Jump to content

ஜெகுமார்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    485
  • Joined

  • Last visited

Everything posted by ஜெகுமார்

  1. உங்கள் 2 ஆவது பதிலை விளங்கிக் கொள்வது சிறிது சிரமமாக இருந்தாலும், நீங்கள் சொல்லவந்தது சரியான பதிலை அணுகுவதாக உள்ளது ... ஃ nunavilan !! உங்களுக்கு எங்கள் அனைவரது பாராட்டுகள் ... :D ... ... ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு ! எப்போதும் பெரும்பான்மை (சில வேளைகளில் 50.1% மாத்திரமே !) சிறுபான்மையை (அனேகமாக 49% தத்திற்கும் மேல் !!) (5, 10 வருடங்கள் !) நசுக்குவதாகும் bien dit, beau dit, et tout dit !
  2. அதுதான் தமிழ்: உபயோகிக்க முடியாத தரவுகள், தமிழ் சினிமாக்களைப் போல ... அப்போ சரியான பதில் ? யாரோ ஒருவர் பாடடினார் என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் உண்மையிலும் உண்மை . பொய்யிலும் பொய், மயில் ஆடக் கண்ட வான் கோழி தானும் சிறகை விரித்து ஆடியது, என்பதாம். உண்மை என்னவென்றால் , வான் கோழியை கண்ட மயில் , அது ஒரு புது நாட்டுப் பெண் மயில் என்று காதல் கொண்டு தந்திர நடனமடியது ! ஆனால் வான் கோழியோ தற்பாது காப்புத் தண்டவம் மாடத் தயாராகியது ! அது அப்படி இருக்க... ஜனநாயக அமைப்பின் பாரிய குறைபாடு என்ன ?
  3. அவ்வை யார்? அவ்வையார் என்ற பெயரை அறியாத தமிழ் அறிந்த தமிழர்கள் அகிலத்தில் எங்குமே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவ்வைப்பாட்டியைப்பற்றிய கதைகள் தமிழ் மக்களுக்குப் பிள்ளைப் பராயத்திலேயே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப வகுப்புப் பாடப் புத்தகங்களிலும் அவ்வையாரின் பாடல்கள் இடம்பெறுகின்றன. ... ஆனால் அவ்வையார் என்ற பெயரில் பல்வேறு பெண்புலவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்துள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. அவ்வையார் என்ற பெயரில் தமிழ்வளர்த்த புலவர்கள் மூவர் என்று ஆராய்ச்சி முடிவுகள் ஆதாரப்படுத்துகின்றன. அவ்வையார் என்ற பெயரில் சங்ககாலத்தில் ஒரு பெண்புலவர் வாழ்ந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அவருக்குப் பின் யாராவது ஒரு பெண் கவிதைகள் பாடி, புலவராகத் திகழ்ந்தபோது அவரை அவ்வையார் என்றபெயரால் மக்கள் அழைத்திருக்கக்கூடும்.... - அவுஸ்திரேலியாவிலிருந்து செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராசா உங்கள் இனைப்பிற்கு நன்றி.
  4. ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்தி சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன. கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. நூல் நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். 1 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். 2 இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு. 3 அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். 4 அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. 5 உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். 6 நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம். 7 நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. 8 தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. 9 நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல். 11 மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். 12 கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம். 13 கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. 14 - www.chennailibrary.com ஔவயார் என்றுதான் பலர் கூறுகிறார்கள், ஆனால் அந்த வான் கோழி எனப்படும் பறவை ஐரோப்பியர்களால் (போர்துக்கேயரால்) தான் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. - மூதாதயர் எப்படி ஓலையில் எழுதினார்கள்... imag from www.mazhalaigal.com சீமைக்கோழி (சீமை = ஐரோப்பா) என்றும் ஆங்கிலத்தில் டர்க்கி என்றும் வான்கோழியை அழைக்கின்றனர். பொதுவாக வான் கோழி 23 கிலோ எடைக் கொண்டது. ஆண் பறவையின் வால் பகுதி விசிறி போல அழகாக விரிந்து சுருங்கும், தன்மையுடையது. கழுத்து பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற உறுப்பு இவற்றின் மனநிலைக்கு ஏற்றவாறு சிகப்பு, நீலம், வெள்ளை என நிறம் மாறும். இதன் குரல் கேட்க அருவருப்பாக இருக்கும். பெண் வான் கோழி சாம்பல் கலந்த வெளிர்ப் பச்சை நிறத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும். ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன. from www.hi2web.com-forum கினி பறவை அல்லது கினி கோழி பேசன்ட்ஸ் வரிசையை சேர்ந்த குடும்பத்தில் உள்ள வான் கோழி மற்றும் மற்ற பறைவகள் வகையை சேர்ந்தது. பெரும்பாலும் இப்பறவைகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது - a.hscripts.com நெல்லிக்கனியை உண்டு நீண்ட காலம் வழலாம் என்று நம்ப முடியாது... ஃ ஔவயார் அத்தப்பாட்டை பாடவில்லை என்றே நான் நம்புகிறேன் ... (ஔவயார் கண்ட வான் கோழி சீமைகோழியல்ல என்று நிரூபிக்கப் படும்வரை) ... ? அது அப்படியிருக்க ... உங்கள் பதிலுக்கு நன்றி.
  5. "கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற ... " என்று யார் பாடினார் ?
  6. பால் சமூக ஓட்டத்துடன் செல்பவர்களின் பதில் (200 பேர்) கஞ்சி, களனி அல்லது தண்னி சமூக ஓட்டத்திற்கு எதிராகச் செல்பவர்கள் ( அல்லது ஒரே இடத்தில் நிற்பவர்கள்) பதில் (9பேர் உங்களுடன் 10 பேர்) வ்றிட்ஜி (குளிர்சாதன பெட்டி), வெள்ளை நிறம், பசு (மாடு) என்ற சொற்களால் எங்கள் சிந்தனை தற்போதைய சமூக வழக்கங்களுக் இனங்க வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும் ...? ! உங்கள் பங்களிப்பிற்கு நன்றி
  7. இந்தக் கேள்வியை ஐரோபிய மொழியில் மாற்றி பின்பு ஐரோபியரிடம் (பெரியவர்கள், குழைந்தகள்) கேளுங்கள் அவர்கள் உடனடியாகக் தரும் முதல் பதிலைதான் கணக்கேடுக்க வேண்டும். அப்படிக் கிடைத்த பெரும்பான்மையான பதில் தான் சாதாரணமான பதில் !! மேலும் விளக்கம் பின்பு தரப்படக்கூடும்?! !!!! கவனம் கேள்வி மாற்றப்பட்டுள்ளது !!!உங்கள் கருத்திலும் அதை மாற்றத் தவறாதீர்கள், நன்றி ex: your fridge is white, isn't it? ... OK ... so the cow drink ...? ton frigo est blanc n'est pas? ... d'accord ... alors qu'est qu'elle boit la vache ... ? ...
  8. உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?... அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.
  9. மங்கோலியா 1.565 millions km2 மிகப்பிரபலமான தொண்டைச் சங்கீதம் (Mongolian Throat-singing, dissected) The Mongols entered history in the 13th century when under GENGHIS KHAN they conquered a huge Eurasian empire. After his death the empire was divided into several powerful Mongol states. Mongolia won its independence in 1921 with Soviet support. A Communist regime was established in 1924. In early 1990, former Mongolian People's Revolutionary Party Communist (MPRP) has gradually strengthened its monopoly on power of the Coalition of the Democratic Union (UCR), who defeated the MPRP in a national election in 1996. Over the following 4 years, DUC has proposed a number of key reforms to modernize the economy and democratize the political system. Mongolia Geography Location: Northern Asia, between China and Russia Geographic coordinates: 46 00 N 105 00 E Map: Asia Area total: 1.565 million km2 Water: 9 600 km2 Land: 1 555 400 km2 Area - comparative: slightly smaller than Alaska Land boundaries: Total: 8 162 km Border countries: China 4 677 km, Russia 3 485 km Coastline: 0 km (land surrounded only) Maritime claims: none (only country surrounded land)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.