந்தார். இத்தனைக்கும் பல ஆண்டுகளாக இருக்கும் ஈழ மீனவர்களின் பிரச்சனைகளை கடற்தொழில் அமைச்சராக இருந்தும் கூட, தீர்க்க முடியாமல்தான் அவர் இருக்கிறார்.

    “உன் பழங்காலக் கதை இங்கே யாரைக் காக்கும்?” என்றொரு பாடல் வரி இருக்கிறது. எங்கள் மூதாதையர் அப்படிச் செய்தார். இப்படி வாழ்ந்தார் என்று சொல்லிக் கொண்டே இருந்தால், நாங்கள் அங்கேயே தங்கி விட்டோம் என்றுதான் கருத வேண்டும். வெளியே வர இன்னும் பல காலங்கள் தேவைப்படும்.

    நிகழ்ச்சியை திட்டமிடாததால்தான் குழப்பம் வந்ததா? அல்லது திட்டமிட்டு குழப்பினார்களா? என்பது கேள்வி.

    என்னைப் பொறுத்தவரையில், புலம்பெயர் தமிழர் ஒருவர்நீ ட்டிய கரத்தை, (அது அவரது வியாபார நோக்கமோ? அல்லது சமூக நலனோ?)தாயகத்தில் காயப்படுத்தியிருக்கிறார்கள். கட்டுரையாளர் அதற்குத் தாளம் போட்டிருக்கிறார்.

     

    நிலாந்தனின் ஆக்கங்களில் புலம் பெயர் மக்களுக்கு ஒரு கெளரவ தோற்றம் கொடுப்பது வழக்கமான ஒன்று..சில திரைப்படங்களில் சில நடிகர்களுக்கு ஒரு இடத்தை கொடுத்து இவர் கெளவவரத் தோற்றம் என்று போடுவார்களே ,அதே தோற்றம் புலத்து மக்களுக்கும் வழங்கப்படுவது வழமை.

    • Haha 1
  8. 1 hour ago, Kavi arunasalam said:

     

    ஷோபா சக்தியின்சித்திரப் பேழைவாசித்தேன்.

    கதை நீளமானதாக இருந்தாலும், வழமை போல, அவரது எழுத்து நடை, கதையை இடைவிடாமல் வாசிக்க வைத்தது.

    இலங்கை, பிரான்ஸ், கியூபா என்று கதையுடன் சேர்த்து நானும் பயணித்த அனுபவம் கிடைத்தது. அழகாகச் சொல்லி முடித்தார்.

    பிரான்ஸுக்குப் பக்கத்தில்தான் யேர்மனி இருக்கிறது. இரண்டுமே ஐரோப்பிய வலயத்துக்குள்தான் இருக்கின்றன. ஆனால் இறந்தவர்களின் சாம்பல் விடயத்தில், இரண்டு நாடுகளிலும் நடை முறையில் மாற்றங்கள் இருப்பதைஷோபா சக்தியின்சித்திரப் பேழைவாசித்த போது என்னால் அறிய முடிகிறது.

    யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் பேழைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். அதற்கான செலவு 400 யூரோக்கள் மட்டுமே! இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில்  சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல் பேழை அடக்கம் செய்யப்படும்

    இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலே கரைக்கவோ,  தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயல்.

    சிலர் சுவிஸ் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை அனுப்பச் சொல்லிவிட்டு, ( அதற்குப் பணம் கொடுக்க வேண்டும்) அங்கே சென்று, தங்கள் விருப்பம் போல் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை எடுத்துச் சென்று, சம்பிரதாய முறைப்படி கடமைகள் செய்ய விரும்புவார்கள். இறந்தவரின் சாம்பலை அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்வதற்கு எந்த அனுமதியும் கிடையாது. சம்பந்தப்பட்ட அலுவலகர்களே சாம்பலை நேரடியாக குறிப்பிட்ட நாட்டுக்கு, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். அனுப்புவதற்கான கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். எந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறோமா அந்த நாட்டுச் சுங்க அலுவலகம் ஊடாகப் பெற்றுக் கொள்ள ஆவன செய்வார்கள்

    இறந்தவரின் சாம்பலை கியூபாவுக்கு கொண்டு செல்வதையும், அதை விமானத்தில் கையில் வைத்திருப்பதாகவும், ‘சித்திரப் பேழையில் சொல்லி இருப்பது எனக்குப் புதுமையாக இருந்தது.

    பிரான்ஸ் நாட்டு நடைமுறை அப்படி.

    ஒவ்வொரு நாட்டுக்கும் சட்ட திட்டங்கள் வேறு பட்டதாக இருக்கும் தானே..அந்த வகையில் அந்தக் குடும்பங்களின் விருப்பப்படி செய்கிறார்கள்..கடந்த முன்று மாதங்களுக்கு முன் எனது தந்தையாரின் அஸ்த்தியை 29ம் நாள் கரைப்பதற்கு ஒரு நாள் முன்பதாக எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்து விட்டு தான் கொண்டு போய் கடலில் கரைத்தார்கள்.என்னோடு இருந்த காரணம் ஒன்று மற்றையது நான் கடற்கரைக்கு எல்லாம் போக இயலாத காரணம் இன்னொன்று.

    எனது தந்தையார் நீண்ட நெடுதுயர்ந்த மனிதர். அஸ்த்தியாக பார்க்கும் போது ஒரு சிறிய பிஸ்கட்பெட்டியாக பைக்கற் செய்து தந்திருந்தார்கள்.எப்போதும் அந்த நினைவுகளை மறக்க இயலாது.

    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எனது அண்ணா ஒருவர் இறந்திருந்தார்.அவரது அஸ்த்தியை அண்ணாவின் துணைவியார் காசிக்கு போகும் போது தானே எடுத்து சென்றார்.அதற்கு ஏற்ப விபரங்கள் எல்லாம் ஒட்டப்பட்டு இறுதிக்கிரியைகளை செய்த மண்டபகாரர்கள் குடுப்பார்கள்.

    • Like 1
    • Sad 2
  9. 55 minutes ago, இணையவன் said:

    என்ற வருடம் அங்கு போயிருந்தபோது நானும் மைத்துனனும் பாசயூர் மீன் சந்தைக்குப் போயிருந்தோம். ஆவலில் துடிக்கத் துடிக்க குவித்து வைத்திருந்த மீன் நண்டு இறால் என்று ஏரளமாக வாங்கிவிட்டோம். பெரிய உரப் பை ஒன்றை வங்கி அதற்குள் எல்லாவற்றையும் போட்டு ஸ்கூட்டரில் ஒருவாறு வீட்டுக்குக் கொண்டு வந்தோம். கிணற்றடியில் தென்னை நிழலில் இருந்து எல்லாவற்றையும் வெட்டி முடிக்க இரண்டு மணித்தியாலங்கள் பிடித்தன. கூழுக்குத் தேவையானவற்றை முதலில் வெட்டிக் கழுவிக் கொடுத்திருந்தோம். மதியம் ஏற்பட்ட அகோரப் பசியில் அன்று குடித்த அளவு கூழ் வாழ்க்கையில் குடித்ததில்லை.

    மீண்டும் இப்படியானதொரு தருணத்தை எதிர்பார்த்தபடி... 🙂

    சின்ன திருத்தம் செய்து கொள்ளுங்கள். (சென்ற) 

    • Like 1
  10. சித்திரப்பேழைகதைகள்

    ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது.

    சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் முகம் வேதனையால் நெளிந்து விரிய, அவர் சில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி யசோதாவிடம் முனகினார்:

    “யசோ… என்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை”

    இவையே உண்மையில் அமரேசனின் இறுதி வார்த்தைகளாக இருந்தன. யசோதா தன்னுடைய சுட்டுவிரலை மென்மையாகக் கணவரின் மெல்லிய உதடுகளின் மீது வைத்து மூடியவாறே, கணவரின் கண்களைப் பார்த்தார். அப்போது, அமரேசன் சிரமப்பட்டுத் தனது உதடுகளைப் பிரித்துப் புன்னகைத்தார். அந்த வரண்ட உதடுகள் யசோதாவின் விரலை முத்தமிட்டு மூடிக்கொண்டன. இரண்டு நாட்கள் கழித்து அமரேசன் இறந்துபோனார்.

    மின் மயானத்தில் அமரேசனின் சிறிய உடலை எரியூட்டிய பின்பாக, ஒரு சித்திரப்பேழைக்குள் பிடி சாம்பலை வைத்து யசோதாவிடம் கொடுத்தார்கள். தீக்கோழி முட்டையின் அளவிலும் வடிவத்திலுமிருந்த அந்தச் சித்திரப்பேழை கருப்பு நிறத்திலிருந்தது. அதன் தலையிலும் அடிப்பாகத்திலும் வெள்ளிப் பூச்சால் சித்திர வேலைப்பாடுகளிருந்தன. இடைப்பட்ட பகுதியில் வெண்ணிறத்தில் பொட்டுப் பொட்டாகச் சின்னஞ்சிறிய பெகோனியாப் பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறிக்கப்பட்டிருந்தன.

    இப்போது யசோதா அந்தச் சித்திரப்பேழையுடன் வீட்டில் தனித்தே இருக்கிறார். இரண்டு அறைகளும் சிறிய கூடமுள்ள அந்த வீடு ஊரிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கிறது. அந்த ஊரும்கூட பாரிஸ் நகரத்திலிருந்து தெற்குத் திசையாக அறுபது கிலோமீற்றர்கள் தொலைவில் தனித்துத்தான் இருக்கிறது. பாரிய தொழிற்சாலைகளுக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்குமாகவே அந்த ஊர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    சலவைத் தொழிற்சாலையில் வேலை முடிந்து பிற்பகலில் யசோதா வீட்டுக்குத் திரும்பிவிட்டால், இந்தச் சித்திரப்பேழையே அவருக்குத் துணை. அமரேசனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்த மேசையிலிருக்கும் பிடி சாம்பல் சித்திரப்பேழையை எடுத்துத் தனது மடியில் வைத்தவாறே மணிக்கணக்காக யசோதா சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். முதுகில் வலியெடுக்கும் போது, சித்திரப்பேழையை ஏந்தியவாறே எழுந்து இரண்டு நிமிடங்கள் வீட்டுக்குள்ளேயே நடந்துவிட்டு, மறுபடியும் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். சற்றே உடல் பெருந்திருந்த அவரது எடையால் சாய்மனை நாற்காலி தாழ்ந்து போகும். அய்ம்பத்தெட்டு வயதில் இயல்பாகவே ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் யசோதாவுக்கு இருந்தாலும், குறைந்தது இன்னும் ஆறு வருடங்களாவது அவர் சலவைத் தொழிற்சாலையில் இயந்திரங்களோடு இயந்திரமாக உழைக்கத்தான் வேண்டியிருந்தது. இந்த வீட்டை வாங்குவதற்காக வங்கியில் பெற்றிருந்த கடன்தொகையில் எஞ்சியிருக்கும் எழுபது மாதங்களுக்கான தவணைத் தொகையை இப்போது அவர் தனித்தே செலுத்த வேண்டியிருக்கிறது.

    அவர்களுடைய ஒரேயொரு மகள் மேதினி தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, பாரிஸ் நகரத்தில் நண்பர்களுடன் வசிக்கச் சென்றுவிட்டாள். அவள் ஏதோவொரு பிரச்சினையான இசைக் குழுவில் இருக்கிறாள் என்பது மட்டுமே யசோதாவுக்குத் தெரியும். அந்தக் குழுவில் இருக்கும் எல்லோரும் எப்போதுமே கருப்பு ஆடைகளையே அணிவார்கள். கால்களில் தடித்த பூட்ஸ்கள் போட்டிருப்பார்கள். உடலில் எங்கெங்கு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் சித்திரப் பச்சை குத்துவார்கள். பச்சை குத்தியிருக்காத இடங்களில் உலோக வளையங்களை அணிந்திருப்பார்கள். மேதினியும் அப்படித்தானிருந்தாள். நடு நாக்கில் கூட அலகு குத்துவதுபோல ஓர் ஆணியைக் குத்தியிருந்தாள். அவள் எப்படி அந்த ஆணி நாக்கால் பாடுகிறாள் என்பது யசோதாவுக்குப் புரியவேயில்லை.

    மேதினி திடீரென ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் பெற்றோரைப் பார்க்க வருவாள். அவளிடமும் வீட்டுச் சாவி ஒன்றிருந்தது. வீட்டுக்கு வந்தால் ஒருநாளுக்கு மேல் தங்கும் வழக்கம் மேதினிக்குக் கிடையாது. இப்போது, தனிமையை எதிர்கொள்ள முடியாமல் யசோதாவின் உடல் புகைந்து, அது மேதினி மீதான எரிச்சலாக வீட்டுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது.

    அமரேசன் இறந்து இரண்டு மாதங்கள் கழித்துத்தான் மேதினி மறுபடியும் ஆடிப்பாடி வீட்டுக்கு வந்தாள். அவளுடைய முதல் கேள்வி “அம்மா! எதற்காகச் சாம்பல் பேழையை வீட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள்?” என்பதாகயிருந்தது.

    “நானே உன்னிடம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன் மேதினி… தன்னுடைய சாம்பலை கொம்யூனிஸ நாடொன்றின் கடலில் கரைக்க வேண்டுமென்று உன்னுடைய அப்பா இறப்பதற்கு முன்னால் என்னிடம் சொல்லியிருக்கிறார்…”

    தன்னுடையை உருண்டைக் கண்களை இன்னும் பெரிதாக விரித்து, ஒல்லி உடம்பைக் குலுக்கிக்கொண்டே யசோதாவை விநோதமாகப் பார்த்த மேதினி “அம்மா… கொம்யூனிஸ நாடு என்று எதுவும் இப்போது உலகத்தில் இல்லை” என்றவள் சற்று நிறுத்தி “எப்போதுமே இருந்ததில்லை” என்றாள்.

    மேதினி பேசிய தோரணை யசோதாவுக்கு எரிச்சலூட்டியது. மேதினி எப்போதுமே தன்னைப் பற்றிச் சிந்திக்கிறாளே தவிர பெற்றோரைக் குறித்தோ அவர்களது விருப்பங்களைக் குறித்தோ அவள் என்றுமே அக்கறைப்பட்டதில்லை. யசோதா சற்று ஆத்திரத்துடன் “இல்லாத ஒன்றை உன்னுடைய அப்பா சொல்லியிருக்க மாட்டார் மேதினி” என்றார்.

    “அப்பா தன்னுடைய கடைசி நாட்களில் எப்படியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா அம்மா? அவர் எல்லா விஷயங்களையும் குழப்பிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது மூளை அவருக்கு முன்பே செத்துக்கொண்டிருந்தது…”

    “வாயை மூடு மேதினி! நீ அடுத்தமுறை வீட்டுக்கு வரும்போது இந்தச் சித்திரப்பேழை இங்கிருக்காது” என்று யசோதா சொல்லிவிட்டுச் சாய்மனை நாற்காலியிலிருந்து எழுந்து, சித்திரப்பேழையுடன் படுக்கையறைக்குள் சென்றுவிட்டார்.

    2

    அமரேசனோடு வாழ்ந்த முப்பது வருடங்களின் ஒவ்வொரு பகலும் இரவும் ஈரச் சுண்ணாம்புச் சாந்துமீது இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரம் போன்று யசோதாவின் மனதில் பதிந்திருக்கிறது. வருத்தப்படக் கூடிய ஒரேயொரு தருணம் கூட அவற்றில் இருந்ததில்லை. அமரேசன் பொய் பேசியோ, கோபப்பட்டோ யசோதா பார்த்ததில்லை. தங்கள் இரண்டு பேருக்குமிடையில் எப்போதாவது அபிப்பிராய பேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று இப்போது யசோதா மீண்டும் மீண்டும் தனது மூளையைத் திருகி யோசித்துப் பார்த்தாலும், அப்படி எதுவுமே நிகழ்ந்ததில்லை என்பது அவரது மனதை ஆற்றுப்படுத்துகிறது. யசோதாவை முதன்முதலாகச் சந்தித்தபோது அமரேசன் எவ்வாறு மலர்ந்து சிரித்தாரோ, அதே புன்னகை அவர் இறந்துகிடக்கும் போதுகூட அவரது முகத்தில் இருந்ததை யசோதா பார்த்திருக்கிறார். சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த அமரேசனுக்கு அறுபத்து நான்கு வயதென்று யாராலும் சொல்லிவிட முடியாதென்றே யசோதா நினைத்துக்கொண்டார். யசோதா முதன்முதலில் அமரேசனைப் பார்த்தபோது, அமரேசன் என்ன தோற்றத்தில் இருந்தாரோ அதே தோற்றத்திலேயே சாகும் போதும் அமரேசன் இருந்தார். அவரது விஷயத்தில் காலம் உறைந்திருந்தது என்று கூடச் சொல்லலாம்.

    அவர்களிடையேயான முதல் சந்திப்பு 1993-ம் வருடத்தின் கோடைகாலத்தில் நிகழ்ந்தது. அப்போது, இந்த ஊரிலுள்ள தொழிலாளர் விடுதியொன்றில் யசோதா தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் இரயிலைப் பிடித்து பாரிஸிலுள்ள தமிழ்க் கடைத்தெருவுக்குப் போய் ஒரு வாரத்திற்குத் தேவையான சமையல் பொருட்களையும் காய்கறிகளையும் வாங்கி வருவார். வீடியோக் கடையில் தவறாமல் ஏழு தமிழ்த் திரைப்பட வீடியோ கஸெட்டுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வார். ஒருநாளைக்கு ஒரு தமிழ்ப்படம். வேலை, சமையல், வீடியோப் படம், தூக்கம், எஞ்சிய வேளைகளில் கண்ணீர் இவற்றைத் தவிர அவருடைய வாழ்க்கையில் வேறெதுவுமே அப்போது இருந்ததில்லை. யாழ்ப்பாணத்திலிருக்கும் குடும்பத்தாருக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துப் பேசுவதைக் கூட அவர் விரும்புவதில்லை. அவர்களோடு பேசுவது யசோதாவுக்குச் சித்திரவதையாகவும் பெரும் துக்கமாகவுமிருந்தது.

    தமிழ்க் கடைத்தெருவில் சினிமா விளம்பரங்களும், கோயில் விளம்பரங்களும், புலிகள் இயக்கத்தின் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றையும் நின்று நிதானித்துப் படித்துச் செல்வது யசோதாவுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. தமிழ்ச் சமூகத்திற்கும் அவருக்குமான தொடர்பு அவ்வளவுதான். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும் போதுதான், அமரேசனின் ‘மணமகள் தேவை’ விளம்பரத்தை யசோதா பார்த்தார். அந்த விளம்பரம் உள்ளங்கையளவு வெள்ளைக் காகிதத்தில் பேனாவால் எழுதப்பட்டுக் கடைத் தெருவிலிருந்த எல்லா விளக்குக் கம்பங்களிலும் நன்றாகப் பசை போட்டு ஒட்டப்பட்டிருந்தது. பல விளக்குக் கம்பங்களிலிருந்து அந்த விளம்பரக் காகிதத்தை யாரோ சுரண்டிக் கிழிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு விளக்குக் கம்பத்தின் மீது வெற்றிலைச் சாறு உமிழப்பட்டிருந்தது.

    ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்ற விளம்பரத்தைப் படித்தபோது, உண்மையிலேயே யசோதா ‘மாவோயிஸ்ட்” என்பது ‘பார்மஸிஸ்ட்’, ‘ரிசப்ஷனிஸ்ட்’ போன்றதொரு வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றே எண்ணிக்கொண்டார். மணமகன் ‘தமிழீழத்தை ஆதரிப்பவர்’ என்று தன்னை அறிவித்திருந்ததும் யசோதாவைக் கவர்ந்திருந்தது. துணிச்சலும் நேர்மையுமுள்ளவராகத்தான் இந்த மணமகன் இருக்கவேண்டும் என்று யசோதா நினைத்துக்கொண்டார். அவர் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, விளக்குக் கம்பத்தில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரத்தின் இடது மூலையை மட்டும் பிய்த்தெடுத்துத் தனது கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார். அந்தத் துண்டில்தான் தொடர்புகொள்ள வேண்டிய மணமகனின் தொலைபேசி இலக்கம் எழுதப்பட்டிருந்தது.

    யசோதா நான்கு சகோதரிகளுடன் ஒரு தம்பியுடனும் பிறந்தவர். அவர்களோடு ஆடியோடி வளர்ந்த யசோதாவை பிரான்ஸில் தனிமை எரித்து அவரது உடலைப் புகைய வைத்தது. வாரம் தவறாமல் யாழ்ப்பாணத்திலிருந்து அவரது தந்தையார் அனுப்பிவைக்கும் கடிதங்களில், யசோதாவை உடனேயே கல்யாணம் செய்யுமாறும் அல்லது இலங்கைக்கே திரும்பி வந்துவிடுமாறும் எழுதப்பட்டிருக்கும். ‘எனக்கு விரைவிலேயே திருமணம் நடக்கவிருக்கிறது’ என்றுதான் யசோதாவும் பதில் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால், யாரைத் திருமணம் செய்வது, எப்படிச் செய்வது என்பதெல்லாம் யசோதாவுக்குத் தெரியவில்லை. அவருக்கு உற்றார் உறவினரென்று ஒருவர்கூட பிரான்ஸில் இருக்கவில்லை. அவர் வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலையில் ஒன்றிரண்டு காதல் கோரிக்கைகள் வரத்தான் செய்தன. ஆனால், அவை காதலுக்கான கோரிக்கைகள் மட்டுமே. யசோதாவைக் கல்யாணம் செய்யக் கோரிக்கையாளர்கள் தயாரில்லை. யசோதாவுக்கோ காதலைவிடக் கல்யாணமே முக்கியமானதாகயிருந்தது. அதை வைராக்கியம் என்றே சொல்லலாம். சில வருடங்களாகவே அவரது மனிதில் பழுக்கக் காய்ச்சிய ஆணியால் அந்த வைராக்கியம் ஆழமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    யசோதா நிச்சயமாகவே ஓர் அவசரக் குடுக்கை கிடையாது. தீர ஆலோசித்துத்தான் ஒரு முடிவெடுப்பார். முக்கியமாக, தீர ஆலோசிப்பது போலப் பாவனை செய்து மண்டையைக் குழப்பிக்கொண்டு பிரச்சினைகளை ஆறப்போடும் வழக்கம் அவரிடம் கிடையாது. அய்ந்து நிமிடங்களுக்குள் அவரால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். யசோதா கடைத்தெருவிலிருந்து தன்னுடைய அறைக்குத் திரும்பியதும் அய்ந்து நிமிடங்கள் கண்களை மூடி யோசித்தார். ஆறாவது நிமிடத்தில் ‘மணமகள் தேவை’ விளம்பரத்திலிருந்த இலக்கத்திற்குத் தொலைபேசி வளையத்தைச் சுழற்றினார்.

    மறுமுனையில் “ஹலோ” என்ற குரல் ஒலிக்கும் தருணத்திற்காக யசோதாவின் காது குவிந்திருந்தபோது “அமரேசன்” என்ற சாந்தமான குரல் கேட்டது.

    “வணக்கம், என்னுடைய பெயர் யசோதா இராசையா… நீங்கள் ஒட்டியிருந்த மணமகள் தேவை விளம்பரத்தைப் பார்த்தேன்…”

    அய்ந்து நிமிடங்கள் மட்டுமே அவர்கள் உரையாடினார்கள். யசோதா வசிக்கும் ஊரிலுள்ள கோப்பிக் கடையொன்றில் வரும் சனிக்கிழமையன்று இருவரும் சந்தித்து நேரில் பேசுவதாக முடிவானது.

    சந்திப்பு நடந்த அன்று அமரேசன் கருப்பு நிறத்தில் காற்சட்டையும், கருநீல நிறத்தில் முழுக்கைச் சட்டையும் அணிந்து வந்திருந்தது யசோதாவுக்கு இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. அமரேசன் அய்ந்து அடிகள் உயரமேயுள்ள குள்ளமான மனிதர். அவரது உடலும் குழந்தையின் உடல்போல சிறிதாகவேயிருந்தது. யசோதாவின் வாட்டசாட்டமான உடல்வாகுக்குச் சுலபமாக அமேரசனைத் தூக்கித் தன்னுடைய இடுப்பில் வைத்துக்கொள்ள முடியும். அமரேசனுக்கு உருண்டைக் கண்கள். தலைமுடி சரியாக வாரப்படாமல் கலைந்து கிடந்தது. அடர்த்தியான மீசை வைத்திருந்தார்.

    அமரேசன் அண்ணாந்து யசோதாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே யசோதாவுடன் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டது யசோதாவுக்குப் பிடித்திருந்தது. கைகுலுக்கும் போது கண்களைப் பார்ப்பவர்களை யசோதா அரிதாகவே சந்தித்திருக்கிறார். அமரேசன் மிக மென்மையாகவும் சரளமாகவும் உரையாடலை ஆரம்பித்தார். அந்தச் சரளம் யசோதாவையும் தொற்றிக்கொண்டது.

    “யசோதா… நான் பிரான்ஸில் பத்து வருடகாலமாக இருக்கிறேன். மெக்கானிக்காக வேலை செய்கிறேன்”

    “நான் இங்கே வந்து இரண்டு வருடங்கள்தான்… பத்து வருட விசா இருக்கிறது”

    “நான் எண்பத்து மூன்றாமாண்டு கலவரத்தோடு இலங்கையிலிருந்து கிளம்பி வந்தவன்”

    “நான் கல்யாணம் செய்வதற்காக இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டவள்” என்றார் யசோதா. அமரேசனிடம் எதையுமே மறைத்துப் பேசக்கூடாது என அவர் தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார்.

    3

    யசோதாவுக்குப் பின்னாலும் வயதுக்கு வந்த நான்கு பெண் பிள்ளைகள் இருந்ததால், யசோதாவின் தகப்பனார் ‘மரம்’ இராசையா யசோதாவுக்குச் சீக்கிரமே மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருந்தார். அவர் மிகவும் பிடிவாத குணமுள்ள மனிதர். அதனால்தான் அவருக்கு ஊருக்குள் ‘மரம்’ என்ற பட்டம் கிடைத்திருந்தது. தகப்பனாரை எதிர்த்துப் பெண் பிள்ளைகள் பேசுவது என்ற பேச்சுக்கே அந்தக் குடும்பத்தில் இடமில்லை. சொல்லப்போனால் அவர்கள் தகப்பனாருடன் பேசுவதேயில்லை. அதுதான் அங்கே வழக்கம்.

    இரண்டு மூன்று வருடங்களாகப் பலர் யசோதாவைப் பெண் பார்க்க வந்தும் எதுவுமே சரிவரவில்லை. இவ்வளவுக்கும் ‘மரம்’ இராசையாவிடம் காசுபணத்திற்கும் சொத்துப்பத்திற்கும் குறைவில்லை. மாப்பிள்ளைக்குப் பார்த்துப் பாராமல் சீதனம் கொடுப்பதற்கு அவர் தயாராகவேயிருந்தார். ஆனால், அதைத்தாண்டியும் யசோதாவின் தோற்றமே எல்லாவற்றுக்கும் குறுக்கே தடையாக நின்றது. காசுபணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைத்திருந்த ‘மரம்’ இராசையா கூடச் சற்றே தளர்ந்து போனார்.

    யசோதாவைப் பெண் பார்த்தவர்களில் சிலர் ‘நோயாளிப் பெண்’ என்று யசோதாவின் காதுபடவே பேசியிருக்கிறார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு யசோதாவின் காதுகள் அவிந்துபோயிருந்தன. அப்போதெல்லாம் யசோதா அழுதுகொண்டிருந்தார். திமிங்கலத்தின் வாந்தி திரண்டு மீனாம்பல் ஆவது போன்று யசோதாவின் கண்ணீர் திரண்டு வைராக்கியமாகியது. ‘நான் கல்யாணம் பண்ணிக் குழந்தை பெற்று உங்களுக்கு முன்னே வாழ்ந்து காட்டுவேன்’ என்ற அந்த வைராக்கியத்தை நினைத்துக்கொண்டேதான் மேதினியைப் பெற்றெடுக்கும்போது யசோதா பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டார். இவ்வளவு மனத்திடமுள்ள பெண்ணைத் தாங்கள் பார்த்ததேயில்லை எனப் பிரசவம் பார்த்த தாதிகள் கூடச் சொன்னார்கள்.

    யசோதா பருவமடைந்த பின்பாகத்தான் அவரது உடல் மாறத் தொடங்கியது. முன்தலையிலிருந்து முடிகள் உதிர்ந்து நெற்றி மேலேறியது. பின் கழுத்துத் தோலில் முதலில் விழுந்த சுருக்கம் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவிவிட்டது. அவரது சருமம் வரண்டுபோய் மீன் செதில் போல சிறிய சிறிய வெள்ளைப் புள்ளிகள் உடலில் பெருகத் தொடங்கின. இந்தக் குறைபாட்டைக் குணப்படுத்த முடியாது என்று யாழ்ப்பாணத்திலுள்ள எல்லா வைத்தியர்களும் கைவிரித்து விட்டார்கள். கொழும்புக்குப் போயும் பார்த்தார்கள். அங்கேயும் எதுவும் நடக்கவில்லை. ஆனால், அங்கே ஓர் ஆலோசனை கிடைத்தது. குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் காலப்போக்கில் இந்தக் குறைபாடு மறைந்துவிடும் எனச் சொன்னார்கள். இந்திரா காந்திக்கு இதேபோன்று குறைபாடு ஏற்பட்டபோது, நேரு புத்திசாலித்தனமாக மகளை சுவிற்ஸர்லாந்துக்கு அனுப்பி வைத்தார் என்றொரு தகவலைக் கூட ஒரு மருத்துவர் சொன்னார். இதற்குப் பின்பாகத்தான் யசோதாவின் தகப்பனார் வெளிநாட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்.

    அவ்வாறாகத் தேடிய முதலாவது சம்பந்தமே கைகூடிவிட்டது. மாப்பிள்ளையின் பெயர் சந்திரன். பிரான்ஸில் ஒரு நிறுவனத்தில் மனேஜராக வேலை பார்க்கிறானாம். வெளிநாட்டு மாப்பிள்ளை என்பதால், சம்பந்தி வீட்டார் கொஞ்சம் அதிகமாகவே சீதனப் பணம் கேட்டார்கள். யசோதாவின் தகப்பனார் அதற்கும் சம்மதித்தார். தன்னுடைய மகளின் சருமப் பிரச்சினை குளிர்ப் பிரதேசத்தில் வாழ்ந்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள் என்று சம்பந்தி வீட்டாரிடம் விளக்கிச் சொல்லும்போது, ஆதாரத்திற்கு இந்திரா காந்தியின் கதையையும் சேர்த்தே சொன்னார். ‘மகளின் புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பிவிட்டீர்கள்தானே’ என்று ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சம்பந்தியிடம் கேட்டார். யசோதாவின் உடல் தோற்றத்தைக் குறித்துச் சம்பந்தி வீட்டார் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாப்பிள்ளையின் சாதகக் குறிப்போடு யசோதாவின் சாதகக் குறிப்பு கச்சிதமாகப் பொருந்திப் போனதே அவர்களுக்குப் பெரும் திருப்தியளிப்பதாகச் சொன்னார்கள். நாடு இருக்கும் நிலையில் மாப்பிள்ளை இலங்கைக்கு வருவது சாத்தியமில்லை என்பதால், யசோதாவைப் பயண முகவர் மூலமாக பிரான்ஸுக்கு அனுப்பும் செலவையும் ‘மரம்’ இராசையாவே ஏற்றுக்கொண்டார்.

    கடுமையாகப் பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் இத்தாலியிலிருந்து இரயிலில் எல்லையைக் கடந்து யசோதா பிரான்ஸுக்குள் நுழைந்தார். பாரிஸ் இரயில் நிலையத்தில் காத்திருந்த சந்திரன் கம்பளி ஆடைகளால் மூடப்பட்டுக் குளிரில் நடுங்கியவாறு இரயிலில் இருந்து இறங்கிய யசோதாவைப் பார்த்ததும் முகத்தில் ஒரு வரண்ட புன்னகையை மட்டுமே காட்டினான். மாப்பிள்ளை கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவர் என்றுதான் மாப்பிள்ளையின் தகப்பனார் சொல்லியிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே சந்திரனின் தோற்றம் யசோதாவைக் கவர்ந்துவிட்டது. மிக நாகரிகமாக அவன் உடையணிந்திருந்தான். அவனுடைய நெற்றியில் இடைவிடாது நெளிந்துகொண்டிருந்த யோசனை ரேகைகள் அவனை அறிவாளி போலக் காண்பித்தன.

    யசோதாவைக் காரில் ஏற்றிக்கொண்டு சந்திரன் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து வீடு வந்து சேரும்வரை இருவரும் மிகச் சில சம்பிரதாய வார்த்தைகளையே பேசிக்கொண்டார்கள்:

    “நீங்கள் எங்கே படித்தீர்கள்?” என்று சந்திரன் கேட்டான்.

    “ஹொலி ஃபமிலி கொன்வென்ட்”

    “இங்கே உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருக்கிறார்களா?” எனச் சந்திரன் முகத்தைத் திருப்பாமலேயே கேட்டான். யசோதாவின் குடும்ப விபரங்களையெல்லாம் சம்பந்தி வீட்டாருக்கு ‘மரம்’ இராசையா தெளிவாகவே சொல்லியிருந்தார். சம்பந்தி வீட்டார் தங்களது மகனுக்கு அவற்றைச் சரிவரத் தெரிவிக்கவில்லைப் போலிருக்கிறது என்று யசோதா நினைத்துக்கொண்டார்.

    “எனக்கு ஒரேயொரு தம்பி இருந்தான். அவன் இயக்கத்தில் இருந்தவன். கோட்டைச் சண்டையில் வீரச்சாவு” என்று யசோதா சொன்னபோது ‘அய்யோ’ என்றொரு மெல்லிய சத்தத்தை மட்டுமே எழுப்பிவிட்டுச் சந்திரன் முகத்தைப் பத்துத் தடவைகள் குறுக்குமறுக்காக வேகமாக அசைத்துக்கொண்டான்.

    சந்திரன் பேசும் வார்த்தைகளை விட அவனது முகம் கோணல்மாணலாகிச் சொல்லும் செய்திகளே அதிகமாகயிருந்ததை யசோதா கவனித்தார். அவனால் முகத்தை ஒரு விநாடி கூட ஒழுங்காக வைத்திருக்க முடியவில்லை. சந்திரன் தன்னைத் தொட்டுப் பேசுவான் என யசோதா எதிர்பார்த்திருந்தார். அவன் தொடும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பல நாட்களாக மனதிற்குள் ஒத்திகையும் செய்திருந்தார். ஆனால், சந்திரன் வீதியிலிருந்த தனது பார்வையை யசோதாவின் பக்கம் திருப்பவேயில்லை.

    சந்திரனின் வீட்டுக்குள் நுழைந்ததும் யசோதா கம்பளி மேலங்கிகளைக் களைந்தபோது, யசோதாவின் கைகளையும் கழுத்தையும் நெற்றியையும் பாதங்களையும் சந்திரன் உற்றுப்பார்த்தான். “நீங்கள் கை கால் முகத்தைக் கழுவிக்கொண்டு வாருங்கள். அதற்குள் நான் என்னுடைய அப்பாவுக்குத் தொலைபேசி செய்து நீங்கள் வந்து சேர்ந்த செய்தியைத் தெரிவித்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே சந்திரன் குளியலறைக் கதவைத் திறந்துவிட்டான்.

    குளியலறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுவிட்டு, அந்தப் புதினமான குளியலறையை எப்படி உபயோகிப்பது, தண்ணீர் குழாயின் குழிழை எந்தப் பக்கம் திருப்புவது என்றெல்லாம் யசோதா யோசித்துகொண்டிருந்தபோது, சந்திரன் குரலை அடக்கிப் பேசும் மெல்லிய சத்தத்தை அவர் கவனித்தார். ஒரு கட்டத்தில் திடீரென சந்திரன் குரலை உயர்த்திக் கத்தினான்:

    “நீங்கள் கொழுத்த சீதனம் வாங்குவதற்காக ஒரு கொழுத்த எருமைமாட்டையா என்னிடம் அனுப்பி வைப்பீர்கள். இத்தனை வருடங்களாகக் குளிருக்குள் கிடந்து இரவு பகலாக நான் உழைத்து அனுப்பிய பணம் உங்களுக்குப் போதாதா? உடனேயே சீதனப் பணத்தை இந்தப் பெண்ணின் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுங்கள். அதுவரை என்னைத் தொலைபேசியில் அழைக்காதீர்கள். இவளைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருக்கிறது. இவளுடைய தோல் பாம்புத் தோல் போலிருக்கிறது. அந்தச் செத்த தோலிலிருந்து ஒரு கெட்ட நாற்றம் வருவதை காரில் வரும்போதே நான் கவனித்தேன். இப்போது அந்தத் துர்நாற்றம் என்னுடைய வீடு முழுவதும் பரவியிருக்கிறது. இவளுடன் ஒரு விநாடி கூட என்னால் இருக்க முடியாது.”

    யசோதா தன்னுடைய உதடுகளைக் குவித்து உள்ளங்கையில் ஊதி, உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். அவருடைய உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. சட்டெனக் குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து கூடத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். அவருக்கு மயக்கம் வருவது போலிருந்தது.

    “போகலாம்” என்றவாறு சந்திரன் யசோதாவின் பயணப்பையைத் தூக்கிக்கொண்டான். யசோதாவின் இருதயம் மரத்துப் போயிருந்தது. மூளை மட்டும் அவ்வப்போது விழித்துப் பார்த்தது. இவன் தன்னை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போகிறான் என்று அவரது மூளை சொன்னபோது, அவர் சட்டென நாற்காலியிலிருந்து எழுந்து தரையில் உட்கார்ந்துகொண்டார். இலங்கைக்குத் திரும்பிப் போவதைப் பற்றி நினைக்கும்போதே யசோதாவின் கண்கள் மங்கலடைந்து மேலே செருகிக்கொண்டன. கல்யாணம் செய்வதற்காகத் தூரதேசம் சென்ற பெண் சில நாட்கள் கழித்துத் தனியாகத் திரும்பி வந்தால், அந்த அவமானத்தைக் குடும்பம் எப்படி எதிர்கொள்ளும்? அயலவரின் முகத்தில் எப்படி யசோதாவால் விழிக்க முடியும்? அவருக்கு இனி எப்போதுமே கல்யாணம் நடக்காது.

    “போகலாம்” என்று சந்திரன் மறுபடியும் சொன்னான். மெதுவாகத் தலையை நிமிர்த்திய யசோதா சந்திரனைப் பார்த்து “எங்கே?” என்று கேட்டார். “நீங்கள் தங்கப் போகும் இடத்திற்கு” என்று சந்திரன் மெல்லிய குரலில் சொன்னான்.

    சற்று நேரம் கழித்து, அகதிகளுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனமொன்றின் வாசலில் யசோதாவை இறக்கிவிட்டுச் சந்திரன் புறப்பட்டான். அப்போதும் அவன் வரட்சியாகப் புன்னகைத்தது போல யசோதாவுக்குத் தெரிந்தது. எனவே யசோதாவும் உதடுகளைப் பிரித்துப் பற்களைக் காட்டினார். அதுவொரு வைராக்கியப் புன்னகை போலிருந்தது.

    4

    “அந்தக் கொழும்பு மருத்துவர் சொன்னது உண்மையில்லை. குளிர்ப் பிரதேசத்திற்கு வந்தும் என்னுடைய உடல்நிலையில் மாற்றமில்லை” என்று யசோதா சொன்னபோது, அமரேசன் தனது வலது கையை நீட்டி யசோதாவின் இடது கையைப் பற்றினார். சரியாக ஆறு வாரங்கள் கழித்து அவர்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள்.

    யசோதா வேலை செய்யும் சலவைத் தொழிற்சாலை மிகப் பெரியது. மருத்துவமனைகள், ஆய்வுகூடங்கள், நட்சத்திரத் தங்குவிடுதிகள் போன்றவற்றுக்கான துணிகளை இங்கே வெளுத்து அனுப்பிவைப்பார்கள். சலவை செய்யும் பிரிவில் யசோதாவுக்கு வேலை. நூறு பேர்களுக்கு மேல் வேலை செய்யும் அந்தத் தொழிற்சாலையில் இயந்திரப் பராமரிப்பாளராக அமரேசனுக்கும் ஒரு வேலை கிடைத்துவிட்டது. தொழிற்சாலைக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறினார்கள். அமரேசனின் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களே வீட்டின் பாதி இடத்தை அடைத்துக்கொண்டன. அந்த வீட்டில்தான் மேதினியை யசோதா கருத்தரித்தார்.

    ஒரு சனிக்கிழமையன்று, பாரிஸ் நகரத்திற்குச் சென்றிருந்த அமரேசன் திரும்பி வரும்போது, முகத்தில் இரத்தக் காயங்களுடன் வந்தார். அவரது இடது கண் வீங்கிப் பொங்கியிருக்க, கீழுதடு கிழிந்திருந்து. “என்ன நடந்தது?” எனப் பதறிப் போய் யசோதா கேட்டபோது “அரைப் பாஸிஸ்டுகள் என்னைத் தாக்கிவிட்டார்கள்” என்று அமரேசன் முணுமுணுத்தார். அவர் மிகவும் பயந்து போயிருந்தார். அவரது உடல் நடுக்கம் நிற்பதாகயில்லை. இரவு முழுவதும் தூக்கத்திலேயே ஆங்கிலத்தில் புலம்பிக்கொண்டிருந்தார்.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாரிஸ் நகரத்திற்குப் போவதென்றாலே அமரேசன் அஞ்சி நடுங்கினார். எப்போதாவது செல்ல நேரிட்டாலும் யசோதாவுடனேயே போவார். யசோதாவின் உடல் மறைவில் நிழல்போல யசோதாவைப் பின்தொடர்வார். யசோதாவோடு ஒரு கோப்பிக் கடையில் உட்கார்ந்து கோப்பி குடிக்கும்போதும் மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்தவாறேயிருப்பார்.

    5

    படுக்கையறைக்குள் சித்திரப்பேழையுடன் உட்கார்ந்திருந்த யசோதாவுக்கு வீட்டுக் கதவு அறைந்து மூடப்படும் சத்தம் கேட்டது. ‘என்னிடமுள்ள வைராக்கியக் குணத்தில் பாதியாவது மகளிடம் இல்லாமல் போய்விடுமா’ என நினைத்துக்கொண்டே கூடத்திற்கு வந்தவர் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தபோது, மேதினி தெருவில் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. யசோதா மீண்டும் சித்திரப்பேழையுடன் சாய்மனை நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். திடீரென ஓர் உந்துதல் ஏற்படக் கைத்தொலைபேசியை எடுத்து, கூகுளில் என்று தட்டிப் பார்த்தார்.

    சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் என்று கூகுள் பதிலளித்தது. ‘மேதினி வாயைத் திறந்தாலே பொய்’ என்று முணுமுணுத்தவாறே, அந்த நான்கு நாடுகளின் பெயர்களையும் கண் வெட்டாமல் யசோதா பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு, அவர் உலக வரைபடத்தை ஆராய்ந்தார். எல்லா நாடுகளுமே பிரான்ஸிலிருந்து மிகத் தொலைவில் இருந்தன. லாவோஸில் கடல் இல்லை. மற்றைய மூன்று நாடுகளின் பெயர்களையும் யசோதா மனதில் பதிய வைத்துக்கொண்டார். இவற்றில் ஏதாவதொரு நாட்டின் கடலில் அமரேசனின் சாம்பலைக் கரைக்க வேண்டும். ஆனால், அவ்வளவு தூரத்திலுள்ள முன்பின் தெரியாத நாடொன்றுக்கு எப்படித் தனியாகப் போவது என்று யசோதா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, மேதினியிடம் உதவி கேட்பதில்லை என்ற வைராக்கியம் அவரது மனதில் உருவாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் வைராக்கியம் கொள்ளும் இந்தக் குணம் நல்லதா கெட்டதா என்பது யசோதாவுக்குத் தெரியாது. ஆனால், கசங்கிப் போன மனதோடு தத்தளிப்பதைவிட, வைராக்கியத்தோடு வாழ்வதுதான் அவருக்கு இயல்பாகியிருந்தது.

    தன்னுடைய அப்பாவோடு மேதினி நீளநீளமாகப் பல விஷயங்களைப் பற்றியும் உரையாடுகையில் யசோதா அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். அந்த உரையாடல்களில் ‘வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தற்செயல்களே’ என்று அடிக்கடி மேதினி சொல்வாள். அவ்வாறானதொரு தற்செயல் விரைவிலேயே யசோதாவுக்கும் நிகழ்ந்தது.

    அன்றைக்கு யசோதா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வரும்போது, வழியிலுள்ள சிறிய பலசரக்குக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையைத் தனியொருவராக நடத்திவரும் வெள்ளைக்காரப் பெண்மணியான கரோலினுக்கு அறுபது வயதிருக்கும். யசோதாவுக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட முப்பது வருடப் பழக்கம். கரோலினுக்குப் பூனைகளோடுதான் சிநேகம் அதிகம். அவரது கடையில் எப்போதும் குறைந்தது பத்துப் பூனைகளாவது தூங்கிக்கொண்டிருக்கும். கரோலின் அணியும் ஆடைகளிலும் பூனைப் படம் இருக்கும். அவர் அணியும் தொப்பியில் பூனைப்படம் பொறிக்கப்பட்டிருக்கும். அன்றைக்குக் கடையின் கதவில் பூனை வடிவத்தில் கத்திரிக்கப்பட்டிருந்த ஒரு துண்டு வெள்ளைக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தத் துண்டில் ‘வரும் முதலாம் தேதியிலிருந்து பத்து நாட்களுக்குக் கடை மூடப்பட்டிருக்கும்’ என எழுதப்பட்டிருந்தது.

    தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டவாறே “கரோலின் ஏன் கடையை மூடுகிறாய்?” என்று யசோதா கேட்டார்.

    “எனக்கும் ஓய்வும் மகிழ்ச்சியும் வேண்டாமா யசோ… பத்து நாட்கள் விடுமுறையில் போகிறேன். இந்தப் பூனைகளைக் கொண்டுபோய் எனது சகோதரியின் வீட்டில் விட்டுவிட்டு கியூபாவுக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியதுதான்.”

    “எங்கே கியூபாவுக்கா?” என்று படபடப்புடன் கேட்டார் யசோதா. ‘ஆம்’ என்று தலையசைத்த கரோலின் நின்ற நிலையிலேயே இடுப்பை நெளித்து ஒரு சிறிய நடனமே ஆடிவிட்டார்.

    யசோதா அய்ந்து நிமிடங்கள் கடைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தார். ஆறாவது நிமிடத்தில் கரோலினிடம் “நானும் உன்னுடன் வரட்டுமா கரோலின்?” என்று கேட்டார்.

    இடுங்கியிருந்த தனது நீலக் கண்களை விரித்து யசோதாவை ஆச்சரியத்துடன் பார்த்த கரோலின் “அருமையடி பெண்ணே அருமை! என்னுடன் எலின் டீச்சரும் வரயிருக்கிறார். நீ இதுவரை அங்கே போனதில்லை இல்லையா… எங்களுடன் வா! நாங்கள் உனக்கு அற்புதங்களைக் காட்டித் தருகிறோம்” என்று துள்ளிக் குதிக்காத குறையாகச் சொன்னார்.

    எலின் டீச்சரையும் யசோதாவுக்குத் தெரியும். எலினுக்கும் யசோதாவின் வயதுதான் இருக்கும். ‘கோட் டிவார்’ நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட கருப்புப் பெண்மணி. மேதினி சிறுமியாக இருந்தபோது வீட்டுக்கே வந்து மேதினிக்குப் பிரெஞ்சு மொழி கற்பித்தவர். யசோதா சமைக்கும் குத்தரிசிச் சோற்றுக்கும் மீன் குழம்புக்கும் எலின் டீச்சர் பெரும் ரசிகை.

    “நீங்கள் கியூபாவில் கடற்கரைக்குப் போவீர்களா கரோலின்?” என்று யசோதா கேட்டபோது, “கியூபாவின் நான்கு பக்கமும் கடல்” எனக் கரோலின் மிகையான உற்சாகத்துடன் கைகளை அகல விரித்தார்.

    யசோதா வீட்டுக்குத் திரும்பியதும், கரோலின் கொடுத்திருந்த பயண முகவரின் இலக்கத்திற்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். விமானச் சீட்டு, ஏழு பகலும் ஆறு இரவும் கடற்கரை நட்சத்திர விடுதிக்கான கட்டணம், மூன்று வேளை உணவு உட்பட ஆயிரத்து இருநூறு ஈரோக்கள் கட்டணம் என்று பயண முகவர் சொன்னார். கட்டணத்தைப் பத்து மாதத் தவணைகளில் செலுத்துவது என ஏற்பாடானது.

    யசோதா மேசையிலிருந்த சித்திரப்பேழையை எடுத்து இரண்டு கைகளிலும் ஏந்தித் தனது கண்களுக்கு நேராக வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு சித்திரப்பேழையை அதற்கான அட்டைப்பெட்டியில் வைத்து மூடினார். வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. “Bonjour அம்மா” எனச் சொல்லிக்கொண்டே மேதினி உள்ளே நுழைந்தாள்.

    6

    பாரிஸிலிருந்து புறப்படயிருந்த அந்த விமானம் வடக்கு அத்திலாந்து சமுத்திரத்திற்கு மேலாகப் பறந்து, சாத்தானின் முக்கோணம் எனப்படும் பெர்முடா முக்கோணத்தையும் கடந்து பத்து மணிநேரத்தில் கியூபாவின் ‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் தரையிறங்கும். விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே யசோதாவும், கரோலினும், எலினும் விமான நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். சற்று நேரம் கழித்து, மேதினி அரக்கப்பரக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தாள். அவளது தோளில் ஒரு சிறிய பயணப்பை மாட்டப்பட்டிருந்தது.

    மேதினி தாயாரைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். அவ்வாறே கரோலினையும் எலினையும் முத்தமிட்டாள். பின்பு, தோளிலிருந்து பயணப்பையைக் கழற்றி எடுத்துத் தாயாரிடம் கொடுத்துவிட்டு, அதை கியூபாவுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள்.

    “இந்தப் பைக்குள் என்னயிருக்கிறது மேதினி?”

    “சிறுவர்களுக்கான சில ஆடைகள், பேனாக்கள், வண்ணப் பென்ஸில்கள் உள்ளன. அங்கேயுள்ள குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுங்கள் அம்மா” என்று சொல்லிவிட்டு உடனேயே மேதினி கிளம்பிவிட்டாள். கொஞ்ச நேரம் காத்திருந்து தாயாரை வழியனுப்பி வைக்க அவளுக்குப் பொறுமையில்லை.

    விமானத்தில் மூவருக்குமே அருகருகே இருக்கைகள். கரோலின் தன்னுடைய ஜன்னலோர இருக்கையை யசோதாவுக்கு விட்டுக் கொடுத்திருந்தார். யசோதா ஓர் அட்டைப்பெட்டியை இரண்டு கைகளாலும் பற்றிப் பிடித்து மடியில் பத்திரமாக வைத்திருப்பதைக் கவனித்த கரோலின் ‘அது என்ன?’ என்று யசோதாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தத்தளித்துக்கொண்டிருப்பது போல யசோதாவுக்குத் தோன்றியது. அவர் கரோலினிடம் “இது எனது கணவரின் சாம்பல். இதைக் கடலில் கரைப்பதற்காகத்தான் நான் கியூபாவுக்கு வருகிறேன்” என்றார்.

    புன்னகைத்த கரோலின் “நானும் எலினும் எங்களது சாம்பலைக் கரைப்பதற்காகவே வருகிறோம்” என்றார்.

    7

    ‘ஜோசே மார்த்தி’ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது மாலை ஆறு மணியாகிவிட்டது. வெப்பத்தைத் தணிக்கும் ஆடைகளும், ஓலைத் தொப்பிகளும், இரப்பர் செருப்புகளும் அணிந்திருந்த உல்லாசப் பயணிகளால் அந்தச் சிறிய விமான நிலையம் நிரம்பி வழிந்தது. பயண முகவர் ஏற்பாடு செய்திருந்த சொகுசுப் பேருந்து விமான நிலையத்தின் வாசலில் தயாராகக் காத்திருந்தது. அதனுள்ளே ஏறிக்கொண்ட கரோலினும் எலினும் அருகருகாக உட்கார்ந்துகொள்ள, யசோதா இங்கேயும் ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் அழகிய கைத்தடி வைத்திருந்த பிரெஞ்சுக் கிழவர் ஒருவர் உட்கார்ந்துகொண்டார். விமான நிலையத்தின் முற்றத்தில் சே குவேராவின் சிலை கம்பீரமாக நின்றிருந்தது.

    அங்கிருந்து இரண்டு மணிநேரப் பயணத் தூரத்திலிருந்த ‘வரடேரோ’ தீவிலுள்ள நட்சத்திர விடுதியிலேயே இவர்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. பேருந்து சென்ற பாதையில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள். பாதையோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பலகை வீடுகள் தென்பட்டன. வழி முழுவதும் சிவப்புப் பதாதைகள் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பதாகைகளில் நட்சத்திரங்களின் கீழே சே குவேராவும், பிடல் கஸ்ட்ரோவும், ராவுல் கஸ்ட்ரோவும் நடந்துகொண்டிருந்தார்கள். தூரத்தே மலைகளும் சமவெளிகளும் மாறி மாறித் தோன்றிக்கொண்டிருந்தன.

    பாலத்தைக் கடந்து வரடேரோ தீவுக்குள் பேருந்து நுழைந்தபோது, அந்த இடம் வழியில் பார்த்த காட்சிகளிலிருந்து வேறுபட்டிருந்தது. தெருவெங்கும் பல வண்ண மின்குழிழ் சரங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. உயரமான நட்சத்திர விடுதிகள் வரிசையாக இருந்தன. தெருவெங்குமிருந்த மதுச்சாலைகளில் அமர்ந்து உல்லாசப் பயணிகள் குடித்துக்கொண்டிருந்தார்கள். யசோதா பேருந்திலிருந்து இறங்கியபோது, நான்கு புறங்களிலுமிருந்த நடன விடுதிகளிலிருந்து மிதந்து வந்த ஸ்பானியத் துள்ளல் பாடல்கள் அவரது செவிகளை அதிரப் பண்ணின.

    நட்சத்திர விடுதியில் யசோதாவுக்கு ஒதுக்கப்பட்ட அறை இரண்டாவது மாடியில் கடலைப் பார்த்தவாறிருந்தது. அறையின் பல்கனிக்கு வந்து யசோதா கடலைப் பார்த்தார். மெக்ஸிக்கோ குடாவின் தணிந்த அலைகள் விடுதியை மெல்லத் தழுவுவது போல நளினமாக வந்து திரும்பிச் சென்றன. அப்போது அறையின் அழைப்பு மணி ஒலித்தது. யசோதா அறைக்குள் சென்று கைப்பையைத் துழாவி மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டார். வாசற் கதவிலிருந்த கண்ணாடித் துவாரத்தின் வழியாக வெளியே பார்த்தார். கரோலினும் எலினும் தங்களை அலங்கரித்துக்கொண்டும், மினுங்கும் ஆடைகளை அணிந்துகொண்டும் வெளியே நின்றிருந்தார்கள்.

    8

    காலையில் அய்ந்து மணிக்கே யசோதாவுக்கு விழிப்புத் தட்டிவிட்டது. குளித்துவிட்டு வந்தவர் சேலை கட்டிக்கொள்ளத் தொடங்கினார். அவர் கடைசியாகச் சேலை கட்டியது அவர்களுடைய பதிவுத் திருமணத்தின் போதுதான். கியூபா வருவதென்று முடிவானவுடனேயே இந்தச் சேலையைப் பாரிஸ் தமிழ்க் கடைத்தெருவுக்குச் சென்று யசோதா புதிதாக வாங்கியிருந்தார். கருப்பு நிறத்தில் மஞ்சள் நிறக் கரையுள்ள அந்தச் சேலையைக் கட்டி முடித்ததும், அட்டைப்பெட்டியிலிருந்து சித்திரப்பேழையை வெளியே எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அய்ந்து நிமிடங்கள் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். ஆறாவது நிமிடத்தில் அறையிலிருந்து வெளியே வந்து வெற்றுப் பாதங்களுடன் கடலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    கடற்கரையில் சீருடையணிந்திருந்த விடுதிக் காவலாளிகள் இருவர் மட்டுமே நின்றிருந்தார்கள். மற்றப்படிக்குக் கடலும் கரையும் வெறுமையாகயிருந்தன. அந்தக் கடல் சலனமின்றிக் கிடந்தது. யசோதா கடல் நீருக்குள் இறங்கி அவரது முழங்கால்கள் வரையான ஆழம்வரை சென்றார். சித்திரப்பேழையின் மூடியைத் திறந்து பேழையைக் கீழே சரித்தார். வெளிர் நீலக் கண்ணாடி போன்றிருந்த நீரில் அமரேசனின் சாம்பல் பூவாகப் பரவிச் சென்றது. யசோதா சட்டெனக் கண்களை மூடிக்கொண்டார். வெற்றுச் சித்திரப்பேழையை இறுக மூடிவிட்டு அதையும் கடல் நீரில் விட்டார். பின்பு, கரைக்கு வந்து கடலுக்கு முதுகு காட்டி மணலில் உட்கார்ந்துகொண்டு அந்த நட்சத்திர விடுதியைப் பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் கடற்கரையில் சந்திக்கலாம் என்று நேற்றிரவே கரோலினும் எலினும் அவரிடம் சொல்லியிருந்தார்கள்.

    அந்த விடுதி கடற்காகத்தின் வடிவத்தில் கட்டப்பட்டிருந்தது. மையக் கட்டடத்திற்கு இருபுறங்களிலும் பெருஞ்சிறகுகள் போன்று வரிசையாக மூன்றடுக்குகளில் ஆடம்பர அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கச் சிறகின் நுனியில் யசோதாவின் அறை இருந்தது. அவரது அறைக்கு எதிரேயே கரோலின், எலின் இருவரின் அறைகளுமிருந்தன. கடற்கரையில் இரண்டு மதுச்சாலைக் குடில்கள் இருந்தன. ஒரு சாய்ப்புச் சாமான் கடையுமிருந்தது. அவற்றுக்கு நடுவே நீலப் பாம்பு போல ஒரு நீச்சல்குளம் வளைந்து சென்றது.

    விடுதிச் சிறகுகளுக்குள் உறங்கிக் கிடந்தவர்கள் நீச்சலுடைகளுடன் கடலை நோக்கி வரத் தொடங்கினார்கள். கிழக்குப் பக்கச் சிறகிலிருந்து வெளிவந்த ஒரு கூட்டம் இளம் பெண்கள் இடுப்பில் மட்டுமே கச்சையணிந்து திறந்த முலைகளுடன் யசோதாவை நோக்கி ஓடிவந்தார்கள். யசோதா மெதுவாகக் கடலை நோக்கித் திரும்பிக்கொண்டார். கடலுக்குள் இப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். இந்த மக்கள் எப்படி, எப்போது கடலுக்குள் தோன்றினார்கள் என்று யசோதாவுக்குத் தெரியவில்லை.

    அந்த மக்களில் முதியவர்களிலிருந்து குழந்தைகளை வரை இருந்தார்கள். அவர்கள் கருப்பு, மஞ்சள், வெள்ளை என எல்லா நிறங்களிலுமிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் கரையேறவில்லை. கடலுக்குள் நின்றுகொண்டேயிருந்தார்கள். உல்லாசப் பயணிகள் கடலுக்குள் இறங்கியபோது அவர்களை நோக்கிக் கூட்டமாகச் சென்றார்கள். அப்போது, இடுப்பில் நிர்வாணக் குழந்தையைச் சுமந்திருந்த ஒரு கருப்புப் பெண் கடலுக்குள் நின்று யசோதாவை நோக்கிக் கையசைத்தார். யசோதாவும் அந்தப் பெண்ணை நோக்கிக் கையசைத்தார். அந்தப் பெண் கடலுக்குள் வருமாறு யசோதாவை நோக்கித் திரும்பத் திரும்பச் சைகை காட்டிப் புன்னகைத்தார். யசோதா எழுந்து நடந்து கடலின் விளிம்புக்குச் சென்றார்.

    அந்தக் கருப்புப் பெண் ஆங்கிலத்தில் “எங்களது நாட்டுக்கு வந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு அம்மா. நீங்கள் அணிந்திருக்கும் உடை மிக அழகாகவுள்ளது. எனது குழந்தைக்கு ஒரு சட்டை வாங்கத் தயவு செய்து பணம் கொடுங்கள். இவளிடம் ஒரு சட்டை கூடக் கிடையாது” என்றார். அந்தப் பெண்ணைக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். மேதினி கொடுத்து அனுப்பிய பயணப்பை அங்கே இருக்கிறது.

    யசோதா அந்தப் பயணப்பையை எடுத்துக்கொண்டு வந்து கரையில் வைத்துவிட்டு, கடலுக்குள் நின்றிருந்த அந்தக் கருப்புப் பெண்ணிடம் கரைக்கு வந்து பையை எடுக்குமாறு சைகை செய்தார். அந்தப் பெண்ணோ பையை எடுத்துக்கொண்டு கடலுக்குள் வருமாறு பதில் சைகை செய்தார். யசோதா பையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் கால் நனைத்தபோது, அந்தப் பெண் விரைந்து வந்து பையைப் பெற்றுக்கொண்டு “அம்மா… நாங்கள் கரைக்கு வரக் கூடாது” என்றார்.

    “ஏன் வரக் கூடாது?” என்று யசோதா ஆச்சரியத்துடன் கேட்டார்.

    “அது சட்ட விரோதம். அங்கே பாருங்கள்! அந்தக் காவலாளிகள் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களது கால் நகம் கரையில் பட்டால் கூட அவர்கள் எங்களைத் துரத்தியடிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பையைத் தலையில் வைத்து ஒருகையால் பிடித்துக்கொண்டே மறுகையில் குழந்தையுடன் கடலுக்குள் சென்றார்.

    உண்மையிலேயே யசோதாவுக்கு எதுவும் புரியவில்லை. கரோலினையும் எலினையும் கடற்கரையில் காணவும் முடியவில்லை. எனவே, யசோதா விடுதியறைக்குச் சென்று மறுபடியும் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டார். விடுதியின் உணவகப் பகுதிக்குச் சென்று காலையுணவைச் சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் கடற்கரையில் போய் உட்கார்ந்துகொண்டார். வெயில் ஏற ஏறக் கரையிலும் கடலிலும் மக்கள் தீர்த்தத் திருவிழா போலத் திரண்டிருந்தார்கள். அந்த மக்கள் கூட்டத்திடையே கலந்திருக்க யசோதாவுக்குப் பிடித்திருந்தது.

    அப்போது, கரோலினும் எலினும் யசோதாவை நோக்கிக் கைகளை அசைத்தவாறே மணலில் நடந்து வந்தார்கள். இருவருமே நீச்சலுடையில் இருந்தார்கள். அவர்களுடன் இரண்டு இளைஞர்களும் வந்தார்கள். அவர்களும் நீச்சலுடையில் இருந்தார்கள். ஒருவன் கருப்பு நிறத்தவன். மற்றவன் வெளிர் மஞ்சள் நிறத்தவன். அந்த இளைஞர்கள் சாய்ப்புச் சாமான் கடையை நோக்கிச் செல்ல, கரோலினும் எலினும் மணலில் யசோதாவுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள்.

    “இரவு நன்றாகத் தூங்கினாயா யசோ?” என்று எலின் விசாரித்தார்.

    ‘ஆம்’ என்பதுபோலத் தலையசைத்துவிட்டு “இன்னும் உங்கள் இருவருக்கும் தூக்கம் கலையவில்லைப் போலிருக்கிறதே…எப்போது அறைகளுக்குத் திரும்பினீர்கள்?” என்று யசோதா கேட்டார்.

    “நாங்கள் அறைகளுக்குத் திரும்பும்போது அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. இந்த அருமையான இளைஞர்களை வைத்துக்கொண்டு தூங்கவா முடியும்? தூங்குவதற்கா நாங்கள் இத்தனை தூரம் வந்திருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு கரோலின் தோளிலிருந்த நீளமான துவாயை எடுத்து மணலில் விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். எலினும் துண்டை விரித்துவிட்டுக் குப்புறப் படுத்துக்கொண்டார். அப்போது அந்த இளைஞர்கள் இவர்களை நோக்கி ஆளுக்கொரு தைலக் குப்பியுடன் வந்தார்கள். கருப்பு நிறத்தவன் குதிரை ஏறுவது போன்று கால்களை விரித்து கரோலினின் முதுகில் ஏறிப் பட்டும்படாமலும் உட்கார்ந்துகொண்டான். மற்றவன் எலினின் முதுகில் ஏறி வாகாக உட்கார்ந்துகொண்டான். அவர்கள் அந்தப் பெண்களின் முதுகுகளில் தைலத்தைத் தேய்த்து உருவிவிடத் தொடங்கினார்கள். எலினின் முதுகில் இருந்தவன் யசோதாவைப் பார்த்தவாறே ஸ்பானிய மொழியில் எலினிடம் ஏதோ சொன்னான். எலின் சிரமப்பட்டுக் கழுத்தைத் திருப்பி யசோதாவைப் பார்த்து “உனது தோழிக்கும் ஒரு காதலன் தேவையா என்று இவன் கேட்கிறான்” என்றார்.

    யசோதா உண்மையிலேயே பதறித்தான் போய்விட்டார். எலின் தனது கையை நீட்டி யசோதாவின் கையைப் பற்றிக்கொண்டார்.

    “யசோ! இவர்களை நாங்கள் நேற்றிரவு நடன விடுதியில் கண்டுபிடித்தோம். இவர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல, இனிமையான குணமும் கொண்டவர்கள். அது இந்தத் தேசத்து ஆண்களுக்கென்றே கடவுள் வழங்கிய கொடை. ஒவ்வொருவரும் கடற்குதிரை போன்றிருக்கிறார்கள்.”

    “இவர்கள் கியூபர்களா? இவர்கள் இங்கே வருவது சட்ட விரோதம் என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாரே?”

    “ஆம்… இது கொஞ்சம் குழப்பமான விஷயம்தான். இந்தக் கடற்கரை இங்கே நட்சத்திர விடுதிகளை நடத்துபவர்களுக்கு உரிமையானது. கியூபர்களை இங்கே அனுமதிப்பதில்லை. ஆனால், விடுதியில் தங்கியிருக்கும் ஓர் உல்லாசப் பயணி கியூபா நாட்டவர் ஒருவரைத் தனது பொறுப்பில் இங்கே அழைத்துவரத் தடையில்லை…”

    யசோதா விடுதியறையை நோக்கி நடந்தார். நடப்பதெல்லாம் புதிதாகவும் கனவு போலவும் அவருக்கிருந்தது. அடுத்த இரண்டு நாட்களும் சாப்பிடுவதற்கு மட்டுமே அவர் அறையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குப் பதற்றம் தணிவதாகயில்லை. பிரான்ஸுக்குத் திரும்பிச் செல்லும் நாளுக்காக அவர் ஏங்கினார் என்றும் சொல்ல முடியாது. அங்கிருக்கும் தனது வீடு இருபத்துநான்கு மணிநேரமும் நிசப்தமாகவே இருப்பதை நினைக்கும்போதே, அவரது உடல் புகையத் தொடங்கிவிடுகிறது.

    9

    மூன்றாவது நாள் மாலையில் யசோதாவுக்கு உடலெல்லாம் தகித்து வியர்த்து வடிந்தது. அந்த விசாலமான விடுதியறைக்குள்கூட மூச்சு முட்டுவதைப் போன்று உணர்ந்தார். தான் சாகப் போகிறேனோ என்றுகூட ஒரு கணம் அவர் சந்தேகப்பட்டார். மெல்ல அறையிலிருந்து வெளியேறி அவர் கடலை நோக்கி நடந்து சென்றபோது, கடலுக்குள் யாருமில்லை. மேற்கே பரிதி கடலுக்குள் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தது. கடற்கரையில் சில உல்லாசப் பயணிகள் கூச்சலும் கும்மாளமுமாகப் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்து விலகி, கடற்கரையோரமாக மேற்குத் திசையில் யசோதா நடந்து போனார். சற்றுத் தூரத்தில் மிகக் குட்டையாக ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. அதன் தலை முழுவதும் மஞ்சளாகப் பூத்திருந்தது. யசோதா கடலைப் பார்த்தவாறே அந்த மரத்தின் கீழே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு கால்களை நீட்டிக்கொண்டார். அப்போதுதான் தன்னுடைய கணுக்கால்களில் புதிதாக ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை யசோதா கவனித்தார். கணுக்கால்களில் காலுறைகள் போன்று வெள்ளை படர்ந்திருந்தது. அவர் தனது கால்களைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தார். கடலுக்குள் ஓர் இளைஞன் நின்றிருந்து “ஹாய் லேடி பொஸ்” என்று பற்கள் தெரியச் சிரித்தான்.

    அந்த இளைஞனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். இடுப்பில் அரைக்காற்சட்டை மட்டுமே அணிந்திருந்தான். ஒல்லியான ஆனால், நேர்த்தியான உடல்வாகு. ஆறடிக்கு மேல் உயரமாகயிருந்தான். ப்ரவுண் நிறச் சருமம். அடர்த்தியான சுருட்டைமுடி. முகம் சுத்தமாக மழிக்கப்பட்டிருந்தது.

    யசோதாவும் அவனைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்து வைத்தார். இப்போது அந்த இளைஞன் உற்சாகமாக ஓரடி முன்னே எடுத்து வைத்தவாறே “லேடி பொஸ்… நீங்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் சிரித்த வாயாகக் கேட்டான்.

    “பிரான்ஸ்” என்று சற்றுச் சத்தமாகவே யசோதா சொன்னார்.

    உடனேயே அவன் பிரெஞ்சு மொழியில் யசோதாவிடம் பேசினான். “தனியாகவா வந்திருக்கிறீர்கள் லேடி பொஸ்?”

    யசோதா கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தார். அந்த இளைஞன் இன்னொரு அடி எடுத்து முன்னே வைத்துவிட்டு “இந்தக் கடற்கரையில் புழங்கினால் எல்லா மொழிகளையும் கற்றுவிடலாம். நான் ஏழெட்டு மொழிகள் பேசுவேன் லேடி பொஸ்” என்றான்.

    “நான் லேடி பொஸ் அல்ல. என்னுடைய பெயர் யசோதா அமரேசன்.”
    “இது அருமையான பெயர் லேடி பொஸ். ஆனால், சற்று நீளமாகயிருக்கிறது. எனக்கு உச்சரிக்கக் கஷ்டம். என்னுடைய பெயர் எட்மண்டோ. கடலுக்குள்ளால் நீண்ட தூரம் வந்திருக்கிறேன். என்னைக் கரைக்கு அழைத்தீர்கள் என்றால் உங்கள் அருகே வந்து பேசுவேன். கடல் குளிர ஆரம்பித்துவிட்டது…”

    இப்போது அவன் கடலின் விளிம்புக்கே வந்துவிட்டான். அவனது அடுத்த காலடியைக் கரையில்தான் வைக்க வேண்டும். யசோதா அவசர அவசரமாக எழுந்து விடுதியறையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    “லேடி பொஸ்… நடன விடுதிக்குப் போக வேண்டுமென்றால் என்னோடு வாருங்கள். இந்தத் தீவின் மிகச் சிறந்த நடன விடுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். நான் தனியாகச் சென்றால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். உங்களோடு வந்தால் இன்றிரவு நானும் சல்ஸா நடனம் ஆடுவேன்”

    அந்தக் குரலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே யசோதா அறைக்குத் திரும்பிவிட்டார். அன்று இரவுணவு சாப்பிடக் கூட அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. மறுநாளும் உணவை அறைக்கே வரவழைத்துச் சாப்பிட்டார். மாலை வேளையாகி இருள் கவிந்துகொண்டிந்தபோது, அவரது மனிதில் திடீரென ஓர் எண்ணம் தோன்ற பல்கனிக்குச் சென்று கடலைப் பார்த்தார். குட்டைத் தென்னை மரம் மங்கலாகத் தெரிந்தது. சற்றுத் தொலைவில் ஓர் உயரமான உருவம் கடலுக்குள் நடந்து போய் மறைந்தது.

    அடுத்த நாள் காலையில் யசோதா வெள்ளை நிறக் கவுனை அணிந்துகொண்டார். வெள்ளைநிற மணிமாலையொன்றைக் கழுத்தில் போட்டுக்கொண்டார். காலணிகளும் வெண்நிறத்திலேயே இருந்தன.

    காலை உணவுக்காக அவர் விடுதியின் உணவகத்திற்குச் சென்றபோது, அங்கே கரோலினையும் அவரது கருப்புக் காதலனையும் கண்டார். அவர்கள் ஒரு வாய் சாப்பிடுவதாகவும் மறுவாய் முத்தமிடுவதாகவும் காலையிலேயே மயக்கத்திலிருந்தார்கள். யசோதா அவர்களது மயக்கத்தைக் கலைப்பது போல அருகில் சென்று காலை வணக்கம் சொன்னார். போதை கலையாத கண்களால் யசோதாவைப் பார்த்த கரோலின் தங்களுடன் அமர்ந்து உணவருந்துமாறு யசோதாவைக் கேட்டுக்கொண்டார்.

    “நாளைக்கு அதிகாலையிலேயே நாங்கள் விமான நிலையத்திற்குக் கிளம்ப வேண்டியிருக்கும் யசோ… எல்லா இடமும் சுற்றிப் பார்த்தாயா? எப்படியிருக்கிறது கியூபா? இது எல்லாமே சொர்க்கம் அல்லவா…”

    “நான் எங்கேயும் வெளியே போகவில்லை” என்று யசோதா கொஞ்சம் வெட்கத்துடனேயே சொன்னார்.

    “இங்கே வரடேரோவில் உல்லாசப் பயணிகள் மட்டுமே மொய்த்திருக்கிறார்கள். யசோ… நீ கொஞ்சம் வெளியே சென்று மக்களைப் பார்க்க வேண்டாமா? சாந்தா மார்த்தாவுக்குப் போ. இங்கிருந்து பக்கம்தான். அங்கே நீ உண்மையான கியூபாவைப் பார்க்க முடியும்.”

    ‘வரடேரோ’ ஒட்டகச் சிவிங்கியின் கழுத்துப் போன்ற ஒடுக்கமான தீவு. அந்தத் தீவு உல்லாசப் பயணிகளுக்காக நேர்ந்துவிடப்பட்டிருந்தது. அந்தத் தீவையும் கியூபா பெருநிலத்தையும் ஒரு பாலம் இணைக்கிறது. அந்தப் பாலத்தைக் கடந்ததும் சாந்தா மார்த்தா நகரம் வந்துவிடும்.

    விடுதியில் சொல்லி யசோதா ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்துகொண்டார். இதுவரை கியூபாவில் செப்புச் சல்லியைக் கூட யசோதா செலவு செய்திருக்கவில்லை. கொஞ்ச ஈரோக்களை விடுதியில் கொடுத்து பெஸோக்களாக மாற்றிக்கொண்டார். சாலையில் வாகனங்களேயில்லை. வாடகைக் கார் சாலையில் வேகமாக வழுக்கிச் சென்றது. பாலத்தைக் கடந்ததும் காட்சிகள் தலைகீழாக மாறிவிட்டன. சாலைகள் குண்டுங் குழியுமாக வளைந்து நெளிந்து சென்றன. அந்தச் சாலைகளில் நோஞ்சான் குதிரைகள் வண்டிகளை இழுத்துச் சென்றன.

    இருபத்தைந்து நிமிடப் பயணத்திற்குப் பின்பு வாடகைக் கார் ‘சாந்தா மார்த்தா’ நகரத்திற்குள் நுழைந்தது. நகர மையத்திலிருந்த சதுக்கத்தில் சே குவேரா சிலை கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அங்கேயே யசோதா இறங்கிக்கொண்டார். மதியம் பன்னிரண்டு மணிக்கு அதே இடத்திற்கு வந்து தன்னை ஏற்றிக்கொள்ளுமாறு சாரதியிடம் சொல்லிவிட்டு, யசோதா தெருவோரமாக நடந்து சென்றார்.

    அதுவொரு சிறிய நகரம்தான். ஆனால், ஏதோ போரால் பாதிக்கப்பட்ட நகரம் போன்று உடைந்து கிடந்தது. நகரமே புழுதிக் காடாகக் காட்சியளித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சிறிய கடைகளுக்கு முன்பு மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றுகொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்ட குறுக்குத் தெருவொன்றுக்குள் புகுந்து யசோதா வேடிக்கை பார்த்தவாறே நடந்தார். அந்தத் தெருவில் குடியிருப்புகள் நெருக்கமாகயிருந்தன. வந்த வழியை மனதில் ஞாபகம் வைத்துக்கொண்டே அடுத்த குறுக்குத் தெருவுக்குள் யசோதா நுழைந்தபோது, எதிரே அந்த உயரமான இளைஞன் எட்மண்டோ வந்துகொண்டிருந்தான். அவன் யசோதாவைக் கண்டதும் கண்களை அகல விரித்துத் தனது வலது கையை உதறிக்கொண்டான். பின்பு “லேடி பொஸ்” என்று கூவியபடியே யசோதாவை நோக்கி ஓடிவந்தான். இடுப்பில் அதே அரைக் காற்சட்டைதான் இருந்தது. ஆனால், இன்று அவன் அழகானதொரு தொப்பி அணிந்து தொப்பியின் நாடாக்களைத் தாடையின் கீழே பூப்போன்று முடிந்திருந்தான்.

    “லேடி பொஸ்…நீங்கள் சம்மனசு போலத் திடீரென என் முன்னே காட்சியளிக்கிறீர்கள். என்னுடைய வீடு இங்கேதான் இருக்கிறது. தயவு செய்து வீட்டுக்கு வந்து ஒரு கோப்பை தேநீர் பருகி எங்களை மகிழ்வியுங்கள்” என்று எட்மண்டோ சொல்லிவிட்டு யசோதாவின் கையைப் பிடித்துக்கொண்டு தெருவில் நடந்தான். யசோதா தன்னுடைய கையை அவனிடமிருந்து விடுவிக்க முயற்சிக்கவில்லை. உண்மையில் அந்த அழைப்பு அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது.

    அழுக்குப் படிந்துகிடந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றின் முன்னால் எட்மண்டோ நின்று “லேடி பொஸ்… இங்கேதான் முதலாவது மாடியில் எனது வீடிருக்கிறது. மாடிப்படிகளில் வெளிச்சம் கிடையாது. என்னுடைய கையை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்” என்றவாறே யசோதாவின் கையை மேலும் அழுத்தமாகப் பற்றினான். யசோதா தட்டுத் தடுமாறித்தான் படியேறிச் சென்றார். ஒவ்வொரு படியிலும் இருளுக்குள் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

    ஒரு சிறிய அறை மட்டுமே எட்மண்டோவின் வீடாக இருந்தது. உண்மையில் அதுவொரு இருள் பொந்துதான். அந்தப் பகல் பொழுதிலும் அறை இருண்டு கிடந்தது. அறையின் நடுவே தொங்கிகொண்டிருந்த மங்கலான சிறிய மின்குமிழின் கீழே சாய்மனை நாற்காலியில் ஒரு பெண்மணி படுத்துக்கிடந்து பைபிள் படித்துக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த யசோதாவை ஒரு விநாடி பார்த்துவிட்டு அவர் மறுபடியும் பைபிளில் மூழ்கிப் போனார். அறையின் மூலையிலிருந்த அடுப்பில் எட்மண்டோ கருப்புத் தேநீர் தயாரித்து யசோதாவுக்குக் கொடுத்தான். யசோதா தேநீரைக் குடித்தவாறே அந்தப் பெண்மணியையே பார்த்துக்கொண்டிருந்தார். தேநீரைக் குடித்து முடித்ததும் யசோதா புறப்படத் தயாரானபோது, அந்தப் பெண்மணி ஸ்பானிய மொழியில் ஏதோ சொன்னார். “லேடி பொஸ்… உங்களது கழுத்திலிருக்கும் மணிமாலை அழகாக இருக்கிறதாம். அதைத் தனக்குக் கொடுக்க முடியுமா என்று அம்மா கேட்கிறார்” என்று எட்மண்டோ தயங்கத்துடன் யசோதாவிடம் சொன்னான். யசோதா கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றியவாறே எட்மண்டோவின் அம்மாவின் அருகில் சென்று அதை அவருக்கு அணிவித்தார்.

    சே குவேரா சிலையை நோக்கி இருவரும் நடந்துகொண்டிருந்தபோது “லேடி பொஸ்… நேற்று மாலை நீங்கள் கடற்கரைக்கு வரவில்லையே” என்று யசோதாவின் காதருகே எட்மண்டோ கிசுகிசுத்தான். யசோதா எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தார். சே குவேரா சிலையருகே வாடகைக் கார் காத்திருந்தது.

    அன்று மாலையில் விடுதியறையின் பல்கனியில் நின்று யசோதா கடலைப் பார்த்தபோது, பரிதி கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது. அவர் அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார். இருள் முற்றாகக் கவிந்து கடல் அவரது கண் பார்வையிலிருந்து மறைந்தபோது, குளியலறைக்குச் சென்று குளியல் தொட்டியில் படுத்துக்கொண்டு நெடுநேரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். குளித்து முடித்துவிட்டுத் தொட்டியிலிருந்து அவர் கீழே இறங்கியபோது, எதிரேயிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் முழு நிர்வாணமாக அவரது உடல் தெரிந்தது. கண்ணாடியில் தோன்றிய அந்தப் பிம்பத்திலிருந்து புகை கசிந்தது.

    முற்றாக நரைத்திருந்த தலைமுடி மின்விளக்குகளின் வெளிச்சத்தில் வெள்ளியாக மின்னியது. அவரது தலை சிறிதாகவும் கழுத்து நீளமாகவுமிருந்தது. கழுத்துக்குக் கீழே உடல் அகன்று சென்று வயிற்றுப் பகுதி உப்பியிருந்தது. முழங்கால்களுக்குக் கீழே கால்கள் குச்சிகளாக ஒடுங்கிச் சென்றன. கணுக்காலில் படந்திருந்த வெள்ளைத் திட்டுகள் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. உடலில் இருந்த வெண்ணிறப் புள்ளிகள் அவரது கருமையான சருமத்தில் பெகோனியாப் பூக்கள் போலத் தெரிந்தன. தீக்கோழி முட்டை வடிவச் சித்திரப்பேழையைப் போலவே தன்னுடைய உடல் ஆகிவிட்டது என யசோதாவுக்குத் தோன்றியது.

    10

    ஜோசே மார்த்தி விமான நிலையத்திலிருந்து பாரிஸுக்குக் கிளம்பவிருந்த விமானத்தில், கரோலின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அடுத்ததாக எலின் அமர்ந்திருந்தார். அவரது முகம் வாடியிருந்தது. எலினுக்கு அடுத்ததாக யசோதா உட்கார்ந்திருந்தார்.

    விமானம் மேலேறிப் பறந்தபோது, திடீரென கரோலின் விசும்பி அழத் தொடங்கினார். எலினின் கண்களிலும் நீர் துளிர்த்தது. யசோதா தனது கையை எலினின் தோள்மீது வைத்தார். எலின் சற்றே சாய்ந்து யசோதாவின் காதுக்குள் அரைகுறையாக முணுமுணுத்தார்:

    “ஒரு வாரக் காதலோ, ஒரு நாள் காதலோ பிரிந்து செல்லும்போது இந்தப் பாழாய் போன கண்ணீர் வந்துவிடுகிறது யசோ…”

    யசோதா தன்னுடைய முகத்தை அண்ணாந்து விமானத்தின் கூரையைப் பார்த்தார். அழக் கூடாது என்ற வைராக்கியம் நேற்றிரவே அவரது மனதில் உண்டாகிவிட்டது.

    (‘காலம்‘ இதழ் – ஜனவரி 2024)

     

       

    https://www.shobasakthi.com/shobasakthi/

    • Like 2
  11. அவசியமற்று வீட்டுக் கதவு திறக்கவும் கூடாது அப்படியே திறந்து விட்டுட்டு அங்க , இங்க  என்று திரியவும் கூடாது என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம்.பகிர்வுக்கு மிகவும் நன்றி..தொடருங்கள்.✍️

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.