Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9112
  • Joined

  • Days Won

    14

Status Updates posted by யாயினி

  1. சிஏ முடித்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில்ட் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள பட்டதாரியான, பார்வை மாற்றுத்திறனாளி அபூர்வ் குல்கர்னி உயரிய விருதான Sarvshresth Divyangian விருது பெற்றிருக்கிறார். 

     

     
    7 வயதில் பார்வை இழந்தும்; சிஏ, எம்பிஏ முடித்து மாற்றுத்திறனாளிகளின் குரலாக இருக்கும் அபூர்வ் குல்கர்னி!
     

     

    7 வயதில் பார்வை இழந்தும்; சிஏ, எம்பிஏ முடித்து மாற்றுத்திறனாளிகளின் குரலாக இருக்கும் அபூர்வ் குல்கர்னி! சிஏ முடித்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில்ட் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள பட்டதாரியான, பார்வை மாற்றுத்திறனாளி அபூர்வ் குல்கர்னி உயரிய விருதான Sarvshresth Divyangian விருது பெற்றிருக்கிறார.

     

     அபூர்வ் குல்கர்னி - அப்போது ஏழு வயதிருக்கும். பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அடிக்கடி பள்ளியில் தவறி கீழே விழுந்துவிடுவார். இது அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கண் பார்வையும் மங்கத்தொடங்கியது. வழக்கமான வேலைகளைக்கூட செய்துகொள்ள முடியாமல் போனது. பள்ளியில் ஆசிரியர் கரும்பலகையில் என்ன எழுதுகிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை.

    ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. கண் மருத்துவரையும் பார்த்தார்கள். கடைசியாக அவருக்கு ஏற்பட்டிருப்பது Stargardt நோய் என்பது கண்டறியப்பட்டது. இந்த மரபணு குறைபாடு ரெடினாவை பாதிக்கும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் கண் பார்வையை இழக்கமாட்டார்கள்.

    ஆனால், பார்வைத்திறன் மிகவும் மோசமாக இருக்கும். சிறுவயதிலோ அல்லது இளமைப் பருவத்தின் தொடக்கத்திலோ இந்த பாதிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். படிப்படியாக மோசமாகிக்கொண்டே போகும்.

    இந்த நோய் தாக்கம் காரணமாக அபூர்வின் அன்றாட வேலைகள் மாறிப்போயின. மற்றவர்களை சார்ந்து இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. புத்தகங்களை யாராவது  அவருக்குப் படித்துக்காட்ட வேண்டும். அவருக்கு பதிலாக யாராவது தேர்வு எழுதவேண்டும். மற்ற மாணவர்கள் விளையாடும்போது அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு மரம் ஏறுவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றில் ஆர்வம் பிறந்தது.

    “அந்த வயதில் இப்படி ஒரு சூழலை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்று அவர் சிறுவயது நாட்களை நினைவுகூர்ந்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடும்போது, “ஒரு வகையில் சிறு வயதிற்கே உரிய அறியாமையும் உற்சாகமும் எனக்கு கைகொடுத்தது.

    அந்த வயதில் எதையும் பெரிதாக ஆராய்ந்து பார்க்கமாட்டோம். இதுபோன்ற பிரச்சனையின் தீவிரதன்மை என்ன என்பது அப்போது எனக்குப் புரியவில்லை,” என்கிறார். பிரச்சனையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேற பழகிக்கொண்டார்.

    அதற்காக கூடுதல் முயற்சிகள் மேற்கொண்டார். ஒருகட்டத்தில் தொழில்நுட்பம் அவருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது. பாடபுத்தகங்களில் இருக்கும் நூற்றுக்கணக்கான பக்கங்களை அவரோ அல்லது அவரது பெற்றோரோ ஸ்கேன் செய்தனர். இது ஆப்டிகல் கேரக்டர் ரீடரில் ஃபீட் செய்யப்பட்டது. மென்பொருள் உதவியுடன் அந்தப் பக்கங்களில் இருந்த வாசகங்கள் வாசித்துக்காட்டப்பட்டன.

    தொழில்நுட்பம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பது அபூர்விற்குப் புரிந்தது. அன்று முதல் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அபூர்வ் தீவிரம் காட்டி வருகிறார்.

    அதேபோல், கொள்கை வகுப்பவர்களும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கத் தூண்டுகிறார். அபூர்விற்கு பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்து தற்போது 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டும் என்பதில் அவர் தீவிர முனைப்புடன் இருந்து வருகிறார்.

    தற்போது இவருக்கு 35 வயதாகிறது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் Sarvshresth Divyangian விருது பெற்றுள்ளார். தற்போது அபூர்வ் ஆய்வுப் பணிகளை வழிநடத்தி வருகிறார். அத்துடன் OMI Foundation-ன் Centre of Inclusive Mobility தலைவராகவும் இருக்கிறார். ஓலா ரைட்-புக்கிங் ஆப் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க உதவியுள்ளார்.

    ஊழியர்களை பணியமர்த்தும்போது மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் கலந்துரையாடியிருக்கிறார். “டாக்சியிலோ பேருந்திலோ ஏறி இறங்குவது மட்டும் பிரச்சனையில்லை. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதில் பிரச்சனைகள் இருப்பதுதான் உண்மை. இதற்குத் தீர்வு காணும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்.

    இதில் என்னுடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார். இந்த எண்ணத்தை செயல்படுத்தவும் செய்தார். “பேருந்துகளை வாங்கும்போதே இது தொடர்பான அம்சங்களைக் கவனிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர ஊக்குவித்தேன்,” என்கிறார்.

    அபூர்வ் On The Move என்கிற அறிக்கையை எழுதியிருக்கிறார். இது மாற்றுத்திறானிகளின் பயண அனுபவம் பற்றியது. உலக வங்கியின் நிபுணர்கள் இதை ஆய்வு செய்துள்ளனர். “முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் இரண்டு அம்சங்களை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. இந்த சலுகையைப் பயனர்கள் போராடிப் பெறவேண்டியிருக்கிறது. அடுத்ததாக இப்படிப்பட்ட சலுகைகள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை,” என்கிறார் அபூர்வ்.

    “இப்படிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய துறைகள் அரசிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு பல காலம் காத்திருக்கவேண்டியுள்ளது. இதுவும் இத்தகைய கொள்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது,” என்கிறார். ”நாங்கள் India Stack பயன்படுத்தி ஒரு தொழில்நுட்பத் தீர்வை உருவாக்கினோம். இதனால் மொத்த செயல்முறையும் டிஜிட்டல்மயமாக்கப்படுகிறது. எனவே, பயணம் செய்ய விரும்புபவர் அந்த குறிப்பிட்ட பயணத்திற்கான கட்டணத்தை மரியாதையான முறையில் செலுத்தலாம். மானியம் தொடர்பான பரிவத்தனை பேக் எண்டில் நடக்கும்.

    ஆபரேட்டருக்கு பணம் கிடைத்துவிடும். பயனர்களுக்கு நிதிச்சுமை இருக்காது. இந்தத் தீர்வை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில குறிப்பிட்ட நகரங்களில் சோதனை முயற்சி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக அபூர்வ் குழுவினர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இத்தகைய நீண்ட பயணத்தைக் கடந்து வந்துள்ள அபூர்வ் ஆரம்பத்தில் ஒரு வேலையில் சேர மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

    அதிலும் இவர் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார். மேலும், சார்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பும் முடித்திருக்கிறார். “நான் இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நேர்காணலுக்கு சென்றிருந்தேன். ஆனால், அவர்கள் என் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. என் வேலையை திறம்பட செய்து முடிப்பதில் என் உடலில் இருக்கும் குறைபாடு எந்த விதத்தில் தடையாக இருக்கும் என்பதை மட்டுமே யோசித்தார்கள்,” என்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு மெழுகுவர்த்தி தயாரிப்பும் கூடை பின்னவும் கற்றுக்கொடுத்தால் போதாது என்று குறிப்பிடும் அபூர்வ் அவர்களுக்கு டிஜிட்டல் திறன்களில் பயிற்சியளிக்கப்படவேண்டும் என்கிறார்.

    அதேசமயம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்கள் அவற்றை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும் என்கிறார். “வெப்3 தொழில்நுட்பம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உகந்ததாக இந்தத் தீர்வுகள் உருவாக்கப்படவேண்டும். அப்போதுதான் இதன் மதிப்பு உயரும். இதுபோன்ற தளங்கள் கிரியேடிவாக பயன்படுத்தப்பட ஊக்குவிக்கப்படும்,” என்கிறார்.

     

    ஆங்கில கட்டுரையாளர்: ஃபெரோஸ் ஜமால் | தமிழில்: ஸ்ரீவித்யா 1139 people loved this story

    Read more at: https://yourstory.com/tamil/visually-impaired-helps-disabled-apoor-kulkarni-inspiration-story?fbclid=IwAR00s8dmjfJFA75uyZf5DsMYINs7ZIj7kR-E55Am3iMLaL9v9sFRtT6rwI0

  2.  · 
    ஞாயிறு காலை...🖐️
     
    May be an image of 1 person and text that says 'கல்வியை புத்திசாலித்தனத்துடன் ஒருபோதும் குழப்ப வேண்டாம், நீங்கள் பிஎச்டி படித்து பின்னும் கூட முட்டாள்களாக இருக்கலாம். -ரிச்சர்ட் ஃபேயன்மேன்'
     
     
     
     
    1. Show previous comments  1 more
    2. யாயினி
    3. யாயினி
    4. யாயினி
  3. மட்டக்களப்பில் மீன் குழம்பால் பலியான இளம் தாய்

     

    PUBLISHED ON

    JUNE 9, 2023
    BYTAMIL
     
    23-6482caab778f8.jpg
     
     
     
     
     
     

    மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில்மீன் குழம்பு விசமானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

    குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியுள்ளனர்.

    இதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

    சம்பவத்தில் 27 வயதுடைய இளம் தாயார் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

  4. Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு இன்று ஆரம்பம் ....
    Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்
    THESIYAMNATION.COM
    Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்
    தபால் மூல வாக்களிப்பு பெட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் Torontoவில் நிகழ்ந்துள்ளது. Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக...
     
  5. 150 அரிய வகை சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்! மத்தியப்பிரதேச மாநிலத்தில் 150 வகையான பாரம்பரியான சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாத்து வரும் 27 வயது இளம் பெண் கவனம் ஈர்த்து வருகிறார். Kani Mozhi

    150 அரிய வகை சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாக்கும் பழங்குடியினப் பெண்!
     

    மத்திய பிரதேச மாநிலத்தில் 150 வகையான பாரம்பரியான சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாத்து வரும் 27 வயது இளம் பெண் கவனம் ஈர்த்து வருகிறார். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு, தண்ணீர் தட்டுப்பாடு, விதை முதல் உரம் வரை ரசாயன கலப்பு என பல பிரச்சனைகள் இந்திய வேளாண்மைக்கு பெரும் சவாலாக அமைந்தாலும், அதனை காக்கவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் செல்லவும் அடுத்தடுத்து விவசாயிகள் இளம் தலைமுறையில் இருந்தும் வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஒருவர் பாரம்பரிய விதைகளின் மீட்பராக விளங்கி வருகிறார். பழங்குடியின பெண்ணின் சாதனை:

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவை ’தினை சாகுபடி’ மற்றும் ஆராய்ச்சியின் உலகளாவிய மையமாக மாற்ற கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகிலேயே சிறு தானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஏமன், எகிப்து, துனிஷியா, ஓமன், சவுதி அரேபியா, லிபியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சிறு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், நடந்து முடிந்த 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூட கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் போன்ற பல்வேறு முக்கிய வேளாண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

     

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரி மாவட்டத்தில் சில்பாடி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பைகா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் லஹரி பாய். இவர் தனது சிறிய வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றை சமையலறையாகவும், மற்றொன்றை பாரம்பரிய விதைகளுக்கான சேமிப்பகமாகவும் மாற்றியுள்ளார். 150 வகை விதைகள்: கருவரகு, சாமை, வெள்ளை தினை, ராகி, பனி வரகு உள்ளிட்ட பாரம்பரிய சிறுதானியங்களின் விதைகளை சேமித்து வரும் லஹரி பாய், முதலில் அவற்றை தனது நிலத்தில் விதைத்து, விளைவித்துள்ளார். அதன் பின்னர்,, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை பத்திரமாக சேமித்து வைத்ததோடு, அதனை சுற்றியுள்ள 15 முதல் 20 கிராம விவசாயிகளுக்கு வழங்கி விதை உற்பத்திக்கும் உதவி வருகிறார். லஹரி பாயின் விதைகள் தற்போது 54 கிராமங்கள் வரை பரவியுள்ளன. குறிப்பாக பைகா பழங்குடியினர்களுக்கு விதைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறார்.

    அதற்கு பதிலாக விவசாயிகள் விளைச்சலில் கிடைக்கும் சிறிய பகுதியை லஹரிக்கு பரிசாக வழங்கி வருகின்றனர். "மக்கள் என்னை கேலி செய்தார்கள் மற்றும் என்னை புறக்கணித்தார்கள். ஆனால், எனக்கு இரண்டு பணிகள் மட்டுமே சரியாக இருக்கும் என நினைத்தேன்.

    ஒன்று திருமணம் செய்து பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும், இரண்டாவது தினை விதைகளை பாதுகாத்து அவர்களின் விவசாயத்தை மேம்படுத்துவது, இப்போது யாரும் என்னை அவமானப்படுத்துவதில்லை,” என்கிறார். ஜோதூரைச் சேர்ந்த ஐசிஏஆர் ஒன்றின் விரும்பத்தக்க ’10 லட்சம் உதவித்தொகைக்கு லஹரியை பரிந்துரைத்துள்ள திண்டோரி மாவட்ட ஆட்சியர் விகாஸ் மிஸ்ரா, “ஒருவேளை லஹரிக்கு அந்த உதவித்தொகை கிடைத்தால், பிஎச்டி மாணவர்களுக்கே அவர் வழிகாட்டியாவார்,” எனக்கூறியுள்ளார்.

    Read more at: https://yourstory.com/tamil/young-tribal-woman-collects-and-preserves-150-types-of-grains-seeds?fbclid=IwAR0xQaXXe0J5ob3Cl6NipRIowuX1MXGRC0XVkJLosFSVvmop4eiUTEsdkio

  6.  
    May be an image of deer and bone
     
     
    என் மரபணுக்களில் உன் ஞாபகங்கள்
    ............................................................................
    அவள் ஒரு சிலையைத்தேடி அலைகிறாள் என்பதை அறிவேன். அதே சிலைகளைப் பல கடைகளில் காணும் போதும் சீமேந்திமல் செய்தது, மரத்தில் செதுக்கியது. மாபிளில் வேண்டாம் முக அமைப்புப் பிடிக்கவில்லை என்பாள்.
    தான் விரும்பிய உயரத்தில், சாந்தம் வழியும் வதனத்தில், தங்க நிற உலோகத்தில் அவளது தேடல் இருக்கிறது.
    மனதுக்குத் திருப்தி தராத எதையும் எந்த வகையிலும் பிள்ளைகளிடம் திணிப்பதில்லை என்பதில் வைராக்கியமாக இருக்கிறேன். திணிக்கப்படும் எதுவும் ஒருபோதும் திருப்தியளிப்பதில்லை என்பதைக் கற்றவள் நான்.
    மனம் நாடுவது கிடைக்கும் வரை எதிலும் சமாதானமாகாதே. அது நிலைக்காது . தேடிக்கொண்டேயிரு. திருப்தி தான் நிம்மதி. நிம்மதி தான் வாழ்வு என்றேன்.
    இதைச் சாதாரண கடைகளில் தேடுவது கடினம் வரலாற்றுப் பொருட்களைச் சேகரிக்கும் ஆர்வத்துடன் வாழ்ந்து இறந்து போன முதியவர்களின் விலைமதிப்பான பொருட்கள் விற்பனையாகும் கடையில் தேடுவோம் என்று கூறி , நேரமிருக்கும் பொழுதுகளில் ஒவ்வொரு நகரமாக என் மகளை இழுத்துக் கொண்டலைவாள் என் நண்பி.
    அவளது நாடென்பதால் என்னை விட விபரங்களும் தொடர்புகளும் கொண்டவள் என்பதுவும், சிறுவயதிலிருந்தே கொண்டலைந்ததில் அவர்களை அதிகம் புரிந்தவள் என்பதும் இருவரும் இணைந்தலைவதன் காரணங்கள்.
    அன்றும் சென்று விட்டுத் திரும்புகையில் சிலையற்றுத்தான் வந்தார்கள். எனினும் இரண்டு கைகளிலும் புதியதாய் மான் கொம்புகள் வைத்திருந்தாள்.
    பொதுவில் இவைகளைத் தொடக்கூடியவள் அல்ல. மிருகவதைக்கு எதிரானவள்.
    வாயருகே ஒரு துளி இரத்தத்துடன் வீதியில் விழுந்து கிடந்த சிறு பறவையையும், அதே நேரத்தில் தன்னைக்கடந்த மேலதிக உறுமல் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் இணைத்து அதனால் தான் இது இறந்தது என நம்பி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, நாட்கணக்காக நிறுத்தாமல் அழுதவள்.
    சம்மர் காலங்களில் உச்சஸ்தாயியில் படபடக்கும் மோட்டார் வாகனங்களின் அதிர்வில் பறவைகளுக்கு மாரடைப்பு வருகின்றது. மனிதர்கள் தங்கள் அர்த்தமற்ற சந்தோசத்துக்காக மற்றைய உயிரினங்களின் வாழ்வை முடிக்கிறார்கள். வாகனங்களின் வேண்டப்படாத இரைச்சலைத் தவிர்க்க வேண்டும் என தன் ஏழு வயதில் ஆசிரியை மூலம் சுற்றுச் சூழல் துறைக்குக் கடிதமெழுத வைத்த பிடிவாதக்காரி.
    வேறெங்கெல்லாம் அவளது எதிர்ப்பைக் கடிதமாக ஒப்படைக்க முடியுமோ அங்கெல்லாம் அழைத்துத் திரிந்தவள் இதே நண்பி.
    இப்போது அவளைப்போலவே அவள் கொண்டிருக்கும் எண்ணங்களும் வளர்ந்து உறுதியாகியிருக்கின்றன. அப்படியிருக்க, கைகளில் மண்டையோட்டில் தூசு கூடப் படியாத புதியதான மான் கொம்பு முரணாக இருந்தது எனக்கு.
    ஏனம்மா இது என்றேன். வழியில் ஒரு விற்பனை நிலையத்தில் கண்டேன். ஏனோ வாங்க வேண்டுமென்று தோன்றியது என்றாள்.
    "இது என்னவென்று தெரியுமல்லவா?"
    "தெரியும் இருந்தாலும் விட்டுவிட்டு வர முடியவில்லை. "
    "கண்டதும் வாங்கப்போகிறேன் என அத்தனை பிடிவாதம். எனக்கே அதிசயமாக இருந்தது. காருக்குள்ளிருந்து கண்டவள் நிப்பாட்டியதும் குதித்தோடிப்போய் தன்னுடன் எடுத்துக் கட்டிக் கொண்டாள்." என்றாள் நண்பி.
    ..............
    என் சிறு வயதில், வீட்டின் முற்றத்திலும், கோடியிலும், வேண்டாத பொருளாக வீசியெறியப்பட்டுக் கிடந்தது மான்கொம்பு. அப்போது அது மான்கொம்பு என்பது கூடத் தெரியாது. ஆனாலும் அதை என் விளையாட்டுப் பொருட்களுடன் சேகரித்து வைத்திருப்பேன். ஏதாவது விதை நடுவதற்கு அதன் கூரால் ஓட்டை போடுவேன். தடி போல உடையாத வைரமான அதன் மீது பெரும் பிரியமிருந்தது. அதன் முனையில் சிறு உடைவு வந்த நாளில் நாள் முழுதும் அழுது, அடி வாங்கினேன். இருந்தாலும் வளரும் வரை அதைப் பக்குவமாக தாவாரத்தில் வைத்திருந்தேன்.
    அம்மா வீட்டில் யாரினாலும் முக்கியத்துவம் உணரப்படாத அது அங்கே கிடக்கிறதெனில் அது யாருடையதாக இருக்கக்கூடும் என்பது வளரும் போது புரிய, அப்பாவுடையதா? என்றேன்.
    கொழும்பு வீட்டைக் காலி செய்து வரும் போது அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது. அங்கே சுவரில் மாட்டியிருந்தது என்றார்கள்.
    வேறு எவர்களுக்கோ முக்கியமான, பெரு விருப்புக்குரிய பொருளோ உயிரோ, சம்பந்தமில்லாத கரங்களில் மாட்டும் போது அதன் அருமை தெரியாது போய் விடுகிறது. அதை வேண்டிய பாட்டுக்கு உதாசீனமாக வீசி விடுவது மனிதர்களுக்குப் புதிதல்லவே.
    அதைப் பெயர்த்து வந்து காணிக்குள் எறிவதை விட அங்கேயே விட்டிருக்கலாம் என்று சொல்லி விட்டுக் கழுவித் துடைத்து என் துவாயால் சுற்றி என் பெட்டியில் உடைகளினடியில் வைத்துக் கொண்டேன். வீட்டை நிரந்தரமாக இழக்கும் வரை அது அங்கே தான் பத்திரமாகக் கிடந்தது.
    .............
    "இது எதுக்கம்மா"
    "சுவரில் கொழுவப்போறன்"
    "அவள் தேடுற மாதிரி சிலை இலங்கையில் இருக்கக்கூடும். நான் கலியாணங்கட்டி வரேக்குள்ள கொப்பர் தனியா ஒரு ஸ்ராண்டில அப்பிடி ஒண்டை வைச்சிருந்தவர் " என்றார் அம்மா.
    பிறகு அது எங்கே என நான் கேட்கவில்லை.
    இந்த வாழ்வில் நாம் எதையெல்லாமோ பிரியப்பட்டு வாங்கிச் சேர்க்கிறோம். மிக நேசமான மனிதர்களையும் நினைவுகளையும் நெஞ்சில் சுமக்கிறோம். நாம் வாழும் வரை நம்மைச் சூழ்ந்தவர்களால் அவை அங்கீகரிக்கவும் மதிக்கவும் படுகின்றன. மூச்சு நின்ற அடுத்த கணத்தில் அவற்றின் முக்கியத்துவம் நீர்த்துப் போகிறது.
    பிரேதமெடுத்தபின் வீடு கழுவி விடுவதைப்போல, இது என் உடமை, என் உரிமை என்று சொல்ல மனிதர்களில்லாவிடத்து அவர் சார் அனைத்தும் அர்த்தமிழக்கின்றன. கவனிப்பாரற்று அழிந்து போகின்றன. அவர்கள் உயிராய் நேசித்த உறவு உட்பட.
    எனினும் மரபணுக்களின் ஞாபகங்களில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.
     
     
  7. காலை வணக்கத்தோடு...

     

  8. june 05.2023

      · 
     
     
    May be an image of text that says 'Good morning Have a wonderful day and week HAPPY MONDAY'
     
     
     
     
     

    யூன் 05

    உலகச் சுற்றுச்சூழல் நாள்
    Ecologia.jpg

    World Environment Day

    1. Show previous comments  4 more
    2. யாயினி

      யாயினி

      வாசிப்பு பழக்கத்தை தொடர்பவர்களுக்காக
      மட்டும், இந்த இணைப்பு இங்கே..

       

    3. யாயினி

      யாயினி

      May be a doodle of text that says 'TODAY, TAKE A FEW MINUTES TO SIT SIT QUIETLY AND eThanfful FOR ALL THAT YOU HAVE.'
       
       
       
       
       
       
       
    4. யாயினி

      யாயினி

      தண்ணியடிக்க பயமாக இருக்கு 🥴
      351190347_570098078639129_29142758478418
       
       
      351159929_262259112979871_79688912461039
       
       
      350914183_587473680188880_74422639783768
       
       
      350943658_203301342649321_47325063003578
       
       
      351131200_1007780090382750_6949272914717
       
      +4
       
       
      இது அர்யுன் அண்ணா வீட்டு பூந்தோட்டம்..அண்ணா தண்ணி அடிக்க பயந்த பொழுதில் ...🤭😀
  9. Bernice 'Bunny' Harrison, 98, made history Friday after becoming the oldest person to walk Toronto's CN Tower Edgewalk.
     
     
  10.  
     
     

     
    பறவை போடும் எச்சத்தில் தான் மரம் வளர்கிறது.
    பிந்நாளில் ஓய்வு எடுக்க வந்த அப்பறவைக்கு
    கோடரியை மட்டுமே அவ்விடத்தில் காண நேர்ந்தது.
  11. மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்ட வீடியோவை கழுவி ஊற்றும் ரசிகர்கள். By Rajkumar -மே 4, 2023075 மனோபாலாவின் இறப்பு குறித்து இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவை குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான். -விளம்பரம்- MANOBALA மறைவு பற்றி வருந்திய ILAYARAJA#MANOBALAANGRYSPEECH #MANOBALASWASTEPAPER #TAMILCINEMA #RIPMANOBALA #MANOBALARIP #TAMILCINEMA #TAMILCOMEDY #MANOBALAANGRYSPEECH #MAYILSAMY #ACTORVIVEK #TAMILNEWS #RAAGA PIC.TWITTER.COM/X1ARPTJQEZ — raagadotcom (@raagadotcom) May 3, 2023 பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா. உடல்நலக் குறைவு : அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார்.இதுவரை 14 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் தான் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஆப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘ இசையில் ஞானி.. ஆனால் இங்கித்த்தில்🤦‍♀️🤦‍♀️ HTTPS://T.CO/LXZLM1IGHV — Dr M K SHARMILA (@DrSharmila15) May 4, 2023 திடீர் மாரணம் : அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டாகவும் பின்னர் அவர் உடல் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் உடல்நலன் தேறி மீண்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மனோ பாலா காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். -விளம்பரம்- இளையராஜா இரங்கல் : மனோபாலாவின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் இளையராஜாவும் மனோ பாலாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘என்னை பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பிய உடனே கோடம்பாக்கம் பக்கத்தில் காத்திருந்து பார்ப்பார். பின் நாட்களில் நடிகரானாலும், படங்களை இயக்கினாலும் என்னிடம் வந்து அப்போது அப்போது நடக்கும் விஷயங்களை சொல்லி விடுவார். ரெக்கார்டிங் நேரத்தில் சொல்லி என்னை மகிழ்விப்பார்’ என்றும் பேசி இருந்தார். விமர்சிக்கும் ரசிகர்கள் : இளையரஜாவின் இந்த வீடியோவை கண்ட பலரும் இது இரங்கல் பதிவு போல தெரியவில்லை, உங்களின் பெருமையை சொல்லும் பதிவு போல தெரிகிறது என்று விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோவிற்கு கமண்ட் செய்துள்ள நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா ‘இசையில் ஞானி.. ஆனால் இங்கித்த்தில்’ என்று குறிப்பிட்டு தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜிக்களையும் இளையராஜாவை விமர்சித்து இருக்கிறார்.

    Read more at: https://tamil.behindtalkies.com/ilayaraja-condolence-video-about-manobala/?fbclid=IwAR0UDMcISQ-1ur68veUh0Qs1gLAH1snL_U_iqV8uDD-I75SNXuQ6n_2cKfc

  12. Have a wonderful day!
    May be an image of coffee cup and text that says 'Today Take a few minutes to sit quietly and just be thankful for all that you have.'
     
     
     
     
     
     
  13.   · 
     
     
    If you want to kill a big dream, tell it to small minded people.
    May be an image of 1 person and text that says 'If you want to kill a big dream, tell it to small minded people. FACE THE REALITY'
     
     
     
     
    1. யாயினி

      யாயினி

      இன்று சித்திரா பெளர்ணமி.04/05/2023

  14.  
    எனை என்ன செய்தாய் வேய்ங்குழலே எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய் இந்த இளமனம் இளகிடவே எனை என்ன செய்தாய் வேய்ங்குழலே - சுதா ரகுநாதன்இவன் 2002 \ இளையராஜா \ வாலி
     
     
  15.  

    "Education is the most powerful weapon you can use to change the world..Nelson Mandela 

  16. அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்
    வாழ்த்துக்கள்/
     
    May be an image of text that says 'ShareChat Share @paulasir கடின உழைப்பு ஒருநாள் பலன் தரும், அதற்கான காத்திருப்பு ஒருநாள் வெற்றிபெறும். மே paulasir தொழிளாளர் தினம் வாழ்த்துக்கள்'
     
     
     
     
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.