Jump to content

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11428
  • Joined

  • Days Won

    2

Everything posted by பிழம்பு

  1. யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
  2. (இனியபாரதி) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள் குற்றச் சாட்டுகின்றனர். அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  3. வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில் நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  4. `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார். வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  5. மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
  6. By KELUM BANDARA Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
  7. மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும் கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன் மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
  8. Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM 7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும். 2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள் ரஷ்காவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
  9. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும் சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது. இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  10. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:21 PM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது. அவ்வாறு அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது? கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான் பொறுப்பு கூறுவது? 12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில் கற்களை கொண்டு செல்கிறார்கள். நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா? ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார். அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk
  11. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:29 PM யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுகளைத் தோன்றுவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்போது யாழ்ப்பாணத்தில் அனுமதியற்ற முறையில் அதிகளவான குழாய்க்கிணறுகள் அடிக்கப்பட்டு வருவதாகவும் , அதனால் நிலத்தடி நீர் அற்று போகும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது அதனை தொடர்ந்து கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன. அதனை அடுத்து குழாய்க்கிணறு அடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ,அதன் அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை | Virakesari.lk
  12. Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 05:27 PM வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கல், மீள் குடியேற்றம், புதிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில், இந்த வருட இறுதிக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் . இதேவேளை, வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கைமாற்றும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. "உரித்து" காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமையை மே மாத நிறைவுக்குள் வடக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தில் நெடுந்தீவு மக்களுக்கான 76 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும் - வடக்கு ஆளுநர் | Virakesari.lk
  13. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார். தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
  14. யாழ்ப்பாணம் 32 நிமிடம் நேரம் முன் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்! மாதவன். யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள் நேற்று செவ்வாய்க்கிழமை(16) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முத்து ஐயன்கட்டு, ஜீவநகர் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக மலசலகூடம் கட்டுமானப் பணிக்காக 1ஆம் கட்ட நிதியாக 75ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதுடன் வவுனியா - கணேசபுரம் கிராமசேவகர் பிரிவிலுள்ள அறநெறிப் பாடசாலையின் கட்டிடம் அமைப்பதற்கான 2ஆம் கட்ட நிதியாக 1லட்சத்து 50ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரிம சுவாமிகள் கலாநிதி மோகனதாஸ் மற்றும் ஆச்சிரம தொண்டர்களுடன் நேரில் சென்று வழங்கிவைத்தார். சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றும் பல்வேறு உதவிகள்! (newuthayan.com)
  15. 17 APR, 2024 | 12:16 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களாகும் நிலையில், அவர் அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்ச்சியாக அவரது குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், விஜேராம மாவத்தையில் அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் ஏன் இதுவரை கையகப்படுத்தப்படவில்லை எனவும் அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். அரச உத்தியோகத்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அவர் பெற்றிருந்த அனைத்துச் சலுகைகளும் உடனடியாக இரத்துச் செய்யப்படும், ஆனால், கெஹலிய ரம்புக்வெலவுக்கு ஏன் விசேட கவனம் செலுத்தப்படுகிறது என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் அதே உத்தியோகபூர்வ வாகனங்களில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருவதாகவும் அந்த அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். கெஹலியவின் குடும்ப உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் வாகனங்களிலேயே வெலிக்கடை சிறைசாலைக்குச் செல்கின்றனராம்! | Virakesari.lk
  16. Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 09:56 AM வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை(16.04.2024) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்த்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசிகள் கட்சிகள் இத்தேர்தலை எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சனை சுந்தரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து வருகின்றது. இதனைத் தீர்ப்பதற்காக அகிம்சை ரீதியாக தழிர் தேசியக் கட்சிகள் பல முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றன. அதற்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. 30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள், பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலமும் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்ததை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டது. தேசியஇனப்பிரச்சனைக்குரிய தீர்வை ஜே.ஆர்.ஜெயவர்த்தன யுத்தம் என்ற ரீதியில்தான் சிந்தித்தார். பின்னர் இந்தியாவில் நிர்ப்பற்த்தின் மூலம் 13 வது திருத்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டுவரப்பட்டது. அந்த மாகாணசபையிலும்கூட இலங்கை இனப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு இல்லை. மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன, மைலத்தமடு மேச்சல்தலைப் பிரச்சனையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13வது திருத்ததின்மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987 ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை. இந்நிலையில் 1994 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நியாயமான தீர்வைத்தருவார் என் நம்பி சந்திரிக்காவை ஆதரித்தோம், பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவிற்கும் வாக்களித்தோம், எக்குரிய தீர்வு கிடைக்கும் என எம்மை நம்பவைத்தார்கள். இவ்வாறு இரு ஜனாதிபதித் தேர்லிலும் நம்பி வாக்களித்தும் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை. தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13 வதுதிருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார். 13 வதுதிருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை. தற்போதைய ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மைலத்தமடு, பிரச்சனை, கல்முனை பிரதேச செயலக பிரச்சனை, உள்ளிட்ட மிகவும் சாதாரண பிரச்சனையைத் தீர்க்க அவர் இன்னும் முன்வரவில்லை. 13வது திருத்தத்தை தரலாம் பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என தெரிவிக்கின்றார். எனவே நாம் கடந்த காலத்திலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், நிகழ்காலத்திலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் எந்தவொரு வேட்பாளரும் நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் தேசியக் கட்சிகள் சந்தித்து உங்களிடம் என்ன தீர்வு உள்ளது என்பதைக் கேட்கவேண்டும். அதனை மக்களிடதில் தெரிவிக்கவேண்டும். இந்நிலையில் பேரினவாதத்திலுள்ளவர்கள் எமக்கான தீர்வைத் தருவதற்கு மிகவும் பின்னடித்துக் கொண்டு வருகின்றார்கள். யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதற்கான தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தெரிவித்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக களமிறங்கினால் என்ன என்ற கேள்ளி கேட்க்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு கிழக்கிலுள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக போட்டியிடச் செய்து அதன்மூலம் வடக்கு கிழக்கு மக்களின் மக்கள் ஆணையை சர்வதேசத்திடம் தமிழ பேசும் மக்கள் உரத்த குரலில் கூறுவதற்குரிய சந்தர்ப்பமாக பயன்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழுகின்றது. எமது வேட்பாளர் வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ளவதராக இருக்க வேண்டும். எனவே வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஆளுமையுள்ள ஒருவரைகளமிறக்க வேண்டும். தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும். எனத் தெரிவித்த அவர் மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள். நாடு வங்குறோத்து நிலையில், உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்திலும் லஞ்சம், மோசடி, என்பன இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே கடன்பெற்று வந்த பணத்திலும் கையூட்டுப் பெறுகின்ற நிலமைதான் காணப்படுகின்றது. உதாரணமாக ஒரு முட்டையிலிருந்து சுமார் 15 ரூபா கொள்ளையடிக்கப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடையமாகவும், மீனர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது. இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுறதும் இவ்வடையம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் இதன்போது தெரிவித்தார். வடகிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் - ஞானமுத்து ஸ்ரீநேசன் | Virakesari.lk
  17. Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 04:52 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரும், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரும் வழக்கொன்றுக்காக யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து, சாவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களை சுமார் 30 நிமிட இடைவேளையில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து, தப்பியோடிய இருவருக்கு தலா 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த சாவகச்சேரி நீதவான், ஆயிரத்து 500 ரூபாய் தண்டமும் விதித்தார். தண்ட பணத்தினை கட்ட தவறின் மேலும் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். யாழ். சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் மீள கைது | Virakesari.lk
  18. 17 வயது மகளை 5 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! மனைவி உயிரிழந்ததையடுத்து தனது 17 வயது மூத்த மகளை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து இவர் தனது மூத்த மகளை சுமார் 5 வருட காலமாகப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர் தனது இரண்டாவது மகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போது அதனைக் கண்ட மூத்த மகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது இரண்டாவது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சந்தேக நபரின் ஒரு பிள்ளை சுகயீனமடைந்துள்ளதுடன் சுகயீனமடைந்த பிள்ளையை தன்னால் பராமரித்துக் கொள்ள முடியாததால் இவர், தனது பிள்ளையை உயிரிழந்த மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வீட்டின் உரிமையாளரான உயிரிழந்த மனைவியின் சகோதரி மூன்று பிள்ளைகளையும் இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 17 வயது மகளை 5 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது! | Virakesari.lk
  19. கேரள மக்கள் - எப்படி? பட மூலாதாரம்,INDIA TODAY படக்குறிப்பு,அப்துல் ரஹீமின் பழைய படம். இப்போது அவருக்கு 41 வயதாகிறது 15 ஏப்ரல் 2024, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் `தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘உண்மையான கேரளா ஸ்டோரி’ (தி ரியல் கேரளா ஸ்டோரி) என்ற தலைப்பில் இரண்டு செய்திகள் பகிரப்பட்டு வந்தன. முதல் செய்தி காங்கிரஸ் எம்பி சசி தரூரின் ட்வீட் பற்றியது. அதில், கேரளாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலின் படத்தை பதிவிட்டு, “400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து புதுப்பித்து அழகுபடுத்திய, கேரளாவின் உண்மையான கதைக்கு இது மற்றொரு உதாரணம்,” என்று அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று மற்றொரு செய்தி வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. அது, அப்துல் ரஹீம் என்ற தனி மனிதரின் உயிரைக் காப்பாற்ற 40 நாட்களில் 34 கோடி ரூபாய் வசூலிக்க, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கேரள மக்களின் ஒன்றிணைந்து பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கியதைப் பற்றியது. ஒரு உயிரைக் காப்பாற்றத் திரட்டப்பட்ட ரூ.34 கோடி அப்துல் ரஹீமை மரண தண்டனையில் இருந்து மீட்க முன்னெடுக்கப்பட்ட இந்தப் பரப்புரையை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “கேரள மக்கள் மனிதநேயத்தின் மூலம் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் வெறுப்பைப் பரப்புபவர்கள் பொய்யான கதைகளைப் பரப்புகிறார்கள். கேரள மக்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர்,” என்று அப்பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார். “கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீ சௌதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற 34 கோடி ரூபாயைத் திரட்ட கேரள மனங்கள் ஒன்றுபட்டிருக்கின்றன." “ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதிலும், ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும், கேரளா அன்பிற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. வகுப்புவாதத்தால் அழிக்க முடியாத சகோதரத்துவத்தின் கோட்டையாக கேரளா திகழ்கிறது என்பதற்கு இதுவே சான்று. இது தான் உண்மையான கேரளா ஸ்டோரி," என்று பெருமிதத்துடன் பகிர்ந்திருந்தார். பட மூலாதாரம்,X/CONGRESS KERALA காங்கிரஸ் கட்சியின் பதிவு அதேசமயம், கேரள மாநில காங்கிரஸ், அப்துல் ரஹீமின் கதையை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு, அதை 'தி ரியல் கேரளா ஸ்டோரி’ என்று குறிப்பிட்டிருந்தது. அப்பதிவில், "கேரளாவின் உண்மையான கதை இது! தொடர்ச்சியான வெறுப்புப் பிரச்சாரத்தை எதிர்கொண்டாலும், கேரள மக்களின் அசைக்க முடியாத மனிதாபிமானத்தை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “கடந்த 18 ஆண்டுகளாக ரியாத்தில் சிறை வைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கும் அப்துல் ரஹீமின் விடுதலைக்காக கிட்டத்தட்ட 34 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. மகனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற தாய்க்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உதவினர். இந்த மனிதாபிமான முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி,’’ என அப்பதிவு தெரிவித்திருந்தது. யார் இந்த அப்துல் ரஹீம்? கொல்கத்தாவின் ஆங்கில நாளிதழான 'தி டெலிகிராப்' வெளியிட்ட செய்தியின்படி, கோழிக்கோட்டைச் சேர்ந்த 41 வயதான அப்துல் ரஹீம் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர். 'இந்தியா டுடே' இணையதளத்தின்படி, அவர் 2006-இல் ஹவுஸ் டிரைவிங் விசா மூலம் ரியாத் சென்றடைந்தார். வாகனம் ஓட்டுவதைத் தவிர, மாற்றுத் திறனாளி குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில் அந்தக் குழந்தை ஒரு விபத்தில் இறந்தது. அந்தச் சிறுவனைப் பார்த்துக் கொள்வதும், காரில் ஏற்றிச் செல்வதும் அப்துல் ரஹீமின் வேலை. ஆனால் சிறுவனின் கழுத்தில் சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருந்த மருத்துவ கருவியை ரஹீம் தவறுதலாக கீழே போட்டதன் விளைவாக சிறுவன் உயிர் பறிப்போனது. அதற்காக, 2012-இல் சௌதி நீதிமன்றம் ரஹீமுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் கடந்த 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ரஹீமுக்காக சட்ட உதவி பெற கேரள மக்கள் முயற்சி செய்யத் துவங்கினர். மேலும், அவரது குடும்பத்தினரை அவருக்காக 'குருதிப் பணம்' (blood money) திரட்ட சம்மதிக்க வைத்தனர். முன்னதாக அப்துல் ரஹீமின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை நீதிமன்றம் வழங்கப்பட்ட மரண தண்டனையை 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உறுதி செய்தது. 'தி டெலிகிராப்' செய்தியின்படி, சௌதி அரேபியாவில் வசிக்கும் கேரள தொழிலதிபர் அஷ்ரஃப் வெங்கட், கடந்த வெள்ளிக்கிழமை கொடுத்த பேட்டியில், விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பம் பல ஆண்டுகளாக ரஹீமை மன்னிக்க மறுத்ததை தொடர்ந்து, 2023-இல் 1.5 கோடி ரியால் குருதிப் பணம் கொடுப்பதாக அவர்களிடம் பேசப்பட்டது. அப்துல் ரஹீமின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் சம்மதித்ததாக தெரிவித்தார். "குழந்தையை இழந்த குடும்பம் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி குருதிப் பணத்தை ஏற்றுக் கொண்டு ரஹீமுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த எழுத்துப்பூர்வ வாக்குறுதியைக் கருத்தில் கொண்டு, மரண தண்டனை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது." என்று அஷ்ரஃப் வெங்கட் கூறினார். 'தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தியின்படி, அப்துல் ரஹீமின் விடுதலைக்காக 2021-இல் அமைக்கப்பட்ட `அப்துல் ரஹீம் சட்ட நடவடிக்கைக் குழு’ மூலம் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்துல் ரஹீமை காப்பாற்றும் பிரசாரம் தொடங்கியது எப்படி? இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கீழ் இயங்கும் கேரள முஸ்லிம் கலாச்சார மையத்தின் சவூதி பிரிவின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வெங்கட் சமீபத்தில் கோழிக்கோடு வந்திருந்தார். கேரளாவில் உள்ள பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் உதவியுடன் ரஹீமுக்கான நன்கொடை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதே அஷ்ரஃப்பின் நோக்கம். “ரஹீமின் உயிரைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவில் இந்து, முஸ்லிம், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் இடம் பெற்றுள்ளனர்,” என்கிறார் வெங்கட். கடந்த வெள்ளியன்று (ஏப்ரல் 12), “அவரது விடுதலைக்குத் தேவையான ரூ.34 கோடி இலக்கை எட்டியுள்ளோம். தயவுசெய்து மேலும் பணம் அனுப்ப வேண்டாம். தற்போது, ரூ.34.45 கோடி வசூலித்துள்ளோம். அதிகமாக பெறப்படும் தொகை தணிக்கை செய்யப்பட்டு நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும்,” என்று அவர் தெரிவித்தார். “குழந்தையை இழந்த குடும்பத்தினருடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை முன்னெடுத்து அப்துல் ரஹீமின் விடுதலையை உறுதி செய்ய, எங்கள் அறக்கட்டளை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளும்,” என்று அவர் கூறினார். மேலும், “இந்தத் தொகை பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு அப்துல் ரஹீமின் மன்னிப்பை கோரும் ‘குருதிப் பணமாக’ வழங்கப்படும்,” என்றும் வெங்கட் குறிப்பிட்டார். அப்துல் ரஹீமின் தாய் சொல்வது என்ன? அப்துல் ரஹீமைக் காப்பாற்ற சவூதி அரேபியாவில் உள்ள கேரள மக்களின் அமைப்பு முக்கிய பங்காற்றிய நிலையில், சுரேஷ் என்ற நபரும் பெரிதும் உதவினார். சட்ட உதவிக் குழுவின் தலைவரான சுரேஷ், கடந்த மார்ச் 3-ஆம் தேதி கோழிக்கோட்டில் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். ரூ.34 கோடியை வசூலிக்கத் தொடங்கப்பட்ட இந்தப் பரப்புரை, தொழிலதிபர்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவர்கள் இணைந்தபோது வேகம் பெற்றது. “எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை,” என அப்துல் ரஹீமின் தாய் ஃபாத்துமா கூறியதாக 'தி டெலிகிராப்' செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இங்குள்ள மக்களின் உதவியால் இவ்வளவு பெரிய தொகையை இவ்வளவு விரைவாக வசூலிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்,” என்றார். இதுகுறித்து பேசிய அஷ்ரஃப் வெங்கட், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பணம் அனுப்பும் பணி துவங்கியுள்ளது, என்றார். அந்தத் தொகை வஃக்ப் வாரியம் மற்றும் நீதிமன்ற கண்காணிப்பு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும், என்றார். பணம் அனுப்பப்பட்ட பின், அப்துல் ரஹீமின் விடுதலையை எதிர்பார்க்கலாம் என்றும், ஆனால் அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை என்றும் வெங்கட் கூறினார். தி ரியல் கேரளா ஸ்டோரி: சௌதி அரேபியாவில் அப்துல் ரஹீமை காப்பாற்ற 40 நாளில் ரூ.34 கோடி திரட்டிய கேரள மக்கள் - எப்படி? - BBC News தமிழ்
  20. 15 APR, 2024 | 03:50 PM யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது | Virakesari.lk
  21. 15 APR, 2024 | 04:46 PM இ.போ.ச மற்றும் தனியார் இணைந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதில் இருந்துவரும் இழுபறி நிலையையடுத்து, யாழ். நீண்ட தூர தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையால் எழுந்த பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்துவது என சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது. முன்பாக முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்ட தூர தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடி, தீர்வு வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் உறுதி வழங்கியிருந்தார். இதையடுத்து இவ்விடயம் தொடர்பில் ஆளுநரால் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது சுமுகமான தீர்வு எட்டப்படாமையால் அன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் 5 பேர் அடங்கிய விசேட குழு ஒன்றை நியமித்து, பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் (15) அந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் வகையில் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் பரீட்சார்த்தமான முறையில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இணைந்த சேவை பரீட்சார்த்த அடிப்படையில் நெடுந்தூர சேவைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - டக்ளஸின் தலையீட்டையடுத்து சுமுகமான தீர்வு | Virakesari.lk
  22. 15 APR, 2024 | 05:32 PM கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த ரயில், கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் ரயில் மேடையையும் உடைத்துக் கொண்டு சென்று நின்றதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் கொண்டு சென்ற ரயில்! | Virakesari.lk
  23. Published:Yesterday at 3 PMUpdated:Yesterday at 3 PM நவீன் தாமஸ் - தேவி, ஆர்யா 6Comments Share கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவர், அருணாசலப் பிரதேசத்தில் கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ‘பிளாக் மேஜிக்’ குறித்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு அருகேயுள்ள வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவரின் மகள் ஆர்யா (29), திருவனந்தபுரத்திலுள்ள தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தார். பள்ளிக்குச் செல்வதாகப் புறப்பட்ட ஆர்யா வீட்டுக்குத் திரும்பவில்லையென, கடந்த மாதம் 27-ம் தேதி வட்டியூர்காவு போலீஸில் புகாரளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஆர்யா, அவரின் நெருங்கிய தோழி தேவி, அவரின் கணவர் நவீன் தாமஸ் ஆகியோர் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் இறந்துகிடப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த மூவரின் மரணம் குறித்து அருணாச்சல் போலீஸார் கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசம், ஜீரோ வேலியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் 28-03-2024 அன்று மூவரும் அறை எடுத்துத் தங்கியிருக் கிறார்கள். ஏப்ரல் 1 முதல் 2-ம் தேதிவரை அவர்கள் அந்த அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் அறையின் கதவை அன்லாக் செய்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் ரத்தவெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார்கள். இது குறித்துத் தகவலறிந்ததும் நாங்கள் அந்த அறையைச் சோதனையிட்டோம். அறையின் கட்டிலில் ஆர்யாவும், தரையில் தேவியும் பாத்ரூமில், நவீனும் கை நரம்புகளை அறுத்த நிலையில் இறந்து கிடந்தார்கள். தேவி, ஆர்யா இருவரின் முகங்களிலும், உடலின் வேறு பாகங்களிலும் பிளேடால் கீறப்பட்டிருந்தது. கறுப்பு நிற வளையல்கள், அறுக்கப்பட்ட தலைமுடி ஆகியவை ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் ரத்தம் உறையாமல் இருப்பதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையுடன் மூன்று பிளேடுகளும், ஒரு கடிதமும் அவர்களின் அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் கடிதத்தில், ‘சந்தோஷமாக வாழ்ந்தோம். இனி நாங்கள் போகிறோம்’ என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆர்யாவின் லேப்டாப்பையும், இரு செல்போன்களையும் கைப்பற்றி அவற்றை ஆய்வுசெய்தோம். அவற்றில், வேற்றுக்கிரகங்களில் வசிப்பவர்கள் குறித்து இணையதளத்தில் தேடியதோடு, அது சம்பந்தமான பி.டி.எஃப் ஃபைல்களையும் அவர்கள் டௌன்லோடு செய்திருப்பது தெரியவந்தது. நவீன் தாமஸ் - தேவி ‘டைனோசர் இனம் அழியவில்லை. அவை வேறு கிரகங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. பூமியிலுள்ள உயிர்கள் இரு வெவ்வேறு கிரகங்களுக்குச் சென்றிருக்கின்றன. 90 சதவிகித மனிதர்களும் அவ்வாறே வேறு கிரகங்களுக்குச் சென்றிருக்கின்றனர். பூமி தனது எனர்ஜியை இழந்து கொண்டிருக்கிறது. எனவே, எஞ்சியிருக்கும் மனிதர்கள் இனி வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ முடியும்’ என்பது போன்ற கருத்துகள் விவரிக்கப்பட்டிருந்தன. இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான தகவல்களெல்லாம் ‘டான் போஸ்கோ’ என்ற ஐ.டி-யிலிருந்து ஆர்யாவுக்குப் பல இ-மெயில்களாக வந்திருக்கின்றன. அவற்றில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, வேற்றுக்கிரகத்துக்குச் செல்லலாம் என்ற மூடநம்பிக்கையில், ரத்தம் உறையாமல் இருக்க மாத்திரை எடுத்துக்கொண்டு மூவரும் தங்களின் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்கள்’’ என்கின்றனர். இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “நவீனும் தேவியும் ஆயுர்வேத மருத்துவர்கள். காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். பிளாக் மேஜிக், வேற்றுக்கிரக வாசிகள் குறித்து நவீன் தாமஸ், டெலகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியிருக்கிறார். உயிர் வெளியேறும் சமயத்தில் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும், உடலிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது எப்படி என நவீன் டெலகிராமில் விரிவாகத் தேடிப் படித்திருக்கிறார். ஈஸ்டர் சமயத்தில் இமயமலை அடிவாரத்திலுள்ள அருணாச்சல் ஜீரோ வேலிக்குச் சென்று கிரியைகள் செய்து உயிரைவிட்டால், எளிதில் வேற்றுக்கிரகங்களுக்குச் சென்றுவிடலாம் என்ற மூடநம்பிக்கை நவீனுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதை மனைவி தேவியையும் நம்பவைத்திருக்கிறார். தேவியின் மூலம் ஆர்யாவுக்கு இந்தச் சிந்தனை ஏற்பட்டிருக்கலாம். ஆர்யா தேவியின் தந்தை பாலன் மாதவனிடம் நடத்திய விசாரணையில் தேவியும் நவீனும் மாந்திரீக விஷயங்களை நம்பிச் செயல்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். துர் மந்திரவாதம் குறித்து ஆர்யா இணையதளத்தில் தேடியதை அவரின் தந்தை பார்த்திருக்கிறார். வரும் மே 7-ம் தேதி ஆர்யாவுக்குத் திருமணம் செய்ய அவரின் பெற்றோர் நிச்சயித்திருக்கிறார்கள். இதற்கிடையேதான் மூவரும் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு, மார்ச் மாதமும் நவீனும் தேவியும் ஜீரோ வேலி பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். எனவே, ‘அங்கு வேற்றுக்கிரகங்கள் குறித்துப் பிரசாரம் செய்யும் குழு இருக்கிறதா?’ என்ற கோணத்திலும் விசாரித்துவருகிறோம். இவர்களைத் தவறாக வழிநடத்திய ‘டான் போஸ்கோ’ என்ற இ-மெயில் ஐ.டி குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றனர். படிப்பறிவு வேறு... பகுத்தறிவு வேறு என்பதை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது இந்தச் சம்பவம்! Junior Vikatan - 14 April 2024 - வேற்று கிரகத்துக்குச் செல்ல உயிரை மாய்த்துகொண்ட மூவர்... - கேரளாவை உலுக்கிய பிளாக் மேஜிக் மரணம்! | black magic death in kerala - Vikatan
  24. மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரம் : பின்னணியிலுள்ள 'பொருளாதார முனைப்பு' குறித்து வெளிச்சம் பாய்ச்சவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அலன் கீனன் (நா.தனுஜா) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய 'பொருளாதார ரீதியிலான முனைப்புக்கள்' தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், அதனை அறிக்கையிடுவது மிக ஆபத்தானது என்பதனால் முதலாவது மட்டத்தில் இடம்பெறும் அரசியல் ரீதியிலான அநீதி குறித்தே அனைவரும் அவதானம் செலுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் ஆரம்பமாகிக் கடந்த முதலாம் திகதியுடன் 200 நாட்கள் பூர்த்தியடைந்திருக்கின்றன. மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக அத்துமீறலில் ஈடுபட்டுவருகின்ற போதிலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பண்ணையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரம் தொடர்பான அறிக்கையிடல்களில் இக்காணி சுவீகரிப்பின் பின்னால் இருக்கக்கூடிய பொருளாதார ரீதியிலான முனைப்புக்கள் (நோக்கம்) தொடர்பில் மிக அரிதாகவே ஆராயப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இன அடிப்படையிலான பிளவுகள் அரசியலுடன் தொடர்புடைய அதிகாரத்தையும், நலன்களையும் அடைந்துகொள்வதற்கான ஆயுதமாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் இவ்விவகாரத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய பொருளாதார முனைப்புக்களை அறிக்கையிடுவது மிகவும் ஆபத்தானது என்பதனால் நாம் முதலாவது மட்டத்தில் இடம்பெறும் அநீதியை மாத்திரமே கவனத்திற்கொள்கின்றோம் என விசனம் வெளியிட்டுள்ளார். மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு விவகாரம் : பின்னணியிலுள்ள 'பொருளாதார முனைப்பு' குறித்து வெளிச்சம் பாய்ச்சவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அலன் கீனன் | Virakesari.lk
  25. யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம் (ஆதவன்) யாழ்ப்பாண மாநகரசபையின் ஆழுகைக்கு உட்பட்ட நாவாந்துறை பொதுச்சந்தை போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி துர்நாற்றத்தோடு காணப்படுகின்றது என்று பிரதேச மக்களும் வியாபாரிகளும் சுட்டிக்காட்டியுள்னர். இந்தச் சந்தையில் மரக்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள் போன்ற வற்றுக்கான விற்பனை நிலையங்கள் உள்ளன. அதிகளவான மக்கள் இந்தச் சந்தையில் ஒன்றுகூடுகின்றனர்.ஆயினும் சந்தை போதிய பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. சரியான முறையில் சுத்திகரிப்புச் செய்யப்படாமை மற்றும் கழிவகற்றப்படாமையால் அங்கு துர்நாற்றம் வீசுகின்றது. கழிவுகளில் புழுக்கள் உருவாகி விற்பனைநிலையங்களுக்குள்ளும் புகுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகரசபைக்குப் பல முறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடிகாலமைப்பு, நீர் மற்றும் மலசலகூட வசதிகளையும், உரியமுறையில் கழிவுகளை அகற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பராமரிப்பில்லாது மூக்கைப் பொத்தவைக்கும் நாவாந்துறை சந்தை! பொதுமக்கள், வியாபாரிகள் அசௌகரியம் (newuthayan.com)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.