• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஹாசினி

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  15
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About ஹாசினி

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. இப்பிடியான சாறிதானுங்கோ அவர் உடுத்திருந்தவர். வேறுயாராவது முடிந்தால், அறிவிப்பாளரின் முகத்தை மறைத்துவிட்டு, அந்த போட்டோவை இதிலை இணைத்துவிடுங்கோ. பிறகு பேசலாம்.
 2. அப்பிடியா???????????????? நீங்கள் இந்த அமைப்பிற்குள்ள எத்தினை வருசமா வேலை செய்யீறீங்கள்?
 3. தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று நான் இங்கு கூறவில்லையே. தமிழினத்திற்கு விடிவு என்றொன்று இருக்குமானால், அது தலைவரால் மட்டுமே கிடைக்கும் என்பதில் எனக்கு எந்த ஆட்சேனையும் இல்லை. முதல்நாள் பட்டு சாறி கட்டினவை அடுத்தநாள் மஞ்சள், சிவப்பு சாறியோடு நின்றதை நானே கண்டேனே. இதுவே, அவர்கள் மகளிர் அமைப்பு என்பதற்கு அடையாளம். அதோடு, அனைத்துலகப் பொறுப்பாளரை அறிந்தவர்களுக்குத் தெரியும், மகளிரைப் பற்றி அவருடைய எண்ணம். இப்படியானவர்களால்தான், அவருக்கு மகளிர் என்றாலே அலர்ஜியாக இருந்தது என்பதை அங்கு சென்று வந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர்களோடு எங்கள் குடும்பத்திற்கு 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பு இருக்கிறது. அங்கு இருப்பவர்களுள் எத்தனை பேர் 5 வருடங்களுக்க மேல் அந்த அமைப்பில் இருக்கிறார்கள். ஓருசிலபேர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். இதிலிருந்தே அந்த அமைப்பைப் பற்றி தெரியவேண்டும். அதோடு, மக்கள் ஏழுச்சி நிகழ்வுக்காகத்தான் அங்கு வருகிறார்களே தவிரக் கொண்டாடுவதற்காக அல்ல. மக்களே சாதாரண உடையில் வரும்போது, அங்கு வேலை செய்பவர்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம்? இந்த வருடம் நடந்த அந்தக் கொடூரம் அவர்களைப் பாதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்? அவர்களுடைய பிள்ளைகளோ, சகோதரங்களோ, அதில் இறந்திருந்தால், இவர்களால் இப்படி உடையணிந்து வந்திருக்கமுடியுமா? அதோடு, இவர்களில் எத்தனைபேர் மாவீரர் குடும்பங்களைச் சோர்ந்தவர்கள்? அப்படி மாவீரர்களாக இருந்திருந்தால் இப்படி உடையணிந்து வந்திருக்க முடியுமா? பெரிதாகக் கொண்டாடுபவர்கள் கொண்டாடுங்கள். அதற்கா பொலிக்கண்ணீர் வடித்துக் கொணடாடதீர்கள். இவர்களின் உணர்வும், விசுவாசமும் இப்படிச் செயலாற்றுவதில் மட்டும்தான். அறிவிப்பு செய்தவர், தலைவரின் பின்னால் நநாங்கள் நிற்போம் என்று கூறினார். அவர் தன்னுடைய மகன்களில் ஒருவரையேனும் போராட்டத்திற்காகக் கொடுக்கத் தயாரா? உங்களால் முடிந்ததை மட்டுமே முழங்கவேண்டும். சும்மா பெயருக்கா முழங்கக் கூடாது. கருத்து வைப்பவர்களால், உங்களால் முடிந்தால் மட்டுமே கருத்து வையுங்கள். விவாததிற்காக வைப்பவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.
 4. நேற்றிரவு, தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழா ஒரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்ததேயன்றி ஒரு எழுச்சிநிகழ்வாக அமையவில்லை. முதலாவதாக, மகளிர் அமைப்பினரின் உடைகளைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்வது போன்றே உடைகளை (சாறிகளை) அணிந்திருந்தார்கள். அவர்களின் உடைகள், மேக்கப்புகள் வெளிச்சத்தில் கண்கூசுமளவிற்கு இருந்தது. அவர்களின் அந்தத் தோற்றத்தைப் பார்த்தபோது, மே மாதம் நடந்த சோகநிகழ்வை நாம் கஸ்டப்பட்டுத்தான் எம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டியிருந்தது. அடுத்ததாக, அவர்களின் நிகழ்ச்சிகளும் போன வருடங்கள் நடத்தப்பட்டவை போலவே தலைவரின் பிறந்ததினத்தை சந்தோஸமாகக் கொண்டாடுவது போலவே இருந்தது. அங்கு நடந்தவற்றைப் பார்த்தபோது, என்னால் அங்கிருக்க முடியாமல் இடையிலேயே எழுந்து வந்துவிட்டேன். அது 9:30 இருக்கும். ஆனால், அதற்குப் பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதானிருந்தது. இவ்வளவு செலவு செய்து எமக்கு இப்படியொரு நிகழ்ச்சி தேவைதானா? இந்தப் பணத்தில் அரைவாசியையேனும், இவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைப்பார்களா? அங்கு மக்கள் பட்டினி கிடக்க இவர்கள் விழா எடுக்கிறார்களாம். தமிழன் என்றுமே திருந்த மாட்டான் என்பதற்கு நேற்று இவர்கள் நடத்திய நிகழ்வே உறுதிப்படுத்துகிறது.
 5. என்னை வரவேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி. நிலாமதியக்காவுக்கு சினிமாவைத் தவிர வேறெதுவும் தெரியாதோ? சுஹாசினி என்று வந்திருந்தால் கேட்பது நியாயம். சுஹாசினி எல்லாம் யாழ்களத்திற்கு வருவாரா? ஹாசினி என்று வரும்போதே கேட்கிறீர்களே??? கள்ளன், இது எனக்கு நானே வைத்த பெயர். அந்தப் பெயரில் ஏதோவொரு மயக்கம். தமிழ்மாறன், நான் காசிக்குப் போகும் அவசியம் எனக்கு இன்னமும் வரவில்லை. ஏற்கனவே, வேறு பகுதிக்குள் நுழைந்தாகிவிட்டது. அதிலும் பொருத்தமான பகுதிக்குள்தான்.
 6. வொல்கானோ, ஓரளவு நியாயமான தலைமைத்துவம் இருந்தபோதே, விடுதலைப்புலிகளின் பெயரைப் பாவித்து சொத்து சேர்த்தவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தீர்வைத் தருவார்கள் என்று நீங்கள் நம்புவது வேடிக்கையாக உள்ளது. எமக்குக் கிடைத்திருப்பது கடைசிச் சந்தர்ப்பம். இப்போதும், துரோகிகளும் கயவர்களும் முன்னிற்கிறார்கள் எனில், தமிழ் மக்களுக்கு விடிவு என்பதே கிடைக்கப் போவதில்லை என்பது உறுதி. அக்குழுவில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் நிலை இக்குழுவிற்கு வரக்கூடாது என்பதே எனது நோக்கம். மேடையிலோ அல்லது ஊடகங்களிலோ பேசுவதற்கு முன்னர், நீங்கள் பேசவிடயங்கள் பற்றிய ஆய்வைச் செய்துவிட்டு வந்து பேசலாமே. ஆனால், பேராசிரியர் சந்திரகாந்தன் அப்படிச் செய்வதில்லை. தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சரி, மேடைகளிலும் சரி, அவர் பேசும் விடயம் பற்றிய தெளிவு அவரிடம் இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இது தமிழ் மக்களுக்கான விடிவிற்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பம் என்பதை இக்குழுவில் இருப்பவர்கள் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்காகத் தான் இந்தத்திரியில் கருத்தெழுதிகிறேன்.
 7. வணக்கம் எழுஞாயிறு அவர்களே, நான் சுட்டிக் காட்ட விரும்பியது, அந்த அமைப்பிலுள்ளவர்களைத்தான். நாடுகடந்த அரசை நாம் முழுமையாக வரவேற்கிறேன். அதனைத் தலைமை தாங்கும் உருத்திரகுமாரன் அண்ணா அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதிலுள்ள மற்றவர்களைப் பார்க்கும்போது, அது சாத்தியமாகத் தெரியவில்லை. சந்திரகாந்தன் பேராசிரியர் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவர் அரசியல் பேராசிரியர் அல்ல. அவர் இதில் முன்னிலையிலிருந்து செயற்பட விரும்பினால், அதற்கான தகுதிகளைப் பெற முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து, பேராசிரியர் என்பதால் மட்டும், அவருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, மாலையை எதிர்பார்ப்பதில் அவர் முன்னிற்கிறார் என்பதை இங்குள்ளவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தெரியும். மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கனடாவில் இதற்காக வேலை செய்பவர்கள் மீது எனக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. இவர்கள் இங்கு செய்த தவறுகளால், சமாதானகாலத்தில் விடுதலைப் புலிகளால் விலக்கி வைக்கப்பட்டவர்கள்தான் அதில் முன்னிலையில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, இங்கு முன்னிலையில் இருப்பவர்களின் தகுதிகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். கல்வித்தகுதியோ அல்லது வேறுதகுதிகளோ அற்றவர்கள்தான் இதில் முன்னிலையிலிருக்கிறார்கள். இவர்களை வைத்து ஓரு அமைப்பையே நடத்த முடியவில்லை. ஒரு நாட்டின் அரசியலை எப்படித் தீர்மானிக்கமுடியும்?
 8. அருச்சுணன், இன்னுமா இவர்களை நம்பி அந்தக் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்? சந்திரகாந்தனுக்கும் அரசியலுக்கும் வெகுதூரம். ஏதோ பல்கலைக்கழகத்தில் பேராசியரியராக இருக்கிறார் என்ற ஒரு காரணத்திற்காக சிலர் தங்கள் சுயலாபங்களுக்கா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் நீங்களும் அதை நம்பிப் போகிறீர்கள். எல்லாம் சுயதம்பட்டமும் சுயலாபமும் தானே தவிர வேறொன்றுமில்லை. அதைவிட வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த அமைப்பிலிருக்கும் பலருக்கும் கல்வித் தகுதிக்கும் வெகுதூரம். எல்லாம் மக்களை ஏய்க்கும் கூட்டம்.
 9. நான் என்றைக்கும் என்னைப் புலியென்றே கூறுவேன். தமிழனை உலகுக்கு அறிமுகப்படுத்தியது புலி. ஆனால், அதே புலி அழிந்ததும் இந்தத் தமிழனால்தான். தமிழன் என்று கூறுவதற்கு நான் இப்போது மிகவும் வெட்கப்படுகிறேன். ஆனால், புலியென்று கூறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். வாழ்க புலிகள்.
 10. வணக்கம் நாட்டாண்மை. உங்கள் நாட்டாண்மையை இந்தக் களத்திலும் எடுத்து விடுங்கோ.
 11. வணக்கம் பாயும் புலி. என்னை நீங்கள் முதலில் வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி. புலியினால் வரவேற்புக் கிடைப்பது இந்தக் காலத்தில் மிகவும் அரிதல்லவா? மிகவும் நன்றி. ராசராசன், என்னை வரவேற்றதற்கு மிகவும் நன்றி. வரவேற்பதில் தமிழன் முன்னிற்பான் என்பதற்கு உங்கள் வரவேற்பே சாட்சி. நன்றி.
 12. வணக்கம், நான் ஹாசினி. இந்தக் களத்திற்குப் புதிது. என்னையும் வரவேற்பீர்களா? நன்றி.