• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  7,935
 • Joined

 • Last visited

 • Days Won

  2

பிழம்பு last won the day on May 7 2015

பிழம்பு had the most liked content!

Community Reputation

282 ஒளி

1 Follower

About பிழம்பு

 • Rank
  கருடன்
 • Birthday January 1

Contact Methods

 • Website URL
  http://

Profile Information

 • Gender
  Male
 • Location
  ஈர்பற்ற திசை
 • Interests
  வாழ்தல்

Recent Profile Visitors

4,846 profile views
 1. மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர். 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து படையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மனு முன்னாள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து 2019 மே 20ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களும் ஏகமனதாக அறிவித்துள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியிருந்தது. இந்த நிலையில் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் இரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தார். அதனையடுத்தே படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தமக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமது உறவுகளுக்கு அரச வேலை தரவேண்டும் என்று கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். “எமது உறவுகளின் உயிரை மீண்டும் பெற்றுத் தர முடியாது. ஆனால் தற்போது இறந்தவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரச வேலை வாய்ப்பினையும் இழப்பீட்டையும் பெற்று தருமாறு கோரி முறைப்பாடொன்றை பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/73623
 2. "நிர்பயா வல்லுறவு நடந்தபோது நான் சிறுவன்" - பவன் குப்தா வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியான பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குற்றம் செய்த காலத்தில் தனக்கு 18க்கும் குறைவான வயதே ஆனதாக பவன் குமார் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நடந்த வழக்கு விசாரணையின்போது, டெல்லி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, குற்றம் நடந்த சமயத்தில் பவன் குப்தாவின் வயது 19 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான டிசம்பர் 2012ல் தமக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று கூறி, பவன் குப்தா சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, இதே கருத்தை முன்வைத்து பவன் குப்தா தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்திருத்தது. அடுத்தது என்ன? படத்தின் காப்புரிமை Delhi Police நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு கடந்த வாரம் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட முடியாது என்று டெல்லி அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17ஆம் தேதி நிராகரித்தார். கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய சில மணி நேரங்களிலேயே இது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள மூன்று பேரும் அல்லது மூவரில் ஒருவர் பிப்ரவரி 1ம் தேதிக்குள் கருணை மனு தாக்கல் செய்தால் தூக்கிலிடுவதற்கான தேதி மீண்டும் மாறலாம். https://www.bbc.com/tamil/india-51175838
 3. கொழும்பின் சில பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் பராமரித்துச் செல்லப்பட்ட 25 சட்டவிரோத விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக விபச்சார விடுதிகள் பராமரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 35 மசாஜ் நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு விபச்சார விடுதியின் முகாமையாளர்கள், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை, வெல்லவத்தை, கிருலபனை, பம்பலப்பிட்டிய, நாரஹேன்பிட, கிரேன்பாஸ், மருதானை மற்றும் தலங்கம பிரதேசங்களில் பராமரித்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதிகளே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த பொலிஸ் அதிகாரப்பிரிவிற்குட்பட்ட நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளனர். https://newuthayan.com/கொழும்பில்-25-விபச்சார-விட/
 4. 0 கிளிநொச்சி இரணைமடுக் குளத்திற்குள் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இன்று (18) காலை 11 மணியளவில் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இரணைமடு நன்நீர் மீன்பிடி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரணைமடு நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். https://newuthayan.com/இரணைமடு-குளத்திற்குள்-100000-ம/
 5. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இருநாட்டு இராணுவத்தினருக்குமிடையே பலமான ஒத்துழைப்புகள், சமுத்திர பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கிடையிலான சமுத்திர வலயம் தொடர்பான விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர், ஏனைய பிராந்திய நாடுகளையும் கண்காணிப்பாளர்களாக இந்த செயற்பாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். இரகசிய தகவல்களை ஒன்றுதிரட்டும் தொழிநுட்பத்திற்கு இலங்கைக்கு உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது. மேலும் பூகோள ஒருங்கிணைப்பு மையத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/73447
 6. படத்தின் காப்புரிமை kovai police கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியான அந்நபர் அக்கம்பக்கத்து வீடுகளிடமும் விசாரித்தார். அதில் மூன்று வீடுகளில் படுக்கை அறையை வாலிபர் ஒருவர் எட்டிப்பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. வாலிபரின் இரு சக்கர வாகன பதிவு எண்ணை வைத்து காவல்துறை இவரை தேடி வருகிறது. அந்த வாலிபர் படுக்கை அறைகளை எட்டிப்பார்க்கும் சைக்கோ மனநிலை கொண்டவராக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது. ''எதற்காக அந்த நபர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறார், பொருட்களை திருடுவதற்கா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடன் வந்தாரா என்பது மர்மமாகவே உள்ளது. மேலும், அவர் பார்ப்பதற்கு வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்தவர் போல் தெரிகிறது. சமீப காலங்களாக இதுபோன்ற மர்ம நபர்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, காவல்துறை அந்த நபரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம்,'' என அப்பகுதியில் வசிக்கும் பழனி தெரிவிக்கிறார்.https://www.bbc.com/tamil/india-51159418
 7. திருச்சி நகரத்தில் சாலையோரம் வசித்துவந்த பெண் ஒருவரை லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பிச்சையெடுத்து வந்த பெண் ஒருவர் உணவு மற்றும் பணஉதவியை எதிர்பார்த்து பலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி லாரி ஓட்டுநர் சதீஸ்குமார் கடந்த புதன் கிழமையன்று (ஜனவரி 15) அவரை மறைவான இடத்திற்குக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியபோது, அப்பெண் அலறியுள்ளார். அவருக்கு காயங்கள் ஏற்பட்டதால், சதீஸ்குமார் அங்கிருந்து தப்பித்துள்ளதாக வழக்கு பதிவுசெய்த விசாரணை அதிகாரி ஜெயா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ''சதீஸ்குமார் இதற்கு முன்னர் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்துவருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுத்ததால், அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பதில் அளிக்கும் நிலையில் அவர் இல்லை என்பதால், தற்போதுவரை கிடைத்த தகவலை வைத்து, சதீஷ்குமாரை கைது செய்துள்ளோம். அப்பெண்ணின் உடல்நலம் தேறிய பின்னர், விசாரணை செய்வோம்,'' என ஆய்வாளர் ஜெயா தெரிவித்தார். சதீஸ்குமார் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்தியாக வழக்குப் பதிவாகியுள்ளது என ஜெயா தெரிவித்தார். ''அப்பெண்ணின் பெற்றோர் காலமாகிவிட்டார்கள். அவருடைய உறவினர் ஒருவர் சென்னையில் இருப்பதாக அவர் கூறுகிறார். உறவினர்களிடம் பேசி அவருக்கு பாதுகாப்பு கிடைக்குமா என விசாரிப்போம் அல்லது வழக்கு முடிந்த பின்னர், பெண்களுக்கான அரசு நடத்தும் பாதுகாப்பு இல்லத்திற்கு அவரை அனுப்பிவைப்போம்,'' என ஜெயா தெரிவித்தார்.https://www.bbc.com/tamil/india-51160208
 8. படத்தின் காப்புரிமை ARUN SANKAR / Getty தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து, வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழக உறுப்பினர்கள் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த ஜனவரி14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்ற நிகழ்வு நடத்தப்பட்டது என பொய்யான தகவலை பேசியுள்ளார் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறுகிறார்கள். ''தந்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினிகாந்த் வதந்தியைப் பரப்புகிறார். அவர் குறிப்பிட்டது போன்ற ஒரு நிகழ்வு நடக்கவில்லை. அவர் பரப்பும் வதந்தி பொது அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் செய்துள்ளோம்,'' என திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தெரிவித்தார். அதே போல கோவையிலும் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் நேற்று திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர தலைவர் நேருதாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட புகாரில், ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக திருப்பூரிலும் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினி பேசியது என்ன? கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். "1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். தகவல் இல்லை இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று குறிப்பிட்டார். இந்நிலையில், "சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போம்," என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். "உண்மை சம்பவத்தை ரஜினி திரித்து கூறியிருப்பதாகவும், பெரியாரின் வாகனம் நோக்கி ஜன சங்கத்தினர்தான் செருப்பு வீசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத்தினர் அதே செருப்பை எடுத்து ஜனசங்கத்தினரின் வாகனம் ஒன்றில் இருந்த ராமர் படத்தை அடித்தனர்,"என அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவரும், தி.கவின் பொதுச்செயலாளருமான கலி.பூங்குன்றன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்,"பெரியார் குறித்த தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்," என கருத்து தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-51159843
 9. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் (கோப்புப்படம்) சென்னையில் தற்போது நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் பல பதிப்பாளர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லையென குற்றம்சாட்டப்படுகிறது. கருத்து சுதந்திரம் இல்லையென கூறப்படுகிறது. உண்மையில் புத்தகக் கண்காட்சி எப்படி, எதற்காக நடத்தப்படுகிறது? சென்னை புத்தகக் கண்காட்சி தொடர்பாக இந்த ஆண்டு பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுப்பப்படும் நிலையில், அவை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் புத்தகக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் அமைப்பின் (பபாசி) செயலர் ஒளிவண்ணன். அவர் பேசியதிலிருந்து: கே. சென்னை புத்தகக் கண்காட்சி எப்படி துவங்கியது? ப. 1970களில் சிறிய அளவில் நவம்பர் மாதத்தில் குழந்தைகள் தினத்தை ஒட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் சிறிய அளவில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டுவந்தது. 1976ல் காயிதே மில்லத் கல்லூரிக்கு அருகில் உள்ள மாதர் ஷா பள்ளிக்கூடத்தில் சில பதிப்பாளர்கள் எஸ். சந்த் அண்ட் கம்பனியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ஆக்ஸ்பர்ட் யுனிவர்சிடி பிரசைச் சேர்ந்த பார்த்தசாரதி, ஹிக்கின்பாதம்ஸைச் சேர்ந்த பலராமன் உள்ளிட்டோர் சேர்ந்து நாம் ஒரு முறையான புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டுமென முடிவுசெய்கிறார்கள். முதலில் பத்து, பன்னிரெண்டு பேர்தான் அந்தக் கண்காட்சியில் பங்கேற்றார்கள். பிறகு, படிப்படியாக பெரிதாகி, அருகில் உள்ள காயிதே - மில்லத் கல்லூரியில் நடக்க ஆரம்பித்தது. ஆனால், ஒரு கட்டத்தில் கடைகளின் எண்ணிக்கை 200 தாண்டிச் செல்லவும், கண்காட்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்திவருகிறோம். இப்போது சுமார் 750 கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 100 பேர்வரை கடைகளைக் கேட்டுவருகிறார்கள். ஆனால், சென்னையில் அதற்கேற்றபடி இடமில்லை என்பதுதான் உண்மை. கே. பொதுவாக புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள்? எவ்வளவு பேருக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன, இதன் பின்னணியில் இருக்கும் வர்த்தகம் என்ன? Image caption ஒளிவண்ணன் ப. நிறையப் பேருக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதாவது, புத்தகக் கடை வைக்க விண்ணப்பிப்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை; ஆனால், ஊறுகாய் கடை போடுபவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை எங்கள் பபாசி குழுவிலேயே சிலர் கேட்கிறார்கள். பபாசியில் சுமார் 400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் மிகப் பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். அதிக பட்சம் 5 சதவீதம் இருப்பார்கள். நடுத்தர மட்டத்தில் ஒரு 15 சதவீத நிறுவனங்கள் இருக்கும். மீதமிருப்பவர்கள் எல்லோருமே மிகச் சிறிய பதிப்பாளர்கள்தான். பெரும்பாலும் தங்களுக்கென உரிமையுள்ள சிறிய அளவிலான புத்தகங்களை வைத்துக்கொண்டு வியாபாரத்தை நடத்துபவர்கள். இவர்கள் சம்பாதிக்கக்கூடிய ஒரே பருவம் இதுதான். அடுத்த 3-4 மாதங்கள் இதை வைத்துத்தான் காலத்தை ஓட்ட வேண்டும். பபாசி என்ற அமைப்பு 80களில் பதிவுசெய்யப்பட்டது. துவக்கத்தில் பெரிய அளவில் உறுப்பினர்கள் இல்லை. ஆங்கிலப் பதிப்பாளர்கள்தான் 90 சதவீதம் பேர் இருந்தார்கள். தமிழில் ஆட்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். கண்காட்சியில் தமிழ்ப் பதிப்பாளர்கள் மிகக் குறைந்த அளவில்தான் பங்கேற்பார்கள். அதனால்தான் தமிழ் பதிப்பகங்களுக்கு மிகக் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இப்போதும் அது தொடர்வதுதான். ஆங்கிலப் பதிப்பகங்களுக்கு இப்போதும் வாடகைக் கட்டணம் அதிகம். தமிழ் பதிப்பகங்களுக்கு கட்டணம் குறைவு. உறுப்பினர்களாக இருப்பவர்களில் பலர், வாடகையாகக் கட்டவேண்டிய பத்து - பதினைந்தாயிரத்தையே கடனாக வாங்கிவந்துதான் பங்கேற்கிறார்கள். இங்கே 750 கடைகளை அமைக்க முடியும். இந்த மைதானத்திற்கான வாடகை, அரங்க நிர்மானம், மின்சாரம், எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டிலிருந்து இரண்டேகால் கோடி அளவுக்கு செலவாகிறது. ஒரு கடைக்கு சராசரியாக 30-35 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஆனால், உறுப்பினர்களிடம் 13-15 ஆயிரம் வரைதான் வாடகையாக வாங்குகிறோம். மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை எங்கிருந்து எடுப்பது? அதனால்தான் ஸ்பான்ஸர்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆர்ச் அமைத்துக்கொள்ள, விளம்பரங்களை வைத்துக்கொள்ள பணம் வாங்க வேண்டியிருக்கிறது. அப்படி ஸ்பான்சர் கேட்பவர்களும் கடை கேட்பார்கள். அவர்களில் சிலர் புத்தகங்களோடு தொடர்பில்லாதவர்களாக இருப்பார்கள். ஒருபக்கம் 750க்கு மேல் கடை கொடுக்க முடியாது. இன்னொரு பக்கம் ஸ்பான்சர்களுக்கு கடை கொடுத்தாக வேண்டும். இதனால், பதிப்பாளர்கள் கோபமடைவார்கள். "நான் புத்தகம் வெளியிட்டிருக்கிறேன். எனக்கு கடை இல்லை. ஊறுகாய், அப்பளம் விற்பவர்களுக்கு கடை கொடுக்கிறார்கள்" என்ற புகார் வருவது இதனால்தான். இந்த ஸ்பான்சர்கள் இருந்தால்தான் கண்காட்சியே நடத்த முடியும். கே. எல்லோரிடமும் 35 ஆயிரம் ரூபாய் வாங்க முடியாதா? ப. வாங்கலாம். ஆனால், அப்படிச் செய்தால், உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மிகச் சிறிய பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதோடு, அழிந்தே போகக்கூடும். கே. பபாசியில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதில்லை என்ற புகார் இருக்கிறது.. ப. இந்தக் கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள். அதாவது பபாசியைப் பொறுத்தவரை, உறுப்பினராக உள்ளவர்கள் எல்லோருக்கும் கடை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களே, கூடுதல் கடைகள் கேட்கிறார்கள். புதிதாக வருபவர்களும் கடைகளை கூடுதலாகக் கேட்பார்கள். அப்படியான சூழலில், புதிய உறுப்பினர்களை சேர்க்க முடியாத நிலை இருக்கிறது. பபாசியின் நோக்கமே புத்தகக் கண்காட்சியை ஒழுங்காக நடத்துவது, வாசகர்களை வரவைப்பது, பிரச்சனைகள் வந்தால் அதை சரிசெய்து முழுமையாக கண்காட்சியை நடத்தி முடிப்பது என்பதுதான். அதுதான் பபாசியின் ஒட்டுமொத்த அடிப்படை. உலகிலேயே இவ்வளவு பெரிய அளவில் பதிப்பாளர்களும் வாசகர்களும் சந்திக்கும் இடம் இதுதான். மற்ற இடங்களில் எல்லாம் Business to Business என்ற அடிப்படையில்தான் கண்காட்சி நடக்கும். இங்கு மட்டும்தான், ஒரு சந்தையைப் போல கண்காட்சி நடக்கிறது. இங்கு நடக்கும் விற்பனை பதிப்பாளர்களுக்கு பல மாதங்களுக்கு உதவுகிறது. கே. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் business to business தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஏற்பாடுகளை ஏன் செய்யக்கூடாது? ப. அம்மாதிரி தேவை இருப்பவர்கள் 10-15 சதவீதம் பேர்தான். இங்கே அதற்கு இடம் இருக்காது. வெளிநாட்டிலிருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வந்தால், அரங்கை ஏசி செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால், கண்காட்சியை சென்னை டிரேட் சென்டர் போன்ற இடத்தில் நடத்த வேண்டியிருக்கும். ஆனால், வாடகை அதிகமாகிவிடும். 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து எவ்வளவு பேரால் வர முடியும்? வாய்ப்பிருந்தால், இதற்கு இணையாக வர்த்தக சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். ஆனால், பெரிய அளவில் அதற்கான தேவை இருக்க வேண்டும். இப்போது சில ஆண்டுகளாக சார்ஜாவில் பங்கேற்கிறோம். ஃப்ராங்க்பர்ட்டில் பங்கேற்பது குறித்து ஆராய்கிறோம். நாம் வெளிநாட்டு கண்காட்சிகளுக்கு செல்லும்போதுதான் அங்கிருந்தும் வர ஆரம்பிப்பார்கள். கே. புத்தகக் கண்காட்சியைப் பொறுத்தவரை பெரும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன; விரும்பிய புத்தகத்தை விற்க முடியவில்லை; கூட்டங்களில் விரும்பியதைப் பேச முடியவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் இருக்கின்றன. ப. உண்மைதான். ஆனால், இந்த புத்தகக் கண்காட்சியைப் பிரசார களமாக்க முடியாது. இங்கே எல்லாத் தரப்பினரும் புத்தகங்களை விற்கிறார்கள். ஒருவரைப் பிரசாரம் செய்ய அனுமதித்தாலோ, பேச அனுமதித்தாலோ எதிர்த் தரப்பினரும் கேட்பார்கள். பிரச்சனைகள் வரக்கூடும். ஆகவே, எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் புத்தக விற்பனையை மட்டும் பார்க்கலாமென நினைக்கிறோம். எங்களுடைய பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர், "எதற்காக இம்மாதிரியான பிரச்சனையை உருவாக்கக்கூடிய விஷயங்களைக் கையில் எடுக்கிறீர்கள்? இது புத்தகங்களை விற்கக்கூடிய தளமாக மட்டும் இருக்கட்டுமே" என்கிறார்கள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கே. புத்தகக் கண்காட்சியை ஒட்டி நடத்தப்படும் கூட்டங்கள் குறித்து விமர்சனங்கள் இருக்கின்றன. கூட்டங்களை இன்னும் சிறப்பானவர்களை வைத்து நடத்தலாம் என்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருக்கின்றன. மற்றொரு பக்கம், கூட்டமே நடத்தாமல் அங்கும் கடைகளை அமைக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. ப. இதற்கு மேல் கடைகளை அமைத்தால் மக்கள் நடப்பதற்கு கஷ்டப்படுவார்கள். அதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சீரியஸ் எழுத்தாளர்களை வைத்து கூட்டம் நடத்துவதைப் பற்றிக் கேட்டீர்கள். இந்த ஆண்டு எழுத்தாளர் முற்றம் என்ற ஒன்றை நடத்துகிறோம். வெளி அரங்கைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் கூட்டத்தை ஈர்ப்பதற்காக நடத்தினோம். சிறந்த பேச்சாளர்கள் பேசினால், அதற்காக கூட்டம் வரும் என நினைத்தோம். ஆனால், இப்போது எல்லோருடைய பேச்சும் யூ டியூபிலேயே கிடைப்பதால் அதற்காக யாரும் வருவதில்லை என்று சொல்கிறார்கள். ஏன் இதைச் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் இருக்கிறது. பேலன்ஸ் செய்துதான் நடத்த வேண்டியிருக்கிறது. கே. வழக்கமாக பங்கேற்கக்கூடிய சிலருக்கு கடைகள் மறுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களை கவனித்து கடைகளை ஒதுக்கீடு செய்திருக்கலாமே? ப. இந்த முறை 60 கடைகளைக் குறைத்துவிட்டோம். கடைசி நேரத்தில் சிலரை சேர்க்க முடிந்தது. சிலருக்கு வழங்க முடியவில்லை. எதிர்காலத்தில் இந்த சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள முடியுமென நினைக்கிறோம்.https://www.bbc.com/tamil/arts-and-culture-51139605
 10. Share0 மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர். தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது , எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம். சுகதேகியாக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் தமிழகத்தில் வழக்காடி வென்று ஒரு கிழமைக்குள் இயற்கை எய்தினார். அவரின் உடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு வந்து, முதலில் கூட்டணி அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைத்த பின்னரே காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்கள். ஆனையிறவு மீள பிடிப்பது பகல் கனவு. 35ஆயிரம் போர் வீரர்களை காப்பாற்றுங்கள் என சர்வதேசத்திடம் மண்டியிடும் காலம் மீண்டும் வரும். அன்றைக்கு பிரபாகரனை சர்வதேசம் சுற்றிவளைக்கும் காலம் வரும் அன்றே யுத்தம் முடிவுக்கு வரும் என அப்போதைய அமைச்சர் ரத்வத்தைக்கு நாடாளுமன்றில் கை நீட்டி கூறியவன் நான். அப்போது என்னருகில் சம்பந்தன் இருந்து என்னை பிரமிப்பாக பார்த்தார். அதன் பின்னர் நடந்தது என்பது வரலாறு. மக்கள் சேவை என வந்த பின்னர் அப்புக்காத்தர் வேலை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைக்கு கிளிநொச்சியில் காணி உறுதி எழுதியே கோடீஸ்வரன் ஆகியிருப்பேன். மகேஸ்வரன், ரவிராஜ், லக்‌ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஸ்டியை முன்வைக்க, மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஸ்டி கோரிக்கையை 49 வீத சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர். சம்பந்தன், மாவை, சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள். காலையில் கூட்டணி அலுவலகத்தில் இருந்து கூட்டணியில் போட்டியிடுவதாக கூறிய சம்பந்தன் பின்னேரம் புலிகளை சந்தித்து தமிழரசு கட்சியில் போட்டியிட்ட பொய்யன். புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது ? கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள். மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். – என்றார். https://newuthayan.com/இதெல்லாம்-சரித்திரம்-தம்/
 11. உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை இரான் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அந்த நாட்டின் அதி உயர் தலைவர், இரானின் பாதுகாப்பு படைகளை ஆதரித்து பேசியுள்ளார். உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு, இரானின் புரட்சிகர பாதுகாப்பு படை பொறுப்பேற்றுள்ளதாக கூறிய அவர் அந்தப் படை இரானின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதாக கூறியுள்ளார். 2012க்கு பிறகு, எட்டு வருடங்களில் முதன்முறையாக இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார். வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நட்த்திய அந்நாட்டின் தலைமை மதகுருவும் அதி உயர் தலைவருமான காமேனி, தொழுகைக்கு பிறகான உரையில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா விதித்த தடைகளால் இரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இரான் தலைவர்கள் மீதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது உரையில் அலி காமேனி முக்கியமாக என்ன பேசினார்? •டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஒரு ''தீய'' அரசு என விமர்சித்தார். •இரான் மக்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தும்போதெல்லாம் பொய் கூறுவதாக தெரிவித்த அவர், இரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும் என கூறினார். •இராக்கில் இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல், ''அமெரிக்காவின் முகத்தில் விடப்பட்ட அறை'' என அவர் தெரிவித்தார். •அமெரிக்கா பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ள இரானின் உயரடுக்கு பாதுகாப்பு படை பற்றி பேசிய அவர், ''அது மனித மதிப்புகளை கொண்டிருக்கும் ஒரு மனிதநேய அமைப்பு" என குறிப்பிட்டார். •காசெம் சுலேமானீயின் இறுதிச் சடங்கு மற்றும் இரானின் பதிலடி ஆகியவை வரலாற்றில் ஏற்பட்ட திருப்புமுனை என அவர் கூறினார். படத்தின் காப்புரிமை Getty Images Image caption இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார். இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. புதன்கிழமையன்று, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என ஆயதுல்லா அலி காமேனி தெரிவித்திருந்தார். விமானம் சுடப்பட்டது குறித்து இரான் ராணுவத்திடம் விளக்கம் கேட்டிருந்தார் ஆயதுல்லா அலி காமேனி. இதன்மூலம் மிக அரிதாக இரான் அரசுடன் அவருக்கு உரசல் ஏற்படும் போக்கு காணப்படுவதாக கூறப்பட்டது. விமான விபத்துக்குள்ளான மூன்று நாட்கள்வரை இரான் அதிகாரிகள் தங்களுக்கு அதில் தொடர்பில்லை என்று கூறிவந்தனர். ஆனால், சர்வதேச அழுத்தத்தால் இரானின் கடும்போக்கு புரட்சிப்படை, அது "போர் ஏவுகணை" என்று தவறுதலாக எண்ணி அதை சுட்டு வீழ்த்திவிட்டோம் என ஒப்புக் கொண்டது. உக்ரைன் நாட்டை சேர்ந்த சர்வதேச விமான சேவையின் போயிங் 737 - 800 விமானம் ஜனவரி 8ஆம் தேதி இரானில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது. இராக்கில் உள்ள அமெரிக்க படைகளை இலக்கு வைத்து இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியானது. அந்த தாக்குதல் அமெரிக்க இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி காசெம் சுலமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டது. என்ன நடக்கிறது இரானில்? படத்தின் காப்புரிமை Getty Images இரானின் செய்தி முகமையான மெர்ரில், டெஹ்ரானில் உள்ள மொசல்லா மசூதியில் 80 வயதான ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய சூழலுக்கும் இந்த தொழுகைக்கும் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடவில்லை. இரான் அதிகாரிகள், இரான் தனது ஒற்றுமையையும் சிறப்பையும் மீண்டும் வெளிப்படுத்தும் நேரமிது என தெரிவித்துள்ளதாக செய்தி முகமை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் 33ஆவது ஆண்டுவிழாவின் போது, டெஹ்ரானில் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/global-51145156
 12. நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கிலிடும் தேதி புதிதாக அறிவிப்பு புதுடெல்லி டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றும் புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. டெல்லி நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவில் வரும் 22-ம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் முகேஷ் சிங் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிபதி சதீஸ் குமார் அரோரா உத்தரவிட்டார் கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். இந்தச் சம்பவத்தில் ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது. டெல்லி நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா இம்மாதம் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தண்டனையை வரும் 22-ம் தேதி நிறைவேற்றாமல் ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா முன் இன்று விசாரிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இர்பான் அகமது வாதிடுகையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். ஆதலால், தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை அறிவிக்கக் கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ் அரோரா, பிறப்பித்த உத்தரவில், " வரும் 22-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அந்தத் தேதி மாற்றப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்" என அறிவித்தார். https://www.hindutamil.in/news/india/535291-nirbhaya-case-delhi-court-issues-fresh-death-warrants-against-4-convicts-for-feb-1-6-am-2.html
 13. (செய்திப்பிரிவு) யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள் அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது தீவிரவாத அமைப்பாக விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது. இவ்வாறான பலம் கொண்ட பயங்கரவாத அமைப்பினை குறுகிய காலத்திற்குள் நிறைவிற்கு கொண்டு வந்து முப்படையின் பெருமையினையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். திருகோணமலை சீன துறைமுகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விமானப்படை தெரிவிற்கான பயிற்சியை நிறைவு செய்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு சின்னம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முடிவிற்கு கொண்டு வர முடியாது என்று கருதப்பட்ட பயங்கரவாத சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த பெருமை முப்படையினரையே சாரும். விமான படையின் பங்களிப்பு இதில் பிரதானமானது. இராணுவத்தினர் புலிகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தாக்க முன்னர் விமானப்படையினரே வான் மூல தாக்குதலை மேற்கொண்டு இராணுவத்தினருக்கு பாரிய ஒத்துழைப்பினை வழங்கினார்கள். இராணுவத்தினரது செயற்பாடுகளுக்கு வமானப்பட்டையின் பங்களிப்பு இன்றியமையாதது. வன்னி பிரதேசத்தில் விடுதலை புலிகள் பதுங்கு குழிகளின் ஊடாக தாக்குதலை மேற்கொண் ட போது அது இராணுவத்தினருக்கு பாரிய தடையாக காணப்பட்டன. அந்த வேளையில் விமான படையினரே மறைந்திருந்து தாக்கும் புலிகள் தொடர்பில் இராணுவத்தினருக்கு தொடர்ந்து தகவல்களை வழங்கினார்கள். வான்வளியில் ஊடாக செயற்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் விமானப்படையினர் சிறப்பாக முன்னெடுத்தமையினால் குறுகிய காலத்தில் பயங்கரவாத சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முடிந்தது. உலகில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய விமான படைகளில் இலங்கை விமான படைக்கு அதிகளவான அனுபவங்கள் உண்டு என்பதை அறிவேன். உலகில் தீவிரவாத அமைப்புக்கள் ஏதும் விமானப்படை வசதியினை கொண்டிருக்கவில்லை. ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் நிலப்பரப்பினை கைப்பற்றியிருந்த ஐ.எஸ்.ஐ. எஸ். தீவிரவாத அமைப்புக்கு கூட விமான படை வசதி காணப்படவில்லை. ஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்த விமான படை வசதி காணப்பட்டன. விடுதலை புலிகள் வான்படை தாக்குதலின் ஊடான உலக தீவிரவாத அமைப்புக்களுக்கு புதிய மார்க்கத்தை காண்பித்தார்கள். அக்காலக்கட்டத்தில் தாக்குதல் இயந்திரங்களை எம்மவர்கள் குறுப்பெட்டி என்று புனைப்பெயர்கொண்டு அழைப்பாரகள். ஆனால் இதனை பயன்படுத்தியே விடுதலை புலிகள் கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம், கெரவலபிடிய எண்ணெய் தாங்கி கள், கடுநாயக்க விமான நிலையம் ஆகியவற்றில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்கள் அவர்கள் எதிர்பார்த்ததை போன்நு று பாரிள விளைவுகளை ஏற்படுத்திவிலலை. இத்தாக்குதல் முறையாக இடம் பெற்றிருந்தால் பாரிய விளைவுகளை எதிர்க் கொள்ள நேரிட்டிருக்கும். தற்கொலை குண்டுதாரிகள், தற்கொலை தாக்குதல்கள் ஆகிய தாக்குதல் முறைகளை விடுதலை புலிகளே உலகிற்கு அறிமுகம் செய்தார்கள். புதிய பல விடயங்களை விடுதலை புலிகள் அறிமுகம் செய்தமையினாலே 2008 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பினை அமெரிக்காவின் எப். பி. ஐ. பயங்கரவாத அமைப்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. இவ்வாறான பலம் கொண்ட அமைப்பினை இல்லாதொழித்தமை இலங்கையின் முப்படையின் கௌரவத்தை உலகிற்கே இன்று பறைசாற்றியுள்ளது. 30 வருட கால யுத்த பின்னணியை கொண்ட விடுதலை புலிகளுடன் 1980ம் ஆண்டே வான்வெளி தாக்குதலை விமான படை மேற்கொண்டது.இக்காலக்கட்டத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் வரையில் இராணுவத்திற்கு விமானப் படை பாரிய ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது. பலம் கொண்டு விடுதலை புலிகள் தாக்கும் போது முப்படையினரும் ஒன்றினைந்து நாட்டுக்காக செயற்பட்டமையினால் பயங்கரவாத அமைப்பினை முழுமையாக இல்லாதொழிக்க முடிந்துள்ளது. தாய் நாட்டிற்காக உயிர் நீத்த முப்படையினரும் அரசியலுக்கு அப்பாற் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் முப்படையினர் ஆற்றிய சேவையினை இன்றும் தொடர்கின்றார்கள். இயற்கை அனர்த்தத்தின் போது தங்களின் உயிரை தியாகம் செய்தும் பொது மக்களை முப்படையினர் பாதுகாத்துள்ளார்கள். வெள்ள அனர்த்ததின் போது வமான படையினர் ஆற்றும் சேவை இன்றியமையாதது.நாட்டின் எல்லை பாதுகாப்பிற்கும் ஒரு பகுதி ஒத்திழைப்பினை வான்படை வழங்குகின்றது. முப்படையில் சேவையாற்றும் வீரர்கள் நாட்டுக்காகவும், படைகளின் இலக்குக்காகவும், செயற்பட வேண்டும். விமான படையின் சேவை அளப்பரியது என்றார். https://www.virakesari.lk/article/73394
 14. (நா.தனுஜா) 2025 ஆம் ஆண்டு தேர்தலில் நான் களமிறங்கப்போவதில்லை. எனவே 2023 அல்லது 2024 ஆம் ஆண்டாகும் போது கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஆராயமுடியும். தற்போது இருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்குகளும் இல்லாமல் போனால் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவேற்படும். எனவே தற்போது இருப்பதைத் தக்கவைப்பதற்கும், வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்துவதற்கும் நான் தலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் விசேட பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 பேர் சஜித் பிரேமதாஸ தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுவதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார் https://www.virakesari.lk/article/73377
 15. புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.சி.ஜே. அரசகேசரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு, அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை குறிப்பிட்டு, அவற்றை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005/2006ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ் ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவர ரீதியில் ஆராயப்பட்டு சிறப்பான கன்றுகள் தெரிந்தெடுக்கப்பட்டன. கறுத்தக்கொழும்பான் மா இனத்தில், பழத்தில் உள்ள நார்பற்று, தோலின் நிறம், பழத்தின் இனிப்புச்சுவை, வாசம் போன்றன கருத்திலெடுக்கப்பட்டு மூன்று தாய்த்தாவரங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அவ்வாறே விழாட் இனத்தில் இரண்டு இனங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. அத்தோடு இவ் ஆய்வின் போது எதேச்சையாக புதியதொரு குணாம்சங்களுடன் ஒரேவகையான இரண்டு தாய்தாவரங்கள் கண்டறியப்பட்டன. அவற்றை ஆராய்ந்தபோது இப்பழங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தன. இப்பழமும் மரமும் மேலும் ஆய்விற்குட்படுத்தியதன் விளைவாக ஏனைய பழ மரங்களின் குணாம்சங்களைவிட பலவகையில் வேறுபட்டதாக காணப்பட்டது. பழங்களின் வடிவம், பருமன், சதைப்பற்று, நார்பற்று, சுவை மற்றும் தனித்துவமான நறுமணம் என்பன துல்லியமான வேறுபாடுகளைகாட்டி நின்றன. இவ் ஆராய்ச்சியின் விளைவாக இத்தாய்த்தாவரத்திலிருந்து ஒட்டுக்கிளைகள் கொண்டுவரப்பட்டு கன்றுகள் உருவாக்கப்பட்டது. விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும், மாவட்ட விவசாயப்பண்ணையிலும் கன்றுகள் நாட்டப்பட்டன. அக்கன்றுகள் வளர்ந்து தற்போது காய்த்துக் குலுங்குகின்றன. இம்மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி வளர்ந்திருப்பதனால் படரும் செடியைப்போல் காட்சியளிக்கின்றது. இதனால் உருவாக்கப்பட்ட இவ் இனக்கன்றுகளை நாட்டிய விவசாயிகள் இவ் இனத்தை ‘கொடிமா’ என பெயரிட்டுள்ளனர். மேலும் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாக இவ்வினம் வருடம் பூராக காய்க்கும் தன்மை கொண்டதாகவும் போதுமானளவு குறிப்பிடக்கூடியளவு பழச் சாற்றைக்கொண்டதுடன் விசேட நறுமணமுள்ள சதைப்பற்றுடன் சாதாரண பருமனை கொண்டபழமாக அறியப்பட்டது. ஒவ்வொரு பழமும் சராசரியாக 280தொடக்கம் 450கிராம் நிறை வரை இருந்துள்ளது. பழுக்கும் போது பழம்பூராகவும் மஞ்சள் நிறமாவதுடன் பார்வைக்கு மிகவும் அழகானதாகவும் தென்படும். நன்றாகபழுத்த மாம்பழங்களை 3-5நாட்கள் வரை பழுதடையாமலும் பாதுகாக்கலாம். மேலும் இம்மாங்கன்றுகள் வீட்டுத்தோட்ட வளர்ப்பிலும் வறள்நில பிரதேசங்களிலும் நல்ல பயனைத்தரும் என நிருபணமாகியுள்ளது. விவசாயத்திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற இன வெளியீட்டுகுழுவின் வருடாந்த கூட்டத்தில் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு சரிபார்த்த பின்னர் இப்புதிய மா இனம் வெளியிடப்பட்டுள்ளது. இவ் ஆராய்ச்சியில் வெற்றிகண்ட கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, மேலதிகப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) அவர்கள் இப்புதிய மா இனத்தை திருநெல்வேலி மஞ்சள் என அழைக்கலாம் என பரிந்துரைத்துள்ளார். https://newuthayan.com/புதிய-மா-இனம்-கண்டுபிடிப/