• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

செப்படி வித்தை

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  29
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About செப்படி வித்தை

 • Rank
  புதிய உறுப்பினர்
 1. அவர் ஆசைப்பட்ட ஓர் உடை போராளிக்கான சீருடை.... விரும்பிய ஆபரணம் கழுத்தில் தொங்கிய ஓர் மரணம்.... எங்கள் நிம்மதித் தூக்கத்திற்காய் தங்கள் நித்திரை கலைத்தவர்கள்.... நிலம் காடு மேடெல்லாம் படுக்கையாய் கொண்டவர்கள்....
 2. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் – அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம் தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம் – எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.
 3. TAMILS IN SRI LANKA A COMPREHENSIVE HISTORY (C. 300 B.C - C. 2000 A.D) Dr Murugar Gunasingam இது தான் பாருங்கோ ஆங்கிலப்புத்தகம். இதில அவர் எல்லாத்தையும் ஆதாரத்துடனேயே எழுதியிருக்கிறார். இந்த அருமையான புத்தகத்தை எல்லோரும் கட்டாயமாக படிக்வேணும் எண்டு தாழ்மையா கேக்குது இந்த சடம் நன்றி
 4. வணக்கம் பாருங்கோ கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர் வரலாறு என்ற ஆராய்ச்சி புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அதில் அவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் வரையப்பட்ட சான்றுகளை உலகெங்கிலும் தேடிச்சென்று தகுந்த ஆதாரங்களுடனே எமது வரலாற்றை வெளியிட்டுள்ளார். இது உலகெங்கிலும் வாங்கக்கூடிய புத்தகம் எண்டு நினைக்கிறன் நன்றி
 5. "My advice to parents has always been to stay close to their children, but at the same time give them some space to grow and mature in today's world. Today's world is not all that bad. " Gurudeva இண்டைக்கு பிள்ளைகளோட எப்போதுமே கொஞ்சம் நெருக்கமாக இருக்கவேண்டும். அதே நேரம் அவையளுக்கு யௌவனப்பருவ காலத்தில கொஞ்சம் சிறிது இடைவெளி கொடுக்கவேணும். இண்டைக்கு இருக்கிற உலகம் அவ்வளவு கெட்டதாக இல்லை எண்டு சொல்லிறார் பாருங்கோவன். எண்டு எங்கட ஈழத்துச்சித்தர் பெருமான் யோகர் சுவாமிகளின் சீடரான அமெரிக்கா கவாயில் வாழ்ந்து சமாதியடைந்த சிவாய சிவ சுப்பிரமணிய சுவாமிகள் வாக்குரைத்துள்ளார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்
 6. தமிழன் போல் சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல் அவன் போல் வீரம் உனக்கும் வருமா கேள்..??! நல்லா இருக்குது. உதால தானே எங்களுக்கு இன்னும் விடிவு கிட்டேல்ல. பொன்னாடை போர்த்த அவன் மகிந்தன்ட கழுத்தில இடம் இருந்திருக்காதே... அவன் தானே எங்கட உறவுகளை அழித்து கழுத்தில மாலையாப் போட்டிருக்கிறான் பாவி
 7. உங்கட ஆக்கம் நல்லாத்தான் இருக்குது, ஆனா அந்த மூண்டு பத்திரிகைக்காரங்கட முடிவு தான் கொஞ்சம் கண்ணைக்கட்டுது அதாவது எங்கட ஈழத்தமிழ் வசன நடையில இருக்குது. உண்மையைச் சொல்லப்போனா கடலின்ர மணம் இன்னும் மணக்குது வாழ்த்துக்கள்
 8. வட்டுக்கோட்டைக்கு வழி என்ன எண்டு கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு கருத்து வழியைக் காட்ட சொன்னா, துட்டு ( 1காசு ) இரண்டு பாக்கு வாங்கலாம் எண்டு சொல்லுங்கள் சில சனம் அப்பிடின்னா சாதாரணமா எங்கட ஆக்கள் சிலரின்ர குணம் ஒண்டு இருக்குது. ஒரு கேள்வியக்கேட்டா அதுக்கு நேரா விடை சொல்லத்தெரியாது. அங்க போய், இங்க வந்து சுத்தி வளைச்சுத்தான் பதில் சொல்லுவினம். இது போன்ற சில சொற்கள் ஈழத்தில நாங்க பயன்படுத்தினது. அதாவது ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ற மாதிரி கனக்க வார்த்தை பிரயோகங்கள் இருக்குது. இதை நான் ஏன் இங்க வந்து சொல்லிறன் எண்டு நினைக்கிறியளே அது ஒண்டும் பெரிசா இல்லைங்கோ. எதிர்கால சந்ததியினருக்கு இது போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் போய்்ச்சேருமோ எண்டு ஒரு சின்ன கவலை வந்திச்சுது அதான் இப்பிடியான வார்த்தை பிரயோகங்கள் என்ர உறவுகளான உங்களுக்கு தெரிந்திருக்கும். அதால நீங்களும் வந்து பதிவேற்றுங்கோவன் அப்ப நான் வரட்டே
 9. தன்னுான் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் பொருள் தன்னுடலை பெரிது வளர்ப்பதற்காக தான் பிறிதோர் உயிரின் தசையை தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்கமுடியும். எண்டு வள்ளுவர் பெருமான் ஒரு தெளிவான உண்மைய சொல்லிப்போட்டு போட்டார். இதில இருந்து என்ன விளங்குது பாருங்கோ. இதுக்கு மேல என்னண்டு விளக்க தெரியாது
 10. வள்ளுவன்ர குரல் யான் என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் பொருள் உடலை “யான்” எனவும், பொருள்களை “எனது” எனவும் நினைக்கின்ற மயக்கத்தை போக்குகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் சேர்வான் இப்பிடியெல்லாம் கனக்க சித்தர்மார் எவ்வளவு அழகாக சொல்லிப்போட்டு போட்டினம்.
 11. ஈஈஈஈ என்னத்த சொல்லுறது பாருங்கோ, இந்த உலகம் ஒரு மாயை தானே, அதான் காலமாற்றத்திற்கேற்ப பெயரை வைச்சிருக்கிறன், உண்மையை சொல்லப்போனா எல்லாம் செப்படி வித்தை அப்ப நான் போய்ட்டு வரட்டே
 12. வணக்கமுங்கோ நீங்கள் ”ஈழத்தீ”(ஈழத்தில் ஏற்றப்பட்ட தீயை சுமந்தவர்) யா அல்லது ஈழத்தி (ஈழத்துப்பெண்) எண்டுறதை கொஞ்சம் தெளிவாச்சொல்லமுடியுமா? கோவிச்சுக்கொள்ளாதேங்கோ தமிழில எழுதியிருந்தா எனக்கு உள்ளங்கனி நெல்லிக்கனி போல விளங்கியிருக்கும் ஆனா இங்கிலிசு கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான்
 13. வணக்கம் பண்டாரவன்னியரே வருக ,,, வருக உம்மைக்காட்டி கொடுத்த காக்கைவன்னியனிற்கு தக்க தண்டனையை வழங்குக