• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

naanal

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  98
 • Joined

 • Last visited

Everything posted by naanal

 1. மச்சான், என்ரை பழைய கதையைக் கேட்டுப்போட்டு நீங்களே முடிவுபண்றுங்களேன். சிறுவயதுமுதல் கொழும்பில் வளர்ந்து இந்துக்கல்லூரி றோயல்கல்லூரி எனப் படித்ததில் ஓரறவிற்குச் சரளமாக மூன்று மொழிகளிலும் பேசமுடிந்தில் தமிழ் சிங்களம் என்றெவித்தியாசம் இல்லாமல நண்பர்களைவிட அதிகமான நண்பிகள் கூட்டத்துடன் ஜாலியாச் சுற்றித்திரிந்த எனது வாழ்க்கையை பதினெட்டாவது வயதில 1977 ஆண்டு இனக்கலவரம் முற்றாகப் புரட்டிப்போட்டது. அகதியாக வடமராட்சியில் கால்பதித்த எனது வாழ்வின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று போர்க்குணமுள்ளவனாக மாறியது. அடுத்தது நல்லதொரு நண்பனைப்போன்று ஆளுமையும் நிதானமும் மதிநுட்பமும்மிக்க அன்பான மனைவியைச் சந்தித்தது. நான் உச்சங்களைத்தொட்ட அகங்காரத்தில் திளைத்தவேளைகளில் நிதானந்தவறாமலும் குப்புறவிழுந்த சோகமான கணங்களில் தன்மடியில் தாங்கிய தாயாகவும் நிற்கும் என் மனைவியின் துணையில்லாது இருந்திருந்தால் எனது சமாதியில் என்றோ புல்முளைத்திருக்கும். புத்தன், எனக்கொன்றும் சிவப்புச்சட்டைக்காரரிலை கோபங்கிடையாது.நான் முன்பு கூறியதுபோலத் திடீரென வடக்கிற்குத் தூக்கி வீசப்பட்டபின் அதற்கான காரணங்களைத் தேடமுற்பட்டபோது படித்த புரட்சி வரலாறுகள்தான் நாளடைவில் வீட்டிலிருந்து பாடாலைக்குச் செல்வதாகப் புறப்பட்டு நண்பரிடம் பாடப்புத்தகங்களைக் கொடுத்துவிட்டு யாழிலிருந்து வன்னிக்கு மினிபஸ் ஏறவும் இரவு அப்பாவிப் புhனைபோல வீட்டுக்குவரும் துணிச்சலைத்தந்து நாளடைவில் நிரந்தரமாக வீட்டிலிருந்து வெளியேற்றியது. நான் கதைகளில் தொட்டுச்செல்வது பல்வேறு மனித முரண்பாடுகளைத்தான் அவை எல்லாம் என் கொள்கைகளாக இருக்கவேண்டுமென்ற நியதி எதுவும் இல்லையே.
 2. என்ரை வோட்டு மச்சானுக்குத்தான் குத்துற இடத்தில குத்திப்போட்டுத்தான் உங்களுக்கு அந்த ரகசியத்தைச் சொன்னனான்.
 3. என்ரை வோட்டு மச்சானுக்குத்தான்
 4. வைதேகிக்கும் மற்றும் அனிதா ,reporter , நிலா , K P M பிறந்தநாளை கொண்டாடும் சகலரும் உங்கள் எண்ணங்கள் ஈடேறி இன்பமுடன் நீடுவாழ வாழத்துகிறேன்.
 5. ரதி உங்களது சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள். தயக்கமின்றிக் கேட்டீர்கள் என்று எழுதியதிலும் ஒரு விடயம் இருக்கிறது பொதுவாகவே நம்மில் அநேகருக்கும் ஒரு அர்த்தமற்ற பயமிருக்கும். தனக்கொருவிடயம் தெரியாது என்று அடுத்தவரிடம் கேட்பதால் அவர் தன்னைப்பற்றித் தாழ்வாக நினைத்துவிடுவாரோ அல்லது பொது இடங்களில் தெரியாத ஒருவிடத்தைப்பற்றிச் சந்தேகம் கேட்டால் சமுதாயத்தில் தனது அந்தஸ்த்துக்குறைந்துவிடுமோ என்ற தயக்கத்தில் தெரியாத, புரியாத விடயங்களையெல்லாம் தெரிந்தமாதிரி நடித்துக்கொள்வோம். உண்மையிலே எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டுமென்ற தேவையுமில்லை சாத்தியமும் இல்லை. ஆனால் தெரியாத ஒருவிடயத்தைச் சந்தர்ப்பம் கிடைத்தும் தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் இருப்பதுவோ அல்லது தெரிந்தமாதிரிக் காட்டிக் கொள்வதுவோதான் தவறு அப்படிச் செய்வதன்மூலம் தன்னையேதான் ஏமாற்றிக் கொள்கிறார்கள். இதனால்த்தான் ரதியிடம் இருந்த தேடுதல் ஆர்வத்தை பாராட்டியே அப்படி சந்தேகத்தைத் தயக்கமின்றிக் கேட்டீர்களே நன்றிகள் எனக் குறிப்பிட்டிருந்தேன். இனி விசயத்துக்வாறன் ரதி நாடகங்களின் ஒரு மாற்று வடிவமாக தெருநாடகங்கள் குறியீட்டு நாடகங்கள் இருப்பதுபோல தான் சொல்லவரும் கருத்தை இவ்வாறானதொரு மாற்று வடிவில் சொல்வதுவும் கதைகளை முக்கியமாக சமுகச் சீர்கேடுகளைச் சொல்வதில் ஒரு பாணியாகும் இந்தக் கதைவடிவம் தமிழிற்குத்தான் புதிதே அன்றிப் பல வேற்றுமொழிகளிலும் இவ்வாறாகத் தமது கருத்துக்களைச் சொல்லும்கதைகள் நிறையவே வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான கதைகளின் தொகுப்புக்கள் புத்தகங்களாகப் பல மொழிகளிலும் வந்திருக்கின்றன. நம்மவர்மத்தியிலும் இவ்வகைப்படைப்புக்களை தோற்றுவிக்கலாமே என்னற எண்ணத்திலேயே ஒட்டகத்தையும் கதை மாந்தருடன் இணைத்து எழுதுகிறேன். இங்கு ஒட்டகமென்பது வெறுமனே ஒரு குறியீடே அன்றி விசேடமா வேறெதுவும் இல்லை. நீங்களும் இதுபோல ஒரு எலி, புலி, நரியென எதையாவது இணைத்துக்கற்பனை செய்துபாருங்களேன்.
 6. நன்றி நிலாமதி, ஒரு சிலராவது என்ரை எழுத்தையும் படிக்கிறதற்கு ஆவலாக இருக்ககிறியள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. இப்ப ஒரு சின்னக் கதையைச் சொல்லுகிறன் கேளுங்கோ..... கொள்கைமாறாத ஒட்டகமும் நானும்........ காலையில எழுந்து சோம்பல்போகாதவனாக சோபாவில் சாய்ந்தபடி ஜன்னலுக்கால தெருவில போறவாற சனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன். என்ன அது இன்றைக்கும் காலங்காத்தாலை சோபாவில உட்கார்ந்து காலை ஆட்டினபடி............ நக்கலாகச் சொல்லிக்கோண்டு ஒட்டகம் தன்ரை அறையிலிருந்து தலையை நீட்டியது. நான் எப்படியும் இருப்பன் அதாலை உனக்கென்ன கேடுவந்தது என்றன் எரிச்சலோட காலமை எழும்பினால் வீட்டு உடுப்புக்கூட மாத்தாமலுக்கு வேலைவெட்டி இல்லாமல் உந்தச் சோபாவிலை காலைஆட்டிக்கொண்டு இருக்கிறதே தொழிலாப்போச்சுது. சும்மா இருக்கிறநேரத்தில என்னோட சேர்ந்து உந்த மலசலகூடம், சமையலறைச் சுத்தம் செய்யலாமே? எனக்கென்றால் சும்மா பத்திக்கொண்டு வந்தது அடக்கிக்கொண்டு.. நானொன்றும் சும்மா பொழுதுபோகாமலுக்கு இருக்கேல்லை ஒரு கொள்கையோடதான் உட்காந்திருக்கிறன் என்று கத்தவும், அது என்ன அப்படி ஒரு கொள்கையாக்கும் என்று ஒட்டகம் முடிக்கமுதலே நான் இன்றைக்கு முழுநாளும் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறதென்ற இலட்சியத்தோட இருக்கிறன். அட உதைத்தான் நேற்றும் சொன்னதுபோலகிடக்கு......... ஒம்! ஒம்! நேற்றுக்காலமையும் ஒரு அலுவலும் செய்யிறதில்லை என்ற குறிக்கோளோடதான் உட்கார்ந்தனான். பிறகென்னடா என்றால் தவிர்க்க இயலாமலுக்கு ஒரு சில வேலையளைச் செய்யவேண்டி வந்திட்டுது, அதாலை சாயங்காலம் இலட்சியம் நிறைவேறாமல்போட்டுது என்ற கவலையோடதான் படுக்கப்போனனான். அதுதான் இன்றைக்கு என்னதான் நடந்தாலும் என்ரை கொள்கையைவிடுகிறதில்லை என்ற கொள்கையிலை ஒரேபிடியாக இருக்கிறன். அதை இதைச் சொல்லிப் பிறகு இன்றைக்கும் சாயங்காலம் என்னைக் கவலைப்பட வைத்திடாதை, நீயும் என்ரை கொள்கையை ஒருநாளுக்கென்றாலும் கடைப்பிடிச்சுப்பார் அப்ப தெரியும் அருமை என்று நான் சொல்லவும், ஒட்டகம் சட்டென்று நான் கொம்யுனிசம் சமத்துவம் என்றதைவிட்டு ஒருநாளும் விலகமாட்டன் என்று வீரமாச் சொல்ல நானும் விடாமலுக்கு அப்ப இன்றைக்கும் முதலாளியளை ஒழிக்கிறன், அளவுக்கு அதிகமாக வச்சிருக்கிறவனை ஒழிக்கிறன், சமத்துவத்தை உண்டாக்கிறன் என்று அடுத்தவனைத் தட்டிச்சுத்தி ஓசிச்சீவியம் நடத்தப்போறாயென்று சொல்லு என்றன் நக்கலாக இப்படியே கதைச்சுக் கதைச்சு வீணாக நேரம்போகுது. நானொரு புது ஜக்கிசான் பட DVD வாங்கிவந்தனான் பார்க்கப்போறன். super என்று internet இல எல்லாம் கனபேர் எழுதியிருக்கிறாங்கள் விருப்பமென்றால் சேர்ந்து பாருமன் என்று ஒட்டகம் கேட்கவும். நானும் என்னை மறந்து, ஜக்கிசான் படமென்றால் நல்ல சண்டையும் பகிடியுமாக சும்மா இருக்கிறதுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்றன். கொள்கைகள்...................................?
 7. ஓடிப்போன ஒட்டகம் இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான். என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம், கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது. சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால் அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது. அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது. கோபியாதையுங்கோ போட்டுவந்து விசயத்தைச் சொல்லுறன்.......... நட்புடன் நாணல்
 8. ஆம் நீங்கள் கூறுவதும் சரிதான். மேற்கத்திய மற்றும் அமெரிக்க அரசியலுக்கும் பிராந்திய அரசியலுக்கும் இடையில் இடம்பெற்ற ஆதிக்கப் போட்டியில் பிராந்திய அரசியல் வலுப்பெற்றதன் விளைவுதான் எமது இன்றைய பின்னடைவின் முக்கிய காரணம். அத்துடன் இலங்கையிலுள்ள முக்கிய கட்சிகளில் U.N.P எப்பொழுதும் மேற்குலகைச் சார்ந்தும் S.L.F.P. எப்பொழுதும் பிராந்திய நாடுகள் சார்ந்துமே தமது கொள்கைளை வகுத்தும் அரசியலை நடத்தியும் வந்துள்ளன. இந்தவகையிலும் இன்றைய அரசு ஆட்சியிலிருக்கும்வரை பிராந்திய அரசியல் எமது நாட்டின் அரசியல் நகர்வுகளில் கோலோச்சப்போது உறுதி.
 9. பொருளாதாரச் சீர்குலைவு வேலையில்லாத்திண்டாட்டம் போன்ற சிக்கல்களில் சிக்கித்தவித்த ஜேர்மனியமக்களுக்கு அவர்களது பிரச்சனைகளுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் யுhதர்கள்தான் என்ற மயக்கம் கிட்லர்காலத்தில் எப்படித் தோற்றுவிக்கப்பட்டதோ அதேபோன்று இன்று சிங்களமக்களுக்கு உள்ள கஸ்டங்களுக்கெல்லாம் காரணம் தமிழரும் தமிழரது பொருளாதாரச்சுரண்டலும் என்பதுதான் ஆரம்பகாலத்தில் சிங்களவர்மத்தியில் விதைக்கப்பட்ட கருத்து காலப்போக்கில் இவற்றுடன் இணைக்கப்பட்ட கோசங்கள்தான் புலிப்புhச்சாண்டி, பயங்கரவாதம் போன்ற கருத்துக்கள். இப்பொழுது இம்மாதிரி பல மயக்கங்களில் இருக்கும் சிங்களரில் ஒருபகுதி இனிவரும் காலத்தில் பிரச்சனைக்குரிய காரணங்கள் அரசியல்வாதிகளால் கூறப்படும் இவையல்ல என உணர்ந்து காரணத்தைத் தேடமுற்படும் அப்பொழுது அவர்களுடன் கைகோர்க்கும் காலம்வரும்.
 10. வணக்கம், வாங்கோ விடலை
 11. வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்றெல்லாம் பிலிம் காட்டுவாங்கள் ஆனால் அப்பாவித் தமிழனுக்கு வாய்கரிசியும் கிடைக்காது பாவம் சதாரண சிங்களவன். அவனுக்கு அரசாங்கம் இன்றைய இராணுவ வெற்றிகளை ஊதி ஊதிப்பெரிசாக்காட்டும். வெளிநாடுகளில இருந்து தாராளமாகக் கிடைக்கும் உதவிகளை அரசியல்வாதிகள் ஆளாளுக்கப் பங்குபோட்டுக்கொள்ளுவாங்கள். சாதாரண நாட்டுச் சிங்களவனுக்குப் பாலாறும் ஓடாது தேனாறும் ஓடாது. பாணுக்கும் பருப்புக்குமே லாட்டரி அடித்துக்கொண்டுதான் இருப்பான். இந்த நிலை தொடர கொஞ்சக் காலத்தில, ஒருசில வருசத்தில எப்ப ஐயா எங்கட வீட்டில பாலாறு, தேனாறெல்லாம் ஓடும் என்று அந்தச் சிங்களவன் மகிந்த மாத்தையாவைப் பார்த்துக் கேட்கேக்கை உதுக்கெல்லாம் காரணம் என்று கைகாட்டிவிட புலிப்புhச்சாண்டியும் இருக்காது. அப்பொழுதுதான் ஒருபகுதிச் சிங்களம் அடடா இவ்வளவு நாளா மயக்கத்தில இருந்திட்டமே! பிரச்சனை வேறு எங்கோ இருக்கிறதே! என்று தேட முற்படும். அப்பொழுது அவர்களுடனும் இணைந்து கஸ்டப்படுகிற அனைத்து இன மக்களையும் இணைத்து முழு இலங்கைக்குமான பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்குமான சரியான தீர்வைப் பெற்றுத்தரும். அதற்கான வேலைகளை நாம் மெதுவாக இப்பொழுதே ஆரம்பிப்பதுதான் சரியானதென நினைக்கிறேன். அதைவிடுத்து இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக நாம் மிகவும் பலமிழந்து நிற்கும் இன்றைய நிலையில் பழைய கள்ளுப் புதிய மொந்தை வேலைகளைச் செய்வது பொல்லைக் கொடுத்து அடிவாங்கின கதையாக முழுமையான இன அழிப்பிற்கு நாங்களே பாதைபோட்டுக்கொடுத்த கதையாகத்தான் அமையும். தாயகத்தில் உள்ளவர்கள் அன்று தமது தேவை எதுவெனச் சொன்னார்கள் அதற்குத் தேவையான பக்கபலமாக நாம் நின்றோம். இன்று அவர்கள் தமக்கு எதுவேண்டுமெனத் தாமே மீண்டும் சுயமாச் சிந்தித்துக் கூறட்டும் அதற்கு நாம் தோள் கொடுப்போம். அதை விடுத்து அவர்களுக்கு இதுதான் வெண்டும் என புலம்பெயர் நாம் தீர்மானிக்க வேண்டாம். சிலர் சொல்லலாம் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு அவர்கள் தமக்கு எது வேண்டுமென்று கூறமுடியாது என. அன்றும் இதே அடக்குமுறைக்குள் இருந்துகொண்டுதான் தமக்கு எது தேவையென அவர்கள் தீர்மானித்தார்கள். இன்றும் அவர்களது தேவைகளை முதலில் அவர்கள் தீர்மானிக்கட்டும். ஐந்தாம்கிளாஸ் படிக்கிற பிள்ளை கதைக்கிற கதைக்கும் வயசான காலத்தில எப்படா மேலபோவன் என்றிருக்கிற பழசுகளின்ரை ஆதங்கத்திற்கும் என எதெதுக்கெல்லாமோ துரோகிப் பட்டம் கொடுக்கிற சமுதாயத்தில எனக்கும் சிலபேர் எப்பவோ அந்த லிஸ்ரில இடம்போட்டிருப்பியள், என்றாலும் நாங்கள் எல்லாரும் தேடுகிற அந்தச் சுதந்திரத்திற்குள் இந்தப் பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரமும் இருக்கென்ற நம்பிக்கையிலைதான் தொடர்ந்து முரண்டுபிடிக்கிறமாதிரிக் கருத்துக்களை எழுதுகிறன் புரிந்துகொண்டால் சரி. குமரிமுதல் இமயம்வரை கொடிகட்டிப் பறந்தம்., அது செய்தம் இது செய்தம் ஆண்டபரம்பரை என்ற பழைய பெருமைகளைமட்டும் பேசிக்கொண்டு இருப்பதைவிட்டு உலகாளும் பரம்பரை என்று பேசப்படும் சமுதாயமாக மாறுவோம்.. மாறிவரும் உலக நடப்புக்களைக்கண்டு மலைத்து நிற்காமல் மாற்றங்களை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். உச்சங்களைக் காணலாம்
 12. ராமாயி ராக்காயி மூக்காயி எல்லாம் வயசுக்கு வரட்டுமே விட்டிடுங்கோ! பழைய களத்தில இருந்து பலவருசமா சந்துகிடச்சா புகுந்து விளையாட நம்ம யாழில நிரந்தரமா வச்சிருக்கிற தலைப்புகளிலை முதலிடம் சாமத்தியச்சடங்கிற்குத்தான். லொள்ளு தாங்கமுடியல போதுமடா சாமி வயசுக்குவந்த விசயத்தை இதோட சொல்லித்திரியாமல் மூடி மறைச்சு வைப்பம்.
 13. வயசான பெரிசுகள் கட்டையிலபோறகாலத்தில தங்கட ஆதங்கத்தைச் சொன்னதுக்குமா?.................. சாப்பிடுகிறதைத் தவிர வேறு எதுக்கு வாயைத்திறந்தாலும் துரோகிப்பட்டம் கொடுக்கிற நம்ம கலாச்சாரம் எப்பதான் மாறுமோ? கண்டநிண்டதுக்கெல்லாம் துரோகி துரோகியெண்டு துரோகியென்ற சொல்லே வலு இல்லததாப்போச்சு
 14. தமிழ் சிறி உங்கட ideaவை அமுல்படுத்தினதில புரிஞ்சுது மயிரை வளர்த்தாலும் பிரச்சனை மழுங்க வழிச்சாலும் பிரச்சனைதான். தவளையார் நாடியில கை வச்சு உக்கார்ந்ததிலை தப்பே இல்லை
 15. வணக்கம் வாங்கோ! வந்து களத்திலை புகுந்துவிளையாடுங்கோ!
 16. வணக்கம் பரந்தன் வாங்கோ உங்கள் கருத்துப் பகிர்வுகளைப் படிக்க ஆவலாயிருக்கிறம்
 17. சுனாமியள் எல்லாம் அடிச்சுநொந்துபோய் இருக்கிறநேரத்தில புயலாய் வந்திருக்கிறியள் வணக்கம் வாங்கோ
 18. வணக்கம் வாங்கோ களத்தில்சந்திப்பதில் மகிழ்ச்சி
 19. வணக்கமுங்கோ! அட்டகாசமா களமிறங்கியிருக்கிறியள். கோவம் வேற மூக்குநுனியில நிக்குதுபோல பாவம் கள உறவுகள் கண்டபடி போட்டுத் தள்ளிவிடாதையுங்கோ!
 20. வணக்கம் வாழ்த்துக்கள்! வாங்கோ முடிவிலி நானும் உங்களைப்போலத்தான் தேடல்கள் முடிவிலி ஆக தொடரந்து தேடுதலிலேயே காலம் கழிகிறது. உங்கள் எண்ணப் பதிவுகளைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 21. நாட்டுக்கட்டை நாக்கமுத்து கரும்பு ஜோரா விளைஞ்சதில கையில கொஞ்சம் காசுகிடக்குது. வீட்டுக்கு ஒரு பிரிஜ்சுப் பெட்டி வாங்கினால் காத்தாயி குளிர்ந்துவிடுவாள் என்ற ஆசையில நாக்கமுத்து ரங்குப்பெட்டியில மடிச்சு வச்சிருந்த கரை வேட்டியையும் தோள்ள தலைவர் எம்.ஜீ.ஆர் படம்போட்ட துண்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு பட்டணத்துக்கு பஸ் பிடித்துப் போய்ச் சேர்ந்தார். அங்கை இங்கை தேடி ஒருவழியா பெரியதொரு எலக்றிக்கல் சாமான் விற்பனை செய்யும் கடையைக் கண்டுபிடித்து எம்மாம் பெரிய கடை என முணுமுணுத்தக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். வெளியில சுட்டு எரிக்கிற வெய்யிலுக்குக் கடை ஜில்லென்று குளிரா இருக்கிறது. கடையையே இம்மாம் பெரிய பிரிஜ்ஜிற்கை வச்சிருக்கிறான் போல அப்படியென்றால் விற்பனைக்கு எத்தனை எத்தனை வகையில பிரிஜ் வைத்திருப்பானுகள் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொரு சாமானுகளாகப் பார்த்குக்கொண்டு போய் கடைசியில வடிவானதொரு வெள்ளைப்பெட்டியைக் கண்டுபிடித்து கதவை திறந்து உள்ளே பார்த்துவிட்டு கொஞ்சம் சின்னதுதான் என்றாலும் பரவாயில்லை என்று முணுமுணுத்தவாறு கடைக்காரரைக் கூட்டியாந்து தம்பி இந்த பிரிஜ்சுப் பெட்டி என்ன விலை என்று கேட்டார். அதற்குக் கடைக்காரர் நாட்டுக்கட்டையளுக்கெல்லாம் பிரிஜ் விற்கிறதில்லை என்று சொல்லிவிட்டு அடுத்த ஆளிடம் போய்விட்டார். நாக்கமுத்துவிற்கு என்றால் பொல்லாத கோபம். நாட்டானிடம் காசு பணம் இருக்காது பிச்சைக்காரப்பயல் என்றெல்லோ கடைக்காரன் ஏளனமாகச் சொல்லிப்போட்டான் என்ன செய்யலாம் என்று யோசித்து அடுத்தநாள் முன்னர் கல்லாணத்திற்கு வாங்கிய பாண்டு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு தலைமுடிக்கு எண்ணை வச்சு வாரி இழுத்துவிட்டபின் திரும்பவும் அந்தக் கடைக்குப் போனரார். இந்தக் கோலத்தில் இன்றைக்கு எப்படி நாட்டான் என்று கண்டுபிடிக்கப்போறான் என்ற எண்ணத்தில் திரும்பவும் இன்றைக்கும் கடைக்காரனைக் கூட்டிவந்து தம்பி இந்தப் பிரிஜ் என்னவிலை என்று கேட்டார். கடைக்காரன் ஒன்றுமில்லாத நாட்டானுக்கெல்லாம் பிரிஜ் விற்கமுடியாது என்று சொல்லிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போய்விடுடான். கடைக்காரன் நல்ல அனுபவஸ்தன்போல இந்தக்கோலத்திலையும் சட்டென்று கண்டுபிடித்துவிட்டான் என்று நினைத்தவாற் பஸ் பிடிச்சு வீடுபோய் சேர்ந்தார். என்றாலும் பிரிஜ் வாங்குகிற ஆசை மட்டும் மாறவே இல்லை அடுத்த நாள் காலையில எழும்பி இன்றைக்கு நானோ அவனோ ஒரு கை பார்திடவேணும் என்று சபதம் எடுத்துக்கோண்டு பழையபடி பாண்ட் சேர்ட் மாட்டி பட்டணம்போய். இன்றைக்கு முதலிலை என்ரை கெற்றப்பை முழுதா மாற்றிக்கொண்டுதான் போறது என்ற முடிவோட காலுக்குச் செருப்பு முகத்துக்கு நல்ல கறுத்தக் கண்ணாடி என்றெல்லாம் வாங்கிப்போட்டும் திருப்திவராமலுக்கு துணிக்கடைக்குப்போய் தம்பி ராசா நல்லதாக இந்தக் கழுத்திற்குக் கட்டுற கயிற்றுப்பட்டி ஒன்று தா என்று கேட்க ஏய் பெரிசு நீ தூக்கில தொங்க கயிறு வாங்க நான்தான் கிடைத்தனோ என்று திட்ட தம்பி பொறு பொறு அவசரப்படாதை எம்சியார் கன படத்தில எல்லாம் கட்டியிருப்பாரே அப்படி இப்படி என்று கஸ்டப்பட்டு புரியவச்சு ஒருவழியா ரை ஒன்றையும் வாங்கிக் கழுத்தில கட்டிக்கொண்டு இன்றைக்கு எப்படியும் கடைக்காரன் நாட்டுக்கட்டையென்று கண்டுபிடிக்கமாட்டான் என்று நினைத்தவாறு கடையிற்குள் போனார். கடைக்காரனைக் கொஞ்சம் அதட்டலாக் கூப்பிட்டு இந்தப் பிரிஜ் என்ன விலை என்று கேட்டார். கிட்ட வந்த கடைக்காரன் கோபமா எத்தனைவாட்டிதான் சொல்லுறது நாட்டானக்கு பிரிஜ் இல்லை என்று கத்தினார். வெலவெலத்துப்போன நாக்கமுத்து தம்பி கோவியாதையும் என்றபடி ஆச்சரியமாக எப்படித் தம்பி எந்தக் கெற்றப்பில வந்தாலும் நாட்டான் என்று கண்டுபிடித்துப் பிரிஜ் தரமாட்டன் என்று சொன்னனீர் என்று கேட்டார். அதற்குக் கடைக்காரன் நானெங்கை கண்டுபிடித்தது. ஆனால் கடை வச்சதிலயிருந்து இன்றுவரை நீர் ஒருத்தர்தான்காணும் வாசிங்மெசினைப் பார்த்து இந்தப் பிரிஜ் என்று விலை என்று கேட்டது, அதுதான் ஒன்றுந் தெரியாத நாட்டான் என்று அப்படிச் சொன்னனான் என்றான். உடiனே நாக்கமுத்து தம்பி அப்ப உந்த வாசிங் மெசினில காய்கறி மீன் எல்லாம் கழுவலமமோ என்று கேட்க கடைக்காரன் தடால் என்று மயக்கம்போட்டு விழுந்தான்
 22. கனகருக்கு கட்டையில போற வயசில இது கொஞ்சம் ரூமச்சதான் நல்ல காலம் போற வழியில ஹாட்அற்றாக் வந்து தொலைக்காமல்விட்டுது. அதுசரி கனகற்றை பேரப்பெடியள் கட்டிவிட்டுதுகளோ? நல்ல இடமாக்கிடகுது கலியாண ஆசை வந்த எங்கட கறுப்பிக்கு கனகரின்ரை பேத்தியச் சம்பந்தம் பேசலாம்போல கிடக்கு.
 23. அனலைதீவன்ரை கவிதையிலயும் அனலடிக்குமாப்போல கிடக்கு. முத்தான வரிகள்