• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கே.எஸ்.பாலச்சந்திரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  58
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About கே.எஸ்.பாலச்சந்திரன்

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

865 profile views
 1. வரப்போகும் என் புதிய நூலுக்கான கட்டியம் கூறி யாழ்களத்தில் இடுகை செய்த கரும்புவுக்கும், வாழ்த்துக்கள் சொன்ன நிலாமதி, ரதி, யாயினி, புரட்சிகர தமிழ்தேசியன், வாத்தியார் ஆகியோருக்கும் நன்றிகள். இலங்கையைச் சேர்ந்த பாலு மகேந்திரா தனது இளமைக்கால அனுபவங்களை பதிவுசெய்யும் ஆசையுடன் "அழியாத கோலங்கள்' திரைப்படத்தை உருவாக்கினார். எழுத்தாளர் சுஜாதா தனது இளமைக்கால நினைவுகளை ஸ்ரீரங்கத்து தேவதைகள்'" என்ற பெயரில் தொடராக எழுதினர். பின்னர் அதுவே "ஸ்ரீரங்கத்து கதைகள்' என்ற்தொகுப்பாகவும் வெளிவந்தது. நான் இத்தொடரின் முதலாவது கட்டுரையை 1971ல் சிரித்திரன் சஞ்சிகையில் எழுதினேன். தொடர்ந்து 'உலகததமிழோசை, ஒருபேப்பர் ஆகியவற்றில் எழுதி முடித்தேன். எங்கள் காலத்தவரான் பலர் மறந்துவிட்ட எங்கள் கால நினைவுகளை மீட்டுக்கொள்ளவும் பிந்தியகாலத்து இளஞ்சந்ததியினர் , "ஆகா.. எங்களுக்கு முந்தியகாலத்தவர் இப்படியெல்லாம் வாழ்ந்தார்களா?" என்று அறிந்துகொள்ளவும் முடியும் என்று நினைத்தேன். அந்த எண்ணம்தான் இந்தநூல் உருவாவதற்கு காரணம். நன்றி
 2. நன்றி..கலைஞன்.. புத்தகக்கண்காட்சிக்கு நீங்கள் போவதுண்டா..என்கனவிலும் அந்த நினைவுகள்தான் வரும்..சந்தோசம்.. அன்புடன் கே.எஸ்.பாலச்சந்திர்ன
 3. இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பவர், யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த சுரேஷ் ஜோக்கிம். கனடவில் வசிக்கும் இவர்தான் பல உலகசாதனைகளை செய்தவர்.
 4. வணக்கம் கலைஞன், இந்த பாடலுக்கான இணைப்பை பலர் தந்திருக்கிறார்கள். இந்தப்பாடல் பற்றிய சில குறிப்புகள் இந்தபொப்பிசைப்பாடல் 70-80களில் ஏ.ஈ.மனோகரன், நித்தி கனகரட்னம்,எஸ்.ராமச்சந்திரன் போன்றோர் தமிழில் பொப்பிசையை பாடிப்பிரபலப்படுத்திய காலத்தில் சண்(சண்முகம்)என்பவரால் இசையமைத்து பாடப்பெற்றது. தற்போது நோர்வேயில் வசிக்கும் இவர் இலங்கையில் "கலியுக காலம்" என்ற டப்பிங் (சிங்களத்திலிருந்து) படத்திற்கு இசையமைத்தார். அதில் அமுதன் அண்ணாமலை போன்றோர் பாடியிருக்கிறார்கள். ஒரு பாட்டு - நல்ல பாட்டு - ஞாபகத்தில் இருக்கிறது. "அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள்..இனிவரும் நாளெல்லாம் இன்ப நாள்". நண்பர் சண் நீங்கள் பார்த்த காட்சியை தான் நோர்வேயில் தயாரித்த படம் ஒன்றிற்காக நையாண்டிகலஞர்களையும் சேர்த்து படமாக்கியிருந்தார். எனக்கு முழுப்படத்தையும் அனுப்பியிருந்தார். யாழ் கள அங்கத்தவர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்புடன் கே.எஸ்.பாலச்சந்திரன் ka
 5. நன்றி கலைஞன், தந்தை திருமணம் முடித்து பிள்ளகளும் இருக்கும்போது வேறோரு பெண்ணோடு தொடர்பு கொண்டார். அந்தோனி அப்படியல்ல.அவன் அப்போது திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு பெண்ணினால் கைவிடப்பட்டபோது அவனுக்கு இந்த உறவு ஏற்பட்டது. அவனது வாழ்வில் திருமபவும் மாற்றத்தை அவனது பெற்றோரே கொண்டுவந்தார்கள்.
 6. வல்வை சாகராவிற்கு உங்கள் விமர்சனத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். எழுதியது சந்தோசம். உங்கள் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவது என் நோக்கமல்ல. இருப்பினும் ஒரு படைப்பாளியின் தன்னிலை விளக்கமாக இதை ஏற்றுக்கொள்வீர்கள் என கருதுகிறேன். அந்தோனி ஸ்ரெல்லாவின் மீதான தன் விருப்பத்தை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் பகுதி.. "எங்கெல்லாமோ சென்று அவனே எதிர்பார்க்காத வகையிலே, ஆஸ்பத்திரியில் கண்ட அவளில் வந்து நின்றது. அவளின் அமைதியான சிரிப்பும், பார்வையும், பழகிய பண்பும், அவன் நினைவுகளைத் திசை திருப்ப விடாமல் திரும்பத் திரும்ப அவளிடமே கொண்டு சென்று விட்டது. "இவ்வளவு எளிதாக வேறொருத்தியால் பட்ட காயத்தை ஆற்றிக் கொண்டு, இவள் மேல் சலனப்படும் அளவிற்கு, தன்னுடைய மனம் வைராக்கியம் அற்றதா" என்று அந்தோனி தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். "பட்டபாடே போதும்.... இனி இந்த மாதிரி யோசிக்கவே கூடாது" என்ற அலைமோதும் எண்ணத்தின் தொடர்ச்சியாக... "அவள் யாரென்றே தெரியாது....திருமணம் முடித்தவளா... இல்லையா என்று தெரியாது....ஒரு வார்த்தை ஆதரவாகப் பேசி விட்டாள் என்பதற்காக..." தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து சிரித்தவன் - சற்று உரத்துச் சிரித்திருக்க வேண்டும். "என்ன அந்தோனி... சிரிச்சனியோ...| என்ற நட்சத்திரத்தின் ஆச்சர்யத்தொனி கலந்த கேள்வியினால், மீண்டும் சூழலை உணரும் நிலைக்கு வந்தான். மற்றது மூன்று மாதங்கள் மட்டுமே திருமண வாழ்வின் சுகந்தங்களைஅனுபவித்து தட்டிப்பறிக்கப்பட்ட அந்த வாழ்வை அந்த இளம்விதவை மீளப்பெறவேண்டும் என்ற என்விருப்பம் தவறானதா? பாரதிதாசனின் "கோரிக்கையற்று கிடக்குதண்ணே..இங்கு வேரிற் பழுத்த பலா.." என்று வரிகள் வரும். கோருவார் அற்று கிடக்கும் அந்தசோகத்தை நினத்தேன். தந்தைக்கு மகிழ்வு தந்த வீட்டிலேயே மகன் உற்வு கொள்வது நெருடலாக இருந்தாலும் அப்படி நிகழ்வதின் சாத்தியம் இல்லையா? நான் இதை பொதுமைப்படுத்தவில்லை. இப்படி நிகழ்ந்தது. அதனால் அவர்கள்வாழ்வு திசை திரும்பியது என்று சொல்லவந்தேன். “:அபூர்வராகங்கள்” படம் பார்த்தீர்களா? மதனேளாவின் ரவிக்கை முடிச்சு பற்றிய பகு்தி இதுதான்.. ஏன் அதிகம் சொல்ல வேண்டும்? இந்தச் செக்கல் பொழுதில்... ஐஸ், மரத்தூள் போட்டு மீன் நிரப்பிய மரப்பெட்டிகளை றோட்டுக்கரையில் அடுக்குவித்து விட்டு, அவற்றை கொழும்புக்கு கொண்டு போகும் மயிலிட்டி லொறிகளுக்காக காத்துக் கொண்டுதான் மதலேனா நிற்கிறாள். 'வஞ்சனை'யின்றி வளர்ந்து விட்ட உடம்பில் சாரம் போல சுற்றியுள்ள கம்பாயமும், சட்டை ஊசிகளுக்கு க~;டம் கொடுக்காமல் முடிந்து விட்ட மேல்சட்டையும், கழுத்தில் தொடங்கி பின்னர் காணாமல் எங்கோ மறைந்து விட்ட சங்கிலியுமாக, வாயின் வெற்றிலைச்சாற்றை விரல்களின் ஊடே பீச்சியடித்துவிட்டு, நாரியில் கைதரித்து பலாலிச்சந்திப்பக்கமாக பார்த்துக்கொண்டு நின்றாள். இருள் கவ்வும் நேரத்தில் கணவன் செய்யவேண்டியதை தான் செய்யவந்த மதலேனாள் போட்ட அவச்ர முடிச்சு.. உங்கள் விமர்சனம் என்னை மனதளவில் எந்த வகையிலும் பாதிக்காது. யாழ்கள அன்பர்களில் என்நாவலைப் பெற்றுக்கொண்டவர்கள் என்று நான் நிச்சயமாக அறிந்த நீங்களும் கலைஞனும் விமர்சன்ம எழுதியது சந்தோசமே. அன்புடன் கே.எஸ்.பால்சச்நதிரன்
 7. நிழலி, உங்களைப்போல அந்த வேதனையை அருகிருந்து பங்கிட்டுக்கொள்ளும் சந்தர்ப்பம் எங்கள் காலத்தில் இருக்கவில்லை. உங்கள் கவிதை வரிகள் எனக்கு அதை உணர்த்தின. என் மகள் இன்று யாருடையதோ தேவதையாகப் போய்விட்டாலும் முதன்முறை தொட்டிலில், யாரோ கனவில் வேடிக்கை காட்ட சிரித்தபடி உறங்கிய என் மழலையை அவ்வப்போது நினத்துக்கொள்ளத்தான் செய்கிறேன்.இப்போது மீண்டும் ஒருமுறை.. வாழ்த்துகிறேன் கே.எஸ்.பாலச்சந்திரன்
 8. அன்பின் ஜெயபாலன், உங்கள் கவிதைகளில் மோகம் கொண்டவ்ன். உங்களின் நீண்டகால நண்பன். அண்மைக்காலத்தில் தொடர்புகள் அற்றுப்போய்விட்டாலும் உங்களின் செயற்பாடுகளை(திரைப்படங்களில் நடிப்பது உட்பட) அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன். குறிப்புக்கு நன்றி. யாழ்களம் மூலமாக எனக்கு செய்தி அனுப்பலாம். கே.எஸ்.பாலச்சந்திரன் அன்பின் ஈஸ்- நாவலைப்படித்தபின் அபிப்பிராயத்தை எழுதுங்கள். நன்றி
 9. அன்பின் ஈஸ்- கீழேயுள்ள யாழ்கள இனைப்பில் கலைஞன் உதவியோடு விழாப்படங்கள் இணைக்கப்ப்பட்டிருக்கின்றன. பாருங்கள் நன்றி http://www.yarl.com/forum3/index.php?showtopic=63615 கே.எஸ்.பாலச்சந்திரன்
 10. ஆமாம் இளஞாயிறு - 81,82 ஆண்டுகளில் யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இருந்த இறைவரித்திணைகள் கிளையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். சிங்கம் என் நண்பர். தொடர்பு விட்டுப்போய்விட்டது. அவரது சகோதரரை கனடவில் சிலகாலத்தின் முன் சந்தித்தேன். எனது நாவலை என்னிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அனுப்பிவைப்பேன். கே.எஸ்.பாலச்சந்திரன்
 11. நன்றி அக்பர் கான். நாவலைப்பற்றிய விரிவான உங்கள் கருத்தை நேரம் கிடைத்தால் எழுதுங்கள். அன்புடன் கே.எஸ்.பாலச்சந்திரன்
 12. வல்வை சாகரா.. எனது நாவல் படித்துப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் உங்கள் அபிப்பிராயத்தை எழுதலாமே. எதிர்பார்க்கிறேன்
 13. அற்புதமான வாசிப்பு. இரண்டு கைகளும் இணைந்து எழுப்பும் இசை உச்சம். இணைத்தமைக்கு மிக்க நன்றி. மிகுந்த சந்தோசத்தை எங்களுக்கு தந்திருக்கிறீர்கள் புத்தாண்டுபாட்டும் இசையும்சிறப்பாக இருக்கிறது. நல்ல அனுபவம். கே.எஸ்.பாலச்சந்திரன்
 14. என்னுடைய அபிமானக்கவிஞ்ர் / என்னுடைய நண்பர் ஜெயபாலன் திரைப்படத்தில் நடித்திருப்பது அறிந்து சந்தோசமடைந்தேன். அவருடைய கவிதைகளைப்பற்றி சுஜதா எழுதியபின்னர்தான் என்னைப்போன்றவர்களின் பார்வை அவர் கவிதை பக்கம் திரும்பியது. அதேபோல வெற்றிமாறன் மூலம் நடிகனாக பார்க்கிறோம். வாழ்த்துக்கள் நண்பரே. கே.எஸ்.பாலச்சந்திரன்